Skip to content
Post Views: 3,616
உறவாக அல்ல உயிராக
Advertisement
அத்தியாயம் – 10
Advertisement
திருச்செல்வனின் மனது நிறைந்து இருந்தது. இரு மகள்களை தன் பக்கத்தில் வைத்து. கண் குளிர பார்த்து இருந்தார்.
Advertisement
திருச்செல்வனின் போன் ஒலிக்க திருமணத்திற்கு வரும் ஒரு நண்பர். அவரிடம் மண்டபத்துக்கு முகவரி கேட்க. லோகேஷன் அனுப்புவதாக சொல்லி அனுப்பி வைக்க. மீண்டும் திருச்செல்வனுக்கு போனில் அழைப்பு வந்து கொண்டே இருக்க பேசி முடிந்தவர்.
Advertisement
தன் இரு பெண்களிடம் சொல்லிக்கொண்டு வெளியே சென்றார்.
இனியாவுக்கு அப்போது தான் நினைவு வந்தது . ஜிஜிதாவின் , ரிசப்ஷன் செல்ல வேண்டும் என்று எப்படி சொல்லி செல்ல என்று நினைத்தவள்.
மகிழிடம் சொல்ல.
அவளோ போகனுமா?
ஆமா மகிழ் என்னுடைய பெஸ்ட் ப்பிரண்டு என்று கூற.
சரி போயிட்டு சீக்கிரம் வா.
இனியா வெளியில் வந்து பார்க்க. அனைவரும் திருமண வேலையில் பிசியாக இருக்க.
கோமதியிடம் சென்றவள். விசயத்தை சொல்ல.
அவரோ என்னம்மா இப்படி சொல்லுற, இப்போ பிரகா மாப்பிள்ளை வந்திடுவார். உன் அக்காவுக்கு நிச்சயம் நடக்கப் போகுது. இப்போ போயி என்று சொல்ல.
அம்மா நாளைக்கு முழுவதும் இங்கே இருக்கேன. இப்போ மட்டும். போயிட்டு வந்துறேன்மா.
கோமதி இனியாவின் கண்ணில் இருந்த ஆசையை பார்த்தவர். சரி போயிட்டு வா.
தாங் யூ மா என்று கிளம்பினாள்.
இனியா வெளியில் வர.
மீனாட்சி இனியாவை பார்த்து ஆ வென்று அவர் தாடையில் கை வைத்து. என்னடி இது கோலம். யாரு நீ. என்று கேட்க.
ஏன் உனக்கு கண்ணுத் தெரியலயா?
அதான்டி, இது நீ தானா! இல்லை வேற யாரோ வா!
என்னா பாட்டி லொள்ளா.
யாரோ சொன்னாங்க என்னையா யாரும் கல்யாணத்துக்கு கூப்பிடல, நான் வரமாட்டேன். உனக்காக தான் வந்தேன்னு, இப்போ மினிக்கி கிட்டு இருக்குறது என்ன?
என்ன மீனுக்குட்டி பொறாமையா?
” இல்லடி சந்தோஷமா இருக்கு, எவ்வளவு நாள் கனவு தெரியுமா, உன்ன உன் குடும்பத்தோடு சேர்க்கணும்முன்னு, இப்போ இந்த கிழவி நிம்மதியா கண்மூடுவா”.
பாட்டி சும்மா இரு நீயெல்லாம். ஸ்டாங் பாடி 100 வருஷம் நல்ல இருப்பே.
சரி. நீ இன்னும் கிளம்புளயா பிரண்டு ரிஷப்ஜனுக்கு
போகனும் பாட்டி, அம்மாகிட்ட சொல்லிட்டேன், அப்பாக்கிட்ட சொல்லனும்.
ஏன்டி உன் அப்பன் உன் கிட்ட பேசிட்டான.
நீ வேற , இப்பா தான் மணமகள் ரூம்பில் பாசமலர் படம் முடிஞ்சது.
என்னடி சொல்லுற.
ஆமாம் பாட்டி மகிழ் என்கிட்ட மன்னிப்பு கேட்டா எல்லாம் முடிஞ்சது.
சரிடி, எல்லாம் நல்ல படியா முடிஞ்ச சரி தான்.
திருச்செல்வன் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டே வெளியில் இருந்து வர. மண்டபத்தினுள் அவரை அனுப்பியவர்.
இனியாவை, பார்த்து இனியாம்மா நீ அக்கா கூட இருமா இங்கே. என்ன பண்ணுற?
அப்பா நான் , வந்து ,அது என்று இழுக்க சொல்லுடா என்றவரிடம்.
அப்பா என் பெஸ்ட் பிரண்டு ஜிஜிதாவுக்கு இன்னைக்கு தான் ரிஷப்ஜன். நான் போகனும் .
அப்படியா என்றவர், யோசித்து கண்டிப்பா போகனுமா?
ஆமாம்பா, அவ நம்ம ஹாஸ்பெட்டலில் வேலை பாத்த, அதனால கண்டிப்பா போகனும் அது மட்டும் இல்ல. என் கூட படிச்ச வங்க எல்லோரும் வாராங்க.
திருச்செல்வன் யோசித்து சரிடா போயிட்டு வா. எந்த ஏரியா ரிஷப்ஷன்.
இங்கே தான் தாம்பரம்.
ஓகே போயிட்டு சீக்கிரம் வா, டா.
நீ வந்தவுடன் எல்லோரும் சேர்ந்து நைட்டு சாப்பிடலாம் .
சரிப்பா என்று சந்தோஷமாக காரில் செல்ல.
பிரகதீஸ்வரன் கார் வர சரியாக இருந்தது.
திருச்செல்வன், பிரகாவின் காரை பார்த்தவுடனே கோமதியை அழைக்க.
உள்ளே இருந்து வந்தவர். என்னவென்று கேட்க.
மாப்பிள்ளை பிரகதீஸ்வரன் வர்ரார் என்று சொல்ல.
எல்லாம் ரெடிங்க இதோ என்றவர் பிரகாதீஸ்வரனுக்கு ஆரத்தி எடுத்து , மாலை அணிவித்து உள்ளே அழைத்து வர.
மீனாட்சியை பார்த்த பிரகதீஸ்வரன் பாட்டி என்று அவரின் காலில் வில .
அதை தடுத்தவர்.
நல்ல இருப்பா, நல்லா இருக்கனும் என்று ஆசிர்வாதம் பண்ணினார்.
பிரகா பாட்டியிடம் எப்படி இருக்கிறீங்க பாட்டி.
நான் நல்ல இருக்கேன், பிரகா.
என் பேரன் , என் பேத்தி கல்யாணம் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா.
புன்னகை செய்தவன், உள்ளே போலாம் பாட்டி என்று அழைத்து செல்ல.
மண்டபம் நிறைந்து இருந்தது.
நிச்சயதார்த்தம் ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது.
பெண் வீட்டாரும் , மாப்பிள்ளை வீட்டாரும் , பாக்கு , வெத்தலை மாத்தி கொண்டு. மகிழ்வதனியை அழைத்து புடவை கொடுத்து அணிந்து வர சொல்ல.
மகிழ்வதனிக்கு கை கால் நடங்குவது போல் இருக்க . எப்படியாவது பிரகா அத்தான் கிட்ட பேசிடனும் என்று நினைத்து புடவை மாத்த சென்றாள்.
புடவையை மாத்தி கொண்டு மகிழ் மேடைக்கு வர.
நிர்மலா மருமகளுக்கு, ஒரு ஹாரத்தை மகிழுக்கு அணிவித்து ஆசீர்வாதம் பண்ண.
சொந்தம் , பந்தம் அனைவரும் மேடைக்கு ஒருவர் , ஒருவராக வந்து. மகிழுக்கு தீருனீர் குங்குமம் பூசி வாழ்த்து சொல்லி சென்றனர்.
திருச்செல்வன் வந்தவர்கள் எல்லோரையும் சாப்பிட சொல்லி அனுப்பி வைத்தார்.
திருச்செல்வன் கூட்டம் கொஞ்சம் குறையவும். மகிழை அழைத்து மீனாட்சியிடம் ஆசீர்வாதம் வாங்க சொன்னார். மகிழ் பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்க.
ஒரு பெரிய பாக்சை மகிழ்யிடம் கொடுத்தார்.
மகிழ் வேண்டாம் பாட்டி என்று கூற.
இது் உனக்கு தான் . என்று கூறி மகிழ் கையில் கொடுத்தார்
மகிழ் திருச்செல்வனின் முகத்தை பார்க்க வாங்கி கொள். என்று தலையை ஆட்ட.
வாங்கி கொண்டாள் மகிழ்.
நேரம் ஆகுவதை பார்த்த திருச்செல்வன் ,கோமதியை அழைத்து மீனாட்சியை கீழே உள்ள ஒரு அறையில் தங்க சொல்லிவிட்டு உணவு கொடுக்கு மாறு சொல்ல.
சரிங்க என்றவர். மீனாட்சியை, தங்க வைத்து உணவு கொடுத்து. அடுத்த வேலையை பார்க்க சென்றார்.
மகிழுக்கு மேடையில் நிற்பதே கொடுமையாக இருந்தது. இதில் தொழிகள் வேறு பிரகாதீஸ்வரனை பார்த்து லுக்கிங் சூப்பர், செம்ம ஹான்சம்மா இருக்கார். பிரகாவை புகழ. மகிழுக்கு கோபமாக வர.
எப்போது கீழே தன் ரூம்குள்ள போகலாம் என்று இருந்தது.
பிரகாதீஸ்வரனின் நண்பர் மேடையில் கேக் கட் பண்ண இருவரையும் சொல்ல பிரகா. மகிழை கேக் கட் பண்ண சொல்ல. அவளோ நானா, நீங்க கட் பண்ணுங்க அத்தான் என்று சொல்ல.
கடைசியில் இருவரும் சேர்ந்து கட் பண்ண இளயவர்கள். கொண்டாட்டமா சத்தமிட ஒரே ஜாலியாக இருந்தது.
இருவரையும். ஊட்டி விட சொல்லி போட்டோங்கள் எடுக்க மகிழுக்கு தர்ம சங்கடமா இருந்தது.
மகிழ் ,பிரகாவிடம் அத்தான் நான் உங்க கிட்ட பேசனும். என்று கூற.
நானும் உன்க்கிட்ட பேசனும். சாப்பிட்ட பிறகு பேசலாம் என்று சொல்ல சரி என்றாள்.
திருச்செல்வன் பிரகாவையும் , மகிழையும் சாப்பிட அழைத்து செல்ல.
பிரகா திருச்செல்வனிடம் , மாமா நான் மகிழ் கிட்ட கொஞ்சம் பேசனும். சாப்பிட்ட பிறகு மாடிக்கு கூப்பிட்டு போறேன் என்று சொல்ல.
திருச்செல்வன் ஏன் மாப்பிள்ளை கீழே உள்ள ரூம்பிலே பேசலாமுல்ல .
இல்ல மாமா எல்லோரும் வந்து போக இருப்பாங்க. நான் மகிழ் கிட்ட தனியா பேசனும்.
சரிப்பா கூப்பிட்டு போங்க என்றார்.
நிர்மலா அண்ணனிடம் வந்து . அம்மா எங்கேண்ணா என்று கேட்க.
அந்த ரூம்பில் இருக்காங்க . நான் தான் கோமதியிடம் தங்க சொல்லி , சாப்பாடு கொடுக்க சொன்னேன். அம்மாவுக்கு வயசாகுதுல்ல ரொம்ப நேரம் உங்காத்து இருக்க முடியாது .
சரிண்ணா. நீ சாப்பிட்டியா.
இல்லம்மா .இனியா வந்துவுடனே சாப்பிடறோம்.
ஆமா இனியா எங்கே அண்ணா.
அவ பிரண்டுக்கு இன்னைக்குதான் ரிஷப்ஜனாம். அதன் போய் இருக்க வந்துறுவ.
ஆமாம் இனியன் ஏன் இன்னும் வரல.
அவன் வர்ற இடத்துல மழையாம் அதான் லேட் . இல்லண்ணா நேத்தே வந்து இருப்பான்.
சரிண்ணா நான் போறேன். நீங்க இனியா வந்தவுடன் சாப்பிடுங்க.
திருச்செல்வன் போன் ஒலிக்க. அதை பார்த்தவர் இனியன் எங்கேடா இருக்க .
அப்பா இங்கே மண்டபத்துக்கு வெளியே. இதோ வரேன் என்றவர். மகனை அழைக்க வெளியே சென்றார்.
இனியன் மெயின் கேட்டின் பக்கத்தில் இருந்தவனை . திருச்செல்வன் மண்டப வாசலில்
இருந்து கூப்பிட . இதோ வர்ரேன்பா என்று அவரின் அருகில் செல்ல.
திருச்செல்வன் வேகமாக வந்து அனைத்து கொண்டார். என்னாட இவ்வளவு லேட்டு.
இனியன் வெளிநாடு சென்று. இரண்டு வருடம் ஆகிறது. தந்தை அனைத்ததும் எல்லாம் நல்ல நடக்குதாப்பா . திருச்செல்வன் எல்லாம் நல்ல நடக்குது. நீ இல்லை என்ற குறை தான் .
என்னப்பா பண்ண நான் கிளம்பி 4 நாள் ஆகுது . இயற்கை சதி பண்ணியிருச்சு.
திருச்செல்வன். இனியனை பார்த்து. நீ இல்லாம கல்யாணம் நடந்துறு மான்னு கவலை பட்டேன் வந்துட்டா. ஒரு அறையை காண்பித்து குளித்து ரெடியாகி வா என்று அனுப்பி வைத்தார்.
திருச்செல்வன் பின் இருந்து அப்பா என்று சத்தம் வர.
திரும்பி பார்க்க இனியா. வாம்மா என்றவர் எல்லாம் முடிஞ்சத .
எல்லாம் ஆச்சுப்பா, சாப்பிடலாமா. எனக்கு ரொம்ப பசிக்குது என்று இனியா சொல்ல.
திருச்செல்வன் , இனியாவிடம் இப்போ தான் இனியன் வந்தான் . என்று சொல்லி கொண்டு இருக்குபோதே .
இனியன் அவனின் ரூம் கதவை திறந்து கொண்டு வெளியில் வர. இனியாவை பாரத்தவன். ஏய் இனியா என்று கட்டிபிடித்து கொண்டே , எப்படி இருக்க இனியா.
குட் . நீ எப்படி இருக்க உன்னோட படிப்பு முடிஞ்சத என்று இனியா கேட்க.
எல்லாம் ஓகே . இப்போ நீ டாக்டர் இனியா என்றவன். திருச்செல்வனிடம் நம்ம இனியா டாக்டர். நல்ல வளந்துட்டாலப்பா இனியா. எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா. என்று இனியாவை பாராட்ட.
தன்னை போலவே இருக்கும். தன் கூட ஒட்டி பிறந்த இனியனை பார்த்து கொண்டே இருந்தால் . அவன் முன்பு இவளிடம் இவ்வளவு பேச மாட்டான் . பேசும் இனியனை பார்த்து கொண்டு இருக்க.
கோமதி இனியனை பார்த்து டேய் எப்போ வந்த.
மம்மி என்றவன் , கோமதியை அனைத்து கொண்டு மை ஸ்சுவிட் மம்மி , மிஸ் யு என்று சொல்லா.
கோமதி, “வாடா இப்போவாவது வந்தியே , வா இனியா பந்தி முடிய போகுது. எல்லோரும் சாப்பிட்டாச்சு. நாம மட்டும் தான் இன்னும் சாப்பிடனும்.
திருச்செல்வன் குடும்பமாய் அமர்ந்து உண்டனர்.
திருச்செல்வன் இனியாவுக்கு இனிப்பை ஊட்டி விட, இனியன் எனக்கு என்று கேட்க அவனுக்கும் ஊட்டி விட்டார்.
நிர்மலா தன் அண்ணன் குடும்பத்தை பார்த்து சந்தோஷிக்க , கோமதி நிர்மலாவை பார்த்து சாப்டிங்களா அண்ணி.
நாங்க எல்லோரும் அப்பவே சாப்பிட்டோம்.
நீங்க சாப்பிடுங்க . கோமதியிடம் எங்க அண்ணாவுக்கும் பிள்ளைகளுக்கும் சுத்தி போடுங்க அண்ணி கண்ணு பட்டுட போகுது. ரொம்ப நாள் கழிச்சு என் அண்ணனை இப்படி பாக்க சந்தோஷமா இருக்கு.
எல்லோரும் பேசிய படியே உண்டு முடித்து வெளியில் வர.
மகிழ் , பிரகாதீஸ்வரனிடம் ஏதோ சத்தமாக பேச.
திருச்செல்வன் குடும்பமே மகிழ் அருகில் வர.
திருச்செல்வன் என்னம்மா மாப்பிள்ளை கிட்ட சத்தமா பேசுற என்ன ஆச்சு.
பிரகாவை முறைத்த மகிழ் , அப்பா நான் அத்தானை கல்யாணம் பண்ண ஆசை பட்டேன் . அவர் குழந்தைக்கு ஆய வேலை பார்க்க இல்ல. இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் . கல்யாணத்தை நிறுத்துங்க என்று கூற.
மகிழை அறைந்து இருந்தார். கோமதி. என்ன பேசுறா விடிஞ்சா கல்யாணம் இப்போ வந்து ஏதோ உலறுர .
நான் உளருரேனா அத்தான் கிட்ட கேளுங்க.
நிர்மலா பிரகாவிடம் அருகில் வந்து என்ன சொன்ன மகிழ்கிட்ட . அவ என்னவோ சொல்லுறா . எங்களுக்கு ஒன்னும் புரியல ஏதோ குழந்தையின்னு சொல்லுறா யார் குழந்தை என்று நிர்மலா கேட்க.
பிரகாதீஸ்வரன் என் குழந்தை என்று போனில் ஒருவரை அழைக்க . ஒரு 50 வயதுடைய மனிதர் 3 வயது குழந்தையை தூக்கி கொண்டு வர. அந்த குழந்தையை அவரிடம் இருந்து தூக்கி கொண்டான் பிரகாதீஸ்வரன்.
அச்சு அசல் பிரகாவை போலவே இருந்தான் ப்பிரித்தம்.
நிர்மலாவிடம் காண்பித்து. இது என் மகன் ப்பிரித்தம் என்று சொல்ல.
எல்லோருக்கும் அதிர்ச்சியாக நிற்க . நிர்மலா பிரகாவிடம் என்னாட சொன்ன உன் மகன்னா , என்றவர் விமல் என்று தன் கணவனை அழைக்க . வேகமாக நிர்மலா அருகில் வந்தார். விமல்ராஜ் இவன் என்ன சொல்லுறான்னு கேளுங்க. எனக்கு என்றவர் சொல்லுமுன் மயங்கி சரிந்தார்……
error: Content is protected !!