Varam Vaangi Vanthaval Naan 16
வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 16
Advertisement
தர்ஷினி ஒரு வேகத்தில் பதட்டத்தில் வீட்டை விட்டு கிளம்பியவளுக்கு அந்த இரண்டு மணி வெயிலின் சூட்டை தாங்கமுடியவில்லை.. வீட்டிற்குள்ளேயே செருப்பு அணிந்து பழகியிருந்தவள் அந்த சூடு தாங்க முடியாமல் வேகமாக ஓடி அங்கிருந்த ஒரு மரநிழலில் நின்று சற்று ஆசுவாசமடைந்தாள்.. அதற்குள் அந்த தார் ரோட்டின் சூடு தாங்க முடியாமல் அந்த பட்டுப்போன்ற காலில் லேசான கொப்பளங்கள் வந்திருந்தது..
இன்னும் ஒரு தெரு தாண்ட வேண்டும் மீண்டும் மீண்டும் சுந்தருக்கு முயற்சி செய்ய அதை எடுக்கப்படாமலே இருந்தது.. அடுத்து மீண்டும் தன் ஓட்டத்தை துவங்கியவளை அப்போதுதான் அந்த காரில் இருந்தவன் பார்த்தான்.. கண்ணை கசக்கி அது தர்ஷினிதானா என்று பார்க்க அவனால் தன் அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை..
Advertisement
Advertisement
இதுவரை அவனுடைய ஆட்கள் மட்டுமே தர்ஷினி தனியாக மாட்டும்போது தூக்கலாம் என காத்திருக்க இன்று அப்படி ஒரு வாய்ப்பு அவனே எதிர்பார்க்காத போது..!! தெருவை ஒரு பார்வை பார்க்க தூரத்தில் ஒரு வண்டி வருவது மட்டும்தான் அதற்குள் இவளை காரில் ஏற்றிவிடலாம்.. வேகமாக காரை அவள் குறுக்காக நிறுத்த ஒரு நிமிடம் தர்ஷினி பயந்துவிட்டாள்..
காரை பார்க்கவும் பளிச்சென அவளுக்கு ஒரு ஐடியா… இந்த கார்காரங்ககிட்டயே ஹெல்ப் கேட்டா என்ன.. தர்ஷினி வேகமாக கண்ணாடியை தட்டவும் உள்ளிருந்தவன் ஒருநிமிடம் திகைத்துவிட்டான்.. நாம இவள கடத்தலாம்னு நினைச்சா இவ எதுக்கு தட்றா.. ஒருவேளை…??? வேகமாக தன் கூலிங்கிளாசை எடுத்துப்போட்டு பையிலிருந்த தாடியை எடுத்து ஒட்ட வைத்து மெதுவாக கண்ணாடியை இறக்க..
Advertisement
அவனை பார்த்தவள் ஒரு நிமிடம் திகைத்து… நீ…?? எங்கோ பார்த்த நியாபகம்..நீங்க?? ஆரம்பித்தவள்..
“தர்ஷினி….!!!” என்றபடி காரைதாண்டிக் கொண்டு வேகமாக ஓட்டி வந்த வண்டியை பிரேக் இட்டு நிறுத்திய கணவனை பார்க்கவும்… அவனை மறந்து சுந்தரிடம் வேகமாக ஓடிவந்தாள்..
“லட்டுமா இங்க என்னடா பண்ற..? அவளை பார்வையிட்டவன் அவள் சூடு தாங்க மாட்டாமல் காலை மாற்றி மாற்றி நிற்கவும் “எங்கடா போற செருப்புக்கூட போடாம..??” அவள் இடுப்பில் கைகொடுத்து அப்படியே அவன் முன்னால் வண்டியில் ஏற்றியவன் அவள் பாதத்தை தன் கைகளால் அழுத்திவிட்டு அந்த சூட்டை தன் கைகளில் வாங்குவது போல கைவைத்து அழுத்தினான்..
சட்டென அவளுக்கு அழுகை…அவன் மார்பில் குத்தியவள், “ஸ்டுப்பிட்.. ஏன் மேன் நீ போனே எடுக்கல.. அண்ணிக்கு அங்க பெயின் வந்திருச்சு.. ரொம்ப அழறாங்க… சீக்கிரமா ஹாஸ்பிட்டலுக்கு போகனும்.. பாஸ்ட் பாஸ்ட்..” அவனை அவசரப்படுத்த வேகமாக வண்டியை திருப்பியவன் ..
[the_ad id=”6605″]
“ஏங்க ஏன் காரை வழியில நிறுத்தி வைச்சிருக்கிங்க.. எடுங்க..?”
அவன் அந்த கார்காரனை அதட்ட சுந்தர் வரவுமே கண்ணாடியை ஏற்றி விட்டிருந்தவனுக்கு கைக்கு கிடைத்த வாய்ப்பு நழுவி போவதில் அப்படி ஒரு குரோதம்..வெறி..
அதிலும் தர்ஷினியை பின்னால்கூட ஏற்றாமல் அவன் கைகளுக்குள் இருவரும் அவ்வளவு நெருக்கமாக.. பார்க்க பார்க்க அவனுக்கு தாங்கவில்லை.. இவன்தான் இவ புருசனா..?? அவன் முறைப்பது கூட தெரியாமல் வேகமாக வண்டியை ஓட்டியவன் அடுத்த பத்து நிமிடத்தில் சௌந்தரத்தை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்க அடுத்த இரு நிமிடங்களிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்திருந்தது..
சுந்தருக்கும் தர்ஷினிக்கும் அப்படி ஒரு டென்ஷன்.. சௌந்தரத்தின் கணவனுக்கும் அவர் குடும்பத்தினருக்கு தகவல் சொன்னவனுக்கு குழந்தை நல்ல முறையில் பிறந்துவிட்டது என தெரியவும்தான் மூச்சே இயல்பானது.. அதற்குள் தகவல் தெரிந்து தெய்வானை அடித்துபிடித்து ஓடி வந்திருக்க..
பல்லை கடித்தவன் “ஏத்தா எங்க போனிங்க..?”
“ஆத்தி காலையிலகூட கேட்டேன்ப்பு.. எந்த வலியும் இல்லைன்னு சொன்னா..அதான் இன்னும் பத்துநாளு டயம் இருக்கேன்னு பக்கத்திலதான்யா ஆட்டை மேய்ச்சிட்டு இருந்தேன்..”
“ப்பச் போனவங்க போனயும் எடுத்துட்டு போகல..எங்க போறிங்கன்னு அவங்ககிட்ட சொல்லிட்டும் போகல.. நல்ல வேளை கடவுள் புண்ணியத்தில நல்லபடியா குழந்தை பிறந்திருச்சு..இல்லைனா என்னாயிருக்கும்.. போங்க போய் தங்கச்சிய பாருங்க..”
சாக்லேட் வாங்கி வந்து ஹாஸ்பிட்டலில் அனைவருக்கும் கொடுக்க தகவல் அறிந்து ராமையாவும் ஓடிவந்திருந்தார்..
இருவரும் அங்கேயே இரவு வரை இருந்து தேவையான உதவிகளை செய்து கொண்டிருக்க தெய்வானை வீட்டிற்கு சென்று சௌந்தரத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வரவும் ராமையா மகனையும் மருமகளையும் வீட்டிற்கு அனுப்பிவைத்தார்..
சுந்தரும் தர்ஷினியும் வீட்டிற்கு வர மணி எட்டிருக்கும்.. தந்தை அங்கேயே துணைக்கு தங்கி கொள்வதாக சொல்ல இருவருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு கிளம்பியிருந்தார்கள்.. மெல்ல அவள் கையை பிடித்து அழைத்து வந்தவன் நேரடியாக கிணற்றடிக்கு அழைத்து சென்று அவன் முதலில் குளித்து பின் அவளுக்கு தேவையான இரவு உடைகளை எடுத்து கொடுத்து அவளை குளிக்க அனுப்பினான்..
சுந்தரிக்கும் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வந்திருந்தான்.. அவள் சாப்பிட்டு படுக்க செல்ல இவன் கதவை அடைத்தவன் தர்ஷினி குளித்து வரவுமே அவளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் கட்டிக் கொண்டிருக்கும் அந்த வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாதிவரை சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கும் அந்த கட்டிடத்திற்குள் ஒரு சாக்கை விரித்து தன் மடியில் அவளை அமர வைத்தான்.. மெதுவாக அவள் ஈரத்தலையை தன் கைகளால் கோதிவிட இருவரும் குளிர்ச்சியாக வீசிய காற்றை அனுபவித்தபடி ஒருவர் அண்மையை ஒருவர் ரசித்தபடி அமர்ந்திருந்தனர்..
அவள் பாதத்தை தடவி விட்டவன்.. அதில் கொப்பளங்களை காணவும் “என்னடி இப்படி பண்ணி வைச்சிருக்க செருப்பு போட்டு போயிருக்கலாம்ல.. வலிக்கிதா..??” ஏற்கனவே ஹாஸ்பிட்டலில் அவள் காலை காட்டி ஆயின்மென்ட் வாங்கியிருந்தான்..
“இப்ப பரவாயில்ல மாம்ஸ்..” ஏனோ அடுத்து அவளிடம் பேச்சில்லை.. சௌந்தரம் பட்ட பாட்டை பார்த்து கொஞ்சம் பயந்துதான் போயிருந்தாள்.. அந்த நேரம் சுந்தர் வரவில்லை என்றால் நிலைமை என்னாயிருக்கும் ..முன்புறம் திரும்பி அவன் வெற்று மார்பில் முகம் புதைத்துக் கொள்ள அவள் முதுகை தடவிக் கொடுத்தவன் ..
“என்னாச்சு பேபி..??”
“ஒரு உயிர் இந்த உலகத்துக்கு வர ஒரு லேடி எவ்வளவு பெயின் அனுபவிக்க வேண்டியிருக்கு.. ஆனா அதோட மதிப்பு தெரியாம என் பேம்லிய ஒரு நிமிசத்துல சூட் பண்ண அவங்களுக்கு எப்படி மனசு வந்திச்சு மாம்ஸ்..”
சுந்தருக்கு அவள் மனம் புரிந்தது.. அவனுமே தங்கையின் வேதனையில் பயந்துதான் போயிருந்தான்.. இருவருமே சற்று அமைதியாய் இருக்க தன் மார்பில் தர்ஷினியின் கண்ணீர் துளிகள் சூடாக இறங்கவும் அவள் முகத்தை தூக்கி பார்த்தவனுக்கு தாங்கமுடியவில்லை.. இவளுக்கு இந்த சோகம் எப்பத்தான் தீரும்..
அவள் கண்ணீரை துடைத்து அவளை தட்டிக் கொடுத்தபடி சற்று நேரம் அப்படியே இருந்தவனுள் மெல்ல மெல்ல அந்த சூழல், இருவரின் தனிமை, இந்த நெருக்கும் வேறொரு சூழலுக்கு கொண்டுச் செல்ல தூண்டியது.. அவள் நெற்றியில் முத்தமிட்டு.. மெல்ல மெல்ல கண்கள், கன்னம் என வந்தவன் அவள் இதழை தன் கைவிரலால் வருட அவன் கைமேல் தன் கைகளை வைத்து தடுத்தவள்..
[the_ad id=”6605″]
“நீங்க ஏன் போனே எடுக்கல..? நான் எத்தன தரம் டிரை பண்ணினேன் தெரியுமா.. ??”
“ம்ம் நான் இப்போதான் டிரைப்பண்ணப்போனேன்.. அதுக்குள்ள தடுத்தா எப்படி அவள் புரியாமல் பார்க்க.. ப்ளிஸ் பேபி..?” மெல்ல அவள் காதில் கிசுகிசுத்தவன் அதில் தன் முத்திரையை அழுத்தமாக பதித்து சட்டென அவள் இதழில் தன் இதழைப் புதைத்திருந்தான்..
மென்மையாக அவள் இதழை சுவைத்தவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மறந்து அவள் இடுப்பில் கைகொடுத்து இன்னும் இன்னும் அவளை நெருக்கி அணைக்க தர்ஷினியும் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தபடி நெருங்க இருவருமே இந்த உலகில் இல்லை.. அவனுக்கு அவளை விட மனதில்லை இன்னும் இன்னுமென எத்தனை முத்தமிட்டானோ தன் குளோப்ஜாமூனை ரசித்து ரசித்து உண்டான்.. அவளுக்குமே சுந்தரின் இந்த அண்மை தேவையாய் இருந்தது..
“ப்பா…லட்டு என்னால முடியலடி.. என்னடி இவ்ளோ ஸ்வீட்டா இருக்க..??”
அவனிடமிருந்து விலகி மூச்சை இழுத்து விட்டவள்..”ம்ம்ம் இப்போதான் ஜீரால குளிச்சேன் மேன் அதான் ஸ்வீட்…!!”
“அச்சோ.. நான் உன்னோட லிப்ஸ் மட்டும்தான் இவ்ளோ ஸ்வீட்ன்னு நினைச்சேன் ஜீரால குளிச்சா உடம்பே ஸ்வீட்டால இருக்கும் டெஸ்ட் பண்ணிருவோமா..??” அப்படியே அவள் கழுத்தில் தன் முகத்தை புதைக்க அவன் வெப்ப மூச்சு அவளுள் ஏதேதோ மாற்றத்தை ஏற்படுத்தியது..
அவன் மடியில் இன்னும் வாகாக அமர.. “ஏன்டா லட்டு நமக்கும் பேபி வந்தா நல்லாயிருக்கும்ல..??”
‘டேய் சோனமுத்தாஆஆஆ ஆரம்பிச்சிட்டியா உன் வேலையை.. கொஞ்சம் கேப் கிடைச்சா போதுமே.. உன் ரொமான்ஸ ஆரம்பிச்சிருவியே..’
‘மரியாதையா ஓடிப்போயிரு.. நான் இப்ப என் பேபிய கொஞ்சுற மூட்ல இருக்கேன் சொல்லிட்டேன்.’
அவன் கன்னத்தில் தன் முத்தத்தை பதித்து “ம்ம்ம்… நல்லாயிருக்கும்.. அண்ணியோட பேபியும் ரொம்ப ஸ்வீட்ல.. குட்டி குட்டி கைகால் எல்லாம் செமயா இருக்குதானே.. நமக்கும் அதுமாதிரிதான பிறக்கும்..குட்டியா ரோஸ் கலர்ல குட்டி கண்ணோட சூப்பரா இருக்கும்தானே.. அவள் தனக்கு குழந்தை பிறந்தால் எப்படியிருக்கும் என்ற கனவுலகத்திற்குள் சென்றுவிட்டாள்..
எதையோ யோசித்து சட்டென அவன் தலையில் முட்டியவள் நீ ஏன் மேன் போன எடுக்காம அவ்ளோ டென்ஷன் பண்ணின.. எனக்கும் பாப்பா வந்தா இப்படித்தான் பண்ணுவியா.. போ மேன் போ..ஸ்டுப்பிட், இடியட்.. எனக்கு எவ்வளவு அழுகையா வந்திச்சு தெரியுமா.. என்ன செய்றதுன்னே தெரியல..??” அதை நினைத்தாலே இன்னும் தர்ஷினிக்கு பயம்தான்..
அவள் கன்னத்தை பிடித்தவனோ “அச்சோ ஸாரிடா இன்னைக்கு தெரியாம போன சைலண்ட்ல போட்டுட்டேன்.. இனி எப்பவும் அந்த தப்ப மட்டும் செய்யவே மாட்டேன்.. பாப்பா வேணாம்னு சொல்றதுக்கு இதெல்லாம் ஒரு ரீசனா கொண்டு வராதடி.. நானும் எவ்வளவு நாள்தான் பொண்டாட்டிய பக்கத்தில வைச்சுக்கிட்டு தொடாம பார்த்துக்கிட்டே நல்லவன் மாதிரி நடிக்கிறது.. லட்டுப்பொண்ணு, தங்கப்பொண்ணு, செல்லப்பொண்ணு மாமன பார்க்கையில பாவமா தெரியல..”
அவன் மீசையை பிடித்து இழுத்தவள்..”ஹாஹாஹா இப்படி பேசி பேசியேதான் மேன் எல்லாரையும் மயக்கிற..!!”
“எல்லாரையும் மயக்கிறனோ இல்லையோ பொண்டாட்டிய மயக்கினா போதும்டி..”
“ம்ம்ம் மயக்கிட்ட மயக்கிட்ட..!!” அவள் உதட்டை சுழிக்க..
மீண்டும் அவள் இதழில் முத்தமிட்டவனோ “நாளைக்கு சாயங்காலம் கிளம்பியிரு பேபி.. ரெண்டுபேரும் வெளியில போய்ட்டு வருவோம்..”
“அதவிடு மேன் நீ ஏன் போன எடுக்கல..??”
இன்று அரிசி மில்லுக்கு அந்த பெரிய நிறுவனத்திடமிருந்து செக் கொண்டு வந்திருந்தவர்கள் அடுத்து ஆர்டரையும் பற்றி பேச இடையில் இருமுறை கம்பெனி கால்வரவும் போனை சைலண்டில் போட்டிருந்தான்.. அவர்கள் கிளம்பவே மணி 12 இருக்கும் செக்கை கையில் வாங்கியவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. அப்போதே தர்ஷினியை நகைக்கடைக்கு அழைத்துச் சென்று தாலிச் செயின் வாங்கி கொடுக்க வேண்டும் என நினைத்தவனுக்கு அடுத்தடுத்து வேலைகள் வரிசைகட்டி நிற்க அவன் போனையே மறந்துவிட்டான்..
மணி ஒன்றரை ஆகவும் வீட்டிற்கு கிளம்பலாம் என முடிவு செய்தவனுக்கு மனம் சிறகில்லாமல் வானில் பறந்தது.. அந்த செக்கை எடுத்து முத்தமிட அன்று தன் தாய் பேசியது நினைவுக்கு வந்து நாம முன்னாடியே தர்ஷினிய விரும்ப ஆரம்பிச்சிட்டமோ.. சைட் மட்டும்தான் அடிச்சோம்னு நினைச்சா நம்ம லட்டுமா நம்ம மனசுக்குள்ளேதான் இருந்திருக்கா..
லவ் யூடி பேபி சமத்து சக்கரைகட்டி.. மனைவியை நினைத்துப் பார்த்தவனுக்குள் காதல் பெருக.. வண்டியை உற்சாகமாய் கிளப்பினான்.. அந்த சந்திற்குள் திரும்பும் போதே தர்ஷினியை கவனித்துவிட்டான்.. தன் மனைவி போல தெரிய வண்டியை வேகப்படுத்தியவன் அவள் குறுக்காக கார் வரவும் ஒருநிமிடம் அதிர்ந்துவிட்டான்.. பாலாவோ இருக்குமோ இன்னும் வண்டியை வேகப்படுத்தி வர அந்த கார் அவர்களது இல்லை..
[the_ad id=”6605″]
ஏதோ ஒரு வெளிநாட்டு கார்போல இருந்தது.. “ஏன் பேபி அந்த கார்ல இருந்தவங்க என்ன கேட்டாங்க..?”
“யார் மாம்ஸ்..”
“அதான்டா மதியம் பார்த்தோமே.. ?”
“நானே சொல்லனும்னு நினைச்சேன் மாம்ஸ்.. நான் ஹெல்ப் கேட்கத்தான் அவங்க கிளாஸ தட்டினேன்.. ஆனா உள்ள இருந்தவரை பார்த்திருக்கேன்..”
“யாருடா அது பாலாவா..?”
“ இல்ல மாம்ஸ்.. இவன் தாடியெல்லாம் வைச்சிருக்கான்.. நான் ஒன்டைம் அவங்க கூட பேசியிருக்கேன்.. பட் சரியா நியாபகம் வரமாட்டேங்கிது..?”
சுந்தரும் யாராயிருக்கும் காரை பார்த்தா நம்ம ஊர் ஆளுக மாதிரி இல்ல.. இவ பேசியிருக்கானா.. அவனுக்கும் குழப்பமாக இருக்க, சௌந்தரம் கணவரிடமிருந்து போன்.. மகன் பிறந்த மகிழ்வில் அவர் சந்தோசமாக பேச ஆரம்பிக்க இவனும் அவரோடு பேச ஆரம்பித்து அடுத்து அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொருவராக பேச ஆரம்பிக்க அவர்களுக்கு பதில் பேச ஆரம்பித்தான்..
கைகள் தர்ஷினியை வருடியபடி, அவள் தலையை கோதியபடி இருக்க அந்த சுகத்தில் அவளுக்கு தூக்கமே வந்திருந்தது.. அவன் கையை அவள் கழுத்துக்கு கொடுத்தபடி மெல்ல உறக்கத்திற்கு செல்ல இவன் பேசி முடிக்கும்போது தர்ஷினிக்கு நல்ல உறக்கம்..
‘அடிப்பாவி இப்பத்தான் நம்மளோட வாழ ஒருவழியா இவள சம்மதிக்க வைச்சேன்.. இவ இப்படி தூங்குறாளே..’ அவள் நெற்றியில் முத்தமிட்டவனுக்குள் குற்ற உணர்ச்சி.. தான் வர இன்று சற்று நேரம் கடந்திருந்தால்கூட தங்கைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கிமோ..? மனம் தாளவில்லை.. ஒருவேளை தர்ஷினி தனியா வெளியே வரும்போது எதாவது நடந்திருந்தா என்ன பண்ணியிருப்போம்.. இதுவரை தான் பொறுப்பானவன் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு முதல் அடி.. முதல்ல அந்த காரை பத்தி விசாரிக்கனும்.. அவங்க சாதாரணமா குறுக்க வந்தாங்களா.. இல்ல தர்ஷினிய பார்க்கவுமா.. இவனுக்குள் ஏதேதோ குழப்பம்..
அதிலும் நேற்று காலை தர்ஷினி தந்தையின் பார்ட்னர் போன் செய்து பேசியிருந்தார்.. திருமணம் நடந்ததற்கு வாழ்த்து சொல்லி இன்னும் பத்து பதினைந்து நாட்களில் அங்கு வரப்போவதாகவும் வந்தால் கண்டிப்பாக தங்களை இருவரையும் பார்க்கவேண்டும் சில முக்கியமான விசயங்கள் பேச வேண்டும் என்று சொல்ல அவரது பேச்சிலிருந்து அவர் மேல் ஒரு நல்ல மதிப்புதான் வந்த்தே தவிர அவர் மேல் சந்தேகப்பட தோன்றவில்லை..
அவனிடம பேசி முடித்து தர்ஷினியிடம் பேச ஆரம்பிக்க அவரிடம் பேசி அவர் மனைவியிடம் பேச தர்ஷினி அவ்வளவு சந்தோசமாக வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாள்.. அவள் இங்கிருக்கும் லவ் பேர்ட்ஸ், கோழி, ஆடு என அனைத்தையும் இவன் மடியில் அமர்ந்தபடி கதை கதையாய் சொல்ல இவன் அவள் பேசும் போது அசையும் இதழை மின்னும் கண்களை தன்னை வருடும் கைகளை வரிவடிவமாய் தெரியும் அவள் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தான்..
தன் மடியில் ஆழந்த உறக்கத்தில் இருந்த மனைவியை தூக்கியவன் அவளை படுக்க வைத்து அவள் பாதத்தில் மருந்தை தடவி விட்டான்..
அடுத்த நாள் சௌந்தரத்தின் கணவர் குடும்பத்தில் இருந்து ஆள்மாற்றி ஆள் வந்து பார்த்து செல்ல, நாயகியும் அவள் கணவரும் வந்து குழந்தையை பார்த்துவிட்டு சென்றார்கள்.. சௌந்தரத்தை இன்னும் இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டலில் இருக்கச் சொல்லியிருக்க தர்ஷினிக்கு அப்பத்தாவை மட்டும் துணைக்கு வைத்துவிட்டு தெய்வானையும் ராமையாவும் ஹாஸ்பிட்டலிலே தங்கிக் கொண்டார்கள்.. சுந்தரி பள்ளிக்கு செல்ல சுந்தர் ஹாஸ்பிட்டல், வயல், மில் என பம்பரமாக சுழன்றான்..
தர்ஷினியோடு நகைக்கடைக்கு செல்லலாம் என்றால் அதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை.. அன்று காலை அவன் வெளியில் கிளம்பியிறுக்க அந்த ஊர் பிரசிடென்டின் தாயார் இறந்துவிட்டதாக தகவல் வரவும் அப்பத்தா அப்போதே கிளம்பிவிட்டார்.. இருவரும் நெருங்கிய உறவு.. அப்பத்தாவிற்கு முக்கிய பங்காளி வீடு அது..
ஊரின் பெருங்கொண்ட சாவு வயது 100 ஒட்டி இருக்கும்..ஊரே அங்கே கூட அன்று வேலைக்கு வந்தவர்கள் பாதியிலேயே வேலையை நிறுத்திவிட்டு அங்கு சென்றுவிட்டார்கள்..
[the_ad id=”6605″]
சுந்தருக்கு போன் செய்து தகவல் சொன்ன ராமையா தான் அங்கு போவதாக சொல்ல சுந்தர் தர்ஷினிக்கு போன் செய்தவன் வீட்டை பூட்டியே வைக்கச் சொல்லி, யார் கதவை தட்டினாலும் வெளியாட்களாக இருந்தால் திறக்க வேண்டாம் என மீண்டும் மீண்டும் வற்புறுத்தி,
“போனை கையிலே வைச்சிக்கோ நான் இன்னும் அரைமணி நேரத்தில வந்திருவேன்..”
“ம்ம் சரி மாம்ஸ்..”
“என்னடா லட்டு வாய்ஸ் உள்ள போகுது..?”
“என்னன்னு தெரியல மாம்ஸ் வயிறு கொஞ்சம் வலிக்கிது..”
“ஏய் என்னாச்சுடி நான் உடனே வர்றேன் டாக்டர்கிட்ட போகலாம் கிளம்பு..”
“ச்சு அந்த அளவுக்கு வலியில்ல.. லேசாத்தான் வலிக்கிது நீ வேலை முடிச்சே வா… கொஞ்சம் சீக்கிரமா வந்திரு..”
“கொஞ்சம் நல்லெண்ணெய் எடுத்து தடவிப்பாருடா நான் சீக்கிரமே வந்திருறேன்..”
அங்கு வேலுவும் பாலாவும் தங்கள் தோப்புவீட்டில் “டேய் இன்னைக்கு விட்டா தர்ஷினிய தூக்க நல்ல வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது.. நான் நல்லா நோட் பண்ணிட்டேன் அவங்க வீட்ல தர்ஷினிய தவிர வேற ஆள் யாருமில்ல.. ஊரே பிரசிடெண்ட் வீட்லதான் கிடக்கு.. அங்க கரகாட்டம் மயிலாட்டம்ன்னு தூள்பறக்குது.. எப்படியும் அவங்கள தூக்க சாயங்காலம் ஆகிரும்.. நாம நம்ம வேலையை முடிக்க நல்ல சான்ஸ்.. யாருக்கும் நம்ம மேல எந்த சந்தேகமும் வராது..”
இருவரும் தங்கள் ஜீப்பில் கிளம்பியவர்கள் சுந்தரின் வீட்டை விட்டு சற்று தள்ளி நிறுத்திவிட்டு இறங்கி வர பாலா வந்து கதவை தட்ட வேலு அவன் பின்னால் சற்று மறைந்து நின்றான்.. சற்று பொறுத்து தர்ஷினி ஜன்னல் வழியாக பார்த்தவள் பாலாவை காணவும் கதவை திறக்காமல் “என்ன பாலா..??”
“இந்தா தர்ஷினி அப்பத்தா இத கொடுத்திட்டு வரச் சொன்னாங்க..” தன் கையில் இருந்த பாத்திரத்தை காட்ட சாப்பிட ஏதோ கொடுத்துவிட்டார் போல..
“இல்ல வேணாம் பாலா எனக்கு பசிக்கல நீ அத கொண்டு போய் வீட்லயே கொடுத்திரு..”
“ஏய் நீ வேணான்னு சொன்னா அப்பத்தாவே கிளம்பி வந்திரும்.. பாவம் அது வேற இந்த வயசில அலையனுமா.. சரி கொண்டு போய் கொடுக்கிறேன்..” அவன் திரும்ப..
ச்சே கிரான்மா பாவம்ல “இரு நான் வாங்கிக்கிறேன்..” அவள் கதவை திறக்க அவளை தள்ளியபடி பாலாவும் ஒளிந்திருந்த வேலுவும் பின்னால் நுழைந்திருந்தார்கள்..
