Skip to content
Post Views: 4,837
அத்தியாயம் 21 ( 1 )
அருந்ததியின் வீட்டில்தான் புதுமண தம்பதிகளுக்கு, அன்றைய இரவுக்கான சாங்கியம் வைத்திருந்தனர். மாப்பிள்ளை வீட்டு முறைப்படி அருந்ததியை உட்கார வைத்து நலங்கு வைத்து, பெரியவர்கள் வாழ்த்தி, ஆசிர்வாதம் செய்தார்கள்.
இரு குடும்பமும் தங்களுக்குள் இணங்கி, யாருடைய மனமும் கோணாமல் எல்லா சாங்கிய, சாஸ்திர சம்பிராதாயங்களையும் மனமொத்து செய்தனர்.
Advertisement
எல்லாம் முடிந்த பிறகு பூஜாவும், சித்ராவும் அருந்ததியை அஸ்வத் இருக்கும் அறை வரை கொண்டு வந்து விட்டு சென்றனர்.
அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவள், அங்கு செய்யப்பட்டிருந்த அலங்காரத்தைப் பார்த்து மூச்சடைத்து நின்று விட்டாள்.
ஒரு பூந்தோட்டமே பெயர்ந்து வந்துவிட்டதோ என திகைக்கும் அளவு, அறை முழுவதும் கண்ணைப் பறிக்கும் மலர்கள்.
Advertisement
அளவான பூக்களால், மனதை கவரும் வண்ணங்களால், அந்த அறையை தேவலோகமாக மாற்றியிருந்தனர்.
Advertisement
அஸ்வத்தும் வந்ததில் இருந்து அதைதான் ரசித்திருந்தான். இருவருமே இதை எதிர்பார்க்கவில்லை போல. இருவருக்கும் சேர்ந்தாற்போல முகத்தில் மென்முறுவல்.
என்னதான் காதலர்களாக இருந்தாலும், தங்களுக்குள் பழக்கம் இருந்தாலும், இன்றைய இரவை எண்ணி பெண்ணுக்குள் அச்சம், நாணம் எல்லாம் தலை தூக்கியிருந்தது.
கிட்டத்தட்ட மணாளனின் மனநிலையும்கூட அதுபோலதான் இருந்தது. அறைக்குள் வந்து இந்த அலங்காரத்தை எல்லாம் பார்த்ததிலிருந்து அவனும் மோன நிலையில்தான் இருந்தான்.
Advertisement
அருந்திக்கோ சொல்ல முடியாத கூச்சம். இந்த அலங்காரங்களை எல்லாம் பார்த்து. அதில் அவள் கால்கள் எட்டு வைத்து, அவனை நோக்கி நகர மறுத்து, அடம் செய்து கொண்டிருந்தது.
அங்கேயே தேங்கி நிற்பவளை பார்த்து முறுவலித்தவன், கைநீட்டி வா என தலையசைத்தான். அவளும் இரண்டெட்டு எடுத்து வைத்தாள். அதற்கு மேல் கால்கள் ஒத்துழைக்கவில்லை.
அவளை நெருங்கி வந்தவன் பெண்ணின் தோள் மேல் கையைப் போட்டு ஆதூரமாக அணைத்தவாறு, அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தான்.
சித்ரா வேறு போகும் பொழுது “உள்ள போனதும் மாப்பிள்ளை கால்ல விழுந்து வணங்கிக்கோடா” என அருந்ததியிடம் சொல்லி சென்றிருந்தார். அதுவேறு அவளுக்குள் போராட்டமாக உருண்டு கொண்டிருந்தது. காலில் விழவேண்டுமா… என. பெண்ணுக்கு கூச்சமாக இருந்தது கணவனின் காலில் விழ எல்லாம். ஆதலால் அவனை நிமிர்ந்து பாரக்க முடியாமல் தலையை குனிந்திருந்தாள்.
அவள் பக்கத்திலேயே உட்கார்ந்து, அருந்ததியின் கழுத்தில் வழிந்த மல்லியை கையில் ஏந்தி விளையாடிக் கொண்டிருந்தான் மணாளன்.
ஆடவனின் விரல்கள் தோளில் பட்டு உரசியதில் பெண்ணுக்குள் சிலிர்த்தது.
நெடுநேரம் ஏதும் பேசமால் அமைதியாக அமர்ந்திருப்பவளின், தாடையை பிடித்து நிமிர்த்தியவன் கண்கள் இரண்டும் அவளைப் பார்த்து சிரித்தது.
“என்னடா…? ஏன் இவ்வளவு டென்ஷன்…? ஈசி… ம்ம்…”
சரி என தலையசைத்தாள்.
“உனக்கு விருப்பமில்லனா… இப்ப எதுவும் வேணாம். ஓகேவா. ஈசியா இரு. ஹ்ம்ம்…”
அவன் பேசியதில் வெட்கம் வந்து அஸ்வத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல், பார்வையை தாழ்த்தி கொண்டாள்.
“ஹனி…”
“ஹ்ம்ம்….”
“ரிலாக்ஸ்…., இங்க பாரேன். யார் டெகரேட் பண்ணது. செமையா இருக்குல்ல…” என அவளை சகஜமாக்கி அவனது பேச்சுக்குள் இழுக்க முயன்றான்.
“ஹ்ம்ம்…”
“என்னாச்சு…டா…?”
“ம்ஹூம்…” அவனுக்கும் புரிந்தது அவளை. இரவு உணவு சாப்பிடும்போது கூட அவனுடன் சகஜமாகதான் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஹேய் என்னடா…, பயப்படறயா…? ம்ம்…., இங்க பாரு…”
“என்னைப் பாருடா…”
அவனது கண்களை ஏறிட்டாள்.
“இது உனக்கும் எனக்குமான ப்ரஷியஸ் மொமன்ட். நோ டென்ஷன். உனக்கு பிடிக்காதது, உனக்கு விருப்பமில்லாதது எதுவும் இங்க நடக்காது சரியா… ஹனி” என அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.
“டிரஸ் சேஞ் பண்ணனுமா… ஹனி?” என்றான் அவளிடம்.
இதற்கு என்ன பதில் சொல்வது….? என அவளுக்கு தெரியவில்லை. குனிந்து தன்னைப் பார்த்தாள். செந்தாமரை வண்ணத்தில் சின்னதாக சரிகையிட்ட சாப்ட் சில்க் புடவை உடுத்தியிருந்தாள். இதுவரை புடவையுடன் எல்லாம் தூங்கியதில்லை. மாற்றினால் நன்றாகதான் இருக்கும் என அவள் நினைத்துகொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இவள் அவளையே குனிந்து பார்ப்பதும், தன்னை நிமிர்ந்து பார்ப்பதும் என அவளது செய்கையில் அவனுக்கு புன்னகை வந்தது. என்ன என்றான் புருவத்தை உயர்த்தி…?
அவ்வளவுதான் கேட்க வந்த வார்த்தை தொண்டையிலேயே சிக்கி கொண்டது. “ம்ஹூம்…” என தலையசைத்தாள்.
“ஆனால் எனக்கு உன்னை புடவையோடதான் பிடிக்குது. ஐ மீன் புடவையோடதான்…” என விஷமமாக சிரித்துக் கொண்டே கண்களை சிமிட்டினான் அவளைப் பார்த்து.
அவ்வளவுதான் பெண்ணுக்கு அவனது முகபாவைனையிலும், அவன் சொல்ல வந்ததிலும், காது மடல்கள் இரண்டும் சூடாகி, முகம் சிவந்துவிட்டது. நேர்கொண்டு அவனை பார்க்க முடியாமல் கூசி பார்வையை சட்டென தாழ்த்தி கொண்டாள்.
“ஹேய் ஹனி…? இங்க பாரு…, என்னைப் பாரேன். இன்னைக்கு ஓவரா வெட்கப்படற…, ஆனால் இதுகூட நல்லாதான் இருக்கு…” என அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தான்.
“இங்க பாரு”, என அவளது கையைப் பிடித்து அவளை நிமிர செய்தவன் “என் டிரஸ் உனக்கு பிடிச்சிருக்கா…?” என்றான் சந்தோஷமாக.
அவனும் பட்டு வேஷ்டி சட்டையில்தான் இருந்தான். அவனை அந்த காஸ்ட்யூமில் பார்த்ததும் அவளுக்கு தானாகவே முகம் பூத்தது.
“அப்ப அம்மணிக்கு இந்த டிரஸ் பிடிச்சிருக்கு ரைட்” என அவனுக்கும் புன்னகைதான் முகத்தில்.
“ஹ்ம்ம்…” என அவன் வேஷ்டி சட்டையின் மீதிருந்த பார்வையை மாற்றாமலே தலையசைத்தான்.
“பார்த்தனே காலையிலே மேடையில நீங்க என்னை இந்த டிரஸ்ல சைட் அடிச்சத. அதான் இப்பவும் அதே காஸ்ட்யூம்ல. உனக்காகதான்..” என்றான் மையலாக, அவளைப் பார்த்து கண் சிமிட்டியபடியே.
அவன் தன்னை கண்டுகொண்டதில் உண்டான நாணத்துடன் சேர்ந்து முகமும் பூவாய் மலர்ந்தது பெண்ணுக்கு.
அவளது கையைப் பிடித்து தான் அணிவித்த மோதிரத்தின் மீது முத்தம் பதித்தவன், அப்படியே அவளது கைகளை பிடித்து தனது கன்னங்களில் அழுத்திக் கொண்டு, அவளையே காதலுடன் கண்களால் தழுவிக் கொண்டிருந்தான்.
அச்சோ என்ன இப்படி பார்க்கிறாங்க என அவளுக்குதான் அவனது பார்வையில் லஜ்ஜை உண்டானது. மன்னவனின் பார்வை நகர்ந்த பாதையைப் பார்த்து தாள மாட்டாமல் இவளின் இமையை தாழ்த்திக் கொண்டாள் நாணத்தில்.
அவளின் தடுமாற்றத்தை புரிந்தவன் போல மெல்ல கைகளை நீட்டி அவளது கன்னத்தை தனது இரண்டு கைகளாலும் அள்ளி கொண்வடன், நெற்றி, கண்கள், கன்னம், மூக்கு என வரிசையாக இதழ்களால் தடம் பதிக்க தொடங்கினான்.
அவளின் கழுத்தில் வழிந்த மலர்களின் வாசத்தில் உன்மத்தம் பிடித்தவன், அதிலேயே முகம் புதைத்து “ஹனி” என பிதற்றிகொண்டே உருக ஆரம்பித்தான் முனகலாக.
அவன் சட்டையின் காலரை தன் இருகைகளாலும் இறுக பிடித்திருந்தவளுக்கும் வயிற்றின் அடியிலிருந்து பட்டாம்பூச்சி பறக்கும் இன்ப பரவசம்.
மெல்ல அவளது கழுத்திலிருந்து மேலேறியவன், காதுமடலை தன் முன்பற்களால் வலியில்லாமல் கடித்து, அவளது காதுகளில் “ஹனி” என உருகிக் கொண்டிருந்தான் ஹஸ்கி வாய்சில்.
பெண்ணின் இரத்த நாளங்கள் சூடேறி, தலை கிறுகிறுக்கும் இன்ப இராட்டினம் இதயத்துக்குள் கும்மாளமிட்டது.
இமைகளை இதழ்களாக்கி அவள் முகம் முழுவதும் உரசிக் கொண்டிருந்தவன், பெண்ணின் தாடையை பற்களால் கடித்து, அவள் தொண்டை குழியில் மூக்கை உரசி, பற்கள் பதித்து, இதழ் குவித்து என அவளுக்குள் மூழ்கி முத்தெடுக்க ஜாலம் செய்ய ஆரம்பித்திருந்தான்.
சேலை நதியின் ஓரத்தில், ஆடவனின் விரல்கள் மீட்டி நர்த்தனம் ஆடியதில் பெண்ணின் உடல் குழைந்து, உயிர் உருகி, அவனுக்கு இசைந்து நின்றதிலேயே அவளது மனம் புரிந்தாலும் அவள் வாய் மொழியாக அறிந்திட வேண்டி, மனைவியிடம் “ஹனி ஓகேவாடா…” என சம்மதம் கேட்டு நின்றான் மனதை கவர்ந்த மணாளன்.
“ஹ்ம்ம்…” என முனகி அவள் சம்மதம் கொடுத்த அடுத்த நொடி, அவளது இடையை வன்மையாக வளைத்து, தன்னோடு இறுக்கி தன் அதரங்களை அவள் உதடோடு புதைத்திருந்தான்.
நீண்ட நேரம் இவன் முற்றுகையிட்டதில் மூச்சுக்கு ஏங்கி தவித்தவளை விடுவித்து “ஒன்னுமில்லடா… ரிலாக்ஸ்” என ஆசுவாசப்படுத்தியவனுக்கு, அந்த சற்று நேர அவகாசத்தைகூட தளமாட்டாமல், தன் ஆளுகைக்குள் மொத்தமாக அவளை வாரி புதைத்து கொண்டான்.
ரிசப்ஷன், மறுவிருந்து என எல்லாம் முடிந்து அஸ்வத்தும் அருந்ததியும் சென்னைக் கிளம்பியிருந்தனர் காரில் தனியாக. ஆமாம். விசாலினி கூட அவ்வளவு சொல்லியிருந்தார்.
“ஏன்டா அவ்வளவு தூரம் காருல, நீ ஒன்டியா ட்ரைவ் பண்ணனும்? எதுக்கு ரிஸ்க்? எல்லோரும் சேர்ந்து ட்ரைன்லே போயிடலாம்” என்று.
அஸ்வத் மறுத்துவிட்டான். இவர்கள் சென்னைக்கு காரில் தனியாகப் பயணம் செய்ய, பெரியவர்கள் எல்லோரும் ட்ரைனில் வருவதாக ஏற்பாடு, இவர்களை தனி குடுத்தினம் வைக்க.
ராஜேந்திரன் சீர்வரிசைகளை வண்டியில் சென்னைக்கு அனுப்பிவிட்டு, அவரும் புவனாவும் மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பியிருந்தனர்.
பூஜா ரிஷப்ஷன் முடிந்த கையோடே சென்னைக்கு கிளம்பிவிட்டாள். அவள் கணவன் சைந்தவியுடன். விசாலினியை சென்னையில் பூஜா வந்து பிக்கப் செய்து கொள்வதாக ஏற்பாடு. அவருடன் சேர்ந்து அஸ்வத்தின் வீட்டிற்கு வருகிறேன் என சொல்லிவிட்டாள்.
இரவின் ஏகாந்த தனிமையில் மனைவியுடனான இந்த பயணத்தை அவ்வளவு ரசித்துக் கொண்டிருந்தான் அஸ்வத். காரில் இளையராஜா இன்னிசை பாடல் ஓடிக் கொண்டிருந்ததது
“காதலின் தீபமொன்று ஏற்றினாலே என் நெஞ்சில்” என இசைத்துக் கொண்டிருந்தது.
மனைவியைத் திரும்பிப் பார்த்தான் மையலுடன். அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். அவனுக்கு பிடித்த மாதிரியே புடவை கட்டி, தலையில் மல்லிகைப் பூச்சூடி, கல்யாணம் முடிந்த புது பெண்ணிற்கான பொலிவுடன் ஜொலித்தவளைப் காதலாக பார்த்து கொண்டிருந்தான்.
“என்னடா தூக்கம் வருதா…? தூக்கம் வந்தா சீட்டை சாய்ச்சிட்டு, நீ தூங்கு…?” என்றான் கனிவாக அவளைப் பார்த்து.
“ம்ஹூம். தூக்கம் வரலை. உங்களுக்கு வர மாதிரி இருந்தா சொல்லுங்க. ப்ளாஸ்க்ல காபி இருக்கு. ஊத்தி தரேன்” என்றாள்.
விசாலினி இவர்களுக்கு இரவுக்கான டிஃபன், ஸ்நாக்ஸ், பழங்கள், நைட் ட்ராவல் செய்வதால் மகனுக்கு தூக்கம் வராமல் இருப்பதற்காக பிளாஸ்கில் காபி என பேக் செய்து கொடுத்திருந்தார்.
“இப்ப வேணாம். வேணும்னா நான் கூட எடுத்துக்குவேன், நீ தூங்கு. டையர்டாயிருக்க…” என்றான்.
“தூக்கம் வந்தா தூங்கறேன். இப்ப வரல…” என அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். தனது தோளில் அவளை அணைவாக ஒரு கையால் பிடித்து, அவளது நெற்றியில் இதழ் பதித்து, தன் கன்னத்தை அவள் தலையில் வைத்து அழுத்திக்கொண்டான்.
இரவின் தனிமையில், இசையின் இனிமையில் கணவனின் தோள் சாய்ந்து இனிதே இந்தப் பயணம் போல் வாழ்க்கைப் பயணத்தையும் தொடங்கியிருந்தாள் அருந்ததி.
error: Content is protected !!