Skip to content
Post Views: 4,213
இங்கு அதிகம் இரவுக்கு எளிமையான சுடிதார் அல்லது புடவை தான். இன்று மங்கிய நீல நிற காட்டன் சுடித்தார், அதற்கு அடர் நீல நிற பாண்ட் ஒன்று அணிந்து கணவன் அருகே வந்து படுத்தாள்.
தேநீர் குடித்து வந்ததா தெரியவில்லை உறக்கம் அண்டவில்லை பெண்ணுக்கு. இவள் ஒவ்வொரு பக்கமாக திரும்பி படுக்க, அர்ஜுனின் முரட்டு கரம் மனைவியின் கழுத்தோடு பதமாக வந்து அணைத்தது.
இன்பமாக அதிர்ந்தவள், “நீங்க தூங்கலையா?” வாய் திறவாமல் இல்லை என்றான்.
“டயர்டா இருக்கேன்னு சொன்னிங்க”
Advertisement
“எனக்கு அப்டி சொன்ன நியாபகம் இல்லையே” என்றான் அவள் கழுத்தோடு அவள் வாசம் பிடித்து.
“காலைல வேகமா எந்திரிச்சிட்டீங்க, அதான் கேட்டேன்” என்றாள் அவனுள் அடங்கி இலக்கியாவும்.
“ஒரு நாள்க்கு எல்லாம் டல் ஆக மாட்டேன். பல தடவ மூணு நாள் கூட தொடர்ந்து முழிச்ச அனுபவம் இருக்கு. நீ தூங்கலையா?”
Advertisement
“ம்ம்ஹ்ம்” வாய் திறவாமல் அவள் முணுமுணுத்தது அவனது நெஞ்சம் வரை அதிர்ந்தது.
Advertisement
“வெளிய போகலாமா?” என்றான் அந்த அதிர்விலிருந்து வெளி வர பிடிக்காமல்.
“இப்ப தானேங்க போயிட்டு வந்தேன்”
“என் கூட போகலல இலக்கியா. வா” முடிவெடுத்தவன் போல் மெத்தையிலிருந்து இறங்கிய அர்ஜுன் அவளையும் பிடித்து இழுத்து வெளியே வந்தான். வாகனத்தை நோக்கி இலக்கியா நகர இவன் வாயிலை நோக்கி நடந்தான்.
Advertisement
“என்னங்க கார்” என்றாள் நினைவூட்ட.
“நடந்து போறதுக்கு எதுக்கு கார்?” கணவனை விசித்திரமாக பார்த்தவள் பார்வை எதார்த்தமாக பின்புறமிருந்த வருண் மேல் விழுந்தது.
“அங்க பாருங்க வருண் சார்” என்றாள் அர்ஜுனை அழைத்து.
அர்ஜுன் திரும்பி பார்க்க, தோட்டத்தின் பின்பக்கம் ஒரு இன்ச் வளர்ந்திருந்த புற்களை கால்களால் எத்தி எத்தி நடந்துக்கொண்டிருந்தான். காதில் பளிச்சென மின்னியது அவனது காதுகேள் பொறி (earphone).
“அவன் டெய்லி பேசிட்டு தான் இருக்கான். நீ வா” இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்திருக்க, இலக்கியாவிற்கு வருண் நினைவு தான்.
இந்த நேரம் பேசுவதும், அவன் பேசும் தோரணையும் நிச்சயம் நண்பர்களோ தெரிந்தவர்களோ இருக்க முடியாது. தொன்னூறு சதவீதம் அது பெண்ணாக தான் இருக்கும் என அவள் யூகம்.
அது யாராக இருக்கும் என்கிற அடுத்த கேள்விக்குள் அவள் குதிக்க விடை தெரியாமல் இந்த விஷயம் ஏற்கனவே தெரிந்த கணவனிடம் வந்தாள்.
“வருண் சார் யார்கிட்ட பேசிட்டு இருக்கார்?”
“என்னையே சார் சொல்லாத சொல்றேன், இதுல நீ அவனையும் சார் சொல்ற. உறவு வச்சு கூப்பிடு இலக்கியா. அவன் உன்னைவிட பெரியவனாவே இருந்தாலும் அவனோட அண்ணன் பொண்டாட்டி நீ.
பேர் சொல்ல சங்கடமா இருந்தா தாராளமா தம்பி சொல்லு. அவனுக்கும் அது புடிக்கும்”
“இல்ல திடீர்னு மாத்த வரல”
“மாத்திக்கோ இலக்கியா”
“கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேன். நீங்க பேச மாத்தாதீங்க, யார் அந்த பொண்ணு?”
அர்ஜுன், “எந்த பொண்ணு?”
“வருண் சார் பேசுறது”
“யாரா இருந்தா நமக்கு என்ன, அவனுக்கு சொல்லணும்னு தோணுறப்போ அவனே சொல்லுவான்”
“ஏன் இப்டி பேசுறீங்க, வீட்டுல தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்னு யோசிக்கிறீங்களா?”
“தாத்தா பாட்டியே லவ் மேரேஜ் தான். எல்லாருக்கும் அதே ஆப்ஷன் அவங்க குடுத்தாங்க. நாங்க யாருமே அதை யூஸ் பண்ணிக்கல”
“பின்ன எதுக்கு உங்க தம்பிகிட்ட அவரோட லவ் லைப் பத்தி பேச மாட்டிக்கிறீங்க?”
“அது அவன் பிரச்சனைடி. நான் என்ன செய்ய போறேன் தெரிஞ்சு?”
“இதான் சார் தப்பு. உறவு வச்சு, பேர் சொல்லி கூப்டுடா மட்டும் எங்களுக்கு நடுல இருக்க கேப் கம்மி ஆகிடாது. அதுக்கு பெரிய எக்ஸ்சாம்பில நீங்க. உங்க தம்பின்னு சொல்றிங்களே, அவர் பேசுறது ரொம்ப நாள் தெரியும் போல உங்களுக்கு.
அது பையனா பொண்ணா, பிரிண்ட்டா லவர்ரா எதுவும் தெரிஞ்சுக்கல. எனக்கும் உங்க தம்பிக்கும் என்ன உறவுக்கும் நடுல என்ன ஆழம் இருக்கோ, அதே ஆழம் தான் உங்களுக்கும் உங்க தம்பிக்கும்.
ரென்டுளையும் எந்த வித்தியாசமும் இல்ல” நடையின் வேகத்தை முற்றிலும் குறைத்திருந்தான் அர்ஜுன்.
“அது அவன் பெர்ஸ்னல் இலக்கியா”
“இருக்கட்டுமே, கூட பொறந்தவங்ககிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்க முடியாது தான். அதுக்காக ஆத்ர அவசரத்துக்கு கூட உங்க எண்ணம் அவங்களுக்கு வராம போக கூடாது சார்”
“என்ன சொல்ல வர்றிங்க மேடம்?”
“நீங்க நீங்களாவே இருங்க. ஹாஸ்பிடல், பிஸ்னஸ் தாண்டி குடும்பத்தையும் பாருங்க சொல்றேன். பாட்டிக்கு கூட மத பேரன்ங்க அவங்ககிட்ட வர்ற மாதிரி நீங்க நெருங்குறதுல இல்லனு வருத்தம் இருக்கு” என்றவள் கணவன் தன்னையே கூர்ந்து கவனிப்பது புரிந்து,
“நான் கண்டிப்பா உங்கள மாத்திக்க சொல்ல வரல. உங்க குடும்பத்துல இருந்து நீங்க உங்கள தனிமை படுத்திக்காதிங்கனு சொல்றேன்”
“ரவா தோசை சாப்பிடலாமா?” அவள் பேசியவற்றை முற்றிலும் புறக்கணித்து தனக்கு தோன்றியதை கேள்வியாக வைத்தான் அர்ஜுன்.
அவனையும் அவர்கள் வந்து நின்ற கடையையும் பார்த்தவளுக்கு மீண்டும் தன்னையே நம்ப முடியாத நிலை தான்.
காரணம் அவர்கள் வந்திருப்பது ஒரு சிறிய தள்ளுவண்டி கடை. இரவு நேரம் பனிரெண்டை தாண்டியிருந்தும் கூட்டம் சற்று இருக்க தான் செய்தது.
ஆங்காங்கு சிலர் அமர்ந்தும் நின்றும் உண்ண, அங்கு சுட சுட தயாராகும் உணவின் தயாரிப்பை பார்க்கவே அந்த தள்ளுவண்டியை சுற்றி பத்து மக்கள் நின்றனர்.
“இங்க ரவா தோசை ரொம்ப பேமஸ் சாப்பிடுறியா?” மீண்டும் கேட்டான் அவளின் ஆராயும் பார்வையிலுருந்து வெளி வர.
“இல்ல எனக்கு பசிக்கல. நீங்க சாப்பிடுங்க” சரி என்றவன் அவளை ஒரு நாற்காலியில் அமர வைத்து அந்த கூட்டத்தோடு ஐக்கியமாகிவிட்டான்.
மீண்டும் பத்து நிமிடங்களுக்கு பிறகு அவன் வந்த பொழுது இரண்டு கையிலும் இரண்டு வகை உணவுகள். ஒன்றில் அவன் கேட்ட ரவா தோசை, மற்றொன்றில் சாம்பாரில் மிதந்த பத்து குட்டி இட்லிகள்.
இட்லி இருந்த சிறிய கிண்ணத்தை அவள் கையில் வைத்தான்.
“சாப்பிடு. பெருசா வயிர நிறைந்த ஐட்டம் இல்ல. உனக்காக ரெண்டு ஸ்பூன் நெய் ஊத்தி வாங்கிருக்கேன்” என்றான் இறுதி வாக்கியத்தை ரகசியம் போல்.
ஆசையாக அவள் உண்ண காத்திருந்தவன் தான் உண்ணாது மனைவியை பார்க்க, மறுக்க தோன்றவில்லை பெண்ணுக்கு. அவனுக்காக பாதியாவது சாப்பிட முடிவெடுத்தாள்.
இரண்டு மினி இட்லியை உள்ளே இறங்கியதுமே சுருக்கென்ன நாவெல்லாம் எரிச்சல். கணவனை பார்த்தே தன்னுடைய உணவில் கவனம் வைகாத்திருந்தவள் செயலுக்கு கிடைத்த தண்டனை போல் அந்த பச்சைமிளகாய் கடி.
தண்ணீர் அங்கு தள்ளுவண்டியின் அருகில் இருந்தது. சுற்றிலும் ஆண்கள் கூட்டமே அதிகம் இருக்க சற்று தயக்கம், இருந்தும் காரம் அவளை நகர சொல்ல, எழுந்தவளிடம், “எங்க போற?” என்றான் அர்ஜுன் கேள்வியாக.
“தண்ணி எடுக்க போறேன், பச்சை மிளகாய் கடிச்சிட்டேன் போல ஸ்ஸ்” என்றாள் சத்தத்துடன்.
திரும்பி பார்த்தவன் அவளை அமர வைத்தான். “என்னங்க” என்றாள் சிணுங்களாக, காரமாக இருந்ததே.
“இருடி” என்றவன் சாம்பார் படாத ரவா தோசையை பிய்த்து வேகமாக அவளுக்கு ஊட்டிவிட்டு எழுந்தான், “நீ இரு நான் தண்ணி எடுத்துட்டு வர்றேன்”
இவன் சென்று வரும் நேரம் வரை மனைவி காரத்தை பொறுக்க மாட்டாள் என உணர்ந்து அர்ஜுன் செய்த திடீர் செயலில் இன்ப மழையில் நனைந்து நிலவாக தேய்ந்து மலர்ந்தாள் பெண் பாவை.
காரம் மறந்து, விந்தைகள் செய்யும் அவன் அன்பு விதைகளை தூவி காதலெனும் காட்டை அடர்த்தியாக படர செய்திருந்தான்.
இயல்பிலே அவனின் மனமாய் மணக்கும் அவள் உள்ளது பூங்காவனத்திற்கு வெயிலும் மழையும் ஒரு சேர கிடைக்கும் நிலை தான்.
தண்ணீரை வந்து கொடுத்து அவள் அருந்திய பிறகு, “இங்க இருக்குற சாம்பார் ஸ்பெஷல் இந்த பச்சை மிளகாய் தாளிப்பு தான். எதை உன்கிட்ட சொல்ல கூட்டிட்டு வந்தேனோ அது நான் சொல்லாமலே நீ தெரிஞ்சுக்குட்ட”
இயல்பாய் அவள் உண்டுக்கொண்டிருந்த இட்லியை வாங்கி ருசி பார்த்தான்.
நாவிற்க்கும் வயிற்றுக்கும் வஞ்சகம் வைக்காவிடில் இதயம் சம நிலையில், சித்தம் நல் வழியில் செல்லுமாம். அப்படி தான் இருந்தது அவன் செயலும்.
அது உண்மையாகவே உணவின் மாயையா, பெண்ணின் மாய சுடாத கதிர்களா தெரியவில்லை. அவன் முகமே பிரகாசித்தது.
“நான் ஸ்கூல் படிக்கிற வர இங்க அடிக்கடி விஜயம் பண்ணுவேன். ரொம்ப வருசமா இருக்காங்க. மிட் நைட் ஸ்டார்ட் பண்ணி, விடிய விடிய அஞ்சு மணி வர இருக்கும். பிளஸ் டூ சமயத்துல எப்போ தூங்குவேன் எதுவும் தெரியாது. வீட்டுல பாட்டியையும் எழுப்ப மனசு வராம இங்க வந்துடுவேன்” என்றான் அவனே தன்னுடைய ஒரு குறுகிய அழகிய நிகழ்வை.
இவன் பேச மாட்டானா என எண்ணிய ஏக்கத்திற்கெல்லாம் பலனாக அர்ஜுன் பேசுவதை கேட்கவே பிறந்தவள் போல் இமை சிமிட்டது பெண்ணவள் செவிமடுத்தாள்.
இறுதியாக அந்த மினி இட்லி கூட அவனுக்காக வாங்கியது போல் அவனே உண்டு முடித்திருந்தான்.
மீண்டும் வீட்டை நோக்கி நடை பயணம், சற்று காற்று சில்லென வீச சில்லிட்ட கரங்களை தேய்த்து சூடு பிறப்பிக்க முயன்றாள்.
அது வரை வரும் வழியில் அவன் முன்பு சந்தித்த சில அனுபவங்களை பகிர்ந்தவன் அவள் நடுக்கத்தை புரிந்து கரத்தை பிடித்து தன்னுடைய சூட்டை கடத்தினான்.
இரவின் மடியில் மணம் நிறைந்த உறவின் கை பிடித்து நிலவோடு உலா செல்வது கூட விவரிக்க முடியாத சுகமாக தான் இருந்தது இருவருக்கும்.
இன்னும் நடுங்க தான் செய்தாள் பெண், “என்னால இங்க கைக்கு மட்டும் தான் சூட்டை குடுக்க முடியும்” உள் அர்த்தத்தோடு அவன் பேச குப்பென முகம் சிவந்தது இலக்கியாவுக்கு.
“என்னங்க…” சிணுங்கியவள் கண் சுருக்கத்தில் மணம் தடுமாறியவன் அப்படியே நின்று தன்னுடைய கைபேசியை எடுத்தான்.
“நம்ம இது வரைக்கும் போட்டோ எடுத்ததே இல்லல?”
வெளிச்சத்தின் தாக்கம் எந்த பக்கம் அதிகம் உள்ளதென அர்ஜுன் ஆராய, “ஐயோ இந்த டிரஸ்லயா, நாளைக்கு வேற நல்ல டிரஸ் போட்டு எடுக்கலாம்” என்றாள் வேகமாக.
“ம்ம்ஹ்ம் எனக்கு இப்போவே எடுக்கணும். இந்த மொமெண்ட் வேணும்” என்றவன் சற்று இடைவெளி விட்டு நின்ற மனைவி இடை வளைத்து அருகே பிடித்து வைத்தான்.
அவனது இந்த நெருக்கத்தில் இவள் விழி விரித்து நிற்க, திரும்பி மனைவியை பார்த்தவன், “இலக்கியா” அழைத்தான்.
தன்னை பார்த்தவளிடம், “மந்திரகாரி… லைப் லாங் ஒண்ணா ட்ராவல் பண்ணலாமா?”
அவனின் நிம்மதி அவளிடம் அனுமதி கேட்க விவரிக்க முடியாத சூழலில் சிக்கி தவித்தவள் பெருகிய மகிழ்வோடு அவனை பார்த்து சிரிப்பை காட்ட, அர்ஜுன் பார்வை திரையிலும், மனைவி பார்வை கணவனிலும் அழகாய் சேமிக்கப்பட்டது.
இருவரின் முதல் சுயமி.
முதல் புகைப்படம் இருவரின் மணம் நிறைந்து மகிழ்வோடு எடுக்கப்பட்டது, அத்தனை அழகாய் வந்திருந்தது.
இலக்கியாவிற்கு இரட்டிப்பு சந்தோசமாய் மறுநாள் மருத்துவனின் கைபேசியில் அவர்கள் புகைப்படம் பிரதானமாக முன்திரையில் ஒளிர்ந்தது.
error: Content is protected !!