Skip to content
Post Views: 4,718

தெரிந்த கொண்ட உண்மைகளை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… அவளின் மாமன் ஒருவரை காதலித்து உள்ளான்… அதுவும் அவளின் தேவி அக்காவை…
தேவியை பற்றி கேட்ட போது அவளின் பெற்றோரே “அவ போயிட்டா சுபா ம்மா… அவளுக்கு நாம தேவையில்லையாம்… அவளை பத்தி இனிமே யோசிக்காத” என்று கூறிவிட்டனர்….
அவர்கள் மெய்யனூரில் தான் இருக்கிறார்கள் காஞ்சிபுரத்தில் தான் இருப்போம் என்று கூறியவர்களை வாணன் வர்ணன் முகுந்தன் மூவரும் தான் அடம் செய்து மெய்யனூரில் இருக்க செய்து விட்டனர்….
Advertisement
ஊர் திருவிழாவில் தேவியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத காரணத்தினால் வரவில்லை அவர்கள்…. அந்த டைரியை படிக்கும் முன்பு வரை தேவி யாரையோ காதல் திருமணம் செய்து கொண்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டாள் என்று தான் நினைத்து இருந்தாள்….
நேராக மொட்டை மாடிக்கு தான் சென்றாள்… சந்தோஷமோ துக்கமோ அவள் முதலில் போகும் இடம் மொட்டை மாடி தான்…. அவள் செல்லும் போது மழை வர ஆயத்தம் ஆகி இருந்தது….
அங்கு தண்ணீர் தொட்டியில் சாய்ந்து பரிதாபமாக அமர்ந்து விட்டாள் சுபா… கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வலிந்து இருந்து… ஐந்து நிமிடத்தில் மழை ஆரம்பித்துவிட்டது….
Advertisement
இடியுடன் அதிகமாக மழை வந்து கொண்டு இருந்தது… குளிரில் நடுங்கியவாறே அங்கேயே அமர்ந்து இருந்தாள்… அவளால் எதுவும் யோசிக்க கூட தோணவில்லை…. நடுஇரவில் சசியும் அர்ஜுனனும் வீட்டிற்கு வந்து இருந்தனர்…
Advertisement
சசி விடுமுறைக்காக அய்யனார்புரம் வந்து இருந்தான்.. அர்ஜுனனுக்கு மட்டும் தான் அவன் வரும் விஷயம் தெரியும்… ஒரு சிறிய பஞ்சாயத்தை முடித்துவிட்டு வர நடு இரவு ஆகி இருந்தது….
கதவு உள் பக்கமாக பூட்டி இருந்தது…. அர்ஜுனன் அவன் வைத்து இருந்த சாவியின் மூலம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அவன் பின்னே சசியும் நுழைந்தான்….
அர்ஜுனன் முதலில் கண்டது திறந்து இருந்த அலுவலக அறையை தான்… அவன் செல்லும் முன் மூடிவிட்டு சென்றது நன்றாக நியாபகம் இருந்தது…. வேறு யாரும் அதை திறக்க மாட்டார்கள்…
Advertisement
சுபா அதை திறந்து இருக்க கூடாது வேண்டிக்கொண்டே அங்கு ஓடினான்… அவன்பின் சசியும் ஓடினான்… ஆனால் அவள் தான் ஏற்கனவே அனைத்தையும் பார்த்து விட்டாளே…
சிதறி கிடந்த டைரிகளை பார்த்தே இருவருக்கும் தெரிந்துவிட்டது…. சுபா தான் அதனை படித்து உள்ளாள் என… இருவரும் ஆளுக்கு ஒரு அறையாக தேடினர் சுபா எங்கேயோ தென்படுகிறாளா என… அவள் எங்கும் இல்லை என கண்டுவிட்டு அர்ஜுனன் அங்கேயே சோர்ந்து அமர்ந்து விட்டான்…
சசிதான் அவளின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்… அதுவோ ஹாலில் தான் அடித்து ஓய்ந்தது… சசி கர்ணனை சென்று எழுப்பி விசாரித்தான்… அவனும் தெரியவில்லை… என்று கூறி அவனும் எழுந்து வந்து இருந்தான்…
வந்தவன் அர்ஜுனனிடம் “ண்ணா மதியம் தூங்குனதுனால தூக்கம் வரல தம்பியை உன்கூட தூங்க வெச்சிக்கோ… நான் கொஞ்ச நேரம் கழிச்சி தூங்குறேன்னு சொன்னாங்க… நானும் ஆரவும் தூங்க போயிட்டோம்… அப்பறம் கொஞ்ச நேரம் ஹால்ல சத்தம் வந்தது… அதுக்கு அப்பறம் அண்ணி சவுண்ட் வரல… அதுனால தூங்க போயிட்டாங்கனு நினச்சேன் ண்ணா” என்று கூறினான்…
அர்ஜுனனிற்கு மனதினுள் சூறாவளியே சுழன்று கொண்டு இருந்தது… சுபாவின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும்… தற்போது அவள் எங்கே என மனம் யோசித்து கொண்டு இருந்தது…
என்ன நினைத்தானோ திடீரென எழுந்து மொட்டை மாடியை நோக்கி ஓடினான்… அவன்பின் சென்ற சசியிற்கு அப்போது தான் தோன்றியது அவளின் துக்கமாக இருக்கும் போது செல்லும் இடம் மொட்டை மாடி என….
அர்ஜுனன் நினைத்தது போலே அவனின் மனையாள் உடலை குறுக்கிக்கொண்டு மழையில் நனைந்தவாறு எதையோ வெறித்தவாறே அமர்ந்து இருந்தாள்…
அதை பார்த்து அர்ஜுனனின் உயிரே ஆட்டம் கண்டது … “அம்மு” என்று அழைத்தவாறே அவளை நெருங்கியவனை பார்த்து “என்கிட்ட யாரும் வாராதீங்க…” என்று கத்தியவாறே உடலை இன்னும் குறுக்கிக்கொண்டாள்…
அவளின் குரலில் இருந்து வந்த வெறுப்பான வார்த்தையை பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டான் அர்ஜுனன் … மூவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை…
அப்போது இரண்டு கார்கள் வந்து நிற்பது போல் இருந்தது… சசியும் கர்ணனும் தான் கீழே சென்றனர்… அர்ஜுனன் சுபாவை பார்த்தவாறே மழையில் நின்றுவிட்டான்… அவன் மனம் புழுவாய் துடித்தது தன் உயிரானவளின் நிலைமையை நினைத்து….
கீழே வாணன் வர்ணன் தன் குடும்பத்துடன் வந்து இருந்தான்… இன்னொரு காரில் முகுந்தன் தான் வந்து இருந்தான்… மூவருக்கும் உடனேயே அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றி இருந்தது… அதனால் தான் நடு இரவாய் இருந்த போதும் வந்து இருந்தனர்….
வந்தவர்களை வரவேற்று விட்டு சசி நடந்த விஷயத்தை கூறிவிட்டான்… ஜனனி குழந்தைகளை பார்க்க கீழேயே இருந்து கொள்ள மற்றவர்கள் மேலே ஏறினர்…
மேலே சென்றவுடன் முகுந்தன் அர்ஜுனன் கன்னத்தில் அடித்துவிட்டு “இதுக்கு தான் அப்பயே சொல்லி தொலைங்கனு சொன்னேன் கேட்டீங்களா… அட்லீஸ்ட் ஒரு பொண்ணை நான் லவ் பண்ணேன்.. நாங்க பிரிஞ்சிட்டோம்னு சொல்ல சொன்னேன் கேட்டியா… இப்ப எப்படி வாழ்க்கையே வெறுத்து போன மாதிரி உட்காந்து இருக்கா பாரு…” இன்னும் நான்கைந்து அறை அறைந்துவிட்டு சுபாவை நோக்கி சென்றான் முகுந்தன்….
வாணன் வர்ணன் இருவரும் தங்கையின் அழுகை மற்றும் அவள் இருக்கும் நிலைமையை பார்த்து கண்ணீர் வழிய நின்று இருந்தனர்… இருவருக்கும் அவள் லேசாக சோகமாக அமர்ந்து இருந்தாலே தாங்காது… தற்போது அவளின் இந்த கதறல் அவர்களை நிலை குலைய செய்து இருந்தது….
எப்போதும் இருவர் வந்தாலும் அவளின் கண்களில் சந்தோஷம் தாண்டவம் ஆடும்… தற்போது அவள் பார்த்த பார்வை அவர்களின் உயிரையே பிரித்து எடுத்த மாதிரி உணர்ந்தார்கள் ….
முகுந்தன் அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து “டேய் சுபி ம்மா … எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம் டா… மழையில நனைஞ்சா உடம்புக்கு முடியாம போயிடும் டா… உள்ள பாப்பா வேற இருக்குல… எந்திரிம்மா… உள்ள போய் பேசலாம் வா” என்று பொறுமையாக கேட்டான்….
அர்ஜுனனும் மெதுவாக அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து “அம்மு எத்தனை அடி வேணா அடிச்சிக்கோ… நீ இப்படி கஷ்டப்படாத தாரும்மா… தயவு செஞ்சி உள்ள எந்திரிச்சி வா டா… வேணும்னா உன் கால்ல விழுறேன் டா” என்று கூறி அவளின் காலில் விழ பார்த்தான் அர்ஜுனன்…
சுபா டக்கென்று அவளின் காலை உள் இழுத்துக்கொண்டு முகுந்தனை பிடித்து எழுந்துநின்று அர்ஜுனனை விட்டு தள்ளி நின்றாள்.. அவனும் எழுந்து நின்றான்… அவளால் நிற்கக்கூட முடியவில்லை… முகுந்தனை பிடித்து நடுங்கியவாறே அர்ஜுனனை பார்த்து பேச ஆரம்பித்தாள்…
“உன்னோட முதல் காதல் நானா தான் இருப்பேன்னு நினச்சேன் மாமா… ஆனா உன்னோட காதலே நான் இல்லல …. உன்னோட முதல் காதலும் நான் தான் கடைசி காதலும் நான் தான் நினச்சேன்…. அது நிஜம் இல்லல…
நம்ம காதல்னால உருவாகலாயா நம்ம குழந்தைங்க… யாரையோ நினைச்சு என்ன தொட்டு இருக்கல… என்னைய நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு…
எனக்கு சொந்தமான இதயம்கூட என்னோட இதயம் இல்லல…. இந்த இதயத்துக்காக தான் நம்ம கல்யாணம் நடந்ததா..”. என்று கேட்டு மூச்சு வாங்கி நின்றவளை நெருங்கிய அர்ஜுனனை பார்த்து இரண்டு அடி பின்னால் நகர்ந்து நின்றாள்… அவளின் ஒதுக்கத்தில் செத்தே விட்டான் அர்ஜுனன்….
அவனை பேசவும் அவள் அனுமதிக்கவில்லை… பின் அவளின் அண்ணன்களிடம் திரும்பி “நீங்களும் என்கிட்ட மறச்சிட்டீங்கல….???” என்று அழுதவாறே கேட்டுவிட்டு சசியையும் நந்தினியையும் நீங்களும் மறச்சிட்டீங்கல என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு முகுந்தனிடம் திரும்பி “ண்ணா உன்கூட என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறியா என்னால இங்க இருக்கவே முடியல ண்ணா ஒரு மாதிரி நெஞ்செல்லாம் அடைக்குற மாதிரி இருக்கு” என்று கேட்டாள்….
அவனும் எந்த மறுப்பும் சொல்லாம “போய் டிரஸ் மாத்திட்டு வா சுபிம்மா வீட்டுக்கு போலாம்” என்று கூறி அவளை கைத்தாங்களாக அழைத்து கொண்டு அறையில் விட்டான்…
அவளும் போய் துணியை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்… அவள் வரும்போது ஜனனி அவளுக்கு சூடாக பால் கொண்டு வந்தாள்… ஆனால் அதை கையிலே தொடாமல் “போலாம் ண்ணா” என்று கூறினாள்….
முகுந்தனும் அவளிடம் டேப்லெட் எல்லாம் எடுத்துகிட்டியா டா என்று கேட்டான்….அவளும் ஆம் என்று தலையசைத்தாள்….
அவளை கைத்தாங்களாக அழைத்து கொண்டு காரில் அமர வைத்து விட்டு மற்றவர்களிடம் திரும்பி “அவ கொஞ்ச நாள் எங்க கூட வீட்டுல இருக்கட்டும்” என்று கூறிவிட்டு காரை எடுத்தான்…
மேலிருந்து நகரும் காரினை பார்த்து “அம்மு” என்று அந்த இடமே அதிர கத்தினான் அர்ஜுனன்… அவனின் கத்தல் காதில் கேட்டாலும் கண்ணீர் வழிய முகுந்தனின் வீட்டை நோக்கி காரினில் சென்றாள்…
மேலே அர்ஜுனன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து கண்ணீர் வடித்தான்… அவனின் கண்ணீர் மழையினில் யாருக்கும் தெரியாமல் கலந்து சென்றது….
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்
திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்
சிலந்தி கூடா
செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா ..ஆஆ ..ஆஆ……
error: Content is protected !!