Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nizhalmugam

நிழல்முகம் 8

காலை ஆறு மணி…

 

குளித்து முடித்து ரெடியாகி வந்த தன் மகனை கண்ட பூங்கோதை “டேய் என்னடா இப்போ தான் வந்த..அதுக்குள்ள கிளம்புற..எங்கடா போற…

 



Advertisement

மா ..நான் வந்து சொல்றேன்..நான் இப்போ அவசரமா ஒருத்தங்கள மீட் பண்ணனும்…

 

டேய் கண்ணா ரவீனா சென்னை  வந்துடுவாளாம்..நீ போய் அவள போயி கூட்டிட்டு வந்திடுடா…

Advertisement

 

Advertisement

என்னது ரவீனா வந்துட்டாளா?என்கிட்ட சொல்லவே இல்ல. .

 

உனக்கு சர்பிரைசா இருக்கட்டுனு நெனச்சிருப்பா.நீ போய் அவள கூட்டிட்டு வா..

Advertisement

 

அம்மா பிளீஸ் மா…கோச்சிக்காம நம்ம முத்து அண்ணாவ அனுப்பி அழச்சிட்டு வர சொல்லுங்கம்மா…

 

டேய் என்னடா இப்படி சொல்லுற..வர்றது யாரோ இல்லடா..உன் கூட பொறந்தவடா…அவள போய் கூட்டிட்டு வரத விட உனக்கு ஆபீஸ் முக்கியமா போச்சா…உங்க அப்பாவும் பிசினஸ் விசயமா மலேசியா போயிருக்கார்..நீயும் ஆபீஸ் ஆபீஸ்னு ஒடுற..இப்படி வீட்டுல உள்ளவுங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு அப்படி என்னடா வேலை..கத்தினார்.. 

 

அம்மா ப்ளீஸ்..கொஞ்சம் புரிஞ்சிக்கோ..நான் ஈவ்னிங் வந்து பாக்குறேன் என்றவன்..நான் கிளம்புறேன் என்று கூறிவிட்டு அவனது குல்பியை தேடிச்  சென்றான்..ஆனால் அவளை காணவில்லை..அவளை பற்றி யாரிடம் கேட்பது என்று கூட தெரியவில்லை..ச்சை எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கேன்..இவ்ளோ பழகி அவ பேரு என்னானு கூட கேக்கல…இப்ப அவள எங்க போயி தேடுறது என்று யோசித்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை…

 

அன்று ஒரு நாள் அவள் அழைத்தது ஞாபகம் வர, சட்டென தனது மொபைலை எடுத்து அந்த நம்பருக்கு அழைக்க..அந்த பக்கம் போன் எடுக்கப்பட்டது.. 

 

ஹலோ யாரு?ஒரு வயசான குரல்..

 

ஹலோ நான் ப்ரனேஷ்..அங்க ஒரு பொண்ணு இருக்காளா?

 

எந்த பொண்ணு..பேரு என்ன?

 

என்ன கூறுவான்..சட்டென போனை அனைத்தவன் தன்னையே திட்டிக் கொண்டான்…

 

டேய் ப்ரனேஷ் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா…இவ்ளோ நாள் அவ கூட பழகிருக்க..அவ பேரு கூட தெரியல..சரி அத தான் கேக்க மறந்துட்ட..அட்லீஸ்ட் அவளுக்கு ஒரு போனாவது வாங்கி குடுத்துருக்கலாம் என்று அவனது மனசாட்சி காரி துப்பியது..

 

அதை ஒதுக்கி விட்டு அவளை பார்த்த அந்த மருத்துவமனைக்கு காரை செலுத்தினான்…

 

வாங்க சார் உங்களுக்கு என்ன பிரச்சனை..என்றார் அந்த டாக்டர்..

 

டாக்டர் எனக்கு ஒரு உதவி வேண்டும்..

 

உதவியா?என்றார் புருவத்தை உயர்த்தி..

 

எஸ் டாக்டர்..

 

சரி சொல்லுங்க..என்ன உதவி..

 

டாக்டர் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு நாய் அடிபட்டதுனு ஒரு பொண்ணு  கூட்டிட்டு வந்தாளே ஞாபகம் இருக்கா..?

 

அவர் தன் கண்ணாடியை கழட்டி விட்டு அவனை உற்று பார்த்தார்…பின்பு தம்பி நீங்க தான அன்னைக்கு என்ன செலவானாலும் பரவால்ல.எப்படியாவது காப்பாத்துங்கனு சொன்ன ..

 

அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி..அவர் தன்னை மறக்கவில்லை..கண்டிப்பா குல்பிய பத்தி இவருக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைத்தவன்,ஆமா டாக்டர் அது நான் தான்..அன்னைக்கு இருந்தாளே அந்த பொண்ணு அவ வீடு எங்க இருக்கு…

 

சட்டென முகத்தை மாற்றியவர் “அத ஏன் நீ கேக்குற”என்றார்..

 

இல்ல டாக்டர்..அந்த பொண்ணு என் ஆபீஸ்ல தான் வேலை பாத்தா..ஒரு வாரமா வரல..அதான்..அவ வீடு எங்க இருக்குனு எனக்கு தெரியாது..அதனால தான் என்றான் திக்கி திணறி..

 

ஒ அப்படியா…அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுப்பா..அடிக்கடி யாரயாவது கூட்டிட்டு வருவா..இங்க கொஞ்ச தூரம் போனா ஒரு தெரு வரும்..அங்க தான் இருக்கு அவ வீடு என்றார்…

 

அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை..ரொம்ப நன்றி டாக்டர் என்றவன் அவரிடம் விடைபெற்று  அவர் கூறிய இடத்திற்கு காரை செலுத்தினான்…

 

இரண்டு பக்கமும் வீடுகள் வரிசையாய் இருந்தன..கார் அந்த தெருவிற்குள் செல்லாது என்பதை உணர்ந்தவன் அதனை அங்கே ஒர் இடத்தில் நிறுத்தி விட்டு நடக்க தொடங்கினான்..அவள் வீடை எங்கே தேடுவது, யாரிடம் கேட்பது என்று தெரியாமல் நடந்து கொண்டிருந்தான்…

 

அப்போது ஒருவன் அவனை மறித்தான்..ஏய் யாரு நீ?புதுசாகீற..

 

அவன் காலையிலே குடித்திருக்கிறான் என்பது அவனது  பேச்சிலே தெரிந்தது..

 

ஏய் உன்னான்ட தான் கேட்டுகினுகீறேன்..பதில் சொல்லு..யாரு நீ..எதையாவது கலவாட வந்துனுருக்கிறியா…

 

இல்லைங்க ஒரு பொண்ண தேடி….

 

இன்னா பொண்ணு பாக்க வந்துனுகிறியா?ஆரூட்டு பொண்ணு..இந்த ஏரியாவுல எனக்கு தெரியாத பொண்ணே இல்ல..சொல்லு.சொல்லு..என்றான்…

 

ஒருவேல குல்பிய இவருக்கு தெரிந்திருக்குமோ என்று நினைத்தவன் தனது போனை எடுத்து என்றோ ஒரு நாள் அவளுக்கு தெரியாமல் எடுத்த போட்டோவை காட்டினான்…

 

ஏய் இந்..த பொண்..ணு நம்ப..நம்ப என்னும் போதே அவன் வயிற்றை பிடித்து கொண்டு  வாந்தி எடுத்தான்..ப்ரனேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான்..

 

அப்போது அவனை நோக்கி ஒருவன் வர, “எப்பா எத்தினி தபா சொல்றது காலைலே குடிக்காதனு”..இப்படி காலங் காத்தால குடிச்சிட்டு இப்படி ரோட்டாண்ட வாந்தி எடுத்துகினு இருக்க என்று திட்டியவன் அவரை கைத்தாங்கலாக பிடித்து கொண்டான்..

 

இல்லடா மவனே டூப்லி..க.ட் சரக்க குடுத்துடாண்டா என்றவர் அப்படியே அவனது தோலில் சாய்ந்து கொள்ள, அவரை அணைத்து பிடித்தார் போல் சென்றான்..அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ப்ரனேஷை பார்த்து”சாரே”என்றான்…

 

ப்ரனேஷ் அவனை புரியாமல் பார்க்க…

 

சாரே நல்லாக்கிறீங்களா!பாத்து ரொம்ப நாளாச்சு என்றான் சிறு புன்னகையுடன்…

 

என்ன உனக்கு தெரியுமா? என்றான் அதிர்ச்சியாய்..

 

என்ன சார் என்ன மறந்துட்டியா?அன்னைக்கு எங்க ராக்கிய ஆஸ்பத்திரில சேக்க சொல்லோ வந்தீயே?

 

அவன் கூறியது தான் தாமதம்.ப்ரனேஷ் உடனே ஆமா ஆமா நாம பாத்துருக்கோம் என்றவன் சரி சரி உங்க அக்கா எங்க என்றான் அவசரமாய்…

 

அத ஏன் சார் கேக்குற என்றவன் நடந்த அனைத்தையும் கூறினான்…

 

அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தவன்’இப்போ அவ எங்க இருக்கா…என்றான்..

 

தெரியல சார்..நானும் தேடிகினு தான் இருக்கேன்..கானல சார்..என்றவன் நீ அக்காவ பாத்தா நான் கேட்டனு சொல்லு சார் என்று கூறிவிட்டு அவனது தந்தையை அழைத்து கொண்டு அவன் அங்கிருந்து கிளம்பினான்…

 

அவன் கூறியதை கேட்டு ப்ரனேஷ் அதிர்ந்து  போய் நின்றான்..அவளை எங்கே போய் தேடுவது..நேற்றிலிருந்து அவளை காணவில்லை..எதுவும் தப்பா நடந்திருக்குமோ!என்று ஒரு மனது கேட்க, இல்ல இல்ல அப்படியெல்லாம் நடந்திருக்காது என்று மற்றொரு மனது சமாதானம் படுத்தியது..

 

அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..எல்லாத்துக்கும் நான் தான்   

காரணம்..நான் மட்டும் அப்படி நடக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை ஆகியிருக்காது என்று நினைத்தவனுக்கு தன் மீதே வெறுப்பாய் வந்தது…கடவுளே அவளுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது.நீ தான் அவள காப்பாத்தனும் என்று வேண்டியவன்,அவளது போட்டோவை காட்டி  ஒவ்வொருத்தரிடமும் விசாரிக்க தொடங்கினான்…

 

மித்து ஆபீஸ் கிளம்பலயா.?

 

இல்ல சுகு.இனிமே என்னால அங்க வேலை பாக்க முடியாது…தீர்மானமாய் கூறினாள்..

 

ஏய் என்னாடி சொல்ற..எதுக்கு திடிர்னு இந்த  முடிவு…

 

இல்ல சுகு..என்கிட்ட காரணம் கேட்காத..இனிமே என்னால அங்க வேலைக்கு போக முடியாது என்றாள் பிடிவாதமாய்…

 

அவளது பிடிவாதத்தை அறிந்தவள் என்னம்மோ பண்ணி தொல என்று கூறிவிட்டு தனது பேக்கை எடுத்து கொண்டு கிளம்பினாள்….

 

அவள் சென்றதும் தனது மொபைலை எடுத்தவள் கவிலாஷிற்கு அழைக்க,

 

ஹேய் மிது சொல்லுடா…

 

லாஷ் நான் இப்பவே உன்ன பாக்கனும்…

 

ஏன்டா..என்னாச்சு..எதாவது பிரச்சனையா?

 

இல்ல நீ வீட்டுக்கு வா..என்று கூறிவிட்டு வைக்க, அவளது மனம் வேகமாய் துடித்தது..முகமெல்லாம் வியர்த்து கொட்டியது..லாஷ் வந்ததும் அவர்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லனும் என்று நினைத்தவள் மனதில் நேற்று நடந்த சம்பவம் அவளையும் மீறி நினைவு வந்து அவளை கொன்றது..

 

எஸ் க்யூஸ் மீ சார்…

 

எஸ் கமின் எனற தாமோதரை கண்டு ஏகத்திற்கும் அதிர்ந்து நின்றாள் மித்ரா…

 

அவளை சிறிது நேரம் கூர்ந்து பார்த்த தாமோதர் நீ மி..மித்ரா தான!…. என்றார் அதிர்ச்சியாய்…

 

அவள் அவரை பார்த்து அதிர்சியாகி நின்றாள்…அவளால் நம்ப முடியவில்லை..தாமோதரை இங்கு பார்ப்பாள் என்று..

 

மித்ரா..மித்ரா..என்று அவளது தோலை தொட்டு உலுக்க,தீ பட்டது போல் வெடுக்கென நகர்ந்தாள்…அவளது உடம்பு அவளறியாமலே நடுங்க தொடங்கியது…

 

மித்ரா எதுக்கு உன் உடம்பு இப்படி நடுங்குது..உன்னய நான் இங்க எதிர் பாக்கல..அன்னைக்கு பாக்கும்போது எப்படி இருந்தியோ அப்படியே இருக்க என்று கூறி அவளை மேலிருந்து கீழாக பார்த்தார்…

 

அவரது பார்வையில் கூனி குறுகி போனாள்…

 

மித்ரா சத்தியமா நீ உயிரோட இருப்பனு நான் நினைக்கல..உன் குடும்பத்தோட நீயும் சேர்ந்து எரிஞ்சிருப்பனு நெனச்சேன்..

 

அவர் கூறி முடிக்கவில்லை..அதுவரை ஒருவித பயத்துடன் நின்றிருந்தவள் சட்டென நிமிர்ந்து ,உன்ன மாதிரி கேவலமானவனெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏன்டா சாகனும் என்றாள் நிமிர்வாய்…

 

ஏய் மரியாதையா பேசு!

 

உனக்கு என்னடா மரியாதை..உனனோட பொண்ணு மாதிரி பாக்க வேண்டியவள,ச்சை எனக்கு சொல்லவே நாக்கு கூசுது…

 

ஹா..ஹா..ஹா.. பொண்ணா…நீ என்ன என் பொண்டாட்டி வயித்துலயா பொறந்த என்றார் நக்கலாய்….

 

இப்படிபட்ட கேவலமானவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் முகத்தை திருப்பி நிற்க…

 

மித்ரா இப்பயும் ஒன்னும் கெட்டு போகல..இங்க உன்னையும், என்னையும் தவிர வேற யாரும் இல்ல..நீ மனசு வச்சா….என்று கூறிக் கொண்டே அவளது தோலில் கை வைக்க….

 

அதுவரை அவர் மீது கோவமாய் நின்றவள்,சட்டென அவரது கன்னத்தில் ஒரு அறை விட்டாள்..ச்சீ நீ திருந்தவே மாட்டல..உன்ன மாதிரி பொம்பள பொறுக்கிங்கலால தான்டா ஒரு சில பொண்ணுங்க பயந்து போய் வீட்லயே இருக்குறாங்க…

 

போதும் நிறுத்து..இப்போ உன்னோட பிலாசபி கேக்க எனக்கு மூடு இல்ல என்றவர் சட்டென அவளை அணைக்க, இதனை கொஞ்சமும் எதிர் பாக்காதவள் அதிர்ந்து போய் நின்றாள்..நின்றது சிறிது நேரமே,அடுத்த நிமிடம் அவரிடமிருந்து விடுபட போராடினாள்..ஆனால் அவளால் முடியவில்லை..இருவருக்கும் இடையே நடந்த போராட்டத்தில் டேபிள் மீது இருந்த அவரது போன் தூர சென்று விழுந்தது..

 

டேய் விடுடா..விடுடா..என்று கத்தியவள்..பக்கத்தில் இருந்த கண்ணாடி ஜக்கை எடுத்து அவரது பின்னந்தலையில் அடித்தாள்…சட்டென அவரது பிடி தளர்ந்தது…அடுத்த நிமிடம் தன் தலையை பிடித்து கொண்டு அவர் நிற்க, அவரை பிடித்து தள்ளி விட்டாள்..அவர் போய் சுவற்றின் மீது மோதி கீழே சரிந்தார்…அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..அவரது முகத்தில் கை வைத்து பார்க்க மூச்சு இல்லை…அவளுக்கு பயத்தில் உடல் நடுங்கியது…அப்போது அவளது போன் ஒலிக்க, இ..இ.தோ..வரேன் என்று கூறிவிட்டு தனது கைபையை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்…

 

க்ளிங்..க்ளிங்..என்று காலிங்பெல் அடிக்க,தன் நினைவிலிருந்து மீண்ட மித்ரா போய் கதவை திறந்தாள்…அங்கே நின்றிருந்த கவிலாஷை கண்டு லாஷ் என்று அணைத்து கொண்டாள்…

 

ஏய் மிது என்னாச்சு..எதுக்கு அழற…என்று கேட்டு கொண்டே உள்ளே அழைத்து சென்றான்..

 

எனக்கு ரொம்ப பயமா இருக்கு லாஷ் என்று கூறிக்கொண்டே அணைப்பை கூட்டினாள்…

 

மிதுமா..எதுக்குடா பயம்..என்னாச்சு..

 

அது..அது..அது..வந்து ஆபீஸ்ல…ஆபீஸ்ல…

 

ஆபீஸ்ல என்னாச்சு. எதாவது வேலைல தப்பு  பண்ணிட்டியா….

 

இ..ஆல்ல..அது..வந்து.. அ..ங்க..அந்த..ஆளு..என்று என்று கூறிக் கொண்டே தேம்பினாள்…

 

எங்க…எந்த ஆளு…

 

ஆ..பீ..ல…அந்த. ..பார்..த்..தென்..எனக்கு..ப..ப..யமா..இரு..க்கு என்று அழுது கொண்டே திக்கி திக்கி கூறினாள்…

 

மிதுமா அழாதடா..அழமா சோல்லு..அப்ப தான எனக்கு புரியும்..பாரு நீ என்ன சொல்றனு எனக்கு புரியவே இல்ல..அதுமட்டுமில்லாம நீ அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…அழாம சொல்லுடா..என்று அவளது தலையை வருடினான்..

 

அவன் கூறிய எதையும் காதில் வாங்காமல் அவள் அழுதாள்..அவளது தலையை மெதுவாய் வருடியவன்,அவளது நெற்றியில் முத்தமிட்டு மிதுமா அழாதடா… ப்ளீஸ்..நீ அழாம இருந்தா உனக்கு ஒரு குட் நீயூஸ் சொல்லுவேன் என்றான்…

 

அவள் அழுகையை நிப்பாட்ட போராடினாள்..ஆனால் அவளால் முடியவில்லை…இருந்தும் ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்டு “எ..என்ன குட் நீயூஸ்” என்றாள்..

 

என்னோட மிது ரொம்ப சமத்து, என்று கூறியவன் அவளது தலையில் தனது முகத்தை வைத்து கொண்டு..நம்ம விசயத்த பத்தி அம்மாகிட்ட பேசிட்டேன்…அவுங்களும் நம்ப கல்யாணத்துக்கு ஒகே சொல்லிட்டாங்க..என்றான் மகிழ்ச்சியாய்…

 

அவன் கூறியதை கேட்டு வெடுக்கென நிமிர்ந்தவள் என்ன சொல்ற லாஷ் உண்மையாவா?என்றாள்…

 

“ஆமா” என்றான் சிரித்து கொண்டே….

 

அவளால் நம்ப முடியவில்லை..அவன் கூறியதை கேட்டு,அழுவதா,சிரிப்பதா என்றே அவளுக்கு தெரியவில்லை..இரண்டும் கலந்த மனநிலையில் இருந்தாள்..

 

என்ன மிது..ஏன் அமைதியா இருக்க..இந்த குட் நீயூஸ் சொன்னா உன்கிட்டேருந்து ஒரு “உம்மா”கிடைக்குனு நெனச்சேன்..ஆனா என் நினைப்புல மண் அள்ளி போட்டுட்ட..என்று செல்லமாய் சினுங்க,

லாஷ் நான் உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லனும் என்றாள் நிமிர்வாய்…

 

நீ என்ன வேணாலும் சொல்லு..அதுக்கு முன்னாடி நான் கேட்டத குடுத்துட்டு சொல்லு..

 

என்ன கேட்ட..என்றாள் புரியாமல்..

 

சரியா..ஆ.போச்சு..என்றவன் அவளது முகத்தை நிமிர்த்தி நான் உன்கிட்ட ஒரு குட் நியூஸ் சொல்லிருக்கேன்..அதுக்கு கிப்ட்டா எனக்கு ஒரு “உம்மா”வேனும் என்றான் அவளது விழியோடு விழி கலந்து..

 

மிக அருகில் அவனது முகத்தை கண்ட மித்ரா,அவனையே காதலாய் பார்த்தாள்..காதல் கொண்ட அவளது மனமோ அவன் கேட்டதை கொடுக்க சொன்னாலும்,தனது கடந்த காலம் அதனை செய்ய முடியாமல் தடுத்தது…இம்முறை கண்டிப்பாக அவனிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட அவளது மனம் துடித்தது…

 

லாஷ் ப்ளீஸ்..நான் சொல்றத கொஞ்சம் கேளு…

 

அதெல்லாம் முடியாது என்றவன் அவளது இதழை தாபமாய் பார்க்க…அவனது பார்வையை தாங்க முடியாமல் தலை குனிந்து கொண்டாள்..

 

கவிலாஷ் அவளது முகத்தை நிமிர்த்தி,நீ குடுக்க வேண்டாம்.நானே குடுக்குறேன் என்று கூறிக் கொண்டே அவளது முகத்தை நோக்கி குனிய…அவளது முகம் அன்னிச்சை மலராய் மூடிக் கொண்டது…

 

கவிலாஷ் சிரித்து கொண்டே அவளது முகத்தை உற்று பார்த்தவன் சட்டென தனது இதழை அவளது இதழோடு பொருத்தினான்..எவ்வளவு நேரம் இந்த முத்த யுத்தம் தொடர்ந்ததோ இருவருக்குமே தெரியாது..கவிலாஷின் போன் ஒலித்து அவர்களை பிரித்தது…

 

மித்ரா வெக்கத்தில் தலை தாழ்த்தி கொள்ள கவிலாஷ் போனை எடுத்து,

 

டேய் மச்சான் எந்த நேரத்துல போன் பண்றதுனு விவஸ்தை இல்லையாடா…என்றான் கடுப்புடன்..

 

டேய் க..வி நீ உடனே கி..கிளம்பி வா.டா…

 

டேய் பிரனா..என்னாச்சு..எங்க வரனும்…ஏன் ஒரு மாதிரி பேசுற…

 

 அந்த பிரபலமான மருத்துவமனையின் பெயரை கூறினான்…

 

என்னது ஹாஸ்பிட்டலுக்கா?யாருக்கு என்ன ஆச்சுடா…கொஞ்சம் பதட்டமாகவே கேட்டான்…

 

டேய் முதல்ல கிளம்பி வாடா..என்று கூறிவிட்டு போனை வைக்க… கவிலாஷ் ,மித்ராவிடம் சென்று “மிது ப்ரனேஷ் தான்.எதோ எமர்ஜென்சியாம்..உடனே வர சொல்றான்..நான் கிளம்பனும்…

 

லாஷ் நான் உன் கிட்ட முக்கியமான விசயம் சொல்லனும்…பிளீஸ் புரிஞ்சிக்கோ…

 

ப்ளீஸ்டா.. நீ என்ன புரிஞ்சிக்கோ என்றவன் அவளது கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு அங்கிருந்து அந்த மருத்துவமனைக்கு விரைந்தான்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!