Skip to content
Post Views: 2,827
3(2)
அக்சரா அந்த வீட்டிற்கு வரவும் பழக்கப்பட்ட இடம், விளையாடி உணர்ந்த இடமாக இருந்திருக்கும்.
வேலனை பார்த்தவுடன்…… இந்த வீட்டிற்கும் நமக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்று மட்டும் புரிந்திருந்தாள். ஆனால் இப்பொழுது இளவேலன் தன் தாய்யின் அண்ணனோ, தம்பியோ என்றும் தீரன், செழியன், மாறன் இவர்களின் சொந்த முறைப்பையன்கள் என்றும் வைசுவை பற்றி தான் தீரன் பேசுகிறான் என்றும் அவன் கண்கலங்கலில் அவனுக்கு வைசு மீது காதல் உள்ளது என்று நன்றாக புரிந்து கொண்டாள். அவளது குணத்திலிருந்து முற்றிலுமாக மாறிய எண்ணத்துடன் அவர்களையே பார்த்தாள்.
Advertisement
செழியனும் அதே மனநிலையில் தான் இருக்கிறான்.
Advertisement
“அண்ணா சொல்லும் அத்தை பொண்ணுங்க நம்ம வைசுவுமா?” இத்தனை நாட்கள் அவளை பார்த்தும் எந்த புரிதலும் இல்லாமல் இருந்திருக்கேன். அப்படின்னா அந்த கலவரத்துல்ல நம்ம குடும்பத்துல இந்த மூணு பொண்ணுங்க மிச்சம் இருக்காங்க.
Advertisement
“அண்ணா சொன்ன, அவர் கை பிடித்து வளர்ந்து பொண்ணு வைசுவா? அண்ணா அவளை காதலிக்கிறாரா?” அவன் நெஞ்சம் அடித்துக் கொண்டது. எண்ணங்கள் எங்கெங்கோ செல்ல, மாறன் அவன் தோளை பற்றினான்.
Advertisement
“அண்ணா நம்ம குடும்பத்துல்ல இருந்தவங்கள காதலித்து இருந்திருக்கான்னு தெரியும். ஆனால் கண்கலங்கும் நிலை வரை அவர் மனதில் அந்த பொண்ணு இருப்பாங்கன்னு என்னால நம்பவே முடியலலைல்ல அண்ணா?” செழியனிடம் கேட்டான்.
ம்ம்ம்! அண்ணா, சிறுவயதிலிருந்து அவளை மட்டும் நினைத்து தான் எந்த பொண்ணையும் அருகே விடவில்லை. அவள் அத்தை பொண்ணு என்பதால் மட்டுமல்ல அவர் மனதில் அந்த பொண்ணு மேல காதல் இருக்குடா. அவர் காதலிக்கிறார்டா..சீரியசா இருக்கார்..
“அதுக்கு என்னன்னா பண்றது? செத்தவங்கல்ல முன்னாடியா கொண்டு வர முடியும்?”
“முன்னாடி தான வந்து நிக்கிறா?” மனதில் எண்ணியவாறு மாறா, “நீயும் தூங்கப் போ. நான் குரு, அண்ணாவை பார்த்துட்டு வாரேன்”.
“அவன் எதுக்கு மாமன், மச்சான்னு அழைக்க சொல்றான்?” மாறன் சினமுடன் கேட்க, “போடா அண்ணா பார்த்தால் திட்டுவாங்க” என்று செழியன் சென்றான்.
மாறன் அறைக்கு செல்லவும், செழியன் வேலன் அறைக்கு வந்தான். வெளியே குறுக்கும் நெடுக்குமாக அக்சரா நடந்து கொண்டிருந்தாள்.
“இங்க என்ன பண்ற? தூங்கலையா?” செழியன் அக்சராவிடம் கேட்டான்.
அவர்கிட்ட பேசணும்..
என்ன?
அது..அவள் சிந்திக்க, உள்ளே சத்தம் கேட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அறைக் கதவை திறந்தனர். இளந்திரையனிடமிருந்து தப்பி குரு வேலனை பிடித்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.
சித்தப்பூ, இவனை விடுங்க. இவனுக்கு எவ்வளவு தெனாவட்டு? என்னிடமே என் தங்கச்சியை லவ் பண்றேன்னு சொல்வான்.
வாட்? செழியன் அதிர்ந்து சத்தமிட்டான்.
வாசலில் நின்று கொண்டிருந்த அக்சரா, செழியனை பார்த்து வேலன் இருவரையும் உள்ளே இழுத்து கதவை தாழிட்டார்.
“அண்ணா, என்ன சொன்ன? தங்கச்சியா?” செழியன் தடுமாற்றமுடன் கேட்டான்.
“ஒன்றுமில்லைடா” இளந்திரையன் மழுப்ப, “மாமா” அக்சரா அழைக்க, அனைவரும் அதிர்ந்தனர்.
தீரன் அவள் முன் விரைந்து, “உனக்கு நினைவிருக்கா?” கண்கலங்க கேட்டான்.
ம்ம்! எல்லாமே தெரியல. யாழு….உங்க தங்கச்சி தான? எனக்கு அந்த பெயர் நினைவிருக்கு. ஆனால் யாருடைய முகமும் நினைவிற்கு வரலை அழுதாள் அக்சரா.
“அழாதடா” வேலன் அவளை அணைத்துக் கொண்டு, “உன்னோட அப்பா பற்றி அம்மா ஏதாவது சொன்னாங்களா?”
இல்ல மாமா, இப்படி ஒரு குடும்பமோ ஊரோ இருப்பதையே எங்களிடம் அம்மா சொன்னதில்லை. வைசுவுக்கும் சுபாவுக்கும் எதுவுமே தெரியாது. சுபாவுக்கு தெரிந்தால் ரொம்ப சந்தோசப்படுவா. அவளுக்கு கலகலவென இருப்பது பிடிக்கும். ஆனால் அம்மா தான் எதுவும் சொல்லவில்லை.
மாமா, நீங்க வைசுவை லவ் பண்றீங்க..
கீழுதட்டை வாய்க்குள் அடக்கி “இல்லை” தலையசைத்தான் இளந்திரையன்.
இல்லண்ணா, “நீ லவ் தான் பண்ற” செழியன் இளந்திரையனிடம், இதுக்கு தான் நீ உன்னறைக்குள் எங்களை விட்டதேயில்லையா? எப்படியண்ணா..இத்தனை வருசமா மனசுக்குள்ள போட்டு பொறுமையா இருக்க? வைசுவிடம் சொல்லு. எல்லாத்தையும் சொல்லிடு..அவ புரிஞ்சுப்பா”.
வேண்டாம் செழியா..
“நீங்க சொன்னால் மேலும் அவளுக்கு மனதளவில் பிரச்சனையை தான் உண்டு பண்ணும். அதனால் முதலில் இருந்து ஆரம்பிங்க மாமா” அக்சரா கூறினாள்.
வேண்டாம் தேனு. அவளுக்கு நான் சரியான ஜோடி இல்லை.
டேய், என்ன நினைச்சிட்டு இருக்க? குரு இளந்திரையன் முன் வந்து, “தீரா..காதலிக்க மனசு போதும்டா. படிப்பெல்லாம் தேவையில்லை”.
தேவைடா. அவளுடன் படிச்சவங்க எங்களை ஜோடியா சந்திந்தால் நல்லாவா இருக்கும்? சொல்லு?
அதுக்கில்லைடா…நீ..தான்..குரு ஏதோ சொல்ல வர, “முதல்ல அவன் யாருன்னு சொல்லு தேனும்மா” குரு வாயை அடைத்து இளந்திரையன் அக்சராவை பார்த்தான்.
மாமா, அவனை நாங்க யாருமே பார்க்கலை. அக்கா, சுபாவை கடத்தும் முன்னே என்னை கடத்திட்டான். என்னை வைத்து தான் அம்மாவை அவனிடம் மிரட்டினான்.
மிரட்டினானா? வேலன் கேட்டான்.
ஆமா மாமா, அவன்..அவன்..தயங்கி இளந்திரையனை பார்த்தாள் அக்சரா.
சொல்லும்மா?
மாமா, அக்காவை தான் முதல்ல கேட்டான்.
சிட்டுவை எதுக்கு கேட்கணும்?
தெரியல மாமா. அம்மா முடியாதுன்னு சொல்ல, அவளை தூக்கி காட்டுறேன்னு தான் அக்கா சுபாவை கடத்த ஆட்களை அனுப்பினான். அம்மாவை பார்க்கணும். அங்கேயே அம்மாவை கொன்னுட்டு இருவரையும் கடத்தி என்னுடன் சேர்த்து அடைத்து வைத்தான்.
மாமா..அவனும் இதே ஊர்க்காரன் தான். வைசுவை தனியே விட்டு போனால் உங்களை உயிரோட விடுகிறேன்னு சொன்னான். நாங்க முடியாதுன்னு நிற்க எங்களை கொல்ல சொன்னான். நாங்க கஷ்டப்பட்டு தப்பி இங்க வந்திருக்கோம்.
அக்காவோட தோழி வீடு விழுப்புரத்துல்ல இருக்கு. அங்க தான் போனோம். ஆனால் அவங்க வீட்ல இல்லை. புரியாமல் இருக்கும் போது தான் செழியன் மாமா வந்தார். எங்களை இங்க அழைச்சிட்டு வந்துட்டார்.
நம்ம குடும்பத்துக்குள்ளவே வருவோம்ன்னு நினைக்கலை. அவன் குறி அக்கா. அவன் இந்த ஊர்க்காரன். சிறு வயதில் அக்காவை நன்றாக தெரிந்தவன். நம்ம குடும்பத்தை கொன்னவனாக கூட இருக்கலாம் மாமா..
“மச்சான்” குரு இளந்திரையனை அழைக்க, “தேனும்மா..உங்களுக்கு அவனை பார்த்தால் அடையாளம் காட்ட முடியுமா?”
“தீரா வேண்டாம்” குரு சொல்ல, “என்னடா செய்ய சொல்ற? என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறானுக”.
மாமா, எனக்கு பார்த்தால் அடையாளம் தெரியாது. குரல் தெரியும்.
“குரலை வைத்து அடையாளம் கண்டு விடுவாயா?” குரு கேட்க, ம்ம்..முடியும் என்றாள் உறுதியுடன்..
“சவுந்தர பாண்டியனின் பேரன் ராஜ பாண்டியாக இருக்குமோ?” வேலன் கேட்க,
“அண்ணா…..அவசரப்பட வேண்டாம். நீ சொன்னது போல இவங்க மூவரும் இங்க இருப்பதே வெளிய தெரிய வேண்டாம்” செழியன் கூறினான்.
இல்ல செழியா, நான் இவங்கள வெளிய வர வேண்டாம்ன்னு சொன்னது அவங்க பொண்ணுங்கள அடையாளம் கண்டு விடக் கூடாதுன்னு தான். அவன் தான்னு முடிவானால் எல்லாருக்கும் நாமே தெரியப்படுத்தணும். ஆனால் தேனு..குட்டிம்மாவுக்கும் வைசுவுக்கும் தெரிய வேண்டாம்.
ம்ம்! சரி மாமா. நான் இப்ப என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க?
எல்லாரும் வெளிய போங்க. நான் தேனோட தனியா பேசணும்..
“தீரா” வேலன் அழைக்க, “சித்தப்பூ” நீங்க ஓய்வெடுங்க. நம்ம குடும்பத்துல்ல எல்லாரும் உயிரோட இருக்கணும்ன்னு வேண்டிக்கோங்க.
குருவை பார்த்து, நீயா யாழு முன்னாடி போய் லவ்வுன்னு சொல்லிட்டு நின்ன உன்னை கொன்னே புடுவேன். வாலை சுருட்டிட்டு இரு. ஆனால் நம்ம ஆளை விட்டு அவளை கண்காணித்துக் கொண்டே இரு..
மச்சான், “நான் பாட்டியை பார்த்தேன்” குரு சொல்ல, “அம்மாவா?” இளவேலன் அவனருகே வந்து, “எப்படி இருக்காங்க? நல்லா இருக்காங்கலா? எங்க இருக்காங்க? சொல்லு? நான் அம்மாவை பார்க்கணும்” கண்ணீருடன் கேட்டார்.
“நிஜமாகவே பாட்டியை பார்த்தீயாடா?” இளந்திரையன் கேட்டான்.
ஆமா மச்சான், மேகலை அத்தை, பாட்டி, யாழினி எல்லாரும் தென்காசில்ல இருக்காங்கடா.
சித்தியுமா?
ஆமா செழியா, கண்டிப்பா எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்ம குடும்பத்துல்ல எல்லாரும் உயிரோட இருப்பாங்க..
“நம்ம குடும்பமா?” அக்சரா கேட்க, ஆமா தேனு..இவன் நமக்கு சொந்தம் தான். இவன் உன் அம்மாவின் தங்கை மகன். அதாவது நீங்க எப்படி எங்களுக்கு அத்தை பொண்ணுங்களோ அதே போல எங்களோட மற்ற அத்தை துர்கா தேவி அத்தையின் மகன் குரு பிரசாத். உனக்கு அண்ணன்..
அப்புறம் ஏன் உங்களை தனியே விட்டு இருக்காங்க?
எங்க தாத்தாவுக்கு மாமா மேல கோபம். காதல் திருமணம். தாத்தாவிற்கு பிடிக்காமல் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டாங்க. நடந்த கலவரத்தில் தான் அத்தையும் இறந்துட்டாங்க..
“அண்ணா, இவர் சொந்தம்ன்னு எங்களிடம் நீங்க சொல்லவில்லை” செழியன் கோபமாக கேட்டான்.
தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற? குரு அவனிடம் கேட்டான்.
தெரிஞ்சா மாறன் உங்களை திட்டாமலாவது இருப்பான்ல்ல?
“மாறனுக்கு எதுவும் தெரியக் கூடாது. அவனாக தெரிந்து கொள்ளட்டும். அவனுக்கு கோபம் மட்டும் தான் பட்டென வரும். மத்தபடி நல்லவன் தான். அவனுக்கு வாழ்க்கையின் நிதர்சனம் தெரியணும். அவனே கண்டறியட்டும். அவன் பழகியவர்களை உடனே நம்பிடுவான். அப்படி இருக்கக் கூடாதுன்னு எப்பொழுது புரிந்து கொள்கிறனோ அப்பொழுது தான் அவனை நம்பி எதையும் சொல்ல முடியும்” இளந்திரையன் கூறினான்.
ஆமா, அவன் புரியாமல் தான் நடந்துக்கிறான். பாப்பாவுடன் சண்டை போட்டான்ல்ல? செழியன் கூற,
யாரு அவளா பாப்பா. சுபா சரியான வாயாடி. நானும் அவளும் மாறன் போல தான் சண்டை போட்டுப்போம். என்ன? அவ எல்லாரையும் விட வைசுவிற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாள்.
ஏன்? குரு கேட்டான்.
அண்ணா, அம்மா சுபாவை பார்த்துக் கொண்டதேயில்லை. அவங்க பணத்துக்காக ஓடிட்டே இருப்பாங்க. சுபாவின் முழுப் பொறுப்பும் வைசு தான். சுபாவுக்கு வைசு அம்மா மாதிரின்னு கூட சொல்லலாம் என்று இளந்திரையனை பார்த்தாள்.
என்னோட அண்ணாவும் அப்படி தான். மாறனை கைக்குழந்தையாக கையில் வாங்கியவர். சித்தப்பூ நம்ம வேலைகளை கவனித்துக் கொள்ள, மாறனுக்கு எல்லாமே தீரன் அண்ணா தான். அதான் அண்ணா அருகே யாரையும் நெருங்க விடவே மாட்டான். பழியா கோபம் வந்திரும். அதான் மாமாவை கூட செழியன் குருவை பார்த்தான்.
“மானத்தை வாங்கிடாதடா. நீ எதுவும் சொல்ல வேண்டாம். எல்லாருக்கும் நீ சொல்ல வருவது புரிந்திருக்கும்” கையை தலைக்கு மேல் தூக்கி கும்பிடு போட்டான் குரு.
இளந்திரையன் சிரிக்க, செழியன் தன் அண்ணனை பார்த்தான்.
“ஏன்டா உன் அண்ணனை முழுங்கிடாத. அப்படி பாக்குற? அவன் என்ன பொம்பள பிள்ளையா?” குரு கேட்க, “அண்ணா சிரித்து நான் பார்த்ததில்லை” என்று சொல்லிக் கொண்டே செழியன் இளந்திரையனை பார்த்தான்.
அவன் தன் தம்பியை அணைத்து, உங்களை நல்லபடியாக வளர்க்க தான் நான் என்னை மாற்றிக் கொண்டேன்.
“நீ மாற வேண்டாம் அண்ணா. நீ இப்படியே சிரித்துக் கொண்டே இரு போதும். எங்களுக்காக எவ்வளவு செஞ்சிருக்க?” செழியன் கண்கலங்கினான்.
“பாசத்தை கசக்கி புழியிறான்டா தீரா” குரு இளந்திரையன் தோளில் கையை போட்டு புன்னகைத்தான்.
“முடிந்தால் மாறன் முன் கையை அண்ணா மேல போடுங்க பார்த்திடலாம்” செழியன் குறும்புன்னகை செய்ய, அக்சரா அவனையே பார்த்தாள்.
அவன் முன்னாடி கையை போட்டு என் கைக்கு நானே ஆப்பு வைக்கவா? ஆத்தாடி வேண்டமே வேண்டாம்..
குரு, நீ உன்னோட அம்மாவையும் தேடிப் பாறேன்..
ஏன் மாமா, உங்க அக்காவை நீங்க தேட மாட்டீங்களா?
தேடலாம். ஆனால் அந்த பயலுகளுக்கு தெரிந்து விட்டால்..
வேண்டாம்டா மச்சான், சித்தப்பூ எதுவும் செய்ய வேண்டாம். நீயே பார்த்துக்கோ. விசயம் கடுகளவு கூட வெளிய போகக் கூடாது..
சரிடா மச்சான். நான் கிளம்புகிறேன். உதவின்னா சொல்லு உடனே வந்துடுறேன். வீரன் என்னை தேடுவார். பை..பை..ஆடிக் கொண்டே குரு நகர, அவன் சட்டையை பிடித்து இழுத்த இளவேலன்,
பாருடா…என் மவள கண்காணிக்க தான் தீரன் சொன்னான். பிராக்கெட் போட சொல்லலை. அதனால அடக்கிட்டு இரு..
“என்ன மாமா? இப்படி சொன்னால் நான் என்ன செய்றது? நான் எப்படி என்னோட யாழுவை சைட் அடிக்காமல் இருப்பேன்?”
“குடிச்சிட்டு வெளிய சுத்தாம ஒழுங்கா வீட்டுக்கு போய் சேர்” இளந்திரையன் அக்சராவை பார்க்க, அவள் செழியனை கவனித்துக் கொண்டிருந்தாள்.
“பைடா ஷரா” அவள் கன்னத்தை தட்டி விட்டு குரு செல்ல, அவள் கவனம் குருவின் மீது படிந்து மீண்டது.
எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. யாரும் மாறனிடமும், சிட்டு குட்டிம்மாவிடமும் எதுவும் சொல்லக் கூடாது. கிளம்புங்க. அவன் யாருன்னு பார்த்துட்டு நான் காலையில என்ன செய்யலாம்ன்னு சொல்றேன் என்று அக்சரா கையை பிடித்து அவனறைக்கு அழைத்து சென்றான்.
இளந்திரையன் அறைக்கு சென்ற அக்சராவின் கண்கள் விரிந்தது. அவர்களின் குடும்ப புகைப்படங்கள். எல்லாருடமும் இளந்திரையனின் அழகான நினைவுகள் அடங்கிய புகைப்படங்களை பார்த்து, மாமா..இதெல்லாம் பொக்கிஷமா வச்சிருக்கீங்க.
வேலன் மாமாவை பார்த்து தான் எனக்கு நீங்க சொந்தம்ன்னு தோணுச்சு. ஆனால் எண்ணம் தவறாக தான் சென்றது. நம்ம குடும்பத்தை இவ்வளவு நேசிப்பீங்கன்னு நான் நினைக்கலை என்று அவனது படுக்கையின் மறுபக்கம் இருந்த சுவற்றின் திரையை விரித்தாள்.
வைசு எழுதி பழகிய எழுத்துக்கள், படங்கள், சில கிறுக்கல்கள் இருந்தது. அதனை தொட்டு பார்த்த அக்சரா, “மாமா நீங்க அக்காவை இவ்வளவு காதலிக்கிறீங்களா? அவள் கிறுக்கியது தான!” இளந்திரையனை பார்த்தாள்.
அவனும் அவளருகே வந்து பக்கத்திலிருந்த சுவற்றை காட்டினான். அதில் அக்சராவும் யாழுவும் கோடிலுத்து வைத்திருந்ததை பார்த்து அவனை பார்த்தாள்.
மாமா..இது நான் தான? எனக்கு நினைவுக்கு வருது. ஆனால் சரியாக தெரியல அதனை தொட்டுப் பார்த்தாள்.
ம்ம்! நீயும் யாழுவும் தான். அவளுக்கும் உனக்கும் ஒரே வயது தான்.
“மாமா, அவளையும் இங்க வர வைக்கலாம்ல்ல? அத்தையும், பாட்டியும் வந்தால் நல்லா இருக்கும்ல்ல?”
ம்ம்! ஆனால் அதற்கு முன் என்று தொண்டையை கனைத்து அக்சரா கையை பிடித்து அமர வைத்து, “இதுல்ல எந்த வாய்ஸூன்னு சொல்லு?” அலைபேசியில் ஆடியோவை கேட்க வைத்தான்.
அதில் ஒவ்வொரு ஆண்களின் குரலாக வந்தது. தற்பொழுது கேட்டதை நிறுத்தி..மாமா..இது தான். இவன் யாரு? கேட்டாள்.
இவன் தானா? உறுதியா சொல்லு?
கண்டிப்பாக உறுதியாக சொல்றேன் இவன் தான்..யார் மாமா இவன்?
இவன் என்னோட மாமா பையன்..
மாமாவா?
ம்ம்..என் அம்மாவின் அண்ணன் மகன் அகிலரசன்..
இப்ப என்ன மாமா செய்யப் போறீங்க? இவனும் சொந்தமாச்சே!
வா..நாம போகலாம்..
எங்க மாமா? இந்த நேரத்துல்ல?
இதான் சரியான நேரம்..
என்ன?
ஆமா, நீயும் குட்டிம்மாவும் யாரிடமும் மறைய வேண்டாம். சிட்டு, மாறனுக்கு மட்டும் நம்ம குடும்ப விசயம் இப்பொழுதைக்கு தெரிய வேண்டாம். மாறனை சமாளித்து விடுவேன். சிட்டு வெளியே வராமல் நீ பார்த்துக்கோ..
சரி மாமா..வா..என்று அவளை தன் ராயல் என்பீல்ட்டில் ஏற்றி அவன் வெளியேற, செழியன் அவனறையிலிருந்து இருவரையும் பார்த்து விட்டு வேகமாக இறங்கி வந்தான். அவனை பார்த்த வேலன்…பார்த்துட்டியாலே!
சித்தப்பூ, அண்ணா அக்சராவோட தனியா போறான். ஏதும் ஆகிடாமல்..
தீரா, முடிவை சரியாக எடுத்து தான் செயல்படுவான். வந்துருவாங்க. நீ போய் படு. எனக்கு இப்பொழுது தான் நிம்மதியே! நம்ம குடும்பத்தினர் நம்மிடம் சேரும் நாள் சீக்கிரமே வந்துரும்.
“சித்தப்பூ, அம்மா அப்பாவும் உயிரோட இருப்பாங்கல்ல?”
இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆனால் எல்லாரையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்..
“முட்டாள்தனமாக இருந்தாலும் அம்மாவும் அப்பாவும் கண்டிப்பாக வருவாங்கன்னு நான் காத்துட்டு இருப்பேன்” செழியன் சொல்லி சென்றான்.
வேலனுக்கு தன்னவளின் எண்ணம் வந்து வாட்டியது. உன்னை தனியே விட்டுட்டேன் ராது.
“நீ நல்லா இருக்கிறாயா? உனக்கும் குழந்தைகள் இருப்பாங்கல்ல?” கண்கலங்க அவரறையில் படுத்து விட்டத்தை வெறித்தார். தூக்கம் அவரை விட்டு தூரச் சென்றது.
“அம்மா” சத்யா அழைக்க, சொல்லுப்பா?
ஏம்மா அவரிடம் நீங்க பேசக் கூடாது?
யாரிடம்? சத்யாவின் அம்மா தெரியாதது போல கேட்டார்.
அம்மா..அப்பா..
உன் அப்பா உயிரோட இல்லைன்னு சொன்னேன்ல்ல?
அவர் பெயரில் இந்த ஊரில் ஒருவர் இருக்கார்ம்மா? சத்யா சொல்ல, அவனை பார்த்தார் அவன் அம்மா.
இளவேலன். இளா குடும்பத்தின் கடைசி மகன். அவர் உயிரோட தான் இருக்கார். அவரோட அண்ணன் பசங்களுடன் எந்த பெண்வாசனையும் இல்லாது தனித்திருக்கார்ம்மா..
“சத்யா” ராதிகா சத்தமிட்டார்.
மோகன் தீரன் அண்ணா பற்றி அடிக்கடி பேசும் போது எனக்கு ஏதும் தோன்றவில்லை. ஆனால் இளவேலன் என்ற பெயரை அவன் கூறிய போது இந்த இளசத்யவந்தனுக்கு சந்தேகம் வந்ததும்மா..
சத்யா..
மறைக்காதீங்கம்மா. இளவேலன் தான என் அப்பா. சொல்லுங்க? பளிச்சென கேட்டான்.
ராதிகா கண்ணீருடன் மறுபக்கம் திரும்பிக் கொண்டார்.
இந்த ஊர்ல கலவரம் நடந்தது 2007. நான் பிறந்தது 2000. எப்படிம்மா? அவருக்கு தெரியாம என்னை மறைச்சு வச்சிருக்கீங்க. அவருக்கு நான் பிறந்ததே தெரியல.
ராதிகா மேலும் அழுதார்.
சொல்லீட்டு அழுங்க. நீங்களும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கலை. விபத்தில் அவர் இறந்தது போல சான்றிதழ் கூட வாங்கி வச்சிருக்கீங்க..
ம்! ஆமாடா, நீ பிறந்தது மட்டுமல்ல நான் கருவுற்றது கூட அவருக்கு தெரியாது. நீ என் வயிற்றில் வளர்வதே எனக்கு முதல்ல தெரியல. ஐந்தாம் மாதம் முதலில் தான் தெரிய வந்தது. அதற்கு முன்னே அவருக்கு வேற பொண்ணை அவர் அப்பா பார்க்க ஆரம்பித்து விட்டார்.
உன் அப்பாவின் அப்பாவுக்கு என்னை பிடிக்கலை. நான் அவரை விட்டு போகலைன்னா அவரை வீட்டை விட்டு வெளிய துரத்திடுவேன்னு மிரட்டினாரு. அவர் வெளிய வந்து வாழ தயங்க மாட்டார். ஆனால் அவர் குடும்பம் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுவார். அதனால தான் உன்னை அவரிடமிருந்து மறைத்தேன்.
என் அம்மா, அப்பாவுக்கும் நான் பாரமாக இருப்பது போல் அவர்கள் பேச என்னால் இங்கு இருக்க முடியவில்லை. அதனால் தான் மாறி வந்த செல்லூரை விட்டும் சென்னை கிளம்பினேன்.
நடந்த கலவரத்தில் அவர் குடும்பத்தை இழந்து தீரனையும் அவன் தம்பிகளையும் அவர் தனியே வளர்ப்பதை தூரத்தில் இருந்து பார்த்தேன். அவர் உனக்காக செய்ய வேண்டிய எல்லாவற்றையும் அந்த பசங்களுக்கு செய்தார். அதற்காக நான் கோபப்படலை. ஆனால் கஷ்டமாக இருந்தது.
அம்மா..அப்படின்னா நீங்களும் இந்த ஊர் தானா?
இல்லடா..நாங்க ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தோம். காதல் மலர்ந்தது. அவர் என்னை ஏமாற்ற எண்ணியதில்லை. எதை பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கும் மனுசன்டா அவர். ஆனால் இப்பொழுது ரொம்ப பொறுப்பா மாறிட்டார். தீரனுக்கு பொண்ணு பார்க்குறார் போல..
“அம்மா” தீரன் அண்ணா சிறுவயதில் ஒரு பொண்ணை காதலிப்பதாக சொல்லிக்கிறாங்க.
ஆமாடா, தேவிம்மா..நம்ம ஊர் வைஷ்ணவி கோவில் இருக்குல்ல. அதுவும் மதுரவீரனும் நம்ம குலதெய்வம். அவரோட அக்கா பொண்ணு வைஷ்ணவி தேவி. தீரன் மட்டும் சிட்டுன்னு அழைப்பான். அந்த பொண்ணுக்கும் அவனென்றால் உசுறு. மாமா..மாமான்னு கையை கோர்த்துக் கொண்டே சுற்றும். பாவம் அந்த புள்ளையும் இல்லை. அவன் அதிலிருந்து இன்னும் வெளிய வரலை போல..
ம்ம்!
அப்பாவிடம் பேசலாம்ல்லம்மா?
வேண்டாம். நீயும் எதையும் அவரிடம் பேசக் கூடாது என்று சத்யாவின் கையை அவர் தலையில் வைத்து, “என் மீது சத்தியம். நீ எதையும் அவரிடம் சொல்லக் கூடாது. நான் உன் அம்மா என்று தெரிந்தால் வேறொருவர் மனைவியாக தான் என்னை பார்ப்பார். அப்படியே இருக்கட்டும்”.
அம்மா..
போ..படுத்து தூங்கு. காலை டியூட்டிக்கு கிளம்பணும். முடிந்தால் அந்த கலவர கேஸை ஓபன் செய்து பாரு. இந்த ஊரில் பல குடும்பம் அழிந்திருக்கு. முடிந்தால் இந்த ஊருக்கு நல்லது செய். எனக்கு அது போதும்..
விரக்தியுடன் தன் அம்மாவை பார்த்து மனதினுள் “அவரை உன்னுடன் சேர்த்து வைக்காமல் நான் விட மாட்டேன்” உறுதி எடுத்துக் கொண்டான் இளசத்யவந்தன்.
error: Content is protected !!