Skip to content
Post Views: 7,178
பகுதி 16
வெங்கடேஷிடம் பொறுப்பை ஒப்படைத்த ரியான் நேராக சென்றது சந்தீப் இருந்த இடத்திற்குத்தான்.
Advertisement
அங்கே.. அவன் எதிர்பார்த்தது போலவே சாப்பாடு வேண்டாமென சம்யுக்தா பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள்.
இதுவே வேறு யாராக இருந்தாலும் சந்தீப் இப்படி இருப்பானா..? என்றால் கிடையாது தான்.
Advertisement
Advertisement
நேற்று மலரிடம் செல்ல தயங்கிய பிள்ளை.. சம்யுக்தாவிடம் ஒட்டிக்கொண்டதையும்,
அவனுக்கான அவளின் அக்கறை.. பாசம்.. ரியான் சொன்னதைக் கேட்டு அவள் கலங்கி நின்ற விதம்.. எல்லாம் அவதனித்த தம்பதிகளின் ஒரே எண்ணம்..
Advertisement
‘ரியானின் வாழ்க்கையில் இந்த பெண் வந்தால் நன்றாக இருக்குமே..!’ என்பது தான்.
அதனாலேயே அவளை அக்கறையாக கூட்டி வந்து சாப்பிட வைக்க போராடி கொண்டிருக்கிறான் சந்தீப்.
“என்ன பேபி.. இன்னும் சாப்பிடலையா..?” என்ற ரியானின் குரலில் அந்த பக்கம் பார்த்த சந்தீப்,
“வாடா.. என்னோட பசங்க கூட என்னை இப்படி படுத்தலடா சாப்பிட வைக்க..” என்றான் சலிப்பாக.
“பேபின்னு முகுந்த் சொன்னதும் நானா பேபி..? உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணறீங்க..ன்னு கேட்டே..?
இப்ப பாரு.. முகுந்தை விட நீ தான் சாப்பிடாம அடம்பிடிக்கற..” என இலகுவாய் பேசியபடி அவளருகே வந்து அமர,
அதற்காகவே காத்திருந்தது போல.. அவனின் சட்டையை இடக்கரம் கொண்டு பற்றி அவனின் தோளில் தலை சாய்த்தவளின் கண்கள் கலங்க தொடங்கியது.
“ஹேய் பேபி.. என்னடா..?” என்றான் ரியானும் ஒரு கையால் அவளின் தலை கோதி.
“நீங்க சொன்னது சரி தான்.. நா பேபி மாதிரி தான் வளராம இருக்கேன்..
இல்லாட்டி.. அந்த தடி தாண்டவராயன் என்னைய தப்பா பாத்தது தெரியாம இருக்குமா..?” என்றாள் விசும்லோடு.
அழுகையிலும் அவளின் பேச்சில்.. மற்ற இருவருக்கும் புன்னகையே எழுந்தது.
“விடுடா.. அதான் அவனை போலீஸ்ல புடுச்சு கொடுத்தாச்சே..!” என்றான் ஆறுதலாக.
“தப்பா பாத்ததுக்கே எனக்கு இப்படி இருக்கே..!
அவன்.. இதை தாண்டி ஏதோ நிறைய பண்ணியிருக்கான் தானே..? பாவமில்ல அவங்க..!
இன்னைக்கு நீங்க பார்த்து அவனை பிடிச்சதால பரவாயில்லை.
இதே நீங்க இன்னும் கவனிக்காம விட்டிருந்தா.. எத்தனை பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருப்பாங்க..?” என்றாள் மற்றவருக்காக வருந்தும் குரலில்.
சம்யுக்தாவை பற்றி எதுவும் தெரியாமலேயே.. முகுந்த் மீதான பாசத்தை வைத்து ரியானுக்கு இணையாக்க நினைத்த சந்தீப்புக்கு..
அவளின் மற்றவருக்காக இரங்கும் குணமும் ரியானிடம் காட்டும் நெருக்கமும்.. அவனின் முடிவை உறுதியாக்கி கொண்டே போனது.
அது கொடுத்த நிறைவில் சிறு புன்னகையுடன் அவர்களை பார்த்திருந்தவனின் பார்வையின் நோக்கத்தை ரியான் கண்டு கொண்டான்.. என அப்போது சந்தீப் அறிந்திருக்கவில்லை.
இப்போது தேவையில்லாமல் அதை பேசி.. நிர்மலமான மனதுடன் தன்னை நெருங்கியிருக்கும் சம்யுக்தாவின் மனதில்.. அனாவசியமான எந்த அழுத்தத்தையும் உண்டாக்க விரும்பவில்லை ரியான்.
அதனால் அதை விடுத்து, “பேபி இதுவரை நடந்ததுக்கு ஒண்ணும் செய்ய முடியாது.
இனி வரும் காலத்துல இந்த மாதிரி தப்பு.. நம்ம இருக்கற இடத்துல நடக்காம தடுக்க என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்.. சரியா..? இப்ப சாப்பிடு.
நீ வேற.. என்னோட கம்பெனிய நெம்பர் ஒன் ஸ்தானத்துக்கு கொண்டு வர்றேன்னு சபதமெல்லாம் எடுக்க போறையே..!” என்றான் அவளை இலகுவாக்க வேண்டி.
அது நன்றாகவே அதன் வேலையை காட்ட, “ஆமா.. ஆமா.. கம்பெனி முதலாளிங்க.. இப்படி எப்ப பாத்தாலும் கூடி உக்காந்து பேசியே கூத்தடுச்சா.. அப்புறம், என்னை மாதிரி ஆளுங்க தான் தீவிரமா வேலைய பாத்து எதாவது செய்யனும்..” என கண்களை சிமிட்ட,
“அடிங்க.. எங்கள பாத்தா வெட்டியா பொழுதை ஓட்டறவங்க மாதிரியா இருக்கு..?” என அவளின் காதை வலிக்காதபடி பிடித்து திருகியவன்,
“சாப்பிட்டு.. உன் புது டிஎல்ல போய் பாத்து.. ஒழுங்கா வேலைய முடி..” என்றவன்,
அவனே எதிரிலிருந்த சாதத்தை அவளுக்கு ஊட்ட துவங்க எவ்வித மறுப்பும் இன்றி உண்ணத்துவங்கினாள்.
சம்யுக்தா சாப்பிட ஆரம்பித்ததும் சந்தீப்பும் அவனின் உணவை எடுத்து உண்ண துவங்க,
அடுத்த சில நிமிடங்கள் எந்த சத்தமும் இன்றி அமைதியில் கழிந்தது.
சம்யுக்தா அங்கிருந்து கிளம்பிய பின், “சந்தீப்.. சம்யுக்தாவபத்தி என்ன நினைக்கிறே..?” என்றான் சாதாரணமாக.
“ரொம்ப நல்ல பொண்ணுடா.. உன் மேலையும் குறிப்பா முகுந்த் மேலையும் ரொம்ப பாசமும் அக்கறையும் வச்சிருக்கா.
நீ சொன்னதை வச்சு பார்க்கும் போது.. வேலையிலையும் பெஸ்ட்.
உனக்கு ரொம்ப பொறுத்தமா இருப்பாடா..” என்றான் சந்தோஷமாக.
“ம்ம்.. உன் பதில் இதுவா இருக்குமுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
பட், நீ நினைக்கறது நடக்காது..” என்ற ரியானின் வார்த்தையில்,
“என்னடா சொல்றே..?” என்றான் வருத்தமாக.
“ம்ம்.. உண்மைய தான் சொல்றேன்.
அவ என்னோட லக்கிச்சார்ம் டா. இங்கே வந்த முதல் நாள் அவள பார்த்தப்போ தான்.. ரொம்ப வருஷம் கழிச்சு நிம்மதியா சிரிச்சேன்.
அடுத்த நாளே நல்லதோ.. கெட்டதோ.. என் மனசுல இத்தனை நாள் இருந்த அழுத்தமெல்லாம் வெளியே வர காரணம் அமஞ்சது.
இதோ இப்போ.. அந்த ப்ளட்டீ பா@@@@ , அவன் பண்ண தப்பை கண்டுபிடிக்க கூட அவ தான் காரணமா இருந்திருக்கா.
அவளை அறிமுகம் செஞ்சப்போ அந்த சபேசன் அலட்சியமா பார்த்தான்.
இங்கே ஐடில ஃப்ரஷர்ஸ் வந்ததும் பெரிய ப்ராஜெக்ட் போனா.. இந்த பார்வைய எதிர்கொள்ளாம முடியாதேன்னு இருந்தாலும்,
மனசு நெருடினதால அவன் முன்னாடியே உரிமையா பேபின்னு பேசி அவளை காக்க நினைச்சேன்.
அவ லன்ச் போகாம வேலை பார்க்கற பார்த்து.. கேட்கும் போது தான் சந்தோகம் வந்து அந்த ஆளோட ரூம் சிசிடிவிய போட்டா,
அவன் பேசப்பேச பதிலுக்கு சம்யுக்தா பேசும் வரை இருந்த அவன் முகபாவம்..
அவ தலைய குனிஞ்சு அமைதியானதும் வக்கீரமா அவ மேல படுஞ்சது அப்பட்டமா தெரிஞ்சது.
சந்தேகத்தோட.. இதுக்கு முன்னாடி இருந்த புட்டேஜ் பார்க்கும் போது தான் அந்த ஆளோட வக்கீரமெல்லாம் தெரிஞ்சது.
அந்த ஆள்.. டிஎல்லா எந்த டீம் கூட எல்லாம் வேலை பார்த்தானோ.. அத்தனையிலையும் அவனோட சில்மிஷம் பதிவாகியிருக்கு.
அவ மேல அக்கறை இருந்து.. நான் பார்க்க போய் இத்தனை நாள் நமக்கு தெரியாம.. நம்ம இடத்துல நடந்த தப்பு தெரிய வந்துச்சு.
இல்லைன்னா.. அவ சொன்ன மாதிரி இன்னும் எத்தனை பேரை அவன் வக்கீரத்துக்கு ஆளாக்கி இருப்பானோ..?” என ரியான் கோபத்தோடு நிறுத்த,
“சாரிடா. இதுல என்னோட தப்பு தான் அதிகம்.
நீ என்கிட்ட கொடுத்த பொறுப்பை சரியா பண்ணலையே..?” என்றான் வருத்தமாக.
“சந்தீப்.. நீயும் மேனேஜ்மெண்ட்ல புதுசு.
உன் இடத்துல வேற யாராச்சும் இருந்திருந்தா.. இப்படியான ஒரு டெவலப்மெண்ட் நமக்கு சாத்தியமே இல்லை.
உனக்கு இருக்கற வேலை பளுல இதை எல்லாம் நோட் பண்ணியிருக்க முடியாது தானே..!
சோ, நீ கில்ட்டா ஃபீல் பண்ணதே..” என சந்தீப்பை சமாதானம் செய்த ரியான்,
“சம்யுக்தா என்னோட வாழ்க்கையில வந்த அடுத்த நிமிஷம்.. என் வாழ்க்கை சரியான பாதையில போற மாதிரி ஒரு ஃபீல்..” என நிறுத்த,
“அதான்டா நானும் சொல்றேன்.. அந்த பொண்ணு உன் கூடவே இருந்தா.. இன்னும் நீ நல்லா இருப்பேன்னு தோனுதுடா..” என்றான் மகிழ்வுடன்.
error: Content is protected !!