Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kavalanin kaithi aval

காவலனின் கைதி அவள்-12

கைதி-12

“ராகவ் சொந்த ஊர் ஊட்டி”, என்றார் கமிஷனர்.

“ஊட்டி தானே!! நானும் போயி ரொம்ப நாளாச்சு நான் பார்த்துக்குறேன் அட்ரஸ் கொடு”, என்றான் சிவா.

“அட்ரஸ் என்கிட்ட இல்ல விசாரிச்சு சொல்றேன்”, என்றார் லேசான பயத்துடன்.



Advertisement

“சரி நான் ஊட்டிக்கு கிளம்புறேன் அட்ரஸ் விசாரிச்சுட்டு எனக்கு அனுப்பு”, என்று கோபமாக சொல்லிவிட்டு சென்றான்.

ஊட்டி:

மிருணா யோசனையுடனே உட்கார்ந்திருந்தாள்.‘ இவ அப்படி  என்ன யோசிக்கிறா?”, என்று ஸ்ரீ நினைத்துக்கொண்டே, “அண்ணா…”, என சத்தமாக கூப்பிட்டாள்.

Advertisement

வெளியே இருந்த அமர், ராகவ், விக்ரம் மூவரும் உள்ளே வந்தனர். அனு ஸ்ரீயை புரியாமல் பார்த்தாள். “என்ன ஸ்ரீ???”, என்றனர் ராகவ் மற்றும் விக்ரம்.

Advertisement

“அண்ணா மிருணாவுக்கு நம்ம வீட்ல எல்லா இடத்தையும் சுத்தி காட்டிட்டேன். உங்க ரூம் மட்டும் பார்த்ததில்ல”, என்றாள் கண் ஜாடையாக மிருணாவை காட்டிக்கொண்டே.

“சரி அதுக்கென்ன காட்டிட்டா போச்சு”, என்றான் ராகவ் சிரிப்புடன்.

“என்ன அத்தான் காட்டப் போற?”, என்றாள் சங்கவி கீழே இறங்கி வந்தபடி.

Advertisement

“எங்க ரெண்டு பேரோட ரூமும் மிருணா பார்த்ததில்ல அதுக்குதான் கூப்பிடுறேன்”.

“ஓகே மிருணா வா நான் காட்டுறேன்”, என்றாள் சங்கு.

மிருணா அவள் பேசுவதை கவனிக்காமல் யோசனையுடன் இருந்தாள்.“ஏய்!!! எந்த லோகத்துல்ல இருக்க டி? உன்ன தான் கேக்குறா”, என்று அனு தோளைத் தட்டினாள்.

அதில் சுய உணர்வு வந்தவள். “என்னடி ???”, என்றாள் சலிப்புடன்.

“மிருணா என்னாச்சு உனக்கு???”.

“ஒன்னுமில்ல ஸ்ரீ”, என்றாள் குழப்பமாக.

“உனக்கு என் அத்தான் ரூம் காட்ட கூப்பிட்டேன். நீ இப்படி அமைதியாவே!!! இருக்க”.

“சாரி சங்கவி வேற ஒரு யோசனைல இருந்தேன், கவனிக்கல”.

“இட்ஸ் ஓகே”.

“பாப்பா ரூமுக்கு போலாம் வா ராக்கி”, என்றான் அமர்.

“ம்ம்… அனு  , மிருணா வாங்க”, என்று படிக்கட்டில் ஏறினான். சிறியவர்கள் அனைவரும்  முதலில் ராகவ் ரூமிற்கு சென்றனர்.

உள்ளே நுழையும்போதே இரு பக்கமும் பெரிய பிளாஸ்டிக் பூக்கள்லான பூ ஜாடி இருந்தது. பெரிய ஹால் அதன் நடுவே பெரிய சோபா ஒன்றும், இரு பக்கமும் ஒற்றை சோபாவும், வட்ட வடிவத்தில் சிறிய டேபிளும் இருந்தது. சுவர்களில் இயற்கை படங்கள் ஒட்டி பார்ப்பதற்கே!! அழகாக இருந்தது. அதை தாண்டி பெட்ரூம்  அந்த காலத்து பெரிய தேக்கு மர கட்டில் போட்டிருந்தது. அதன் இருபக்கமும் சிறிய நைட்லேம்ப் பொருந்தியிருந்தது. சுவர்களில் அங்கங்கு இவர்கள் மூவரும் எடுத்த போட்டோக்கள் ராகவன் தனியாக இருக்கும் போட்டோக்கள் இருந்தது.

ராகவ் இருபக்கமும் இருந்த ஸ்கிரீனை இழுத்து விட்டான். இருபக்கமும் கண்ணாடி சுவர்கள் போல் இருந்தது. இடது பக்க சுவரில் ஓரத்தில் பால்கனி செல்லும் கதவும் அதன் பக்கத்தில் பாத்ரூம் செல்வதற்கு இன்னொரு கதவும் போடப்பட்டிருந்தது, பெரியப்பெரிய கபோர்டுகளும் இருந்தது.

“உங்க ரூம் அழகாயிருக்கு”, என்றாள் அனு சிரிப்புடன்.

“தேங்க்ஸ்”, என்று சிரிப்புடன் அவள் காதின் பக்கம் குனிந்து,” நம்ம ரூம் டி”, என்றான் சிரித்துக்கொண்டே. அனு முறைத்தாள்.

[the_ad id=”6605″]

சங்கவி விக்ரமிடம் வளவளவென பேசிக்கொண்டு இருந்தாள். “மிருணா இந்த ரூம் எப்படி இருக்கு???”, என்றாள் சிரிப்புடன்.

“ரொம்ப அழகா இருக்கு ஸ்ரீ. நீ சொன்ன மாதிரியே!! செமையா இருக்கு “, என்றாள் சிரிப்புடன்.

“ம்ம்.. இது விக்கி அண்ணா தான் ரெடி பண்ணுனான் அவனுக்காக, அப்புறம் தாத்தா ரூமுக்கு போயிட்டான்”, என்றாள் சிரிப்புடன்.

“பாருடா விக்கி உனக்குள்ள இப்படி ஒரு ரசிகன் இருக்கானா??”, என்றான் கிண்டலாக.

“அழக யார் வேணாலும் ரசிக்கலாம் அமர். இது ஜஸ்ட் டிரையல் பார்த்தேன்”, என்றான் சிரித்துக்கொண்டே.

“ட்ரையலுக்கே இப்படியா???”, என்றாள் அனு சிரிப்புடன்.

“ஆமா”, என்றான் சிரிப்புடன்.

“என் அத்தான என்ன நினைச்சீங்க? அவர் எவ்வளவு டேலன்ட் ஆனவர் தெரியுமா?? இப்படி ஒரு விஷயம் இருக்கான்னு நாம யோசிக்கிறதுக்கு முன்னாடியே!! அதை  முடிச்சிருவாரு. என் ப்ராஜக்ட் அத்தான் தான் ஐடியா குடுத்தாங்க”, என்றாள் சங்கவி பெருமையாக.

“உன் பிராஜக்ட பண்ணி முடிச்சுட்டியா???”, என்றாள்  கிண்டலாக.

“ஓ… பண்ணி பாஸ் பண்ணிட்டேன்”, என்றாள் பெருமையாக.

“அப்பா… பெரிய ஆளுதான்”, என்றாள் நக்கலாக. விக்ரம் மிருணாவை முறைதான்.

“ஆமா என் அத்தான் பெரிய ஆள்தான்”, என்று மிருணாவின் நக்கலை கவனிக்காமல் சொன்னாள். மற்றவர்கள் லேசாக சிரித்தனர்.

“சங்கவி போதும் என் பெருமைய படிச்சது”, என்றான் எரிச்சலுடன்.

“என்ன அத்தான் ஏன் கோவப்படுறீங்க? நான் என்ன பண்ணுனேன்??”, என்றாள் பாவம் அவன் கையை பிடித்துக் கொண்டு.

“அட எனக்கு என்ன கோவம்?? சரி வாங்க என் ரூமுக்கு போகலாம்”, என்று சங்கவி கையை விடுவித்து சென்றான். அனைவரும் பின்னால் வந்தனர்.

“அஜு டார்லிங் நம்ம ரூம்ல வேற என்ன சேன்ஜ் பண்ணனும் சொல்லு நீ வரத்துக் குள்ள மாத்திருறேன்”, என்றான் ராகவ் மெதுவாக.

“நீ என்கிட்ட அடி வாங்கப்போற பாரு”, என்றாள் முறைப்புடன்.

“சரி அடி “, என்றான் கிண்டலாக.

“உன் கிட்ட பேசுறதே!! வேஸ்ட்”, என்று வேகமாக முன்னால் சென்றாள்.

உள்ளே நுழையும்போதே பூஜாடிகள் ஆள் உயரத்திற்கு இருந்தது. ராகவ் ரூமை விட பெரிதாக இருந்தது. அறை, நடுவே பெரிய சோபாவும் இருபக்கமும் அதைவிட சிறிய சோபாவும் வட்ட வடிவில் சிறிய பூஜாடியுடன் டேபிள் போடப்பட்டிருந்தது. இருபக்க சுவரிலும் பச்சைவண்ண புட்கள் அதை சுற்றி பட்டாம்பூச்சி, இன்னும் சில பூச்சிகள் , மரங்கள் என இயற்கையோடு இணைந்தது போல் ஓவியம் சுவர் முழுக்க வரைந்திருந்தான்.

மிருணா அதன் பக்கத்தில் சென்று தொட்டுப்பார்த்தாள். அனு மறு பக்கம் சென்று தொட்டுப் பார்த்தாள்.” வாவ் ரொம்ப அழகா இருக்கு”, என்றாள் மிருணா உற்சாகமாக.

“மிருணா அண்ணா இத வரைய ஒருத்தர  அழைச்சுட்டு வந்து போட்டாங்க “, என்றாள் சிரிப்புடன்.

“உன் ரூமுக்கு ஏன் ஸ்ரீ போடல??”.

“எனக்கு முதல்ல போடணும்னு தோணல அப்புறம் இத பார்த்ததும்  போடணும்னு நினைச்சேன். அதுக்குள்ள அந்த டிராயிங் மாஸ்டர் பிஸியாகிட்டாரு”, என்றாள் தோளை குலுக்கி.

“ஆமா அது என்ன ஓரத்துல ஒரு கதவு ??”, என்றாள் அனு.

“அது ராகுவ் ரூமுல்ல இருந்து என் ரூமுக்கு வர வழி”, என்றான் விக்ரம்.

“அந்தப் பக்க ரூம்ல கதவு நான் பார்க்கவே இல்லையே!!”.

“இல்ல அனு நீ கவனிச்சு இருக்க மாட்ட, அங்க இருக்கு”, என்றான் ராகவ்.

“ம்ம்….”.

அதை தாண்டியதும் சிறிய அறை இருந்தது,” என்ன ரெண்டு பக்கமும் கதவு இருக்கு??”.

“ஒன்னு பாத்ரூம் இன்னொன்னு அண்ணா ஆஃபீஸ் ரூம் மிருணா”.

“ஓ..”.

பெரிய அறை நடுவே தேக்கு மரத்தால் செய்த பெரிய கட்டிலும் இருந்தது. அதன் இருபக்கமும் சிறிய கபோர்டு வைத்த டேபிளில்  நைட்லேம்ப் பொருந்தியிருந்தது. பின்னால் உள்ள சுவரின் ஓரத்தில் பெரிய ஜன்னலும், கட்டுலுக்கு பின்னால் விக்ரமின் பெரிய புகைப்படமும் அதை சுற்றி இவர்கள் குடும்ப படம், இவர்கள் மூவரும் இருக்கும் படம்,  இவர்களுடன் சங்கவி இருக்கும் படம், தாத்தா பாட்டி படம் இப்படி நிறைய படங்கள் இருந்தது. அதற்கு எதிர் சுவர் பக்கம் பெரிய பெரிய கபோர்டுகளும் இருந்தது.

மிருணா விக்ரமின் பெரிய புகைப்படத்தை பக்கத்தில் சென்று பார்த்தாள். ‘என்ன இவன் இதுல இவ்ளோ!! அழகா இருக்கான், நானும்  வெட்கமே!! இல்லாம பக்கத்துல வந்து பார்க்குறேன்’, என்று தன்னைத்தானே!! மனதில் திட்டிக் கொண்டாள்.

“மிருணா இந்த படத்துல அத்தான் சூப்பரா இருக்காருல்ல “, என்றாள் சங்கவி பெருமையாக.

மிருணா முறைப்புடன் ,“உனக்கு வேற வேலையே!! இல்லையா?? இவன எப்ப பாரு புகழ்ந்துக்கிட்டே இருக்க”, என்று திட்டிவிட்டு வேறு பக்கம் சென்றாள். மற்றவர்கள் சத்தம் வரமால் லேசாக சிரித்தனர்.

விக்ரம் ரிமோட்டை எடுத்து பட்டனை அழுத்தினான். இரு பக்கமும் இருக்கும் ஸ்கிரீன் விலகியது. வலது பக்க ஓரத்தில் பால்கனி செல்லும் கதவு இருந்தது. அங்கிருந்து பார்க்கும்போது கண்ணுக்கு எட்டிய தூரமும் பசுமையாக  இருந்தது,     ” இது ராகவ் ரூம்ல இருக்க மாதிரியே இருக்குல்ல”, என்றாள்.

“ஆமா அனு”, என்றான் விக்ரம் சிரிப்புடன்.

“அண்ணா ஸ்கிரீன மூடிட்டு லைட்ட போடு “, என்றாள் ஸ்ரீ ஆர்வமாக. 

“ம்ம்.. சரி “, என்று ஸ்க்ரீனை ரிமோட்டால் மூடிவிட்டு மேலே உள்ள விளக்கை ரிமோடில் போட்டான்.  மாளிகையில் உள்ளதுபோல் சிறிய அலங்கார லைட் மாட்டி இருந்தது. அதன் ஒளி கண்களை கூசாமல் மங்கலாக எரிந்தது. அனைவரும் மேலே பார்த்தனர். அந்த கண்ணாடி போல் இருக்கும் சுவரில் தண்ணீர் வழிந்து செல்வதுபோல் அங்கங்கு மீன்கள் துள்ளி விளையாடுவது போல் தெரிந்தது.

“வாவ்.. செமையா இருக்கு”, என்றனர் மிருணா மற்றும் அனு உற்சாகமாக.

“தேங்க்ஸ்”, என்றான் சிரிப்புடன்.

“இத்தனை நாளா இங்க வரேன் இத நான் பார்த்ததே!! இல்லையே!! டா”, என்றான் அமர்.

“இத நைட் மட்டும் தான் போடுவேன் டா”.

[the_ad id=”6605″]

“அமர்  மேல இருக்க சுவர்ல செயற்கையா இருக்க நட்சத்திரம், நிலா இதெல்லாம் அண்ணா ஓட்டி வச்சுருக்காங்க, அத நைட் டைம்ல பார்க்குறப்ப ரொம்ப அழகா வானத்தையே!! பார்த்துகிட்டு தூங்குற மாதிரி இருக்கும்”, என்றாள் ஸ்ரீ ஆர்வமாக.

“டேய்!! அப்ப நைட்  நான் உன் கூட தூங்குறேன் டா “, என்றான்  ஆர்வமாக. அனைவரும் சிரித்தனர்.

“அண்ணா அத்தான் கூட அவர் மனைவி மட்டும் தான் தூங்கணுமாம், நான் கூட கேட்டேன் முடியாதுன்னு சொல்லிட்டாரு”, என்றாள் சங்கவி விக்ரமை முறைத்துக்கொண்டே.

“ஓ… இதுவேறயா உன் கொள்கைய மாற்ற வாய்ப்பு இருக்கா??? டா”, என்றான் கிண்டலாக.

“நோ வே அமர்”, என்றான் சிரிப்புடன்.

“சங்கவி உன் அப்பா கால் பண்ணி இருக்காரு வா”,  என்று மீனாட்சி சத்தம் போட்டார்.

“இதோ!! வரேன் அத்த”, என்று கீழே சென்றாள்.

“அமர் இன்னைக்கு நைட்டு என்கூட படுத்துக்கோ!!”, என்றான்  சிரிப்புடன்.

“அப்ப உன்  கொள்க என்ன டா ஆகுறது??”, என்றான் கிண்டலாக.

“அது சங்கவி இருக்கனால அப்படி சொன்னேன் டா, விட்டா அவ என் ரூம்ம பிடிங்கிப்பா “, என்றான் சிரிப்புடன்.

“அப்ப நானும் வரேன் மூணு பேரும் ஒண்ணா படுத்துக்கலாம்”, என்றான் ராகவ் வேகமாக.

“ஓகே!!”, என்றனர் மற்ற இருவரும்.

“சரி அஜு இங்க வா இந்த பால்கனி வேற சைடு இருக்கு. இங்க இருந்து பார்த்தா நம்ம தோட்டதுல்ல இருக்குற மரத்த தொடலாம், சூப்பரா இருக்கும் வா”, என்று அனுவை இழுத்து சென்றான்.

“ஹனி.. உன் அண்ணே அடி வாங்காம வர மாட்டான் போல”, என்றான் கிண்டலாக.

“நல்லா அடி வாங்கட்டும்”.

“இப்படி ஒரு தங்கச்சி கிடைக்க  உன் அண்ணன் என்ன புண்ணியம் பண்ணுனானோ!!”, என்றான் கிண்டலாக.

“ஹலோ!! புண்ணியம் தான் பண்ணிருக்கணும் “, என்றாள் கெத்தாக.

“அப்ப நான் தான் பாவம் பண்ணிட்டேன் போல நீ ஒய்ஃப்பா கிடைக்க”, என்றான் பொய்யான சோகத்துடன்.

“என்ன சொன்ன??”, என்று அடிக்க வந்தாள். அமர் வெளியே ஓடினான். இவள் துரத்திக் கொண்டே சென்றாள். மற்ற இருவரும் இவர்கள் பார்த்து சிரித்தனர்.

விக்ரம் மிருணாவை பார்த்தான்.“உங்க ரூம் செம்மயா இருக்கு. எனக்கு கூட நைட் இங்க படுத்து பார்க்கணும்னு ஆச வந்துருச்சு “, என்றாள் லேசான சிரிப்புடன்.

“நைட் மட்டும் என்ன இப்பவே படுத்து பாரு”, என்றான் சிரிப்புடன்.

“என்ன கிண்டலா??”, என்றாள் முறைப்புடன்.

“உண்மையத் தான் சொல்றேன்”, என்று நெருங்கினான். மிருணா  பின்னால் நகர்ந்து பெட்டில் இடித்து பெட்டிலே!! விழுந்தாள்.

“ஆ…”, என்று கத்தினாள்.

“கத்தாதடி மேல பாரு”, என்றான் சிரிப்புடன் பெட்டில் உட்கார்ந்து.

மேல தண்ணீர்கள் அழகாக ஓடிக் கொண்டு இருந்தது. “உண்மையாவே!! ரொம்ப அழகா இருக்கு மேல, ஆமா தண்ணிய ஏன் வேஸ்ட் பண்றீங்க??, அதுல இருக்குற மீன்லாம் உண்மையானதா?? “, என்றாள் ஆர்வமாக அவனை பார்த்து.

“தண்ணி வேஸ்ட் பண்ணல இந்த தண்ணி டூடேஸ்கு அப்பறம் தோட்டத்துக்கு போயிடும், நான் வந்தா மட்டும் தான் தண்ணி இதுல விடுவாங்க, இல்லனா தண்ணி இதுல இருக்காது, அதுல்லாம் பிளாஸ்டிக் மீன்”, என்றான் சிரிப்புடன்.

சங்கவி உள்ளே வந்து பார்த்ததும் அதிந்தாள்.“ஏய்!! நீ எதுக்கு பேட்ல படுத்துருக்க? “, என்றாள் கோபமாக. மிருணா வேகமாக எழுந்து நின்றாள்.

“நான்தான் படுக்க சொன்னேன்”, என்றான் எழுந்து நின்று.

“அத்தான் சொன்னா நீ பண்ணுவியா??”, என்றாள் கோபமாக.

“இப்ப எதுக்கு கத்துற???”.

“தப்பா இருக்கு அத்தான். இவ எதுக்கு இப்படி பண்றா??”, என்றாள் கோவமாக.

“போதும் சங்கவி நீ ரொம்ப ஓவரா பேசுற, ஐ நோ மை லிமிட் ஓகே!! இதெல்லாம் எனக்கு தேவையா எல்லாம் உன்னால தான் “, என்று விக்ரமை திட்டி விட்டு சென்றாள்.

இவர்கள் சத்தத்தில் நான்கு பேரும் வந்து,” என்ன ??”, என்று கேட்டனர். விக்ரம் நடந்த அனைத்தையும் சொன்னாள்.      ” சங்கவி நீ தேவை இல்லாம பேசுற”, என்றாள் ஸ்ரீ கோபமாக.

“என்ன தேவை இல்லாம பேசுறேன் அவ என்னமோ!! இந்த ரூமுக்கு சொந்தக்காரி மாதிரி படுத்து இருக்கா, இந்த அத்தானும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்காரு”, என்றாள் கோபமாக.

“சங்கவி வாய மூடு”, என்று விக்ரம் கோவமாக கத்தினான். அதில் அமைதியானாள். “ஏதா இருந்தாலும் தெரிஞ்சுக்கிட்டு பேசு, அவள பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை. அண்டர் ஸ்டாண்ட்”, என்றான் கோபமாக. சங்கவி தலையை மட்டும் ஆட்டினாள்.

மிருணா கீழே வந்து சோபாவில் உட்கார்ந்து டிவி சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தாள். மாற்றிக் கொண்டு இருக்கும்போது செய்தி சேனல் வந்தது. அதில், “கோவையில் ஐந்து ரவுடிகளின் பிணம் கிடைத்திருக்கிறது, இவர்களை யார் கொன்றார்கள்?? என்ன நடந்தது எதுவும் தெரியவில்லை, இதற்கும் நேற்று நள்ளிரவில் ஊட்டியில் நடந்த கொலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா??? என்பதை போலீசார் விசாரித்து கொண்டு இருக்கின்றனர்”, என்று அவர்கள் புகைப்படத்தை காட்டினர்.மிருணா அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள்.

“மிருணா அப்பா கால் பண்ணுனாங்க நான் ஸ்கைப்ல கூப்பிடுறேன்னு  சொல்லி இருக்கேன்”,  என்று அமர் டேபிளில் லேப்டாப் வைத்து உக்காந்து ரிமோட்டை எடுத்து டிவியை அணைத்தான்.

மிருணா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்தாள். மற்றவர்களும் பேசாமல் அமைதியாக வந்து உட்கார்ந்தனர். சங்கவி ஓரத்தில் உக்கார்ந்தாள்.

“அமர் கண்ணா”, என்றார் கவிதா அன்பாக.

“கவி மா..”, என்றான் சந்தோஷமாக.

“என்னடா கண்ணா ஒரே ஜாலி தானா??”, என்றார் சிரிப்புடன்.

“ஆமாமா எங்க விஷா??? எங்க போய்ட்டா ஆளையே!! காணோம்???”.

“ஒரு நிமிஷம் இரு அமர், மிருணா என்னைய பாரு, என்னாச்சு??”, என்றார் லக்ஷ்மணன் கூர்மையான பார்வையுடன்.

அவர் கேட்டது நொடியில் முகத்தை மாற்றியவள்.” ஒன்னும் இல்லப்பா உங்கள மிஸ் பண்றேன் அவ்ளோ!! தான் ஆமா எங்க விஷா??”, என்றாள் வேகமாக.

“அவ நீங்க கூப்பிட்டால்லாம் வர மாட்டாளா அவளோட மாமா கூப்பிட்டா தான் வருவாளாம் எங்க விக்கியும் ராக்கியும்??”, என்றார் சிரிப்புடன்.

“இதோ இங்கதான் இருக்கோம் மாமா”, என்றனர் வேகமாக லேப்டாப்பை திருப்பி.

“மாமா..”, என்று கத்திக் கொண்டு வேகமாக வந்து இவர்களுடன் உட்கார்ந்தாள்.

[the_ad id=”6605″]

“அடடே!! மாமா மேல இவ்ளோ!! பாசமா டா”, என்றான் விக்ரம் கிண்டலாக.

“இருக்காதா பின்ன நீங்கதான் சூப்பர் ஹீரோ வச்சே!!!”, என்றாள் சிரிப்புடன்.

“விஷா இந்த வார்த்தைய கேக்கறப்ப என் காதுல தேன் வந்து பாயுது டா”, என்றான் ராகவ் கிண்டலாக.

“பார்த்து மாமா தேன்கூடு இங்க ஹிப்ட்டாச்சுன்னு நினைச்சு தேனில் வந்து பெரிய கூடா கட்டிற போகுது”, என்றாள் கிண்டலாக .அனைவரும் சிரித்தனர்.

“விஷா  மரம் மாதிரி இருந்த மரமாயிடுவாங்களா??  அதுக்கு தெரியும் டா இது மரம் இல்ல வெறும் களிமண்னு”, என்றாள் ஸ்ரீ கிண்டலாக.

“ஆமா அண்ணி இத மறந்துட்டேன் பாருங்க “, என்றாள் கிண்டலாக.

“டோட்டல் டேமேஜ்”, என்றான் பொய்யான சோகத்துடன்.

“விஷா குட்டி “, என்றாள் அனு லேப்டாப்பை அவள் பக்கம் திருப்பி.

“அனு அக்கா”, என்றாள் சந்தோஷமாக.

“அனு..”, என்றனர் கவிதா மற்றும் லக்ஷிமணன் சந்தோஷமாக. அனுவிடம்  நலம் விசாரித்தனர். பிறகு அனைவரும் பேசிவிட்டு வைத்ததும், மிருணா மீண்டும் டிவியை ஆன் செய்து செய்தியை போட்டாள்.

“அமர் இங்க பாரு இவன் யாருன்னு தெரியுதா??”, என்றாள் கேள்வியாக ஒர் புகைப்படத்தை காட்டி,

“இவன எங்கேயோ பார்த்து இருக்கேன், எங்கன்னு தெரியல”, என்றாள் யோசனையுடன்.

“இவன் அந்த சிவாவோட ஆளு நம்ம வீட்டுக்கு முன்னாடி நிப்பானே!!! இவன் தான் என்னைய ஃபாலோ  பண்ணுனான்”.

“ஓ… செத்துட்டானா?? சரி விடு தொலைஞ்சது தொல்ல”.

“முடியாது இவன நான் நேத்து டிரஸ் வாங்கிட்டு வரப்ப அந்த ரொவுடியோட பார்த்தேன்”, என்றாள் கோபமாக எழுந்து நின்று.

“மிரு லிசன் எதுக்கு தேவை இல்லாம யோசிக்கிற அவன்தான்னு கன்ஃபார்மா தெரியுமா??”, என்றான் விக்ரம் சாதாரணமாக.

மிருணா கோவமாக விக்ரம் பக்கத்தில் வந்து,” எதுக்கு இப்படி பண்ற?? நேத்து நீங்க ரெண்டு பேரும் எங்கள வீட்ல விட்டுட்டு எங்க போனீங்க???”, என்றாள் கோபமாக விக்ரம் மற்றும் ராகவை பார்த்து. அனைவரும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றனர்.

“அது உன் கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல”, என்று  விலகி செல்ல போனான்.

“ஏன்டா இப்படி பண்ற??  இதெல்லாம் எங்க போய் முடியுமோ!!! எனக்கு தெரியல்ல”, என்றாள் விக்ரமின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி.

“மிருணா நாங்க எதுக்கு இதெல்லாம் பண்ண போறோம் , எங்க கிட்ட கன்  இருக்கு தான் அத யூஸ் பண்ணுனா கவர்மெண்ட்ல  கணக்கு காட்டனும்”, என்றான் ராகவ் பொறுமையாக.

“மிரு உனக்கு ஏதோ ஆச்சு காலையிலிருந்து என் கிட்ட சண்ட போட்டுட்டே!! இருக்கடி”, என்றான்  சலிப்புடன்.

“ஆமா நீ முதல்ல என் கிட்ட சாரி கேளு, காலையில் என் கிட்ட பொய் சொன்ன அத கேட்டதுக்கு சண்ட போட்ட”, என்றாள் கோபமாக.

“ஏன்?? நான் சாரி கேக்கனும், நீதான் கேட்கன்னும்  நான் மார்னிங் உன் கிட்ட என்ன சொன்னேன்”, என்றான் கோவமாக.

“வேணா நீ பேச்ச மாத்துற, நான் கேட்குற எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேங்குற, உனக்கு திமிரு டா நீ சொல்லுறத தானே ராகவ் பண்றாரு, ஏன்??? ஏன் டா இப்படி???”, என்றாள் அவன் மார்பு அடித்தப்படி.

“மிரு…”, என்று அவள் கையை  பிடித்து தடுத்தான்.

“ஏய்!! என்ன நீ என் அத்தனையே!!  குற்றவாளி மாதிரி நிக்கவ ச்சு கேள்வி கேட்குற?”, என்றாள் சங்கவி கோபமாக.

“தப்பு பண்ணுனா அப்படித்தான் கேட்பேன்”, என்றாள் விக்ரமிடம் இருந்து கையை விலக்கி அவளை திரும்பி பார்த்து.

“என் அத்தான் எப்போதுமே!! தப்பு பண்ண மாட்டாரு, அவர இந்த வீட்டுல இன்னவரைக்கும் யாருமே கேள்வி கேட்டது இல்ல, நீ ஒரு கெஸ்ட் அவர்கிட்ட இப்படிதான் நடந்துப்பியா?? அமர் அண்ணா என்ன இதெல்லாம்???”,  என்றாள் கோபமாக.

“என்கிட்ட மட்டும் பேசு என் அண்ணாவ இதுல இழுக்காத, நீங்க கேள்வி கேட்கம இருந்தா நான் ஏன் கேட்க கூடாது??”, என்றாள் கோபமாக.

“இது அவரோட வீடு அவர் வீட்டிலையே!! இருந்து கிட்டு அவரையே!! திட்டுற, அடிக்கிற, கேள்வி கேட்குற”, என்றாள் கோபமாக.

“சங்கவி..”, என்று கத்தினர் விக்ரம், ராகம் மற்றும் ஸ்ரீ மூவரும்.

“அவர் வீடு தானே!! இனி எனக்கு இங்க என்ன வேல நான் போறேன்”, என்று வேகமாக மாடிக்கு சென்றாள். அனைவரும் அவள் பின்னால் சென்றனர். மிருணா அவள் உடைமைகளை வேகமாக எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

மிருணா வீட்டை விட்டு செல்வாளா??? இவளை தேடி ஆபத்து வருவதை அறிவாளா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்………………………………………….. 

கைதியின் சிறை தொடரும்………………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!