நன்றாக அடர் செந்நிற நிறத்தில் செம்பருத்தி மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய கார்ட்டன் ரெஸ்ட்டாரண்ட் அது.
Advertisement
அங்கே தான் செம்பருத்தி மலர்களை இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தாள் இதயநிலா…
என்ன தான் மலர்கள் அவளின் கண்களை நிறைத்தாலும் பாவையின் மனம் முழுவதும் “நம்ம கல்யாணம் பண்ணிக்கலமா?…” என்று சற்று முன் அவன் கூறிய வார்த்தைகளில் மட்டுமே உழன்றது.
Advertisement
Advertisement
ஆடவன் கேள்வியில் நொடி பொழுதேனும் அவளுள் ஏதோ மின்சாரம் பாயும் உணர்வு தான். அந்த உணர்வை அவனிடம் காட்ட விரும்பாமல் தன் பார்வையை மாற்றினாள். பார்வையை மாற்றிக் கொண்டாலும் மனம் முழுவதும் அவனிடம் மட்டுமே இருந்தது.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன் ஹரியின் சந்திப்பும் அதற்கு பின் நடந்த நிகழ்வுகளும் அவளின் கண் முன்னே தோன்றி மறைந்தது. கண்களை இறுக மூடித் திறந்தவளுக்கு அவன் கேட்டதற்கு சரியென்று சொல்ல மனம் வரவில்லை..
Advertisement
உண்மையில் கடந்த சில வருடங்களாக அவன் மீது காதல் பித்து பிடித்து தான் சுத்திக் கொண்டிருக்கிறாள். இருந்தும் மனதின் ஏதோ ஓர் மூலையிலிருந்து வேண்டாம் என்ற மறுப்பு வந்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் அவளுக்கு நடந்த அந்த கொடூர நிகழ்வுகள் தான். ஆம் காமக் கொடூரன் ஒருவனின் கையில் கசங்கி எறியப்பட்ட பூவை தான் இந்த இதயநிலா…
இங்கு நுண்ணிடையாளிடம் காதலைக் கூறியவனோ அவளின் பார்வையைக் காண ஏங்கினான். மங்கையின் நொடி நேர மெளனம் கூட அவனுக்கு யுகமாய் தோன்றியது. உடனே தன் எதிரில் அமர்ந்திருப்பவளிடம்
பாவையின் பார்வையில் நிமிடம் உறைந்து போவது போல் தோன்றியது ஆடவனுக்கு. சட்டென கண்களை இறுக மூடித் திறந்தவன் காற்றில் அலைபாயும் கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே “ஏதாவது சொல்லு இதயா..” என்றான்.
அதற்கு அவளிடம் பதிலில்லை. எப்போதும் போல் ஒரு பார்வை தான்.
மங்கையின் பார்வையில் எதிரில் அமர்ந்திருந்தவனுக்கு மெல்லிய புன்னகை வந்தமர, அப்புன்னகை துளியும் மாறாது “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமாடி?” என மீண்டும் கேட்டான். இம்முறை ஆடவனின் கேள்வியில் உடனே மறுப்பாக தலையசைத்தாள்.
மாயோளின் மறுப்பு இவனின் இதழ்களில் இன்னும் புன்னகையை மலரச்செய்ய, அதே புன்னகையுடன்
“ஏன்…” என்பதைப் போல புருவத்தை ஏற்றி இறக்கினான்.
அவனின் புருவத் தூக்கலில் பட்டென விழத் துடித்த மனதை இரு கைகளின் பிணைப்பில் அடக்கிக் கொண்டவள் “உங்களுக்கு என்னை பத்தி முழுசா தெரியாது ஸ்டிரேஞ்சேர் சார். எனக்கு இந்த கல்யாணம், காதல் எதுலயும் பெருசா இண்டிரஸ்ட் இல்லை. அதுக்கு செட்டாகவும் மாட்டேன். உங்களுக்கு என்னை விட பெட்டர் பெர்சன் லைஃப்ல கிடைப்பாங்க…” வெகு சீரியஸாகக் கூறிக் கொண்டிருந்தவளின் குரல், கடைசி வரிகளில் சற்றே தடுமாறியது போல் தோன்றியது.
அந்த தடுமாற்றத்தை அவன் உணரும் முன்பே “ஒகே ஸ்டிரேஞ்சேர் சார், டைம் ஆச்சு நாங்க கிளம்பறோம்…” என்றபடி எழுந்து கொண்டாள்.
அவளின் மறுப்பும், அவசரமாக எழுந்த விதமும் இவனுக்கு இன்னும் இன்னும் சிரிப்பைக் கொடுத்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து “உட்காரு நிலவே…” என்றான் தனக்கு முன்னாலிருந்த நாற்காலியை கண்களால் காட்டியபடி.
ஆடவனின் ‘ நிலவே..’ என்ற அழைப்பு உள்ளே ஏதோ செய்தது. அதே கணம் அந்த அழைப்பிற்கு ஏங்கிய நிமிடமும் அதன் பின் நடந்த நிகழ்வுகள் கண்களுக்குள் வந்து நின்றது பெண்ணிற்கு.
அதனுடனே சில அழுத்தமான கை தடங்களும், இதழ் தடங்களும் மீண்டும் மீண்டும் நினைவு வர அதனை வலுக்கட்டாயமாக விரட்டி விட்டவள் தனக்கு எதிரில் அமர்ந்திருந்த மறவோனை ஏறிட்டுப் பார்த்தாள்.
மங்கையின் பார்வைக்கு காத்திருந்தவன் போல
“என்ன நிலவே?” என அவன் புன்னகையுடன் கேட்க,
“ஸ்டிரேஞ்செர் சார், என்னை இப்படிக் கூப்பிடாதீங்க…” என்று கோபமாக கூற முயற்சித்தாள். ஆனாலும் இலகுவாக தான் ஒலித்தது பெண்ணின் குரல்.
“ஹாஹா…என் ப்ரப்போசலை சொல்றதுக்கு முன்னாடி இருந்தே இப்படி தான் கூப்பிட்டுட்டு இருக்கேன் நிலவே” என அந்த நிலவேவில் அத்தனை அழுத்தம் கொடுத்துக் கூற,
“இனிமே அப்படி கூப்பிட வேண்டாம் ஸ்டிரேஞ்சர் சார். எனக்கு பிடிக்கல…” என்றதும் புன்னகை மாறாமல் சரியென்றான்.
மேலும் அவளே தொடர்ந்து “அண்ட் அன்னைக்கு நீங்க சொன்னது போல தான். நீங்க என்னோட லைஃப்ல ஜஸ்ட் பாசிங் கிளவுட் மாதிரி லைஃப் லாங் வரவே முடியாது. இந்த புரப்போசல் எல்லாத்தையும் மறந்துட்டு எப்பவும் போல என் ஸ்டிரேஞ்ர் சாரா இருங்க போதும். இதுக்கு மேல இந்த விசயத்தை பத்தி நம்ம பேச வேண்டாம்…” என்றவள் கைப்பையை இறுக்கி பிடித்தபடி சுற்றும் முற்றும் தன் தோழனைத் தேட,
“வாசு இங்க இல்லை…” என்றான் டேபிளில் வைத்திருந்த டீ கப்பை கையில் எடுத்தபடி.
“வாயு மண்டை…” என்று பற்களை கடித்தவள் அமர்ந்திருந்தவனை பார்க்க, டீ கப்பை வாயின் அருகில் கொண்டு சென்றபடி “உட்காரு நிலவே…” என்றான் மீண்டும்.
இம்முறை ஆடவனின் நிலவே என்ற அழைப்பு அவளை அங்கிருந்து நகர விடாமல் செய்ய, அதன் விளைவாய் சுதன் மீது கோபம் கோபமாய் வந்தது அவனின் நிலவுக்கு… பொத்தென இருக்கையில் அமர்ந்தவள் “இப்ப நான் என்ன பண்ணணும்?” என்று வெடுக்கென கேட்டாள்.
அவளின் கோபம் இவனுக்கு சுவாரஸ்யத்தைக் கொடுத்தது புன்னகை மாறாமல் “சோ சிம்பிள். என்னை கல்யாணம் பண்ணிக்க நிலவே இப்போதைக்கு அதுவே போதும்…” என்றான்.
உண்மையில் அவனுக்கே அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. தான் இத்தனை பேசக்கூடும் என்று ஒருநாளும் அவன் நினைத்தது இல்லை. ‘தன்னையே இந்தளவிற்கு பேச வைத்து விட்டாளே?’ என எண்ணியபடியே எதிரில் அமர்ந்தவளை பார்த்தான்.
காரிகையின் கண்களும், முகமும் அவளின் கோபத்தை அப்பட்டமாய் படம் பிடித்து காட்ட, அதை சுவாரஸ்யமாக பார்த்தான்.
ஆடவன் பார்வையில் எரிச்சல் வரப் பெற்றவள் “எந்த தைரியத்துல இப்படி என்கிட்ட கேக்குறீங்கன்னு சுத்தமா புரியல சுதன்…” என்கவும்,
“உனக்கும், என் மேல ஒரு ஆர்வம் இருக்குங்கிற தைரியத்துல தான்…” என்றான் தோளை குலுக்கி…
அவனின் உடல் மொழியில் இவளுக்கு தான் பொறுமை பறந்தது… “வாட்… எதை மீன் பண்ணி உங்க மேல எனக்கு ஆர்வம் இருக்குன்னு சொல்றீங்க சுதன்… ஒருவேளை ஃபாரின்ல இருந்து வந்ததும் உங்களைத் தேடி வந்ததினால இப்படி நினைக்கிறீங்களா?…” எனக் கேட்டவளின் குரல் சற்றே உயர்ந்திருந்தது. அவளின் கத்தலை அலட்டிக் கொள்ளாமல் சுற்றும் முற்றும் பார்வையால் காட்டினான்.
அவனை ஒரு பார்வை பார்த்தவள் குரலை தளர்த்தி “இதோ பாருங்க மிஸ்டர் ஸ்டிரேஞ்சர் சார். இப்பவும் சொல்றேன் எனக்கு உங்க மேல அப்படியொரு எண்ணமே இல்லை. இனி அப்படியான எண்ணம் வரவும் வராது… எஸ், ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது உங்க மேல க்ரஷ் இருந்துச்சு. இல்லைன்னு சொல்ல மாட்டேன். அந்த க்ரஸ் கூட என் வீட்டுக்கு போற வரைக்கும் தான். அதுக்கு அப்புறம் உங்க ஞாபகம் கூட எனக்கு சுத்தமா இல்லை, அண்ட் தென் ஆப்டர் டூ இயர்ஸ் பெங்களூர்ல மீட் பண்ணோம்.
அப்ப நான் இருந்த நிலைமையில உங்களை எனக்கு தெரியல, அண்ட் அந்த நேரத்துல உங்க ஹெல்ப் இல்லைன்னா நான் என்னோட பாஸ்ட் பத்தி தெரிஞ்சு இருக்க முடியாதுன்னு ஒத்துக்கிறேன்… உண்மையை சொல்லபோனால் நீங்க செஞ்ச அந்த ஹெல்ப்புக்காக தான் எனக்கு பழைய நினைவு வந்ததும் வாசுவை கூட்டிட்டு உங்களை தேடி ஈரோடுக்கே வந்தேன். அன்னிக்கு நீங்க லவ் சொல்லும் போதே இது செட் ஆகாதுன்னு தானே சொன்னேன்.. நீங்களும் சரி தானே சொன்னீங்க. மறுபடியும் என்னாச்சு உங்களுக்கு?…” எனக் கேட்டவள் மீண்டும் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டப்படி கண்களை இறுக மூடி திறந்தவள்
“அன்னிக்கப்பறம் உங்களை, நான் துளியும் தொந்தரவு பண்ணலை… ஏன்னா நீங்க மறுபடியும் காதல், அது, இதுன்னு உளறிட்டு இருக்க கூடாது தான். ஆனா இப்பவும் அதேயே சொல்றீங்க. விட்டா இப்ப நான், உங்களை பார்க்க வந்ததை கூட லவ்வுன்னு சொல்லுவீங்க போல…” என்றவளின் குரலில் நிதானம் என்பது துளியும் இல்லை
***இதயா சொல்றது எல்லாமே இதயத்தில் உன் காதல் தடம் பாகம் ஒன்றில் விரிவாக படிக்கலாம்**
தன் முன்னே படபடவென பிஜிலி வெடி போல் வெடித்துக் கொண்டிருந்தவளை குளம்பியை அருந்திக் கொண்டே நிதானமாக பார்த்தான் ஹரிஹரசுதன்.
“ம்ம் சொல்லுங்க ஸ்டிரேஞ்சர் மேடம். கேட்டுட்டு தான் இருக்கேன்…” என்றவன் காபியை நிதானமாக அருந்த, அவனை மூச்சுமுட்ட பார்த்தவள் வாசுவிற்கு அழைத்தாள்.
அவனோ அழைப்பை ஏற்காது போக “சிடு மூஞ்சி, எங்க போயி தொலைஞ்ச…” என வாசுவிற்கு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தாள்.
நிமிடம் கடக்க “வெளியில தான் இருக்கேன்…” என அவனிடமிருந்து பதில் வந்தது…
“சரி இரு வரேன்…” என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு எதிரில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள். அவனோ தன் எதிரில் ஒருவரும் இல்லை என்பதைப் போல் காப்பியை அருந்திக் கொண்டிருந்தான்.
அவன் செய்கையில் கடுப்பானவள் வெடுக்கென எழுந்து நடந்தாள்.
மங்கையின் கோபத்தில் சத்தமாக சிரித்தவன் “ஸ்டிரேஞ்சர் மேடம் ஒரு நிமிசம்…” கத்தி அழைத்தான்.
சுதனின் அழைப்பில் சட்டென நின்றவள் திரும்பி என்னவென்பதை போல் பார்த்தாள்.
பாவையின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தப்படி “பீஸ்…” என்று மூன்று விரலை மடக்கி, நடு விரலையும், ஆட்காட்டி விரலையும் வீ வடிவில் காட்டினான். அதற்கு எவ்வித பிரதிபலிப்பும் இல்லாமல் வாயிலை நோக்கி நடந்தாள்.
சிறிது தூரம் மட்டுமே சென்றவள் என்ன நினைத்தாளோ திரும்பி சுதனை பார்த்தாள். முன்பு போலவே தான் அமர்ந்திருந்தான் முகத்தில் எவ்வித பாவனையும் இல்லை…
‘விட்டு செல்கிறேன்…’ என்று கூறியும் அவன் சர்வசாதாரணமாக அமர்ந்திருப்பது ஏனோ அவளுக்கு கடுப்பை கொடுத்தது…
கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
இத்தனை வருட பிரிவும், அவளின் முதல் காதலும், அவனது விடாத காதலும் கண்முன்னே மின்னி மறைந்தன… மனதின் எண்ணங்களையும், கொடூர நினைவுகளையும் மீறி,அவளின் காதல் மெல்ல மெல்ல வெளிவந்தது.
நிதானமாக சுதனைப் பார்த்தாள். அவனோ தற்பொழுது இதயா இல்லைன்னா உதயா என்ற பாவனையில் தான் அமர்ந்திருந்தான். அந்த பாவனையில் எரிச்சல் வரவும்
‘ஓ சாருக்கு நான் வேண்டாமா?…’ என கேட்டுக் கொண்டவள் சற்று முன்னர் எடுத்த முடிவை காற்றில் பறக்க விட்டவளாக பல்லைக் கடித்தபடி ஆடவனை நோக்கி வேக எட்டுகளுடன் நடந்தாள்.
அவள் வருவாளா என்ற படபடப்புடன் அமர்ந்திருந்தவனுக்கு அவள் திரும்பி தன்னை நோக்கி வந்ததும் அவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லாத நிலை. நிலா அவனை நெருங்கியதும் சத்தமாக சிரித்தான் சுதன்…
“போறேன்னு சொன்னா அப்படியே விட்டுடுவியா? ஹான்? சொல்லுடா சொல்லு…” எனக் கேட்டு அடிக்க பாய அவளின் கையை பிடித்து கொண்டவன் “இப்பவே சொல்லிடு நிலவே…” என்றான் மெல்லிய குரலில்…
அதற்கு பதில் கூறாது அமைதியாய் நின்றாள். மனதின் எண்ணம் அவளை அறியாமலயே வெளிப்பட்டு விட்டதில் வெட்கி தலைகுனிய நின்றாள்.
அன்று பெண்ணின்
உடலில் காயங்களும் இல்லை, அந்நாளின் நினைவுகளும் இல்லை. ஆனால் இன்று அதன் நினைவுகளை வலுக்கட்டாயமாக சுமந்து கொண்டு நிற்கிறாள்.
கொடூர நாட்களின் நினைவுகளை திரும்ப பெற்றதும் துடித்தது போல இப்பொழுது துடிக்கவில்லை என்றாலும் மனதில் இருப்பவனை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு திறனில்லாமல் தவிக்கிறாள். அவனை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கி செல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் துடிக்கிறாள்.
மங்கையின் துடிப்பைப் பார்த்தவன்
“நிலவே…” என்றழைத்தான் உயிர் உருகி… அந்த குரலில் பட்டென கண்களில் கண்ணீர் சூழ நிமிர்ந்து பார்த்தாள்.
அவளின் கையை தன் நெஞ்சில் மீது வைத்தவன் “எனக்கு தெரியும் நிலவே…” என்றான்.
‘ என்ன…’ என்பதை போல் புரியாமல் பார்த்தாள் அவள். மீண்டும்
“எனக்கு எல்லாமே தெரியும் நிலவே, உனக்காக எப்பவும் காத்திருப்பேன்.. ஆனால் வெறும் ஹரியா இல்லாம இதயாவோட சுதனா காத்திருக்க ஆசைப்படறேன். என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா…” தன் நெஞ்சின் மீதிருந்த கையை இன்னும் அழுத்தி பிடித்தபடி கேட்டான்.
அக்கணம் எதைப்பற்றியும் யோசிக்காமல் மங்கையின் இதயமும், மதியும் ஒரே சமயத்தில் சரியென்று சொல் என கட்டளையிட்டது. அத்தோடு ‘நிச்சியம் அவனின் காதல் உன்னை இதிலிருந்து வெளிக் கொண்டு வரும் என்றது…’
அச்சமயம் கண்களில் நீர் சூழ சரியென்று தலையாட்டினாள் ஹரியின் இதயா…
தனி ஒருவளாக கடக்க நினைத்த கொடூர நினைவுகளை அவனின் கைப் பிடித்து கடக்க முயற்சிக்கிறாள்.. இவளது முயற்சி வெற்றியடையுமா? இனி வரும் அத்தியாயங்களில் காண்போம்.
******
அதே கணம் இங்கு வெளியில் நின்ற வாசுவின் முகம் இறுகி சிவந்திருந்தது.. தன் முன் அதிரடியாக காதலை கூறிக் கொண்டிருந்த பாவையாள்.
வாசுவின் இறுகிய முகத்தை கண்களை சுருக்கி பார்த்தவள் “இதோடா இப்படி கோபமா பார்த்தா பயந்து போயிடுவேன்னு நினைச்சியா? இங்க பாரு தேவ், மூஞ்சியை இப்படி அட்டாரி மேல தூக்கி வைச்சிருந்தாலும் ஐ லவ் யூ , ஐ லவ் யூ தான்… நீ என்னை லவ் பண்ணலன்னாலும் பரவாயில்ல உனக்கும் சேர்த்து நானே லவ் பண்ணிக்கிறேன்…” பெருந்தன்மையாக கூறியவளை பார்த்து பல்லைக் கடித்தான்.
அவனின் முகத்தை பார்த்தபடியே மேலும் தொடர்ந்தாள். “இப்ப இருக்கிற பிள்ளைங்க சுமார் மூஞ்சி குமாரயே விடறது இல்லை.. நீ வேற மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து வைச்சவன் மாதிரி இருக்க, எவளாது வந்து கொத்திட்டு போயிட்டா நான் என்ன பண்றது. அதான் உன்னோட இன்டர்வியூ முடிஞ்சதும் மறுபடியும் ஒரு அட்டனன்ஸ் போட்டுட்டேன்…” என தலைசாய்த்து அவள் கூறிய விதத்தில் வேற எவராக இருந்தாலும் மயங்கி தான் போயிருப்பார்கள் ஆனால் அவனோ கண்களில் மெல்லிய படப்படப்போடு நின்றிருந்தான். கண்களில் மட்டுமே அத்தனை படபடப்பு தெரிந்தது. அவனது உடலில் அது துளியும் தெரியவில்லை என்பதே உண்மை…
அவன் கண்களில் தெரிந்த மெல்லிய படப்படப்பை பார்த்திருந்தால் நிச்சியம் அடுத்தடுத்து வம்பிழுத்திருக்கவும் மாட்டாளோ என்னவோ..
“அண்ட் இப்பவும் சொல்றேன் என்னை தவிர வேற யாராவது நீ பார்த்தன்னு வையேன் சத்தியமா சொல்றேன். டிரெய்னிங்ல இருக்கிறன்னு எல்லாம் பார்க்க மாட்டேன். தூக்கிட்டு போயி ரேப் பண்ணிடுவேன்…” என்றதும் தான் தாமதம் மங்கையின் கன்னத்தில் வாசுவின் கை ரேகைகள் அனைத்தும் பதிந்திருந்தது…
அவளின் ஒருசில வார்த்தைகள் இவனுக்கு கொடூர சம்பவத்தின் நினைவுகளை கொடுத்திருந்தது. இத்தனை நாட்கள் உள்ளுக்குள் முடங்கி கிடந்த பதினைந்து வயது வாசுதேவன் வெளியில் எட்டிப் பார்த்தான்.
‘நீ மட்டும் பொண்ணா பிறந்திருந்தா இன்னும் ஜிவ்வுன்னு இருந்திருக்கும். இப்ப மட்டும் என்ன நீயும் உன் அம்மாவை போல பேரழகா தான் இருக்க…’ எனக் கூறி ஆண்மகனின் உடம்பில் உலாவிய கைகளின் தடங்கள் இன்றும் நினைவு வந்தது.
இங்கு பாலின சமத்துவத்தை எதிர்நோக்கி சமூகம் சென்று கொண்டிருக்க.. வக்கிர எண்ணங்கள் அந்தச் சரிசமத்தை இளம்பிள்ளைகள் மீது வாரி இறைத்துக் கொண்டுள்ளது. இங்கு இதயாவும், வாசுவும் எதிர் பாலினம் தான். ஆனால் அனுபவித்த கொடுமைகளும், கடந்த பாதைகளும் முள் தான். கற்பை பெண்ணிற்கு மட்டும் வைத்து அழகு பார்த்தது சமூகம். ஆனால் உணர்வுகளை பொதுவில் வைத்து வேடிக்கை பார்த்தது இயற்கை.
தனக்கு நடந்த கொடூரத்தை தன் காதலனுடன் கடக்க நினைக்கும் இதயா ஒரு பக்கம் என்றால்… தனக்கு நடந்த கொடூரத்தை நினைத்து தேடிவந்த காதலை மறுக்கும் வாசுதேவன் ஒரு பக்கம். பார்ப்போம் இதே நிலை கடைசி வரை தொடருமா என்று…
ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன். ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்…
என்ற அலைபேசியின் சத்தத்தில் தன் நினைவிலிருந்து வந்தவன் கால் சராயிலிருந்து அலைபேசியை எடுத்தான். அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதயா தான் அழைத்து இருந்தாள். மீண்டும் அழைக்க நினைத்த நொடி அவளிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. அதை வாசித்தவனின் முகத்தில் இத்தனை நேரமிருந்த கோபம் சற்றே விலகி நின்று வேடிக்கைப் பார்த்தது.
கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே தன் முன் நின்ற பெண்ணை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில் மீண்டும் அப்பெண்ணை ஹரி மற்றும் இதயாவின் திருமணத்தில் கண்டான்.