Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedசித்திரமே மொழி தொலைத்தாயோ??

சித்திரமே மொழி தொலைத்தாயோ?!! – 1 

சித்திரமே மொழி தொலைத்தாயோ?!! – 1 

பவனஷ்வர் வயது 25.. அந்த வீட்டின் செல்லமான இளவெருது மற்றும் இளமையோன். 

காலை 4.30 மணிக்கு எல்லாம் அவனின் அறையில் விளக்கு எரிந்துவிடும்.. காலை பயிற்சி செய்வதற்கோ அல்லது சாமி கும்மிடுவதற்கோ அல்ல.. அவன் அவனின் ஆட்களோடு இரவு கண் மண் தெரியாமல் குடித்துவிட்டு அவர்களோடே தன்னையும், உலகையும் மறந்து உறங்கிவிடுவான்.. காலை 4 அல்லது 4.30க்கு எழுந்து மெதுவாக அவனின் வீட்டுக்குள் நுழைவான்.. ஆனால் அப்படி நுழையும் போது பெரும்பாலான நேரங்களில் அவனின் அம்மா கீதையிடம் மாட்டி கொள்வான்.. இது தினமும் நடக்கும் கதையே..



Advertisement

அன்றும் அப்படியே, மெதுவாக பூனை பாதம் வைத்து வீட்டுக்குள் நுழைந்தவனின் மண்டையில் யாரோ பின்னாடி இருந்து நறுக்கென்று கொட்ட,

பவனேஷ்வர் ஆ என்று கத்தி திரும்பி பார்த்தான்..

அம்மா இடுப்பில் கையை வைத்து முறைக்க..

Advertisement

அவன்: “ஏன்ம்மா இப்படி? நல்லா வலிக்குது தெரியுமா?”

Advertisement

அவர்: “வலிக்குறதுக்கு தான் கொட்டுவாங்க. எத்தனை மணிக்கு நேத்து வீட்டை விட்டு வெளியே போன? இப்போ மணி என்ன ஆவுது? ஏன்டா இந்த அநியாயம் பண்ற?”

பவன்: “அம்மா அது கட்சி மீட்டிங் போனேன்.. அது முடிச்சுட்டு அப்படியே சாப்பிட போனேனா, அங்கே பார்த்தா நம்ம துரைசிங்கம் இருந்தாரு.. அவரை பார்த்தா, நம்மளை விடுவாரா? மாட்டாருல? அதான் கொஞ்சம் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுட்டு அப்படியே நம்ம ஆளுங்களோட கெஸ்ட் ஹவுஸ்லேயே தூங்கிட்டேன்.” என்று தலையை சொரிந்து அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்க்க..

அவன் அம்மா: “இதே கதையை தான் அஞ்சு வருஷமா சொல்லிட்டு திரியுற. உன்ன எதுக்குடா இன்ஜினியரிங் எல்லாம் படிக்க வைச்சேன்? உன் அப்பா மாதிரி இந்த மாதிரி கண்ட இடத்துக்கு எல்லாம் சுத்துறதுக்கா? ச்சை, இந்த அரசியல் பத்தி யார் பேசுனாலும் எனக்கு இப்போ ஒரே குமட்டலா இருக்கு. குளிக்காம வீட்டுல நிக்காதே. போ, முதல்ல தலைக்கு குளிச்சுட்டு சீக்கிரம் வா.. “

Advertisement

அவன்: “ஓகே ஸ்வீட் மம்மி. பி ஹாப்பி. நோ angry.” என்று அவரின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளிவிட்டு பாட்டு பாடிக்கொண்டே படியேறினான்.. 

போகும் அவனை பார்த்தவர் ஹாலில் ஒட்டிருந்த போட்டோ ப்ரேம் பக்கம் திரும்பினார்.. பெருமூச்சோடு கண்ணீரும் சேர்ந்து வந்தது.. 

பெரிய குடும்பம் தான்.. பண செல்வாக்கும் நிறைந்து இருக்கும் வீடு தான்.. ஆனால் என்னவோ, சந்தோஷம் மட்டும் எட்டா தூரத்தில் சின்னதாக தான் கடவுள் கொடுத்து இருந்தார்.. 

போட்டோ பிரேம் பக்கம் போனவர், அதில் தெரிந்த உருவங்களை பார்த்தார்.. 

கீதையின் கணவர் சக்கரைப்பாணி.. மினிஸ்டராக இருக்கிறார்.. Minister of  MILK & DAIRY development துறையில் இருக்கிறார்.. அவரை பார்த்து பார்த்து வளர்ந்த பவனும் அவரை பின்பற்றி அரசியலில் நுழைந்து தற்சமயம் MLAவாக இருக்கான்.. ஆனால் அதில் உண்மையாக சின்சியராக இருக்கிறானா என்றால்? அது அவனுக்கே தெரியாது.. அவன் பேச்சு, செயல் எல்லாத்திலும் விளையாட்டுத்தனம் தான் அதிகமாக இருக்கும்.. எந்நேரமும் துறுதுறுனு சிறுபிள்ளையை போல விளையாடி கொண்டும், அடுத்தவரை கேலி செய்து கொண்டும் இருப்பதே அவனின் முதன்மை வேலையாக இருக்கும்.. பவனின் அண்ணன் சரவணன். 

படிப்பிலும், குணத்திலும் நம்பர் ஒன். பேச்சிலும் வல்லமை படைத்தவன்.. அடுத்தவரிடம் பேசியே வேலையை சாதித்து விடுவான். அவனின் கனவே சுயமாக பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்து, அதில் படிக்கும் மாணவர்களுக்கு பெஸ்ட்டான கல்வியை கொடுத்து அவர்கள் ஒவ்வொருவரையும் சிறந்த பதவியில் அமர வைக்க வேண்டும் என்பது அவனின் குறிக்கோளாக இருந்தது.. அதுக்காகவே அவன் வாழ ஆரம்பித்தான்.. அந்த வீட்டின் முதல் வாரிசான அவன் இப்படி இருக்க, அதற்கு அப்படியே தலைகீழாக அவனின் அப்பா இருந்தார்.. அரசியலில் பல வருடங்களாக இருந்து வருபவருக்கு எந்நேரமும் லாபம் ஈட்டுவதில் மட்டுமே இருந்தது.. அந்த லாபத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.. தந்தையின் சொல்லை அப்படியே கேட்டு அதன்படி நடப்பவன் பவன்.. தந்தை சொல்லிவிட்டால் அதில் நியாயம் உள்ளதா இல்லையா என்றெல்லாம் யோசிக்காதவன்.. செய்துவிட்டு தான் மறுவேலை.. இப்படிக்கு பவன் இன்ஜினியரிங் படித்து இருந்தான்.. கம்ப்யூட்டர் அறிவு ஜாஸ்தி.. ஆனால் தந்தை சக்கரைப்பாணி தன் மகனை அற்ப செயல்களை செய்ய வைத்து அவனின் மூளையை மழுங்கடித்தார்.. 

சரவணன் படித்து முடித்து கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர, அது தந்தைக்கு கோபத்தை வரவழைத்தது.. அவர்களிடம் இருக்கும் பண செல்வாக்குக்கு எதற்காக மற்றவரிடம் கை நீட்டி சம்பளம் வாங்க வேண்டும் என்று திட்டினார்.. ஆனால் சரவணன் உறுதியாக சொல்லிவிட்டான்.. ஒழுக்கமாக உண்மையாக ஈட்டிய பணத்தில் தான் நான் ஸ்கூல் கட்டப்போறேன்.. அதுவரை நான் வேலைக்கு போகப்போறேன் என்று.. இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் அவ்வப்பொழுது விரிசல்கள், பிளவுகள் வந்த வண்ணம் இருந்தன.. ஆனால் சரவணன் மற்ற குடும்பத்தினரிடம் அன்பாக தான் இருந்தான்.. நன்றாக பேசினான்.. அந்த நாளில் நடந்த சம்பவம் ஒன்றால், அவன் மொத்தமாக குடும்பத்திடம் இருந்து பிரிந்து ஒதுங்கி கொண்டான்.. அத்தனை கனவோடு இருந்தவன் இன்று ஒரு அறையில் சக்கரம் நாற்காலியில் எதுவும் செய்யாமல் மூளையை வெறித்து பார்த்தப்படி இருக்கான்.. அவனை அந்த அறையை விட்டு வெளியே கொண்டு வர முடியவில்லை.. தம்பி பவன் மட்டுமே அந்த அறைக்குள் செல்வான்.. அண்ணனிடம் அவன் மட்டுமே பேசுவான்.. வேறு எவர் அந்த அறைக்குள் சென்றாலும், கத்துவான்.. தன்னையே துன்புறுத்தி கொள்வான்.. அதனால் எவரும் செல்வதில்லை.. சரவணன், பவன் தங்கை லாவண்யா பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கிறாள்.. இது போக அந்த வீட்டில் சர்க்கரைபாணி தம்பி இரண்டு பேர் அவர்களின் குடும்பம் எல்லோரும் இங்கே ஒன்றாக தான் இருக்கின்றனர்.. எல்லோரையும் அனுசரிச்சு அழகாக குடும்பத்தை நடத்துபவர் கீதை.. அதனால் இதுவரை சண்டை சச்சரவுகள் என வந்ததே இல்லை மற்ற குடும்பத்தினரோடு.. கீதை சமையல்கட்டில் இருந்தால், மீதி மனைவிகளும் வந்து அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வந்து விடுவார்கள்.. பெண்மணிகளுக்குள் நல்ல ஒற்றுமையும், நட்பும் இருந்தது.. சக்கரைபாணி முதல் தம்பி கட்டத்துரை அவரின் மனைவி நிர்மலா.. இரண்டாவது தம்பி ராமையா அவரின் மனைவி அபிராமி.. எல்லோருக்கும் இரண்டு பிள்ளைகள்.. எந்நேரமும் அந்த வீடு ஜேஜே என்று சத்தமும், கும்மாளமுமாக இருக்கும்.. கீதையின் முகத்தை பார்த்த அபிராமி,

“என்னக்கா? சரவணன் நினைப்பா? முகம் இப்படி வாடி கிடக்கே?” என்றாள்.

கீதை: “ஹ்ம் சதா எனக்கு அவன் நினைப்பு தான்.” 

நிர்மலா: “அக்கா, நான் ஒரு கோவில் சொன்னேனே? அங்கே கூட்டிட்டு போலாம்ல? அங்கே போன அஞ்சாறு பேருக்கு நல்லா குணமாகி போச்சாம்.. ஒரு தடவை கூட்டிட்டு தான் போங்களேன். அதுவும் நம்ம எல்லாம் போனா, கோயில்ல லைன்லையும் நிக்க தேவையில்லை. மினிஸ்டர் குடும்பம்னு உடனே உள்ளே விட்டுடுவாங்க.”

கீதை பெருமூச்சோடு,

“தெரியல நிர்மலா. என் பையனை பைத்தியம்னு என்னால சொல்ல முடியல. அவனை அப்நார்மல்லா பார்க்க முடியல. அவன் நல்லா தான் இருக்கான். ஆனா ஏனோ எல்லோரையும் வெறுக்குறான். அதான் இப்படி ஒரு தண்டனையை கொடுக்கிறான்.”

அபிராமி: “ஐயோ, யாரு அவனை பைத்தியம்னு இப்போ சொன்னது? நாங்க யாரும் அப்படி நினைக்கல. நமக்கே தெரியாம சில சக்தி நம்மள ஆட்டி படைக்கும். அது போல ஏதாச்சும் இருக்கோ என்னவோ? கெட்ட காத்து எல்லாம் விலகட்டும்னு தான் அந்த கோயில் போய் பாப்போம்னு சொல்றோம்.”

கீதை: “இவருகிட்டே கேட்டேன். இவருக்கும் பெருசா நம்பிக்கை இல்ல. அதான்.”

அபி: “அக்கா, நீங்க சொல்லி உங்க வீட்டுக்காரர் மறுப்பாரா? போங்க அக்கா சும்மா சொல்லாதீங்க.” என்று கூறி நகைக்க..

கீதையும் நகைத்தார்.

அது உண்மையே.. என்ன தான் சக்கரைப்பாணி பெரிய அரசியல் தலையாக இருந்தாலும், கீதையின் ஒரு பார்வைக்கு அப்படியே சரண்டர் ஆகிவிடுவார்.. அந்த காலத்திலேயே இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள்.. அந்த காதல் இப்போவாரை இருவருக்குள்ளும் மாறாமலேயே தான் இருந்தது.. இப்பொழுதும் அவரோடு வெளியே சென்றால், கீதையின் கையை பற்றிக் கொண்டு தான் வருவார்.. கீதை தான் வெட்கப்படுவார்.. 

 சக்கரைப்பாணியின் குணம் மற்றும் கொஞ்சம் மாறி இருந்தது.. அவரின் ஆசை பேராசையாக மாறி போயிருந்தது.. கொஞ்சம் பணத்தை கண்டு விட்டவர் இப்போது இன்னும் இன்னும் என்று அலைந்து கொண்டு இருக்கார்.. அவரின் அநியாயம் கீதையின் கண்ணுக்கு புலப்பட்டாலும்., அரசியலில் தலையிடாமல் ஒதுங்கி தான் இருந்தார்.. அவருக்கு புத்திமதி சொல்லும் அளவில் தான் இல்லை என்பது அவர் கருத்து. ஆனால் வர வர அவரின் பையன் பவனும் தப்பாக சில செயல்களை செய்வதை பார்த்தவருக்கு மனம் பதைத்தது.. பையனிடம் சொல்லி பார்த்தார். ஆனால் அவனுக்கு தான் செய்வது தப்பு என்றே புரியவில்லை.. தினமும் கடவுளிடம் வேண்டியபடி இருந்தார்.. 

நிச்சயம் இவன் செய்கிற தப்பை தட்டி கேட்க ஒருவள் வர தானே செய்வாள்? அது பொண்டாட்டியாக வர போகிறாளோ? அல்லது போலீசாக வர போகிறாளோ? என்று எண்ணிக் கொள்வார்.

அன்று அவனின் ஜீப்பில் அவனின் ஆட்களோடு மார்க்கட் பக்கம் போனவன்,

“டேய் நாலு கிலோ மட்டன் வாங்கிட்டு வர சொன்னாங்க அம்மா.. நீ நல்ல ஆட்டை பார்த்து வாங்கிட்டு வா. டேய் நீ இருடா.. சூசை நீ போயிட்டு வா. போன தடவை நீ வாங்குனது சரியில்ல.” என்று சொன்னவன் சூசையிடம் காசை நீட்ட.. 

சூசை: “பாஸ், எதுக்கு காசு? நம்ம மினிஸ்டர் வீட்டுக்குனு சொன்னா பணம் எல்லாம் கேக்கவே மாட்டாங்க.”

பவன் சூசையை முறைத்தான்.

“சூசை, காலையிலேயே என் மூடை ஸ்பாயில் பண்ணாத.. அது என்ன மினிஸ்டர் வீட்டுக்கு? அப்போ நான் யாரு? என் பேரை எல்லாம் சொன்னா என்னவாம்? இப்போ போய் MLA பவன் வீட்டுக்கு கறி வேணும்னு கேட்டு வாங்கிட்டு வா. அப்படியே இலவசமா முட்டையையும் கேட்டு வாங்கிட்டு வா.”

சூசை: “அது எப்படி பாஸ்? மட்டனுக்கு பிரீ முட்டை வரும்?”

பவன் தன் கையை மடக்கி முறுக்கி, “வராதுனு சொல்றீயா?”

சூசை வேகமாக, 

“வருமே பாஸ். கண்டிப்பா வரும்.” என்று ஓடினான்..

பவனுக்கு பின்னாடி இருந்த நாலு பேரும் சூசை சென்ற திசை பக்கமே பார்த்தார்கள். என்ன நடக்குமோ என்று? 

ஆனால் சூசை கறியையும் முட்டையையும் வாங்கிட்டு வந்துட்டான்..

சூசை: “பாஸ் உங்க பேர் சொன்னேன். கொடுத்துட்டாங்க.” என்றான்..

பவன் அவனை சந்தேகமாக அவனை பார்த்து, 

“உண்மையாவா? வா என் கூட.” என்று வேட்டியை மடிச்சு கட்டி அந்த கடைக்கு கூட்டி சென்றான்.

சூசை திருட்டு முழி முழித்தான்.. 

அந்த கடைக்காரரிடம்,

“இவனுக்கு கறி கொடுத்தல? அதுவும் காசே வாங்காம? ஏன்?”

கடைக்காரன்: “அதுவா, அது என்னமோ அரசியல்வாதிக்குனு சொன்னான். அதான்.”

பவன்: “என்ன பேர் சொன்னான்?”

கடைக்காரன்: “அதான் நம்ம ஐயா பேர் சக்கரைப்பாணி பேர் தான் சொன்னான்.” 

சூசை வேகமாக,

“பாஸ், உங்க பேரை சொன்னதுக்கு யார்னே தெரியாதவங்களுக்கு எல்லாம் கொடுக்க முடியாதுனு சொன்னான்.. என்னை விட்டுடுங்க. நான் அப்புறம் வரேன்.” என்று ஓடியே போய்விட..

பவன் அந்த கடைக்காரனிடம்,

“நான் தெரியுறேனா உனக்கு?”

கடைக்காரன், “கண் முன்னாடி தானே நிக்குற? அப்புறம் எப்படி தெரியாம இருக்கும்?”

கொஞ்ச நேரம் கழித்து,

“இப்போ?” என்று கேட்க..

கடைக்காரன் மூக்கில் வழிந்த ரத்தத்தை துடைத்தவாறே,

“ஹான் தெரியுது.. தெரியுது.. இனிமேல் இப்பொவேனும்னாலும் கடைக்கு வாங்க. காசு வாங்காம என்ன வேணும்னாலும் தரேன்.” என்றான் வலியில்..

பவன்: “அது..” என்று கூறி கிளம்ப..

அதே மார்க்கெட்டில் காய்கறி வாங்கி கொண்டிருந்த உத்ரா இதை எல்லாம் வெறுப்பு கக்கும் விழிகளோடு பவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் மனதில் சீ இப்படி ஒரு பிழைப்பா? என்று அருவெறுப்பு தோன்றியது..

ஜீப்பில் சிரிப்போடு ஏறிய பவன் அவன் ஆட்களிடம்,

“எப்படி இன்னைக்கு என் மாஸ்?”

ஆட்கள்: “சூப்பர் பாஸ்.”

பவன்: “டேய், இன்னிக்கு சூசை கெஸ்ட் ஹவுஸ்-க்கு நைட் வந்தா என்ன செய்யணும்?”

அவர்கள் வேகமாக, “உள்ளே விடக்கூடாது.. கதவை பூட்டிரணும்.ஒரு வாரத்துக்கு சாப்பாடு தண்ணீ கொடுக்க கூடாது.”

அவன்: “அது..” என்று கூறி ஜீப்பை கிளப்பினான்..

தொடரும்..  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!