Skip to content
Post Views: 4,115

அங்கு விஷேசம் முடிந்து காரில் வந்து கொண்டு இருந்த பரமசிவமும் பார்வதியும் எதோ யோசனையின் பிடியிலேயே வந்து கொண்டு இருந்தனர்….
அந்த அமைதியை பார்வதியே கலைத்தார்… “மாமா என்ன யோசனை??? ” என்று கேட்டார்…
“இல்ல வதி நாம நம்மளோட கடைசி நொடில இருக்கோம்னு நினைக்குறேன் டா” என்று வருந்தியாவாரே கூறினார் பரமசிவன்…
Advertisement
அதை கேட்டு அமைதியாகவே இருந்தார் பார்வதி…..
“ஏன் அமைதியா இருக்க வதி….?????” என்று கேட்டார் பரமசிவன்
“எனக்கும் அப்படி தான் தோணுது மாமா… எதோ உள்ளுக்குள்ள சொல்லிட்டே இருக்கு
நம்ம உயிர் இப்பயே போனாலும் உங்களுக்கு முன்னாடி என் உயிர் போயிடனும் மாமா”என்று கூறி கண் கலங்கி பேசினார்…
Advertisement
அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை…. ஒரு ஓரத்தில் காரை நிறுத்தலாம் என்று காரை நிறுத்திய போது கார் பிரேக் பிடிக்கவில்லை….
Advertisement
அவர்கள் வந்து கொண்டிருந்த பாதை மலைகள் உள்ள பாதை… அதனால் வளைவுகள் அதிகம் இருக்கும்…
காரும் அவரின் கட்டுப்பாட்டை இழந்தது… தாறுமாறாக அந்த வளைவில் கார் சென்றது… இருவருக்கும் தெரிந்து விட்டது… இது தான் கடைசி நொடிகள் இந்த பூமியில் வாழ என…
பார்வதி அம்மா தன் கையை சிவா அப்பாவின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார்… “மாமா நா எதன்னை ஜென்மம் எடுத்தாலும் அதுல எல்லாத்துலயும் உங்க பொண்டாட்டியா நான் மட்டும் தான் மாமா இருப்பேன்…” என்று அவர் கூறிய நொடி கார் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது…
Advertisement
கீழே விழும் போது கூட இருவரும் கையை விடவில்லை… இருவருக்கும் தலையில் நல்ல அடி… சிவா ப்பா பார்வதி அம்மாவிடம் திரும்பி “வதி எப்பயும் நான் உன்னோட கணவன் தான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் வாழ்க்கை உன்கூட தான்….” என்று கூறினார்…
“மாமா எல்லார்கூடயும் நாம நேத்து பேசுனோம் ஆனா அர்ஜுன் கூட பேசல மாமா… பையன் துடிச்சு போயிடுவான் மாம…..(மாமா) …” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு தன் மூச்சை நிறுத்தி கொண்டார் பார்வதி அம்மா….
பேசிகொண்டு இருந்தவரின் சத்தம் இல்லாமல் போகவே சிவா அப்பாவும் “நீ சொன்ன மாதிரியே என்னை விட்டு முதல்ல போயிட்டால வதி….. உன் அர்ஜுன் நல்லா இருப்பான் நான் உன்கூடவே வந்துடுவேன்” என்று கூறி அடுத்த நிமிடம் தன் உயிரை நீத்தார் பரமசிவன் அப்பா…
இங்கு இருவரும் அர்ஜுன் பற்றி பேசிய நொடி அங்கு அவனுக்கு விக்கல் வர ஆரம்பித்தது…. அவனிற்கு அவனின் பாரு அத்தையின் நியாபகம் அதிகம் எடுத்தது… அவரிடம் பேச வேண்டும் என மனம் உந்தியது….
செமஸ்டர் விடுமுறை காரணமாக வீட்டில் தான் இருந்தான்… இந்த முறை பட்டு பாட்டி அவனை தோப்பு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை… அதனால் வீட்டில் தான் இருந்தான்….
அவருடன் பேசுவதற்காக தன்னுடைய போனை எடுத்தான்…. பார்வதி அம்மா சிவா அப்பா இருவருக்கும் மாறி மாறி அழைத்தான்.. ஆனால் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என பதிவு குரல் தான் அவனுக்கு கேட்டது….
எனவே வீட்டில் இருக்கும் லேன்ட்லைன் போனுக்கு அழைத்தான்… வீட்டில் யாரும் இல்லை… நந்தினியும் வாணனும் வெளியில் சென்று இருக்க வர்ணன் அவசர வெளியாக வெளியில் சென்று இருந்தான் வீட்டில் இருந்த சுபாவிடம் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவேன் என கூறி சென்று இருந்தான்….
அவள் உள்ளறையில் படித்து கொண்டு இருந்ததால் அழைப்பின் ஒலியில் வெளியில் வருவதற்குள் அது நின்று இருந்தது… அவள் அந்த எண்ணிற்கு அழைக்கலாம் என்று அருகில் சென்ற போது வேறு ஒன்று எண்ணில் இருந்து அழைப்பு வந்தது….
அவள் எடுத்து “ஹலோ” என்று கூறினாள்… அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ “அம்மா அப்பா” என்று கத்திக்கொண்டே மயங்கி விழுந்து இருந்தாள் சுபத்திரா….
அந்த நேரத்தில் வீட்டிலும் யாருமில்லை… மீண்டும் அர்ஜுனன் அழைத்து பார்த்தான்…. யாரும் அழைப்பை ஏற்காததால் வீட்டிற்கே சென்று வரலாம் என்று புறப்பட்டு இருந்தான்…
அடுத்த பதினைந்து நிமிடத்தில் சுபாவின் வீட்டில் இருந்தான்… அவன் வரும் போது தான் வாணன் வர்ணன் நந்தினி மூவரும் வந்தனர்… அவனை வரவேற்றதை கூட கண்டு கொள்ளாமல் வீட்டினுள் ஓடி இருந்தான் அர்ஜுனன்…
அங்கு தலையில் ரத்தம் வலிந்து மயங்கி கிடந்த சுபாவை பார்த்து “அம்மு” என்று கத்திக்கொண்டே அவளை தன் மடி தாங்கினான்…
இவனின் ஓட்டத்தில் மூவரும் பதறி உள்ளே வந்து பார்க்கும் போது மயக்கி கிடந்த சுபாவை பார்த்து வேகமாக அவளை நோக்கி வந்தனர்…
“வர்ணா கார் எடு” கூறிக்கொண்டே சுபாவை கையில் ஏந்தி கொண்டு காரை நோக்கி சென்றான்… வர்ணனும் வேகமாக ஓடி சென்று காரை எடுத்து நிறுத்தி இருந்தான்…. அவன் சுபாவோடு பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள நந்தினி முன்னால் ஏறி கொண்டாள்..
வாணன் தன் வண்டியில் காரை பின் தொடர்ந்தான்…. அவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் முன்னே வாணன் சென்று அனைத்தும் தயார் செய்து வைத்து இருந்தான்…
கார் நுழைந்தவுடன் அவளை ஸ்ட்ரக்ச்சரில் படுக்க வைத்து உள்ளே அழைத்து சென்றனர்…
அவளை பரிசோதித்த மருத்துவர் “எதோ விஷயத்தை கேட்டோ பார்த்தோ அதிர்ச்சியாகி கீழே விழுந்து இருக்காங்க… அதுல அடிபட்டு ரத்தம் வந்து இருக்கு தலைல… அவங்க ஹார்ட்ல பிளாக் இருக்கா என்னனு தெரியல எனக்கு அந்த சிம்டம்ஸ் தான் தெரியுது ஸ்கேன் எடுத்து தெரிஞ்சிக்கலாம்” என்று கூறி அவர் உள்ளே சென்றுவிட்டார்….
அப்போது தான் வாணன் தன்னுடைய அலைபேசி நீண்ட நேரமாக அதிர்வதை உணர்ந்து எடுத்து பார்த்தான்…
முகுந்தனின் நம்பரில் இருந்து அத்தனை அழைப்பு வந்து இருந்தது… அவன் எடுத்து பார்க்கும் போது முகுந்தன் தான் அழைத்து இருந்தான்…
அழைப்பை ஏற்று பேசியவன் அவன் சொன்னதை கேட்டு திகைத்து நின்று விட்டான்.. அவனின் நிலையை பார்த்து அர்ஜுனன் வாங்கி பேசினான்…
“முகி என்ன சொல்றடா…. வேற யாரவது இருக்கும் டா… நல்லா பாரு முகி” என்று கண் கலங்கியவாறு பேசினான்…
“இல்ல அர்ஜுன் பெரியம்மாவும் பெரியப்பாவும் தான்.. நாங்க கிளம்புறதுக்கு அரைமணி நேரம் முன்னாடி தான் கிளம்புனாங்க… நாங்க கிளம்பி கீழ இறங்கிட்டு இருக்கும் போது கூட்டமா இருந்தது… என்ன ஆச்சுனு நானும் மாமாவும் பார்க்க போகும் போது தான் பெரியம்மா பெரியப்பா பாடிய பள்ளத்துல இருந்து எடுத்தாங்க…
வாணன் அண்ணனுக்கும் அண்ணிக்கு வர்ணனுக்கு மாத்தி மாத்தி கூப்பிட்டேன்… எடுக்கவே இல்ல… அது தான் லேன்ட்லைனுக்கு பண்ணேன் பாப்பா தான் எடுத்தா.. என்ன ஆச்சுனு பொறுமையா தான் சொன்னேன்…
பாப்பா கத்துற சத்தம் தான் கேட்டது…. இப்ப இங்க பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல்க்கு எடுத்துட்டு போயிட்டு இருக்காங்க… கூட மாமா போய் இருக்காரு… இப்போ நானும் கிளம்பனும்… அங்க ஹாஸ்பிடல் போயிட்டு உனக்கு கால் பண்றேன்” என்று அழைப்பை வைத்து விட்டான் முகுந்தன்….
வாணன் ஒருபுறம் சிலையாய் நிற்க அர்ஜுனன் காதில் வைத்து இருந்த அலைபேசியை எடுக்காமல் சிலையாய் நின்று இருந்தான்…
இருவரும் கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது… இருவரின் நிலையை பார்த்து வர்ணனும் நந்தினியும் பயந்து இருவரையும் பிடித்து உலுக்க வாணன் நந்தினியை கட்டிக்கொண்டு கதறிவிட்டான்….
அர்ஜுனனும் வர்ணனை அணைத்து கொண்டு அழுது விட்டான்… இவர்களின் அழுகையில் இருவருக்குமான பயம் அதிகம் தான் ஆகியது… பின் வாணன் தான் மெதுவாக இருவரிடமும் பரமசிவன் பார்வதி இறப்பினை குறித்து கூறினான்….
வர்ணன் எப்போதும் பார்வதியின் செல்லம் தான்… அவனால் அவரின் இறப்பை தாங்க முடியவில்லை….
மாரியப்பன்(முகுந்தனின் மாமா, மருதாயி பாட்டியின் மகன்) பாலாவிற்கு தகவல் கூறினார்…
பாலா சென்று பார்க்கும் போது வீட்டில் யாரும் இல்லை… வாணனுக்கு அழைத்து மருத்துவமனையில் இருப்பதாக தெரிந்து கொண்டு அங்கு சென்றார் உடன் கிரிஜாவையும் அழைத்து கொண்டு…
சுபாவுடன் கிரிஜாவையும் அர்ஜுனனையும் மருத்துவமணையில் விட்டுவிட்டு மற்றவர்களை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்று ஆக வேண்டியவற்றை பார்த்து கொண்டார்….
அடுத்த இரண்டு மணி நேரத்தில் பரமசிவன் பார்வதியின் உடல்கள் வீட்டிற்கு கொண்டுவர பட்டது….
இளையவர்கள் யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை… முகுந்தன் மருத்துவமனைக்கு சென்று அர்ஜுனனையும் கிரிஜாவையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு மாரிமுத்துவின் மனைவி செண்பகத்துடன் மருத்துவமனையில் இருந்தான்….
கிரிஜா அங்கு படுக்க வைக்க பட்டு இருந்த தன்னுடைய அண்ணனின் உடலை பார்த்து கதறி அழுதுவிட்டார்… என்ன தான் கிரிஜா சுயநலமாய் இருந்தாலும் தன்னுடைய அண்ணன் மீது அளவு கடந்த அன்பை வைத்து இருந்தார்….
சுபாவும் மயக்கத்தில் இருந்து எழுந்து இருந்தாள்… அவளை பரிசோதித்த மருத்துவர் முகுந்தனை மட்டும் தனியே அழைத்து சென்று எதோ ஒன்றை கூறினார்… அதை கேட்டு அதிர்ச்சியாகி நின்றுவிட்டான் முகுந்தன்…
அவனை பார்த்து “முகுந்தன் இப்படி நடக்க சான்ஸ் இருக்குனு தான் சொல்றேன்… கண்டிப்பா நடக்கும்னு சொல்லல… கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க அப்படி எதுவும் ஆக கூடாதுனு…. டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போங்க” என்று கூறி சென்றுவிட்டார்…
முகுந்தனும் சுபாவை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து சென்றான்… அழுக கூட தெம்பு இல்லாமல் செண்பகத்தின் தோளில் சாய்ந்து எதையோ வெறித்தவாறே வந்தாள் சுபா…
வீட்டிற்கு வந்ததும் இருவரின் உடலை கண்டவுடன் மீண்டும் நின்ற அழுகை வெடித்து கிளம்பியது….
இருவரின் உடலும் நல்லமுறையில் தகனம் செய்யப்பட்டது… கிரிஜா மூன்று மாதம் இங்கயே தங்கிக்கொண்டார்…
அனைவரையும் விட அர்ஜுனன் தான் மிகவும் கலங்கி இருந்தான்… அவனின் பாரு அத்தையை அனைவருக்கும் மேலான இடத்தில வைத்து இருந்தானே… அவர் எப்போதும் அவனிடம் கூறிக்கொண்டே இருப்பார்… எதுக்கும் கலங்க கூடாது என எனவே கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு இருந்தான்…
சுபாவையும் வர்ணனையும் அனைவரும் பேசி சரிக்கட்டி பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்பினர்….
அர்ஜுனன் கல்லூரிக்கு கிளம்பும் முன் சுபாவிடம் “சுபா அத்தையும் மாமாவும் எப்பயும் நம்ம கூட தான் இருப்பாங்க… உனக்கு பப்ளிக் எக்ஸாம் இது… நல்லா படிக்கணும்.. இதை பத்தியே யோசிக்காத” என்று அறிவுரை கூறி கல்லூரிக்கு கிளம்பினான்..
அவளின் அஜ்ஜு மாமா சொன்னதற்காகவே பெற்றோரின் இழப்பில் இருந்து மீண்டு பள்ளிக்கு சென்றாள்.. பள்ளியில் அவளுக்கு சசி கண்மணி ஜனனி மூவரும் உறுதுணையாக இருந்தனர்….
மூன்று மாதம் சென்று இருந்தது… அந்த குடும்பத்தின் சந்தோஷம் மீள்வதற்க்காக சிவனேஸ் நந்தினியின் வயிற்றில் கருவுற்று இருந்தான்…
error: Content is protected !!