“ஹேய் விடுடி.. சும்மா பேர் சொல்லியே கூப்பிடு..?”
“நோ நோ ஹஸ்பண்ட் பேர சொல்லக்கூடாதாம்.. நான் அப்படி கூப்பிட்டா ஒவ்வொருதரம் கூப்பிடும்போதும் உங்க ஏஜ்ல ஒருநாள் குறையுமாம் கிரான்மா சொன்னாங்க..”
சுந்தருக்கோ சிரிப்பு.. அப்பத்தா இவள என்னவெல்லாம் சொல்லி வழிக்கு கொண்டு வருது.. சரியான கேடிதான்..
“அத மெதுவா பழகிக்கலாம்.. இப்ப உன் மண்டைக்குள்ள என்ன ஓடுது..?”
“ஸாரி.. சொல்றேன்.. ஆனா வொர்ரி பண்ணிக்காத.. உங்க சிஸ்டர் எல்லாம் வெளியில தரையில படுத்திருக்காங்க.. பார்க்கவே கொஞ்சம் கில்ட்டியா இருக்கு.. உன்கிட்ட காசில்லைனா நான் தர்றேன்..அவங்க எல்லாருக்கும் ஒரு ரூம் கட்டிக் கொடுக்கலாமா..?”
அதற்கு மேல் தாங்காதவன் அவளை இறுக அணைத்து இருகன்னத்திலும் மாறி மாறி முத்தமிட …. திடிரென இப்படி செய்வான் என எதிர்பார்க்காதவள் சற்று திகைத்திருக்க அது சுந்தருக்கு சாதகமாய் போனது.. முத்த சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்க சற்று தெளிந்து அவனை கட்டிலில் தள்ளி விட்டிருந்தாள்..
மேல் மூச்சு கீழ்முச்சு வாங்கி அவன் கழுத்தில் கைவைத்து நெறிப்பது போல செய்து அவன் மேல் ஏறி அமர்ந்து அவனை அடிக்க ஆரம்பிக்க, அவன்தான் இந்த உலகத்திலேயே இல்லையே.. ஜென்ம சாபல்யம் அடைந்தவன் போல, சொர்க்கத்தில் இருப்பது போல அப்படி ஒரு புன்னகை முகத்தோடு கண்ணை மூடியிறுக்க தர்ஷினிக்கு அவனை அடித்து கைவலித்ததுதான் மிச்சம்..
[the_ad id=”6605″]
எந்த எதிர்வினையும் இல்லாமல் அவனை அடித்து என்ன பிரயோஜனம்.. சற்று நேரத்திலேயே அவனை அடித்து இவளுக்கு களைப்பு வந்திருக்க அவன் அருகிலேயே படுத்தாள்..
“என்ன பேபி கைவலிச்சிருச்சா..?”
கோபத்தில் “போய்யா..” என்றபடி மறுபுறம் திரும்பி படுக்கப் போக அவள் இடுப்பில் கைப்போட்டு அவளை தடுத்தவன்..
“ஏய் லட்டுமா என்னோட இத்தனை ஏஜ்ல முதல் முதலா இப்பதாண்டி ஒரு பொண்ணுக்கு கிஸ் கொடுக்குறேன்..”
“ஹா..” என அவனை ஆச்சர்யமாக பார்க்க..
“இப்படியெல்லாம் பார்க்காத மாமா மெல்ட் ஆகிருவேன்.. இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா பீல் பண்றேன்.. இதுவரைக்கும் எனக்கு வரப்போற வொய்ப் பத்தி நான் எந்த ஒரு தாட்டும் வைச்சிக்கிட்டது இல்ல.. ஆனா நீ எனக்கு வொய்ப்பா கிடைச்சது.. இந்த பீலிங்க எப்படி சொல்றதுன்னு தெரியல..
நீ எனக்கு எந்த பணமும் தரவேண்டாம் .. என்கூடவே இரு அது போதும்..” தன் செல்போனில் மணியை பார்க்க அது ஒன்றை காட்டவும் “தூங்கு பேபி…” அவளை மெல்ல அணைத்தபடி ஒரு கையால் லேசாக இருவருக்கும் விசிறத்துவங்கினான்..
தர்ஷினிக்கு என்ன தோன்றியதோ அவன் மேல் கைப்போட்டபடி மெல்ல கண்ணை மூடியிருந்தாள்.. சுந்தர் டாக்டரிடம் தன் மணவாழ்க்கையை துவங்குவது பற்றி கேட்டிருந்தாலும் இப்போது அதை மாற்றிக் கொண்டான்.. இன்னும் அவள் மனதிலிருக்கும் வேதனைகளை களைந்துவிட்டு பழைய தர்ஷினியாக மாற்றியே அவளோடு சேரவேண்டும் போலிருக்க மனைவி தன் அருகில் இருப்பதே போதும்.. நிம்மதியாகவே கண்ணயர்ந்தான்..
அப்பத்தாவும் இன்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுந்தரின் நல்ல குணத்தை பற்றி, அவன் குடும்பத்தை பற்றி, சுந்தர்தான் இனி உனக்கு எல்லாம் என சொல்லிருக்க சுந்தரையும் அவள் மனது மெல்ல மெல்ல ஏற்று கொள்ளவே செய்தது.. யாருமே இல்லாமல் அனாதை என்று நினைத்தவளுக்கு தனக்கே தனக்கென்று கணவன், தனக்கு எல்லாமுமாக இருப்பான்.. (Xanax) ஏதோ ஒன்று சுந்தரை அவள்பால் ஈர்த்தது என்றே சொல்லலாம்..
மறுநாள் அதிகாலையிலேயே தங்கைகள் இருவரும் ஊருக்கு கிளம்புவதாக சொல்ல இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வீடுகட்ட தச்சு செய்ய போவதாக சொன்னவன் போனில் தகவல் சொல்கிறேன் முடிந்தால் அன்று வருமாறு அழைப்பு விடுத்தான்..
தர்ஷினி இன்னும் உறக்கத்திலேயே இருக்க அவள் உறங்கட்டும் என நினைத்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகியிருந்த சேலையை சரிபடுத்தினான்.. தந்தையோடு பேசியபடியே தங்கள் வீட்டின் அருகே இருக்கும் வயற்காட்டை நோக்கி நடக்க,
இருவரும் வேட்டியை மடித்து கட்டி பேசியபடி நடக்க பார்ப்பவர்களுக்கு அது கண்கொள்ளா காட்சியாய் இருந்தது.. “அப்பு வீட்டு வேலை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நம்ம வீட்ல கொஞ்சம் வேலை பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன்..?”
[the_ad id=”6605″]
“செய்ப்பு செய்ப்பு.. ஏதாயிருந்தாலும் இனி மருமகக்கிட்டயும் ஒரு வார்த்தை கலந்துக்க.. நாம செய்றது யாருக்கு தெரியுதோ இல்லையோ பொண்டாட்டிக்கு தெரியனும்..”
இங்கு தர்ஷினி கண்விழிக்க மணி எட்டிருக்கும்.. பக்கத்தில் சுந்தரை காணவில்லை.. எழுந்தவள் வெளியில் வர யாரையும் காணவில்லை.. அப்பத்தா பின் வாரத்தில் அமர்ந்திருக்க தெய்வானை அடுப்படியில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார்.. சுந்தரி பள்ளிக்கு கிளம்பி கொண்டிருப்பாள் போல,
“கிரான்மா..”
“ஆத்தா தங்கம் எழுந்திட்டியாத்தா… போய் பல்லுவிளக்கி குளிச்சிட்டு வந்திரு.. இன்னைக்கு இத்தனை மணிக்கு எந்திரிச்சது பரவாயில்ல.. இனி கொஞ்சம் வெள்ளன எந்திரிக்க பாரேன்த்தா..?”
“ம்ம் டிரை பண்றேன் கிரான்மா…” பேசியபடி பாத்ரூமை நோக்கிச் செல்ல,
“விடுங்க அயித்த மருமக எப்ப எந்திரிக்குதோ அப்ப எழுந்துக்கட்டுமே..”
“இருக்கட்டும் தெய்வானை ஒருதரம் சொன்னா போதும் அவளும் முடிஞ்ச அளவு அதை செய்யத்தான் செய்வா.. எழுந்திரிச்சு பழகட்டும் முடிஞ்ச அளவு உங்கவீட்டு பழக்கவழக்கங்களையும் கத்துக்கட்டுமே..”
அவர்கள் வீட்டில் ஆடு ,மாடு, கோழி என நிறையவே உண்டு.. அங்கு பால்காரர் காலையில் இருந்து பால் கறந்து கொண்டிருந்தார்.. தெய்வானை ஆடுகளை அடைத்து வைத்திருந்த அந்த கொட்டகையை திறந்துவிட, அப்பத்தாவோ அங்கிருந்த கோழிகளுக்கு இரையை போட ஆரம்பித்தார்..
குளித்து வேறு சேலை கட்டிக் கொண்டு வந்தவள் தன் மேக்கப் பாக்சில் இருந்து மிதமான ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள்.. சுந்தரிக்கு அதை பார்க்க பார்க்க வியப்பு.. நாமெல்லாம் குளிச்சா இம்பூட்டூண்டு பவுடர்தான் போடுறோம் இவுக என்ன இம்புட்டு முகத்தில தேய்க்கிறாங்க.. நாமளும் இவுகளுக்கு தெரியாம ஒருநாள் அம்புட்டையும் எடுத்து தடவிப்பார்க்கனும்..
தெய்வானை போகும்போதே மகளிடம் தர்ஷினி காலையில் பால்தான் குடிப்பாள் என தெரிந்து கறந்த பாலில் இருந்து பாலை காய்ச்சி மகளிடம் கொடுத்து மருமகளிடம் கொடுக்கச் சொல்லியிருக்க அவர்கள் தலை மறையவுமே அந்த பாலில் முடிந்த அளவு காப்பி பொடியை அள்ளிப் போட்டாள்.. அதன் நிறமே மாறி கடும்காப்பியாகியிருக்க பதவிசாக அதை கொண்டு வந்து கொடுத்தாள்..
ஆள் அரவம் கேட்டு திரும்பி பார்த்த தர்ஷினி சினேகிதமாக சிரிக்க அதன் பிரதிபலிப்பு சுந்தரி முகத்தில் இல்லை.. காப்பியை அவளை கையில் கொடுத்தபடி வேகமாக அறையை விட்டு வெளியில் வர அதை வாங்கிப் பார்த்தவளோ ‘ஓஓ காட் இதென்ன இந்த கலர்ல இருக்கு..’ மெல்ல வாயருகே கொண்டு செல்ல அவளுக்கு பால்தான் பிடிக்கும்.. ஹார்லிக்ஸ் போட்டுதான் குடிப்பாள்.. வாழ்க்கையில் காப்பியே குடித்ததில்லை. மெதுவாக ஒரு வாய் வைக்க கசப்பு வேறு இனிப்பில்லாமல் அப்படியே வாந்தியாக மாறியிருக்க அந்த டம்ளரோடு வெளியில் வந்தவள் ஒன்றுமே சொல்லாமல் அதை கீழே ஊற்றி டம்ளரை கழுவி தண்ணீரால் வாயை கொப்பளிக்கவும்தான் அந்த கசப்பு சற்று மட்டு பட்டது.. தர்ஷினியையே பார்த்திருந்த சுந்தரிக்கு மனம் குதூகலித்தது..
‘யாருக்கிட்ட.. உங்களாலதான எங்க அப்பு அப்படி அடிச்சாக.. இப்பத்தானே ஆரம்பம் இருங்க போக போகத் தெரியும்..’
கிச்சனுக்கு சென்று தண்ணீர் ஒரு டம்ளர் குடித்தவள் எதையுமே முகத்தில் காட்டாமல் கோழிகள் சத்தம் வந்த திசையை நோக்கி செல்ல அங்கு அப்பத்தா கோழிகளுக்கு இரைகளை போட்டுக் கொண்டிருக்க ஆசையோடு அதை பார்த்தவள் பின் அந்த வேலையை தான் செய்யத்துவங்கினாள்..
தெய்வானையோ “ஆத்தா ஏதாச்சும் குடிச்சியாத்தா..??” பாசகுரலில் கேட்க தர்ஷினிக்கு சுந்தர் கேட்பது போலிருந்தது..
“குடிச்சிட்டேன் ஆன்ட்டி..” இருந்ததிலேயே சிறியதாக இருந்த அந்த ஆட்டுக்குட்டி அவளை மிகவும் கவர அதன் அருகில் சென்றவள் அதை கைகளில் அள்ளியிருந்தாள்.. தெய்வானைக்கு தன் மருமகளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.. தலைக்கு குளித்து காய்வதற்காக தலையை விரித்து விட்டிருந்தாள்.. முகம் அப்படியே பளிச்சென இருக்க. நல்ல ரோஸ் நிறத்தில் சேலை அவளுக்கு அப்படி பாந்தமாக பொருந்தியது.. மகாலெட்சுமி மாதிரி இருக்கு.. தர்ஷினி பக்கத்தில் வள்ளி நாத்தனாரை நிறுத்தி மனக்கண்ணில் பொருத்தி பார்க்க மலைக்கு மடுவிற்கும் போல வித்தியாசம் புரிந்தது..
அதிலும் நேற்று இரவு சௌந்தரமும், நாயகியும் தங்கள் கணவர்களுக்கு வள்ளியின் நாத்தனாரை சுந்தருக்கு திருமணம் முடிப்பதில் அவ்வளவு விருப்பமில்லாமல் இருந்ததை சொல்ல இதுதான் கடவுள் போட்ட முடிச்சோ என எண்ணியவர் ‘கருப்பா என் மகனும் மருமகளும் எப்பவும் சந்தோசமா புள்ளக்குட்டிகளோட நல்லா இருக்கனும்யா..’
நேரம் ஓடிக் கொண்டிருக்க ராமையா அங்கு வயலில் இருந்து வேறு வேலையிருப்பதாக சென்றிருக்க சுந்தர் மட்டும் திரும்பியிருந்தான்.. உள்ளே வரும்போதே கண்களால் வீட்டை நோட்டமிட்டபடி மனைவியை தேட வீட்டில் தாயை தவிர யாருமில்லை..
“ஆத்தா சுந்தரி பள்ளிக்கூடத்துக்கு போயிட்டாளா..?”
“ஆமாய்யா. கைகால் கழுவிட்டு வா சாப்பிடலாம்..”
“அப்பத்தா எங்கத்தா..?”
“அவுக வீட்டுக்கு போயிருக்காக.. அப்புறமா வாரேன்னு சொன்னாக..”
மனைவியை கேட்க கூச்சமாக இருக்க தாய் எதாவது சொல்வாரா என்று சற்று நேரம் நின்று பார்க்க அவர் எதுவும் சொல்லாமல் இருக்கவும் கிணற்றடியை நோக்கிச் சென்றான்..
[the_ad id=”6605″]
கிணற்றை பார்த்தவன் அப்படியே ஒருநிமிடம் அதிர்ச்சியில் உறைய அங்கு தர்ஷினி கிணற்றுள் தலையை குனிந்த படி உள்ளே பார்த்துக் கொண்டிருக்க பாதி உடல் கிணற்றுக்குள் இருக்க கால்கள் மட்டுமே தரையில் இருந்தது.. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவனுக்கென்னமோ அவள் கிணற்றில் குதிக்க முயல்வது போலிருக்க,
தடதடவென ஓடியவன் அலேக்காக அவள் இடுப்பில் கைகொடுத்து தூக்கி தள்ளி நிறுத்தி பளார் என அவளை அறைந்திருந்தான்..
இதை எதிர்பார்க்காதவள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து கண்களை ஆவென விரித்தபடி கன்னத்தில் கைவைத்து இருக்க,
அவளை இறுக அணைத்தவன் “ஏண்டி லூசு எதுக்கு இப்ப கிணத்துல குதிக்க பார்த்த..? தண்ணிய பார்த்தாலே உனக்கு அதுல குதிக்க மட்டும்தான் தோனுமா..?” சுந்தரின் குரல் கலங்கி கரகரப்பாகியிருக்க,
அவன் நெஞ்சில் கைவைத்து குத்தியவளோ “ஏய் மேன் லூசாடா நீ.. நான் எப்போ குதிக்க போனேன்..?”
“பின்ன எதுக்குடி அப்படி பார்த்துட்டு இருந்த..?”
அவன் மார்பில் கைவைத்து பின்னால் தள்ளியவள் அவன் கையை பற்றியபடி கிணற்றருகே இழுத்து வந்து “ குனிஞ்சு பாரு உள்ள ஏதோ ஒரு பேர்டோட சவுண்ட் கேட்குதா..??”
சுந்தரும் காதை உன்னிப்பாக்கி கேட்க ஏதோ பறவை சத்தம்.. விட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருந்தது..
“ஆமாண்டி..”
“அதான் மேன் அது எங்கயிருந்து வருதுன்னு வாட்ச் பண்ணினேன்.. அதுக்கு போய் என்னை அடிச்சிட்டயில்ல.. போ போ உன்கூட நான் பேச மாட்டேன்..”
அவன் மனசாட்சியோ..’.ஹாஹாஹா டேய் சோனமுத்தாஆஆஆஆ போச்சா.. உன் பொண்டாட்டி உன்கூட பேசமாட்டாளாம்…ஹாஹாஹா ஹிஹிஹி…!!”
அடச்சீ கருமம் உள்ளகிட.. “ஸாரிடா பேபி, லட்டு, தங்கம், செல்லம், பவுனு.. மாமாவுக்கு அங்கயிருந்து பார்க்கும்போது வேற மாதிரி தெரிஞ்சிச்சா அதான்.. நீ வேணா திருப்பி அடிச்சிக்கோ..?” தன் கன்னத்தை அவளிடம் திருப்பி காட்ட,
அவளோ அவன் கன்னத்தில அழுத்தமாக ஒரு முத்தத்தை பதிக்க இப்போது அதிர்ச்சியாகி நிற்பது சுந்தரின் முறையாயிற்று..
“என்னடா லட்டு மாமாவ அடிக்கல..?”
அவன் நெஞ்சில் அழுத்தமாக சாய்ந்தவளோ “நீ எங்க டாடி மாதிரி கூப்பிட்டத்தானே.. அதான் அடிக்கல..?” அவள் முகத்தை தூக்கிப் பார்க்க அழுகையை அடக்கி கொண்டிருந்ததால் உதடுகள் நடுங்கியபடி கண்ணீர் வழிந்தபடி இருக்க கன்னத்தில் தன் கைவிரல்கள் அந்த பட்டுக்கன்னத்தில அப்படியே பளிச்சென தெரிய சத்தியமாய் அவனால் அவனை மன்னிக்க முடியவில்லை..
இனி……...????