Skip to content
Post Views: 2,574
4(1)
அக்சராவும் இளந்திரையனும் வந்த வண்டி ஓர் வீட்டின் முன் வந்தது.
அக்சராவின் கரத்தை பற்றிக் கொண்டு, “அகில்” இளந்திரையன் வெறியுடன் சத்தமிட்டான்.
Advertisement
வீட்டிலிருந்தவர்கள் வெளியே வர அகிலும் வந்தான். அவனை கேவலமான பார்வை பார்த்தாள் அக்சரா.
Advertisement
“இது யாருன்னு உனக்கு தெரியுதா?” சினமுடன் கத்தினான்.
Advertisement
“தீரா, எங்க வந்து கத்திட்டு இருக்க?” அவன் தாத்தா பேரரசன் சீற்றமுடன் கேட்டார்.
Advertisement
எங்க வரணுமோ சரியா தான் வந்துருக்கேன் கிழவா. உன் சித்து வேலையை நீ காட்டினால்.. “உன் பேரன் கொலை செய்யும் புது வேலையை கையில் எடுத்திருக்கான் போல!” ஏளனமுடன் கேட்டான் இளந்திரையன்.
தீரா..அவர் சத்தமிட்டார்.
ஊகூம்…. “இளந்திரையன்” காலரை தூக்கி கெத்தாக கூறினான்.
காளையனூரின் காளையன் என் தாத்தா. இது யாருன்னு தெரியுதா கிழவா? இவ எங்களோட தேனு. குட்டிம்மா, சிட்டு என்னோட என் வீட்ல தான் இருக்காங்க. இருப்பாங்க..முடிஞ்சா தொட்டுப் பாருடா பொறுக்கி..
“ஏய், யார பார்த்து பொறுக்கின்னு சொன்ன?” கலையரசன் இளந்திரையனை நெருங்கினான்.
உங்களுக்கெல்லாம் எப்போதும் நேரடியா மோதத் தெரியாதுல்ல. என்னோட மாறனுக்கு உன்னை பற்றி தெரியும் போது காரி துப்புவான்..வாங்குவ..என்று கலையசரனிடம் சத்தமிட்டான் இளந்திரையன்.
தீரா..நீ அதிகமா போற..
போகலை. வந்துருக்கேன். “எவ்வளவு திண்ணக்கம் இருந்தா என்னோட சிட்டுவை உன்னிடம் விட்டு போக சொல்லி இருப்ப? என்னோட அத்தையை கொன்னு இவங்களையும் கொல்ல பார்த்திருப்ப? இதுக்கு மேல இவங்க மேல கையை வைக்கணும்ன்னா என்னோட வீட்டுக்கு வாடா.. நீயா நானான்னு பார்த்திடலாம்” அகிலிடம் சவால் விட்டான் இளந்திரையன்.
கிழவா, நடந்தெல்லாம் நல்லா நினைவில் எனக்கு இருக்கு. நீ மறந்துறாத. இன்றில்லை ஒரு நாள் உனக்கு இருக்கு.
இப்ப நான் வந்தது. என்னோட அத்தை பொண்ணுங்க என்னோட வீட்ல தான் இருக்காங்க. உன்னோட பேரன் சிரமப்பட்டு எதுக்கு இவங்கள தேடணும். நான் சொல்ல தான் வந்தேன். சொல்லீட்டேன்..
கிழவா..உன்னோட பேரனுக்கு நேரம் சரியில்லை. அவன் மட்டும் இவங்க மேல கையை வச்சான் துண்டு துண்டா ஆட்டை வெட்டுவது போல வெட்டிப் போட்ருவேன்..
ஏய்..எல்லாரும் கத்த, அக்சரா அகிலரசன் முன் வந்து, என்ன சொன்ன? என்னோட அக்கா வேணுமா உனக்கு? எனக்கு அவள் மீது பொறாமை இருந்தது உண்மை தான். அதுக்காக அவள் மீது பாசமில்லாமல் இல்லை. அவள் என்னோட அக்கா. அவளுக்கு ஒன்றுன்னா நானும் சும்மா விட மாட்டேன்..
“என்னடி, இவன் இருக்குற திமிறா?” அகிலரசன் சத்தம் போட, “இல்லடா எங்க வம்சத்துக்கே உள்ள திமிறுடா. எனக்கான நேரம் வரட்டும். அப்புறம் உன்னை பார்க்கிறேன்” இளந்திரையனை பார்த்து,
“மாமா இந்த அருவருப்பான இடத்துல்ல எனக்கு நிற்கவே பிடிக்கல. வாங்க போகலாம்” அவனை இவள் கையை பிடித்து இழுத்து நகர்ந்தாள்.
கைதட்டும் சத்தம் கேட்டு திரும்பினாள்.
அகிலரசன் சிரிப்புடன் ஏதோ விசயத்தை சொல்ல, இளந்திரையன் துள்ளிக் கொண்டு அவனிடம் செல்ல, மாமா..நீ வா. எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது தான் என்று சொல்லி அவனை இழுத்து சென்றாள்.
இளந்திரையன் சினமுடன் பைக்கை செலுத்த, வீட்டிலிருந்து வெளியே வந்த சத்யா, “தீரன் அண்ணாவுடன் பொண்ணா?” அவர்களை பின் தொடர்ந்தான்.
பேரரசன் வீட்டிற்கு சென்றதிலிருந்து அவர்கள் பேசியதை கேட்டு அதிர்ந்திருந்த சத்யா தீரன் கிளம்பவும் அவன் பின்னால் சென்று வேகமெடுத்து அவன் முன் வந்து நின்றான்.
“வழிய விடுடா” இளந்திரையன் சினமுடன் சீற, “எதுக்கு அண்ணா இவ்வளவு கோபம்?” நான் உங்களிடம் ஒரு விசயம் சொல்ல வந்தேன். சொல்லீட்டு போயிடுறேன்.
“மாமா” அக்சரா இளந்திரையன் தோளில் கை வைக்க, அவளை பார்த்த சத்யா புன்னகைத்து..2007ல் நடந்த கலவரம் பற்றிய கேஸை விசாரித்து நடத்த போறேன்.
இளந்திரையன் அவனை பார்த்தான்.
ம்ம்! கண்டிப்பாக எனக்கு தெரிய வேண்டியது தெரிய வரும். முன்பு உங்க ஊரு பஞ்சாயத்து தலைவரையே கொன்றதாக சொன்னாங்க. அதை செய்தது யார்? எதற்கு செய்தாங்க? எல்லாவற்றையும் கண்டறிய போகிறேன்..
“வேண்டாம் சார்” இளந்திரையன் வண்டியிலிருந்து இறங்கினான்.
அண்ணா, நான் செய்தே ஆகணும்.
உங்களுக்கு அம்மா இருக்காங்கன்னு சொன்னீங்க. கலவரத்தை செய்தவங்க கொன்றுவாங்க.
மோகன் ஹூரோ வாயிலிருந்து இதை நான் எதிர்பார்க்கலை..
ஹூரோவா? சிரித்தான் இளந்திரையன்.
மோகன் தான் உங்களை பற்றி பேசிக் கொண்டே இருப்பான்.
பயலுக்கு பாசம் அதிகம். அதான் பேசி இருப்பான்..
அதுக்காக மட்டுமல்ல. எனக்கு சொந்த காரணமும் இருக்கு அண்ணா..
சொந்த காரணமா? நீங்க எங்க ஊருக்கு வந்தே ஒரு வாரம் கூட ஆகலை.
ம்ம்! அது பர்சனல்..
அப்படி என்ன சார் பர்சனல்? அந்த கேஸை எடுக்கணும்ன்னா அதில் நீங்களும் பாதிக்கப்பட்டவாரா? அக்சரா கேட்க, “மேடம் என்ன படிக்கிறீங்க? பேசியதை வைத்தே கண்டுபிடிச்சிட்டீங்க?”
சார், நான் சைக்காலஜி படித்துக் கொண்டிருக்கிறேன். தற்பொழுதைய காலத்தில் எல்லாரும் மனஅழுத்தமுடன் தான இருக்காங்க. அதான் இந்த கோர்ஸ் எடுத்தேன்.
ம்ம்! கிரேட்..அப்படின்னா எனக்கு உதவி தேவைப்பட்டால் உதவுவீங்களா?
கண்டிப்பாக சார். ஆனால் ஏதும் பிரச்சனையானால் என்னை குற்றம் சாட்டக் கூடாது.
எந்த இயர் படிக்கிறீங்க?
இரண்டாம் வருடம் முடிந்து விட்டது சார். மூன்றாம் வருடம் படிக்கப் போகிறேன்.
கண்டிப்பாக உங்களை குற்றம் சாட்ட மாட்டேன். உதவுவீங்கல்ல?
உதவுவேன் சார். ஆனால் டீப்பா கெல்ப் வேணும்ன்னா மாமா பர்மிசன் வேணும் என்று இளந்திரையனை பார்த்தாள்.
அதெல்லாம் வேண்டாம் தேனு. நீ விடு. அவருக்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.
அண்ணா, நிஜமாகவே உதவுவீங்களா?
ம்ம்! உங்களுக்கு என்ன பாதிப்பு?
என்னோட அப்பாவை இந்த கலவரத்தால் தான் முழுவதுமாக இழந்தேன்.
யாரு உங்க அப்பா?
நான் சொன்னால் சரியாக இருக்காது.
சரியாக இருக்காதா?
ஆமா அண்ணா, நான் சொன்னால் பலர் பாதிக்கப்படுவாங்க.
அப்படி யாரு தான் உங்க அப்பா?
கோபப்படாம கேட்பீங்களா?
ம்ம்! சொல்லுங்க….
உங்க இளவேலன் சித்தப்பா தான் என்னோட அப்பா.
வாட்? அக்சரா அவனிடம் வந்து, அவர் கல்யாணமே பண்ணிக்கலை.
ஆமா பண்ணிக்கலை. என் அம்மாவும் அவரும் காதலிச்சாங்க. இந்த கலவரத்தால் தான் நிலைமை மாறியது.
“ராது சித்தியா?” இளந்திரையன் கேட்க, பரவாயில்லை. கோபப்படாமல் சித்தின்னு ஏத்துக்கிட்டீங்க அண்ணா..
அவங்களையும் தான் நான் தேடிட்டு இருந்தேன்.
என் அம்மாவை எதுக்கு தேடணும்?
சித்தப்பூ என்ன தான் எங்களை பார்த்துக் கொண்டாலும் “ராது….ராது….” என்று உங்க அம்மாவை பற்றி என்னிடம் பேசிக் கொண்டே இருப்பார். அவங்க இருவருக்குமான மகனா?
“ஆமா, நான் அவர் மகன் தான்” என்று அவன் அம்மா கூறியதை சொல்ல, தாத்தா…சினமுடன் முணங்கினான் இளந்திரையன்.
மாமா, தாத்தா இப்படியா செய்வாங்க? ரொம்ப மோசம்..
அவருக்கு அப்பொழுதைய நிலையில் செய்வதறியாது செய்திருக்கார்.
செய்வதறியாத நிலையா? கடுஞ்சினத்துடன் சத்யா கேட்டான்.
அப்படி சொல்லவில்லைடா. நடுத்தர வீட்டுப் பொண்ணுன்னு யோசித்து இருப்பார். ஆனால் அவர் செய்தது பெரிய தவறு தான். நான் சித்தியை பார்க்கலாமா?
தேவையில்லை அண்ணா. என்னோட அம்மாவை எனக்கு பார்த்துக்க தெரியும்.
என்னப்பா இது? எல்லாரும் மாமாவா வந்தா எனக்கு ஒரு அண்ணன் தானா? வருத்தமுடன் அக்சரா கேட்க, இருவரும் அவளை முறைத்தார்.
அண்ணா, உங்களோட பப்பி லவ்? இவங்க தானா?
இல்ல, அது என்னோட அக்கா..
அக்காவா? எத்தனை பேரு?
நாங்க மூணு பேரு..
ஓ..பெற்றோர்?
இல்லை வருந்தினாள்.
மாமாக்கள் பாப்பாவை முறைக்கலாமா? அது என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க. அண்ணாவுடன் இருந்தால் ஜாலியா இருக்குமாம். நிறைய சண்டை போடுவாங்களாம். நம்மை ஏஞ்சல் போல தாங்குவாங்களாம். இதுவரை யாரும் என்னை மனுசியா கூட மதித்ததில்லை.
தேனு, உன்னால தான் யாரையும் புரிஞ்சுக்க முடியல. குட்டிம்மாவும் நீயும் சண்டை தான போட்டுக்கிறீங்க. விட்டுக் கொடுக்கவும் செய்றீங்க? அப்புறம் என்ன உனக்கு அண்ணா வேணும்? அதட்டி கேட்டான்.
மௌனமாக அவர்களிடமிருந்து நகர்ந்து வண்டியருகே வந்து நின்றாள்.
“ஓய்! இங்க வா” சத்யா அழைக்க, “நான் வர மாட்டேன்” முகத்தை திருப்பினாள். சத்யா புன்னகையுடன் அவள் கையை பிடித்து இளந்திரையனிடம் வந்தான்.
கோபம் மட்டும் உங்களுக்கெல்லாம் எங்கிருந்து வருதோ? சலிப்புடன் இளந்திரையன் கேட்க, மாமா..இப்ப தான் கோபத்தில் ஒரு வீட்டுக்கு சென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்துட்டு வந்தார் ஒருவர். அவர் எங்களை சொல்கிறாராம்.
சத்யாவை மாமா என்று அழைத்து பேசினாள்.
“இப்ப என்ன செய்யப் போற?” இளந்திரையன் கேட்க, சார் அவன் இவனாகிட்டானே!
தம்பியை இவ்வாறு அழைப்பதில் தவறில்லையே!
இல்லை அண்ணா, ஆனால் அம்மா உங்களுடன் வர மாட்டாங்க. அவரிடம் ஏதும் நான் பேசக் கூடாதுன்னு சத்தியம் வாங்கி இருக்காங்க. உங்களிடம் சொல்ல மாட்டேன்னு நான் சத்தியம் செய்யவில்லை. அதான் சொல்லீட்டேன்.
“அடேங்கப்பா! உத்தமபுத்திரன் இவரு. சத்தியத்தை காக்கிறாராம்” கேலியாக அக்சரா பேசினாள்.
ஆமா, எனக்கு எல்லாமே அம்மா தான். அவங்க மேல பிராமிஸ் பண்ணீட்டு மீற முடியாது.
ம்ம்! அமைதியானாள்.
என்னவாம் மேடம் அமைதியாகிடீங்க?
ஒன்றுமில்லை.
அவரும் அம்மாவும் என்ன நினைக்கிறாங்களோ முடிவெடுக்கட்டும்.
இதுவும் சரி தான்.
தேனும்மா, சித்தப்பூ கிட்ட எதையும் சொல்லக் கூடாது. சத்யா போலீஸ். அவ்வளவு தான் உனக்கு தெரிந்ததாக இருக்கணும். உளறிடாத. யாரிடமும் காட்டிக்கக் கூடாது.
சரி மாமா. எனக்கு தூக்கமா வருது. வீட்டுக்கு போகலாமா? இந்த ரெண்டு நாளா சரியாக தூங்கவில்லை.
அண்ணா, அலைபேசி எண்ணை கொடுத்திட்டு போங்க.
ம்ம்! சத்யாவும் இளந்திரையனும் எண்ணை மாற்றிக் கொண்டனர்.
அண்ணா அம்மாகிட்டவும் காட்டிக்காதீங்க..
ம்ம்..சரி, உன்னோட முழுப்பெயர் என்ன?
இளசத்யவந்தன்..
“வாவ்! வித்தியாசமாகவும் க்யூட்டாகவும் இருக்கு மாமா” அக்சரா சொல்ல, “தேங்க்ஸ்” சத்யா புன்னகைத்தான்.
பை பை..மாமா….சாரி சாரி பை பை சார்..மூவரும் சென்றனர்.
“அகிலரசா, அவன் என்ன சொல்லீட்டு போறான்?” பேரரசன் சத்தமிட்டார்.
என்னோட அப்பாவை கொன்ற அந்த இளந்திரையன் காதலித்த சிட்டு எனக்கு வேண்டும்ன்னு தான். எதிர்பாராது அவளை பார்க்கவும் தூக்கினேன். ஆனால் அக்கா தங்கச்சிக சேர்ந்து தப்பி சரியாக அவர்கள் கூட்டிற்கு வந்து விட்டனர்.
தாத்தா..அந்த சிட்டுவால் பேச முடியாது. ஆனாலும் பரவாயில்லை. அவள் மட்டும் கூட எனக்கு போதும். அவள் என்னுடன் இருப்பதை பார்த்து இரத்தக்கண்ணீர் வடிக்கணும் அந்த தீரன்..
வேண்டாம்டா அகிலரசா, இப்ப வந்திருக்கும் போலீஸ்காரன் நம்மை அடிக்கடி கண்காணிப்பது போல இருக்கு. அவ உனக்கு தங்கச்சி முறை வரும்டா..
அதுக்காக அவளை அப்படியே விட முடியாது. சிட்டு பறந்து என்னிடம் வரணும். ஏதாவது செய்யணும். அவ தங்கச்சி என்ன பேச்சு பேசிட்டு போறா பாரு..
அண்ணா, அதை நான் பார்த்துக்கிறேன். இந்த மாறனிடம் லேசாக கொளுத்தி போட்டால் போதும். நீ நினைச்சபடி நீ ஆசைப்படும் பொண்ணு உங்களிடம் வந்திருவாங்க.
என்னடா சொல்ற? எதுவும் செஞ்சுறாத கலையரசா. உன் வாழ்க்கையே போயிடும்.
அந்த தீரன், அண்ணாவை எப்படி அசிங்கப்படுத்துறான்? சும்மா இருக்க சொல்றீங்களா? பள்ளி திறக்கட்டும். நான் சரியா செஞ்சு முடிக்கிறேன்.
பாவம் கலையரசனுக்கு தெரியவில்லை நம் பாசமான வைசு மீது மாறனுக்கு பெரிய மதிப்பு உருவாகப் போவது..
“நீ தான்டா என்னோட தம்பி” அகிலரசன் தன் தம்பி கலையரசனை அணைத்தான். அவன் அப்பா அவனை எச்சரிக்கையுடன் செய்ய சொன்னார்.
பறவைகளின் கீச்சுக் குரல் கேட்டு ஆதவன் மலையின் பின்னிருந்து நம் இளா குடும்பத்தை சந்திக்க வந்து விட்டார்.
கண்விழித்து நேரத்தை பார்த்த வைஷ்ணவி, “இவ்வளவு நேரமா தூங்கினோம்?” சிந்தனையுடன் வெளியே வந்தாள்.
இளந்திரையனும் அவன் சித்தப்பூ இளவேலனும் தொலைக்காட்சி செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தனர். வேலைக்கார சுந்தரம் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தவன் வைஷ்ணவியை பார்த்து அதிர்ந்து கையிலிருந்த காபி கோப்பையை கீழே தவற விட்டார்.
“சுந்தரம்” வேலன் சத்தமிட, “அய்யா…மன்னிச்சிருங்க. இப்பவே சுத்தம் செய்திடுறேன்” அவர் வைஷ்ணவியை பார்த்துக் கொண்டே அடுக்கலைக்குள் சென்றார்.
கீழே சிந்தியிருந்ததை பார்த்த வைஷ்ணவி அவருக்கு பின்னே சென்று, “அங்கிள் துடைக்க துணி எங்க இருக்கு?” என்று சைகையில் கேட்டாள்.
அம்மா..வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்..
“இல்ல அங்கிள். நான் துடைக்கிறேன். நீங்க அவங்களுக்கு காபி கொடுங்க” மீண்டும் சைகையில் அவள் பேசினாள்.
என்னோட பேச மாட்டீங்களாம்மா?
“என்னால பேச முடியாது அங்கிள்” அவள் பாவமாக சைகை செய்ய, அவர் திகைப்புடன் அவளை பார்த்தார்.
அங்கிள்..அங்கிள்.
ஹம்…இல்லம்மா..இந்தாங்க இதை வேலனய்யாவுக்கும் தீரனுக்கும் கொடுங்க..
“ஏன்? அவருக்கு மரியாதை இல்லையா?”
அவர் புரியாமல் விழிக்க, மெதுவாக அவருக்கு புரியும்படி கேட்டாள்.
சுந்தரம் புன்னகையுடன், “நம்ம தீரன் பெரியதாக மரியாதை கொடுப்பவர்களை எப்போதும் நம்பமாட்டார். எல்லாரும் ஒரே ஊர் தான! அவரு எல்லாரையும் முறை சொல்லி தான் அழைப்பார் இல்லை பெயர் சொல்லி அழைப்பார். நாங்களும் அவரை பெயர் சொல்லி தான் அழைப்போம்”.
ஓ! வாங்கிக் கொண்டு அவள் அவர்களிடம் வந்தாள்.
காஃபி தம்ளரை தட்டி அழைத்தாள்.
இருவரும் அவளை பார்த்தனர்.
தீரன் கையை நீட்டினான். வேலன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தீரனிடம் கொடுத்து விட்டு, “என்னாச்சு சார்? நான் போடலை. அந்த அங்கிள் தான் போட்டார்” கையசைத்து சுந்தரத்தை காட்டினார்.
“நீ போட்டு தர மாட்டீயாம்மா?”
“அங்கிள், நான் போடலாமா?”
“ஏன் போடக் கூடாது?” உன்னோட வீடு மாதிரி நீங்க சுதந்திரமா இருக்கலாம்.
“சார், நாங்க இந்த வாரம் மட்டும் தங்கிக்கவா?”
“இந்த வாரம் மட்டுமா? வீடு பார்த்துட்டீங்களா? இங்க உங்களுக்கு என்ன குறை? வந்ததிலிருந்து கிளம்பணும்ன்னு சொல்றீங்க?” இளந்திரையன் சற்று கடுமையை காட்டினான்.
வைஷ்ணவி தடுமாற்றமுடன், “இங்க எல்லாரும் பசங்களா இருக்கீங்க? ஊருக்குள்ள தப்பா பேசுவாங்க சார். நாங்க வெளிய தங்கிக்கிறோம். உங்களுக்கும் சிரமமா தான் இருக்கும்”.
“யார் சொன்னா எங்களுக்கு சிரமம்ன்னு?” தீரன் புருவத்தை உயர்த்தி கேள்வியுடன் அவளை பார்த்தான்.
வந்து..சார் உங்களையும் ஏதாவது சொல்லுவாங்கல்ல?
யார் என்ன சொன்னாலும் நாங்க கவலைப்பட மாட்டோம்மா. உங்க பாதுகாப்புக்காக நீங்க இங்கேயே தங்குங்க. உன்னோட இரு தங்கச்சிகளையும் தனியா வச்சி உன்னால பார்த்துக்கிறது கஷ்டம்மா..
அமைதியாக சிந்தித்தாள் வைஷ்ணவி..
“குட்டிம்மா” தீரன் சுப்ரியாவை அழைக்க, படாரென அவனை நிமிர்ந்து பார்த்தாள் வைஷ்ணவி.
வந்துட்டேன் சார். நான் ரெடியா இருக்கேன்..
எங்க போக போற சுபா?
அக்கா, சார் அலைபேசி வாங்கித் தாரேன்னு சொன்னாங்கல்ல..
நீ காபி குடிச்சிருக்க மாட்டேல்ல?
இல்லம்மா, பாப்பா முதல்லவே நான் போட்ட காபியை குடிச்சிட்டாங்க.. வைஷ்ணவி முகம் மாறியது.
சுப்ரியா அதை கவனித்து வைஷ்ணவியிடம் வந்து அவளை கட்டிக் கொண்டு, “அக்கா நீ அசந்து தூங்கிட்டு இருந்த? அதனால் தான் அங்கிள் போட்டு கொடுத்ததை குடிச்சிட்டேன்”.
வைஷ்ணவி அவளிடம், “எழுப்பி விட்டிருக்கலாம்ல்ல சுபா?”
அக்கா, நீ இப்படி நிம்மதியாக எல்லாம் மறந்து அசந்து தூங்கியதை நான் பார்த்தேன். உன்னை தொந்தரவு செய்ய விருப்பமில்லை. அதனால் எழுப்பவில்லை.
மேலும் அவள் முகம் வாட, அக்கா நீயும் வர்றீயா? நாம அலைபேசி வாங்கலாம்.
சார், எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத செலவு?
தேவையில்லாமல் இல்லை. உங்களை துரத்தும் கொலைகாரன் கூட உங்கள் எண்ணிற்கு அழைக்க வாய்ப்பிருக்கு. அதனால் தான் நான் வாங்கித் தாறேன். அவன் அழைக்கட்டும். அவனை வரவைத்து அவன் உங்க பக்கமே வராம செய்திடலாம்.
“என்ன சித்தப்பூ?” கண்சிமிட்டினான் இளந்திரையன்.
அவனை மெச்சியவாறு, ஆமா..ஆமா..சும்மா விடலாமா அவனை? நாங்க பார்த்துக்கிறோம்மா..
அச்சோ, அதெல்லாம் வேண்டாம். ஆக்சுவலி எங்களால் உங்களையும் அவன் தொந்தரவு செய்திருவானோன்னு தான் கிளம்புவதாகவும் சொன்னேன்.
ஓ! கிளம்பி சென்று விட்டால் அவன் எங்களை தேடி வர மாட்டான். அப்படியா?
இல்ல தலையசைத்து தலையை கவிழ்ந்து ஓரக்கண்ணால் தீரனை பார்த்தாள். அவளது கடைக்கண் பார்வையில் அங்கிருந்தவர்களை மொத்தமாக மறந்து அவளையே பார்த்தான்.
“ஹலோ..சார்..என்ன பாக்குறீங்க? உங்களை நான் என்ன நினைச்சேன்?” சுப்ரியா சொல்ல, அவள் பக்கம் திரும்பி “என்ன நினைச்ச?” கேட்டான் இளந்திரையன்.
ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சேன்.
“சரி, இப்ப அதுல்ல என்ன குறை?”
“நீங்க என்னோட அக்காவை சைட் அடிக்கிறீங்க?”
இளந்திரையன் வாய் விட்டு சிரித்தான். மாறனும் செழியனும் ஆச்சர்யமாக அவனை பார்த்துக் கொண்டே வந்தனர்.
உன்னோட அக்கா தான் என்னை நேராக பார்க்காமல் ஓரக்கண்ணால் பார்த்தாள். அழகாக இருந்தது ரசிகனாக ரசித்தேன்.
ரசித்தீங்களா?
நீங்க படிக்கலைன்னு சொல்லீட்டு கவிதையே எழுதுவீங்க போல..
கவிதையெல்லாம் வராதும்மா. அதான் இப்ப எல்லாம் அலைபேசியிலே இருக்கே!
சரி, அதை விடுங்க. அக்கா நீயும் வா..
“உன்னோட அக்கா வெளியே வரக் கூடாது” என்ற இளந்திரையன் சுந்தரத்தை அர்த்தமுடன் பார்த்தான். அக்சராவும் வெளியே வந்தாள்.
“வந்துட்டேன் தீரா” அவ்வீட்டில் வேலை செய்யும் அனைவரையும் வர வைத்து அவரும் வந்தார் சுந்தரம்.
எல்லாரும் வைஷ்ணவியை பார்த்து அதிர்ந்து தங்கள் முதலாளிகளை பார்த்தனர்.
இவர் சுந்தரம்..சமையல் வேலை இவருடையது.
இவர் சண்முகம்..கார் டிரைவர்..
இவர் மாரியப்பா..தோட்டக்காரர்.
இவர் முனியன்..நம்ம கோழி, ஆடு, மாடு, குதிரை, வாத்து அனைத்து மற்ற உயிர்களை பராமரிப்பவர்.
என்னது வாத்து, குதிரையெல்லாம் இருக்கா? சார் நீங்க சொல்லவேயில்லை… சுப்ரியா புன்னகையுடன் கேட்டாள்.
இருக்கு. நம்ம வீட்டுக்கு பின்னாடி பண்ணை இருக்கு. அங்க தான் எல்லாமே வளர்க்கிறோம்..
வாவ்..சூப்பர்..அப்ப சிக்கன் வேணும்ன்னா அடிச்சு சாப்பிட்டுக்கலாம்.
அம்மாடி..கோழி, வாத்து, ஆடு வளர்ப்பது வியாபார நோக்குடன் மட்டும் தான்.
நம்ம ஊர்ல மதுரவீரன், வைஷ்ணவி தேவி அம்பாளுக்கு திருவிழா நடந்து கொண்டிருக்குது. அதனால இந்த ஒரு மாதம் எந்த இறைச்சி வகைகளும் நம்ம ஊர்ல யாரும் சமைக்கவோ, விற்கவோ மாட்டாங்க..
“என்னது? நான் வெஜ் கிடையாதா?” அக்சரா இளந்திரையனிடம் வந்து, “சமைக்கலைன்னாலும் பரவாயில்லை. வெளியவாது போய் சாப்பிடலாம்ல்ல?”
“சாப்பிட்டா ஊருக்குள்ள வராத” செழியன் சொல்ல, “ஊருக்குள்ள வரக் கூடாதா?” சுப்ரியா அதிர்ந்து நடுவீட்டில் அமர்ந்து, “எனக்கு இப்பவே மட்டன் சாப்பிடணும்” என்றாள் சிணுங்கியவாறு.
எல்லாரும் அதிர்ந்து இருவரையும் பார்க்க வைஷ்ணவியோ, “இப்ப நாங்க வேணும்ன்னா கிளம்பிடவா?” கேட்க, வேலனுக்கே கோபம் வந்து விட்டது.
அம்மாடி, “நீ போகணும் போகணும்ன்னு சொல்லிக்கிட்டே இருக்க? நாங்க இருக்கிறது தான் பிரச்சனைன்னா. நாங்க பண்ணை வீட்ல தங்கிக்கிறோம்” அவர் சொல்ல, சார் “அதுக்காக இல்லை. இவங்க வாரத்திற்கு மூன்று நாட்களாவது இறைச்சி சாப்பிடுவாங்க. அதான் சொன்னேன்”.
error: Content is protected !!