Un Vizhigalin Mozhi Ennavo 13
ஜெய் ஸ்ரீ ராம்
EPI -13
தை இரண்டாம் நாள்
மறுநாள் காலை விடியற்காலையிலேயே !!ஆண்கள் புது மண் பானை மற்றும் பொங்கலிடும் பொருட்களோடு தோட்டத்திற்கு சென்று விட்டனர்.
Advertisement
வீட்டுப் பெண்கள் பூஜைக்கு தேவையான உணவுகளை சமைத்து பின்னர் எடுத்துச் செல்வர்.
தோட்டத்தில் நடு வயலில் மண்ணை பறித்து குழிவெட்டி அடுப்பு மூட்டி அனைத்து தெய்வங்களையும் வேண்டி மண்பானையை அடுப்பில் வைத்தனர்.
சிறியவர்கள் மூவரும் தோரணம் கட்டி முடித்து, பசுகளை குளிப்பாட்டி, கழுத்தில் மாலையிட்டு வண்ணம் பூசி, கொம்புகளில் பலூன் கட்டிக் கொண்டிருந்தனர்.
Advertisement
பின்….. இன்றைய நாளின் விழா நாயகர் மற்றும் நாயகிகள் இல்லையா, ஜொலித்து நின்றிருந்தனர்.சற்று நேரத்தில் பொங்கல் பொங்க வீட்டுப் பெண்களும் வந்து சேர, பொங்கலோ பொங்கல் என்று எட்டு திக்கும் கேக்கும் வண்ணம் , பொங்கல் பானையை போல் அவர்களும் மகிழ்ச்சியாய் பொங்கினர்.
Advertisement
வீட்டின் மூத்தவன் மூன்று வருடம் கழித்து வந்ததின் மகிழ்ச்சி வேறு,
ஆண்கள் அனைவரும் கிணற்று நீரில் குளித்து வர அவரவர் மனைவிமார்கள் அவர்களுக்கு தேவையான உடைகள் எடுத்துக் கொடுத்தனர்.
மனோ விற்கும் தாயே கொடுத்துவிட, .மனோ, மதுவின் செலக்சன்.
Advertisement
அனைவருக்கும் ஒரே கலரில் இளம் ஆரஞ்சு வண்ணத்தில் உடை எடுக்கப்பட்டிருந்தது.
பெண்களுக்கும் அதே வண்ணத்தில் காவேரி, கங்கா, பரிமளா மூவரும் புடவை அணிந்திருக்க, தமிழும், மதுவும் லெஹங்கா அணிந்திருந்தனர்.யாழினி பேபி பட்டுப்பாவாடை அதே கலரில் அணிந்திருந்தது.
எல்லோரும் புது உடை அணிந்து வர, சக்தி குளித்து வெறும் துண்டோடு நின்றிருந்தான். அவன் மனைவிதான் வந்ததிலிருந்து சிலபல செல்பிக்களை எடுத்து விட்டு, டாலி யோடு டப்ஸ்மாஷ் செய்து கொண்டிருக்கிறாளே,
நேற்று பரிமளா போட்ட போடில் சக்தியின் உடை மது கொண்டு வரட்டும் என்று காவேரி விட்டு விட்டார்.
தூரத்தில் இருப்பவளை சற்று நின்று பார்த்தவன். தலையயை உலுக்கிவிட்டு முன் அணிந்திருந்த உடையை அணிந்து கொண்டான்.
பரிமளா அவனை கேள்வியை பார்க்க, சும்மா என்று தோளைக் குலுக்கி விட்டு புஜைக்கு எல்லாம் எடுத்து வைக்க சென்றுவிட்டான். ஏனோ!! எல்லோரும் ஒன்றாய் உடுத்தி இருக்க தான் மட்டும் அந்தக் குடும்பத்தில் இருந்து தனித்து விடப்பட்டதாக தோன்றவும் எழுந்து தோப்பை நோக்கி சென்று விட்டான்.
[the_ad id=”6605″]
அவன் பின்னாடி வந்த மது இரு கைகளையும் இடுப்பில் வைத்து முறைக்க, அதுவே !சொல்லாமல் சொன்னது. பரிமளா அவளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் என்று. அவள் நின்ற அழகையும், உடையையும் பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.
இது போல் அவள் உடை அணிந்து அவன் பார்த்ததே இல்லை. எப்போதும் சுடி, ஜீன்ஸ், ஸ் கட் இதுபோல்தான் திருமணத்தன்று மட்டும்தான் புடவை.
காற்றில் மாராப்பு விலகி அவள் முன்னழகை காட்டியும் காட்டாமலும் இருக்க, முன்னிருந்த மன கஷ்டத்தையும் மறந்து சுவாரசியமாய் பார்வைஅவளை தழுவியது, உதட்டில் அவளைமயக்கும் மர்மப் புன்னகையோடு !!!
அவன் பார்வையை உணர்ந்து ஆடையை சரிசெய்தவள். அவன் காதை திருகி” ஏண்டா நீ மட்டும் டிரஸ் வாங்கிட்டு வந்து அத்தை கொடுத்தாங்க, சொத்தை கொடுத்தாங்கன்னு சொல்லுவே!! “
“நான் மட்டும் உனக்கு வாங்கித் தரனும் “என்றவள் அவனை குனியவைத்து முதுகில் மொத்த, எந்த எதிர்ப்பும் காட்டாமல் வாங்கிக் கொண்டிருந்தான் அந்த ஆண்மகன்.
முன் தினம் தான் பரிமளா அவளின் ரூம் வந்து , அவளின் அலமாறியை அடுக்கி வைத்தவர்.சக்தி அவளுக்கு எடுத்து வந்த உடைகளை காட்டி” எதுக்கு !!!இவ்ளோ டிரஸ் புதுசா எடுத்த, இப்போ பொங்கல்க்கு வேற எடுத்து இருக்க” என்று கடிந்து கொள்ள,
“லூசாமா… நீ, சக்தி மாமா கிட்ட நீ தான் எடுத்து குடுத்த, இப்போ நீயே வந்து திட்ற, “என்று இவள் எகிற, இவளை மறுத்தவர்.”நான் எடுத்து கொடுக்கல, அண்ணன், அண்ணி யாரும் எடுத்து தரல, அப்புறம் யார் எடுத்து இருப்பாங்கனு, நீயே யோசிச்சுகோ!!”
“பாரு மது எல்லாரும் உன்னை தலைல வச்சி கொண்டாடறாங்கா, நீ என் பொண்ணுங்கறதால மட்டும் இல்ல, இந்த வீட்டு மருமகள்ன்றதாளயும் தான். உன்னை சந்தோசமா வச்ருக்கவங்கள நீயும் சந்தோசமா வச்சுக்கணும் இல்லயா”,
“எவ்ளோ நாள் தான் நீங்க ரெண்டு பேரும் தனி தனியா இருக்க போறீங்க, அண்ணா, அண்ணிக்கும் அவங்க பேர பிள்ளைங்கள பாக்கணும்னு, ஆசை இருக்கும் இல்லையா, “
“அதோட உங்க வாழ்கை செட்டில் ஆனா தான் நம்ம மனோக்கும் கல்யாணம் பண்ண முடியும், அவனுக்கும் கல்யாண வயசு வந்துருச்சு இல்லையா, புரிஞ்சி நடந்துகோடா”, என்று சொல்லி சென்று இருந்தார்.
அடித்து அடித்து ஒரு கட்டத்தில் ஓய்ந்து “அய்யனாருனு பேரு வச்சது கரெக்டா இருக்கு, முடியலடா சாமி” என்று அவன் மடியிலே அமர்ந்துவிட்டாள்.
குறும்புச் சிரிப்போடு சக்தி மதுவை நோக்கி குனிய, அவன் கழுத்தில் தன் கரத்தை மாலையாய் கோர்த்து விட்டு, “போ “என்று அவர்கள் தோட்டத்து வீட்டை இவள் காட்ட,
சக்தி “எல்லாரும் இருக்காங்க……இப்போவா” என்று கிசுகிசுப்பாய் கூற, அவன் தலையில் நங்கென்று கொடியவள் “மூன்று வருஷம் கழிச்சு இப்ப வந்து ரொமான்ஸ் பண்ணனும்னு பாக்குறியா, பிச்சுப்புடுவேன் “என்றாள் சட்டமாக,
அங்கு இவர்களின் உடைக்கு மேட்சான அவனது உடையை அவனிடம் நீட்ட, அப்படியே! அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றி
பொய்க் கோபத்தோடு” முட்டைக்கண்ணி வாங்கி வச்சிட்டு தான் என்ன சுத்த விட்டியா, ”
“மூன்று வருஷமா வாங்கிட்டு தான் இருக்கேன். அத போட்டுக்க நீதான் இல்லை “என்றவளின் விழிகளில் கண்ணீர்.
“ம்ம்ம்ம் ச்… ஸ்ரீமாஅழாதடா, நான்தான் வந்துட்டேன் இல்ல, மாமா இனி எங்கேயும் போகமாட்டேன். இனி நாம ஒண்ணா இருப்போம் சரியா” என்று கூற,
அன்று இரவு வீட்டு தோட்டத்தில் சக்தி சொன்னது போல்,” அவன் சட்டையை பிடித்து ஏன்டா என்ன விட்டுட்டு போன, அன்னைக்கு ஏதோ சின்ன புள்ள தெரியாம போக விட்டுட்டேன்.”
“இனிமேல் போறேன்னு மட்டும் சொல்லிப் பாரு என்ன பண்றேன்னு “என்று விரல் நீட்டி மிரட்ட,கண்ணீர் விடும் ஸ்ரீ யை விட இப்படி மிரட்டல் விடும் ஸ்ரீ யை தான் எப்போதும் பிடிக்கும். இப்போதும் பிடித்திருந்தது, சரி சரி என தலை தானாய் ஆடியது சக்திக்கு .
பின் உடைமாற்றி இருவரும் ஜோடியாய் செல்ல பரிமளாவின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.அந்த தாய்க்கு வேண்டியது மகள் மருமகனின் மகிழ்ச்சி தானே !! கங்கா காவேரி இருவரும் அவரை இருபுறமும் அணைத்து கொண்டனர்.
படையலில் வைக்கும் உடையும் பணமும் அந்த வீட்டின் பிறந்த பெண்ணான பரிமளாவிற்கும், தமிழினிக்கும் கொடுக்கப்பட்டது.
[the_ad id=”6605″]
அனைத்தையும் வைத்து வருண பகவானுக்கும் பசுக்களுக்கும் நன்றி கூறி முதல் பொங்கலை சக்தியும், மனோவும் பசுவிற்கு ஊட்டி விட்டு வந்தனர். பின் அங்கேயே அமர்ந்து பேசி சிரித்து கலைத்துவிட்டு வெயில் இறங்கியபின் கிளம்பினர்.
ஆண்கள் பானையை தலையில் வைத்து வீடு நோக்கி நடக்க பின் பெண்கள் மற்ற பொருட்களோடு அவர்களை தொடர்ந்தனர். யாழினி, மனோ ஓடும். மது, சக்தியோடும் கையில் கரும்போடு சிரித்துப் பேசி கொண்டு வந்தனர்.
பொங்கல் பானை உடையாமல் வீடு போய் சேர வேண்டும். வீடு சென்ற பின் பெண்கள் ஆரத்தி எடுத்து அழைக்க, பானையை பூஜை அறையில் வைத்து இன்று போல் என்றும் விவசாயமும் குடும்பமு மகிழ்ச்சியும் சிறக்க வேண்டும். என்று ஆண்டவனை வேண்டினர். அன்றைய நாள் இனிமையான நாளாக முடிந்தது.
அடுத்த நாள் காணும் பொங்கல்.
மார்கழி முழுவதும் விரதம் முடித்து பறப்பன ஊர்வன நடப்பன என்று அனைத்தும் அன்று இலையில் இருந்தது. மாலை குளித்து முடித்து புத்தாடை அணிந்து கோவில் சென்றனர்.
ஊரின்கண்ணு முழுவதும் சக்தி மதுவின் மேலே இருந்தது, இவர்களின் வாழ்வு அவ்வளவுதான் முடிந்தது. நிச்சயம் விவாகரத்து தான் நடக்கும். என்று அனைவரும் நினைத்திருக்க,
பல வருடம் வாழ்ந்த தம்பதிகள் போல் ஒருவர் தோளில் ஒருவர் உரச கண்களில் காதலோடு தெய்வத்தின் முன் நின்றவர்களை பார்க்க ப்ரியாவிற்கு வயிறு எரிந்தது,
இத்தனைக்கும் சக்தி சென்ற ஒரு வருடத்திலேயே! ப்ரியாவிற்கும் இதே ஊரில் திருமணம் முடிந்திருந்தது, இப்போது கணவனுடன்கோவையில் வசித்து வருகிறாள்.
கடுவுளை தரிசித்த பின் புதிதாய் முளைத்திருக்கும் கடைகளுக்கு பெண்கள் சுற்ற ஆரம்பிக்க, ஆண்கள் எருது பிடித்துக் கொண்டிருந்தனர். தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போல், இங்கே எருது பிடி திருவிழா.
இரவு ஸ்டேஜில் ஆட்டம் பாட்டம் கலை கட்டிக் கொண்டிருந்தது. முத்தையா பேரன்களின் நடனம் என்று மைக்கில் அறிவிக்க,
மூவரும் ஒரேமாதிரி உடை உடுத்தி முகத்தில் கட்சிப் கட்டி முகத்தை மறைத்திருந்தனர். எல்லாம் அர்ஜுனனுக்காக சக்தி மனுவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஐ பி எஸ் ஆபிஸர் குடித்துவிட்டு குத்தாட்டம் என்று சமூக வலைத்தளங்களில் போட்டு தாக்கி விடுவார்களே !!!அதனால்.
[the_ad id=”6605″]
தங்கள் துணை யார் என்று மனைவிகளுக்கு தெரியும் இல்லையா,
தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
திமிராம வாங்க
bulb ஆயிடுவீங்க
மொறபோடு நிப்பானா
முட்டாம போங்க
என்ற பாடலோடு அவர்கள் ஆடும் அழகை ரசித்து பார்த்து இருந்தனர். அங்கு இதில் யார்?? தன்னவன் என்று தெரியாமல் தவித்தது ஒரு இதயம்.
ஆம், ப்ரியாவின் தங்கை காவ்யா,
மது படிக்கும் கல்லுரியில் முதலாம் ஆண்டு மாணவி. பாரிஜாதம் மனோவிற்கு சொல்லி இருந்த பெண். மனோயென்றால் கொள்ளை ஆசை ஆனால் அவனுக்கு அப்படி எதுவும் இல்லை. பிரியாவும், சாந்தியும் பிடிக்காததால். இவளை திரும்பியும் பார்த்தது இல்லை.
காவ்யா அன்னை போல் அல்லாமல் குணத்தில் தந்தையை கொண்டிருந்தாள். காவேரியை போல் அமைதி, கொஞ்சம் பயந்த சுபாவம் என்பதால் மனோவிடம் அவளால் நெருங்க முடியவில்லை.
தூரத்தில் இருந்தே அவனை ரசித்து கொண்டிருந்தாள். இன்று அதுவும் முடியாமல் போனது.
இரவு பெரியவர்கள் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து அதை காலையில் செயல்படுத்த ஆரம்பித்தனர். அது என்னவென்றால் சக்தி, அர்ஜுன் தம்பதியினர் இரண்டு நாள் ஏற்காடு சென்று வருவது.
முதல் மறுப்பு சக்தியிடம் இருந்து வர,
அர்ஜுன் மனசாட்சியோ !”டேய் ! மச்சான், ஏன்டா….. இப்டி பண்ற உன் புண்ணியத்துல நான் செகண்ட் ஹனிமூன் போலாம் பார்த்தா இப்படி பண்ற “என்றது ………
மொழி தொடரும்………..
