Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Amuthangalaal Nirainthen 13 2

லதா பொறுமையாக எல்லாம் கேட்டு.. அவனை ஆசுவாசப்படுத்தி “ போடா… ட்ரெஸ் மாத்தி வா… நிறைய பேசலாம்.. பாட்டி, உனக்கு முறுக்கு செய்து தந்திருக்காங்க… வாடா.. சாப்பிடலாம்..” என நிறைய சமாதானம் சொல்ல… எதற்கும் அசையவில்லை தீபக். அப்போதுதான் நினைத்துக் கொண்டாள் லதா.. ‘இனி இவனை இப்படி ஏங்க விடக் கூடாது…’ என. அதற்கு தக்க தீபக்கும்.. பேசியப் படியே மடியில் படுத்து உறங்கிவிட்டான்… ukgதான் படிக்கிறான்… பால்மனம் மாறாத.. பாலகன்… தன் அன்னையின் பிரிவை சொல்லத் தெரியவில்லை.. தேடியது போல… இன்று கிட்டவும்… நிம்மதியான உறக்கம் குழந்தைக்கு.

அதை எல்லாம் பார்த்திருந்த காமாட்சி, காபியுடன் வந்தார்… பெரியவர்களுக்கு மட்டும்.. அதாவது கணவன், சம்மந்தி.. தனக்கு.. என மட்டும் எடுத்து வந்தார்… எல்லோருக்கும் கொடுத்தார்.

தன் மருமகளிடம் “பார்த்தியா… என்னதான் நாங்க இருந்தாலும் உன்னைத்தான் தேடுவான் பையன், அதுவும் இப்போதான் விவரம் தெரியுது… இனி அவன தனியா விட்டு போகாத… ஏங்கிட போறான். போ… மேலே ரூமில் விடு, தூங்கட்டும்… இங்க டிவி போட்டா… முழிச்சிடுவான்” என தன் பேரனின் தலை கோதினார் பாட்டி. லதாவும் கண்ணில் நீருடன் ‘ம்’ என தலையாட்டினாள்.

காமாட்சி அங்கேயே அமர்ந்து கொண்டார்.. பெரியவர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். அம்மு காவ்யாவுடன் இருந்தாள்… லதா, மகனுடன் மேலே சென்றாள்… 



Advertisement

 

[the_ad id=”6605″]

 

Advertisement

மேலறையில்… தன் கணவன் உறங்குவதை பார்த்து… மெல்ல காட்டிலின் அந்த பக்கம் சென்று, மகனை விட… கணவன் விழித்தான்… முதலில் லதா வரவை உணர்ந்ததும் ஆனந்தம் தான், எனவே எழுந்து அமர்ந்தான் ஆனந்தமாக. 

Advertisement

ஆனால் மகன் அருகில் உறங்கவும்.. ‘இந்த நேரத்தில் உறங்கமாட்டானே’ என தோன்ற “ஏன் என்னாச்சு… ஜுரமா” என மகனை நோக்கி கைகளை நீட்டியபடியே… கேட்டான் கணவன்.

லதா “இல்ல… நான் வந்ததும் பேசிட்டே இருந்தான், அப்படியே தூங்கிட்டான்…“ என ரகசிய குரலில் சைகையுடன் சொன்னாள்.. அதை பார்த்தபடியே எழுந்து அமர்ந்திருந்த கணவனும்.. மையலாய்.. மனையாளை பார்க்க தொடங்கினான்.. அதில் அவளும், கன்னங்கள் சிவக்கத் தடுமாறத் தொடங்கினாள்.

நீண்ட வருடம் கழித்து.. காதலான பார்வை.. கணவனிடமிருந்து. அவன் மேல் கொண்ட பயம் எல்லாம், ஏற்கனவே தன்னவன், பேச்சில் கரைந்திருக்க… இப்போது இந்த மையலான அதிகார பார்வையும் சேர… மனையாள் தப்பிக்க அத்தனை திக்குகள் இருந்தும்… தானே அருகில் வந்து அவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்… 

Advertisement

அவளின் தாக்குதலில்.. சற்று பின் போய் முன் வந்தான் கண்ணாளன்… ஆனால், அத்தனை கர்வம் இளாவின் முகத்தில்.. உண்மையான தன் மறு ஜென்மத்தின் பலன் உணர்ந்தான்… இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தனர்… மனைவி போனால்.. நம்பிக்கை போய்விடுமென இந்த காலை நேரத்தில்தான் உணர்ந்தான் இளா.. எனவே திரும்பி வருகிறேன் என சொன்னதிலேயே.. அவனிடம் பாதி நம்பிக்கை வந்திருந்ததே… அந்த கர்வம் அவனிடம் நீக்கமற நிறைந்து இருந்தது அவளின் அருகாமையில்…

வாகாக அவனும் அவளை திருப்பி கட்டிலில் கிடத்திக் கொண்டான்.. இருவருக்கும் பேச்சுகள் வரவில்லை ஐந்து நிமிடம்… மௌனமான நீண்ட இடைவெளிதான்.. ஏதோ பயம்… தயக்கம், கோவம்.. ஆத்திரம், அதைவிட நம்பிக்கையின்மை எல்லாம் அந்த பேதை பெண்ணின் கண்ணீர் வழி கரைந்து கொண்டிருந்தது… கண்ணாளனுக்கு புரிகிறதுதான், ஆனால் தடுக்கவில்லை… 

ஏதோ, அதில் ஒரு நிம்மதி.. அவனுக்கு.. அப்படியே பத்து நிமிடம் பேச்சுக்கள் இல்லா நிலையில் கரைய… இளா “போதும் டா… அழாத…. இங்க பார் முழுசா இருக்கேன்… இனி உன்னை விட்டு போகவே மாட்டேன்… கடைசியில் கூட, உன்னை கூட்டிட்டே போவேன்.. பாரேன்…” என உச்சி முத்தம் வைத்து… விளையாட்டாய் ஆரம்பித்த குரல்.. காதலாய் தான் முடிந்தது.. 

 

[the_ad id=”6605″]

 

மெல்ல மெல்ல சுயநினைவு வந்தது லதாக்கு… “விடுங்க… எல்லோரும் கீழே இருக்காங்க… வரீங்களா…” என பரபரப்பாக எழுந்து, தன்னை சரி செய்து கொண்டு கீழே சென்றாள்.

அதன்பின் அவளுக்கு வேலைகள் சரியாக இருந்தது… இளா கீழே வந்து தன் மாமனாரை வரவேற்றான்… சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு.. கிளம்பினார் லதாவின் தந்தை.

லிங்கா இன்னும் அலுவலகத்திலிருந்து வரவில்லை… மணி எட்டாக.. அடுத்து டிபன்… நடந்து கொண்டிருந்தது.. லிங்கா அப்போதுதான் வந்தான்.. ஏதோ, ஓய்ந்து தெரிந்தான். அன்னை “சாப்பிட வா டா…” என அழைக்க 

லிங்கா “எனக்கு வேண்டாம்…” என்றான் ஒரே வார்த்தையில்.

இளா, தம்பியை ஆராய்ச்சியாய் பார்த்தான்.. லதா “ஏன் லிங்கா… மதியமே சாப்பிட வரலைன்னு அத்த சொன்னாங்க… என்னாச்சு.. உடம்பு சரியில்லையா…” என்றாள் அக்கறையாக.

அப்போதுதான் லதா வந்ததே தெரிந்தது லிங்காக்கு… எனவே “அப்படியில்ல அண்ணி, நீங்க எப்போ வந்தீங்க” என்றான் சோர்ந்த குரலில்.

லதா பதில் சொன்னாள்.. கூடவே “எதா இருந்தாலும் ரெண்டுவாய் சாப்பிட்டு பேசிக்கலாம் லிங்கா… வாங்க… முகமே சரியில்ல உங்களுக்கு… இட்லிதான்.. சாம்பார் விட்டு, ஸ்பூன் போட்டு தரேன்.. அப்படியே சாப்பிடுங்க..” என சொல்லி உள்ளே செல்ல…

லிங்கா “ச்சு ண்ணி… வேண்டாம்.. மேலே போய் ரெப்ரெஷ் ஆகி வரேன்..” என்றான் சலித்த குரலில்…

லதா “சீக்கிரம் வாங்க… இல்ல… அம்மு மேல வருவா..” என்றாள் சற்று மிரட்டலாக.

லிங்கா “ம்.. எங்க அம்மு” என்றான்.

“காவ்யா இட்லி ஊட்டிட்டு இருக்கா… தோட்டத்தில்… நீங்க, சீக்கிரம் வாங்க” என சொல்லி அனுப்பினாள்.

லிங்கா சோர்ந்து மேலே சென்றான்… பத்து நிமிடம் சென்று.. சாதாரண உடையணிந்து கீழே வந்தான்.. அம்மு உண்டு வந்திருந்தாள்… “ப்பா.. ப்பா…” என லிங்காவிடம் தவழ்ந்து வந்து ஓட்டினாள் குழந்தை. அவளை கைகளில் வைத்தபடியே தன் அண்ணனுடன் உணவு உண்டான் லிங்கா.

அண்ணன் தந்தை என எல்லோரும் ஹாலில் வந்து அமர, லிங்கா “என்ன முடிவு பண்ணிருக்கீங்க…” என்றான் திடமான குரலில் காலையில் எழுந்த வாக்குவாதம் பற்றி நினைவுப்படுத்தி..

லிங்காவிற்கு பணம் தேவையாக இருந்தது.. லோடும் வந்துவிட்டது.. இனி அடுத்த ஒரு மாதத்திற்கு வேலை சரியாக இருக்கும்.. எனவே அதை குறித்து அண்ணனிடமோ தந்தையிடமோ கேட்ட தோன்றவில்லை. அதனால், நாளை காலையில் தாமுவிடம் உறுதியாக பேசவேண்டுமே என எண்ணியிருந்தான்.. எனவே, இப்போது ‘தான்’ காலையில் சொல்லி சென்ற திருமணம் குறித்து கேட்க… மூர்த்தி எழுந்து உள்ளே சென்றுவிட்டார் “என்னமோ பண்ணுங்க டா” என. 

லிங்காவிற்கு கோவம் வர “என்ன பண்ணிட்டேன் அப்படி… “ என சத்தம் போட தொடங்கினான். அவனின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த அம்மு அழ… 

இளா தன் மகளை தூக்கிய படியே… “டேய்… என்ன டா… இப்படி சத்தம் போடற.. அப்பாகிட்ட. நான் பார்த்துக்கிறேன்.. எல்லா ஏற்பாடும் நடந்திக்கிட்டு இருக்கு… நாளைக்கு காலையில் கணபதி ஹோமம் அத முடிச்சு வேலையை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கோம்… அதுக்குள்ள கத்தற… போடா, போய் ரெஸ்ட் எடு… உனக்கு ஒன்னும் புரியலை…” என அண்ணன் சத்தம் போட்டு அனுப்பி வைத்தான் தம்பியை.

லிங்காவும் ஏதோ முனங்கியபடியே மேலே சென்றான்.. 

லிங்கா, சத்தம் போட்டு வந்துவிட்டான்தான்.. ஆனால், உறக்கம் வரவில்லை.. காலையிலிருந்து உண்ணாதது, இப்போதுதான் சாப்பிட்டதால்.. சற்று நடந்தால் பரவாயில்லை என தோன்ற… மொட்டைமாடி வந்தான் போன் எடுத்து…

எதை எதையோ பார்த்துக் கொண்டிருந்தான் போனில்.. கடைசியாக.. fb வர… சக்திப்ரியா சாரங்கன்…. என ஒரு ப்ரண்ட் ரெக்வஸ்ட் இருக்க… முதலில் யாரென பிடிபடவில்லை… ‘தாமு’ என இருந்திருந்தால் தெரிந்திருக்கும் லிங்காக்கு… சாரங்கன் என்பது புரியவில்லை.. மேலும் அவள் தன் fbயை குடைந்து குடைந்து பார்த்திருப்பது வேறு புரிய… லிங்காக்கு தலை வலித்தது…

 

[the_ad id=”6605″]

 

சற்று நேரம் அவளின் fb சென்று பார்த்ததும்தான் புரிந்தது லிங்காக்கு… ‘ஓ…  தாமு அங்கிள் பெண்…’ என. அத்தோடு அவளின் வயது தோற்றம் எல்லாம் புகைப்படத்தில் பார்க்க… ஏதோ போலானது… காதலோ ஆசையோ வரவில்லை… மனம் அழுந்த தொடங்கியது.. ‘இது வேறா..’ என அல்லாட தொடங்கியது லிங்காக்கு. 

இப்போதுதான் ug படிக்கிறாள்… சின்ன பெண்… ஐய்யோ லிங்கா.. உனக்கு விமோட்ஷணமே இல்லை டா…. பணம் வேணும்தான்.. ஆனா, அந்த சின்ன பெண் மனதில்… தேவையில்லா எதிர்பார்ப்பை… கொண்டு வந்திட்டியே டா….’ என இயல்பான லிங்காவின் குழந்தை மனம் நினைத்தாலும்… இப்போது அவன் வேறல்லவா… எனவே தன் தலையில் தானே தட்டி… ‘என்ன இப்போ… நானென்ன கரடியா… புலியா…  அப்படி என்ன செய்திடுவேன்… அவளை.. வரட்டும் எல்லாம் சொல்லிக்கலாம்… சின்ன பெண்தானே… புரிய வைச்சிக்கலாம்…’ என திமிறி நின்றது அவனின் மனம்..

அத்தோடு கூட விடவில்லை ‘நாளைக்கு தாமு அங்கிள் கிட்ட… சொல்லணும்… வீட்டில் நாள் பார்க்கிறாங்கன்னு சொல்லனும்… 

அப்புறம் கடனா ஒரு ஐம்பது லட்சம் கேட்கணும்… முதலில். நாளைக்கு ஒரு வட்டி கட்டனும்… ம்… எப்படி கேட்க்கிறது… பார்க்கலாம்…’ என மனதில் ஏதேதோ எண்ணம் லிங்காக்கு.

இதில் எது அவன்… தெரியவில்லை… அவனுக்கே கூட. யார், எப்போது, எங்கே.. மாறுவர் தெரியவில்லை… யாரும் இங்கு நிலையானவர் இல்லையோ..

“வாழ்க்கையை தேடி நானும் போறேன்…

காண்டுல பாடும் பாட்டுகறான்…

போதையில் பாடும் சோகப்பாட்ட…

சோடவா கலந்து பாடப்போறேன்….

மாமன் ஒட்டாண்ண்டி… 

பெரிய லூஸ்சாண்டி…

அடிவாங்கியே நான் ஸ்ட்ரோங் ஆனா மாயாண்டி 

ஆனனேன் நான் போண்டி… 

அதையும் தான் தாண்டி… போராடுவேன்…

நான் வெறியான விருமாண்டி…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!