Skip to content
Post Views: 3,966
நகரம் எங்கும் தேடி பார்த்துவிட்டனர் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர். எங்கும் மண்டபம் அமையவில்லை.
அனைத்து மண்டபங்களும் ஏற்கனவே பதிவாகியிருக்க என்ன செய்வதென்று தெரியாமல் சற்று ஓய்ந்து தான் போயினர். நாளை மருத்துவமனையில் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்கு தயாராவதா இல்லை மண்டபத்தை பார்ப்பதா என தெரியாத நிலை அங்கு. மதியம் உணவுண்ண அர்ஜுன் வருவான் என நினைத்திருக்க அவன் வீட்டிற்கு கிளம்புவதாக நின்றான்.
“உன்கிட்ட பேச தான் அர்ஜுன் எல்லாரும் வெய்ட் பண்றோம். ஒக்காரு சாப்பிடு” என்றார் பரிமளா.
Advertisement
“இலக்கியா வெய்ட் பண்ணுவா அத்தை. என்னனு சொல்லுங்க”
“எல்லாத்துலயும் அவசரம் தான் உனக்கு” அவனை இழுத்து அமர வைத்தார் பரிமளா,
“உன் அவசரத்துக்கு மண்டபம் கிடைக்கலடா. என்ன பண்றது?”
Advertisement
அர்ஜுன், “அவ்ளோ தான, அதை நான் பாத்துக்குறேன், மண்டபத்துல இல்லனா என்ன ப்பா, கிரௌண்ட் ஒன்னுல வச்சுக்கலாம். எப்படி பாத்தாலும் செலவு கம்மியாகும், வசதியும் கூட. ஈவினிங் இடம் எதுனு முடிவா சொல்றேன்” என்றவன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
Advertisement
அவ்வளவு அவசரமாக வீட்டிற்கு வந்தவனுக்கு பசி வயிற்றை பிடித்து கவ்வியது.
“இலக்கியா” சமையலறை பார்த்து அழைத்தவன் அவள் இல்லாது போக தங்கள் அறைக்கு மேலே ஏறினான்.
அங்கும் மனைவியின் தரிசனம் முதல் பார்வையில் கிடைக்காமல் போக தலையை உயர்த்தி பார்த்தவன் உறைந்து போனான்.
Advertisement
கால்கள் மெல்ல சத்தமெழுப்பாமல் அறையின் மேல் தளத்தில் அமைந்திருந்த அறைக்கு நகர்ந்தது.
பூனை போல் பதுங்கி வந்ததன் காரணம் அங்கு அவனது எலி, அர்ஜுனின் சட்டையை அணிந்து நின்றது. அதிலும் அதிக சிந்தனையோடு மேலும் அவனது உடைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு அருகே இருந்த ஒரு நாற்காலியில் அவளது புடவையும், அவர்கள் திருமண புடவையின் ரவிக்கையும் இருந்தது.
அதனை பார்த்த அர்ஜுனின் தொண்டை குழி ஏறி இறங்க ஒரு நொடி நின்ற கால்களும் அவளை பார்த்து நிற்காமல் முன்னேறியது.
பெண்ணவளுக்கோ குழப்பம். பல வெள்ளை நிற சட்டைகள் வைத்திருக்கிறான், அதில் எது தங்கள் திருமண உடை என அறிந்திட ஆசை.
வரவேற்பிற்கு அளவு ரவிக்கை அர்ஜுன் தான் நேற்று கேட்டிருந்தான். அவளிடம் உள்ளவற்றில் அவர்கள் திருமணத்தின் பொழுது அணிந்த அந்த ரவிக்கை தான் அவளுக்கு மிகவும் கச்சிதமாக இருக்க, இப்பொழுதும் அதுவே சரியாக இருந்தால் அதனை கொடுக்க எண்ணி அணிந்து பார்த்தாள்.
நினைத்ததை போலவே அருமையாக பொருந்தியும் போனது. அதனை மாற்றி புடவையை அணியவிருந்த நேரம் அர்ஜுன் சட்டை அழகாய் பார்வையில் விழுந்தது.
அதனை எடுத்து அணியும் ஆசை வர அர்ஜுனின் ஆலிவ் கிறீன் நிற சட்டையை நிதானமாக அனுபவித்து அணிந்தாள்.
அர்ஜுனின் கைகளுக்குள் அடைங்கியது போல் எண்ணம் வர, அவர்கள் திருமண நாளின் நினைவில் அத்தனையும் அணியும் ஆசையில் தான் தேடியது.
ஒரு சட்டையை எடுத்து நுகர்ந்து பார்த்தவள் மனம் அதனை நெருக்கமாய் உணராமல் போக அடுத்தடுத்து வெள்ளை சட்டையை எடுத்து பார்க்க, இறுதியாக கிட்டியது அந்த சட்டை.
கையில் எடுக்கும் பொழுதே அந்த சட்டையின் காலர் நுனியில் இருந்த மஞ்சள் நிறம் அவளில் இதழில் புன்னகையை தோற்றுவிப்பதாக.
போட்டிருந்த உடையின் மேல் பட்டனை அவிழ்த்த அவள் கைகள் அர்ஜுனின் தொண்டை கனைப்பு சத்தத்தில் அப்படியே நின்று போனது.
திடுக்கிட்டு திரும்பியவள் எச்சில் விழுங்கி அர்ஜுனை பார்க்க, இரு புருவம் உயர்த்தி தலையை மேல் நோக்கி அசைத்து என்னவென அவன் கேட்டதில் அடக்கிய சிரிப்பின் வலி ஆண் அவனின் இதழில் அவனையும் மீறி வெளியேறியிருந்தது.
“என் ஸ்மெல் வேணுமா?” வசியக்காரனின் கேள்வியில் உண்மையை உணரும் வகையில் அவள் தலை தன்னாலே ஆட,
“நானே இங்க தான இருக்கேன்” என்றவனின் கூற்றில் வேகமாக இல்லை என தலையை ஆட்டினாள்.
மனைவியின் திருட்டு முழியில் இதழ் கடித்து சிரித்தவன் மீசையை நீவிவிட்டு அவளை நோக்கி வந்தவன் சில இன்ச் மட்டுமே தள்ளி நின்றான்.
“சா… சாப்பிடலாமா?”
“ம்ம் சாப்பிட தானே போறேன்” இலக்கியாவின் இடை தாண்டி ஒரு அடி கீழ் இறங்கி நின்ற அவனுடைய சட்டையின் நுனியை பிடித்து, “ரொம்ப லூசா இருக்கும் போல”
பேச்சு கொடுத்தவாறே சட்டையின் அடியில் கை நுழைத்து அவளது வெற்று இடையை பற்ற வெட்டி இழுத்தது போல் அவள் உடல் அதிர்ந்தது.
அவனின் கையை பிடித்தவள் சொக்கிய கண்களோடு, “என்ன பண்றீங்க?” கேட்க அவனிடமோ குறும்பு கூத்தாடியது.
“நீங்க என்னங்க பண்றீங்க?” கையை தானே மேலும் நகர தடா போட்டாய், விரலுக்கு இல்லையே என அர்ஜுனின் விரல்கள் தடையே இல்லாமல் நகர்ந்தது.
அவனின் அச்செயலில் பேச வந்த வார்த்தை மறந்து மறுப்பு கூட தோன்றவில்லை. கண்கள் அர்ஜுனை தவிப்போடு பார்க்க, மூச்சு சீரற்று இருந்தது.
“ஓ உள்ள வேற ப்ளௌஸ் போட்ருக்கியா?” ஏமாற்றத்தோடு அவள் ரவிக்கையின் இறுதி பாகத்தில் தொட்டு சோகமாக கேட்டான்.
அந்த நேரத்தை பயன்படுத்தி வேகமாக அர்ஜுனின் கையை உள்ளிருந்து அவள் எடுக்க, உச் கொட்டி மீண்டும் உரிமையாய் அவளை வசப்படுத்தினான்.
“சார்… இதெல்லாம் தப்பு” என்றாள் கூச்சத்தை மறைத்து.
“இருக்கட்டுமே சார். சில தப்பு ரொம்ப அழகு” அவள் கன்னத்தை இதழால் உரசி அவன் மொழிய, பெண்ணவளின் நறுமணம் தந்த மயக்கத்தில் கண் மூடி கிரங்கினான்.
“இலக்கியா…”
“ம்ம்” காற்றை விட மெல்லிய குரலில் வந்தது அவள் பதில்.
தடையேதும் விதிக்காமல் தன்னிடம் தன்னையே ஒப்படைத்து நிற்கும் மனைவியை அள்ளி விழுங்க ஆசை பொங்கியது மருத்துவனுக்கு.
“தப்பு பண்ணனும் போல இருக்கு”
அத்து மீறிய அவனின் கைகளின் அட்டகாசத்தால் ம்ம் என வந்த அவளின் முனகலை, “அப்போ பண்ணலாம் சொல்ற?”
சிரிப்போடு அவன் கேட்க மறுக்கவும் முடியாமல் வாய் திறந்து ஏற்கவ்வும் முடியாமல் பாவை தான் தவித்தது.
“சொல்லு இலக்கியா” சேட்டையை நிறுத்தி அவள் நெற்றி முட்டி அவன் கேட்க, மூச்சு வாங்கி தலை உயர்த்தி கூட பார்க்கவில்லை.
“பழகுன பொண்ணுங்களையே உன்ன தான் ரொம்ப லவ் பன்றேன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். சொல்ல போனா என்னோட லவ் ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல தான் இருக்கு. அதுக்கே ஏன்டி உன்ன மொத்தமா தெரிஞ்சுக்கணும்னு ஆசைய தூண்டுற?”
“இ… இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்?”
“உன் பதிலை சொல்லு இலக்கியா”
“என்… என்ன பதில்?”
“பேர் அளவுல” அவன் சட்டையினுள் பதுங்கியிருந்த அவள் தாலியை அவள் கழுத்தை உரசி வெளியே எடுக்க சிலிர்த்தது பெண் உடல், போதா குறையாக குனிந்து அவள் நெஞ்சோடு உரசிய தாலியில், அவள் நாடியில் சிகை உரச முத்தம் வைத்தான்.
“என்னங்க…” தாறுமாறாக துடித்த இதயத்தை அடக்கி இலக்கியா மெல்லிய குரலில் அழைக்க, “கயிரளவுல இருக்க நம்ம உறவை முழு மனசோட…” அங்கம் உரசல் இலக்கியாவின் செவியோரம் வந்து, “இலக்கியாவோட அர்ஜுனா மாறனும்”
இளைப்பாற வேண்டிய இடம் அவன் நெஞ்சமென அறிந்தவள் அதே மார்பினில் சரிய இசையாய் அவனின் இதயம் வெற்றி களிப்பில் ஆடியதை துள்ளலோடு கேட்டாள்.
error: Content is protected !!