Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Amuthangalaal Nirainthen 13 1

அமுதங்களால் நிறைந்தேன்…

13

சக்திக்கு அன்று முழுவதும் தன் தந்தை சொல்லிய வார்த்தைகளே நிறைந்திருந்தது.. ‘லிங்கா… உன்னை பிடித்து கேட்கிறார்…’ இதுதான் ஓடியது. நல்லதாகவும் இருந்தது.. சற்று, கலவரமாகவும் இருந்தது சக்திக்கு.

இன்னும் பெரிதாக உலகம் தெரியாது.. அதற்காக தெரியாமலும் இல்லை.. அவர்களை சுற்றி உள்ள.. குடும்ப வட்டம் அப்படி.. எனவே, அவனை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினாள் பெண்.



Advertisement

எனவே கீழேயே இருந்தாள்… தனது வளர்ப்பு பெற்றோர் அடிக்கடி பேசிக் கொண்டது… என எல்லாவற்றையும் கவனித்தப் படியே இருந்தாள். வேறு வேலை ஓடவில்லை சக்திக்கு. இன்று தந்தையை கூட மிரட்டவில்லை.. அமைதியாக மனதில் லிங்காவை பற்றி… ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

சாரங்கன்… வந்தார், அன்று மாலையில். கட்சி கரையிட்ட வேட்டி சட்டை.. கழுத்தில் பட்டை சங்கிலி… கையில் ஒரு பெரிய நவரத்தின மோதிரம்.. அனைவரையும் பார்வையில் தள்ளி நிறுத்தும் அரசியல்வாதியாய் வந்து அமர்ந்திருந்தார் சாரங்கன். சற்று இலகுவாக வீட்டு மனிதராக அமர்ந்திருந்தார்.

சாரங்கன்.. உயர்நிலை பள்ளி தாண்டாதவர். பெற்றோர் விபத்தில் இறந்துவிட.. தன் அக்கா சரஸ்வதியும்.. தானும் என தங்களின் கிராமத்தில் வசித்து வந்தார்.

Advertisement

பெற்றோரின் இறப்புக்கு பிறகு பள்ளி செல்லாமல்.. கட்சி, கொடி, பிரச்சாரம்… என அரசியலில் அடிமட்ட தொண்டராக தன்னை நுழைத்துக் கொண்டார். 

Advertisement

 

[the_ad id=”6605″]

 

Advertisement

அங்கு, தன் கட்சியில்… தலைவர்கள் பேசுவதற்கு.. எழுதி கொடுக்கும்.. ஒரு எழுத்தாளராக… உள்ளே, வேலை செய்தவர்தான் தாமோதரன். அப்போதிலிருந்து இருவருக்குள்ளும் நல்ல பழக்கம்.. அதில்தான்… தன் அக்காவை தாமோதரனுக்கு மணமுடித்து வைத்தார் சாரங்கன்.

சாரங்கன் நிர்மலா தம்பதியின் பெண்தான் சக்திப்ரியா. நிர்மலா பேறுகால சிக்கலில் உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு, எவ்வளவு சொல்லியும் சாரங்கன் மறுமணம் செய்து கொள்ளவில்லை.

தன் அக்காவையும் மாமாவையும் நம்பி தன் பெண்ணை விட்டு சென்றார்.. முழு நேரமாக அரசியலில் தன்னை நுழைத்துக் கொண்டார். ஆக, தாமோதரனுக்கும் குழந்தையில்லை ஆதலால் சாரங்கனின் பெண் சக்திதான் இவர்களுக்கு பெண். 

எனவே, சக்தியை பொறுத்துவரை… அவளின் படிப்பு, வளர்ப்பு எல்லாம் தாமோதரன் பொறுப்பானது. 

இப்போது சாரங்கன்.. அமர்ந்தபடியே “சக்தி…” என்றார்.

பெண் வந்து நின்றாள்… “என்ன டா… எங்கேயும் வெளிய போகலையா…” என்றார் வாஞ்சையாய். 

மகளும் “இல்ல ப்பா… எல்லா ப்ரண்ட்ஸும் பிஸி… அதான்… எங்கேயும் போகல” என்றாள் நார்மலான குரலில். தன் தந்தையின் அருகில் கூட வரவில்லை… நின்றபடியே பதில் வந்தது. சாரங்கனும் அதை நினைக்கவில்லை.. அமைதியாக இரண்டு வார்த்தை பேசினார் அவ்வளவுதான், பின் திரும்பி தன் மாமா தாமுவுடன் பேச தொடங்கினார்.

இப்போது தாமு, சக்திக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை… லிங்காவை பற்றி சொன்னார்.. “நம்ம சக்தியை… மூர்த்தி… சத்தியமூர்த்தி வீட்டில், அவங்க பையனுக்கு பார்க்கலாம்ன்னு இருக்கு… அந்த பையனுக்கும் நம்ம பிள்ளைய பிடிச்சிருக்கு…. உனக்கு தெரியுதா.. யார சொல்றேன்னு…. அதாம் ப்பா… அந்த மில்… “ என சத்தியமூர்த்தியை நினைவு படுத்தினார் தாமு. பின் அவர்களின் குடும்பம் குறித்து சொன்னார்.. தாங்கள் எப்படி சந்தித்தோம் என எல்லாம் சொன்னார்.

பொறுமையாக கேட்டுக் கொண்டார்… சாரங்கன். கூடவே  “எப்போதும் போல செய்ங்க மாமா… உங்களுக்கும், அவளுக்கும் பிடிச்சா சரி… என்ன பண்ணனும் சொல்லுங்க செய்திடலாம்…” என இரத்தின சுருக்கமாக முடித்துக் கொண்டார் பெற்றவர்.

சொந்தம் என்பதே சாரங்கனுக்கு… இவர்கள்தான்… எனவே எப்போதும் தன் மகள் குறித்து பேசுகையில்… அவரின் வாயிலிருந்து.. மந்திரம் போல, இதே வார்த்தைதான் வரும். அப்படியொரு நம்பிக்கையா.. இல்லை உறவுமுறையினால் வருகிறாதா.. தெரியாது… ஆனால் ஒரே மாதிரி “நீங்க பார்த்து செய்ங்க மாமா” என்பதுதான் வரும்.

சரஸ்வதி அங்கேயே நின்றிருந்தார் “ஏன் ப்பா.. சரா… யோசிச்சு சொல்லு.. அவங்க போன முறை… நீ ஓட்டு கேட்க, போன போது கூட சரியா பேசலைன்னு மாமா சொன்னார்… இப்போதும் ஏதாவது நடந்திட போது… உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே…” என்றார் தமக்கை.

 

[the_ad id=”6605″]

 

சாரங்கன் “அதெல்லாம் உன்பாடு… உன் புருஷன்பாடு… சொன்னா வரேன்… நீங்க பார்த்து நல்லது கெட்டது செய்ங்க அவளுக்கு.. உங்களுக்கு தெரியாதது என்ன இருக்கு… அத்தோட, பொண்ணு கொடுக்கிற இடம் நல்லா இருந்தா சரி, அங்க போய்… மான அவமானம் பார்த்துகிட்டு… காலத்துக்கும் பொண்ணு நல்லா இருக்கணும்… எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை… மாமா நீங்க பார்த்து செய்ங்க… “ என்றார் ஆனந்தமாக. இப்படியே இவர்களின் பேச்சு நீண்டது..

சக்தியின் காதில் இதெல்லாம் விழத்தான் செய்கிறது… ம்.. காதுகளை இங்கே வைத்துக் கொண்டு தான் இருக்கிறாள்.. லிங்கா, ‘தன்னை பிடித்துக் கேட்டான்’ என்ற வார்த்தையில் சந்தேகம் வர.. அவனை பற்றி தெரிந்துக் கொள்ள சக்தியின் காதுகள் இந்த நான்கு மணி நேரமாக அங்கே ஹாலில்தான் இருக்கிறது, அவள் மட்டும் டைனிங் ஹாலில் லேப்டாப்புடன் இருக்கிறாள்.

கொஞ்சம் தெளிவான பெண்தான் போல… அவளின் வட்டம் அப்படிப்பட்டது தானே… ஏதோ ஒரு வகையில் பணம்தான் எல்லோரையும் படைக்கும் உலகம்.. அதில் சில பல சமயம் பகடையாய், பணயமாய்.. இன்னமும் பெண்களை வைத்துக் கொண்டிருக்கிற உலகம் தானே.. இது. எனவே சுற்றிலும் என்ன நடக்கிறது.. எதற்கு நடக்கிறது.. என்ற அறிவு.. இயல்பாய்.. வந்து விடுகிறது இந்த பெண்களுக்கு. 

அத்தோடு.. தன் அப்பாவும் மாமாவும் பேசிக் கொண்டதில்.. அவர்களின் குடும்பம்.. கௌரவம்.. குடும்பத்தில் உள்ள நபர்கள் என எல்லாம் கிட்ட தட்ட.. அவள் காதுகளில் விழ.. லிங்காவின் தந்தை பெயர்.. கம்பெனி என அவர்களின் எல்லா விவரமும் சக்தியின் காதுகளில் விழுந்தது.

சக்தி அப்போதே தனது லேப்டாப் எடுத்து… பொதுவாக எல்லோரும் செய்வது போல.. அவனை அதில் தேட தொடங்கினாள். சோஸியல் மீடியா.. அவனை காட்டியது.. fb எனும் ரூபத்தில்… கடந்த இரண்டு வாரமாக ஏதும் பதிவிடவில்லை.. மற்றபடி.. அவனின் ஏழு எட்டு வருட… சாகசங்கள் எல்லாம் அதில் தெரிந்தது.

அதிலும் குறிப்பாக… “ரசகுல்லா… வித் மீ” என ஒரு போட்டோ… அவனும் ட்ரீமியும் இருக்கும்… ஒரு புகைப்படம், அது ஒன்றுதான் அவளின் மனதில் நெருடல்… அதில், அவன் அந்த பெண்ணிடம் காட்டிய நெருக்கம்தான்… அவளை யோசிக்க வைத்தது. 

வேறு நிறைய புகைப்படங்கள் இருந்தது, அதிலும் பெண்கள் இருந்தனர்தான்.. எல்லாம் தூரமாக.. பார்த்தாலே.. தெரியும் கண்ணியத்துடன் இவனும் நின்றான்தான். 

எனவே மற்ற எல்லாவற்றையும் விட இதில் சற்று அதிக உரிமை.. கூடவே அந்த வாசகம்… அத்தோடு அவளின் இடையை பிடித்தபடி.. முகத்தில் அப்படி ஒரு புன்னகை.. கர்வத்தை தாங்கி நின்றதோ… அது.. அது ஒன்று… மட்டும் ஏதேதோ  சொன்னது அவளுக்கு. மற்றபடி… அவனின் படிப்பு, விளையாட்டு… வாங்கிய கோப்பைகள்.. சென்று வந்த இடம்… நண்பர்கள்… என பல போட்டோக்கள் எப்போதும் போல.. இருந்தது. சக்திக்கு, அந்த ஒரு போட்டோ மட்டும் மனதில் நின்றது. 

மேலும், லிங்காவின் சிரித்த முகம்… அது அவளை ஈர்த்தது.. அவனின் எல்லா புகைப்படமும் ஒன்றை பறைசாற்றியது… ‘நான் கலகலப்பானவன்‘ என்பதைதான். எனவே, அது அவளை ஈர்த்தது. பூரிப்பான சிரித்த முகம்.. ஏதும் அதில் கபடமே தெரியவில்லை… எனவே, ‘அவனே என்னை கேட்கிறான்’ எனும் போது பெரிதாக எந்த பிரச்சனையும் இருக்காது என எண்ணினாள் பெண். 

அத்தோடு.. இப்போது இங்கு யார்தான் உண்மையை சொல்கிறார்கள்.. அவர்கள் குடும்பம் சரியானதாக இருக்கிறது. எனவே அப்பா சொன்னதும் அதுதானே. எனவே.. பெரிதாக ஏதும் வந்திட போவதில்லை… என அவனின் புகைபடத்தை பார்த்து கொண்டிருந்தாள்… மெல்ல மெல்ல.. கண் வழியாக உள்ளே இறங்கினான் லிங்கா. சக்திக்கு கனவுகள் கூட வரும் போல இருந்தது… ‘நாளைக்கு காலையில் சீக்கிரம் ஜாகிங் போகணும்…’ சின்ன சிரிப்பு வந்தது உதட்டில்… அமைதியாக லிங்காவின் புகைப்படத்தை… டவுன்லோட் செய்து கொண்டாள்.. மேலே சென்றாள் தனதறைக்கு.

#%#%#%#%#%#%#%%#%#%#%#%#

 

[the_ad id=”6605″]

 

லதா சரியாக தீபக் வரும் நேரத்திற்கு வந்துவிட்டாள்.. இளா மேலே உறங்கிக் கொண்டிருந்ததால் தெரியவில்லை. 

தீபக் பள்ளியில் இருந்து வந்தவுடன் அன்னையிடம் ஒரே செல்லம்.. தன் தந்தையை கூட கவனிக்க விடவில்லை அவன்… அம்மாவிடம் ஈஷிய படியே அமர்ந்திருந்தான். லதா “இரு டா… தாத்தாக்கு காபி கொடுத்துட்டு வரேன்..” என சொல்ல… தூக்கு என கை நீட்டினான் மகன். ஆசையாக வாரி எடுத்துக் கொண்டாள் அன்னை. 

இதையெல்லாம் காமாட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.. எனவே “நீ போ லதா அவனை பாரு” என சொல்லி, தான்.. சம்மந்தியை கவனிக்க தொடங்கினார்.

மகனும்… அன்னையும்… மீண்டும் ஹாலில் அமர்ந்து கொண்டனர்… எப்போதும் வந்தவுடன், சாக்ஸ்.. யூனிஃபார்ம் என எல்லாம் நீக்கி, குளித்து வருவான்.. தீபக். இன்று எதுவும் செய்யவில்லை. தன் அன்னையுடன் கழுத்தை கட்டிக் கொண்டு… ஹாலில் அமர்ந்திருந்தான்… ஏதோ கதை.. ‘ஏன் வரல… ஹரி, அவனின் ப்ரண்ட்.. ஏதோ புது கலர் பென்சில் வாங்கியிருக்கிறானாம்… அது எனக்கும் வேணும்….’ என ஏதோ கதை… தீரவேயில்லை.. 

லதாவும் “ம்… சரி டா… நாளைக்கு கடைக்கு போகலாம்…” என சொன்னாள்.. இன்னும் தீரவில்லை மகனுக்கு… “ம்… ம்மா… என இன்னும் ஏதோ கதை…” அவன் சொல்லை பொறுமையாய் அன்னை மட்டுமே கேட்பாள் என்ற பிஞ்சு நம்பிக்கை அவனுக்கு. அதுவும் விடாமல் ஏதோ கதையளந்தது தன் அம்மாவிடம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!