Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Amuthangalaal Nirainthen 11 2

லிங்கா தன் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான் “காமாட்சி… எங்க வீட்டு மீனாட்சி…” என்றான்.

அன்னை “டேய்.. சொல்லு என்ன பண்ணின” என்றார்.

லிங்கா… சற்று அமைதியாகிவிட்டான்… தன் அண்ணனை பார்த்தான், இளா பதறிப் போய், அமர்ந்திருந்தான்.. காவ்யா கல்யாணம் முடிந்து பேசிக்கலாமே என தோன்றியது அண்ணனாய் இளாக்கு. 

ஆனால் லிங்காக்கு… அப்போது பேசி நோ யூஸ் என்றே தோன்றியது.. எனவே கண்ணால், தன் அண்ணனை அடக்கி விட்டு “ம்மா… நான் சொல்றத அமைதியா, பொறுமையா கேட்பியா..” என்றான், தன் தந்தையை ஓர பார்வை பார்த்த படியே… தழைந்த குரலில்.



Advertisement

ஒன்றும் சொல்லவில்லை அன்னை, தன் கணவரின் முகம் பார்த்தார்… இந்த ஒரு வாரம் பத்து நாளாக லிங்காவிடம் உண்டான மாற்றத்தை கவனித்தே இருந்தனர் பெற்றோர். 

இப்போது இந்த தழைந்த குரல்.. அவனின் பொறுப்பான செயல் எல்லாம் ஒரு அச்சத்தை தந்ததுதான்.. ஆனாலும், எதையும் அசால்ட்டாக கையாளும் இளைய மகனின் செயலில்.. இப்போது நம்பிக்கை வந்தது பெற்றோருக்கு.. எனவே அன்னை அமைதியாக தலையசைத்தார்.

லிங்கா “அ.. அது ம்மா… நான்.. நான் அவங்க.. தாமு அங்கிள், பெண்ணை விரும்பறேன்” என்றான் வார்த்தையில்தான் தயக்கம் போல.. குரல் நல்ல திடமாக, தயக்கமில்லாமல் வந்தது.

Advertisement

சத்தியமூர்த்தியின் முகம் இதை கேட்டதும் அனிச்சையாய் தன் அதிருப்தியை காட்டியது. இளைய மகன் கவனிக்கவே செய்தான் அதை. 

Advertisement

எனவே லிங்கா “அண்ணனுக்கும் இது தெரியும்… இளா, காவ்யா கல்யாணம் முடிஞ்சி பேசறேன்னு சொன்னான்… ஆனா, அவளுக்கு ஏதோ.. ஜாதகத்துல பிரச்சனையாம்.. இந்த மார்கழிக்குள்ள.. கல்யாணம் நடக்கனுமாம்.. அதான்” என்றான் தெளிவாக.

மூர்த்தி “உனக்கு வேற இடமே கிடைக்கலையா… எங்க.. எப்படி பழக்கம்“ என்றார் தோரணையான குரலில்.

 

Advertisement

[the_ad id=”6605″]

 

என்ன சொல்லுவான் லிங்கா.. அமைதியாக இருந்தான். தந்தை மீண்டும் “என்ன டா சொல்லு… பொண்ணு என்ன பண்ணுது..” என்றார்.. எல்லாம் மறந்துவிட்டான் லிங்கா.. ஏதும் தெரியவில்லை அவனுக்கு.

தந்தைக்கு சந்தேகம்.. வீடு இருக்கும் நிலை தெரியும் இவனுக்கு.. அப்படி ஒன்றும் பெரிதாக வயதாகவில்லை.. இப்போது இருக்கும் நிலையில் தங்கையின் திருமணமே.. திட்டமிட்டபடி நடத்த ஆகும் செலவு தெரியும்.. இருந்தும் இப்போது வந்து காதல் என்கிறான்… என தந்தையாக.. ஒரு சின்ன தகவல் அறியும், அறிவு… வேலை செய்ய.. தந்தையாக கேட்ட கேள்வியில்… அவரின் முன் அமைதியானான் லிங்கா.

சற்று நேரம் யோசித்து “அவ படிக்கிறா ப்பா… கொடை.. சாரி, ஊட்டில படிக்கிறா.. இந்த வருஷத்தோட படிப்பு முடியுது…” என்றான் நிமிர்ந்து கண்ணில் கள்ளமில்லை.. வாய்மையும் இல்லை அவனிடம் அப்போது.

காமாட்சி ஏதும் பேசாமல் உள்ளே எழுந்து சென்றார்… இந்த காதல்.. விருப்பம் இதெல்லாம் தன் பிள்ளைகளுக்கு வந்துவிட கூடாது என்று நினைக்கும் தாய்.. எனவே, இதை பேச தோன்றவில்லை அவருக்கு… இதை கணவர் பார்த்துக் கொள்வார் என எண்ணி எழுந்து கொண்டார். 

ஆண்கள் மூவரும்தான் இருந்தனர்.. மூர்த்தி “உண்மைய சொல்லுடா… என்ன செய்யற நீ” என்றார்.

லிங்கா எழுந்து நின்றுவிட்டான்… கோவம் கண்மண் தெரியாத கோவம்.. என்னை நம்பவில்லையா நீங்க.. என்ற கோவம்.. ஏன்.. எதற்கு.. என தெரியாத கோவம்.. “என்ன வேணும் இப்போ உங்களுக்கு… என்னமோ குற்றவாளியை என்க்கொயரி பண்ற மாதிரி கேட்கிறீங்க… என்ன இப்போ.. நான் லவ் பண்ண கூடாதா…” என்றான் கோவமாக.

மூர்த்திக்கு அதைவிட கோவம்… “என்ன டா, என்ன பேசற… அவங்களுக்கும் நமக்கும் எப்படி ஒத்துவரும்… இது.. இது சரி வராது டா… அவங்க அரசியல்வாதிங்க… எப்படி சொல்றது.. இவங்க மாதிரி ஆட்கள் கிட்ட இருந்து நாம தள்ளி இருக்கணும்… நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.. புரியாதா உனக்கு… அதான் கேட்கிறேன்.. எப்படி பழக்கம் இவங்கன்னு.. 

நீ இப்போதான் வந்த… ஆறு மாசம்தான் ஆச்சு.. அத்தோட.. அந்த சேட்டு பொண்ணு, அதுதான் தெரியும்.. இது யாருடா உண்மைய சொல்லு…” என்றார் மூர்த்தி.. ஒன்றுமே தெரியாதவர்.. என நினைத்திருந்த தந்தைக்கு எல்லாம் தெரியும் போல என எண்ண.. எண்ண.. லிங்கா பதட்டமானான்.. ஆனால் அதை காட்டாமல்…

“நீங்க சொல்ற சட்ட திட்டமெல்லாம் உங்க காலத்துல… என்ன பெரிய அரசியல்வாதிங்க.. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. எனக்கு அவ வேண்டும்… நீங்களா பார்த்து.. செய்து வைச்சா நல்லா இருக்கும்..  எனக்கு இதுக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை… லோட் இன்னிக்கு.. வருது கம்பெனிக்கு.. நான் சீக்கிரம் போகணும். எப்போது பொண்ணு கேட்டு போகலாம்னு சொல்லுங்க… “ என்றவன் மேலே சென்றான்.. வேகமாக. அங்கு அமர்ந்திருந்த யாருக்கும் ஏதும் புரியவில்லை.. விளையாட்டுதனங்கள் இல்லா முழு லிங்கேஷ்வரனை இன்று கண்டார் தந்தை. கொஞ்சம் ஸ்தம்பித்தும் நின்றார்… ‘இவனுக்கு என்ன தெரியும்.. இவன் எப்போதான் கம்பெனிக்கு வருவானோ..’ என தோன்றிய நாட்கள் எல்லாம் காணாமல் போனது கண் முன்னே.. ‘எனக்கு அவ வேணும்’ என்ற த்வனியில்.. அவனின் அழுத்தம் இன்றுதான் புரிந்தது.. இளா, தந்தை இருவருக்கும்.

 

[the_ad id=”6605″]

 

லிங்கா.. மேலே சென்றான்… இரண்டு நாளாய்.. ஒரு அழுத்தம் அவனுள்.. ஏனென்றே தெரியாத குழப்பம்.. கூடவே தெளிவும்தான். 

எல்லாம் அவன் விருப்பப்படி நடக்கிறது. இதோ இன்று கூட துணிந்து அங்கு நின்று கொண்டிருந்த லோடை(சரக்கை) இங்கே வரவைத்துவிட்டான். ஆக முழுதான தாமு என்ற மனிதனையும்.. அவருடைய கோரிக்கையையும் மறைமுகமாக ஏற்றுவிட்டான்தான். ஆனால், இன்னும் பதில் என்ற ஒன்றை தாமுக்கு சொல்லவில்லை அவன்.. 

இன்று காலையில் கூட தாமு அங்கிள் தன் முகத்தை முகத்தை பார்ப்பதை அவனால் உணர முடிகிறது.. எனவே ஒரு வழி பாதையில் இறங்கியாகிவிட்டது.. இனி யாருக்காகவும்.. மாற்ற கூடாது.. இல்லை முடியாது.. அதுதான் நிஜம். எனவே அந்த கடுமை.. அவனிடமிருந்து வெளிப்பட்டுவிட்டது… அதனை நினைத்த படியே அமர்ந்திருந்தான்.

தன் தலையை பிடித்த படியே அமர்ந்திருந்தான் தன் அறையில்.. எங்கோ சென்றது பார்வை.. அங்கே… சுவரில்… ஒரு வால் ஹாங்கிங்… வடநாட்டு உடையணிந்து.. கோலாட்டாம் ஆடும் ஆண் பெண்  உருவம் கொண்ட இரு பொம்மைகள்.. பளிச்சென அவன் கண்ணில் பட்டது… லிங்காவின் மனம் தன் ட்ரீமியிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றது. 

 

எழுந்து நின்றான்… மெல்ல அவனின் வலிய உதடுகள், இளகி “ட்ரீமி…” என எப்போதும் போல வார்த்தைக்கும் வலிக்காமல் உச்சரித்தன.. பற்களால் தன் மீசையை கடித்து இழுத்து நிறுத்தினான்… அந்த வார்த்தையை. சட்டென சுற்றும் முற்றும் பார்த்தான்.. ‘அந்த வார்த்தையும் எனக்கு சொந்தமில்லை..’ என எண்ணிய நொடி… ‘அந்த பெண்… பேரென்ன… ம்….’ என.. தோன்ற அங்கு சென்றது அவனின் மனம். 

அந்தோ பரிதாபம், என்ன சிந்தித்தும் அவள் பெயரின் முதல் எழுத்துக் கூட நினைவில் வரவில்லை அவனுக்கு.. மனதில் நிறைந்தவளை ஒதுக்கி.. தன் அறிவால் தேடியவளை நினைக்கத் தொடங்கினான்… ஆனால், அவனின் மனம் அதற்கு ஒத்துழைக்கவில்லை போல… பெயரே மறந்து போனது.

அறிவு என்பது.. விசாலமாக இருக்கும்.. இது சரி… இது தவறு.. என பல கணக்குகள் போட்டு.. அதனை ஒன்றுக்கு இரண்டுமுறை… எல்லா இடத்திலும் சரி பார்த்து சொல்லிவிடும்.. ஆனால், மனது… அதற்கு இந்த சரிபார்ப்பு, கணக்கு போடுதல் இதெல்லாம் தெரியாது… ‘உணர்வு’ என்ற ஓன்றை தவிர. 

 

[the_ad id=”6605″]

 

இந்த உலகம் அறிவால் மட்டும் சமைந்தது அல்ல… அங்காங்கே உணர்வுகளாலும் சமைந்தது. அதுதானே.. எல்லா துரோகங்களையும், ஏமாற்றங்களையும்.. சிலசமயம் சொல்ல முடியாத இழப்புகளையும் கண்ட பிறகும் கூட ஒருவரை.. உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இங்கும் லிங்காவிற்கும் அதேதான்… குடும்பம் எனும் உணர்வு… தாங்கி நிற்கிறதே அவ்வளவுதான். 

கீழே மூர்த்தி இன்னும் அப்படியே அமர்ந்திருந்தார்.. இளா “ப்பா… அவன தெரியாதா… பிடிச்சிருக்குன்னு சொல்றான், அதவிட அந்த ஸ்வப்னாதான் வேண்டும்ன்னு சொல்லாமல்.. ஏதோ தமிழ் பெண்ண சொல்றானே.. எல்லாம் நம்ம ஆளுங்க தானேப்பா… ஏன் யோசிக்கிறீங்க… “ என்றான் பொறுமையாக.

மூர்த்தி “என்ன டா, அண்ணன் தம்பி சேர்ந்து.. ஏதோ செய்யுறீங்க.. என்னான்னு தெரியலை.. என்னமோ பண்ணுங்க டா… எல்லாம் இப்போ உங்க இஷ்டம்தான்.. ” என்றவர் எழுந்து சென்றார் தன் மனைவியிடம். நீண்ட நேரம் டைனிங் ஹாலில் பெற்றோரின் சத்தம் கேட்டது. இளாவும் எழுந்து மேலே தனதறைக்கு சென்றான்.

“வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது..

ரகசியம் காண்பதே. நம் அவசியமானது..

தேடல் உள்ள உயிர்களுக்கே..

தினமும் பசியெடுக்கும்…

தேடல் என்பது உள்ள வரை.. 

வாழ்வில் ருசி இருக்கும்…

பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!