Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 32(2)

இங்கு காரில் சென்று கொண்டு இருந்த நந்தினி அழுது கொண்டே இருந்தாள்….  கர்ணன் அவளிடம் எதுவும் பேசவில்லை… பத்தே நிமிடத்தில் அய்யனார்புரத்தில் இருந்து மெய்யனூர் சென்று இருந்தான்…  வீட்டினுள் காரை நிறுத்திவிட்டு அவனுக்கு அழைத்தான்வாணன் தூங்காமல் கணக்குவழக்கை தான் பார்த்து கொண்டு இருந்தான்அவனுக்கு மனைவியில் செயல் உவப்பானதாக இல்லை.. எப்படி அவளால் பேச முடிந்தது தன் தங்கையை என்று யோசித்து யோசித்து அவனுக்கு தூக்கம் வரவில்லைஅதனால் கண்ணக்கை பார்க்கலாம் என நினைத்து எடுத்து வைத்து பார்த்து கொண்டு இருந்தான்….

நந்தினியிடம் பேசாமல் அர்ஜுனன் வீட்டில் இருந்து கிளம்பியவன் நேராக வயலுக்கு சென்றுவிட்டான்அங்கு மாலை வரை இருந்தவன் மீண்டும் நந்தினி இருக்குமிடம் போக பிடிக்காமல் யாரிடமும் கூறாமல்  அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டான்….



Advertisement

தற்போது கர்ணனின் அழைப்பை ஏற்றுடேய் உனக்கும் உன் அண்ணன்களுக்கும் வேலையே இல்லையா தூங்காம எனக்கு ஏன்டா கூப்பிட்டு இம்சை பண்றிங்க…. நான் தான் சொல்லிட்டேனே டாமுதல் உங்க பெரியண்ணன்அடுத்து உன் சின்ன அண்ணன் இப்ப நீயா ஏன்டா காலைல வந்துறேன்…” என்று கூறி அழைப்பை அணைக்கும் முன் அங்கு கர்ணன் கத்தினான்….

Advertisement

Advertisement

“யோவ் அத்தான் வந்து கதவை திறஎனக்கு தூக்கம் வருதுஏற்கனவே காண்டு இருக்கேன்” என்று அவன் கத்திவிட்டு போனை வைத்துவிட்டான்…. கர்ணன் வாணனிடம் பயம் இருந்தாலும் இவ்வாறு தான் பேசுவான்அர்ஜுனனும் சசியும் மரியாதையாக பேசினாலும் இவனுக்கு வாணன் மேல் மரியாதையை இருந்தும் இப்படி உரிமையாக வாணனிடம் பேசும் ஒரே ஆள் கர்ணன் தான்

Advertisement

இப்போ இவன் ஏன் இந்நேரத்துக்கு வந்து இருக்கான் என்று யோசித்து கொண்டே கதவை திறக்க சென்றான்அங்கு திறந்தவுடன் கர்ணன் முதல் ஆளாக உள்ளே நுழைந்து அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டான்….

கர்ணன் கதவை அடைத்ததை உறுதி செய்து கொண்டு நந்தினியை திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான் அவனின் பார்வையில் தானாக ஒரு அடி பின்னால் வைத்துவிட்டாள்கண்ணில் சீற்றத்துடன்ஒழுங்கா போய் தூங்கிடு …  என்கிட்ட பேசுறேன்னு எதோ பண்ண அவ்வளவு தான்…” என்று மெதுவாக தான் கூறினான்ஆனால் ஒரு வித அழுத்தத்துடன் கூறினான்

அவளோ அதை கேட்காமல் அவனிடம் பேச முயற்ச்சி செய்தாள்அவன் அவளிடம் பேசாமல் நீண்ட ஒரு பெருமூச்சை விட்டுவிட்டுரூமுக்கு போ வரேன்என்று கூறிவிட்டு கணக்கு புத்தகத்தை எடுத்து வைக்க சென்றான்அவன் வரும் வரை ஹாலில் தான் நின்று இருந்தாள் நந்தினி ….

நான் சொல்றதை கேட்க வேணாம்னு முடிவுல இருக்கியா என்ன…????” என்று அவளிடம் கத்திவிட்டு வேகமாக முதல் தளத்தில் இருக்கும் அவர்கள் அறைக்கு சென்றுவிட்டான்…. நந்தினியும் தயங்கி கொண்டே அறைக்கு சென்றாள்ஒரு வேகத்தில் இரவில் கர்ணனை அழைத்து கொண்டு வந்துவிட்டாள்கர்ணன் வரவில்லை என்றால் சசியை அழைத்து கொண்டு தான் வந்து இருப்பாள்.. அது எவ்வளவு பெரிய தவறாகி இருக்கும் புது மாப்பிளையை அழைத்து வந்ததுக்கும் சேர்த்து வாணனிடம் திட்டு வாங்கி இருக்க வேண்டும் என நினைத்து கொண்டு அறைக்குள் செல்லாமல் வாயிலேயே நின்றாள்…..

ஏன் மஹாராணியை ஆரத்தி எடுத்து அழைச்சா தான் உள்ள வருவீங்களா…. ” என்று மீண்டும் சற்று சத்தமாக கேட்டான்….

நடுங்கி கொண்டே உள்ளே சென்றவள் கதவை அடைத்துவிட்டு வாணனை நோக்கி திரும்பினாள்…. “சாரி மாமா தெரியாம பேசிட்டேன்… அவங்க பேச்சை கேட்டு எது எதுவோ பேசிட்டேன்… மன்னிச்சுடு மாமா சாரி ” என்று அழுதவாறே கூறினாள்….

“தெரியாம பேசுனியா…. அவங்க தூண்டி விட்டதும் உன் மனசுல இருந்தது எல்லாம் வெளிய வந்துடுச்சு…. அவங்க பேசாம போனாலும் ஒரு நாள் உன் மனசுல இருந்தது வெளியில வந்து தான் இருக்கும்…. உன் மேல எனக்கு இன்னும் கோவம் போகல… கோவம் போனதும் பேசுவேன்… அது வரைக்கும் தயவு செஞ்சி முன்னாடி வந்து நிக்காத சரியா….. ” என்று கூறிவிட்டு பக்கத்து அறைக்கு சென்று விட்டான்…

நந்தினியும் அழுது கொண்டே தூங்கிவிட்டாள்…பக்கத்து அறைக்கு வந்த வாணன் பால்கனியில் நிலவை வெறித்தவாறு நின்றுவிட்டான்… “உன் மனசு இன்னும் மாறல…. உன்னை உன் தம்பி கேள்வி கேட்டதும் உன் குற்றவுணர்ச்சி வெளிய வந்து இருக்கு… திரும்பியும் அந்த அம்மா பேசுனா திரும்பியும் இதே மாதிரி ஆவ… உன் மனசு எப்போ முழுசா மாறுதோ அப்போ உன்கூட பேசுறேன் இனிம்மா” என்று கூறிவிட்டு அவனும் உறங்கிவிட்டான்….

கீழே தூங்கிக்கொண்டு இருந்த கர்ணன் திடீரென  எழுந்து அமர்ந்தான்…. “அடியே ரியா ஒரு நாளாச்சும் என்னை தூங்கவிடேன்…. ஏன் கனவுல வந்து இம்சை பண்ணுற….  போன்ல தைரியமா லவ் சொல்லுற.. நேர்ல பார்த்தா அப்டியே கண்டுக்காம போற… ஆனா யாருக்கும் தெரியாம சைட் மட்டும் அடிப்பீங்களா மேடம்…. சீக்கிரம் உங்கிட்ட லவ் சொல்றேன்டி ஏன் செல்லாகுட்டி என்று கூறி சுபாவின் வளைகாப்பில்  யாருக்கும் தெரியாமல் சுப்ரியாவின் புகைப்படத்தை ரசித்தவாறே மீண்டும் கண் அயர்ந்தான் கர்ணன்…..

அய்யனார்புரம்…..

பாலா வீட்டில் கிரிஜா ஒரு மூலையில் கன்னத்தை பொத்தியாவாரு அழுது கொண்டே நின்று இருந்தார்… எவ்வளவு தைரியம் இருந்து இருந்தா குடும்பதுக்குள்ள சண்டை மூட்டி இருப்ப…. உன்னை எல்லாம் சும்மாவே விட கூடாது என கூறி கன்னத்தில் நான்கு ஐந்து அறை அறைந்து விட்டு அறைக்குள் சென்றுவிட்டார் பாலா…

 

அர்ஜுனன் வீட்டில் அவன் அறையில் ஆரவ் அவன் கட்டிலில் தூங்கி இருக்க நிரவி குட்டியோ பசிக்கு அழுதவாரு இருந்தாள்… அர்ஜுனன் அவளை தூக்கிவைத்து கொண்டு ஏற்கனவே மித்ரா காய்த்து தந்த பாலை குழந்தைக்கு புகட்டி கொண்டு இருந்தான்… குழந்தையின் சத்தத்தில் காய்ச்சலின் காரணமாக தூக்கத்தில் இருந்த சுபா எழுந்து இருந்தாள்… எழுந்தவள் அர்ஜுனனிடம் மாமா பாப்பா ரொம்ப அழுகுறாளா….. என்னால பாப்பாவுக்கு பால் தர முடியல… என்று கூறி கண் கலங்கினாள்… அவள் கலங்குவதை பார்த்து “அம்மு கண்ணுல இருந்து கண்ணீர்  கீழ இறங்குச்சு என்கிட்ட அடி வாங்கிக்குவ… ஒழுங்கா கண்ணை துடை பாப்பா பால் குடிச்சிட்டா… தூக்கமும் வந்துடுச்சு… ” என்று கூறி பால் பாட்டிலை கீழே வைத்து விட்டு பாப்பாவை தோளில் போட்டு கொண்டு ஏப்பம் விட முதுகை தட்டி கொடுத்தான்…. நிரவி குட்டியும் ஏப்பம் விட்டுவிட்டு அவளின் அப்பாவின் தோளில் சுகமாக தூங்கிவிட்டாள்….

சிறிது நேரம் தோளிலேயே தூங்க வைத்துவிட்டு கட்டிலில் படுக்க வைத்தான்…. பின் அவள் விழுந்து விடாமல் இருக்க பாப்பாவை சுற்றியும் தலையணை வைதான் “பாப்பா தூங்கிட்டா அம்மு உனக்கு பீவர் எப்படி இருக்கு இப்போ ஓகேவா” என்று கூறி அவளை தொட்டு பார்த்துவிட்டு “இப்போ குறைஞ்சி போச்சு அம்மு….. ஏன் எழுந்துட்ட தூங்கலாம்ல” என்று கேட்டு அவளின் பக்கம் அமர்ந்தான்….

“காலைல இருந்து தூங்கிட்டே இருந்ததுனால தூக்கம் போயிடுச்சு மாமா… பாப்பாவை நாலு நாளா தூக்க கூட இல்ல…  ” என்று கூறி அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்….

“இன்னும் ஒரு நாள் அம்மு நாளைக்கு விட்டுட்டு அடுத்த நாள் பாப்பாவை தூக்கிக்கோ” என்று கூறி அவளின் தலையை கோதி கொடுத்தான்…

மாமா நீ தூங்கு… நாலு நாளா நீ ஒழுங்கா தூங்கவே இல்ல…  நானும் கொஞ்ச நேரத்துல தூங்கு என்று கூறினாள்… அர்ஜுனனும் அவளையும் தன்னோடு  சேர்த்து அணைத்து கொண்டு உறங்க ஆயத்தம் ஆனான்…. அந்த நேரம் ஆரவ் எழுந்து தூக்க கலகத்திலேயே அர்ஜுனன் அருகில் வந்து அவன் மேல் படுத்து கொண்டான்…  ஒரு பக்கம் அவனின் பெண்ணரசி தூங்கி கொண்டு இருக்க இன்னொரு பக்கம் அவனின் அம்மு படுத்து கொண்டு இருந்தாள்… அவன் மேலே ஆரவ் தூங்கி இருக்க சந்தோசமாக கண் அயர்ந்தான் அர்ஜுனன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!