Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கொஞ்சம் பார்த்து விடு கொஞ்சம் பேசி விடு – 15.2

 ராகுலுக்கு ரொம்ப பெருமிதம் ஆக இருந்தது!

ப்ரீத்தி அவனை தவிர வேறு யாரையும் எந்த கம்பல்சன் வந்தாலும் கல்யாணம் செய்ய ஒத்துக்க மாட்டாள் என்பதில்!

இப்போது பத்மா, வெங்கட் ராமன், அபிஷேக்குடன் ஸ்வேதாவும் வந்து விட்டார்கள். பின்னாலேயே பிரகாசும் வந்து விட்டார்.

“என்ன ஆனந்தி எல்லாம் ரெடியா?” கேட்டார் பத்மா.



Advertisement

“எல்லாம் ரெடி தான் அண்ணி, டிகாக்ஷன் மட்டும் தான் நீங்க வரட்டும்னு இருக்கேன்! உங்க மருமக தான் இன்னும் ரெடி ஆக மாட்டேங்கிறா என்னன்னு கேளுங்க” என்றாள் ஆனந்தி.

“அவளை நான் பார்த்துக்கிறேன், இந்தா, இது வீட்டுலையே வறுத்து அரைச்ச காபி பொடி, மாமி வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்துருக்கேன். நீ போய் ரெடி பண்ணு.”

“பிரகாஷ் ஸ்வீட் காரம் எல்லாம் வாங்கிட்டியா?”

Advertisement

 “வாங்கிட்டேன் அக்கா! கீ மைசூர் பாக்கும் நெய் முறுக்கும்!”

Advertisement

“டேய் என்னடா நீ, மைசூர் பாக் ஓகே, சபையில  வச்சு எப்படிடா பெரியவங்க கடுக் முடுக்குன்னு முறுக்கை சாப்பிடுவாங்க?

எனக்கு தெரியும் நீ இப்படி எதாச்சும் சொதப்புவன்னு, அதான் நான் மிக்சர் வாங்கிட்டு வந்திருக்கேன்.”

“இத வச்சு கொடுக்கலாம். இந்தா உள்ள கொண்டு போய் வை!” பையை கொடுத்தார்.

Advertisement

“ஸ்வேதா, நீ வாங்கிட்டு வந்தியே? என்னமோ அந்த இன்ஸ்டன்ட் பீல் ஆப் பேசியல் க்ரீம்! அத ப்ரீத்திக்கு போட்டு விட்டு அவளை கூட்டிட்டு போய் ரெடி பண்ணு! ம்ம் சீக்கிரம், இந்தாங்கறதுகுள்ள டைம் ஓடிடும்!”

“அத்தை..”  ப்ரீத்தி பத்மாவை கூப்பிட்டு பார்த்தாள்!

அவள் திரும்பி “என்ன” என்று கேட்ட விதத்திலேயே வாயை மூடிக் கொண்டாள் ப்ரீத்தி!

………

ராகுல் வீட்டார் வந்து விட்டார்கள்.

ராகுல், கீர்த்தி, ராதாகிருஷ்ணன், ராதிகா, ரஞ்சித், அனு மற்றும் ரக்ஷிதா அனைவருமே!

வந்த அவர்களை வரவேற்று அமர வைத்தார்கள்.

ஸ்வேதா அனைவருக்கும் தண்ணீர் கொடுத்து விட்டு, பின் ஸ்வீட் காரம் கொடுத்தாள்.

எல்லோரும் வாங்கிக் கொள்ள ரஞ்சித் மட்டும் “வேண்டாம்” என்று விட்டான்!

ஸ்வேதா ரொம்ப வற்புறுத்தி எடுத்துக்க சொல்லியும் மறுத்து விட்டான்!

“என்ன, மாப்பிள்ளை வீட்டு பந்தாவா?” ராதிகா அவன் காதில் கிசு கிசுத்தாள்!

“உங்களுக்கு தான் மிக்ஸர் ரொம்ப பிடிக்குமே! அம்மா அப்பா யூ எஸ் வந்தா கூட சின்ன பையன் மாதிரி வாங்கிட்டு வர சொல்லி, சோறு மாதிரி அதையே சாப்பிடுவீங்க, இப்ப என்ன பந்தாவா?”

“எல்லாம் ஒரு காரணமாக தான்” என்றான் ரஞ்சித்!

இப்போது அறிமுகப்படலம் நடந்தது!

“இவர் எங்கள் மாப்பிள்ளை ரஞ்சித், என் பொண்ணும் அவரும் யூ எஸ்ஸில் வேலைப் பார்க்கிறார்கள். இப்போது இங்க வந்திருக்கிறதே ராகுல் கல்யாணத்திற்காக தான்! முடிந்தவுடன் கிளம்பி விடுவாங்க! இப்போது இங்கிருந்து வேலை பார்க்கிறாங்க!” என்று அறிமுகப் படுத்தி முடித்தார் ராதாகிருஷ்ணன்!

“சிஸ்டர், இப்ப அந்த ஸ்வீட் காரம் பிளேட்ட கொடுங்க” ரஞ்சித் ஸ்வேதாவிடம் கேட்டு வாங்கினான்!

எல்லோரும் அவனையே ஆச்சர்யமாக பார்க்க அவனே சொன்னான்.

“இல்ல மாமா என்னை இன்ட்ரடியூஸ் பண்ணி முடிச்சவுடன் சாப்பிடலாம்னு தான்!”

“ஏன் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இல்ல, எனக்கு மிக்சர் ரொம்ப பிடிக்கும், நான் பாட்டுக்கு அத சாப்ப்ட்டுகிட்டு இருக்கிறப்போ, இந்தா இங்க மிக்ஸர் சாப்டுட்டு இருக்காரே அவர் தான் எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு சொல்லிட்டா? என்ன பண்றது? அதான் நான் அப்ப வாங்கிக்கவே இல்ல!”

“அது ஒண்ணும் இல்லங்க, நான் இங்க ரெண்டு மாசமா இருக்கேன்ல, ஒரு நாள் தெரு முனை டீக்கடைக்கு போனப்போ, அந்த கடைக்காரர், என்ன சார்? மாமனார் வீட்டோட செட்டில் ஆகிட்டீங்களான்னு கேக்கறார்! அதுல இருந்து கொஞ்சம் உஷார் ஆகிட்டேன்!” என்றான் ரஞ்சித்.

எல்லோரும் சிரிக்க, எதற்கும் சிரிக்காத பிரகாஷ் கூட இப்போது சத்தமாக சிரித்து விட்டார்!

“சரி ப்ரீத்திய வர சொல்லுங்க” என்றார் ராதாகிருஷ்ணன்.

“ஆனந்தி, பிங்கி கையில் காபியை கொடுத்து விடு” என்றார் பத்மா!

ப்ரீத்தி வந்தாள். ஸ்வேதா ரொம்பவும் கஷ்டப்பட்டு பண்ணி விட்ட அலங்காரத்துடன்!

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அவர்கள் முன் வந்தாள் ப்ரீத்தி!

இந்த மூஞ்சியை பார்த்தாலே நல்ல குடும்பம் என்றால் இவளின் விருப்பமின்மையைப் புரிந்து கொண்டு விடுவார்கள்,  அப்படி இல்லையென்றால் இந்த சபையில் வைத்தே முகத்திற்கு நேரேயே பிடிக்க வில்லை என்று சொல்லி விட வேண்டியது தான்!

ஆனது ஆகட்டும்! பார்த்துக்கலாம்! இந்த ராகுலிடம் சொல்லி ஹெல்ப் கேக்கலாம்  என்றால், அவன் போனையே எடுக்க மாட்டேன் என்கிறான்!

ஆளும் ஊரில் இல்லை என்கிறார்கள்! அவன் வீட்டுக்கே போகலாம் என்றால், என்னன்னு சொல்லிட்டு போறது!”

ஆபிஸ் வேறு அனுப்பவே இல்லை கடந்த நான்கு நாட்களாக வீட்டினர்! அவளுக்கு இப்போது ராகுல் மேலும் கோபம் கோபமாக வந்தது!

“காபியை கொடுத்துட்டு மாப்பிள்ளையை நல்லா பார்த்துக்க ப்ரீத்தி” என்றாள் பானு!

“ஒண்ணும் தேவையில்லை” கடுப்புடன் முணுமுணுத்தாள் ப்ரீத்தி!

“அப்படி எப்படி சொல்லுவ? பார்த்தா தானே, என்னோட வச்ச பெட் ரிசல்ட் தெரியும்?” என்றாள் பானுவும் விடாப்பிடியாக!

“இப்ப என்ன அந்த அதி ரூப சுந்தரன பார்த்தே ஆகணுமா? பார்க்குறேன்! பார்த்து தொலைக்கிறேன்! “அவள் கோபமாக நிமிர்ந்து ராகுலைப் பார்த்தாள்!

இன்ப அதிர்ச்சி! அப்படி என்றால் என்னவென்று அன்று தான் ப்ரீத்தி அனுபவப் பூர்வமாக உணர்ந்தாள்!

ராகுலோ, குறும்புப் பார்வையுடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

எல்லோரும் அவள் முகத்தையே சிரித்தபடி பார்த்து இருக்க, அவளோ அவனையே வைத்த கண் வாங்காமல் ஆச்சர்யமுடன் பார்த்துக் கொண்டே இருந்தாள்!

அவனோ டக்கென்று கண் அடித்து சிரித்தான்.

அவள் முகம் வெட்கத்தில் கொஞ்சம் சிவக்க ஆரம்பிக்க,

“என்ன ப்ரீத்தி! உனக்கு மாப்பிள்ளை பிடிச்சுருக்கா இல்லியா?” பானு குரல் கேட்டு கொஞ்சம் நடப்புக்கு வந்தாள் ப்ரீத்தி!

முகத்தை நார்மல் ஆக்கி கொண்டாள்!

“எனக்கு எல்லாமே என் அத்தை தான்! அவங்க விருப்பம் தான் என்னோடதும்!” அந்தர்பல்டி அடித்தாள் ப்ரீத்தி!

“அடப்பாவி” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள் ஆனந்தி!

“கல்யாணம் பத்தி சொன்ன நிமிஷத்தில், இதோ இந்த நிமிசம் வரை என்னை மட்டுமில்லாது என்னோட பரம்பரையையே திட்டிக் கொண்டிருந்தவள் இப்ப எப்படி பல்டி அடிக்கிறா பாரேன்” உள்ளுக்குள் வியந்தாள் அவள்!

“அப்படி எல்லாம் ஒண்ணும் கண்டிசன் இல்ல பிங்கி, உனக்கு பிடிச்சா மட்டும் தான்!” என்று சொல்லி விட்டு பத்மாவை பார்த்து கண் சிமிட்டியபடி, “எதுன்னாலும் என் பொண்ணோட விருப்பம் தான் அண்ணி! அவளுக்கு பிடிக்கலைன்னா வேணாம்!  நான் இப்பவாச்சும் என் பொண்ணு  விருப்பம் போல நடக்க போறேன்! பிடிக்கலைன்னா கூட ஓப்பனா சொல்லிடு ப்ரீத்தி, இந்த அம்மா இப்ப உன் பக்கம்!” ஆனந்தி அவள் பங்கிற்கு ப்ரீத்தியை வம்பிழுத்தாள் இப்போது!

“அய்யோ அம்மா உனக்கு இப்போது தான் பொறுப்புணர்ச்சி பொங்கும்! நீ வேற ஏம்மா இப்படி?” உள்ளுக்குள் தவித்தாள் ப்ரீத்தி!

“நீ சொல்லும்மா ப்ரீத்தி, ராகுலை உனக்கு பிடிச்சுருக்கு தானே!” கேட்டார் ராதாகிருஷ்ணன்!

ப்ரீத்தி வெட்கப்பட்டு சொல்ல முடியாமல் தவிக்க, இப்போது அவளின் உதவிக்கு வந்தார் சிவக்குமார்!

சமயத்தில் உதவுவது தானே நட்புக்கு அடையாளம்!

“ஏய் போதும்ப்பா எல்லோரும் என் டார்லிங்க கலாய்ச்சது! ப்ரீத்திமா, இங்க எல்லோருமே உன்னை வம்பு தான் செய்து இருக்கங்கடா, இவங்க எல்லாத்துக்குமே உங்க லவ் மேட்டர் தெரியும்!”

“அதுவும் இல்லாம ராகுலுக்கு உன்னைப் பேசி முடிச்சுட்டு தான் நான், உன்னை அங்க வேலைக்கே சேர்த்து விட்டேன்!

எல்லாம் ஸ்வேதா கல்யாண வீட்டில் வைச்சே முடிவு பண்ணினது தாண்டா! உங்க ரெண்டு பேர்க்கும் பிடிச்சிருந்தா மேல் கொண்டு போலாம்னு தான் இருந்தோம்.”

“இப்ப நீங்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சுட்டீங்க! அதான் நாங்களும் அடுத்த ஸ்டெப் போய்ட்டோம்!”

“இதுல பானு கொஞ்சம் உன் கூட விளையாடி பார்க்கணும்னா! நீ ஸ்வேதாவையும் அவளையும் எவ்வளவு வம்பு பண்ணின அவ கல்யாணத்தின் போது ! இது கொஞ்சம் பானுவோட ஸ்வீட் ரிவென்ஜ்!”

“என்னங்க நீங்க ரிவென்ஜ் ன்னு எல்லாம் சொல்லிட்டு! அப்படி எல்லாம் இல்லடா குட்டிமா, உன்கிட்ட உன் பெரியம்மா சும்மா விளையாடினேன் அவ்வளவு தான்!”

“சரி சரி  எல்லோரும் காப்பிய குடிங்க ஆறிட போகுது” என்றாள் அனைவரையும் பார்த்து!

“அய்யோ குடிக்காதீங்க!” அலறினாள் ப்ரீத்தி!

“ஏன்மா? “அனைவரும் கோரசாய் கேட்க?

“அது உப்பு போட்ட காபி!”

“அய்யோ!” என்றார்கள் அனைவரும்!

“ஜஸ்ட் மிஸ்டா!” என்றான் ரஞ்சித்!

“என்ன ப்ரீத்தி இது! தப்பும்மா, இவங்க கூட அனு, ரக்ஷு மாதிரி சின்ன பிள்ளைங்களும் வந்திருக்காங்க, இப்படி தான் பண்றதா!” பத்மா கண்டித்தார்!

“சாரி அத்தை ” என்று தலை குனிந்தாள் ப்ரீத்தி!

அப்போது தலை குனிந்தாலும், அவர்கள் எல்லோரும் மேற்கொண்டு ஆக வேண்டியதை பேசி முடித்து சந்தோசமாக வீடு திரும்பி விட்ட பின், ப்ரீத்தி மறுபடி இப்போது முருங்கை மரம் ஏறி விட்டாள் கடுங்கோபத்தில்!

ஆனால் கோபத்திற்கான காரணம் தான் வேறு!

இப்படி இந்த டம்மி பீஸ் ஆனந்தி கூட நம்மளை இப்படி பொய் சொல்லி கலாய்த்து விட்டதே!

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ராகுல்! அவன் கூட இவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லையே!

ஊரில் இருந்து கொண்டே போனை கூட எடுக்க வில்லை!

இருக்கு அவனுக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!