Skip to content
Post Views: 7,131
அத்தியாயம் – 9
திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையத்திலிருந்து மனமெங்கும் பொங்கி வழியும் ஆசையையும், ஆர்வத்தையும் மறைக்க முயன்ற புன்னகையுடன் வெளியே வந்தான் வினய்.
Advertisement
பத்து நாட்கள் கடந்து தன்னவளைச் சந்திக்கப் போகிறான். இத்தனை வருடங்கள் இவளைக் காணாமல் எப்படி இருந்தேன் என்று எண்ணும் அளவிற்கு இந்த குறுகிய காலத்தில் வினய்யின் மனதில் ஆழமாய் வேரூன்றி இருந்தாள் வந்தனா.
அவளைக் காணப் போகிறோம் என்று நினைக்கையிலே வினய்யின் ஒவ்வொரு செல்களும் புத்துணர்ச்சி அடைந்ததைப் போல் இருந்தது.
Advertisement
Advertisement
நம்பகமான டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் அவளைப் பற்றி அறிந்து கொண்டாலும் அவளை எப்போதும் பின்தொடர அவன் விரும்பவில்லை. எனவே அவள் ஊர்த் திருவிழாவைப் பற்றியும் அவனுக்குத் தெரியவில்லை, அவள் அதன் பொருட்டு செமஸ்டர் விடுமுறை முடிந்தும் இத்தனை நாட்களாக கல்லூரிக்குச் செல்லவில்லை என்பதும் அவன் அறியவில்லை.
அவள் கடைசி வருட படிப்பில் இருக்கிறாள் என்று தெரியும், இந்த செமஸ்டரில் பிராஜெக்ட்டை காரணம் காட்டி தொடர்ச்சியாக மாணவர்கள் கல்லூரிக்கு பெரும்பாலும் வர மாட்டார்கள் என்றும் அவன் அறிந்திருந்தான். இருந்தாலும் தன் காதல் மீது கொண்ட நம்பிக்கையில் அவளை இன்று கண்டிப்பாக பார்ப்போம் என்று அவன் உளமார நம்பினான்.
Advertisement
எனவே மிகவும் உற்சாகத்துடன் ஒரு டேக்சியை பிடித்துக் கொண்டு அங்கிருந்து அவள் கல்லூரிக்கு விரைந்தான் வினய்.
“ஐ அம் கம்மிங் ஏஞ்சல்!!!” என்று முணுமுணுத்துக் கொண்டவன், “நீ என்னைப் பார்த்ததும் எப்படி ரியாக்ட் பண்ணுவ?? கண்டிப்பா ஷாக் ஆவ தான வதனா?? நீ ஷாக் ஆனா உன்னோட கோலி குண்டு கண்ணு ரெண்டும் இன்னும் பெருசா விரிஞ்சு என்னை அதுக்குள்ள இழுத்துக்குமே.. ஹய்யோ!!!” என அவன் மனதோடு தன்னவளுடன் உரையாடிக் கொண்டிருக்க அவன் உதட்டில் புன்னகை உரைந்திருந்தது.
“இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்??” என்று டிரைவரிடம் கேட்டவனின் குரலில் வழிந்த ஆர்வத்தை என்ன முயன்றும் மறைக்க முடியவில்லை.
அவன் வண்டியில் ஏறியதில் இருந்தே அவனை கவனித்துக் கொண்டிருந்த அந்த ஓட்டுநரும், “இன்னும் கால் மணி நேரம் ஆகும் தம்பி.. ஸ்கூல் காலேஜ் விடுற நேரம் இது.. அதான் டிராஃபிக் கொஞ்சம் அதிகமா இருக்குது” என்று பொறுமையாக பதிலளிக்க,
பத்து நாட்கள் பொறுத்தவனுக்கு இந்த கால் மணி நேரம் மிகவும் அதிகமாகத் தோன்ற, அவன் முகம் சற்றே வாடியதோ என்னும் வகையில் ஒரு நொடி சுருங்கி பின் இயல்பாக, அந்த அனுபவம் மிக்க ஓட்டுநரின் பார்வையில் இருந்து இவை எதுவும் தப்பவில்லை.
“ரொம்ப வேண்டப்பட்டவங்களை பார்க்க போறிங்களோ தம்பி?” என்று கண்ணாடி வழியாக தெரிந்தவனை பார்த்தபடி அவர் கேட்க,
அவர் கேள்வியில் அவன் புன்னகை மேலும் விரிந்து கொண்டது.
“ஆமா ரொம்ப வேண்டப்பட்டவங்க தான்” என்று அந்த ரொம்பவில் அழுத்தம் கொடுத்து அவன் பதிலளித்தான்.
அவரும் அவனைப் புரிந்து கொண்டதைப் போல் தலையசைத்து சிரித்துக் கொண்டே, “அப்போ சரி தம்பி!! முடிஞ்சளவு இன்னும் சீக்கிரம் போகப் பார்க்குறேன்” என்று விட்டு சாலையில் தன் முழு கவனத்தையும் பதித்தார்.
‘பார்க்குற எல்லாருக்கும் அப்பட்டமா தெரியுற மாதிரியா நம்மளோட ஆக்டிவிட்டீஸ் இருக்கு.. ஓஹ் காட்!! மத்த எல்லா விஷயத்துலயும் என் ஃபீலிங்ஸை நான் கன்ட்ரோல் பண்றேன் ஆனா உன் விஷயத்துல மட்டும் இந்த ஃபீலிங்ஸ் என்னை கன்ட்ரோல் பண்ணுதே வதனா.. சீக்கிரம் உன்னை கூட்டிட்டு வந்து என் கைக்குள்ள வச்சுக்கணும்.. என்னால இதை தாங்க முடியலை.. ‘ என இப்படியே தன் மனதில் உள்ளவளிடம் பேசிக்கொண்டே வந்தான்.
இப்படியாக நிமிடங்கள் கரைந்து அவனின் காத்திருப்பை நிறைவு செய்ய அவளின் கல்லூரி வளாகமும் வந்துவிட்டது.
அந்த நேரம் கல்லூரி முடிந்து அனைவரும் வீடு திரும்பி கொண்டிருக்க, தன்னவளும் கிளம்பியிருப்பாளோ என்று நினைத்த நொடி அவன் மனதில் சிறிதாய் ஒரு பூகம்பம்.
‘இருக்காது!! அவ நிச்சயம் இங்க தான் இருக்கா.. நான் அவளை இன்னைக்கு கண்டிப்பா பார்ப்பேன்’ என்று ஒரு குரல் அவனுள் ஸ்திரமாக சொல்ல, அதற்கு செவி மடுத்தவன், அங்கிருந்தவர்களிடம் கேட்டு வேதியியல் வளாகத்திற்கு வண்டியை விடச் சொன்னவன், தவிப்புடன் சாலையின் இருபுறமும் அவனின் வதனாவைத் தேடி அவனின் கருவிழிகளை அலைபாய விட்டான்
அவனின் தவிப்புகளை முடிவுக்கு கொண்டு வருவதைப் போல், அவனின் தேவதை அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
மறுபடியும் அவன் நம்பிக்கை பொய்க்கவில்லை.
இப்போது இருவருக்கும் அதிகபட்சம் இருநூறு மீட்டர் இடைவெளியே இருக்க, அவனின் இதயம் அவளைக் கண்டதுமே துள்ளிக் குதித்தது.
உடனே ஓடிச் சென்று அவளை அள்ளி அணைக்க அவன் கைகளிரண்டும் பரபரக்க, ‘அவ இன்னும் உனக்கு ஓகே சொல்லலைன்னு அடிக்கடி மறந்துடுற வினய்.. கன்ட்ரோல்..’ என ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானித்துக் கொண்டவன், ஜன்னல் வழியே தலையை வெளியே விட்டு இப்போது வந்தனாவை நன்றாக பார்க்க,
அவனின் செய்கையை ஓட்டுநர் மட்டுமல்லாது வந்தனாவின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த மலரும் வித்தியாசமாகப் பார்த்தாள்.
“இந்த பத்து நாள்ல என்னை ஒரு தடவையாவது நினைச்சியா வதனா ??” என மனதோடு கேட்டுக் கொண்டவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை அவளின் ஒவ்வொரு நொடியும் அவனின் எண்ணங்களே நிறைந்திருந்ததை.
அவள் அருகில் நெருங்க நெருங்க இவனின் இதயத் துடிப்பை நூறைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது.
அவன் இந்த பத்து நாட்களாக ஏங்கிக் கிடந்த அந்த நொடி, இதோ வந்து விட்டது.
அவன் தேவதையின் தரிசனம் அருகில், மிக அருகில் கிடைத்து விட, முழு ஆண்டு கடைசி பரீட்சை முடிந்து விடுமுறையை கொண்டாட எல்லையற்ற உற்சாகம் கலந்த ஆர்வத்தில் வீட்டிற்குப் புறப்பட்ட பள்ளிச் சிறுவனின் மனநிலையை ஒத்திருந்தது வினய்யின் மனம்.
வந்தனாவின் அருகில் வந்து டேக்ஸி நின்றவுடன், பெண்கள் இருவரின் நடையும் தன்னால் நின்று விட,
அவர்களை காக்க வைக்காமல் வலப்புறம் இருந்த கதவைத் திறந்து வந்தனாவை மயக்கும் வசீகரப் புன்னகையுடன், தோரணையாக வலது காலை வெளியே எடுத்து வைத்து இறங்கியவன், தன்னுடைய இடக்கரத்தை மடக்கி பாக்கெட்டிற்குள் வைத்து அழகாய் தலை சாய்த்து அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.
அங்கே, அதுவும் தன் கல்லூரியில் அவனை சற்றும் எதிர்பார்க்காத வந்தனாவின் உலகம் அப்படியே உறைந்து விட்டது.
‘கடைசியில் தன்னைத் தேடி வந்தே விட்டானா???’ என்று அவள் மனம் அடைந்த உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பேச்சிழந்து போனாள்.
இத்தனை நாட்களும் அவன் வேண்டாம் வேண்டாம் என ஜெபம் போல் மனதில் உறுப்போட்டுக் கொண்டு தனக்குத் தானே அவள் போட்டுக்கொண்ட தடைகள் யாவும் அவனை இப்போது கண்ட நொடி மணல் கோட்டையாய் அவள் மனக்கண் முன் சரிந்து விழுவதை அவளால் உணர முடிந்தது.
‘வினய்’ என்று அவளின் மனம் மந்திரம் போல் அவனின் பேரை ஒலித்துக் கொண்டிருக்க, அவள் அந்த நொடியின் கணத்தை தாங்க முடியாமல் தல்லாடினாள்.
அவளின் ஒவ்வொரு உணர்வுகளையும் தனக்குள் அவதானித்துக் கொண்டிருந்த வினய்க்கு அவளின் தவிப்புகள் புரிய, அது சுகமாய் அவனுள் இறங்கி அடி வரை தித்தித்தது.
அவளின் தவிப்பு அவனுக்கான அவளின் தேடலை உறுதி செய்கிறதல்லவா?
‘அப்போ நீயும் என்னை தேடிருக்க தானே வதனா?? காட்!! ஐ கான்ட் ஹேண்டில் திஸ் மச் ஹேப்பினஸ்!!!’ என ஆனந்தக் கூத்தாடினான் அவன்.
இவர்கள் இருவரையும் நிகழ்வுக்கு கொண்டது வருவதைப் போல், “யாருண்ணே நீங்க?? எதுக்கு எங்களைப் பார்த்து பல்லைக் காட்டிக்கிட்டு இருக்கீக?? என்ன சேதி ஹான்??” என சற்று அதட்டலாகவே மலர் வினவ,
கஷ்டப்பட்டு பார்வையை வந்தனாவை விட்டு திருப்பிய வினய் அங்கு தீயாய் தன்னை முறைத்துக் கொண்டிருந்த மலரைக் கண்டு தன்னுடைய அக்மார்க் புன்னகையை சிந்தியவன், “ஹாய்!! ஐ அம் வினய்!! வினய் சக்கரவர்த்தி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“ஆமா இவரு பெரிய டொனால்டு டிரம்பு (அமெரிக்காவின் அதிபர்) பேரு சொன்னதும் பட்டி தொட்டியெல்லாம் தெரிய.. யாருங்க நீங்க?? எதுக்கு கழுத்து வெட்டுன கோழி மாதிரி தலையை வெளிய விட்டுட்டு எங்களை பார்த்துட்டு வந்தீங்க? இப்போ எங்களை வழி மறிச்சு வண்டியை நிப்பாட்டிட்டு பல்லைக் காட்டிக்கிட்டு இருக்கீங்க.. என்ன வேணும் உங்களுக்கு?” என மலர் பட பட பட்டாசாய் பொரிய,
வினய்க்கு அவள் பேச்சில் கோவம் வருவதற்கு பதில் சிரிப்பு தான் வந்தது. ‘வதனா உனக்கு இப்படி ஒரு வாயாடி ஃப்ரெண்டா?? ஹாஹா இன்ட்ரெஸ்டிங்’ என்று நினைத்துக் கொண்டவன்,
“நான் யாருன்னு உங்க ஃப்ரெண்ட் கிட்ட கேளுங்க சிஸ்டர்” என்று அவன் வந்தனாவைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கூற,
வந்தனா இன்னும் திக்பிரம்மை பிடித்தவள் போல் தான் நின்றிருந்தாள்.
அவனின் சிரிப்பும் வந்தனாவின் இந்த அதிர்ந்த தோற்றமும் மலருக்கு எதையோ உணர்த்த,
“இந்தா புள்ள… இவரு தான் அந்த சென்னைக்கார பார்ட்டியா??” என வந்தனாவின் காதைக் கடித்தாள் மலர்.
“ஹான் என்ன கேட்ட??” என தூக்கத்தில் இருந்து விழிப்பதைப் போல் வந்தனா நடந்து கொள்ள, மலர் வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டு,
“யார் இவரு?” என வினய்யை சுட்டிக்காட்டி வினவ,
அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று தெரிந்து கொள்ள வினய் ஆர்வமாய் அவளை கவனித்தான்.
“அது.. அது வந்து.. இவங்க தான் சங்கிக்கு மேக்கப் போட்டவங்க” என வினய்யின் ஆர்வமான பார்வையைப் பார்த்துவிட்டு சங்கடத்துடன் வந்தனா மொழிய,
‘ஓஹ் அது மட்டும் தானா நான் உனக்கு??’ என கேட்பதைப் போல் அவனின் பார்வை அவள் மீது படர, வந்தனா அவனை பார்ப்பதை இப்போது தவிர்த்தாள்.
“மேக்கப் போட்டாகளா??? ஏன் புள்ளை அவ்ளோ பெரிய ஊருல உங்களுக்கு ஆளே கிடைக்காமயா ஒரு ஆம்பளைய மேக்கப்பு போட கூப்பிட்டீங்க???” என மலர் மோவாயில் கைவைத்துக் கேட்க,
வந்தனாவின் பார்வை இப்போது சங்கடமாய் அவனை ஏறிட்டது.
அவளும் முதலில் அவனின் உயரம் பற்றி அறியாமல் இப்படி வார்த்தைகளை சிதறவிட்டவள் தானே?? இன்று அவனைப் பற்றி அனைத்தும் அறிந்த பின் இவ்வாறு அவனை குறைவாய்ப் பேசுவதை வந்தனாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவளின் முகத்தைக் கொண்டே மனதைப் படித்தவன், ‘உன் ஃப்ரெண்ட் உன்னை மாதிரி தான இருப்பாங்க.. இதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்லை’ என்பதைப் போல் தான் புன்னகையுடன் நின்றிருந்தான்.
‘எப்படி இவனால் அனைத்தையும் இவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடிகிறது?? இவனுக்கு கோபமே வராதா??’ என வந்தனா ஆச்சர்யத்துடன் அவனைப் பார்க்க, இங்கே மலர் அவள் தோளில் பட்டென அடித்து அவளின் கவனத்தை தன் மீது திருப்பினாள்.
“ப்ச்!! எதுக்கு டி அடிச்ச??” என அடிக்குரலில் வந்தனா கேட்கவும் அவளை முறைத்த மலர்,
“நீங்க கண்ணாலேயே கதை பேசுனது போதும்.. மொத பாதையை வுட்டு நவந்து நில்லுங்க.. போறவன் வாரவன் எல்லாம் நம்மளைத்தேன் பார்த்திட்டு போறாய்ங்க” என்றாள்.
அது வினய்யின் செவிகளிலும் விழ, அவனும் மற்றவர்களின் கண்களுக்கு விருந்தாக விரும்பாமல்,
“சிஸ்டர் உங்களுக்கு ஒன்னும் அப்ஜெக்ஸன் இல்லைனா, அதோ அங்க இருக்க ஸ்டோன் பெஞ்ச்ல உட்கார்ந்து பேசலாம்” என மலரிடம் கூறினாலும், பார்வை என்னமோ வந்தனாவைத் தான் மொய்த்தது.
இருவரின் பார்வையை வைத்தே அவன் யார் என்பதை யூகித்து விட்ட மலருக்கு, அவன் கண்களில் தெரிந்த உண்மையும், வந்தனாவைப் பார்க்கும் போது அவனிடம் கொட்டிக் கிடந்த காதலும் நம்பிக்கை தரும் விதமாக இருக்க,
“நான் என்னாத்துக்கு உங்களுக்குள்ள நந்தியா இருக்க?? நீங்க ரெண்டு பேரும் போய் பேசிப்போட்டு வாங்க.. நான் இந்த டிரைவர் அண்ணாச்சி கூட பேசிட்டு இருக்கேன்” என்று ஒதுங்கிக் கொண்ட மலரை முடிந்த மட்டும் முறைத்தாள் வந்தனா.
அவளின் தவிப்பை சிரிப்புடன் உள்வாங்கிக் கொண்ட வினய், அவளை மேலும் சோதிக்க எண்ணாமல், “இல்லை சிஸ்டர்!! நீங்களும் கூடவே இருங்க.. நோ பிராப்ளம்” என்றான்.
“அட உன்னை என்ன இந்த அண்ணேன் கடிச்சா திங்கப் போறாவ?? போ போய் பேசிட்டு வா” என மலரோ வந்தனாவை தள்ளிவிட்டு முன்னால் நடக்க,
அந்த டாக்ஸி ஓட்டுனரும் இங்கிதமாக இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு காரினுள் சென்று அமர்ந்து கொண்டார்.
இப்போது இருவர் மட்டுமே தனித்திருக்க, வந்தனாவிற்கு பதட்டத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பி அவள் முகத்தைக் கடந்து கழுத்தை வந்தடைய, கைகளைக் கட்டிக்கொண்டு ரசனையாய் அவளைப் பார்த்திருந்தான் அந்தக் கள்வன்.
அவனின் பார்வையை உணர்ந்தவளுக்கு உள்ளங்கால் வரை ஏதோ குறுகுறுப்பு தோன்ற, அவளின் கால் பெருவிரல்களை மடக்கி ஊன்றி தன் உணர்வுகளை கட்டுப்படுத்தினாள் பெண்ணவள்.
“வதனா !!!! ரிலாக்ஸ்” என அவளின் தவிப்பு புரிந்து அவன் ஆதுரமாகக் கூற,
அவளிடம் அசாத்திய மௌனம்.
“பேசமாட்டியா வதனா ??” அவள் பேசிவிட மாட்டாளா எனும் ஏக்கம் அவன் குரலில் நன்றாகத் தெரிய,
மெதுவாய் நிமிர்ந்து அவனை ஏறிட்டாள் ஏந்திழையவள்.
அங்கே, அவன் கண்களில் பொங்கி வழிந்த காதலில் அவளுக்கு மூச்சடைத்த உணர்வு. சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டவள்,
“இங்க எதுக்கு வந்தீங்க???” என தயக்கத்தை உடைத்து அவனிடம் பேசியே விட,
அவனுள் இதமாய் மிதமாய் ஒரு மழைச்சாரல்.
அவன் இன்னும் விரிந்த புன்னகையுடன், “பதில் தெரிஞ்சும் இந்தக் கேள்வி தேவையா வதனா??” என்றான் குறும்புடன்.
அவனின் காதலை முழுதாய் அனுபவிக்க முடியாதபடி நாட்டரசனின் முகம் அவளின் மனக்கண்ணில் விரிய, அவள் முகம் வேதனையில் கசங்கியது.
அதைக் கண்டுகொண்ட வினய், “வதனா!! வாட் இஸ் ஈட்டிங் யூ?? அடிக்கடி இப்படி டல் ஆயிடுற?? என்னம்மா பிரச்சனை?? உன்னை எது டிஸ்டர்ப் பண்ணுது??” என உண்மையான அக்கறையுடன் அவன் கேட்கவும், வந்தனாவின் விழிகள் லேசாய் கசிந்தது.
இப்படி ஒரு தூய்மையான காதல் கிடைத்தும் அதை ஏற்றுக் கொள்ள முடியா தன் நிலையை அறவே வெறுத்தவள், குறைந்தபட்சம் அவனாவது நிம்மதியாக இருக்கட்டும் என்றெண்ணி மனதை இரும்பாக்கிக் கொண்டு அவனிடம் கடுமையாக பேசினாள்.
“இதோ பாருங்க.. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை.. இனிமேல் என்னைத் தேடி வராதீங்க.. என்னை மறந்துட்டு உங்க வேலையை போய் பாருங்க” என அவள் சொன்ன பின்பும், வினய்யின் பார்வையில் சற்றும் மாற்றமில்லை.
இன்னும் அதே ரசனைப் புன்னகை.
அதைக்கண்ட வந்தனா, அவனுடைய புன்னகை அவளின் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்து அவளை பலவீனமடையச் செய்கிறது என்பதை உணர்ந்து, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டவள்,
“உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?? பிளீஸ்.. இது ஒத்து வராது.. உங்களுக்கும் எனக்கும் செட்டே ஆகாது.. நீங்க தேவையில்லாம ஆசையை வளர்த்துட்டு பின்னாடி கஷ்டப்படுவீங்க… இப்போவே நாம் சொல்றதை கேட்டு இதை விட்டுடுங்க.. அதான் எல்லாருக்கும் நல்லது” என்றாள் படபடவென.
“உன் வாய் தான் வேண்டாம்னு சொல்லுது வதனா.. பட் உன்னோட ஐய்ஸ்.. அது என்கிட்ட வேற ஒரு அழகான கதையை சொல்லுதே.. கண்களுக்கு பொய் பேசத் தெரியாது.. தெரியும் தான வதனா??” என்று புருவத்தை உயர்த்தி ஆழ்ந்த குரலில் அவன் கேட்க,
அவனின் ஒவ்வொரு அசைவும் பெண்மையின் கட்டுப்பாட்டை சோதித்துப் பார்த்தது.
அவன் தன்னை கண்டுகொண்டான் என புரிந்ததும், அவளுள் மெலிதாய் ஒரு தடுமாற்றம்.
இருந்தும் இது ஒத்துவராது, இது வேண்டாம் என்பதில் அவள் மனம் உறுதியாக இருக்க, மனதைக் கல்லாக்கிக் கொண்டு,
“பிளீஸ் சார்!! என்னைய பேச வைக்காதீங்க.. ஒரு பொண்ணு வேண்டாம்னு சொன்னா, விலகி போகாம இப்படித்தான் ஃபோர்ஸ் பண்ணுவீங்களா?? எனக்கு இந்தக் காதல் எல்லாம் பிடிக்கலை சார்.. தயவு செஞ்சு விட்டுடுங்க என்னை” முயன்று முகத்தில் வரவைத்த பிடித்தமின்மையுடன் அவள் பேச,
வினய்க்கு, அவள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என விளங்கிக் கொள்ள முடியவில்லை. நிச்சயம் அவளுக்கும் தன் மேல் ஒரு விருப்பம் இருக்கின்றது என்பதை அவனால் உளமார உணர முடிந்தது, இருந்தும் ஏன் இந்த விலகல் எனப் புரியாமல் தவித்தவன்,
“வதனா!! லுக் அட் மை ஐய்ஸ்!!” என அவளைத் தன் கண்களைப் பார்க்கச் செய்தவன்,
“என் வாழ்க்கையில எந்த ஒரு விஷயத்துலயும் முன்வச்ச காலை என்னைக்கும் நான் பின் வச்சதே இல்லை.. நீ தான் என் வாழ்க்கைன்னு நான் என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன்.. அதுல மாற்றம் இல்லை.. கண்டிப்பா உன்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்.. ஆனா நீயா வருவ!!! இந்த வினய்யை தேடி வந்தனா வருவா!! என் காதல் வரவைக்கும்.. அதுல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று புன்னகையுடன் அவன் கூறினாலும், அந்த புன்னகைக்குப் பின் இருந்த பிடிவாதத்தையும், பிடித்தத்தையும் பெண்ணவளால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.
“உனக்கு ஏதோ பிராப்ளம்.. எதை நினைச்சோ நீ தயங்குறன்னு மட்டும் எனக்குப் புரியுது.. பட் அது என்னன்னு எனக்குத் தெரியலை.. உங்க வீட்டை நினைச்சு கவலைப்படுறியா?? சப்போஸ் அதுதான் உன் பிரச்சனைனா நோ வொரிஸ்!! நம்மளோட பேரண்ட்ஸ் சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம் என்னக்கா இருந்தாலும் நடக்கும்.. அதை நான் பார்த்துக்குறேன்” என்று அவன் உறுதி அளிக்க,
‘எங்க அப்பாவைப் பத்தி உங்களுக்கு இன்னும் தெரியலை வினய்!! இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை’ என்றெண்ணியவளின் மனம், பிடித்த ஒன்றை தூக்கி எறியத் துடிக்கும் தன் நிலையை எண்ணி ஊமையாய் கண்ணீர் வடித்தது.
“இல்லை சார்!! இது ஒத்துவராது” என அவன் முகம் பாராமல் அவள் சொன்னதையே சொல்லவும்,
வினய்க்கும் இதற்கு மேல் அவளை தொந்தரவு செய்து சங்கடப்படுத்த விருப்பமில்லை.
“யுவர் விஷ் வதனா!!! பட் என் முடிவு என்னைக்கும் மாறாது.. இந்த வினயோட வாழ்க்கை வந்தனாவோட மட்டும் தான்.. ” என உறுதியுடன் கூறியவனின் பார்வை இப்போது ரசனையாய் அவள் மீது படர்ந்தது.
பச்சை வண்ணப் பட்டுச் சுடிதாரில், லேசாக வாடிவிட்ட மல்லிகைப் பூ அவளின் ஒரு தோளை அலங்கரித்திருக்க, வெயிலிலும், வேண்டியவனின் அருகாமை தந்த பதட்டத்திலும் அவளின் மதி முகத்தில், வைரக் கற்களாய் மின்னியது சில வேர்வைத் துளிகள்.
முகத்தில் இருந்த பொட்டைத் தவிர, வேறெந்த ஒப்பனையும் இல்லாமலே அவனை மொத்தமாய் வாரிச் சுருட்டிக் கொள்ளும் பேரழகுடன் மிளிர்ந்தாள் அவனின் வதனா.
‘ஊஃப்!!! யூ ஆர் கில்லிங் மீ வதனா..’ என காற்றை உள்ளிழுத்து பெருமூச்சு விட்டபடி அவன் தள்ளாடிப் போக,
அவனின் செயல்கள் ஒவ்வொன்றும் பெண்ணவளை கொஞ்சம் கொஞ்சமாய் நிலை தடுமாற வைத்துக் கொண்டிருந்தது.
‘பிளீஸ் பொய்டுங்க வினய்!! இதுக்கும் மேல என்னால கன்ட்ரோல் பண்ண முடியாது… உங்க கண்ணைப் பார்த்து இதுக்கும் மேல என்னால பொய் சொல்ல முடியாது’ என மனதோடு மன்றாடிக் கொண்டிருந்தாள் அவனிடம்.
அவளின் உணர்வுகள் அவனைச் சென்று தாக்கியதோ என்னவோ, “ஓகே வதனா!! உனக்கு டைம் ஆச்சுல.. நீ கிளம்பு.. அன்ட் இந்த கொஞ்ச நேரம் எனக்காக கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!!! நானும் கிளம்புறேன்” என்று அவன் விடைகொடுக்க,
அவள் மனம் ஆசுவாசம் அடைவதற்கு பதில், அவஸ்தை தான் அதிகமானது.
அவனுடனே செல்லச் சொல்லி கால்களிரண்டும் கெஞ்ச, இதற்கு மேலும் இங்கு நிற்க முடியாது என்றுணர்ந்து, “இனிமேல் இப்படி என்னைப் பார்க்க வராதீங்க” என்று அவனிடம் கூறியவள்,
‘வந்தா நானும் உங்கூடவே வந்துடுவேன் வினய்!!’ என தனக்குள் கூறிக்கொண்டு அவனைக் கடந்து முன்னேறினாள்.
அவள் போகும் பாதையில் அவன் இதயமும் அவனிடமிருந்து நழுவி ஓடுவதை உணர்ந்தவனுக்கு, இந்தக் காதல் ஒரு அழகான அவஸ்தையாக இருந்தது.
சற்று தூரம் சென்ற பின் அவனைத் திரும்பிப் பார்த்தவள், “கங்கிராட்ஸ்.. அவார்ட் வாங்கினதுக்கு..” என தயக்கத்துடன் சொல்லிவிட்டு அவனை எதிர்கொள்ள முடியாமல், எதிலிருந்தோ தப்பித்து ஓடுவதைப் போல் அவள் போயே விட,
வினய் முகத்தில் அவள் மனதைக் கண்டுகொண்டதில் ஒரு விரிந்த புன்னகை.
‘அப்போ என்னைப் பத்தி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டதான வதனா?? உனக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு இதோ இப்போ கன்பார்ம் ஆகிடுச்சு.. ஆனாலும் ஏதோ மனசைப் போட்டுக் குழப்பிக்கிற
.. ஹம்ம்.. வெய்ட் பண்றேன்.. நீயே உணக்குப் போட்ட தடையெல்லாம் உடைச்சிட்டு என்னைத் தேடி வருவ!!! நம்ம காதல் வரவைக்கும்..’ என்று தன் மனதோடு கூறிக்கொண்டவன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பினான்.
error: Content is protected !!