Skip to content
Post Views: 1,985
8(2)
ரூபினி சத்யாவிடம், “உனக்கு அப்பனை தெரியாமல் இருக்கும் போதே இந்த துள்ளு துள்ளுற? என்னோட அப்பா இருக்கும் போது எனக்கு எப்படி இருக்கும்?” அவனை தள்ளினாள்.
Advertisement
தடுமாறிய சத்யாவை அக்சரா தாங்கி பிடித்தாள். மாறன் இதை பார்த்து நின்று விட்டான்.
“சார், என்னாச்சு?” அக்சரா அவனை நகர்த்தி கேட்க, சீற்றமுடன் அவன் ரூபினியையும் அவன் அப்பாவையும் பார்த்தான். ராதிகா அழுது கொண்டிருந்தார்.
Advertisement
Advertisement
“எதுக்கு அழுறீங்க ஆன்ட்டி?” அக்சரா கேட்க, அங்கே நின்று கொண்டிருந்த ஒருவர் நடந்ததை கூறினார்.
புது போலீஸ் காரருக்கு அவரோட அப்பன் பெயர் தெரியாதாம். அதை இந்த ரூபினி பொண்ணு நம்ம ஊரு போலீஸ்காரனிடம் கேட்டாளாம். அதுக்கு அவர் அடிச்சுட்டாராம். அவள் அப்பாவிடம் சொல்லி இதோ அவரை வரவைத்து பஞ்சாயத்து நடத்திட்டு இருக்கா.
Advertisement
“ஓ! மேடம் இது மட்டும் தான் பேசுனீங்களா?” அக்சரா அவளிடம் வந்து, இங்க பாரு இனி தீரன் சார் பக்கம் வந்தேன்னா உனக்கும் இதே நிலைமை தான்.
சத்யா சாருக்கு அவர் அப்பா பெயர் தெரியாதுன்னு அவர் உன்னிடம் சொன்னாரா?
“ஏன்டி, தீரா பக்கம் வரக் கூடாது? அவருக்கு என் மீது விருப்பம் இருக்கு” ரூபினி சொல்ல, சக்தி இடைபுகுந்து “எங்க அண்ணா அவரோட அத்தை பொண்ணை தவிர மனசால எந்த பொண்ணையும் நினைத்ததும் இல்லை. பக்கம் விட்டதும் இல்லை. நீ தான் அலையுற. நீ இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசியதை மறந்துட்டியா?” நக்கலாக கேட்டான் சக்தி.
ஏய்! அவள் விரலை அவன் முன் நீட்ட, “இறக்குடி கைய. உன்னை மாதிரி கேவலமான பிறவி இருக்குற பொண்ணு எங்க தங்கமான தீரன் அண்ணா மணக்கணுமா?”
உங்க அருமை பொண்ணு இப்ப தான் செழியன் முன்னே கூறினாள்.
தீரன் அண்ணாவுக்கு வீரன் போல இரண்டு பொண்டாட்டியாம். அதனால அவரோட அத்தை பொண்ணு தான் செத்துட்டால்ல. அவள அவரு முத பொண்டாட்டியா நினைச்சுக்கட்டும். நான் இரண்டாவது பொண்டாட்டியா கட்டிக்கிறேன்னு பேசுறா. இது நம்ம தமிழர் பண்பாட்டுக்கே இழுக்கு.
“அவருக்கு பொண்டாட்டியாக இவளுக்கு என்ன தகுதி இருக்கு?” சக்தி பேச, “தகுதியை பத்தி நீ பேசுறீயாடா நாயே!” ரூபினி தந்தை சக்தியை அடிக்க கையை ஓங்கினார்.
சத்யா, அவர் கையை பற்றி “எவ்வளவு தைரியம் இருந்தா எங்க ஊரு பையன் மேல கையை வைப்பீங்க? உங்க பொண்ணு பேசியது இப்ப கூட உங்களுக்கு தப்பா தெரியலையா?” சீற்றமுடன்..
சரா சொன்னது போல எனக்கு என்னோட அப்பா பெயர் மட்டுமல்ல அவரோட ஜாதகமும் தெரியும். என்னோட அம்மா ராதிகா காதலிச்சாங்க. என்னோட அப்பாவை திருமணம் செய்யும் முன் நான் பிறந்துட்டேன். அது தவறு தான். அவங்க இதுவரை என் அப்பாவை மட்டுமே நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க. திருமணம் என் அம்மாவுக்கு நடக்கலைன்னாலும் அவங்க பத்தினி தான். ஒருவனுக்கு ஒருத்தியை சரியாக கடைப்பிடிச்சாங்க. சமூகத்திற்காக அல்ல. அவங்க இருவரின் காதலுக்காக..
“உன்னை போல வீட்டு வேலக்காரிக்காக கட்டுன பொண்டாட்டியை கொலை செய்றதெல்லாம் யாரால முடியும்? அதை விட இந்த ரூபினி அந்த வேலைக்காரியின் பொண்ணு தான. அதான் உன்னோட பிள்ளைய சொத்துக்காக தீரன் அண்ணா பின்னாடி சுத்த விட்டுட்ட? ஆனால் அது மட்டும் நடக்கவே நடக்காது. யாரிடம் வேணும்ன்னாலும் நீ மறைக்கலாம். நான் போலீஸ்காரன்டா. ஆதாரம் மட்டும் சிக்கட்டும். அப்புறம் இருக்கு உனக்கு?” கர்ஜனையுடன் சத்யா கூற, அனைவரும் உறைந்து நின்றனர்.
கூட்டத்தில் ஓர் பெண்மணி, “நீ கேவலமான விசயம் செய்தது மட்டுமல்லாமல் உன்னோட பொண்ணையும் இப்படி வளர்த்து வச்சிருக்க? அதான பார்த்தேன் அத்தாச்சி குணத்துக்கும் எண்ணத்துக்கும் பொருத்தமில்லாமல் இவ சுத்துறாளேன்னு பார்த்தேன். சரியா போச்சு”.
ஒரு வேலைக்காரி பொண்ணு எங்க தீரனை மணப்பதா? அதுவும் இப்படியொரு கீழ்த்தர எண்ணத்துடன் இருக்க? ரூபினி மீது மண்ணை வாரி இறைத்தார்.
ரூபினி ஊராரை பார்த்து, இவன் பொய் சொல்றான்? கண்ணீர் வடித்தாள்.
“யாரு? நானா பொய் சொல்றேன்?” சத்யா சீற்றமுடன் ரூபினி கையை பிடித்து அவன் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றான். ஊரார் அனைவரும் பின்னே சென்றனர்.
அக்சராவோ ஏதும் பேசாமல் காரில் சென்று அமர்ந்தாள்.
அக்கா, “எதுக்காக சத்யா சாருக்காக நீ போன? அவரை உனக்கு பிடிச்சிருக்கா?” சுப்ரியா நேரடியாக கேட்டாள். வைஷ்ணவி அவளை மௌனமாக பார்த்தாள்.
இல்ல, அவர் நல்லவர். உதவ தான் போனேன்.
ஷூய்யரா?
ம்ம்..
சத்யா ரூபினியை அமர வைத்து அவள் அம்மா, அப்பாவின் கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்தினான்.
உன்னோட அப்பா முதல் மனைவியை காதலிப்பது போல ஏமாற்றி சொத்துக்காக மணந்து பின் அவரை கவனித்துக்கொள்ள வேலைக்காரியாக வந்த உன் அம்மாவுடன் உறவில் இருந்திருக்கார்.
இதோ பாரு. அப்பொழுதுள்ள ஆட்களால் கிடைத்தது. இந்த ஆதாரம் குறைவு தான். ஆனால் தற்பொழுது என்று அவன் எடுத்து வைத்த புகைப்படத்தை பார்த்து ரூபினி அதிர்ந்து தன் தந்தையை பார்த்தாள்.
ரூபிம்மா, இது நானில்லை. என்னை குற்றம் சாட்ட தான் இவன் இதையெல்லாம் வச்சிருக்கான்.
இவரு காதலிக்கிறான்னு உன்னோட அம்மா நம்பீட்டு இருக்காங்க. இவர் அவங்களுக்காக தான் முதல் மனைவியை கொன்னார்ன்னு அவங்களுக்கும் தெரியும். காதல் உன் அம்மா கண்ணை மறைச்சிடுச்சு..
“அன்று அவர் செய்தது போல தான் நீ தீரன் அண்ணாவிடம் நடந்துக்கிற. எனக்கு உன்னை பார்க்க அருவருப்பா இருக்கு” என்று அவள் கையில் வைத்திருந்த புகைப்படங்களை பிடுங்கினான் சத்யா..
இல்ல நான் தீரனை காதலிக்கிறேன்..
“காதலா? உனக்கு காதல்ன்னா என்னன்னு தெரியுமா?” சக்தி ஆங்காரமாக கத்தினான்.
எங்க தீரன் அண்ணா காதல் பற்றி தெரியுமா? அவர் காதலித்த பொண்ணு இறந்த பின் எந்த பொண்ணையும் அருகே விடவேயில்லை. ஒரு நாள் உன்னை பார்த்து அவர் சிரித்து பார்த்திருக்கிறாயா? சத்தமிட்டான் சக்தி.
இல்ல..அவள் தலைகவிழ்ந்தாள்.
மதுரவீரன்னு எங்க அண்ணன எதுக்கு சொல்றாங்க தெரியுமா? தவறை தட்டி கேட்கும் வீரத்தில் மட்டுமல்ல காதலுக்கும் முன் உதாரணம் அவர் தான் நம் வீரனை போல..
நீ அவர் பின் சுத்தறன்னு அவருக்கும் தெரியும். சொத்துக்காகன்னு தெரியும். அதுக்காக என்றாவது உன்னை ஏதாவது பேசி இருப்பாரா? சொல்லு? சீறினான் அவன்.
“இல்லை” அவள் கண்ணீர் தரையில் விழுந்தது.
அதுக்கு காரணம் அவர் பெண்களை மதிப்பது. அவரால் நீ காயப்படக் கூடாதுன்னு நல்ல எண்ணம் தான். ஆனால் இனி அவர் பக்கம் நீ போனால் உன்னை தவிர்க்கும் அவரால் நீ காயப்பட வேண்டி வரும்.
அவனை நிமிர்ந்து பார்த்தாள் ரூபினி.
ஏன்ப்பா, இப்படி சொல்ற? நம்ம தீரன் காயப்படுத்த மாட்டான்.
சக்தி புன்னகையுடன், “இனி எல்லாம் மாறப் போகுது” என்று சத்யாவை பார்த்தான்.
ரூபினி அழுது கொண்டே சென்று விட ஊராரும் சென்று விட்டனர். அவள் அப்பாவோ “ஏலேய்..உங்களை சும்மா விட மாட்டேன்டா. அந்த தீரனை என்னோட மாப்பிள்ளையாக்கி காட்டுறேன்டா”.
சக்தி சினத்துடன் அவரிடம் செல்ல, அவன் கையை பிடித்த சத்யா “போய்யா முடிஞ்சத பார்த்துக்கோ. எங்க அண்ணா உன்னோட வீட்டு மாப்பிள்ளையா வர நாங்க விடமாட்டோம்”.
பார்க்கலாம்டா..
“பாருய்யா..பாரு..முதல்ல உன்னோட வீட்ல நடக்கப் போற பூகம்பத்தை சமாளிக்க பாரு” சக்தி சொல்ல, அவர் சீற்றமுடன் சென்றார்.
“உனக்கு அண்ணா பற்றி ஏதும் தெரியுமா?” சத்யா கூர்பார்வையை சக்தி மீது திணித்தான்.
அவரை பற்றி விட உங்கள பற்றி தெரிஞ்சு போச்சு இளசத்யவேந்தன்…
சத்யா விரக்தியுடன் சக்தியை பார்த்தான்.
வேலன் அய்யா பெயரை ஏன் எதிலும் நீங்க சேர்க்கலை?
அம்மாவை கஷ்டப்படுத்திய அவர் பெயர் எனக்கு தேவையில்லை.
ஓ..அப்ப தீரன் அண்ணாவுக்காக மட்டும் உரிமையா பேசுறீங்க?
அவர் வேற இவர் வேற…
அதான் புரியல. உங்களை விட்டு வேலன் அய்யா தீரன் அண்ணாவுக்காக தான வாழ்ந்தாரு. அப்படி பார்த்தால் தீரன் அண்ணா மீது உங்களுக்கு கோபம் இருக்கணும்?
எனக்கு என் அம்மாவை தனியே விட்டவர் மீது மட்டும் தான் கோபம்.
அம்மாவிற்காக மட்டும் தான். உங்களுக்கு வேலன் அய்யா மீது பாசமில்லை..
இல்லை..
சரி சரி..அப்புறம் ஒரு விசயம் சொல்லணும் சத்யா சார் என்ற சக்தி..
அந்த மூணு பொண்ணுங்களும் யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. அவங்கள கொல்ல எவன் நினைக்கிறான்னு கண்டுபிடிக்கணும். யார் உதவினாலும் இல்லைன்னாலும் அவனுகள நான் கண்டுபிடிப்பேன். அந்த பொண்ணு ஊருக்குள்ள வந்தா அவங்களுக்கு துணையாகவும் இருப்பேன். ஆனால் வேலன் அய்யாவுக்கு துணையாக நான் இருக்க மாட்டேன்.
அவருக்கு தான் அவங்க அண்ணன் பசங்க இருக்காங்களே!
இல்ல, தீரன் அண்ணா இனி அவரை விட்ருவார்.
என்ன சொல்ற? சத்யா முகம் மாறியது.
தீரன் அண்ணாவுக்கு உங்க உறவு தெரிந்திருக்கும். ஏன்னா..உங்க அம்மாவை உங்களுக்கு முன்னே தெரியும். ராது சித்தின்னு அவங்களுடன் உரிமையா பேசுவார். வேலன் சார் காதல் உங்க அம்மா தான்னு ஊர் உலகத்துக்கு தெரியாமல் இருக்கலாம். தீரன் அண்ணாவுக்கு நன்றாக தெரியும்.
எனக்கு முதலில் தெரியாது. அண்ணா இவங்களுடன் நல்லா பழகுவாங்க. நாங்க எல்லாரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். உங்க அம்மா அப்பொழுது எங்களுக்கு வகுப்பு எடுத்திருக்காங்க. இப்ப அதே பள்ளியில் மாறனும் இருக்கான். உங்க அம்மாவை பார்க்கவும் எங்கோ பார்த்தது போல இருக்குன்னு தான் தோன்றியது. ஆனால் தெரியல.
தீரன் அண்ணன் உங்களிடம் நன்றாக பேசியதில் எனக்கு யோசனை வந்தது. அண்ணா பொதுவாக யாரையும் நம்பவும் மாட்டார். அவர் வீட்டுக்குள் விடவும் மாட்டார். நீங்க வந்த ஒரே வாரத்துல்ல அவர் வீட்டுக்குள்ள போயிருக்கீங்க. அவர் அடிக்கடி தூரமிருந்து உங்க அம்மாவை ஏக்கமுடன் பார்க்கும் பார்வையில் அன்றைய இருவரிம் பழக்கமும் நினைவில் வந்தது. உங்க அம்மா ஊர் தான் ரூபினியும். அவங்க ஊர்ல விசாரிக்கவும் தான் அவர் யாரையோ நம்பி ஏமாந்துட்டாங்கன்னு தெரியவந்தது.
மீண்டும் நன்றாக விசாரிக்க, உங்க அம்மாவுடன் படித்த ஒருவர் தான் உங்க அப்பா பற்றி பேசினார். அவர் வேலன் அய்யா தான்னு அவருக்கும் தெரியல. அவர் கூறியதை வைத்து யூகித்தேன். அதே போல அந்த குடிலருகே உங்க அம்மாவை அவர் பார்த்த பார்வையில் புரிந்து விட்டது.
இப்ப அதுக்கென்ன?
இனி வேலனய்யா உங்க பொறுப்பு தான்.
விரக்தியுடன் சக்தியை பார்த்தான் சத்யா.
சார், அண்ணாவுக்கு அவர் சித்தப்பாவின் வாழ்க்கை முக்கியம். அதனால கண்டிப்பாக இனி வேலன் அய்யாவை விட்டு விலகுவார். அதே போல உங்க குடும்பத்தை கொன்ன எவனும் சாகலை. பாண்டி குடும்பத்துல்ல எந்த அளவு இனிமையா பேசுறாங்களோ அதை விட முறுக்கும் இருக்கும். அதனால மறுபடியும் உங்க குடும்பத்தை தாக்குவாங்க.
அவங்கதான்னு தெரியக்கூடாதுன்னு கூலிக்கு ஆள் வைத்து எங்க ஊருக்குள்ள கலவரத்தை ஏற்படுத்தி எல்லா குடும்பத்தையும் அழிச்சாங்க. இது ஊருக்குள்ள யாரோ ஏற்படுத்திய சதின்னு தான் சொல்லி பாண்டி குடும்பத்தினரை குற்றம் சாட்டி பஞ்சாயத்தில் நிற்க வைத்தனர்.
வழிவழியாக வரும் உங்க குடும்பத்து கணக்கர் சரவேல் அய்யா தான் பாண்டி குடும்பத்து ஆட்களை கை காட்டினார். எனக்கு அவங்க தான் காரணமான்னு கூட சந்தேகமா இருக்கு. ஏன்னா..சாட்சி கூறிய கணக்கர் சரவேல் அய்யா மறுநாளில் இருந்து ஊரிலே இல்லை. அதுக்காக பாண்டி குடும்பம் காரணமில்லைன்னு நான் சொல்ல மாட்டேன். அவங்க ரொம்ப மோசமானவங்க தான். தண்டனையின் பேரில் தான் அவங்க வீட்டினர் மென்மையாக நடந்துக்கிறாங்க என்றான் சக்தி..
ஓ! “அப்ப மிஸ்டர் இளவேலன் உயிருக்கும் ஆபத்து இருக்கு” சத்யா சக்தியை பார்த்தான்.
“ஆம்” தலையசைத்தான் சக்தி.
உதவிக்கு அழைத்தால் நீ வருவாயா?
வருவேன் தீரன் அண்ணாவுக்காக..வேலன் அய்யாவை அவர் மகன் தான் பார்த்துக்கணும்..நான் வாரேன். “இந்தாளிடமும் கவனமா இருங்க” சத்யா சார் எச்சரித்து விட்டு சக்தி சென்றான். யோசனையுடன் அமர்ந்தான் இளசத்யவேந்தன்.
செழியனும் இளவேலனும் பைக்கில் செல்லும் போது எதிரே காரில் ரூபினி அவள் அப்பாவுடன் இவர்கள் ஊர்ப்பக்கமாக செல்வதை செழியன் பார்த்துக் கொண்டே சென்றான்.
சென்று கொண்டே இருந்தவன் பைக்கை நிறுத்தி இறங்கி அங்குமிங்கும் நடந்தான். இளவேலன் புரியாமல் அவனை பார்த்தார்.
ஏலேய் செழியா, வாலேய் போகணும்ல்ல. நம்ம தீரனுடன் குரு மட்டும் தான் இருப்பான்.
“சித்தப்பூ..ஒரு ஐந்து நிமிடம் இங்கேயே இரேன். நான் வாரேன்” செழியன் சிந்தனையுடன் பைக்கை எடுக்க, “எங்கடா? நானும் வாரேன்” அவருடன் பைக்கில் ஏறினார் இளவேலன்.
இருவரும் செல்லும் வழியில் சத்யா ரூபினி கையை பிடித்து இழுத்து செல்வதையும் அவர்கள் பின் மக்கள் செல்வதையும் பார்த்தனர்.
இறங்கிய செழியன் என்னாச்சு? ஒருவரிடம் விசாரித்தான்.
சக்தியின் ஆள் ஒருவன் நடந்ததை சொல்ல, அதிர்ந்தார் இளவேலன்.
ஆமாப்பா..நானும் கூட அந்த பொண்ணை தப்பா நினைச்சுட்டேன். என்ன இருந்தாலும் திருமணத்தின் முன் ஒருவனுடன் உறவு கொள்வது தவறு தான? அது தான் அந்த பொண்ணு வாழ்க்கையை மொத்தமா மாத்திருச்சு.
பாவம் எவன் எவன் கஷ்டப்படுத்தினானோ? இத்தனை வருசமா தனியா பழக்கமில்லா இடத்துல்ல இருந்தாலும் புள்ளைய நல்ல படியா வளர்த்திருக்கா…
பரவாயில்லை..புள்ளையாவது அந்த பொண்ணுக்கு துணைக்கு இருக்கானே! பெண்மணி ஒருவர் கூற,
“ராது…ராது…கல்யாணம் பண்ணிக்கலையா? சத்யா..என்னோட மவனா? இல்லை வேறவனுடன்…” தலையை பிடித்தார்.
சித்தப்பூ..சித்தப்பூ..சித்த..ப்பூ..செழியன் அழுத்தி அழைத்தான். அக்சரா இவர்களை பார்த்து இவர்களிடம் வந்தாள்.
அங்கிள், கோவிலுக்கு எப்பொழுது போகணும்? கேட்டாள்.
அவருக்கோ மனம் முழுவதும் வெறுமையுடன், சத்யா சென்ற திசையை பார்த்தார்.
செழியன் கையை அக்சரா அழுத்தி அவரை பேச வைக்க சொல்லி கண்ணை காட்டினாள்.
சித்தப்பூ, “அக்சா உன்னை கூப்பிட்டு கிட்டே இருக்கா? உனக்கு என்னாச்சு?” கேட்டான்.
இல்ல..இருக்காது…இருக்காது..இருக்கவே இருக்காது…நான் நான்..
“அங்கிள்” அக்சரா இளவேலன் தோளை பற்றி உலுக்கினாள்.
“மாமா, கார்ல தான் எல்லாரும் இருக்காங்க. நான் அங்கிளிடம் பேசிட்டு வாரேன்” என்று இளவேலனை அவள் தனியே யாருமில்லா இடத்திற்கு அழைத்து சென்றாள்.
“என்ன பேசுறதா இருந்தாலும் என் முன் பேசு” என்று செழியன் இளவேலனை அமர வைத்தான்.
“எல்லாரும் பேசியதை கேட்டீங்களா அங்கிள்?” இளவேலனருகே அமர்ந்தாள் அக்சரா.
ராது..ராதுவை உனக்கு தெரியுமா?
ம்ம்..தெரியும் அங்கிள்.
ராதுவா? செழியன் கேட்டான்.
ஷ்..என்ற அக்சரா..
“அன்று நம்ம குடும்ப விசயம் எனக்கு தெரிந்த போது எங்களை கொல்ல எண்ணுபவனை பார்க்க மாமா என்னை அழைத்து சென்றார். நாங்கள் சென்று வரும் போது சத்யா எங்களை இடைமறித்தார்” என்று அன்றிரவு சத்யா அவன் இளவேலன் மகன் தான் என்றும் அவன் இந்த கலவர கேஸை விசாரிக்க ஆரம்பித்து இருக்கார் என்று கூறி முடித்தாள்.
சத்யா..என்னோட மகன் தானா? அவனே சொன்னானா?
அங்கிள், அவர் தான் சொன்னார். ஆனால் அவர் அம்மாவை நீங்க விட்டுட்டீங்க. அதனால அவர் உங்க மேல பயங்கர கோபத்துல்ல இருக்கார். இப்ப மகனேன்னு போனீங்க. நீங்க மூவருமே கஷ்டப்படணும்.
சத்யா மாமா எண்ணுவது போல இந்த கலவரத்தை செய்தவர்களை ஆதாரத்துடன் பிடிக்கணும். அவங்களால எத்தனை பேர் கஷ்டப்பட்டிருக்கோம். அவனுகள சும்மா விடக் கூடாது..
இல்லம்மா, அந்த கேஸை எடுத்து நடத்தினால் அவன் உயிருக்கும் ஆபத்து வரும்..
மாமா, தீரன் மாமாவும் உதவுவதா பேசி இருக்காங்க. சத்யா மாமாவுக்கு ஏதும் ஆகாது. ராது அத்தையும் பத்திரமா இருப்பாங்க. ஒரு வாரம் ஆகட்டும். நீங்க எப்படியாவது அவங்கள ஏதாவது காரணம் சொல்லி அவங்கள நம்ம வீட்டுக்கு மட்டும் கூட்டிட்டு வாங்க..
அதெப்படிம்மா? ராது அமைதியானவ தான். ஆனால் நான் செய்த காரியத்தால் அவள் என்னை மன்னிக்க மாட்டாளே!
அப்படியே அவங்கள விடப் போறீங்களா மாமா? தனியா பிள்ளைகளை வைச்சி புருசன் துணையில்லாமல் என்னோட அம்மாவே ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவங்கள கொஞ்சம் நினைச்சு பாருங்க. அவங்கள இந்த ஊர் ஆட்களுக்கும் தெரிந்திருக்கு. அதனால சரியா போச்சு..
இல்லைன்னா எவ்வளவு பேச்சு அவமானத்தை சந்திக்க நேரிடும். உங்க விசயம் எப்ப வெளிய வருதோ அப்ப தான் அவங்க பாதுகாப்பா இருப்பாங்க.
“பார்த்துக்கோங்க. வா மாமா” செழியன் கையை பிடித்து அக்சரா நகர்ந்தாள்.
அவன் தன் சித்தப்பாவையும் அக்சராவையும் பார்த்துக் கொண்டே அவளுடன் சென்றான்.
error: Content is protected !!