Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 8

                      ஜெய் ஸ்ரீ ராம் 

EPI-8

இவர்களின் தாத்தா முத்தையா விற்கு இரண்டு மனைவிமார்கள் சக்தியின் பாட்டி பாரிஜாதம், மனோவின் பாட்டி திலகவதி. அந்த காலத்தில் இரண்டு மனைவிமார்கள் இருப்பது சகஜம் என்றாலும். 

தன் தோழியே! தன் கணவரின் இரண்டாம் தாரமாக வந்து. தனக்கு நம்பிக்கை துரோகம் செய்ததை பாரிஜாததால்  தாங்க முடியவில்லை.



Advertisement

 அடுத்து வந்த நாட்களில் கணவனை மன்னித்து அவரோடு வாழ்ந்த அவரால் திலகவதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒரு வீட்டில் இல்லாமல் தனித்தனியே வசித்து வந்தனர். 

பாரிஜாததிற்கு திருப்பதி பரிமளா என்று இரு பிள்ளைகள் திலகவதிக்கு  பழனி மட்டுமே!

 பெரியவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் பிள்ளைகள் மூவரையும் சகோதரர்களாகவே வளர்த்தார்  முத்தையா, பரிமளாவிற்கு திருமண வயதாகிய போது தன் அண்ணன் மகன் ரத்தினத்திற்கு திருமணம் செய்ய பாரிஜாதம் முடிவு செய்தார்.

Advertisement

 பரிமளா  தன்னோடு ஆசிரியராக பணிபுரியும் செல்வத்தை காதலிப்பதாக கூற,  அவருக்கு தாய் தந்தை யாரும் இல்லாததால் பரிமளா எவ்வளவு சொல்லியும் பாரிஜாதம்ஒத்துக்கொள்ளவில்லை.

Advertisement

 பரிமளாவும் செல்வமும் பதிவு திருமணம் செய்து சென்னையில் தங்கி விட்டனர். அந்த ஊரிலே முதல் பெண் பட்டதாரி பரிமளாவே  !அவளின் இந்த திருமணம் ஊரார் வாய்க்குள் அவலாக மாறி “வயது வந்த பிள்ளையை வீட்டோடு வைத்து கல்யாணம் செய்து வைக்காமல் கல்லூரிஅனுப்பியதோடு  போதாக்குறைக்கு வேலைக்கு வேற அனுப்பி வைச்ச. “

” பார்த்தயா என்ன ஆச்சுன்னு “என்று ஆளாளுக்கு  இலவச அறிவுரை வழங்க, அந்த ஊரின் ராணியாக வலம் வந்த பாரிஜாததிற்கு மிகவும் அவமானமாகியது . 

இதில் பரிமளா சென்று 5 வருடமாகியும் ரத்தினம் திருமணம் செய்யாமல் இருக்க ஊரார் வாயை அடக்க முடியவில்லை.

Advertisement

 ஐந்து வருடம் கழித்து அர்ஜுனோடு வீட்டு வாசலில் பரிமளா  நிற்க, அந்த கிராமத்து மங்கையானா பாரிஜாதம். வாயில் வந்த வசவுகளை எல்லாம் எடுத்து விட, 

 தன் தாயின் கண்களில் கண்ணீர் கண்ட அர்ஜூனிற்க்கு அந்த மூதாட்டி மட்டுமல்ல அந்த ஊரே பிடிக்காமல் போனது.

 ரத்தினத்தை மனதில்கொண்டு முத்தையாவும் மக்களை அரவணைக்க வில்லை. கணவரும் தோழியும் அரவணைக்காததால்  திலகாவும் அங்கு பார்வையாளராக மாறிப்போனார்.

பாரிஜாதம் திலகாவோடு பேசாமல் இருந்தாலும்.  அவரோடு ஆலோசனை படி தான் பழனி, கங்கா திருமணம் நடந்தது. காவேரி வாயில்லா பூச்சி தன் குடும்பம் தவிர மற்றவரோடு பேச கூட மாட்டார். 

கங்கா அவருக்கு நேர் எதிர் ஒரு சண்டை யென்றால் அவரின் குரல் தான் அதிகம் கேக்கும். பல சமயம் காவேரிக்கும் சேர்த்து இவர் பலரிடம் சண்டை போட்டிருக்கிறார். 

 

[the_ad id=”6605″]

 

 மேலும் நான்கு வருடம் கழித்து மது பிறந்த செய்தியைக் கேட்டு திலகவதியும் முத்தையாவும் சென்னை சென்று மூன்று மாதம் அவர்களோடு தங்கி தாயும் மகளும் நலம் பெற்ற பின்னரே சொந்த ஊர் திரும்பினர்.

 அதன்பிறகு வருடா வருடம் விடுமுறைக்கு மதுவோடு பரிமளா, திலகவதி வீட்டிற்கு வருவது வாடிக்கையானது. ஆனால் அர்ஜுன்……. பரிமளா  எவ்வளவு அழைத்தும், அன்று அம்மாவின் கண்களில் கண்ட கண்ணீர் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விட்டதால் வரவே மாட்டேன். என்று விட்டான்.

காலபோக்கில்  காவேரி வெளியிடங்களில் பரிமளாவோடு பேச ஆரம்பித்தார்.  கங்காவின் ஆலோசனையோடு மது, சக்தி வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கமானது. 

 

 மகளை மன்னிக்க முடியாத பாரிஜாதம் பேத்தியின் குண்டு குண்டு கன்னங்களையும் குழந்தை சிரிப்பையும் பார்த்து மயங்கி தான் போனார்.  ரத்தினமும் திருமணமாகி குழந்தையோடு இருக்க, அவ்வளவு பேசிய பிறகு மகளோடு தானே வலிய போய் எப்படி சமாதானம் செய்ய என்றும் தெரியவில்லை. 

.  பிறகு சில நாள் கழித்து  மது பெரிய மனுஷி ஆகிவிட்ட தகவல் வந்து சேர, அவ்வளவுதான் மகளின் திருமணத்தில் இருந்து வளைகாப்பு,  பிள்ளை பிறப்பு, காதுகுத்து என்று செய்யாமல் போன சீர்வரிசைகள் அனைத்தும் கொண்டு சென்று இறக்கி விட்டார்.

 தன் குடும்பம் தன்னை ஏற்றுக் கொண்டாலும், திலகவதி சித்தியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்கள் உறவு ஏற்கப்படும். என்று பரிமளா  கூறிவிட திலகவதியும் பாரிஜாதம் காலில் விழுந்து மன்னிப்பு யாசிக்க, 

 சுற்றியிருக்கும் நல் உள்ளங்களை இவ்வளவு நாள் புரிந்துகொள்ளாமல் போனேனே !என்று தன்னைத்தானே நொந்து கொண்டார். காவேரியும் கங்காவும் தன் அத்தைகளைப் போலவே தோழிகளாக பழகி அந்த குடும்பத்தின் ஒற்றுமையை காத்தனர்.

 எந்த சொந்தமும் இல்லாமல் தான் அனாதையாய் நிற்க,  தன்னை திருமணம் செய்த காரணத்திற்காக சொந்தம் இருந்தும் அனாதையாய் நிற்கும், மனைவியைப் பற்றிய கவலை தீர்ந்து நிம்மதியாக உணர்ந்தார் செல்வம். கூடவே மாப்பிள்ளை மாப்பிள்ளை என்ற அதிகப்படி மரியாதையும் உபசரிப்பும் அவருக்கு மிகுந்த கூச்சம் ஆகிப்போனது.

 தன்னுடைய இருபது வயது வரை தங்கள் குடும்பம் மட்டுமே என்று தனியாகவே இருந்து பழகிய அர்ஜுனுக்கு இவர்களது இந்த திடீர் ஒட்டுதலை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குடும்பத்தோடு ஒட்டியும் ஒட்டாமலுமே இருந்தான். ஆனால் பிறந்ததில் இருந்து ஒற்றை பிள்ளையாக வளர்ந்த சக்திக்கும்,   அர்ஜுன் இருவருக்கும் இடையே நட்பு துளிர்விட்டு நாளடைவில் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.

 அடுத்து வந்த வருடங்களில் தீபாவளி,  பொங்கல், ஊர் திருவிழா என்று அனைத்து விசேஷங்களும் மதுவின் குடும்பத்திற்கு கிராமத்திலேயே கழிந்தது.

 அர்ஜூனின் இந்த ஒதுக்கத்தை பெரியவர்கள் உணர்ந்தே!அனைத்திலும் அர்ஜுன் அர்ஜுன் என்று அவனை முன்னிறுத்த,  பொருத்து பார்த்தவன் ஒரு கட்டத்தில் தன் தந்தையிடம் தனிமையில் “அப்பா பாசம் இல்லாமல் இவங்களால எப்படிப்பா இப்படி நடிக்க முடியுது. இத்தனை வருஷம் இல்லாத பாசம் எப்படி புதுசா வரும்.”

 “இவங்களுக்கு இது கொஞ்சம் ஓவரா தெரியலை” என்று பாய

” அப்படி இல்லைபா கிராமத்துக்காரங்க எப்பவும் இப்படி கள்ளமில்லா  தான் பழகுவாங்க, பாசமும் சரி வெறுப்பும் சரி மனதில் இருப்பதை நேரடியாகவே  காட்டுவாங்க, “

“நகரவாசிகள் மாதிரி மறைச்சு  பேச தெரியாது. இவங்க அன்பு கறந்த  பால் மாதிரி தூய்மையானது. இவங்களோடு வாழ்ந்து பார் அவங்க மனசு புரியும்”.

” என்னவோ போங்கப்பா,  நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது இவங்கல்லாம் எங்க ஓடிப் போறாங்கன்னு மட்டும் பாருங்க “என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

 கஷ்டம் என்று வந்தால் உயிரைக்கூட இவர்கள் கொடுப்பார்கள் என்று எப்படி மகனிற்கு புரியவைப்பது, போகப்போக புரிந்து கொள்வான் என்பது செல்வதின்  எண்ணம். 

விலகி செல்லும் அர்ஜுனிற்கே இவ்வளவு மரியாதை. என்றால் எந்நேரமும் “பாட்டி,  தாத்தா “என்று பெரியவர்களின் காலை சுற்றும் மதுவிற்கு சொல்லவே வேண்டாம். 

அவ்வீட்டின் கடைக்குட்டி வேறு மொத்தத்தில் அக்குடும்பத்தின் முடிசூடா இளவரசியாகினால் 24 மணி நேரமும் எல்லோருக்கும் செல்லம். செல்லம் மட்டுமே! 

இதுவரை அந்த வீட்டில் அவளை அடிப்பதும்,  கண்டிப்பதும் என்றால் பரிமளாவிற்கு பிறகு சக்தி மட்டுமே!பின்னால்  மதுவிற்கு அவனைப் பிடிக்காமல் போக அதுவும் ஒரு காரணம்.

 மகிழ்ச்சியில் திளைத்த அந்த குடும்பத்திற்கு பேரிடியாக வந்து சேர்ந்தது செல்வத்தின் திடீர் மரண செய்தி. குடும்பத்தில் ஒவ்வொருவரும் அடித்துப்பிடித்து கிளம்ப விபத்தில் மரணம் என்பதால் உடல் அரசு மருத்துவமனையில். 

அர்ஜுன் IPS எக்ஸாம் முடிந்து வீட்டில் இருந்த சமயம்.  தாய் , தங்கையை சமாதானமும் செய்ய முடியாமல் போலீஸ் ஸ்டேஷன், என்குயரி,  விபத்து நடந்த இடம், மருத்துவமனை, போஸ்ட் மாடம் என்று அலைந்தவன். தங்கள் தாத்தா குடும்பம்  வந்தவுடன் தான் தன் தந்தையின் இழப்பை கூட உணர்ந்தான்.

 

[the_ad id=”6605″]

 

 அடுத்து வந்த நாட்களில் எப்படி எல்லாம் முடிந்தது என்று தெரியவில்லை. தந்தை இறந்து ஐந்து மணிநேரம் பட்ட அலைச்சல்.   இந்த 16 நாட்களில் அவன் படவேயில்லை. 

அனைத்தும் மாமாக்களே! அப்போது தான் உறவின் அருமையை உணர்ந்து தன் தாத்தாவிடம் சரணடைந்தான். சக்தியும், மனோவும் அவனை விட்டு அகலவே இல்லை. 

கங்கா, காவேரி இருவரும் பரிமளாவை  அப்படி தாங்கினர். அவரை சாப்பிட வைப்பது கூட அவ்வளவு போராட்டமாய் இருந்தது. 

மதுவோ சின்ன பெண் எப்போதும் தந்தை பின் மான் குட்டி போல் சுற்றியவள்.தந்தை இனி வர மாட்டார் என்பதை அவளால் தாளமுடியவில்லை. அழுகையில் கரைந்தாள்.அவளை பள்ளிக்கு கிளப்புவது தமிழினிக்கு  பெரும் பாடானது. 

அந்த இடத்தில் வேறு  யாராக இருந்தாலும்.வேண்டாம்னு சொல்லியும்  கேக்காமல் கல்யாணம் பன்னிட்டு போனாயே !இப்போ பாரு தனியா நிக்கிற என்று  மனதிலாவது நினைத்திருப்பார்கள்.  

அந்த குடும்பம் அதை எல்லாம் நினைக்க கூட இல்லை. அவர்கள் பார்த்து இருந்தாலும் செல்வம் போல் நல்லவர் கிடைப்பது அரிது. பிள்ளைகள், மனைவி மேல் அவ்வளவு பாசம் அவருக்கு. 

இவர்களை போல் மற்றவர்கள் நினைக்காமல் இருக்க மாட்டார்கள் இல்லையா, ரத்தினம் மனைவி  சாந்தி அதை பற்றி தான் பேசி கொண்டிருந்தார் காவேரியிடம், 

அவருக்கு தன் மகள் பிரியாவை சக்திக்கு  மனம்முடிக்க ஆசை. ஒரே பையன், நிறைய சொத்து, அமைதியான மாமியார், மாமனார். கொஞ்ச நாள் சேர்ந்து இருந்தால் சக்தியின் மனதை மாற்றி தனி குடித்தனம் வைத்து விடலாம். 

 

கணவர் இருந்த துக்கம் தாங்காமல் பரிமளா ஊருக்கு வந்து விட்டாள். இவர் திட்டம் என்னவாகும் . 

“சொல் பேச்சு கேக்காம ஓடி போனவங்களுக்கு நீங்க சேவகம்  பண்றிங்களே, நாளைக்கு நடு வீட்ல வந்து உக்காந்துக்க போறா, இப்போவே பழனி அண்ணா வீட்டுக்கும் உங்க சொத்தை சரி பாதி தரணும் இதுல இவளுக்கும் பங்கு குடுப்பிங்களா, பாத்து சூதனமா இருங்க அண்ணி எல்லாம் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்” என்று  அது இது என பேசி காவேரியின் மனதை குழப்ப ஆரம்பித்தார்.

காவேரி அவரிடம் சரி சரி என தலையை ஆட்டி அங்கிருந்து நகர்ந்து அடுத்த நிமிடம் கங்காவோடு திரும்ப  வந்தார். கங்கா சும்மாவே ஆடுபவர் கையில் வேப்பிலை கிடைத்தால் சும்மா விடுவாரா

சாந்திக்கு நல்லா பேய் ஓட்டியவர்.”சொந்தம்னு சும்மா விடுறேன். இனி குடும்பத்த பிரிக்கிற நாரதர் வேலைய பாத்த  உன் பொண்ண சக்திக்கு மட்டும் இல்லை சொந்ததுல வேற எவனுக்கும் குடுக்க முடியாத மாதிரி பண்ணிடுவேன் ஜாக்கிரதை என்று விட்டார். 

இனிமேல் சாந்தி பேசுவாரா அமைதியாக ஒரு ஓரத்தில் அமர்ந்து விட்டார். தங்கள் மருமகள்களின் ஒற்றுமையை கவனித்து திலகா, பாரிஜாதமிடம் சொல்ல அவருக்கும் அவ்வளவு நிம்மதியாக இருந்தது. 

 

எல்லாம் முடிந்து பரிமளாவை ஊருக்கு அழைக்க “விருந்தாளியாய் வருவேனே தவிர மொத்தமாக வரமாட்டேன். இனி என் பையன் என்ன பார்த்துபான்”. என, யாராலும் பேச முடியாமல் போனது. 

அர்ஜுனிற்கு காஷ்மீரில் ஐபிஎஸ் அழைப்பு வர தங்கையையும் தாயையும் தனியே விட மனமில்லாமல் பிறந்ததிலிருந்து நேசித்த வேலையே வேண்டாம். என்று முடிவெடுத்தான்.

  குடும்பத்தை துக்கத்திலிருந்து வெளியில் கொண்டு வந்ததோடு அவனையும் காஷ்மீர் அனுப்பி வைத்து இரு பாட்டிமார்கள் சென்னையிலே தங்கிக் கொண்டனர். ட்ரெயினிங் முடிந்து பெங்களூரில் பணி. ஒரு வருடம் கழித்து சென்னையில் மாற்றல் உறுதி என்று அவன் வந்து நிற்க, 

 இங்கே தமிழினி  எம்பிபிஎஸ் கடைசி வருடம். பழனி தீவிரமாக மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பித்திருந்தார். பாரிஜாதமும்,  திலகவதியும் கலந்து பேசி. கணவரிடமும் ஆலோசித்து மகன், மருமகள், மகள் எல்லோரிடமும் ஆலோசிக்க அனைவருக்கும் சம்மதம்.தமிழினியிடம்  கேட்க பெரியவர்கள் விருப்பம் என்று விட்டாள்.

 கடைசியாக வே அர்ஜுனிடம் கேட்டனர். அவனுக்கு  என்ன செய்வது என்று தெரியவில்லை. காலேஜ் படிக்கும்போதே ஒரு பெண்ணை விரும்பி இருந்தான்.   ஐபிஎஸ்எக்ஸாம், தந்தையின் இழப்பு, வேலை காரணமாக, 

 அப்பெண்ணிடம் கூட அவன் சொல்லவில்லை. சொல்லாவிட்டாலும் அவளுக்கு தெரியும் என்பது இவன் அறிந்ததே!

 ஏற்கனவே தன் தாயின் காதலால் பிரிந்த குடும்பம். இப்போதுதான் சேர்ந்திருக்க, தன் காதலால் திரும்ப பிரிவது கூடவே கூடாது. அவர்களால் மட்டுமே தன் தாயை உயிர்ப்போடு வைக்க முடியும். இவர்கள் இல்லாமல் தன் தந்தையின் இறப்பிலிருந்து அம்மாவை வெளிக்கொணர்ந்து இருக்கவே முடியாது என்பதுதான் உண்மை.

 அவனுக்கு வரும் மனைவி தன் அன்னையும் கவனித்து தங்கையயும் பாசத்தோடு பார்த்துக்கொள்ளவேண்டும். புதுப்பெண் என்றால் சந்தேகமே !அதுவே தமிழினி  என்றால் எந்த பிரச்சனையும் இருக்காது. 

 குடும்பத்திற்காக முடிவெடுத்து தமிழினியை  அழைத்து “உனக்கும் எனக்கும் கல்யாணம் பேசறாங்க, உனக்கு தெரியுமா என்று கேட்க”

“ம்ம்ம் ” தெரியும்  என்று தலையை அசைத்தாள்

” உனக்கு சம்மதமா, நீ யாரையாவது விரும்புகிறாயா, என்று கேட்க 

“இல்லை “என்ற தலைப்பு மட்டுமே

” உனக்கு என்னை பிடிச்சிருக்கா “என்ற கேள்விக்கு

 வெட்கத்தில் முகம் சிவக்க இதற்கும்”ம்ம்ம் ” என்று தலையசைப்பு மட்டுமே பதிலாக கிடைக்க, ” என்னடா இவ டாக்டர் படிச்சிருக்கா இப்படி வெட்கப்படுகிறா”  என்று தமிழினியின் மேல் அர்ஜுனின் பார்வை சுவாரசியமானது.

 அதுவரை அவன் தமிழினியை சிலசமயம் கிராமத்திலும்,  சென்னையிலும் பார்த்திருந்தாலும் இதுவரை தனிப்பட்ட முறையில் அவளிடம் பேசியது இல்லை.

 “ழினி இங்கே பார்” என்று அழைக்க, 

“ழினி”  என்ற அழைப்பில்  சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

” நான் ” ஆல்ரெடி ஒரு பொண்ண லவ் பண்றேன்,  சட்டென்று அவள் கண்களில் நீர் குளம் கட்டியது.

 அதைப் பார்த்து பதறிய அவன்” ஏய் ழினி…….. நான் இன்னும் அந்த பொண்ணுகிட்ட சொல்லக்கூட இல்லை. இனி சொல்லப் போறதும் இல்லை. எனக்கு நம்ம குடும்ப சந்தோஷம் தான் முக்கியம்”.

” உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னா,  நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் கொடு. என்ன மாத்திக்கிறேன். ப்ளீஸ் “என்று அவன் முடிக்க.

 

[the_ad id=”6605″]

 

 இப்போது” எனக்கு பரிபூரண சம்மதம் மாமா என்று வாயை திறந்து சொன்னாள்”

 அன்றே  வீட்டில் அனைவரையும் அழைத்து “மாமா எனக்கு கல்யாணத்துக்கு ஓகே,  ஆனால் அவ படிப்பு முடிகிற வரைக்கும் இங்கதான் இருப்பா, இவளுக்கு எம்பிபிஎஸ் மட்டும் போதாது மேல ஏதாவது ஒரு ஸ்பெஷாலிட்டி படிக்க வைக்கணும்”. 

” அதை நான் படிக்க வச்சுப்பேன். அதுக்கு அப்புறம் தான் குழந்தை. இதுக்கெல்லாம் ஓகேன்னா எனக்கும் ஓகே”. என்று நடு ஹாலில்   வெளிப்படையாக பேச, எல்லோருக்கும் சங்கோஜத்தை கொடுத்தாலும். இது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்பதால் அனைவரும் மனப்பூர்வமாக சம்மதித்தனர்.

 ஒரு சுபயோக சுபதினத்தில் பெரியவர்களின் ஆசியோடு அர்ஜுன் தமிழ் திருமணம்இனிதே  நடந்தேறியது. எம்பிபிஎஸ் முடித்து மகப்பேறு மருத்துவத்தை தேர்வு செய்து சென்னையில் படிக்க ஆரம்பித்தாள்.

 அன்று முதல் மதுவோடு  சேர்ந்து தமிழினி, பரிமளாவிற்கு மகள் ஆகிப் போனாள்.  இயல்பிலேயே குறும்பான மதுவிற்கு அதே குறும்போடு உள்ள தமிழினியை சின்ன வயதிலேயே பிடிக்கும். 

இப்போது  அண்ணி வேறு, இருவரும் சேர்ந்து வீட்டை அல்லோலகல்லோலப் படுத்தினர். பரிமளாவும் கணவரின் இழப்பில் இருந்து வெளியே வந்து அவர்களின் லூடூட்டியில்  காலப்போக்கில் இணைந்தார்.

அர்ஜுனிர்க்கு  தன் தாயையும், தங்கையையும் பழைய மாதிரி மாற்றிய மனையாளின் மேல் காதல் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. போனில் மணிக்கணக்கில் பேசினர்.  அவனும் சென்னைக்கு மாற்றலாக, 

அன்று  தொடர்ந்தது அவர்களின் தாம்பத்தியம். நோயின் படுக்கையில் விழுந்த முத்தையா பேத்தி கருவுற்றிருக்கும் செய்தியோடு சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து திலகவதியும். அக்குடும்பத்தின் அடுத்தடுத்த  இழப்பை ஈடு செய்வது போல் பிறந்தவள். 

அர்ஜுன் தமிழினியின் செல்ல மகள் யாழினி. மதுவின் மறுஉருவம் மதுவை விட இரண்டு மடங்கு சேட்டை. மகனும் மருமகளும் தங்களது துறையில் பிசியாகி விட யாழினியின் பொறுப்பு பாட்டியின் வசமானது.

 அர்ஜுன்,  தமிழினி இருவரும் எப்போதும் தங்கள் காதல் வானில் வலம் வந்தனர். கணவரோடு காதல்  வாழ்வு வாழ்ந்த பரிமளாவுக்கு, மகனின் ஒவ்வொரு அசைவும் புரிந்திருக்கும் மருமகளின் மேல் மகளிர்க்கு ஈடாக பாசம் வைத்தார். 

மகளின் வாழ்வும் இப்படியே சீராகி விட்டால், அவருக்கு வேறு எந்த கவலையும் இல்லை……………….

 

மது  கல்லூரி முடிந்து வீடு வர நல்ல மழை.  மதுவிற்கு எப்போதுமே மழை நின்ற பின் அந்த மண்ணின் வாசமும்   வாடைக்காற்றும் மிகவும் பிடிக்கும். இதோடு காவேரி அவளுக்கு தயாரித்திருந்த சூடான காப்பி வேறு வீட்டுத்தோட்டத்தில் அந்தி மாலை மலரும் மல்லிகையின் வாசமும் சேர  ஏதோ தேவலோகத்தில் இருப்பதைப் போலவே இருந்தது.  

அர்ஜுன் அலைபேசியில் அழைக்க துள்ளலோடு” ஹாய் !அண்ணா”

சாதாரண,  நலம் விசாரிப்புக்கு பிறகு “அண்ணா நியூ இயர்க்கு   யாழிய, இங்கே அனுப்புனா, ஜாலியா இருக்கும், அத்தை கூட யாழியை பார்க்கணும்  சொன்னாங்க, ” என்றுவினவ, 

அர்ஜுன் ” இல்லைடா,  வீட்டுக்கு முக்கியமான  ஒருத்தங்க வராங்க சோ நோ சான்ஸ்.”

மது ” ஓஹோ !அப்படியா என்ன விட ரொம்ப முக்கியமானவாங்க, யாரு அண்ணா என்று இறங்கிய குரலோடு கேக்க, “

 

அர்ஜுன் ” சொல்ல முடியாது,  அது சஸ்பென்ஸ். ” என்று விட

  மது” அண்ணா போனா எனக்கு சொல்லி ஆகணும். அப்படி யாரு என்ன விட உங்களுக்கு முக்கியமானவர்கள்.”

அர்ஜுன் ” ஆமாண்டா எல்லாரயும் விட எனக்கு ரொம்ப பிடிச்சவங்க, 

(அப்போ சந்தேகமே இல்லை அண்ணாக்கு பிடிச்சவங்க,  அய்யனாரை தவிர வேற யாரு )

மது “ஓஹோ! அப்போ நீங்க புடிச்சவங்க கூட பேசுங்க நான் வைக்கிறேன். “என்று வைக்க போக,  

அர்ஜுன் “ஹே மது குட்டிமா  அவங்க யாருன்னு உனக்கு தெரியனும் . அவ்வளவுதான,  அது எங்க வீட்டு தேவதை, யாழி யோட அத்தை, ழினி யோட ஃபிரண்ட், என்னோட செல்லக்குட்டி தங்கச்சி “என்றான் சிரித்துக்கொண்டே!

” சபா, ” நான்தானா முக்கியமானவ, ” என்று மனதுக்குள் நினைத்தவள். “அண்ணா நான் வரலை. நீங்க எல்லாம் வாங்க.   

 

[the_ad id=”6605″]

 

“நாங்களெல்லாம் பொங்கலுக்கு வர தானே போறோம்.  இங்க வா நியூ இயர் செலிபரேட் பண்ணலாம் டா. மனோ கூட இங்கே தான் இருப்பான் என்று விட”, 

மது ” அண்ணா, காலேஜ்ல நியூ இயர் செலிப்ரேஷன் இருக்கு. நான் இங்கே இருக்கேன். நீங்க எல்லாம் பொங்களுக்கு இங்கே வாங்க, அப்போ பார்த்துக்கலாம்” என்று வைக்கப்போக, 

அர்ஜுன் “என்னடா இப்படி சொல்ற, அம்மா நீ வரணும்னு ரொம்ப ஆசைப் படுறாங்க,  நீ வர அவ்வளவுதான் சரியா”

” நான் ஸ்டேஷன் ல இருக்கேன்,  முக்கியமான வேலை இருக்கு நான் அப்புறம் கூப்பிடுறேன்,   பாய் என்று அண்ணன் வைத்து விட

 இங்கு மதுவின் முகத்தில்  அப்படி ஒரு சோகம். சோகம் தான் பின்னே நியூ இயர் அன்னைக்கு தான் அவளுடைய பிறந்த நாள். போன இரண்டு வருடமும் சக்தி அவளுடன் இல்லை இந்த வருடம் அவனோடு இருக்க இவள் நினைக்க,  அண்ணா இப்படி செய்கிறானே !என்று மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

 வீடு வந்த சக்தி இவள் முகம் வாடி இருப்பதை கண்டவன் பதறி “ஸ்ரீ என்னம்மா ஆச்சு,  உடம்பு எதாவது சரியில்லையா, என்றான் தலையை நீவிய வாறு. 

இல்லை என்று தலையசைத்து, ” அண்ணா நியூ இயருக்கு வர சொல்றாங்க, 

“ம்ம்ம்ம் சரி போய்ட்டு வா, காலேஜ் கூட   லீவ் தான். இத சொல்ல வா இப்படி சோகமா இருந்தே”

” ம்ம்ம்,   உன் மூஞ்சி போடா லூசு என்று அவனை முறைக்க, அவள் விழிகளின் மொழியை புரிந்தவன். “

வேற ஏதோ இருக்கு என்னனு சொல்லு நான் சரி பண்றேன்” 

என்றவனுக்கு  இன்று மாலை நடந்தது நினைவு வந்தது. வேலை முடிந்து  வீட்டுக்கு செல்ல நினைக்க நல்லா மழை சரி கொஞ்ச நேரம் லைப்ரரி போய்ட்டு மழை நின்ற பின்னாடி போலாம். என்று  செல்ல 

லைப்ரரியன் ஒரு பெண்னோடு மிகவும் நெருங்கி நின்று அவளை மிரட்டி கொண்டிருந்தான். சட்டென்று சக்தியை கண்டவன் ஒரு நொடி  பயந்து பின் சுதாரித்து , புக்ஸ் ஒழுங்கா ரிட்டன் பண்ண மாட்றாங்க சார், ஒரு வார்னிங் குடுக்கிறேன் என்றான் சிரிப்போடு, ஏனோ அதை சக்தியால் நம்ப முடியவில்லை. 

மது ” எனக்கு சென்னைக்கு போக விருப்பம் இல்லை. நான் இங்கேயே இருக்கேன். 

சக்தி ”  என்ன உனக்கு போக பிடிக்கலையா,  இந்த பட்டிக்காட்டில என்ன இருக்கு. எனக்கு அமெரிக்கா மாப்பிள்ளை வேணும்னு சொன்னே, 

“இப்போ இங்க இருக்க சென்னைக்கு இந்த ஊரை விட்டு போக பிடிகலையா”,  அவன் குரலில் இருக்கும் குத்தல் மதுவிற்கு நன்றாக புரிந்தது.

 ஆண்டிப்பட்டியோ,  அமெரிக்காவோ எங்க இருக்கும்னு முக்கியமில்லை. யார் கூட இருக்கோம்  என்பது தான் முக்கியம். என்று நினைத்தவள். அதை சொல்ல பிடிக்காமல்.

” ஹலோ! இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை.  அத்தை, மாமா காக அமைதியா இருந்தா, ரொம்ப ஓவரா பண்றீங்க, “

“அத்தை,  அத்தை என்று காவேரியை அழைத்து நான் நாளைக்கு சென்னைக்கு போறேன். ” 

“ம்ம்ம்  சரிடா,அண்ணி  காலையில போன் பண்ணி  சொன்னாங்க, பார்த்து பத்திரம் சரியா, சீக்கிரம் வந்துடு அத்தை உன்னை மிஸ் பண்ணுவேன். “

“ம்ம்ம்  அத்தை ஒன் வீக் தான்” என்றவள் . இதை நீ சொல்லணும்  மிஸ் யூ டி னு, லூசு அய்யனார் என்று பார்க்க, 

அதை உணர்ந்தவன். “சொல்ல முடியாது, என்னடி  பண்ணுவ “என்று பதில் பார்வை பார்க்க, 

அவன் பார்வையின்  மதுவிற்கு புரியவில்லை. 

                       “உன் விழிகளின் மொழி என்னவோ !”                

என்று  தனக்குள் கேட்டுகொண்டாள். 

 

மொழி தொடரும்…………. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!