Varam Vaangi Vanthaval Naan 13 1
வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 13
Advertisement
அனைவரும் கிளம்பி அப்பத்தா வீட்டிற்கு செல்ல அப்பத்தா தன் சின்ன மருமகளிடம் ஆரத்தியை கொடுத்து சுந்தருக்கும் தர்ஷினிக்கும் ஆரத்தி எடுக்கச் சொன்னார்.. அனைவரையும் அன்போடு வரவேற்று அமரவைத்தவர் தர்ஷினியையும் சுந்தரையும் பாசத்தோடு கட்டி அணைக்க இந்த நேரத்தில் மகளையும் அவள் குடும்பத்தையும் நினைத்து கண்கள் கலங்கினாலும் அதை அப்ப்டியே மறைத்தார்..எப்போதும் தன் வேதனைகளை தர்ஷினி முன் காட்டிக் கொள்ளவே மாட்டார்..
வந்து இவ்வளவு நேரமாகியும் தங்களை இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கும் அப்பத்தாவிடம் பேத்திகள் இருவரும் அவர் முந்தானையை பிடித்தபடி செல்லம் கொஞ்ச அப்பத்தாவும் அவர்களை பாசத்துடன் அணைத்துக் கொண்டார்..
Advertisement
Advertisement
“ என்ன பெத்த செல்லங்களா..இந்த அப்பத்தாவையா பார்க்க வந்திக..” இருவரின் கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட பார்த்திருந்த பார்வதி வயிறு எறிந்தது.. இது எப்போதும் நடக்கும் கூத்துதான் கூடவே இருக்கும் பேரனை கண்ணில் விழித்தாலும் ஆகாது என விரட்டுபவர் சின்ன மகன் குடும்பம் வந்தால் மட்டும் அவர்களை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்வார்..
சின்ன மருமகள் நிறைய படித்து ஆசிரியராக இருந்தாலும் மாமியாரை மதித்து அவர் சொல்வதில் உள்ள நன்மைகளை எடுத்துக் கொள்வார் .. அதைவிட கணவருக்கு தன் தாயை மிகவும் பிடிக்கும் என்பதாலேயே இவருக்கும் மாமியார் மீது ஒரு தனி மரியாதை..
Advertisement
பார்வதி அவர்கள் குடும்பமாக இங்கே வந்தால் வாங்க எனகூட அழைக்காதவர் அன்று முழுவதும் அறைக்குள்ளேயே இருந்து கொள்வார்.. இது பொது வீடாக இருப்பதால் அவரால் எதுவும் சொல்லமுடியாது அதுவரை அப்பத்தா உசாராக இந்த வீட்டை தன் பேரிலேயே வைத்திருந்தார்.. மற்ற சொத்துக்களை மகன்களுக்கு பிரித்துக் கொடுத்திருக்க ஏனோ பார்வதிக்கு இந்த வீட்டின் மேல் ஒரு கண்..
அந்த வீடுகளை வாடகைக்கு விட்டு இவர் இங்கேயே இருந்துகொண்டார் அதைவிட மாமியார் காலத்திற்கு பிறகு எப்படியும் மூத்தமகனுக்குத்தான் இந்த வீடு வரும் என்ற நப்பாசை வேறு.. அந்த காலத்திலேயே மாமனார் இந்த வீட்டை பர்மா தேக்கினாலேயே இழைத்திருந்தார்.. இன்று பிரித்து விற்றால்கூட எத்தனையோ லட்சத்திற்கு விற்கலாம்..
சுத்தம் செய்ய மூடியாமல் பூட்டியிருக்கும் அறைகளே பத்திற்கு மேல் இருக்கும்.. முழுக்க முழுக்க மரவேலைபாடமைந்த வீடு அதிலும் அனைத்தும் தேக்கு..அதன் உள் அலங்காரங்களும் ராஜநிலைகதவுமே அப்படி ஒரு கலையம்சத்துடன் விளங்கும்.. இந்த வீட்டை அடுத்தவருக்கு விட்டுக் கொடுக்க பார்வதிக்கு எள்ளளவும் மனதில்லை..
அப்பத்தா அனைவரையும் சாப்பிட அழைத்தவர் அசைவத்தில என்னென்ன வகையிருக்கிறதோ அத்தனையும் வேலைக்காரர்களை சமைக்கச் சொல்லியிருந்தார்.. சுந்தருக்கும், சுந்தரின் குடும்பத்தினருக்கும் அப்பத்தாவும் அவர் சின்ன மகனின் குடும்பமும் பார்த்து பார்த்து பரிமாற அப்போதுதான் எங்கேயோ சென்று திரும்பிய கோதண்டமும் சந்தோசமாகவே அவர்களை வரவேற்று அவர்களோடு சேர்ந்து கொண்டார்..
[the_ad id=”6605″]
அனைத்தையும் பாராமல் பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு மனது கொதித்தாலும் எதுவும் சொல்லமுடியவில்லை.. அதிலும் தர்ஷினியை பார்க்க இங்கிருந்ததைவிட அப்படி ஒரு முகப்பொலிவோடு சிரித்தமுகமாக அதுவும் கழுத்தில் காதில் என அனைத்தும் வைரம்.. எப்படி இதெல்லாம் ஏது இவளுக்கு.. இங்க இருக்கும்போது அழுது வடிவா.. இப்ப என்னவாம் முகம் இப்படி பளபளக்குது..
அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சுந்தரோ தான் சாப்பிட்டு பார்த்து காரமில்லாததை அவளை உண்ணச் சொல்ல. மீனிற்கு முள்ளெடுத்து கொடுக்கவென மனைவியை கவனிப்பதை அப்பத்தாவும் அவர் மகனும் பூரிப்போடு கவனித்தாலும் மற்றவர்களை கவனிப்பது போல பார்வையை மாற்றிக் கொண்டனர்..
கோதண்டத்திற்குமே தங்கைமகளின் தெளிந்த முகத்தை பார்த்து நிம்மதி.. இவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும் அப்போதுதான் அங்குவந்தான் பாலா.. வந்தவனுக்கு தர்ஷினியை தவிர மற்ற யாருமே கண்ணுக்கு தெரியவில்லை..
‘ஐயோ இவ்வளவு அழகும் நமக்கு கொடுத்து வைக்காம போச்சே.. இங்க இருக்கும்போது சான்ஸ எல்லாம் மிஸ்பண்ணிட்டு இப்ப நாய் மாதிரி காத்துக்கிடக்க வேண்டியிருக்கே..’
கோதண்டம் “டேய் வந்தவங்கள வாங்கன்னு கேளு பேசாம இருந்தா என்ன அர்த்தம்..?”
“ஹிஹிஹி வாங்க வாங்க..” அனைவரையும் வரவேற்றாலும் பார்வை என்னவோ தர்ஷினியை சுற்றித்தான்..
பார்த்திருந்த சுந்தருக்கு சுறுசுறுவென கோபம் ஏற அவனை கன்னம்கன்னமாய் அறைய கை துறுதுறுத்தது.. இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு அமைதி காத்தான்.
“ஹாய் தர்ஷினி நல்லாயிருக்கியா..??”
“பைன் பாலா..” அவனை பார்த்து பளிச்சென சிரித்தவள் மீண்டும் தன் மாமன் மகள்களோடு பேச்சில் இறங்கிவிட்டாள்..
சுந்தர்” எங்க பாலா உங்க வொய்ப்..??”
சுந்தரின் முறைப்பில் சற்று தடுமாறியவன் ,”அவ அம்மா வீட்ல இருக்கா..?”
அப்பத்தாவோ “அவ எங்கப்பு இங்கயிருக்கா.. எப்ப பார்த்தாலும் அவங்க ஆத்தாவீடுதான்..” அடுத்து என்ன சொல்லியிருப்பாரோ..வெளியில் ஊர் பெரியவர்கள் நான்கைந்து பேர் வந்திருந்தார்கள்.. சங்கரன் அனைவரையும் வரவேற்று அமரவைத்தவர் தன் தாயை அழைக்க அவரும் தன் கையில் ஏதோ பத்திரங்களை எடுத்து வந்தார்.. அவர்கள் வக்கீலும் வந்திருக்க, பார்வதியும் என்ன விசயம் என தெரிந்து கொள்வதற்காக வெளியில் வந்திருந்தார்..
அப்பத்தா “எல்லாரும் வாங்கய்யா..” தனிதனியாக வரவேற்று அவர்கள் குடும்ப நலனை விசாரித்தவர்.. தர்ஷினியை கைகாட்டி “அப்பு இவ என் மகவுட்டு பொண்ணுன்னு இங்கன எல்லாருக்கும் தெரியும்.. நம்ம ராமையா மவனுக்குத்தான் கட்டி கொடுத்திருக்கோம்.. சுந்தரு வாய்யா இங்கவந்து உட்காரு..” ராமையாவையும் சுந்தரையும் தன் அருகில் அமரசொன்னவர்..
“என்னோட சொத்த எல்லாம் என் ரெண்டு மவனுக்கும் பிரிச்சு கொடுத்துட்டேன்.. என் மவளுக்கு சேர வேண்டிய பங்குதான் இருந்திச்சு இப்ப என் மவ இல்லாததால இத தர்ஷினிக்கு கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்ப்பு..அதான் உங்க எல்லார் முன்னும் கொடுக்கனும்னு வரச்சொன்னேன்..”
ஊர் தலைவரோ” நல்லா கொடுங்கத்தா.. அதுதானே முறை.. கலையரசி இல்லைன்னா என்ன அவ வாரிசுதான் இருக்கே..”
தன் சின்ன மருமகளிடம் கண்ணை காட்ட..ஒரு சிறிய மரப்பெட்டியை கொண்டுவந்து கொடுத்தார்.. “அப்பு என்னோட இந்த நகை எல்லாமே என் மகளுக்குத்தான் சேரனும் அத எல்லாம் இப்ப என் பேத்திக்கு கொடுக்குறேன்.. மத்த மருமகள்களுக்கும் நகைகள்ல பிரிச்சு கொடுத்திருக்கேன்.. என் பேத்திக ரெண்டுபேருக்கும் நகை வைச்சிருக்கேன் அவுக கல்யாணத்தன்னைக்கு அத கொடுத்துருவேன்..” இந்த நகைகளே எப்படியும் 100 பவுனுக்கு மேல் இருக்கும்..
சுந்தரோ “அப்பத்தா நகையெல்லாம் எதுக்கு.. என்னோட பொண்டாட்டிக்கு நான் சம்பாரிச்சு போடுவேன்..”
“நல்லா போடுய்யா.. உன் பொண்டாட்டிக்கு நீ என்ன செய்யனுமோ அது உன்விருப்பம்.. ஆனா இது அவ ஆத்தாவோட பொறந்தவீட்டு சீரு அத வேணாம்னு சொல்லாதய்யா.. என் மவதான் இத போட கொடுத்து வைக்கல.. உங்க ரெண்டுபேரோட வாரிசாவது அத போட்டு அழகு பார்க்கனும்.. வாங்கிக்கத்தா..”
தன் கணவனின் முகத்தை பார்த்தவள் “வேணாம் கிரான்மா.. மாமாதான் வேணாம் சொல்றாங்களே..”
ஊர் பெரியவர்கள் வற்புறுத்த சுந்தரால் எதுவும் சொல்லமுடியவில்லை.. “மாமா வாங்கிக்கவா..??”
“ம்ம்ம்..”
அடுத்து வக்கில் சொத்து பத்திரங்களை எடுத்து கொடுக்க அவை அனைத்தும் தர்ஷினி பிறந்த ஊரான தஞ்சையில் இருக்கும் அவர்கள் பூர்வீக வீட்டின் பத்திரம்.. அதோடு அவர்கள் இரண்டு அப்பார்மென்ட் வாங்கி வாடகைக்கு விட்டிருக்க அந்த பத்திரங்களும் இருந்தது.. அனைத்தும் தர்ஷினி பேரில்தான் கார்டியனாக சுந்தரை நியமித்திருந்தார்கள்.. மாதாமாதம் வாடகை அவள் அக்கவுண்டில் விழும்படி செய்து அந்த பாஸ்புக்கையும் அவளிடம் கொடுத்தார்கள்..
அடுத்து சங்கரன் ஒருபத்திரத்தை நீட்ட அதை சுந்தர் வாங்கவேயில்லை..” இதென்ன சித்தப்பா..??”
“இது என்னோட பரிசு சுந்தர் உனக்குத்தான் நம்ம ஊர் அரிசி மில்லோட பத்திரம் .. இது உங்களுக்கு என்னோட கல்யாண பரிசு…வாங்கிக்க..?”
[the_ad id=”6605″]
என்னவோ இத்தனை செத்துக்கள் வரவும் ஒரேநாளில் தர்ஷினி தன்னைவிட்டு தள்ளி நிற்பது போல தெரிய அவனால் அதை தாங்கமுடியவில்லை.. அவனுக்கு தர்ஷினிதான் தேவையே தவிர இந்த சொத்துக்கள் இல்லை..
“ஸாரி சித்தப்பா இது எதுவுமே எங்களுக்கு வேணாம்.. இன்னும் கொஞ்ச நாளானா போதும் நான் நல்ல நிலைமைக்கு வந்திருவேன்.. இத கொடுத்து என்னை அசிங்கப்படுத்தாதிங்க..??”
“என்ன சுந்தர் இப்படி பேசுற.. நான் உன்னை என்னோட பையனாதான் நினைக்கிறேன்.. நீ இந்த சொத்தெல்லாம் வரனும்னு நினைச்சா கல்யாணம் பண்ணின.. ஆனா இதெல்லாம் முறையா தர்ஷினிக்குத்தான் சேரனும்.. அவங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டு சேர்த்த சொத்து.. ப்ளிஸ் வாங்கிக்க.. நாங்க எதுவுமே எங்க சம்பாத்தியத்தில இருந்து கொடுக்கல..
அதோட ஆஸ்திரேலியாவுல நகைக்கடை.. அப்புறம் அங்க கொஞ்சம் சொத்து இருக்கு இப்ப போலிஸ் கேஸ் இருக்கிறதால அதெல்லாம் அது முடிஞ்சுதான் வரும்.. நாங்க சொத்த மட்டும் தரலை அதோட அங்கயிருக்கிற பிரச்சனைகளையும் கொஞ்சம நீதான் பார்த்து முடிக்கனும்.. எங்க அத்தானும் தங்கச்சியும் ரொம்ப ஆசை ஆசையா ஆரம்பிச்ச நகைக்கடை அது.. அதையும் நீங்கதான் சரிபண்ணனும்..”
“அத நான் பார்த்துக்கிறேன் சித்தப்பா ஆனா சொத்தெல்லாம் நீங்க என்ன சொன்னாலும் வேணாம்..”
பார்வதி “அதுதான் வேண்டாம்ன்னு சொல்றாங்களே அப்புறமும் ஏன் அவங்கள வற்புறுத்துறிங்க..??”
‘பாவி பயலுக அம்புட்டும் கடன்ல இருக்கு ஒன்னுமே இல்லைன்னு பொய் பொய்யா சொல்லிட்டு, இப்புடி கோடிகோடியா சொத்த இந்த வெறும்பயலுக்கு கொட்டிக் கொடுக்குறானுகளே.. இவனுகளெல்லாம் வெளங்குவானுகளா.. ஐயோ இதெல்லாம் எம்புட்டு கோடி வரும்னு தெரியலையே.. அம்புட்டுக்கும் இந்த கிழவிதான் காரணமா அமுக்குனி மாதிரி ஒன்னுமே இல்ல அம்புட்டும் போச்சேன்னு புலம்புச்சே.. இது தெரியாம வெறும் 200 பவுனுக்கு ஆசைப்பட்டு ஒரு ராங்கிக்காரிய கட்டிட்டு வந்துட்டனே.. இம்புட்டு சொத்து இருக்கிறது தெரியாம நாமதான இந்த வெறும்பயலுக்கு இவள கட்டி வைச்சோம்.. போச்சா எல்லாம் போச்சு.. பாலா தன் தாயை முறைக்க பார்வதியோ தன் கணவரை முறைத்தார்… அந்த பார்வையில் ஏய்யா இதெல்லாம் உனக்கு முன்னமே தெரியுமா என்றிருந்தது..’
அழகம்மையோ.. மூத்த மருமகளை முறைத்தவர் ,”ஏத்தா என்னமோ உன் பொறந்தவீட்டு சொத்த கொடுக்குறாப்புல பேசுற.. இதெல்லாம் என் பேத்தியோடது.. அவளுக்கு உரிமையான சொத்து …நீயோ உன்புருசனோ எதுவும் கொடுக்கல நீ இம்புட்டு நேரம் எப்படி இருந்தியோ அப்படியே வாயமூடிக்கிட்டு கிட..”
“இந்தாப்பு சுந்தரு நீ இதெல்லாம் எதிர்பார்க்கல…எனக்கு தெரியும் அதுனாலதான் என் பேத்திய நான் உனக்கு கட்டிவச்சேன்.. இத செலவுபண்ணினா என் பேத்தியும்தான சந்தோசமா இருப்பா இல்லை வேணாம்னா.. நீங்க எப்படி இருக்கனுமோ அப்படியே இருங்க உங்களுக்கு வரப்போற புள்ளைகளுக்காவது உதவட்டும் வாங்கிகப்பு..”
“இல்லப்பத்தா..”
“போய்யா நீ என் பேரன்னுதான் உரிமையா அங்கன இருந்தேன்.. இத வாங்கவே நீ இப்புடி யோசிச்சா நான் இனி அங்கன வரவும் யோசிக்கனும்.. ராமையாவ என் சொந்த மகனாத்தான் நினைச்சேன்.. இப்ப நீங்க வேற நான் வேறன்னு பிரிச்சு காட்டிடிகளே..?” அவர் வராத அழுகையை அடக்குவது போல முந்தானையை முகத்தில் வைக்க,
ராமையாவோ பதறி “ஆத்தா நீங்க அழாதிக.. அது உங்க மவன் வீடுதான் நீங்க எப்பவும் உரிமையா வரனும்..சுந்தரு வாங்கிகய்யா… வாங்கு மத்தத பொறவு பேசிக்கலாம்..”
ம்கும் கிழிஞ்சது இந்த அப்பத்தா இருக்காகளே..
“என்னப்பு அப்பு சொல்றதையும் கேட்க மாட்டியா..?”
சங்கரனோ அனைத்தையும் சுந்தர் கையில் வைத்தவர்” மத்ததெல்லாம் நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து என்ன பண்ணலாம் யோசிங்க.. ஆனா இந்த மில்ல நீங்க உடனே திறக்கனும்.. உங்க திறமையை ஏன் சுந்தர் வேஸ்ட் பண்றிங்க..?? இங்கேயே இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டிங்க விவசாயத்தோடு இந்த வேலையையும் கையில் எடுத்துக்கோங்களேன்.. எப்படியும் உங்க சொத்துன்னு முடிவானத்துக்கப்பறம் அத நல்ல முறையில் பயன்படுத்தி மேல கொண்டுவாங்க சுந்தர்..”
“சுந்தரு இப்ப நீ இத வாங்கல நான் அங்கன உங்கவீட்டுக்கு வரவே மாட்டேன்ப்பு பார்த்துக்கோ..”
அனைவரும் சுந்தரை வற்புறுத்த சற்று யோசித்தவன் தர்ஷினியை வாங்கிக் கொள்ளச் சொன்னான்..அங்கேயே மாலைவரை இருந்தவர்கள் தங்கள் வீட்டுவரவே மணி ஏழுக்கு மேலாயிற்று.. அப்பத்தாவும் அவர் சின்ன மகனின் குடும்பமும் கூடவே வந்திருக்க அனைவரும் சந்தோசமாகவே பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.. தர்ஷினி மாமன் மகள்களுக்கு லவ் பேர்ட்ஸ், ஆடுக்குட்டி கோழி என தனக்கு பிடித்தவற்றை காட்டிக் கொண்டிருக்க சுந்தரியும் இப்போது அவர்களோடு சேர்ந்து கொண்டாள்..
அன்று பத்துமணிவரை அங்கேயே இருந்துவிட்டு அவர்கள் தங்கள் வீட்டிற்கு கிளம்ப தெய்வானை “ஏங்க அயித்தயோட சின்னவரு குடும்பம் ரொம்ப நல்லவிகளா இருக்காகல்ல..??”
“ஆமா நாமளும் இத்தனை வருசம் ஒரே ஊருலதான் இருக்கோம் அங்கன இங்கன பார்த்தப்போ பேசினதுதான்.. இப்பத்தானே பழகுறோம் ஆத்தா மாதிரி குணமா இருக்காக.. சுந்தரு மருமகவுட்டு நகையையெல்லாம் பத்திரமா வைக்கனும்பா.. ஏற்கனவே நகையாலதான் அவுக ஆத்தா அப்புக்கு இந்த நிலைமை..”
“ம்ம் நாளைக்கு பேங்க் லாக்கர்ல வைக்க ஏற்பாடு செஞ்சிருறேன்பா..” பேசியபடியே நாயகி கணவர் போன் செய்த விபரத்தை சொல்ல..
தெய்வானையோ அதிர்ந்தவர் “என்னையா சொல்ற..??”
“ஆத்தா நீங்க கவலைப்படாதிக நாளைக்கு நானும் தர்ஷினியும பேங்க் போயிட்டு அப்படியே நாயகி வீட்டுக்கு போயிட்டு வாறோம்…”
ராமையா “நானும் வரவாய்யா..?”
“இல்லப்பு நான் பார்த்துக்குறேன்..” இன்னும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தங்கள அறைக்கு வர தர்ஷின் பாத்ரூமில் இருந்தாள்.. உடை மாற்றியவன் அப்படியே கட்டிலில் படுத்துவிட்டான்..
மைசூர் சேன்டலின் மனம் கும்மென அடிக்க தன் இரவு உடையில் வந்தவள் கட்டிலில் சுந்தரை பார்க்கவும் “என்ன மாம்ஸ் அதுக்குள்ள படுத்துட்ட..?”
புறங்கையால் தன் முகத்தை மூடி படுத்திருந்தவன் “ம்ம் ஒன்னுமில்லடா..?” அவன் தீவிர யோசனையை கண்டவள் ,
“என்ன மாம்ஸ் வாய்ஸ் உள்ள போகுது..?” அவன் அருகில் அமர்ந்து அவன் கைகளை எடுக்கவும் அவளையே பார்த்தவன் தலையை அவள் மடியில் வைத்து அவளை வயிற்றோடு இறுக அணைத்துக் கொள்ள தர்ஷினிக்கு குப்பென நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.. இதுவரை அவள்தான் அவன் மடியில் படுப்பாள்.. அவன் தட்டிக் கொடுத்து உறங்க வைப்பான் அப்போது எதுவும் தோன்றாதது இப்போது ஏதோ போலிருக்க தன் வயிற்றில் புதைத்திருந்த முகத்தை தன்னை பார்க்க செய்தவள் என்னாச்சு தன்னைப்போலவே அவள் கைகள் அவன் நெற்றியை வருடியது..
[the_ad id=”6605″]
அவன் கைகளை தன் கன்னத்தில் வைத்து அழுத்தியவன்” நீ பணக்காரின்னு தெரியும் ஆனா இவ்வளவு வசதி… நம்ம ரெண்டுபேருக்கும் இடையில.. ப்பச் நம்மள இந்த பணமும் நகையும் பிரிச்சிருமோன்னு பயமாயிருக்குடி..”
“ஹாஹாஹா என்ன மேன்.. என்கிட்ட பணம் இருக்கிறது எப்படி நம்மள பிரிக்கும்..”
“ப்பச் போ எனக்கு தோனுது..?” சிறுபிள்ளை போல முகத்தை வைக்க,
“என்னயா என்பணம் உன் பணம்ன்னு பிரிச்சு பேசுற.. வேணாம்ன்னு தானே சொன்னோம் ஆனா இதெல்லாம் எங்க டாடியோடது அவங்க எனக்கும் தர்ஷனுக்கும் வாங்கினது அத எப்படி வேண்டாம்ன்னு சொல்றது .. நான் மட்டும் நீ செலவு பண்ணும்போது சைலண்டாதான இருந்தேன் எனக்காகத்தான இந்த ரூம்ல பாத்ரூம் கட்டின, ஏசி போட்ட அதெல்லாம் உன்னோட பணம்.. ஆனா என்னோடதுன்னா நீ வாங்கிக்க மாட்டியா.. போ போ என்னோட பேசாத..” அவன் தலையை மடியிலிருந்து தள்ள,
“ஏய் பச்சமொளகா உடனே காரமா மாறாதடி..??”
அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள்” போய்யா பிராடு நீ சொல்றத நான் கேட்டா மட்டும் லட்டு, குளோப்ஜாமூன்னு கொஞ்சுற.. கேக்கலைனா பச்சமிளகாயா..போய்யா போ வெளியில போய் படு..”
“ஐய்யய்யோ என்னடி டிபிக்கள் இன்டியன் வுமன் மாதிரி புருசன வெளியில போய் படுக்கச் சொல்ற.. நமக்குள்ளதான் இன்னும் எதுவுமே நடக்கலையே லட்டுமா.. அதுக்குள்ள நீ என்னை வெளியில போகச் சொல்றது ரொம்ப ரொம்ப பேட் ஹாபிட்… மீ பாவம்..!!”
அவன் வாயை கைவைத்து மூடியவள் “பேசாத மேன் என்னோட பணம் வாங்கிக்கிறேன்னு சொன்னா மட்டும் பேசு.. இல்லனா பேசாத அவனை விட்டு தள்ளி படுத்தவள் என்கிட்ட வரவே கூடாது மேன் சொல்லிட்டேன்.. போ..” அவள் குப்புற படுத்து தூங்க,
‘தமிழ்நாட்டு பொண்ணுங்கள்ல இருந்து ஆஸ்திரேலியாவுல வளர்ந்த பொண்ணுவரைக்கும் புருசன் மேல கோபம்னா இப்படித்தான் அவன புலம்ப விடுவாளுக போல ஐயோ இவள அணைக்காம நமக்கு தூக்கம் வேற வராதே..’
‘டேய் சோனமுத்தாஆஆஆ இதுக்குத்தான் ஓவரா ஆடக்கூடாதுன்னு சொல்றது.. வாய் பேசுனதானே இப்ப இங்கேயே படு..’
