Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 21 2

 

 

கந்தப்பன் அவன் மில்லுக்கு வந்தது சுந்தருக்கு நல்ல உதவியாகத்தான் இருந்தது.. லோடு ஏற்றும் வேலையை அவன் கவனித்துக் கொள்ள கணக்கு வழக்குக்கள் மட்டும்தான் அதை இவன் நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது பார்த்துக் கொள்கிறான்.. தான் இப்போது இருக்கும் வீடு தர்ஷினிக்கு அவ்வளவு பாதுகாப்பில்லை உணர்ந்தவன் வீட்டு வேலைகளை வேகமாக முடுக்கிவிட்டிருந்தான்..

 



Advertisement

வீட்டிலிருக்க சற்று அதிகநேரம் கிடைத்திருக்க கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவே இருந்தது.. அன்று காலை தர்ஷினி தன் கணவனுக்காக தோசை சுட்டுக் கொண்டிருக்காக அடுப்படி திண்டின் மேலமர்ந்து அவளுக்கு ஊட்டியபடி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன்,

 

தர்ஷூ நான் ஒன்னு சொல்லவா..??”

Advertisement

 

Advertisement

தோசை வட்டமாக வருவதில் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி தான் செய்யும் சமையலுக்கு கணவன்தான் சோதனை எலி.. அவன்தான் எந்த குறை இருந்தாலும் அவளுக்கு அதை சொல்லி திருத்தி சரிசெய்வான்.. அவள் கவனம் தோசையிலேயே இருக்கவும்..

 

அவள் தாடையை பிடித்து தன்புறம் திருப்பியவன் ஏய் ராக்கெட்டா விடுற அதையே உத்து பார்த்துட்டு இருக்க.. மாமன பாருடி..?” அவனுக்கு தன்னை தவிர தர்ஷினி யார்மேல் கூடுதல் கவனம் வைத்தாலும் பொறாமை தாங்காது.. சௌந்தரத்தின் மகனை சற்று கூடுதல் நேரம் தூக்கி வைத்திருந்தால் கூட அவனை தான் வாங்கிக் கொண்டு அவன் இருந்த இடத்தில் தன் தலையை வைத்திருப்பான்..

Advertisement

 

இப்போ கொஞ்சுடி..!!”

 

அதான் குட்டிய வாங்கிட்டிங்களே..?” அவனை வாங்க கை நீட்டினால் அந்த கையை தன் கன்னத்தில் வைத்து

இப்போ கொஞ்சு..

 

வெட்கத்தில் கன்னம் சிவக்க..ச்சு போடா ஸ்வீட் ராஸ்கல்… அவளுக்கு சிரிப்பு தாங்காது..

 

ம்ம் அப்படிதான்.. செம செமடி..

 

தன்னை பார்க்கச் செய்தவன் இதோ பார் தர்ஷூ.. நீ இப்படி வீட்லயே அடைஞ்சு கிடக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல.. நீ ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்கலாமே.. உனக்கு என்ன பிடிக்கும் சொல்லு.. மில்லுக்கு வர்றியா, இல்ல சுகர் பேக்ட்ரி ஒன்னு விலைக்கு வருது அத விலை பேசிட்டு இருக்கேன் நீ பார்த்துக்கிறியா.. இல்ல வேற ஏதாவது உங்க அப்பா மாதிரி நகைக்கடை இங்க பக்கத்து டவுன்ல தொடங்குவமா..??”

 

நோ அவன் கண்களையே பார்த்தவள் பிசினஸ், பணம், இதெல்லாம் எனக்கு விருப்பம் இல்ல மாமா.. அதனாலதான் நான் படிக்கும் போதே பிசினஸ் சம்பந்தபட்ட பாடமே எடுக்கல..

 

அப்ப உனக்கு என்ன விருப்பம்..?”

 

ம்ம் அத நீங்க கண்டுபிடிங்க பார்ப்போம்.. நமக்கு மேரேஜ் முடிஞ்சு இத்தனை நாளாச்சு.. என்னை பத்தி என்ன புரிஞ்சு வைச்சிருக்கிங்க பார்ப்போம்..?”

 

அவ்வளவுதானே கண்டுபிடிக்கிறேன்.. ஒரு ஒன்வீக் மட்டும் டைம் கொடு.. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு மாமா சொல்றேன்..

 

மறுநாள் காலை ஒன்பது மணியிருக்கும்.. சுந்தரும் ராமையாவும் வயலுக்கு போய்விட்டு பேசிக் கொண்டு வீட்டிற்கு வர சுந்தருக்கு போன்,

 

ஹலோ வள்ளி..நல்லாயிருக்கியாத்தா..??”

 

அண்ணே…!!” அவள் ஒரே அழுகை..

 

பதறியவன் வள்ளி என்னாச்சு அழாத.. சொல்லுத்தா.. என்னாச்சு..??”

 

சுந்தரு என்னாச்சுய்யா வள்ளியா எதுக்கு அழறா..?”

 

[the_ad id=”6605″]

 

 

தெரியலப்பு..

 

அண்ணே.. உங்க மச்சான் வண்டியில போனப்போ எதிருல வந்த வேன்ல மோதி ஆக்சிடென்ட் ஆயிருச்சுண்ணே..?”

 

கடவுளே …!!! மச்சானுக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே..??”

 

தெரியலண்ணே இங்கனதான் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு வந்தோம்.. இங்கன பக்கத்தில வேற பெரிய ஆக்சிடென்ட் போல.. நிறைய பேருக்கு அடிபட்டிருக்கு.. பாதி பேருக்கு பெட்டில்லாம வெளியில படுக்க போட்டிருக்காக.. எப்ப பெட்டு கொடுத்து இவுகள பார்ப்பாகன்னு தெரியல.. தலையில இருந்து ரத்தம் நிக்கவே இல்ல..கைகால்ல வேற நல்ல அடி.. வேற ஆசுபத்திரிக்கு கொண்டு போகலாம்ன்னு சொன்னா எங்க மாமனார் மாமியார் இப்போ பணம் இல்ல, வட்டிக்கு விட்ட பணம் கைக்கு வரல, எல்லாம் அவுக தங்கச்சி கல்யாணத்துக்கே செலவாயிருச்சு.. செத்த பொறுமையா இரு இங்கனயே பார்ப்போம்னு சொல்றாக.. ஆனா எனக்கு ரொம்ப பயமாயிருக்கு  நீ வாண்ணே..??” அவள் ஓஓஓஓவென அழ,

 

இதோ பார் வள்ளி அண்ணே இந்தா கிளம்பிட்டேன் ..வந்துட்டே இருக்கேன்.. நீ அழாத..மச்சானுக்கு ஒன்னுமாகாது.. தந்தையிடம் தகவலை சொல்ல அவர்கள் கிளம்பவும் அனைவரும் அவர்களோடு பதறியடித்து கிளம்ப சட்டென முடிவெடுத்து அனைவரையும் கிளம்பச் சொல்லி காரை கிளப்பியிறுந்தான்..

 

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் அந்த ஆஸ்பிட்டலை அடைந்திருக்க எங்கே பார்த்தாலும் ஒரே அழுகை, ரத்தம் , ஆம்புலன்ஸ் சத்தம் தர்ஷினிக்கு இது புதிது.. மனதிற்குள் திக்திக் என அடிக்க கணவனின் கையை நறுக்கென பிடித்துக் கொண்டாள்..

 

 மனைவியை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடியவன் தங்கையிருக்கும் இடம் போனில் கேட்க அண்ணனை பார்க்கவும் வள்ளி ஓடிவந்து அவனை கட்டிக் கொண்டு ஒரே அழுகை..

 

அங்குதான் அவளுடைய மாமனார் மாமியார், நாத்தனார், அவள் கணவர் என அனைவரும் நின்றிருக்க இவர்களிடம் ஒருவார்த்தை பேசவில்லை.. முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.. வள்ளி கணவரிடம் செல்ல கை,கால்களில்தான் நல்ல காயம் தலையில் லேசான காயம்தான் போல சுயநினைவோடுதான் கிடந்தார். வலியில் துடித்துக் கொண்டிருக்க, சுந்தரை பார்க்கவும் அவருக்குள் சற்று ஆசுவாசம் வந்தது அனைவரும் அவனை நெருங்கியவர்கள் மச்சான், மாப்பிள்ளை, அண்ணா என பதறி அழ ஆரம்பித்திருந்தார்கள்..

 

தர்ஷினி வள்ளியின் கையை பிடித்தவள் ப்ளிஸ் அழாதிங்கண்ணி.. உங்கண்ணா எல்லாம் பார்த்துப்பார்.. அவர் ரத்தத்தோடு கிடந்ததை பார்க்கையில் தன்னை அறியாமல் தன் குடும்பம் ரத்தவெள்ளத்தில் மிதந்தது கண்ணுக்கு முன்னால் வர, தன் கணவன் திருப்பி கொடுத்திருந்த  ஏடிஎம் கார்டை மற்றவர் அறியாமல் அவன் சட்டை பையில் வைத்து,

 

 

[the_ad id=”6605″]

 

 இங்க இருக்கிறதுலயே பெஸ்ட் ஹாஸ்பிட்டலுக்கு அண்ணாவ கூட்டிட்டு போங்க மாமா.. ப்ளிஸ் பாஸ்ட் பாஸ்ட்…

 

சுந்தர் தனியார் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தவன் அவரை அலேக்காக தூக்கிக்கொண்டு வெளியில் வர ஆம்புலன்ஸூம் வந்திருந்தது.. அவரை ஏற்றி தங்கையோடு தந்தையை துணைக்கு ஏறச் சொன்னவன் தன் காரிலேயே அவர்களை பின்தொடர்ந்திருந்தான்..

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு ஆப்ரேசன் செய்து கை,காலில் பிளேட் வைத்து தலையில் தையல் போட்டு இனி பயமில்லை என சொன்ன பின்புதான் அனைவருக்கும் நிம்மதி.. சற்று நேரத்தில் அவர் கண்விழிக்க அனைவரும் சென்று நலம் விசாரித்தனர்.. வள்ளிக்கு அழுகை தாங்கவில்லை.. கணவனை கட்டிக் கொண்டு ஒரே அழுகை..

 

ஏய் விடுடி அதான் எனக்கு ஒன்னும் ஆகலைல.. விடு ..?”

 

இல்ல மச்சான் நான் ரொம்ப பயந்துட்டேன்.. அடிபடாத கையால் தன் மனைவியின் கண்ணீரை துடைத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டவனுக்கு அவ்வளவு நிம்மதி.. அவள் துடித்ததை ஹாஸ்பிட்டலில் பார்த்தவன் தானே.. அவளை சமாதானப்படுத்தி,

 

இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல்னா ரொம்ப காசு செலவாகியிருக்குமே..

 

ம்ம் அண்ணேதான் கொடுத்திச்சு.. பணம் எவ்வளவோ கட்டுனாதான் ஆப்ரேசன் பண்ணுவேன்னு சொல்லிப்புட்டாக.. அப்புறம் அண்ணனும் அத்தாச்சியும்தான் என்னன்னமோ இங்கிலிஸ்ல எல்லாம் பேசி எவ்வளவோ பணம் கட்டினாக கேட்டதுக்கு அதெல்லாம் உனக்கெதுக்குன்னு அண்ணே ஒரு அதட்டு..அப்புறம் நான் வாயே தொறக்கல..

 

சுந்தரும் தர்ஷினியும் உள்ளேவர, மச்சான் நல்லாயிருக்கிகளா..?”

 

சுந்தரை பார்க்கவும் அவருக்கு குற்றவுணர்வு தாங்கவில்லை..என்னை மன்னிச்சிரு மாப்பிள்ள நீ  இன்னைக்கு வரலைன்னா என்னோட நிலை ரொம்ப மோசமாயிருக்கும்.. உயிர் போகலைனாலும் கையோ காலோ எடுக்கிற மாதிரி வந்திருக்கும்..

 

ஐயோ என்ன மச்சான்.. இப்படியெல்லாம் பேசிட்டு.. யாருக்கிட்ட யாரு மன்னிப்பு கேட்கிறது.. விடுங்க ரொம்ப வலி இருக்கா..??”

 

கொஞ்சம் இருக்கு.. வலிக்கு ஊசி போட்டிருக்காக..

 

தர்ஷினி அருகில் வந்தவள் நல்லாயிருக்கிங்களாண்ணா.. கவலைப்படாதிங்க.. சீக்கிரமே எல்லாம் சரியாகிரும்..

 

ரொம்ப நன்றிம்மா..

 

அச்சோ அண்ணா விடுங்க”.. வள்ளியின் கையை பிடித்தவள் அவளுக்கும் ஆறுதல் சொன்னாள்..

 

வள்ளிக்கும் அவர் கணவருக்கும் தெரியும் தந்தையிடம் பணம் இல்லாவிட்டாலும் தங்கைக்கு அவ்வளவு நகைகள், பணம் கொடுத்துதான் திருமணம் முடித்திருந்தார்கள்.. ஏதாவது செய்தாவது அவனை வேறு ஹாஸ்பிட்டலுக்கு மாற்றியிருக்கலாம் அதைவிட அவ்வளவு வறுமை என்றும் சொல்லிவிடமுடியாது.. தன்னைவிட பணம் பெரிதா..!!!  இவ்வளவு நகை கழுத்தில போட்டிருக்கிற தங்கச்சி ஒரு செயின கழட்டி கொடுத்திருந்தாக் கூட நம்ம ஹாஸ்பிட்டல் செலவுக்கு உதவியிருக்காதா..இல்ல தங்கச்சி வீட்டுக்காரர்கிட்ட வசதியில்லையா.. இத்தனை தங்கைகளோடு பிறந்த சுந்தருக்கு பரந்த மனப்பான்மை உள்ள தர்ஷினி மாதிரி பொண்ணுதான் சரி.. நம்ம தங்கச்சிக்கு கூடப்பிறந்த அண்ணனுக்கே உதவி செய்ய மனசில்ல..கடவுள்தான் இந்த பொண்ண நம்ம மாப்பிள்ளைக்கு முடிச்சிருக்கார் போல..

 

வள்ளி உன் பையன் அழுதுட்டே இருக்கான் பாரு.. நான் மச்சானோட துணைக்கு இருக்கேன் நீங்க எல்லாரும் கேன்டீனுக்கு போய் ஏதாவது சாப்பிட்டு வாங்க.. சௌந்தரமும் பிள்ளைய வைச்சுக்கிட்டு ரொம்ப நேரம் பட்டினியா கிடக்கு.. நாயகியும் மச்சானும் வந்திட்டு இருக்காகளாம்..அவுக வரவும் நான் வர்றேன்.. எல்லாரும் சாப்பிடுங்க.. உங்க வீட்லயும் எல்லாரையும் கூட்டிட்டு போத்தா.. தர்ஷினி நீ..??”

 

[the_ad id=”6605″]

 

 

நானும் அண்ணியோட போறேன் மாமா..

 

தன் பர்ஸை எடுத்து அவளிடம் கொடுத்தவன்.. பில்லு எவ்வளவுன்னு பார்த்து கொடுத்திரு.. பார்த்து போடா.. தனியா எங்கயும் போயிராத கவனம்.. கண்ணை மூடித்திறந்து கவனமென்றான்..

 

வள்ளி தர்ஷினிக்கு காரம் கம்மியானதா பார்த்து வாங்கி கொடுத்தா..?”

 

சரிண்ணே..

 

அனைவருக்கும் வள்ளி கணவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரியவும்தான் பேச்சே வந்தது.. அதோடு வள்ளிக்கு தன் தாய்வீட்டு சொந்தங்களை பார்க்க அவ்வளவு நிம்மதி.. சௌந்தரத்தின் மகனை தூக்கி ஆசைதீர கொஞ்சினாள்.. அனைவரும் அவரவருக்கு தேவையானதை ஆர்டர் செய்ய தெய்வானை நீண்ட நாளைக்கு பிறகு தன் மூத்த பேரனை கொஞ்சி மகிழ்ந்தார்.. கலகலப்பாக பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க தர்ஷினிக்கு பின்னால் அமர்ந்து அவர்களை நோட்டமிட்டு கொண்டிருந்தது அந்த உருவம்..???

 

இங்கு கள்வன் பெரியவனா…!! காப்பான் பெரியவனா..!! பொறுத்திருந்து பார்ப்போம்..

 

                                                                     இனி……………????

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!