சம்யுக்தா வேலையை முடித்து அனுப்பியதையே வீடு வந்துதான் பார்த்தான் ரியான்.
Advertisement
இப்போது புதிதாய் ஆரம்பித்த ப்ராஜெக்ட்டின் ஆரம்ப கட்ட பணிகள் பற்றிய கலந்தாய்வு முடித்து அவன் முகுந்தோடு வீடு வந்து சேரவே நேரமாகியிருக்க..
வந்ததும்.. குழந்தை சாப்பிட எதுவாய் அவசரமாய் சமையலை முடித்து அவனை சாப்பிட வைத்த பிறகே.. அவன் அதை கவனிக்கும் படி இருக்க அது வந்த நேரத்தை கண்டவனுக்கு ஒரே யோசனை.
Advertisement
Advertisement
“இந்த பொண்ணு ஆஃபிஸ்ல இருந்து வொர்க் முடுச்சு எனக்கு சென்ட் பண்ணாங்களா..? இல்ல.. வீட்டுக்கு போய் முடுச்சாங்களா..?” என்ற சிந்தனையோடே அதை சரி பார்த்தவனுக்கு திருப்தியே.
“பரவாயில்லையே.. ஒரே நாள்ல நம்ம எதிர்பார்க்கறதை தனியா செய்ய முடியுதே இந்த பொண்ணால.. வெரி பிரிலியன்ட் கேர்ள் தான்..” என மெச்சிக்கொண்டவன்.. எப்போதும் போல தனது அடுத்த நாளைக்கான வேலையை செய்து முடித்தான்.
Advertisement
முகுந்தும் பகலில் சரியாக உறங்காததால் இன்று சீக்கிரமே உறங்க துவங்கியிருக்க.. ரியானும் நேற்று போல அல்லாமல் விரைவாக உறங்க வந்திருந்தான் தன் நடைமுறைகளை வழக்கம் போல முடித்து.
***
மறுநாள் காலை தன் முன் வந்து நின்ற சம்யுக்தாவை கண்டவன்,
“பாடு. ப்பா.. சொல்லி.. நீ பேபி டா..” என்றான் குஷியாக.
“சார்.. என்ன நீங்க இப்படி உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணறீங்க.
என்னை பார்த்தா பேபி மாதிரியா இருக்கு..?” என்றாள் ரோசமாக.
“உன்னை பார்த்தா பேபியா ஃபீல் ஆகாது தான்.. ஆனா, உன் கூட பழகி பார்த்தா.. என் பையனே பெட்டர் ன்னு தோணுதே.. வாட் டு டூ..” என தனது இரு தோளையும் குலுக்கி கிண்டலாக சொல்ல,
“சார்..” என்றாள் உதட்டை பிதுக்கி இழுவையாக.
அதில் வாய்விட்டு சிரித்த ரியானோடு முறைக்க முயன்ற சம்யுக்தாவும் இணைந்து கொண்டாள்.