Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 15 2

 

ஆமாத்தா.. மருமவ வந்ததுல இருந்து என் மவன் வாழ்க்கையில ஏத்தம்தான்.. பேரன் பேத்தி மட்டும் சீக்கிரம் பொறந்தா போதும் என்னோட கைகால் சுகத்தோடயே அதுகளையும் வளர்த்து விட்டுருவேன்..

 

சுந்தரோ புள்ளைகளா..ஹாஹாஹா அவளே ஒரு பேபி அவளுக்கு ஒரு பேபியா தனக்கு பிறக்கும் குழந்தைகளை தர்ஷினியை போல் நினைத்து பார்க்க நினைவே இனித்தது.. இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கத்தா.. அவ இப்பதான் நல்லா சிரிச்சு பேச ஆரம்பிச்சிருக்கா.. சீக்கிரமே எங்க வாழ்க்கை ஆரம்பிச்சிரும்..



Advertisement

 

ஏத்தா நாயகி பொறவு இங்கன வந்துச்சா..??”

 

Advertisement

ம்கும் வரவான்னுதான் ரெண்டு தரம் போன்ல கேட்டா.. நான்தான் வரவேண்டாம்னு சொல்லிட்டேன்.. அங்கனயே கிடக்கட்டும் அப்பத்தான் மாமியார், புருசனோட அருமை தெரியும்.. நான் நல்லாத்தானே புள்ள வளர்த்தேன்.. இந்த நாயகிக்கும் சுந்தரிக்கும் ஏன்தான் இப்படி வாய்துடுக்கோ..

Advertisement

 

ஏத்தா சுந்தரி என்ன பண்ணினா..??”

 

Advertisement

என்ன பண்ணினாளா.. கடைசி கடைசின்னு ஒரு திமிரு புடிச்சவள பெத்திருக்கேன்.. எப்ப பார்த்தாலும் மருமவக்கிட்ட மூஞ்சியும் மொகரையும் காட்டிக்கிட்டு, என்ன கேட்டாலும் பதில் சொல்லாம ராங்கிக்காரி.. வேற ஒரு பொண்ணா இருந்தா இவளோட வினையெல்லாம் தெரிஞ்சிருக்கும் பாவம் இதுக்கு ஒன்னும் தெரியல.. அதோட துவைச்ச டிரஸ தண்ணிக்குள்ள போட்டு வைக்கிறது, அதுக்கு வாங்கி வைச்ச பூவை வேணும்னே சாமிக்கு எடுத்து போடுறது.. அது காய்ச்சின பால்ல தண்ணிய ஊத்தி வைக்கிறது..  இன்னும் சொல்ல முடியலத்தா ஏதேதோ பண்றா..

 

[the_ad id=”6605″]

 

 

வேணும்னு பண்றாளா.. இல்ல புரியாம பண்றாளா அவள அடிக்கவும் முடியல உங்க அப்பு அன்னைக்கு அடிச்சதுக்கே இன்னும் கோபம் குறையாம வெரச்சிக்கிட்டு அவுக மேல உள்ள கோபத்தைத்தான் மருமகமேல காட்டுது.. இன்னைக்குக்கூட பாரு அந்த பொண்ணு ரூம் வாசல்ல எண்ணெய ஊத்தி வைச்சி வழுக்கி விழ வைச்சிட்டா..நான் பார்த்துப்புட்டேன்.. நல்ல வேளை அயித்த இல்ல அவுக பார்த்திருந்தா மனசு என்ன பாடு பட்டிருக்கும்.. அவுக இந்தப் பொண்ண பொண்ணொருதட்டா பூவொரு தட்டா பார்த்துக்குறாக…  மருமவ பாவம் நொண்டி நொண்டி நடந்திட்டு நான்தான் மருந்த போட்டு உருவி விட்டேன்.. என் மனசே ஆறலை அவள விளக்கமாத்தால ரெண்டு போடு போட்டேன்..

 

ஏத்தா நான் அவுகளுக்கு போன் பேசிட்டு வாரதுக்குள்ள இவ்வளவா நடந்துச்சு..??”

 

ம்ம் அண்ணே குணம் உன் தங்கச்சிக்கு தெரியல.. இதெல்லாம் தெரிஞ்சிச்சு அவன் தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டான்.. இப்பவே பொண்டாட்டிய ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்குறான் அந்த பொண்ணு முகத்தை வைச்சே அது எப்படி இருக்குன்னு கண்டு பிடிச்சிருறான்..  அந்த பொண்ணையும் பாரேன் வீட்ல என்ன நடந்தாலும் அதெல்லாம்  பெருசு பண்ணாம புருசன்கிட்ட பாசமாத்தான் இருக்கு..உன் அண்ணப்பார்த்தா போதும் அதுக்கு வேற எதுவுமே தேவையில்ல.. எனக்குத்தான் மனசே ஆறலை உன் அண்ணே கிட்ட சொல்லலாம்ன்னு இருக்கேன்..

 

விடுத்தா சொல்லாத நான் அவக்கிட்ட பேசுறேன்.. அண்ணே பேசினா பொண்டாட்டிக்கு ஏந்துகிட்டு பேசுறான்னு இன்னும்தான் திமிரு பண்ணுவா,.. அவ வயசு அப்படித்தா அதான் இந்த திமிரு நான் அத்தாச்சிய பத்தி எடுத்து சொல்றேன் அதெல்லாம் புரிஞ்சு நடந்துக்குவா..

 

என்னவோ இவ திமிரு ஒடுங்கினா சரி.. பாவம் என்புள்ள பொழுதைக்கும் வேலைப் பார்க்கிறான்..யாருக்காக.. நம்ம குடும்பத்துக்காகத்தானே.. அவன் இன்னைக்கெல்லாம் சாப்பிட்டானோ என்னவோ தெரியல..??”

 

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சுந்தர் என்ன மாதிரி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.. ஆனால் உள் மனது அவனை சுட்டது மனைவியை ஒழுங்காக பார்த்துக் கொள்ளவில்லை என்று..தங்கை வரும் அரவும் கேட்டு எழுந்து வர..

 

அண்ணே வந்துட்டியா.. சாப்பிடல..??”

 

இதோ போறேன்.. அடுப்படியில் நுழைந்தவன்

 

தாயை பார்க்கவும் தர்ஷினி சாப்பிட்டாளாத்தா..??”

 

இல்லய்யா பசிக்கலைன்னு சொன்னுச்சு..

 

ம்ம் நீங்க போய் படுங்க நான் சாப்பிட்டுக்குறேன்.. தனக்கு தட்டில் போட்டுக் கொண்டவன் மனைவிக்கு பிடித்தவகையில் தோசை சுட ஆரம்பிக்க தெய்வானை எதுவும் சொல்லாமல் வெளியில் வந்திருந்தார்.. அனைத்தையும் தயாராக வைத்து தங்கள் அறைக்கு வந்தவன் மெதுவாக அவள் காலை பிடித்து பார்க்க வலியில் முகத்தை சுழித்தாள்..

 

மெதுவாக அவள் கன்னத்தை தட்டி எழுப்ப,

 

ப்ளிஸ் மாம்ஸ் தூக்கம் வருது.. அப்படியே புரண்டு அவன் மடியில் படுத்துக் கொண்டாள்.. அவள் தலையை கோதிவிட்டவன்,

 

 வாடி சாப்பிடலாம்..??”

 

எனக்கு பசிக்கல மாம்ஸ்..

 

ப்பச் மாமனுக்கு பசிக்குதே…

 

பட்டென தலைதூக்கி பார்த்தவள் ஏன் மேன் சாப்பிடல..?” மெதுவாக எழுந்து கால் வலித்தாலும் சற்று தாங்கி தாங்கி வெளியில் வர பார்த்திருந்த சுந்தருக்கு மனம் வலித்தாலும் தனக்காக வலியை தாங்கி வரும் மனைவிமேல் அவ்வளவு காதல்..

 

என்னடா ஆச்சு கால்ல..??”

 

[the_ad id=”6605″]

 

 

கீழ ஆயில் கொட்டியிருக்கும் போல நான் பார்க்காம காலவைச்சு வழுக்கி விழுந்துட்டேன் மாம்ஸ்.. ஆன்ட்டி மருந்து தேச்சு விட்டாங்க.. இப்போ பரவால்ல..

 

மற்றவர்கள் பின்வாரத்தில் படுத்திருக்க வெளியில் வரவும் அவளை தன் கைகளில் ஏந்தியிருந்தான்.. அவன் கழுத்தில் கைகளை கோர்த்தவள் நல்ல வேளை மாம்ஸ் தூக்கின.. கால் கொஞ்சம் வலிச்சிச்சு.. ஒரு கையால் அவன் தலையை கோதி விட்டவள் குளிச்சியா மேன் நல்ல வாசனையா இருக்கு.. ஏய் என் சோப்ப யூஸ் பண்ணியா..??” அவன் புஜத்தில் குத்த,

 

ஹாஹாஹா நான்தானே பேபி வாங்கி கொடுத்தேன் அதான் நல்ல வாசனை வருதா இல்ல கடைகாரன் ஏமாத்திட்டனான்னு பார்த்தேன்.!!”

 

போய்யா பிராடு..ஆனா நல்லா வாசமாத்தான் இருக்க..

 

அது நீ போட்டதுதான அதான் நல்ல வாசம்.. அவளை அங்கிருந்த ஸ்டூலில் அமர வைத்தவன் தோசையை எடுத்து ஊட்டப் போக அவளோ அவன் சாப்பாட்டை கையில் எடுத்திருந்தாள்..

 

நீதான பசிக்குதுன்னு சொன்ன முதல்ல நீ சாப்பிடு.. அவள் அவனுக்கு ஊட்ட இவன் தோசையை இவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான்.. இருவரும் பேசி சிரித்தபடி சாப்பிட்டு சுந்தர் அவளுக்கு பால் கொய்ச்சி கொடுக்க அவள் பாதி குடித்து மீதியை அவனுக்கு கொடுத்திருந்தாள்..

 

இனி டெய்லியும் நாம ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிடலாமா.. நான் உனக்காக வெயிட் பண்றேன்..

 

ம்கூம் நான் வர்றதுக்குள்ள நீ சாப்பிட்டிரு .. நான் வரவும் கொஞ்சம் சாப்பிடலாம்.. ஓகே..

 

ம்ம் ஓகே.. நீ என்னை எழுப்பிரு.. சாப்பிட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தி அவளை தூக்கியபடி அவர்கள் அறைக்கு சென்றவன் காலுக்கு மருந்து தடவி விட்டான்..

 

அவள் மெல்ல உறக்கத்திற்கு செல்ல அவளை அணைத்து படுத்தவனோ தாய் சொன்னதையே நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தான்..

 

அடுத்து நாட்கள் கடகடவென ஓடியதில் அன்று வேலைப்பார்ப்பவர்களுக்கு வார விடுமுறை மற்றவர்கள் அனைவரும் வெளியில் போயிருக்க தர்ஷினியும் சௌந்தரமும் மட்டும்தான்..

 

தர்ஷினி தன் குடும்பத்தை பற்றி தங்கள் வீட்டை பற்றி சொல்லிக் கொண்டிருக்க அதை ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டிருந்த சௌந்தரத்திற்கு திடிரென வயிற்றில் வலி..

 

இன்னும் பிரசவ தேதிக்கு பத்து நாட்கள் இருக்க வலி வரவும் சூட்டு வலியோ.. சற்று பல்லை கடித்து பொறுத்தவளுக்கு அடுத்தடுத்து வலிகள் வர அது பிரசவ வலி என்று தெரிந்துவிட்டது..

 

அத்தாச்சி அண்ணே இல்லனா அப்புக்கு ஒரு போன் பண்ணுங்க வலி வந்திருச்சு..??”

 

ஓஓஓ மை காட்..!!” போனை எடுத்து சுந்தருக்கு போட அது முழு ரிங்காகி கட்டாகியது மீண்டும் மீண்டும் அவனுக்கு முயற்சித்து ராமையாவுக்கு போட அது ஸ்விட்ச் ஆப் தெய்வானை போன் வீட்டிற்குள்ளேயே அடித்தது..

 

அதற்குள் சௌந்தரத்திற்கு அடுத்தடுத்து வலிகள் வர,.. அண்ணி யாருமே போன் எடுக்கலையே..??” அவளுக்கு அழுகையில் உதடுகள் நடுங்கி கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன.. சௌந்தரம் படும் பாட்டை பார்த்து கண்ணீர் ஊற்ற ஆரம்பிக்க,

 

தர்ஷினியின் கையை பிடித்தவள் அ… அத்தாச்சி அழாதிக.. பக்கத்து வீட்ல யாராச்சும் இருந்தா கூப்பிட்டு ஜி ஹெச்சில இருந்து ஆளுகள வரச் சொல்லுங்களேன்..

 

[the_ad id=”6605″]

 

 

தர்ஷினி வீதிக்கு வர அந்த மதிய நேரத்தில் தெருவே வெறிச்சென்றிருந்தது.. தர்ஷினி பக்கத்து வீட்டில் நின்று ஆன்ட்டி, அங்கிள்  என கத்தி பார்க்க கொள்ளைப்புறத்தில் இருந்த அந்த வீட்டு அப்பத்தாவிற்கு கேட்கவே இல்லை.. கேட்டிருந்தாலும் அது வேற யாரையோன்னுதான் நினைச்சிருக்கும்.. கத்தி கத்தி பார்த்தவள் எந்த பதிலும் இல்லாமல் வீட்டிற்கு ஓடி வர நாயகிக்கு இன்னும் அதிக வலி ஆரம்பித்திருந்தது..

 

அவள் வலியில் துடிப்பதை பார்த்தவள் நாமளே ஹாஸ்பிட்டலுக்கு போய் சொல்லுவோமா.. ஒரு முறை வெளியில் செல்லும் போது ஹாஸ்பிட்டலை பார்த்த நியாபகம் இருந்தது.. காலில் செருப்பு கூட அணியத்தோன்றாமல் சுந்தருக்கு இடைவிடாமல் போனடித்தபடி ஹாஸ்பிட்டலை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.. இரண்டு தெரு தாண்டித்தான் அந்த ஹாஸ்பிட்டல் இருக்க ஒரு தெருவை தாண்டிவிட்டாள்..

 

வியர்வை ஆறாக பெருக காலில் செருப்பில்லாததால் சூடும் தாங்கமுடியவில்லை.. இருந்தாலும் பல்லை கடித்துக் கொண்டு இன்னும் வேகமெடுத்து அடுத்த தெரு திரும்ப… அவளின் குறுக்காக ஒரு கார்…..!!!

 

                                                                 இனி……?????

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!