Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vaangi Vanthaval Naan 21 1

வரம் வாங்கி வந்தவள் நான்

                            

                               அத்தியாயம் –  21

 



Advertisement

தர்ஷினி சுந்தரை காணாமல் தேடியவள் அவனுக்கு போன் செய்ய, சொல்லுடா லட்டு..?”

 

மாமா டீ கேட்டிங்க.. இப்ப ஆளே காணோம்.. நான் போட்டது நல்லாயிருக்காதுன்னு பயந்து ஓடிட்டிங்களா..?”

Advertisement

 

Advertisement

ச்சோ … நாக்கை கடித்தவன்.. ஸாரிடே பேபி இப்பதான் ஒரு முக்கியமான வேலை நியாபகம் வந்திச்சு அதான் உடனே கிளம்பிட்டேன்…?”

 

ச்சு போங்க மாமா.. முதல் முதலா உங்களுக்காக டீ போட்டேன்… யாரோட ஹெல்ப்பும் கேட்கல தெரியுமா..??”

Advertisement

 

ஹாஹாஹா அதுக்கென்னடா.. இனி என்னோட வாழ்நாள் முழுதும் நீ போடுற டீ தான குடிக்கப் போறேன்..கோவிச்சுக்காத செல்லக்குட்டி.. அப்பு வீட்லயா இருக்காங்க..

 

ஆமா..  இப்பதான் வொர்க் பண்றவங்களுக்கு காப்பி , ஸ்நாக்ஸ் கொடுத்துட்டு இருக்காங்க.. அவங்ககிட்ட போன தரவா..??”

 

கொடு..

 

[the_ad id=”6605″]

 

 

அவரிடம் சில விசயங்களை பேசியவன்.. அப்பு நான் வர லேட்டாகும் தர்ஷினிய கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க..

 

நீ போயிட்டுவாய்யா நான் இருக்கும் போது எவன் என்ன செய்ய முடியும்.. நான் பார்த்துக்கிறேன்..

 

சுந்தர் சங்கரன் வீட்டு அட்ரஸ் கேட்டு அங்கு செல்ல மதியத்திற்கு மேலாகியிருந்தது.. அப்பத்தா அங்குதான் இருந்தார்..

 

ஐயா சுந்தரு வாய்யா வா..வா..வீட்டினர் அனைவரும் வந்து வரவேற்க,

 

தன் கையிலிருந்த ஸ்நாக்ஸ், பழங்கள் அடங்கிய பையை அவர் பேத்திகளிடம் கொடுத்தவன் அப்பத்தா நல்லாயிருக்கிங்களா …??”

 

எனக்கென்னப்பு நல்லாயிருக்கேன்.. நீ தர்ஷினியையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்..

 

இங்க ஒரு வேலையா வந்தேன்.. அடுத்ததரம் கண்டிப்பா கூட்டிட்டு வர்றேன்.. சங்கரன் வந்து அவனை தனியாக கூட்டிச் செல்ல போக,

 

அடேய் சின்னவனே புள்ள முதல்முதலா வந்திருக்கு.. குடிக்க ஜூஸ் மட்டும் போதுமா.. நீ வாய்யா..?” அவனை கையை பிடித்து இழுத்தவர் நேராக டைனிங் டேபிளுக்கு கூட்டிச் செல்ல,

 

ஐயோ நம்ம வந்த வேலை என்ன.. அப்பத்தா விருந்துக்கு வந்த மாதிரி பண்ணிட்டு இருக்கே.. அவன் அவஸ்தையாய் விழிக்க ஆரம்பித்தான்..

 

பக்கென சிரித்த சங்கரனோ நீ சாப்பிட்டாதான் அங்கயிங்க நகர முடியும்.. உட்காரு.. மத்தத அப்புறமா பேசிக்கலாம்..” அவனை டைனிங் டேபிளில் அமர வைத்தவர் தானும் அருகில் அமர்ந்தார்.. சுந்தர் வருவதை சொல்லியிருந்ததால் அப்பத்தா ஏகப்பட்ட அசைவ உணவுகளை தயாரித்திருந்தார்.. மருமகளை உதவி மட்டும் செய்யச் சொல்லி ஜமாய்த்திருந்தார்..

 

ஏத்தா காலையில இருந்து கால் வலிக்கிதுன்னு சொன்னிங்க இப்ப பேரன் வர்றான்னு தெரியவும் அதெல்லாம போன இடம் தெரியல போலயே..?”

 

பின்ன..?? என் பேரன்டா.. அவனுக்கு இந்த அப்பத்தா செய்யாம வேற யாரு செய்வா..??” அவன் போதும் என்று சொன்னாலும் விடவில்லை.. மாமியாரும் மருமகளும் பார்த்து பார்த்து கவனித்தனர்.. அந்த நேரத்தில் வக்கீல் வர அவரையும் வரவேற்று வம்படியாக சாப்பிட வைத்தே அனுப்பி வைத்தார்..

 

மூவரும் அறைக்குள் வந்து கதவடைக்க அங்கு அப்பத்தா தன் பேத்திகளோடு சாப்பிட அமர்ந்தார்.. சுந்தர் அந்த பத்திரத்தை சங்கரனிடம் கொடுக்கவும் அதை வாங்கி படித்து பார்த்தவர் வக்கீலிடம் கொடுத்து, இது ஒரிஜினல்தானே ஸார்..?”

 

இவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்கு.. கலை இதப்பத்தி எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே.. அவங்க மாமனார் மாமியார் இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டாங்க..

 

சுந்தர் தர்ஷனின் பறவைகளை சுட்டு கொன்றதை சொன்னவன் நான்கூட அந்த சின்ன பையன் என்ன செஞ்சான் அவன் மேல இவ்வளவு வன்மம்ன்னு நினைச்சேன்.. இவன் சரியான சைக்கோவா இருப்பானோ..!!”

 

கண்டிப்பா சைக்கோதான் சுந்தர்.. இல்லனா இத்தனை உயிர்களை துடிதுடிக்க கொல்வானா..?? ஒரு சின்னப்பையன மேல இவ்வளவு வன்மம்… தர்ஷனுக்கு தெரியுமா தான் இதாலதான் செத்தோம்னு..?? பாவம் எங்க அத்தான் இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா ஆஸ்திரேலியாவே போயிருக்க மாட்டாங்க.. இந்த ரெண்டு பிள்ளைங்க பிறக்கிறதுக்காக எவ்வளவு கோவிலுக்கு தன்னோட உடம்பை வருத்தி நேர்த்திக் கடன்கள் பிரார்த்தனை, விரதம், பூஜை ,… கடவுளுக்கு கூட கண்ணில்லாம போச்சு..

 

வக்கீலை பார்த்தவர் ஸார் நாம இப்ப என்ன பண்ணலாம்..??”

 

இந்த பத்திரம் ஒரிஜினல்தான் ஸார்.. சம்பந்த பட்டவங்கள்ள ஒரு பெரியவங்க  உயிரோட இருந்தாக்கூட நமக்கு இப்ப ஹெல்பா இருந்திருக்கும்.. ஏன் சுந்தர் உங்க வொய்ப்புக்கு இதெல்லாம் தெரியுமா..?”

 

இல்ல அவளுக்கு எதுவுமே தெரியல.. அவ உலகம் தெரியாதவளாவே இருக்கா.. அதோட தர்ஷினி குடும்பமும் இத பெரிசா நினைக்கல..?”

 

நாம இத மட்டும் வைச்சு எந்த ஆக்சனும் இப்ப எடுக்க முடியாது.. சொல்லப்போனா இப்ப இது நம்மகிட்ட இருக்குன்னு அவனுக்கு தெரியாம இருக்கிறதுதான் உங்களுக்கும் உங்க வொய்ப்புக்கும் சேப்.. இப்ப நீங்க போன் பண்ணவும் அவங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சேன்.. அவங்களும் இங்க சாதாரணமானவங்க இல்ல..

 

நாம சட்டுன்னு அவங்க குடும்பத்துக்குள்ள போக முடியாது எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு ஏதாச்சும் செய்ய போனா தர்ஷினிய ஏதாச்சும் செய்யதான் வாய்ப்பு அதிகம்.. எனக்கு தெரிஞ்ச கிரைம் பிரான்ச் ஆபிசர் ஒருத்தர் இருக்கார் அவர்கிட்ட சொல்லி கொஞ்சம் ரகசியமா இந்த கேஸை விசாரிப்போம்.. அதுவரைக்கும் நீங்க சாதாரண இருக்கிறமாதிரி முக்கியமா அவனுக்கு சந்தேகம் வராத மாதிரி இருந்துக்கோங்க..

 

அவனும் இவ்வளவு கொலைகளை பண்ணிட்டு சாதாரணமா இந்த சமுதாயத்தில பயமில்லாம திரியிறான்னா அவன் ரொம்ப ரொம்ப டேன்ஜர்.. நாம ஒவ்வொரு ஸ்டெப்பையும் கொஞ்சம் கேர்புல்லாதான் வைக்கனும்..

 

சுந்தர் நீ தர்ஷினிய இன்னும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ.. நீங்க ரெண்டு பேரும் கொஞ்சநாளைக்கு எங்கயும் தனியாவெல்லாம் போக வேண்டாம்..

 

[the_ad id=”6605″]

 

இன்னும் அரைமணி நேரம் மூவரும் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுத்தவர்கள் சுந்தர் சொல்லிக் கொண்டு ஊருக்கு கிளம்பினான்.. அன்று இரவு தன் மனைவியை அழைத்தவன் இங்க வாடாம்மா..??”

 

என்ன மாமா..” தலைமுடியை கிளிப்பிற்குள் அடக்கி கொண்டிருந்தவள் கண்ணாடி வழியே தன் கணவனை பார்க்க, அவள் கையை பிடித்து தன் மடியில் அமர வைத்தவன்

 

அன்னைக்கு ஒரு கார் உன்னை வழிமறிச்சிச்சே அதுல இருந்தவன் இவனா பாருடா..?”

 

இவனா…!! மாமா இவனதான் உங்களுக்கும் தெரியுமே.. ஆனா அன்னைக்கு கேப் போட்டு கூலிங்கிளாஸ், தாடி எல்லாம் வைச்சிருந்தான்.. தன் கையில் இருந்த ஜெராக்ஸ் பேப்பரில் அவள் சொன்னதை போல கேப், கூலிங்கிளாஸ் , தாடி எல்லாம் வரைந்து காட்ட…

 

மாமா,,!!! அதிர்ந்தவள் இவன்தான் மாமா.. இவன் ஏன் இங்க வந்தான்..?”

 

சொல்றேன் அம்மு, நான் நினைக்கிறது சரியா இருந்தா இவன்தான் உன் வாழ்க்கையில வந்த எல்லா பிரச்சனைக்கும் காரணமா இருப்பான்னு நினைக்கிறேன்..

 

இவனுக்கும் எங்களுக்கும் என்ன மாமா சம்பந்தம்..?? எங்க பேம்லிய சுடுறதுக்கு இவனுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா..ப்ளடி சீட்.. அப்படி பண்ண இவனுக்கு எப்படி மாமா மனசு வந்திச்சு.. ஆனா எந்த ரீசனும் இல்லாம ஏன் இப்படி பண்ணினான்.. அவங்கள எல்லாம் கொன்னு என்னை அனாதையாக்கிட்டான்.. வாய்க்குள் முனுமுனுத்தவளுக்கு கைகாலெல்லாம் நடுங்க கண்ணீர் கரகரவென ஊற்றத்துவங்கியது..

 

ரிலாக்ஸ் பேபி.. அழாத..  இதுக்குத்தான் உன்கிட்ட சொல்ல மாமா ரொம்ப யோசிச்சேன்.. பட் இப்ப சொல்லித்தான் ஆகனும்.. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் அழுதுட்டே இருக்க போற இப்ப நீ ரொம்ப தைரியமா இருக்க வேண்டிய நேரம்.. இவன்தான்னு எங்களுக்கு ஒரு டவுட்.. நாம இவன எல்லா ஆதாரத்தோடும் பிடிக்கறவரைக்கும் நீ எந்த ரீசனும் இல்லாம வெளியிலபோற வேலை வைச்சுக்காத..

 

இவன் ஏன் இங்க வந்தான்? சம்பந்தமே இல்லாம ஏன் உங்க பேம்லிக்கு இவ்வளவு பெரிய அநியாயம் பண்ணினான்..? .உன்னோட சொத்துதான் அவனோட குறியா, இல்ல நீயா..?? இன்னும் நிறைய கேள்விகள் இருக்குடா கண்டுபிடிக்கனும் அதுவரைக்கும் நீ ரொம்ப ரொம்ப கேர்புல்லா இரு.. மாமாவுக்கு நீ ரொம்ப முக்கியம்டி.. நீதான் என்னோட உயிரு.. அத மட்டும் எப்பவும் நினைவுல வைச்சுக்கோ.. என்ன நடந்தாலும் மாமா உனக்காக இருக்கேன் அத மறந்திறாத.. அவளுக்கு தைரியமூட்ட..

 

அவனுள் தன் தந்தையை கண்டவள் இவன் தன்னை பார்த்துக் கொள்வான் எனும் நம்பிக்கையில் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்..கொஞ்சநாள் முன்புவரை  வாழவேண்டாம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்ற விரக்தியில் இருந்தவள் சுந்தர் தன் வாழ்க்கையில் வந்தபிறகுதான் வாழவே ஆசை படுகிறாள்.. அவன் அன்பில் நனைந்து அதில் கொஞ்சம் கொஞ்சாய் உருகி கொண்டிருந்தாள்..

 

அவளை தன்னுள் புதைத்தவன் கருப்பா என் பொண்டாட்டிக்கு எதுவும் ஆகக்கூடாது.. நீதான் அவளுக்கு துணையிருக்கனும்.. நான் வருசாவருசம் ரெட்டைகிடா வெட்டுறேன்.. தன் குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் வைத்தவன் அவள் மனதை மாற்றும் பொருட்டு..

 

என்னடி பேபி செம வாசனையாயிருக்க..?’ அவளை வாசம் பிடிக்க..

 

கண்ணை விரித்தவள் அவன் மூக்கை நறுக்கென பிடித்து கண்டுபிடிச்சிட்டிங்களா மாமா .. சுந்தரிதான் மஞ்சள் தூள் கொடுத்தா பூசி குளிக்கச் சொல்லி.. செம வாசமா இருக்குல்ல.. கலர்கூட பாருள்களேன் எல்லோவா மாறிட்டேன்..

 

அப்படியா இன்னும் கிட்டவா பார்க்கிறேன்..” அவளை நெருங்கி காற்றுகூட நுழைய முடியாத அளவுக்கு நெருக்கியவன் அவள் மேலிருந்த வாசனையை தான் எடுத்து தன் வாசனையை அவளுள் கலக்க ஆரம்பித்தான்..

 

அடுத்தடுத்து நாட்கள் வேகமாக ஓட சுந்தர் அன்று மில்லுக்கு சென்று வரும்போது கந்தப்பன் வலிய பேசவர.. வாண்ணே நல்லாயிருக்கியா..??”

 

நல்லாயிருக்கேன் சுந்தரு வீட்ல சித்தப்பு, சின்னத்தா எல்லாரும் சொகமா..?”

 

ம்ம் நல்லாயிருக்காக.. அத்தாச்சி நல்லாயிருக்காகளா.. வேலுவை பற்றி மறந்தும் கேட்கவில்லை.. இவனுக்கு தெரியும் அண்ணனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் கணவனும் மனைவியும் தந்தையோடு தோப்புவீட்டில் இருப்பது..

 

அப்புறம் வேலையெல்லாம் எப்படிண்ணே  போகுது..??”

 

ம்ம் போகுது.. நீ மில்லு வேலைக்கு நல்ல ஆளா கேட்டியாமே .. அதான் நான் வரவான்னு கேட்கலாம்னு வந்தேன்..?”

 

சற்று யோசித்தவன் அது எப்படிண்ணே சரிவரும்.. நாம உறவுக்காரவுக.. அது வேலைக்கு சரிவராதே..!!”

 

[the_ad id=”6605″]

 

டேய் தம்பி உறவெல்லாம் வெளியில மட்டும்தான்.. அண்ணே வேலையில சரியா இருப்பேன்.. நானே இப்பத்தான் உன்ர அத்தாச்சி பேச்சைக்கேட்டு உழைக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்..தோப்பு வருமானம் அவ்வளவு இல்லடா.. சொத்தையும் மூத்தவன் பிரிக்க விடமாட்டேங்கிறான்… ஆத்தா அவனுக்குதான் சப்போர்ட் பண்ணுது.. பத்தாவது பெயிலானவனுக்கு என்ன வேலை கிடைக்கும்.. எனக்கும் நாளைக்கு பிள்ளைக்குட்டின்னு ஆனா ஏதாவது வருமானம் வேணும்ல அதான்..

 

பரவாயில்லண்ணே… ரெண்டே மாசத்துல இப்படி மாறிட்ட.. அத்தாச்சி சொல்றது உண்மைதான்  நீ வா… காலையில வெள்ளன வந்திரு.. விடியகாலம் ஒரு ரெண்டுலோடு ஏத்தனும்.. வரவா..

 

சுந்தர் வண்டியை கிளப்ப திருமணம் ஒரு மனிதனின் வாழ்க்கையின் திருப்புமுனைதான் போல … முன்பெல்லாம் பலமுறை தானே வலிய சென்று பேச முயன்றாலும் கண்டுகொள்ளாமல் செல்லும் அண்ணன் இன்று வலிய வந்து வேலை கேட்கிறான்.. தர்ஷினியால் தன் வாழ்க்கையே மாறியதை நினைத்தவன் என்ன இருந்தாலும் நம்ம லட்டுமாதிரி வராது.. தேவதைடி நீ.. அவளை நினைத்தாலே அவனுக்கு ஜிவ்வென்றிருக்க தன் போனிலிருந்த மனைவிக்கு அழுத்தமாக முத்தமிட்டான்..

 

                             ஏய்…

                       என் தலைக்கேறுற

                              பொன் தடம் போடுற

                       என் உயிராடுற என்னடி மாயாவி நீ

 

                       என் நெலம் மாத்துற

                             அந்தரமாக்குற என் நெஜம் காட்டுற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!