Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 12

                                   ஜெய் ஸ்ரீ ராம்  

EPI  -12

 

 இப்போதெல்லாம் நாட்கள் ரக்கை கட்டி பறக்கிறது சக்தி தம்பதியினருக்கு,  மதுவை காலேஜ் கூட்டிப் போவது, கூட்டி வருவது என்று அனைத்தும் சக்தியின் பொறுப்பு ஆனது. 



Advertisement

 ஆனால் என்ன பிரச்சனை என்றால். சும்மாவே!!! சக்தி கிளாஸ் ரூம் வந்து  கிளாஸ் எடுத்தால் மதுவால் கவனிக்க முடியாது. இப்போது அவன் பேசும் காதல் மொழிகளால், அனைத்தும் மறந்து மனது மட்டும் இல்லை,  மூளையை கூட அவனே !! ஆக்கிரமிக்க, 

கல்லூரியில் எடுக்கும் வகுப்பை திரும்பவும் வீட்டில் ஒருமுறை எடுக்கிறான். இன்றும் அதே போல் எடுக்க, அவள் மாமா மாமா என்று அழைத்தவள்.” “சும்மா காலேஜ்ல தான் டார்ச்சர் பண்றேன்னா,  வீட்லயும் கொள்ளாத மாமா, நான் இப்போ படிச்சு என்ன பண்ணப் போறேன்.” என்று சிணுங்கிக்கொண்டே இருந்தாள்.” அப்படி சொல்லாத ஸ்ரீ, என்னை கல்யாணம் பண்ணலைன்னா படிச்சிருப்பே!! இல்லையா, என்னால எதையும் நீ இழந்ததா இருக்கக்கூடாது.”

” நமக்கு எவ்வளவு சொத்து இருந்தாலும், என் பப்ளி சொந்தகால்ல  நிற்கிறத தான் நான் விரும்புறேன். உன் படிப்பு இதோட நிற்கக்கூடாது, இதுக்கு மேலயும்  ஏதாவது ஒரு டிகிரி நீ படிக்கணும் உன் விருப்பப்படி, நீ லக்சரர் ஆகணும். “

Advertisement

“அதுதான் என் ஆசை சரியா” என்றவன், திரும்ப சீரியஸாய் லேப்டாப்பில் கவனம் வைத்து பாடம் எடுக்க சற்று பொருத்து பார்த்தவள்.

Advertisement

 லேப்டாப்பை வாங்கி தன் மடியில் வைத்து பின்னால் நகர்ந்து அவன் மார்பில் சாய்ந்து கவனிக்க,  இவள் தலையில் இருக்கும் மல்லிகை வாசமும், ஆடை இல்லா வெற்று முதுகும் இவனை இழுக்க, 

“ராட்சசி, ஏன்டி என்ன படுத்தற “என மனதில் நினைத்தவன் அவள் இடையில் தன் கைகளைப் படரவிட்டு முதுகில் முகம் பதித்தான்.

 அதுவரை வெட்கச்சிரிப்போடு இருந்தவள். சக்தியின்  கரங்கள் எல்லை தாண்டி பயணிக்க ஆரம்பமாகும் போது சட்டென்று எழுந்துவிட்டாள். 

Advertisement

 

[the_ad id=”6605″]

 

“வாடி” என்று அவன் அழைக்க,  இரு கைகளையும் இடுப்பில் தாங்கி அவனை முறைத்து “மூணு வருஷம் என்ன எப்படி தவிக்க விட்ட,”நல்லா வேணும் டா உனக்கு என்றவள். ஒற்றை கண்ணடித்து பறக்கும் முத்தத்தை பரிசளித்து விட்டு,  ஓடி காவேரியோடு டிவி பார்க்க அமர்ந்து விட்டாள்.

 இங்கு சக்தியோ முகத்தில் புண் சிரிப்போடு அவளை ரசித்து பார்திருந்தான். அவன் நினைத்தால் நொடியில் அவளை ஆக்கிரமித்து விடலாம். அவளும் மறுக்கப் போவதில்லை, அன்றும் சரி இன்றும் சரி மதுவின்  எதிர்காலமும், படிப்புமே அவன் முன் நின்றது.

 ஒற்றை முத்தத்தில் அவனை தன் பின்னால் அலைய விட்டு கொண்டிருந்தாள். அவளிடம் கெஞ்சி,  கொஞ்சி கொண்டிருப்பது அவனுக்கும் பிடித்திருந்தது. தங்கள் மூன்று வருட பிரிவையும் காதலையும் இருவரும் அணுஅனுவாக ரசிக்க ஆரம்பித்திருந்தனர்.

 

 கல்லூரியில் லைப்ரரியன் மேல் நாளுக்கு நாள் சக்திக்கு சந்தேகம் அதிகரித்தது. அவனை கவனித்து விசாரிக்க நல்ல மாணவர்களில் சிலரை நியமித்தான். 

ஆவலோடு அனைவரும் எதிர்பார்த்த பொங்கல் திருநாளும் நெருங்கிக் கொண்டிருக்க, மனோ மற்றும் அர்ஜுன் குடும்பம் சென்னையில் இருந்து வந்திறங்கியது. அவர்களோடு சக்தியின் நண்பன் பைந்தமிழ்.

 

 தை முதல் நாள்

 

 பொதுவாக கிராமப்புறங்களில் மார்கழி மாதம் வந்துவிட்டாலே பெண்களுக்கு ஆர்வம்  ஆகிவிடும். என்னதான் வருடம் முழுவதும் வாசலில் கோலமிட்டாலும், மார்கழியில் தங்கள் ஓவியத் திறனை எல்லாம் காட்டிவிடுவார்கள்.  

 கன்னி பெண்கள் வருடம் முழுவதும் எட்டு மணிவரை தூங்கினாலும் இந்த மார்கழியில் 5 மணிக்கே எழுந்து விடுவார்கள்  . பக்கத்து வீட்டு கோலத்தை விட தங்கள் கோலத்தை பெரிதாகப் போட்டு, மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து பூசணிப்பூ வைத்து, விடிந்ததும் அதை ரசித்துப் பார்த்து மகிழ்வார்கள்.

 இதில் பெண்களுக்குள் போட்டியே நடக்கும் .இந்த மார்கழி மாதக் குளிர் பனிக் காற்று மருத்துவகுணம் வாய்ந்ததாகவும் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் மருத்துவ உலகம் கூறுகிறது.

 இன்றும் அதேபோல்  மது விற்கும், ழினி க்கும் போட்டி நடந்து கொண்டிருந்தது. நன்றாக விடிந்த பின் இவர்களிடம்  சிக்கிய முதல் ஆடு அர்ஜுன் தான்.

 இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை, என நிரூபித்திருந்தனர்.  என்ன செய்வது என்று தெரியாமல்அமைதியாய் கன்னத்தில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.  பின்னோடு வந்த பரிமளா அவனுடன் பணிபுரியும் ஒருவர் அழைத்திருப்பதாக போனை நீட்ட, தன் தாயை தெய்வம் போல்  பார்த்து நகர்ந்து விட்டான்.

 இப்போது பரிமளாவை இருவரும் ஆவலோடு பார்க்க மதுவின் கோலத்தைப் பார்த்து சிரித்துவிட்டு, அவள் கண்ணத்தை தட்டி  தன் மருமகளோடு இணைந்து விட்டார்.

 தாயின் இந்த செய்கையால் மதுவின் முகம் சுருங்கி விட, அத்தை என்று சத்தமாக அழைக்க,  கங்காவும் காவேரியும் வந்து மது பக்கம் நின்று கொண்டனர். மது கெத்தாக லுக்கு விட, 

 திருப்பதியும் பழனியும்  ஏன்???? டாலி பேபி கூட மது பக்கமே நின்று விட்டது. அனைவரும்  சக்தி யார் பக்கம் என்பதை போல் காத்திருக்க, 

 

” என் தங்கச்சி  சூப்பரா போட்டு இருக்கா, “மதுவை  இப்போது கெத்தாக பார்ப்பது ழினியின்   முறை ஆயிற்று.”அப்பா என் பொண்டாட்டியும்  அழகா போட்டிருக்கா, சூப்பர், “என்றவன்.

“டேய் மச்சான்,  வந்து பாருடா உன் பொண்டாட்டி எவ்ளோ அழகா கோலம் போட்டு இருக்கான்னு” என்று அந்த பக்கம்   ஏற்கனவே வைத்து விட்ட போனை இன்னும் பேசிக்கொண்டிருக்கும் அர்ஜுனை இழுத்துக்கொண்டு அருகில் வந்து நின்றான்.

 இருவரும் யார் பக்கம் நிற்பது,   தங்கையையும் பகைத்துக் கொள்ளாமல் மனைவியும் பகைத்துக் கொள்ளாமல் எப்படி முடிவெடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க, 

“என்னடா விடிஞ்சு எவ்ளோ நேரம் ஆகுது, காப்பி வரலையே!! “என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு வந்த மனோவின் கண்களில் அனைத்தும் பட, 

” காலங்காத்தால” என்ன,, வீட்ல எல்லாரும் இங்க  இருக்கீங்க, இன்னும் ஒரு நிமிஷத்துல, என் கைக்கு காபி வரலைன்னா, ” என்று  சற்று நிறுத்தி, “தண்ணிய ஊத்தி விடுவேன்.. “என்று அங்கிருந்த தண்ணீர் பாக்கெட்  எடுக்க, அனைவரும் சிட்டாகப் பறந்து விட்டனர்.

 இப்போது கண்களில் நன்றியோடு அர்ஜுனும் சக்தியும் அவனைப் பார்த்து வைக்க,” த்த்துப்பு நீங்க ஒரு போலீஸ் ஆபீஸர்,  நீ ஒரு லெக்சரர், எல்லாம் வெளிய சொல்லிடாதீங்க, மானம் போயிடும்”. 

  அர்ஜுன் எப்போதும் போல்  மீசையில் மண் ஒட்டாத பாவனையோடு, “மச்சான் ஊருக்கே! டானா,  இருந்தாலும் வீட்டுக்கு தொடப்ப கட்டதான் என்று விட்டு செல்ல, 

 சக்தியோ அடுத்த வருஷம் இதே மாதிரி தை பொங்கல் அன்னைக்கு இந்த வாசல்ல  நீ முழிச்சுகிட்டா நிற்பேடா, இது இந்த அண்ணனின் சாபம் என்று விட்டு போனான்…… 

 மாடியில் இருந்து இவர்களின் ரகளையை பார்த்துக்கொண்டிருந்த பைந்தமிழின் முகம் நண்பன் குடும்பத்தோடு சேர்ந்து விட்டதில் சிரித்து இருந்தாலும். மனம் வேதனையை காட்டியது.

 என்னதான் அவன் மருத்துவனாக இருந்தாலும் அவர்களின் குடும்பமும் விவசாய குடும்பமே!எப்போது கடைசியாக அவர்கள் அனைவரும் சேர்ந்து பேசி சிரித்தார்கள்,  என்று அவனுக்கே நினைவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 பெண்கள் அனைவரும் குளித்துவிட்டு வர, அந்த வீட்டின் மருமகளான மது கையால் வாசலில் பொங்கலிட, அதை சூரியபகவானுக்கு படைத்து நன்றி கூறி வணங்கினர்.

 பின்னர் ஆண்களுக்கு இன்று தோர்னமென்ட்   இருப்பதால் கிரிக்கெட் ஆட வெளியில் சென்று விட்டனர். அர்ஜுன் தான் ஸ்டேட் ப்ளேயர் ஆயிற்றே !

அவர்களுக்கு என்ன கவலை பைந்தமிழும் மனோவும் பௌலிங் நன்றாக போட,  சக்தியும் அர்ஜுனும் பேட்டிங் செய்வது. என்று முடிவு செய்து, இன்னும்  அவர்களின் குழுவில் உள்ளவர்களோடு போட்டியில் களமிறங்கியது. சக்தியின் அணி 

சக்தியின் அணி முதலில்  பேட்டிங் செய்ய, “காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நிரூபிக்கும்,  நம்ம வீட்டு மாப்பிள்ளை அர்ஜுன் அவர்களும், கடந்த மூன்று வருடமாக அமெரிக்காவில்  நம் மண்ணின் புகழை பதித்துவிட்டு வெற்றிகரமாக நாடு திரும்பிய நம் மண்ணின் மைந்தன் சக்தியும் களமிறங்க போகிறார்கள் “என்று மைக் வைத்திருப்பவர் ஒளிபரப்ப,  அங்கு விசில் சத்தம் காதைக் கிழித்தது.

” ஏன் ப்ரோ நம்ம ரெண்டு பேரும் சரக்கடித்து மட்டையாகி, அமெரிக்க மண்ல  உருண்டு புரண்டு போலீஸ் கிட்ட மாட்டின கதைய,  

உங்க ஊர்ல இன்னும் சொல்லலையா” என்று சக்தியின் காதில் பைந்தமிழ் கிசுகிசுக்க,” போங்க ப்ரோ”அதெல்லாம் ராணுவ ரகசியம், வெளியில் சொல்ல கூடாது ” என்றவன் களமிறங்க, 

மாப்பிள்ளையும்,  மச்சானும் அப்படி ஒரு புரிதலோடு விளையாடி முடித்திருந்தனர்.

 எதிரணி இப்போது விளையாட ஆரம்பிக்க, “நம் ஊரின் செல்ல பிள்ளை  மனோ அவர்கள் முதல் பால் போடுகிறார்”” என்று மைக் ஆசாமி ஒளிபரப்ப முதல்  பால் சிக்ஸர் ஆகிவிட்டது.

 மைக் ஆசாமியின் மண்டையை உடைக்கும் வேகம் மனோவிற்கு வர,  

” கூல் பட்டி”, என்று மனோவின் தோளைத் தட்டிய பைந்தமிழ் அடுத்த ஓவரை போட களமிறங்கினான் . அடுத்தடுத்து அவன் 2 விக்கெட் எடுத்துவிட, பில்டிங்கும் மனோ சூப்பராக செய்ய,  பேட்டிங் செய்பவரால் ரன் எடுக்க முடியாமல் போனது.

 இருந்தாலும் அவர்களும், இவர்களுக்கு குறைந்தவர்கள் இல்லை. எனும் வகையில் தொடர்ந்து விளையாட, கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்க அவர்களுக்குத் தேவையானது 8 ரன்கள்.

 வேறொருவர் முதல் பந்து வீச அது சிக்ஸர் ஆகிப்போனது,  அடுத்து நம் பும்ரா மனோஅவர்கள் பந்துவீச போகிறார் என்று மைக்கில்  ஒளிபரப்ப, 

இப்போது  கடைசி பாலை போட வந்த மனோவை தடுத்து  பைந்தமிழ் இறங்கினான். ” நம்முடைய விக்கெட் கீப்பர் அஸ்வின் அவர்கள் அதாவது பைந்தமிழ்  அவர்கள். அவர் ஒரு மருத்துவர் என்பதால் நம் காலயும் உடைத்து அவரே சிகிச்சையும் செய்வார்” என்று மைக்கில்   ஒளிபரப்பிக் கொண்டே இருக்க, 

 இன்னும் இரண்டு ரன்கள் இருக்க நிச்சயம் எதிரணிக்கு   வெற்றிதான் என்று அனைவரும் நினைத்திருக்க, பைந்தமிழின்  முகத்தில் அப்படி ஒரு தீவிரம், அவன் வீசிய பாலின் வேகம்   பேட்டிங் செய்பவரின் முகத்தைப் பதம் பார்த்திருந்தால் அவனின் நிலை என்னவாகியிருக்குமோ!!!

அனைவரும்    பயந்து விட்டனர்.   ஒரு மருத்துவருக்கு இவ்வளவு வேகம் ஆகாது என்று அர்ஜூன் மனதில் துணுக்குற்றது. மனுவிற்கும்  அதுவே தோன்றியது, 

 அவ்வளவு வேகமாக வந்த பாலையும்  பேட்டிங் செய்பவர் அடித்து விட நிச்சயம் அது சிக்சர் ஆகப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்க, 

 அழகாக கேட்ச்  பிடித்துவிட்டான் நம் சக்தி பிரியன். “

“ஆஹா!!!! கேட்ச்,  நம் தோனி அவர்கள் பிடித்து விட்டார். “என்று மைக்கில்  திரும்பவும் ஒளிபரப்ப, அங்கு” ஆஹா! ஓஹோ!” என்ற விசில் சத்தமும் உற்சாக குரல்களும்…….

 இப்போது பைந்தமிழ்  முகம் அவ்வளவு சாதாரணமாக மாறியிருந்தது, அந்த முகம் அர்ஜுனனுக்கு தெள்ளத்தெளிவாக சொல்லியது “நான் தோல்வியை சந்தித்திராதவன்,  எனக்கு எந்த தோல்வியும் பிடிக்காது.” 

 போட்டி  முடிந்து வீடு வந்து சேர்ந்ததும் பைந்தமிழ் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான். பெரியவர்கள் பொங்கல் முடிந்து செல்லலாம் என்று எவ்வளவு தடுத்தும் “இல்லை” என்று பிடிவாதமாக சென்று விட்டான்.

 மனோவும் அர்ஜுனனும் ஏன் இப்படி இருக்கிறான் என்று சக்தியிடம் கேட்க, அவனின் கடந்த காலத்தைப் பற்றி சக்தி கூற அவர்கள் எதுவும் பேசவில்லை……

 சென்ற தமிழையே பார்த்திருந்த சக்தியின் மனதில் “இவனின் வாழ்வு நம் வாழ்வு போல் என்றுதான் சீரடையும் “.என்று கவலையாக இருந்தது.

 

[the_ad id=”6605″]

 

  மாலை வீட்டுப் பெரியவர்களான,   இறந்தவர்களுக்கு பிடித்த பதார்த்தங்களை சமைத்து புத்தாடை எடுத்து, அன்று முழுவதும் விரதம் இருந்து அவர்களுக்கு படைத்து வணங்கினர் . இறந்தவர்களை நினைத்து எல்லோரும் அவரவர் சோகத்தில் உழன்றிருக்க , 

முதலில் தெளிந்த மது மனோவை பார்த்து கண் சிமிட்டி “ஐயோ !!அம்மா” என்று வயிற்றைப் பிடித்து மனோவின் மேல் சாய்ந்து கதற,  அவனும் இவளை விட வேகமாக “கொலை கொலை என்று கத்த ஆரம்பிக்க,  

இவனை விட்டு எல்லோரும் மதுவை சுற்றி நின்று விட்டனர். “என்னடா, என்னாச்சு” என்று ஆளாளுக்கு பதட்டப்பட, தமிழ் தான் ஒரு மருத்துவர் என்பதையே  மறந்து நாத்தனாரின் திடீரென்று அழுகையில் பயந்துவிட்டாள்.

 பின் சுதாரித்து அவளைப் பார்த்து  என்ன ஆயிற்று என்று கேட்க. மனோ எல்லோரையும் விடுத்து  கங்காவை பார்த்து “அம்மா பெத்தபுள்ள கொலை கொலைனு கத்திட்டு இருக்கேன்.  என பார்க்க மாட்டியா “என்று என்கிற

 கங்கா  “உனக்கு என்ன ஆச்சு, கல்லு குண்டு மாறி நல்லா தான் நிக்கிற, ஓரமா போய் விளையாடு என்று மனுவை பார்த்து கத்திவிட்டு மதுவிடம் விரைந்தார். 

 மது அனைவரையும் விட்டு” அண்ணா,  அண்ணா நான் வயிறு வலியில் அவன் மேல விழுந்தா கொலை ன்னு சொல்றான்” என்று இல்லாத கண்ணீரைத் துடைக்க, 

 பழனி “அவன் கிடக்கிறான் மா, மூளை இல்லாதவன். உனக்கு என்ன பண்ணுதுன்னு சொல்லு,  ஹாஸ்பிடல் போகலாம்.  

மனோ “ஆமா,  அப்படியே !கொண்டுபோய் மெண்டல் ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணிடுங்க, நானாவது நிம்மதியா இருப்பேன், “

 

[the_ad id=”6605″]

 

“இந்தக் குடும்பமே சரியான மெண்டல் குடும்பம். ஆண்டவனே எதுக்கு தான் இந்த குடும்பத்துல என்ன படைத்த,  என்று தன் போக்கில் பேசிக்கொண்டே போக,

 இவனை யார்  கவனித்தார்கள். எல்லோரும் மதுவிடம். பரிமளா, சக்தியைத் தவிர,  இவளின் நடிப்பு தான் அவர்களுக்குத் தெரியுமே !

“ரொம்ப ரொம்ப பசிக்குது என்றதுதான் தாமதம். ஆல்  ஆளாளுக்கு அவளின் முன் இலையைப் போட்டு ஒரு பதார்த்தத்தை கொண்டு வர, “ஆஹா, ” எல்லாம் இவளே காலி பண்ணிடு வா” என்று மனோவிற்கு மூளை எச்சரிக்கை செய்ய,

அவனும் அவள் பக்கத்தில் ஒரு இலை போட்டு அமர்ந்துவிட்டான். நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாயும் என்று ஒரு நம்பிக்கை. 

இரவு உணவு முடிந்து  அனைவரும் அவரவர் ரூம் சென்றுவிட,  பெண்கள் மட்டும் இருக்க. கங்கா, காவேரியை பரிமளா பிடி பிடின்னு பிடித்து விட்டார். 

“எல்லோரும் மதுவை தாங்கு தாங்கு என்று தாங்கினாள்.மட்டும் பத்தாது, சக்தியை யாரு கவனிக்கிறது,   சக்தி மதுவைப் பற்றிய அனைத்தையும் கவனிக்கிறான்.மதுவிற்கு அவன் மேல் அக்கறை கிடையாது, ” 

 

“ஒரு  பொண்டாட்டியா அவனுக்கு இவ என்ன வேலை செய்றா சாப்பாடு போடறது, துணி துவைக்கறது, சமையல் அந்த மாதிரி எதாச்சும் செய்றா,”

மதுவிடம் ” ஒரு சுடு தண்ணி வைக்க தெரியும் உனக்கு “சும்மா காலேஜ் போறேன் படிக்கிறேன்னு,  சப்ப கட்டு கட்டாத தமிழினி கூட படிக்கும் போது அர்ஜுன்க்கு அவ்ளவும் செய்வா”கல்யாணம் ஆகி முணு வருசமா நீ வீட்ல ஒரு வேலை செய்ஞ்சு இருக்கியா “, 

“இது பெண் அடக்குமுறைனு  நெனச்சாலும் சரி, அன்னிக்கும்  வயசாகுது அவங்களும் எவ்ளோ வேலை செய்வாங்க, அவங்க சொல்லலனாளும்.சும்மா இருக்கும் போது வீட்ல சின்ன சின்ன வேலை செய்ற,  இனி சக்தியோட எல்லாம் நீதான் கவனிக்கனும்” என்று திட்டவட்டமாக கூற,

காவேரி எதோ சொல்ல வந்தவர், பரிமளா அவரை பார்த்த பார்வையில் அமைதியாகி விட்டார்.

 

மொழி தொடரும்…………… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!