Skip to content
Post Views: 4,548
அர்ஜுன் இந்நேரம் அந்த பெண்ணின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை பரிசோதித்துக்கொண்டிருக்க, இவள் வந்ததும் மீண்டும் அந்த மூத்த செவிலியர், “இலக்கியா நீ போ வி கேன்…”
அவரை பேச விடாமல், “இலக்கியா ரிப்போர்ட்ஸ்” அவளிடம் நேரடியாக கேட்டிருந்தான்.
அவ்விடத்தில் உள்ளவர்களுக்கு அவனின் இச்செயல் பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.
இது போன்ற சமயங்களில் அதிகம் இவ்விடத்தில் கோவத்தை காட்டுவது அவனாக தான் இருக்கும், அவன் கோவத்திற்கு பயந்தே அவர் இலக்கியாவை விரட்ட பார்க்க இங்கு நடப்பதோ வேறு.
Advertisement
பிறகு அவளை இவ்வுடையிலே வா என இழுத்து வந்ததே அவள் கணவன் தானே. அவர்களுக்கு அது எங்கே தெரிய போகிறது?
அர்ஜுன் கேட்டதை வேகமாக அவன் கையில் ஒப்படைத்து அவனுக்கு வலது பக்கம் வந்து நின்றுகொண்டாள். இதை கவனித்த கவிதா முகத்தை தூக்கி வைத்து அவளை அப்பொழுது புறக்கணித்தார்.
அவ்விடத்தில் அப்பொழுது நுழைந்திருந்தனர் பானுவும் மற்றொரு மருத்துவர் செல்வராஜன் என்னும் நரம்பியல் மருத்துவர் அர்ஜுனுக்கு உதவ.
Advertisement
உள்ளே வந்த பானு மருமகளை பார்த்து கண்ணாலே சிரிக்க, பெண்ணும் மென்மையாக சிரித்தாள். அர்ஜுன் அன்னையை கூட கவனிக்கவில்லை, அவனது கவனம் முழுதும் அந்த கர்பிணி பெண்ணின் மருத்துவ அறிக்கையிலே இருந்தது.
Advertisement
அவ்விடத்தையே சூழ்ந்திருந்த பதற்றமான நிசப்தத்தை நிறைத்திருந்தது இயந்திரங்களில் சப்தம் மட்டுமே.
“சிவியர் இன்ட்ராகார்னியல் ப்ளீடிங். சப்ட்யூறல் ஹெமோடோமா. இவங்க மூளை ஏற்கனவே வீங்க ஆரமிச்சிடுச்சு” என்றான் அர்ஜுன்.
செல்வராஜன், “பேபி கண்டிஷன்?”
Advertisement
பானு, “பேபிக்கு இப்போ வர எந்த பிரச்னையும் இல்ல செல்வா”
“அவங்க ஏற்கனவே 34 வீக்ஸ். இந்த ப்ளீடிங் எதுவும் பாதிப்பை?” இலக்கியா தயங்கி கேட்க,
பானுவும், “சி-செக்ஷன் பண்ணிடலாமா அர்ஜுன்?”
“இல்ல ம்மா, இந்த மாதிரி சிச்சுவேஷன்ல சைல்ட் விட மதர் ஹெல்த் தான் ப்ரியாரிடைஸ் பன்னனனும். பேபி கண்டிஷன் மோசமா இருந்தா மட்டும் தான் அந்த ஆப்ஷன் போவோம். இங்க பேபி நார்மல் சோ பர்ஸ்ட் மதர் பிரஷர் ரிலீஸ் பண்ணனும்”
இலக்கியாவின் கைகள் அவள் பிடித்திருந்த ஸ்கால்பெல் மேல் அழுத்தம் கூடியது. அவள் பார்வையோ குழந்தையின் இதய துடிப்பில் மட்டுமே நிலைத்திருந்தது.
“பேபி ஹார்ட் பீட் ஏற இறங்க இருக்குது சார்” இலக்கியா தகவல் கொடுக்க வேகமாக வேலைகள் துவங்கியது.
“ராஜன் டிகம்ப்ரசிவ் க்ரேனியக்டமி பண்ணுங்க. எவ்ளோ வேகமா பிரஷர் கம்மி பண்ண முடியுமோ பண்ணனும்” செல்வராஜன் அவனுக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்து முடிக்க பிறகு பொறுப்பை அர்ஜுன் கையில் எடுத்துக்கொண்டான்.
“ரெண்டு பேரையும் காப்பாத்திட முடியும்ல?”
தலை ஆட்டினான், “உறுதியா சொல்ல முடியாது. போராடனும்” என்றவன் கையில் அவள் ஒப்படைத்த ஸ்கால்பெல் வந்து அமர ஆழமான கீறல் ஒன்றை விட்டு அவ்விடத்தையே முற்றிலும் அமைதியாக்கினான் அர்ஜுன்.
“ஹெமோடோமா இன்னும் ப்ளீட் ஆகிட்டே தான் இருக்கு. இதுவே நடந்தா ரெண்டு பேரையும் காப்பாத்த முடியாது. போர்ஸப்ஸ்” அவன் கேட்டதை அவள் நீட்ட, அதனை பயன்படுத்தி மீண்டும் கொடுத்தான்.
“சக்ஸன்” இவ்வாறே அவனுக்கு தேவையானதை அவன் கேட்கும் முன்பே எடுத்து இலக்கியா கொடுக்க, முதல் முறை இருவரது புரிதலையும் அந்த அறுவை சிகிச்சையில் பார்த்தார்.
இலக்கியா கருவிகளை எடுத்து கொடுக்கும், வைக்கும் ‘க்ளிங் க்ளிங்’ என்னும் சத்தங்களும் தான் அவ்விடத்தை நிறைத்திருந்தது.
பெண்ணவளின் விழிகள் அடிக்கடி குழந்தையின் இதயத்துடிப்பை பார்த்துக்கொண்டே தான் இருந்தது.
“ICPய மானிடர் பண்ணிட்டே இரு. கொஞ்சம் அதிகமானாலும் சொல்லு” இலக்கியா தலை அசைத்து சம்மதித்தாள்.
அறுவை சிகிச்சை மேலும் தொடர்ந்தது. பார்த்து நிதானமாக செய்ய வேண்டிய சிகிச்சை. வெளியே தாய்க்கு மட்டுமே முக்கியத்துவம் என கூறினாலும் உள்ளுக்குள் இரண்டு உயிர்களையும் ஏற்பாடு பட்டாவது காப்பற்றிவிட வேண்டும் என்கிற ஒரு எண்ணம் தான் அவனுக்கு.
மூளையின் மெல்லிய சதையை கிழிக்கும் பொழுது புருவங்கள் மத்தியில் உருவாகிய வியர்வை துளியை கவனித்த இலக்கியா வேகமாக அவனுக்கு இடையூறு விளைவிக்காமல் துடைத்துவிட்டாள்.
அவளது இறகை போலான வருடல் அர்ஜுனுக்கு வேலையில் தடையில்லாமல் முன்னேற வைத்தது.
“ICP அதிகமாகுது சார்…” இலக்கியா அவசர செய்தியை குரலில் பதட்டம் இல்லாமல் கொடுக்க, அர்ஜுனிடம் சிறிதும் பதட்டம் இல்லை.
வார்த்தை அழுத்தமாக அதே நேரம் மெலிதாக வந்தது, “ஃபோர்செப்ஸ்” ஃபோர்செப்ஸை அவளது கைகள் வேகமாக கொடுத்தது.
அறை எங்கும் பதற்றமான காற்று வீச, அர்ஜுன் சிறிதும் தன்னுடைய கவனத்தை திசைதிருப்பவில்லை. துல்லியமாக, நுணுக்கமாக வேலை பார்த்த கைகளின் சிறு சிறு அசைவில் அவன் பார்வையும் அந்த நோயாளியின் சிரத்தை விட்டு அகலவில்லை.
“புடிச்சாச்சு. ப்ளீடிங் கிளாம்ப் பண்ண போறேன்” கசிந்த ரத்தத்தின் வேகம் மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் வர, அறையிலிருந்த பாதி பேருக்கு பெருமூச்சு வந்தது.
“பேபி ஹெர்ட்பீட் லோ ஆகுது சார்”
“நான் தான் சொன்னேனே மதர்ஸ் லைப் இஸ் இம்பார்டென்ட் ஃபார் மீ. அவங்க பிரைன் ஸ்டேபிள் ஆகுற வரை வேற எதை பத்தியும் எனக்கு கவலை இல்லை”
பற்களை படித்து அவன் கூறியதில் மறுத்து பேச தயங்கினாலும் தலை அசைத்து சம்மதித்தாள். அர்ஜுன் விரல்கள் அறுவை சிகிச்சையின் முக்கிய பகுதியை தொடர்ந்து முடித்து, “இன்னைக்கு எந்த உயிரும் போகாது” அமைதியான அந்த அறையில் அவளுக்காக அவன் கூறிய ஆறுதல் அனைவருக்குமே கேட்டது.
ரத்த கசிவை முற்றிலுமாக கட்டுப்படுத்தியவன் குழந்தை மற்றும் தாய் இருவரின் நிலையம் நிலையாகி விட்டது என்பதை உறுதி செய்த பிறகே தன்னுடைய கையுறைகளை அவிழ்த்தான்.
இலக்கியா அவன் கொடுத்த கருவியை வாங்கி வைக்க, ஆபரேஷன் டெஸ்க்கை விட்டு பெருமூச்சோடு விலகி நின்றான்.
“ஆள் தி பெஸ்ட் கைஸ். மதர் அண்ட் சைல்ட் ரெண்டு பேருமே சேப்” இலக்கியாவின் கண்கள் மென்மையடைந்து கணவனை நிதானமாக வருடியது.
அறையிலுள்ளவர்கள் அவனது நிதானத்திற்கு பாராட்டி கைகள் தட்ட, பானுவுக்கு மகனை நினைத்து பெருமிதத்தில் சிரிப்போடு நிறைவையும் வந்தது.
“நீ குழந்தையை விட்ருவியோனு நினைச்சேன் அர்ஜுன்”
“சுச்சுவேஷன் அப்டி ம்மா. சின்ன மிஸ்டேக் வந்தாலும் ரெண்டு பேரையும் நாம இழந்திருப்போம்” என்றவன் , “செல்வராஜன் கேன் யூ?”
“நான் ஸ்கேல்ப்ப கிளோஸ் பண்ணிறீன் சார்” என்றான் அவனே வேகமாக.
உரைகளை அவிழ்த்து வைத்தவன் குறிப்பேட்டில் தேவையான தகவல்களை நிரப்பி, “இவங்கள ஐ.சி.யுல வச்சே வாட்ச் பண்ணுங்க. ICP கொஞ்சம் மாறினாலும் யோசிக்காம உடனே எனக்கு இன்போர்ம் பண்ணனும்” அவன் கூறியதை குறிப்பெடுத்துக்கொண்டாள் இலக்கியா.
“மாம் நியோனாட்டாலஜிஸ்ட் வர சொல்லி பேபி கண்டிஷன் கம்ப்ளீட்டா செக் பண்ணிடுங்க”
“சரி அர்ஜுன்” என்றார் மேலோட்டமாக குழந்தையின் அசைவுகளை சோதித்து.
“அடுத்த டுவல்வ் ஹௌர்ஸ்க்கு ஒன் ஹௌர்க்கு ஒரு தடவ மானிடர் பண்ணிட்டே இருக்கனும்”
அதையும் அவள் குறிப்பெடுப்பதை பார்த்தவன் இரண்டு எட்டு வைத்து மீண்டும் நின்றான், “இன்னைக்கு நைட் இன்னொரு சி.டி ஸ்கேன் எடுத்துடுங்க, வீக்கம் கண்ட்ரோல்ல இருக்கானு செக் பண்ணனும். நான் இல்லனாலும் டியூட்டி டாக்டர் யார் வந்தாலும் செக் பண்ணிட்டு எனக்கு ரிப்போர்ட் மெயில் பண்ணிடுங்க”
இலக்கியா, “ஓகே சார். அவங்க பேமிலிக்கு…”
அர்ஜுன், “சொல்லிடு. ஆனா எதுக்கும் ரொம்ப நம்பிக்கை குடுக்க வேணாம். அடுத்த 24 ஹௌர்ஸ் க்ரூஷியல் தான். அப்றம் இன்னைக்கு லீவு கேட்ருந்தல? வீட்டுக்கு கிளம்பு” அங்கிருந்த அனைவரின் காதிலும் விழும்படி.
‘நான் எப்போ கேட்டேன்?’ புரியாமல் விழித்தவள் அங்கு முடிக்க வேண்டிய சில வேலைகளை முடித்து அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் தகவலையும் கொடுத்து அர்ஜுனிடம் வந்தாள்.
அவன் அறைக்கு வந்தால், “இப்ப தான் சார் கிளம்புனார் இலக்கியா. நீங்க வந்தா உங்களையும் வீட்டுக்கு கிளம்ப சொன்னார்”
‘ஏற்கனவே ஒரு நாள் லீவ் போச்சு. இப்போ இன்னொரு நாள். யாரை கேட்டு போக சொல்றார்? நானா கேட்டேன் இவர்கிட்ட லீவ் தாங்கனு வந்து? ஐநூறு ரூபா போய்டும். ச்ச இந்த மனுசன வச்சுக்குட்டு’
கணவனை பாரபட்சம் பார்க்காமல் திட்டிக்கொண்டே வந்தவளுக்கு ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
ஏதோ சிந்தனையில் இருந்தவள் அழைப்பை ஏற்று காதில் வைக்க, “திட்டுனது போதும், உனக்கு ரைட் சைட்ல தான் நிக்கிறேன் வா” அழைத்திருந்தது அர்ஜுன் தான்.
அவனோடு வாதாட பல இருந்தும் இதற்கு வாதாட பிடிக்காமல் அமைதியாக வந்து பின்னே கதவினை திறக்க, “நான் உனக்கு என்ன டிரைவர்ரா, முன்னாடி வா” அவனே எக்கி கதவை திறந்துவிட முகத்தை தூக்கி வைத்து வந்தமர்ந்தாள்.
மீண்டும் நீண்ட நெடிய அமைதியான பயணம். நேற்று இரவில் இருந்தே சற்று மேகமூட்டமாக தான் வானம் தென்பட்டது.
ஆலம்பரை கோட்டை. சிதைந்த நிலையிலிருந்த அந்த கோட்டை கடற்கரை அருகே, சென்னையை விட்டு ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் அமையப்பட்டிருக்கும்.
இவ்விடத்திற்கு இலக்கியா இது வரை வந்ததே இல்லை. அர்ஜுனோடு இவளும் வர, மணலில் இருவரும் அமர்ந்துவிட்டனர். இலக்கியாவிற்கு சற்று பயமாக தான் இருந்தது.
அதிகம் ஆட்களே இல்லை. அதிகம் என்ன, ஆட்களே இல்லை. இவ்விடத்திருக்கெல்லாம் வர பல முறை அவள் தந்தையிடம் இலக்கியா கேட்டது உண்டு.
ஆனால் அவர் இவ்விடத்தின் கூட்டத்தை பற்றி யோசனையில் அனுப்பியது இல்லை. இன்று இங்கு வந்தும் பயம் மனதெங்கும் வியாபித்து போனது. அடிக்கடி சுற்றத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளது பதற்றத்தை உணர்ந்தவன், “எதுக்கு இப்டி பயப்பிடுற? உன் கை எப்படி நடுங்குது பார்” அவளது விரல்களை சுட்டிக்காட்டி அர்ஜுன் தன் பக்கம் அவள் கவனத்தை ஈர்த்தான்.
குனிந்து தன்னுடைய விரல்களை பார்த்தாள், இந்த அளவிற்கு பயந்துள்ளது இப்பொழுது தான் புரிந்தது. கைகள் இரண்டையும் பின்னிக்கொண்டு முன்னிருந்த கடலை வெறிக்க துவங்கினாள்.
“ஏன் எப்ப பாரு பீச் பக்கமே வர்றிங்க?”
“என்ன உன்ன கொன்னு இந்த கடல்ல தூக்கி போட்டுடுவேன்னு நினைச்சியா?” விழிகள் இரண்டும் விரிந்து அவளை காட்டிக்கொடுக்க சிரித்துவிட்டான் அர்ஜுன்.
“அடி பாவி. அப்டி தான் நினைச்சியா?” அவளையும் மீறி பெண்ணின் தலை ஆடியது.
“ரைட்டு…” அர்ஜுனும் அதே அமைதியோடு அவளே ஏதாவது பேசுகிறாளா பார்ப்போம் என அவளுக்கான நேரத்தை கொடுத்தான். அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகியது. அவள் பேசுவதாய் தெரியவில்லை.
“எதுக்கு இப்டி இருக்க?” மூச்சை இழுத்து விட்டவள் உடனே பேசவில்லை, இன்னும் சிந்தனையில் மூழ்கியிருக்க அவளது தோள்கள் கூட விறைப்பாக இருந்தது இந்த குளுமையான காற்றிலும்.
அவள் நேற்றைய வார்த்தை காற்றில் வந்து உரசி செல்ல அர்ஜுன் கைகள் அவளை தன் தோள் வைத்து தீண்டி சீண்டினான். அவன் தீண்டவும் தான் அவளது சோர்வான பார்வை நீங்கியது.
“ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததுல இருந்தே நீ சரியில்ல”
“இன்னைக்கு நடந்த இன்சிடென்ட் ரொம்ப சென்சிடிவ். மதர் நார்மல் ஆகி பேபிக்கு ஏதாவது ஆகிருந்தா யோசிக்க கூட முடியல”
“இந்த பீல்ட்ல இதுக்கெல்லாம் மென்டல்லி தயாராகிட்டு தான் வரணும். கண்டிப்பா ஒரு வகைல நம்மள இதெல்லாம் குழப்ப தான் செய்யும். ஆனா கடந்து வந்து தானே ஆகணும்” தலை அசைத்து ஆமோதித்தாள்.
“இருந்தாலும் இவ்ளோ எமோஷன் ஆகிட்டு அங்க ஆபரேஷன் தியேட்டர்ல ரொம்ப நார்மலா இருந்த?”
அதை நினைக்கையிலே அவள் உடல் இன்னும் விறைத்தது, “ரொம்ப கஷ்டமா தான் இருந்தது”
“அவ்ளோ ஈசி இல்ல, எனக்கு புரியிது. ஆனா நான் பாத்த நர்ஸ்ல நீ ரொம்பவே எமோஷ்னலி ஸ்ட்ராங் தான், சில பேரால இந்த சிச்சுவேஷனை ஹாண்டில் பண்ண முடியாது. சில நேரம் நீயும் டயர்டா பீல் பண்ணலாம். தப்பில்ல”
இலக்கியா மெல்லிய புன்னகையோடு அவனது பாராட்டை ஆமோதித்தாள், தன்னுடைய அழுத்தத்தை இன்னும் உள்ளேயே அடக்கி வைத்து.
இருந்தும் லேசான கிண்டல் பார்வையோடு, “என்ன பெட்டரா பீல் பண்ண வைக்க தான் இந்த பாராட்டா?”
விளையாட்டின் பளபளப்பு அவன் கண்ணில் மின்ன சிரிப்போடு, “இது வேலை செய்யிது. இல்ல?” பெண்ணவள் மென்மையாக சிரித்தாள், கொஞ்சம் பதற்றம் தணிந்தவளாக.
“சரி ஹாஸ்பிடல்ல அந்த நர்ஸ் உன்ன என்ன சொன்னாங்க?”
முகம் மீண்டும் சூம்பியது அர்ஜுன் மனைவிக்கு, “நான் இதுவரை இப்டி வந்ததே இல்ல சார். எப்பவும் என்னோட லாக்கர்ல கூட ஒரு ஸ்பேர் டிரஸ் வச்சிருப்பேன். இன்னைக்கு கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டாங்க. என் ஹாஸ்பிடல்லா, என் அப்பா ஹாஸ்பிடல்லா அப்டி இப்டினு”
தன்னை பற்றி பேசியதை விட அவள் தந்தையை பற்றி பேசியதை தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை இலக்கியாவால். அதை நினைக்கும் பொழுது இப்பொழுது கூட அழுகை வந்தது.
“சும்மா விட்டு வந்தியா?” அவளது அப்போதைய அழுகையின் காரணம் இப்பொழுது புரிந்தது.
“அவங்க என்னோட சீனியர் சார். அவங்கள பகைச்சிட்டு என்னால அங்க ஒர்க் பண்ண முடியாது”
“என்கிட்ட மட்டும் எப்படி சண்டைக்கு வர்ற? நம்மள பத்தி கூட ரெண்டு வார்த்தை பேச விட்டுடலாம், ஆனா நம்ம பேரண்டஸ் பத்தி ஒரு வார்த்தை தெரியாம கூட பேச விட கூடாது. நான் ஸ்கூல் படிக்கிறப்போ, என்ன டென்த் படிச்சிருப்பேன்.
‘இவன் அம்மா யாரையாவது கொன்னு கூட இவனை டாக்டர் ஆகிடுவாங்க’னு சொன்னான். அவ்ளோ தான் அவன் வாய் உடையிற அளவு அடிச்சு வந்தேன்”
“ஐயோ… இவ்ளோ ஆக்ரோஷமா?”
“அதுவே ரொம்ப கம்மி. டீச்சர்ஸ்க்கு தெரிஞ்சு ரொம்ப பெரிய பிரச்னையாகிடுச்சு. இல்லனா கழுத்தை உடைச்சிருப்பேன்”
“சிவ சிவா…” பயத்திலே அவனை விட்டு சில இன்ச் தள்ளி அமர்ந்துகொண்டாள்.
“நீ ஏன்டி தள்ளி போற? நான் என்ன உன்னையா அடிக்க போறேன்?” என்றவன் தன்னுடைய சட்டையிலிருந்த கடலைமிட்டாய் ஒன்றை மனைவியிடம் நீட்டினான். வாங்கியவள் அவனுக்கும் கொடுத்து தானும் உண்டாள்.
“நம்மள பத்தி பேச யாருக்கும் இடம் குடுக்க கூடாது இலக்கியா. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பதில் குடுக்காம இனி வராத. சுய கௌரவத்தை மட்டும் எந்த நிலையையும் விட கூடாது. அப்டி அதை விட்டு கிடைக்கிற எதுவும் தேவையும் இல்ல” அர்ஜுன் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டவள் தலை அசைத்து ஏற்றுக்கொண்டாள்.
“கிளம்பலாமா? தூக்கம் வருது” வீட்டிற்கு வரும் வழியிலே ஒரு உணவகத்தில் நிறுத்தி இருவரும் காலை உணவை புறக்கணித்து மதிய உணவை முடித்து தான் இல்லம் வந்தனர்.
கொடியில் சிக்கிய பறவையாய் தவித்து துடித்து வந்தவளுக்கு சிறிது ஆசுவாசம் கிடைத்தது அவனோடு நடந்த சிறு உரையாடலுக்கு.
error: Content is protected !!