Un Vizhigalin Mozhi Ennavo 10
ஜெய் ஸ்ரீ ராம்
EPI -10
Advertisement
தோட்டத்தில அன்னைக்கு நைட் ஸ்ரீ கழுத்துல பிரியன் பார்த்த லாங் சைன் அவன் கட்டின தாலி செயின். ரெண்டுக்கும் திருமணம் முடிஞ்சு மூணு வருஷம் ஆச்சு. தன் கடைசி காலத்தில் படுக்கையில் விழுந்த பாரிஜாதம் கடைசி ஆசை தன் பேரன் பேத்தியின் திருமணம்…….
மூன்று வருடத்திற்கு முன் தன் வாழ்நாள் முடியப் போவதை உணர்ந்ததாலோ என்னவோ!! குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து, தன் ஆசையைக் கூறி தான் கண் மூடும் முன் திருமணத்தை பார்த்தாக வேண்டும்.
Advertisement
என்று விட, அப்போதுதான் மதுஸ்ரீ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்து தேர்வு விடுமுறையில் இருந்தால், பிரியன் எம்பிஏ முடித்து இயற்கை விவசாயம் செய்து கொண்டிருந்தான்,
Advertisement
அதோடுஅமெரிக்கா கம்பெனி ஒன்றின் ஆன்லைன் ப்ராஜெக்ட் செய்வதும், மனோவின் காலேஜ் பிரச்சனை, பசங்களோடு கிரிக்கெட் ஆடுவதும் அவனின் தினசரி . அந்த ஊரில் சில முறை பெண்களின் கனவு நாயகன் அவன். இதில் ரத்தினம் மகள் பிரியாவும் அடக்கம் . ..
பரிமளாவின் காதல் திருமணத்தால் ஏற்பட்ட கசப்பினால் காதல் மேல் பெரிய ஈடுபாடும் இல்லாமல் போனது. இவன் வழியே மனோவும் தமிழும்.
சிலர் அவன் பின் சுற்றினாளும் அவன் யார் பின்னும் சுற்றியது இல்லை. அவ்வளவு ஏன் மதுவை தவிர யாரோடும் வம்பு கூட செய்தது இல்லை.
Advertisement
திருப்பதியும், பழனியும் தன் தாயிடம் தனிமையில் பிரியனிற்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து விடலாம். மனோ விற்கு வேண்டுமானால் சில வருடம் கழித்துஸ்ரீயை செய்து வைக்கலாம்.
அவனை விட குறைந்தது ஒன்பது வருடமாவது சிறிய பெண்ணாக இருப்பாள். படிப்பு கூட முடியவில்லை 18 வயதேஇப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. அவள் குழந்தை என்று வாதிட…
முடியவே முடியாது இருவருக்கும் தான் திருமணம்… மனோ தமிழை எப்படி பார்க்கிறானோ அப்படித்தான் மதுவையும் பார்க்கிறான்.மதுவும் அர்ஜுனை எப்படி அண்ணனாக பார்க்கிறாளோ அப்படித்தான் மனோ ஓடும் பழகுகிறாள்.
[the_ad id=”6605″]
நிச்சயம் பெரியவர்கள் ஆன பின் இவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.இந்த திருமணம் சாக கிடைக்கும் எனக்கு நீங்கள் போடும் பிச்சை எனக்கும் பின் என் பேத்தி தான் இந்த வீட்டை ஆளனும் என்று விட்டார்…….
சக்தி தன் தாயிடம்” அவ ரொம்ப சின்ன பொண்ணு அம்மா இன்னும் குழந்தைத்தனம் கூட குறையவில்லை. அவள எப்படிம்மா, அப்படியே அவளை தான் பண்ணிக்கணும் நாளும் அவளுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி வரட்டும் அப்புறம் பண்ணிக்கிறேன்”, என்று தன் தாயிடம் கெஞ்ச, இதுவரை மாமியார் பேச்சைத் தட்டாமல் இருந்த காவிரி, இதற்கு மட்டும் மறுத்துப் பேச போகிறாரா,
அதுவும் மது பிறந்ததிலிருந்து அவர் பார்த்து பார்த்து வளர்த்த பெண்.” அத்தை அத்தை” என்று எப்போதும் தன் கழுத்தை கட்டிக்கொண்டு சுற்றித்திரியும் பட்டாம்பூச்சி.
” இங்க பாரு சக்தி அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு முடி வாகிருச்சு, இப்போ பண்ணா என்ன கொஞ்ச நாள் கழிச்சி பண்ணா என்ன அட்லீஸ்ட் அத்தையாவது உங்கள மாலையும் கழுத்துமாக பாத்துட்டு போ வாங்கப்பா, “
” தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காத சரியா”, என்று விட்டார்.
தன் தந்தையிடம் அதையே கூற அவரோ தாயை விட ஒரு படி மேலே போய் “என் வீட்டு மருமக என் தங்கச்சி பொண்ணு தான் என்று முடிவாகிருச்சு, இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் நாளைக்கு பத்திரிக்கை அடிக்க கொடுக்கணும்”.
” உன் பிரண்டுங்களுக்கு எத்தனை பத்திரிக்கை வேணும்னு கணக்கு போட்டு சொல்லு” என்று விட்டார்.
சரி அர்ஜுனிடம் பேச சொல்வோம் என்று அவனைத் தேட,,,,,
இங்கு மதுவோ காலில் சலங்கை கட்டாத குறையாக ஆடிக் கொண்டிருந்தாள். யாரு அந்த அய்யனாரை நான் கட்டிக்கணும் .. அவன் ஒரு பட்டிக்காடு சரியான காட்டான். அவனக் கட்டிக்கிட்டு இந்தப் பட்டி காட்டுல நான் என்ன பண்ண போறேன்.
அவன் ஒன்னும் எனக்கு வேண்டாம். என்னை கட்டிக்க அவனுக்கு என்ன தகுதி இருக்கு. நான் நிறைய படிக்கணும் என்று எகிறிக்கொண்டிருந்தாள்.
ழினிக்கும், பரிமளாவிற்கும் அவளை என்ன சொல்லி சம்மதிக்க வைப்பது என்று தெரியாமல் நின்றிருந்தனர்.
காரியத்தை கையிலெட்டுத்த அர்ஜுன். “இங்க பாருடா மது, சக்தி ரொம்ப நல்ல பையன். உன்ன அவன் நல்லா வச்சுப்பான். உனக்கு எவ்வளவு படிக்கணும் அவ்வளவும் படி. “
“கல்யாணத்துக்கு அப்புறம் உன் அண்ணி படிக்கலையா, நீயும் அப்படியே படிக்கலாம். அவன் ரொம்ப நல்ல சாய்ஸ் மா, அவனை மிஸ் பண்ணவேண்டாம். எப்படி இருந்தாலும் இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சி கல்யாணம் பண்ண போறோம். அதை இப்போ பண்ணிக்கலாம் அவ்வளவுதான் “என்றான்.
அதுவரை அமைதியாக கேட்டு இருந்தவள் “ஓஹோ!! அப்படியா அவன் ரொம்ப நல்ல சாய்ஸ், அப்போ நீயே அவன செகண்ட் மேரேஜ் பண்ணிக்கோ”, “
“அப்படி இல்லன்னா உன் பொண்ணை கட்டி வை. எப்படி இருந்தாலும் அவளுக்கும் இன்னும் இருபது வருஷத்துல மேரேஜ் பண்ண தானே போறே ……. “என்றாள் கோபமாக,
தங்கையின் இந்த வார்த்தை தாக்குதலை தாங்க முடியாமல் மனம் நொந்து அவன் தன் கையில் இருக்கும் ஆறு மாத குழந்தையை பார்க்க,
அதுவோ தன் முட்டைக் கண்ணை அங்கும் இங்கும் உருட்டி, தன் பொக்கை வாயை திறந்து சிரித்துக்கொண்டே, அப்போதுதான் அங்கு வந்து கொண்டிருந்த சக்தியிடம் தூக்கு என்பது போல் கையை நீட்டியது,
இதுவரை இறுக்கமாக இருந்தவர்கள் , யாழியின் இந்த செயலில் சூழ்நிலை மறந்து சிரித்துவிட்டனர். சக்தி அர்ஜுனை கேள்வியை பார்க்க “டேய்! மச்சான் என் பொண்ணுக்கு உன்னை கட்டிக்க சம்மதமாம். … உனக்கு ஓகேவா” என,
சக்தி “எங்க…… இவ அத்தையைக் கடிக்கிறதுக்கு பதிலா இவளையே கடிக்கலாம். ஆனால் என்ன சைல்ட் மேரேஜ்னு சொல்லி அர்ரெஸ்ட் பண்ணக்கூடாது சரியா, என்று அவனும் சிரித்தான்……
” டாலி, மாமா வ கல்யாணம் பண்ணிக்கிறியா டி செல்லம். என்று குழந்தையிடம் கேட்பதுபோல் மதுவைப் பார்த்து கேட்க…
மது “ம்ம்ம்ம் நானும் கட்டிக்க மாட்டேன். இவளும் கட்டிக்க மாட்டா, மூஞ்ச பாரு காட்டான், சரியான அய்யனார். என்று அவன் கையிலிருந்த குழந்தையை வெடுக்கென்று பறித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்…..
சக்தி “யேய்… நீ கட்டிகலைனா போடி, என் டாலி என்ன கட்டிப்பா என்ற சக்தியின் குரல் மதுவை தொடர்ந்தது…
” பேராசை பெருநஷ்டம் போடா “என்று மதுவின் குரலும் போட்டியாக வந்தது…..
அஜூ ” டேய் மச்சான் . என் தங்கச்சிக்கு சரியான ஆளு நீதான் உனக்கு சரியான ஆளும் அவதான். ஆனா என்ன இதெல்லாம் கொஞ்ச வருஷம் கழிச்சு இருந்தா நல்லா இருந்திருக்கும். இப்போ அவள ரொம்ப போர்ஸ் பண்றோம்னு கஷ்டமா இருக்குடா”,,,,,,
இந்த பிரச்சனையை தீர்க்க ஒரே ஆள் பாட்டி தான் என்று இருவரும் பாட்டியிடம் வந்து நிற்க, முதலில் பேச ஆரம்பித்த அர்ஜுன் “பாட்டி மது விற்கு இப்போதான் 18 வயசு ஆரம்பித்திருக்குபாட்டி வாழ்க்கையைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்னு கல்யாணம் பண்ணி வைக்க சொல்றீங்க”
உங்களுக்கு சக்தி கல்யாணத்தை பாக்கணும்னு ஆசையா இருந்துச்சுனா, நம்ம சொந்தத்திலேயே வேற பொண்ண பாத்து கூட பண்ணி வைக்கலாம், அதோட சொந்தத்துல கல்யாணம் பண்றதால குழந்தைங்க வளர்ச்சி பாதிப்படையுது, அவளுக்கே நாளைக்கு டெலிவரிலயதாவது பிரச்சனை வந்தா என்ன பண்ண முடியும்.
” டேய். அப்படி எல்லாம் என் பேத்தியை பத்தி எதுவும் சொல்லாதடா, கடவுள் அருளால அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. உனக்கும் தமிழுக்கும் கூட சொந்தத்துல கல்யாணம் தானே !!இப்போ யாழினி நல்லா தான இருக்கா.
[the_ad id=”6605″]
அங்கு நின்றிருந்த சக்தியை பார்த்து” தம்பி உனக்கு பொண்ண பிடிக்கல, அப்படின்னா சொல்லு. அத விட்டுட்டு வேற ஏதாவது காரணத்தை சொல்லாத பா,
” மது பிறந்த வீட்டிலேயும் சரி இங்கேயும் சரி. ரொம்ப செல்லமா, கஷ்டம்னா என்னன்னு தெரியாம வளர்ந்திட்டா பிடிவாதம் கொஞ்சம் ஜாஸ்தி, விளையாட்டு புள்ள வேற, போற இடத்துல எந்த அளவுக்கு புரிஞ்சு நடந்துக்கணும் தெரியாது”.
” என் மருமகள் காவேரி தங்கம் டா, அவள பெத்தபுள்ள மாறி பார்த்துபா, அதோட நீயும் ஒத்த புள்ளையா போயிட்ட நாளைக்கு உனக்கு வர பொண்டாட்டி, என் மகனையும் மருமகளையும் எப்படி பார்த்துபானு சொல்ல முடியாது என் பேத்தினா, எனக்கு எந்த பயமும் இருக்காது.”
“மனோக்கு வர பொண்டாட்டி எப்படி இருந்தாலும். இரண்டு மகனையும் மருமகளையும் என் பேத்தி தங்கமா பாத்துப்பா, என் மகளுக்கும் சாகர வரைக்கும் பொறந்த வீட்டோட பந்தம் விட்டு போகாமல் இருக்கும்.
” உன் மனசுக்கு அவளை பிடிக்கல வேற ஏதாவது பொண்ணு புடிச்சிருக்கான்னு சொல்லு. அப்போ கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்தி விடலாம். மத்தபடி வேற எந்தக் காரணத்தையும் எடுத்துக்கிட்டு, என் கிட்ட வராதே “என்றவர். பேச்சு முடிந்ததாக கண்ணை மூடிக்கொண்டார்.
இங்கு பரிமாளாவும் அதைச் சொல்லித்தான் மதுவை மாற்றி கொண்டிருந்தார். “இன்னைக்கு நீ நம்ம மாமா வீடு, அத்தை வீடு வந்து ஒரு மாசம் கூட தங்கிட்டு போற, இங்கே உன் வீடு மாறி இருக்க, “
” நீ, இப்போ சக்தியை கல்யாணம் பண்ணிக்கல, இப்ப அதே முகூர்த்தத்தில் சக்திக்கு வேற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வப்பாங்க, ஆனால் இந்த வீட்டுக்குள்ள நீ இப்போ வளைய வர மாதிரி கண்டிப்பா நுழையமுடியாது.”
“அப்போ எல்லா முதல் மரியாதையும் சக்தியோட பொண்டாட்டிக்கு தான் போகணும், போகும். நீ இந்த வீட்டு மறக்க வேண்டி இருக்கும். இனி இந்த ஊரு பக்கம் நான் கண்டிப்பா உன்ன கூட்டிட்டு வர மாட்டேன். உனக்கு இதற்கெல்லாம் சம்மதம்னா இப்பவே கிளம்பி சென்னைக்கு போகலாம் “என்று விட்டார்.
“அதோடு உனக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு விருப்பம் இருக்கா சொல்லு”, என்று பரிமளா சற்று கண்டிப்பான குரலில் கேட்க, மதுவிற்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.
சற்று யோசித்தவள். மனோ விடம் கேக்க, அவனோ !!”நீ அண்ணாவ வேணாம். சொன்னா ரத்தினம் மாமா பொண்ணு பிரியா தான் பேசுவாங்க, சொந்தத்துல இப்போதைக்கு வேற எந்த பொண்ணும் கிடையாது. சின்ன வயசுல இருந்தே நமக்கும் பிரியாக்கும் ஆகாது.”
அவ சும்மாவே அண்ணா பின்னாடி மாமா மாமான்னு சுத்திக்கிட்டு திரியுவா, பிரியாவும் மனோவும் சின்ன வயதில் இருந்தே ஒரே வகுப்பு, இப்பொழுது கல்லூரியிலும்,
“அவளை எல்லாம் என்னால அண்ணியா ஏத்துக்க முடியாது. ஒழுங்கு மரியாதையா, நீயே அண்ணாவை கட்டிக்கோ என்று விட்டான். அவளுக்கு விபரம் தெரிந்த நாள் முதலாக அர்ஜுன், சக்தி மனோ இந்த மூன்று ஆடவரைத் தவிர அவள் மனதில் வேறு எந்த ஆடவரையும் நினைத்ததில்லை,
“மனோ எப்பொழுதும் அர்ஜுனனைப் போலவே அவளோடு பாசமாக இருப்பதால் மனோவை அதேபோல் சகோதரனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவளுக்கு காதல் கடிதம் கொடுத்து காதல் சொல்ல வந்தவர்களை கூட சக்தியிடம் ஒப்பிட்டு பார்த்து வேண்டாம் என்று மறுத்தும் இருக்கிறாள்……
சக்தி மேல் அவளுக்கு ஆசை, காதல் அதுபோன்ற எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் சக்தியோடு வேறு ஒரு பெண்ணை கற்பனை செய்து பார்க்கவும் முடியவில்லை.
இருவரும் வேண்டாம் வேண்டாம் என்றார்களே தவிர,சக்தியை பிடிக்கல என்று மதுவோ, மதுவை பிடிக்கல என்று சக்தியோ கூறவில்லை. வேறு ஒருவரை பிடித்திருக்கிறது என்றும் கூறவில்லை. பெரியவர்களுக்கு இதுவே போதுமானதாய் இருந்தது.
சக்தியும் பாட்டியிடம் எதுவும் மறுத்துப் பேசாமல் சம்மதம் என்று விட்டான். ஆனால் தன் நண்பன் அர்ஜுனிடம் “சும்மாவே ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்”.
“கல்யாணம் பண்ணா சொல்லவே வேண்டாம். நான் ஒரு பக்கம் PT மாஸ்டர் மாதிரி கத்திட்டு இருக்க போறேன். அவ ஒரு பக்கம் நீ என்னாடா சொல்றது நான் என்னடா கேக்கறதுன்னு இருக்க போறா”
என்று புலம்ப, அவனை சமாதானம் செய்வதற்குள்ளஅர்ஜுனிர்க்கு நா உளன்று போனது.
மது பரிமளாவிடம் அமைதியாக” அம்மா நீ எது சொன்னாலும் சரி மா” என்று விட்டாள்….
ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது வெட்டவா குத்தவா என்பதுபோல் பார்த்து வைத்தனர்… அடுத்து வந்த ஒரு வாரத்தில் இருவரின் திருமணமும் பெரியவர்களின் ஆசியோடு, வெகு விமர்சியாய் நடந்தது….
குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் அர்ஜுன் தமிழ் திருமணத்தில் இருந்த மன திருப்தியை விட சக்தி மதுஸ்ரீ திருமணத்தில் மிகவும் மகிழ்ந்து போயினர்…..
சக்தி திருமணத்திற்கு சம்மதம் கூறும் முன்பே அர்ஜுன் போலவே பெரியவர்களிடம்” தாலி மட்டும் தான் கட்டுவேன். மத்தபடி எந்த சடங்கும் நடத்தக்கூடாது. அவ படிப்பு முடித்த பிறகு தான் எல்லாமே என்று விட்டான். இது எதுவும் மதுவிற்கு தெரியாது……
இவர்களின் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் பாரிஜாதத்தின் இவ்வுலக பயணம் முடிவடைந்து விட்டது. பழனியும் திருப்பதியும் ஸ்தம்பித்து நின்று விட்டனர். முத்தையா இருந்தாலுமே இதுவரை அந்த வீட்டில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் எப்படி செய்ய வேண்டும் மற்றவர்களை எப்படி அணுக வேண்டும்.
என்று இவர்களுக்கு வழிகாட்டியவரின் மரணம் அந்த வீட்டையே தலைகீழாகி விட்டது. யார் யாரைத் தேற்றுவது என்றறியாமல் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. இதுவரை சொத்துக்கள் வாய் வார்த்தையாக மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தது.
அனைத்து சொத்தும்பாரிஜாதத்தின் பேரில் இருக்க சொந்தங்களை பற்றி சொல்லவும் வேண்டுமா, அனைத்து சொத்தையும் திருப்பதி எடுத்துக்கொண்டு பழனியை நடுத்தெருவில் நிப்பாட்ட போகிறார். என்று கிசு கிசுக்க……
சிலர் திருப்பதியும் பரிமாளாவும் சேர்ந்து சொத்துக்களை பழனிக்கு குடுக்க மாட்டார்கள்.என்று கங்காவின் மனதை குழப்பி பரிமளா காவேரியோடு சண்டையிட வைக்கவும் முயன்றனர். இதில் பெரும் பங்கு ரத்தினத்தின் மனைவி சாந்தியை சேரும்.
பிரியாவை சக்திக்கு மன முடிக்காத மனக்குறை அவருக்கு. முப்பதாம் நாள் வரைஎல்லோரும் அமைதியாக இருக்க, ஊர்த் தலைவர் ஆரம்பித்தார் சொத்துக்கள் பிரிப்பதை பற்றி.
இவர்களின் பங்காளி சண்டை பார்க்க ஊரே காத்திருக்க, பேத்தி பேரன் திருமணம் வரை யோசித்த பாரிஜாதம் இதைப் பற்றி யோசிக்காமல் இருப்பாரா,
முத்தையாவின் சொத்தை சரிபாதி இரண்டாகப் பிரித்து கங்கா காவிரி பெயரில் எழுதி இருந்தார்.
அந்த வீட்டில் பிறந்த பெண்களான பரிமளா, தமிழுக்கு தன் நகையை இரண்டாக பிரித்து கொடுக்க சொல்லி இருந்தார்.
மது இப்போது படிக்கும் கல்லூரியில் இவர்களின் ஒரு ஷேர் இருக்க அது அர்ஜுனிர் க்கு என்று எழுதி இருந்தார்.
அவரின் தாய் வீட்டு சொத்தில் அவருக்கு அளித்திருந்த தோப்பை மது பேரில் , யாழினி பேரிலும் ஒரு தொகை வங்கியில் போடப்பட்டிருந்தது.
[the_ad id=”6605″]
மனோ விற்கும் ஒரு குறிப்பிட்ட பெண்ணின் பெயரை பழணியிடம் சொல்லி மனோ மனதிற்கு பிடிக்கும் பட்சத்தில் திருமணம் முடிக்குமாறு சொல்லி சென்றிருந்தார்.
பாரிஜாதத்தின் உயிலை பார்த்த சில நல்லுள்ளங்கள் தங்களுக்குள் சிலாகித்துக் கொள்ள, சண்டையை காண வந்தவர்கள் மலைத்துப் போனார்கள்….
அர்ஜுன் நகை, பணம் மட்டும் போதும். என்று அவனுக்கு எழுதியிருந்த காலேஜின் ஷேர் mrs. சக்தி பெயரில் மாற்றிவிட்டான்.
சாந்தி, ஒரு களேபரத்தை எதிர்பார்த்து இருந்தவருக்கு சப்பென்று ஆகி விட புதுமணத் தம்பதிகளான இவர்களை கவனிக்கத் தொடங்கினார்.
சக்தி ஒரு பக்கம், மது ஒரு பக்கம் என்றிருக்க எதேச்சையாக ஒரு பேச்சு, பேச்சு என்ன முகத்தைக்கூட பார்த்துக் கொள்ளவில்லை இருவரும்.
அங்கிருக்கும் மற்ற உறவுகளிடமும் சாந்தி ஜாடை காட்ட இப்பொழுது எல்லோரும் மது சக்தியைத்தான் கவனித்தனர். ரெண்டு பேருக்கும் பிடிக்காம கல்யாணம் பண்ணி விட்டார்களோ என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டது உறவுகள்.
பரிமளாவின் காதில் இந்த பேச்சுக்கள் கேட்டாலும் அவர் கண்டுகொள்ளவில்லை, காவேரி கவனித்து கங்கா விடம் கூற துக்கம் விசாரிக்க வந்தவர்களை வீட்டை விட்டு விரட்டவா முடியும் என்று கங்காவும் அமைதி காத்தார்.
அதிலும் ஷாந்தி மதுவின் காது படவே” சக்திக்கு பிரியா என்றால் உயிர், எப்போ பாரு அவ பின்னாடி தான் சுத்திக்கிட்டு திரியும். அவனுக்கு போய் இந்த சின்ன புள்ளைய கட்டி வச்சா எப்படி பிடிக்கும்” என்று பேச மது சிலையென சமைந்து விட்டாள்.
இரவு உணவு முடித்து எல்லோரும் படுக்க ஆயத்தமாக, கங்கா சக்தி தம்பதியினரை அழைத்தவர். “இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தூங்குங்க, சாந்தி அண்ணி, கண்ணு முழுசும் உங்க ரெண்டு பேரு மேல தான் இருக்கு”
“சும்மாவே கதை கட்டிட்டு விட்டு டும்.” எப்போ என்ன கிடைக்கும்னு காத்துட்டு இருக்கு “என்றார். சரி என அவரிடம் தலையசைத்த அவர்கள் சக்தியின் ரூமிற்கு சென்று விட்டனர்.
மது இன்று முழுவதும் வேலை செய்த களைப்பில் உறங்கி விட, சக்திக்கு தான் பாட்டியின் நினைப்பில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்க, மது தூக்கத்தில் அவள் கைகளை அவன் மேல் போட்டு நெஞ்சில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
இதுவரை தோன்றாத ஏதோ ஒரு உணர்வு சக்திக்கு மது மேல் தோன்ற ஆரம்பித்தது. கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆண், பெண்களை தொட்டு பேசுவதை கூட அனுமதிக்க மாட்டார்கள். அதுவும் பாரிஜாதம் மிகவும் கண்டிப்பு.
இவளின் நெருக்கம் ஏதோ செய்ய இதுவரை அத்தை மகளை பிடிவாதக்காரியாய் முறைத்து பார்த்து இருந்தவளை, மனைவியாய் சுவாரசியமாய் பார்க்க ஆரம்பித்தான். இன்று ஏனோ? அவனுக்குக்கு புதிதாய் தெரிந்தால் அவனையும் அறியாமல் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.
இந்த நொடியே அவளை அடையும் ஆசை உள்ளுக்குள் உயிர்த்தெழ, அவனின் அனுமதி இல்லாமலே அவன் கைகள் மதுவின் பெண்மையை ஆராயத் துவங்கியது.
பெண்களுக்கே உரித்தான எச்சரிக்கை மணி மனதில் அடிக்க, தூக்கத்திலேயே !! அவன் இடையில் வைத்திருந்த கையை எடுத்து விட்டு “அம்மா தூங்குமா “என்றவள். அவனை மீண்டும் கட்டியணைத்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
இவளின்” அம்மா “என்ற அழைப்பில் தன்னுணர்வு வந்தவன். இறுக்கி அணைத்து இருந்த அவளின் கைகளையும் காலையும் எடுத்து விட்டு, விடு விடு என்று வெளியில் சென்று விட்டான். தூக்கத்தில் விழித்தெழுந்த மதுவிற்கு முதலில் ஒன்றும் புரியாமல் போக, மலங்க மலங்க விழித்தாள்…..
27 வயது சக்திக்கு இந்த உணர்வு புதிதுது எனும்போது, 18வயது மதுவிற்கு இது எல்லாம் எங்கே தெரியப்போகிறது…..
பிறந்தநாள் அன்று பேருந்தில் மது, சக்தி மேல் சாய்ந்து தூங்கியதிற்கு சாரி கேட்டதிற்கும் காரணம் இது தான். அன்று போல் இன்றும் விட்டு விட்டு சென்று விட போகிறான். என்று பயந்து தான் மறு பேச்சின்றி பேருந்தில் இருந்து கீழ் இறங்கினாள்.
ரூம்மில் இருந்து வெளியில் வந்தவன் நேராக சென்று, அந்த இரவு வேளையில் கிணற்றில் குதித்தவன் தான். (அட நீச்சல் தெரியும்ங்க )
பொழுது விடிந்த பிறகுதான் கிணற்றிலிருந்து மேலேறினான். சின்ன பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ண பார்த்துட்டேனே அவளுக்கு வாழ்க்கையில எவ்வளவு கனவு இருந்துச்சோ, கல்யாணம் பண்ற வயசா அவளுக்கு, அவனை அவனே என்ன செய்வதென்று தெரியாமல் வெறுத்துவிட்டான்.
வெறும் சின்ன அட்ராக்க்ஷன் இது எவ்வளவு நாள் நீடிக்கும், இவ இல்லாமல் நான் இல்லை என்ற எண்ணம் உறுதியா நம்ம மனசுக்கு வரணும் இல்லையா, இவளுக்காக எது வேணா செய்யணும்னு நம்ம மனசுக்கு தோணனும் . நம்ம வாழ்க்கையை மோகத்தில் ஆரம்பிக்காமல் காதல்ல ஆரம்பிக்கணும் என்று முடிவெடுத்தான்.
சில நாள் கழித்து பரிமளாவின் குடும்பம் சென்னை செல்ல, மதுவிற்கு இந்த தாய் மாமா வீடு புதிது இல்லை. எனினும் அவளின் இப்போதைய மனைவி என்கிற ஸ்தானம் புதிது இல்லையா, அம்மாவை பிரிய முடியாமல் அழுகையில் கரைந்தாள்.
என்னதான் மற்றவர்ள் ஆறுதல் அளித்தாலும் சக்தி ஆறுதல் அளிக்க வேண்டும். என்று அவள் மனம் நினைக்க, அவள் இருக்கும் திசையில் கூட அவன் நிழல் படவில்லை.
மதுவிற்கு அன்று சாந்தி சொன்னதும், அவன் படுக்கை அறையில் இருந்து வெளியில் சென்றதும் நினைவு வர, பிரியா மீது வைத்திருக்கும் காதலால் தன்னை தவிர்க்கிறான். என்று தோன்ற ஆரம்பித்தது. மனதிற்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது, என்ன என்று சொல்லத் தெரியாமல் அழுகையில் கரைந்தாள்…
சக்தியும் புதிதாக, ஓயாமல்” மது மது” என ரீங்காரமிடும் மனதை அடக்கும் வழி அறியாமல் தன்னையும் மீறி அவளை நெருங்க விடாமல் இருக்க மதுவை கையில் எடுத்தான். ஆம்.. உயிர் உள்ள மதுவை நினைக்காமல் இருக்க, உயிரைக் கொல்லும் மதுவை கையில் எடுத்தான்……..
ஆனால் அதை உண்ட பிறகுதான் மதுவின் மேல் விருப்பம் இன்னும் அதிகமானது. இரவில் வீடு வருவதை அறவே தவிர்த்து தோட்டத்தில் தங்கிவிட்டான். மகனின் இந்த புது பழக்கத்தை கண்டு செய்வதறியாது திகைத்து விட்டனர் பெற்றோர்கள்.
மதுவிற்கு ஏதோ செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. தாலிகட்டும் நிமிடம்கூட ஒரு முறை அவளைப் பார்த்து சம்மதமா என்று தலையசைத்து கேட்ட பின் தான் தாலியை கட்டினான். அவனுக்கு சம்மதம் இல்லாமல் எதற்கு இந்த கல்யாணம். என்று நினைக்கத் தோன்றியது..
நாட்கள் செல்லச் செல்ல மதுவிற்கு சக்தியின் மேல் கோபம் அதிகமானது என்றால் சக்திக்கு ஆசை அதிகம் ஆனது.
18 வருடம் நான் பார்த்து வளர்ந்த பொண்ணு மேல இவ்வளவு நாள் வராத இந்த ஆசை இப்போ மட்டும் ஏன்? என்று தன் மனதை குடைந்தவன். மறக்கிறேன் பேர்வழி என்று அதிகம் நினைத்தான். இப்படி குடித்து சீரழிவதற்கு பேசாமல் அவளோடு வாழ்ந்து விடலாம் என்று முடிவையும் எடுத்து விட்டான்.
18 வயதில் நம் நாட்டில் எவ்வளவோ பெண்கள் திருமணம் முடிந்து பிள்ளைகளோடு வாழத்தான் செய்கிறார்கள். திருமணம் முடிந்து குழந்தை பிறந்தபின் படிப்பதும் இப்போது சாதாரணம்.
ஆனால் அந்த வயதுக்குரிய சந்தோஷத்தையும் கவலை இல்லாமல் திரியும் மனதையும் இழந்து விடுகிறார்கள். வாழ்க்கை எனும் ஒரு வழிப்பாதையில் ஒவ்வொரு பருவத்தையும் அனுபவித்து வாழவேண்டும். பட்டாம்பூச்சியாய் திரிய வேண்டிய காலத்தில் மருமகள், மனைவி, அம்மா என்ற இந்தக் குடும்ப சுமைகள் தேவையா,
பள்ளிப் பருவம் முழுவதும் பெற்றோரின் கண்டிப்பில், திருமணம் முடிந்தால் பின் கணவன் கண்டிப்பில், அவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லாமல் போய்விடுகிறது இல்லையா,
கல்லூரி காலம் மட்டுமே நம் மனதில் பசுமையாக இருக்கும் அழகிய அனுபவம். அதை மது அனுபவிக்கவேண்டும் என்று சக்தி நினைத்தான்.
அதோடு இப்போது தனக்கு மதுவின் மேல் இருப்பது காதலா??? என்று தெரியவில்லை. ஏதோ ஒரு பிடித்தம் இருக்கத்தான் செய்கிறது. அதுபோல் மது விற்கும் தன் மேல் வரவேண்டும்………..
அவளுக்காக ஏதேதோ யோசித்து, வீடு சென்று அவளை சந்தித்தான். அவள் எடுத்த எடுப்பிலேயே !!!”எனக்கு உங்களோடு வாழ பிடிக்கல, நான் உங்களுக்கு டைவர்ஸ் கொடுக்கிறேன்” என்று விட்டாள்.
“என்ன”!!! என்று வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ந்து நிற்க, சக்தி “பிடிக்கலை என்றால் முன்னாலே சொல்லி இருக்கணும் இல்லையா, கல்யாணத்துக்கு முன்னாடி நான் எத்தனை டைம் உன்கிட்ட கேட்டேன் “என்று கேட்க,
காவிரியும் கங்காவும்” மதுமா டைவர்ஸ் அது இதுன்னு பேசக் கூடாது டா, நீ சக்தியோட… ஆயுசுக்கும் சந்தோசமா வாழனும். அதுதான் பாட்டியோட ஆசை, எங்களோட ஆசையும் கூட “என்று பொறுமையாக விளக்க,
“நிறுத்துங்க” என்று ஆங்காரமாய் கத்தி, அந்த ப்ரியாவை மனசுல நினைச்சுகிட்டு, குடிச்சிட்டு சீரழியற, உங்க பையனோட எல்லாம் இந்த பட்டிக்காட்டுல என்னால வாழ முடியாது.”நான் டைவர்ஸ் கொடுக்கத்தான் போறேன்..
மற்றவர்கள் சுதாரிக்கும் முன் புயலைப் போல் அவளை நெருங்கியவன் ஒரு கையால் அவள் தலை முடியை கொத்தாக பிடித்து கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து கொண்டே !!!
“உன் புருஷனோட இன்னொரு பொண்ணு சேர்த்து வச்சு பேசுறியே வெட்கமா இல்லையா, நம்ம கல்யாணத்துல தாண்டி அவளை பல வருஷம் கழிச்சு பார்த்தேன், அவ மூஞ்சி கூட முழுசா ஞாபகம் இல்லை..”
[the_ad id=”6605″]
” நீ என்னடி, எனக்கு டைவர்ஸ் கொடுக்கிறது என்ன பிடிக்கலைன்னு சொல்றது, நான் சொல்றேன் எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல, நான் உன்னை கண்டிப்பா டைவர்ஸ் பண்ணிட்றேன். என்று அய்யனாரை போல் முறுக்கி கொண்டு நின்றான்..
” நீ என் புருஷனா, உன் மூஞ்சிய போய் கண்ணாடில பாரு, உனக்கெல்லாம் என்னை கட்டிக்க என்ன தகுதி இருக்கு, சரியான காட்டான்”, என்று அவளும் கத்திவிட்டாள். இதுவரை பரிமளாவை தவிர யாரும் அவளை அடித்ததில்லை. அவரும் கடைசியாக எப்போது அடித்தார் என்று நினைவில்லை.
பழனியும் திருப்பதியும் வந்து பிரித்த பின்னர் தான் இருவரும் சண்டையை நிறுத்தினர். திருப்பதி சக்தியை அடிக்க, மனோவிற்கும் பழனிக்கும் அவரை சமாதானப்படுத்த சரியாய் போயிற்று, “
கோபமாய் அர்ஜுனுக்கு அழைத்தவன், “உன் தங்கச்சிய வந்து கூட்டிட்டு போயிடு, அவ இங்க இருக்கக் கூடாது “என்று விட்டான்…
சென்னையிலிருந்து அவர்கள் இங்கு வருவதற்குள் மதுவிற்கு காய்ச்சல் வந்துவிட்டது. முகமெல்லாம் அப்படி ஒரு வீக்கம் பார்க்க யாரோ போல் இருந்தாள். காவேரி சக்தியோடு பேசவே இல்லை..
பாரிஜாதத்தின் வளர்ப்பு இப்படியா, ஒரு பொண்ணை கைநீட்ற அளவுக்கு தப்பா போச்சே!!! என்று அழுகையின் ஓய்ந்தார்….
வாடிய சருகாய் காய்ச்சலில் படுத்திருக்கும் மகளைக் கண்டு தாய் உள்ளம் பதறி விட்டது. ஆனால் பரிமளா மிகவும் பொறுமையாக அமைதி காத்தார். சக்தியை பற்றி நன்கு தெரியும் முன் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பேசும் மகளின் குணமும் தெரியும்.
“பெருசா வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாது. அவ என்ன பேசியிருந்தாலும் கொஞ்சம் பொறுமையா சொல்லியிருந்தா கேட்டிருப்பா” என்றார்.
எப்போதும் துள்ளலோடு திரியும் தங்கையை, இப்படி கண்ட எந்த அண்ணனுக்கும் அவளை காயப்படுத்திய வரை அடித்து துவம்சம் செய்யும் ஆக்ரோஷம் கிளம்பும், அர்ஜுன்க்கும் வந்தது..
வீட்டினர் அனைவரும் ஒதுக்க, தன்னால் இப்படி மனைவி ஆகிவிட்டாலே!!! என்ற குற்ற உணர்ச்சியில் துடிக்கும் நண்பனை பார்க்கையில், அண்ணனாய் இருப்பதைவிட நண்பனாய் மாறி சக்தியிடம் அமர்ந்துகொண்டான்..
இப்போது சக்தியின் குற்ற உணர்ச்சி இன்னும் மேலேறியது, அர்ஜூனின் தோள் மேல் சாய்ந்தவாறு, “”மாப்பிள, மதுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுன்னா, என்னால உயிரோடு இருக்கவே முடியாது டா என்று கண்களில் கண்ணீரோடு சொல்ல,
அவனும் அவனை சேர்த்து அணைத்து ” மதுவிற்கு ஒன்னும் ஆகாது, ஆனால் இனி இப்படி பண்ணக் கூடாது என்று கண்டிப்பாய் சொல்ல, கண்களில் கண்ணீரோடு “ம்ம்ம் “” என்று தலை மட்டும் அசைந்தது…
அடுத்த ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு வர அன்றே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டவன். அர்ஜூனின் கையில் கொடுத்து குடும்பம் மொத்தத்திற்கும்” நான் அமெரிக்கா போறேன், இனி அவ இங்கு இருக்க வேண்டாம். கூட்டிட்டு போய் விடு “என்று அவனிடம் கூறி “என்ன படிக்கணும்னு நினைக்கிறாளோ படிக்கட்டும். படிச்சு முடிச்ச பிறகு அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து. இனி அவ வாழ்க்கையில என்னோட தலையீடு எதுவும் இருக்காது.”
“அப்பா, அம்மாவை நல்லா பார்த்துக்கோ “என்று மனோவை பார்த்து கூறிவிட்டு, மது இருக்கும் திசையின் புறம் திரும்பி “சாரி” என்று ஒற்றைச் சொல்லில் உதிர்த்துவிட்டு சென்றுவிட்டான்….
சக்தியைச் சென்னை ஏர்போர்ட் வரை கொண்டுவந்து சேர்த்தது அர்ஜுன் தான். சக்தியின் மனதில் அவள் மேல் இருக்கும் பிடித்தம் முதற்கொண்டு அனைத்தும் அர்ஜுனுக்கு தெரியும்..
” மாப்பிள, ஏதோ கோபத்துல பண்ணிட்ட, அதுக்காக இப்படி அவள தனியா விட்டுட்டு போவயா , கொஞ்ச நாள் பொறுமையா இருடா, அவ புரிஞ்சுபா, உன் மனசுல அவ மேல இருக்க பாசம் எனக்கு புரியுது, தயவு செஞ்சு போகாதடா” என்று அர்ஜுன் கெஞ்ச,
” இல்லை எனக்கு மட்டும் அவ மேல பாசம் இருந்து ஒன்னும் ஆகாதுடா, எனக்கு அவ மேல உண்மையாவே அன்பு இல்ல, அவ எப்போ எது பேசினாலும் எனக்கு அடிக்கணும்னு தான் கோபம் வருதே! ஒழிய, அவகிட்ட அனுசரித்துப் போக தோணலையே!
“என்னால அவ நிம்மதி குறையும் டா, நான் போறேன் டா என்று வாதாட, ”
“சரி ஓகே, நீ போ !!ஆனா, டைவர்ஸ் மட்டும் எப்பவுமே இருக்காது”.என்று திட்டவட்டமாய் கூற,
“இல்லை டா மாப்ள, என்ன வச்சு என் கூட வாழ்ந்து தான் ஆகணும்னு யாரும் அவளை போர்ஸ் பண்ண வேண்டாம். பாவம்டா சின்னபொண்ணு, அவ விருப்பப்படி வாழ விடுங்க…
அவளுக்கு என்ன பிடித்தாலும் அதை படிக்கவை, அவளுக்கான எல்லா செலவும் என்னோடதா இருக்கணும் என்று கிளம்பி விட்டான்….
அங்கு சென்ற பின்” உன்னைப் பிடிக்கலை” என்ற மதுவின் வார்த்தைகள் அவனை தாக்கினாலும். அவளை பற்றிய நினைவுகள் அவனுள் சுகமாய் இருந்தது..
தங்கள் திருமணத்திற்கு பிறகு அவள்மேல் தோன்றியது எல்லாம் ஒரு பெண்மேல் ஆணுக்குத் தோன்றும் ஈர்ப்பு, அட்ராக்க்ஷன் மட்டுமே என நினைத்தவன், பிறகுதான் உணர்ந்தான் அவள் மேல் இருப்பது அட்ராக்ஷன் இல்லை என்று…
[the_ad id=”6605″]
சில பெண்களோடு பழகி நெருங்க ஆரம்பிக்க அவர்களை முத்தமிட முனையும் போது, ஏனோ!! மதுவின் முகம் நினைவு வர பெண்களின் நெருக்கம் பிடிக்காமல் போனது.. அதுவரை வெறும் விதையாய் இருந்த மதுவின் ஞாபகம். காதல் விருட்சமாய் மாறியது..
குடும்பத்தாரின் பிரிவின் வலி தாங்காமல் மது அருந்தத் தொடங்க, அங்கு பாரில் கிடைத்த தமிழ் நண்பன் தான் பைந்தமிழ்.
நாளடைவில் அர்ஜூனை போல் அவனும் உற்ற தோழனாக மாறி போனான். ஆனால் அவன் நட்பு கிடைத்த பிறகு இவன் குடிப்பதை நிறுத்தி விட்டான். தமிழ் அவ்வளவு நல்லவனு நினைக்காதீங்க………
சக்தியின் வலியை விட தமிழின் வலி அதிகம். அதனால் அவன் அளவில்லாமல் குடித்துவிட்டு மட்டையாகி விட, அவனை கொண்டு வந்து ரூம் சேர்பதற்குள் இவனுக்கு போதும் என்றாகிவிடும்.
இதுவரை மதுவிடம் மட்டுமே அவன் பேசாதது மற்றபடி எல்லோருடனும் பேசிக் கொண்டுதான் இருப்பான். இவன் சென்ற பிறகு மதுவிற்கு அந்த ஊரை பிடிக்கவில்லை, அவளுக்கு எப்போதுமே அவனைப் பிடிக்கும். அவனோடு சுமூகமாகப் போக ஆசைதான்.
இவன் ஓயாமல் அவளை சீண்ட, அவளுக்கும் அவனை முறைப்பது வழக்கமாயிற்று. இதுவரை அவன் மனதில் வேறு யாரும் இல்லை என்ற உணர்வே அவளுக்கு போதுமானதாய் இருந்தது..
என்னைக்கு இருந்தாலும் நீ என் புருஷன்தான்.நீயா என்கிட்ட வரணும்.வருவ, அப்போ இருக்குடா, உனக்கு என்று மனதில் நினைத்து அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
அண்ணனும் அம்மாவும் எவ்வளவு சொல்லியும் சென்னை செல்ல மறுத்து ஊரிலேயே இருந்து கொண்டால். அவளுக்கு பெரியதாக எதுவும் படிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. தன் அம்மா அப்பாவைப் போல ஆசிரியர் ஆக வேண்டும் என்பது அவளின் கனவு.
மனோ படிக்கும் அதே காலேஜில் அவளும் சேர்ந்து விட்டாள். இந்த மூன்று வருடத்தில் திருப்பதி அவளின் தந்தையாய் மாறி கால் தரையில் படாமல் பாதுகாத்தார். ஏற்கனவே தோழனாய் இருந்த மனோ உற்ற தோழன் ஆகிப் போனான். சக்தியின் அறை அவளது அறையாய் மாறியது பிறகு அவனுடைய எல்லாம் அவளுடைய உடைமை அல்லவா,
சக்தி , மது ஊரில் இருப்பதைத் தெரிந்து அர்ஜுனிடம் கோபப்பட, “என் புருஷன் வீட்ல தான் இருப்பேன்னு, உன் பொண்டாட்டி சொல்றா, ரெண்டு பேரும் என்ன வச்சு காமெடி பண்றீங்களா”என்று விட்டான்…
என்னைக்கா இருந்தாலும் நீயா வந்தா, நான் உன்கூட வாழ்வேன். ஆனால் நான் வரமாட்டேன் என்று அவனுக்காக காத்திருந்த மது அவனைப் பார்த்து அன்று எதற்காக அழுதாள் என்று அவளுக்கு தெரியவில்லை.
அவன் தேவை போக சம்பளம் முழுவதும் தந்தை கணக்கில் போட அவர் திருப்பி இவனுக்கே அனுப்பிவிட்டார். சரி என்று மது படிக்கும் அதே காலேஜில் இன்னும் பல ஷேர்களை மது பேரில் வாங்கினான்.
படித்து முடித்து அந்த காலேஜெய் அவள் நடத்த வேண்டும் என்று. அதற்கு திருப்பதியும் எதுவும் சொல்லவில்லை. மதுவோ அதை கண்டுகொள்ள கூடவில்லை.
ஆனால் காலாபோக்கில் காலேஜில் ஏதோ தவறு நடக்கிறது என்று தோன்ற பைனான்சியல் கரெக்டா தான் இருந்தது. கோச்சிங்கும் நன்றாக தான் போனது, எங்கோ சரியில்லை என்று திரும்ப திரும்ப மனம் சொல்ல , மதுவின் படிப்பு முடியும் வரை காத்திருக்க நினைத்தவன் உடனே ஊர் திரும்பி விட்டான்.
ஒன் ஆப் த பார்ட்னர் என்பதால் இவன் தாளாளர் சீட்டில் கூட அமர்ந்திருக்கலாம். அவன் மாணவர்களோடு இருக்க தான் பிரியபட்டான்.
அங்கிருந்து வரும்போது அவளோடு சமாதானமாகப் பேசி பிடித்திருந்தால் வாழலாம். இல்லையென்றால் பிடித்தவர்களுடன் சேர்ந்து வாழ் என்று சொல்ல வேண்டும். என்ற எண்ணத்தோடு தான் வந்தான்.
அருகில் மதுவை பார்க்க சீண்டத்தான் தோன்றியது. மிஸ். மதுஸ்ரீ என்று காலேஜில் இருக்க கோபமாய் வந்தது, கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகியும் மிஸ் மதுஸ்ரீ யா என்று ஆத்திரம் வந்தது.பிடிக்காமல் இங்கு இருக்கிறாள். என்று நினைத்தும் விட்டான்.
பிறகு அவளின் ரிங்க்டோன், அவன் அணிவித்த தாலியை கழட்டாமல் இருப்பது, அவனுடைய உடை அணிவது, சென்னை செல்ல விருப்பம் இல்லை என்றது,எல்லாம் விட தூக்கத்திலும் அவனை உணர ஆரம்பித்தது, எல்லாம் சேர்ந்து இவனுக்கு வேறு கதை கூற,
இரவு பீச்சில் இவனை உணர்ந்து அவனுக்காக ஒத்துழைத்ததும் அவளின் ஒவ்வொரு செல்லும் இவனுக்கு ஏங்குவது அன்றைய பேருந்து பயணம் வேறு உறுதி செய்ய, பிறகென்ன இனி அவளை விடுவதில்லை. என்ற முடிவை எடுத்து விட்டான்.
புது வருடத்தின் ஆரம்பத்தில் புத்துணர்ச்சியோடு இரவு கணவன் அளித்த முத்தம் இன்னும் இதழில் குளிர்விக்க புன்னகையோடு கல்லூரி கிளம்பிக் கொண்டிருந்தால் மது.
டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த சக்தியை கண்டதும் நேற்றைய நினைவு வர அவன் முகம் பார்க்காமல், தட்டைப் பார்த்து சாப்பிட்டு எழுந்தால்.
ஏனோ!! அவன் அருகில் இதயத்துடிப்பு அதிகமானது போல், அவன் பார்வை விலக்க முடியாமல் அலைபாய, வேகமாக சாப்பிட்டு எழுந்தவள் வீட்டை விட்டு வெளியேறி விட்டால். அவள் பின் சக்தி வருவதை உணர்ந்தவள் முகத்தில் வியர்த்தது.
காதில் ஏதோ உரச “ஸ்ரீ என்ன பாரேன்” என்றது சக்தியின் காந்த குரல். “பப்ளி ப்ளீஸ் பாருடி “என்று கிசுகிசுப்பாகக் கூற இன்னும் தலை குனிந்து கொண்டாள்.
இப்படி ஒரு வெக்கத்தை இதுநாள்வரை சக்தி இவளிடம் கண்டதேயில்லை. “போடி நான் போறேன்” என்று சத்தமாக கூறி விலகி செல்ல பார்க்க,
சட்டென்று அவன் கையை எட்டிப் பிடித்து விட்டால் “மாமா “என்ற அழைப்போடு ஆனாலும் முகத்தை பார்க்காமல்.
மொழி தொடரும்…..
