Skip to content
Post Views: 1,764
13(1)
என்ன சொல்ற? வைஷ்ணவி மாறனிடம் கேட்டாள்.
Advertisement
போகாதீங்க. எனக்கு தினமும் உங்களை பார்க்கணும் போல இருக்கு..
“ஹே, நீ எனக்கு பிரப்போஸ் பண்றது போல இருக்கு” வைஷ்ணவி சிரித்தாள்.
Advertisement
Advertisement
இல்ல, நான் அம்மாவை பார்த்ததேயில்லை. எனக்கு எல்லாமே அண்ணன் தான். அவரில்லாமல் நானில்லை. ஆனாலும் பள்ளியில் பசங்களுக்கு ஒன்றுன்னா அம்மா வருவாங்க. எனக்கு அண்ணா வருவான். அந்த நேரம் என்னையும் மீறி நான் அம்மாவை தேடி இருக்கேன்.
என்னோட அம்மா ஏன் என்னுடன் இல்லை? அந்த கடவுளுக்கு அப்படி என்ன என் மேல கோபம்? எதுவும் தெரியல..
Advertisement
அதனால தான் அம்மா இல்லாத பசங்களுடன் நானே சென்று நண்பனாகிட்டேன். அவனுக கேலியும் கிண்டலுமா இருப்பாங்க. அது என்னமோ எனக்கு பிடிக்காது. அதனால் பொண்ணுங்கல கேலி செய்யும் நேரம் அவங்களிடம் இருக்க மாட்டேன்..
“நல்ல விசயம் தான். ஆனால் அம்மா இல்லாமல் வளரும் எல்லார் வீட்டு பசங்களும் உங்களை போல வளர மாட்டாங்க” வைஷ்ணவி கூறினாள்.
புரியல..
உன்னோட சித்தப்பூவும், தீரன் சாரும் சீனியரையும் உன்னையும் நல்லா வளர்த்திருக்காங்க. நீ கோபத்தை மட்டும் குறைச்சுக்கோ. அப்புறம் என்ன அம்மா உனக்கு? தனி பேம்மே கிடைக்கும். இதுக்காக அம்மா இல்லாத பசங்களுடனா பழகுவ? தேடி போகும் இடம் நல்லதாக இருந்தால் தான் அது நமக்கு நல்ல பெயரை வாங்கித் தரும்.
உனக்கு தெரியுமா? உனக்கு அம்மா போல சுபா அப்பா இல்லைன்னு நிறைய பசங்க ப்ரெண்ட்ஸ் வச்சிருந்தா. அவனுகல்ல ஒருவனோட அண்ணனும் அவன் நண்பர்களும் தான் அவளை கடத்தினாங்க. ஆனால் அதிலிருந்து காப்பாற்றியதும் அவளோட தோழனின் அண்ணன் தான்.
உறவு போல தான் ப்ரெண்ட்ஸூம். நமக்கு சரியான நேரம் கை கொடுப்பாங்க. அது நல்ல நண்பர்கள்.
தேவையான நேரம் உன்னை கண்டுகொள்ளாமலோ..கோபமோ படுவாங்க. நீ கோபத்தில் பேசாமல் போனால் உன்னை தேட கூட மாட்டாங்க. அவங்க நண்பர்களே இல்லை. நம்மை பயன்படுத்திப்பாங்க..
வந்து..உங்ககிட்ட ஒன்று கேட்கணும்.
என்ன?
ப்ரியா, உங்களிடம் ஏதாவது சொன்னாளா?
ப்ரியாவா? ஹே..நீ அவளை அப்படி தான் கூப்பிடுவியா?
ஆமா…
அவளுக்கு பிடிச்சவங்க எல்லாரிடமும் ப்ரியான்னு தான் அழைக்க சொல்வாள். ஏன்னு தெரியுமா?
ஏன்?
ப்ரியான்னா பிரியமானவள்ன்னு அர்த்தம். அதனால தான். அவளுக்கு பிடிச்சா கொஞ்சமும் யோசிக்க மாட்டா. உடனே உதவ போயிடுவா. சூழ்நிலை பின் வரும் பிரச்சனை எதையும் யோசிக்கவே மாட்டாள்.
ஆமா, அவ என்னிடம் என்ன சொல்லணும்? நீ எதுவும் செய்தாயா?
இல்ல..இல்ல..சும்மா கேட்டேன்.
தலைவலின்னு தான் சொன்னா. பள்ளியில் யாரும் பிரச்சனை செய்யவில்லையே!
ஏன் கேக்குறீங்க?
அவள சுத்தி ஒரு பையனாவது நண்பனாக்கிப்பா. ஆனால் வித்யாவும் அவளோட தோழிகளும் தான் இருக்காங்களாமே! அவளுக்கு கம்பர்ட்டா இல்லையாம். பசங்கள பிடிக்கலைன்னு சொன்னா..
தெரியலையே!
பசங்க யாரும் அவளை அப்யூஸ் பண்ணலைல்ல? அவ இந்த மாதிரி பசங்களால கம்பர்ட் இல்லைன்னு சொல்றது புதுசா இருக்கு. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. நீ அவளை எப்போதுமே எல்லாம் பார்த்துக்க வேண்டாம். அவளை பசங்க யாரும் தொந்தரவு பண்ணாமல் மட்டும் பார்த்துக்கோ. அதுவே போதும்.
எங்க பசங்க எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க..
சரி..வா போகலாம்..
உங்களுக்கு சாப்பாடு?
“இது உங்க அண்ணாவை சாப்பிட வைக்க பயன்படுத்திய என்னோட ஐடியா. இதுக்கு மேல நான் சாப்பிட்டேன். இரவு பாப்பா விழித்தால் என்னால எழ கூட முடியாது” இடுப்பில் கை வைத்து அவள் சொல்ல, “நீங்க பேசாம இருக்கிறத விட இப்படி பேசுறது நல்லா இருக்கு” மாறன் புன்னகைத்தான்.
ஓஹோ! நல்லா இருக்கா. ஆங்கிரி பாய் நீ சாப்பிடுறியா?
எனக்கா?
ஆமா, உங்க அண்ணாவோட சாப்பிடணும்ல்ல?
நானா?
ஆமா, நீ தான உன்னோட அண்ணா ஒரு முறை கூட உன்னுடன் சாப்பிடதில்லைன்னு வருத்தப்பட்ட?
அண்ணா, நீங்க சாப்பிடணும்ன்னு சொன்ன பின் தான சாப்பிட ஒத்துக் கொண்டான்.
“நீ அவரோட பாய். எனக்காக எதுக்கு அவர் சாப்பிடணும்? உனக்காக சாப்பிடுவார். நீ வா” என்று உணவை தட்டில் எடுத்து வெளியே இருவரும் வந்தனர். இளந்திரையன் வைசு அறைக்கு சென்று விட்டான்.
ஹேய், பாப்பா சத்தம் கேட்குதுல்ல? வைஷ்ணவி மாறன் கையில் உணவுதட்டை கொடுத்து விட்டு அறைக்குள் சென்றாள். மாறன் அவளை பின் தொடர்ந்தான்.
சார்…சார்..இருங்க. அவள நான் பார்த்துக்கிறேன். நீங்க சாப்பிடுங்க..
“நீ பசிக்குதுன்ன சொன்ன?” இளந்திரையன் கேட்க, “பாப்பா அழுறால்ல நீங்க சாப்பிடுங்க. உங்க கம்பெனிக்கு நம்ம மாறன் இருக்கான். என்ன மாறா சாப்பிடுவேல்ல?”
ஹம்ம்…என்று சிந்தனையுடன் தலையை ஆட்டினான்.
இவ்வளவு நேரமா விழிச்சிருக்கடா? நாளை பள்ளிக்கு போகணும்ல்ல?
உன்னை விட எனக்கு பள்ளி முக்கியமில்லை அண்ணா..
என்னடா சொன்ன? இளந்திரையன் மாறனை அதட்ட, பாப்பா அவனை பார்த்து அழுதாள்.
அச்சோ..ஒன்றுமில்லை. சார்க்கு கோபம் வந்திருச்சு…
ங்ஞ்ச்..ங்ஞ்ச்..ங்ஞ்ச்.. அழுது கொண்டே இளந்திரையனை பாப்பா திட்டினாள்.
“மாறா உன்னோட அண்ணாவை திட்டுறா பாரேன்”.
அவ என்னை திட்ட மாட்டா. பேசணுமா? பாப்பாவுக்கு பேசணுமா? அவன் கொஞ்சி பேச மாறன் அவன் அண்ணணையே கண்ணிமைக்காது பார்த்தான்.
வைஷ்ணவி இருவரையும் பார்த்து, முதல்ல உண்ணுங்க. ஊசி போடணும்..
போடலாம் என்று மாறனை பார்த்து, சாப்பிடலாமா? கேட்டான் அவன் அண்ணன்.
தலையை வேகமாக மாறன் ஆட்ட, புன்னகையுடன் இளந்திரையன் அவன் உணவை மாறனுக்கு ஊட்டி விட்டான். மாறன் கண்ணீருடன் அவனிடம் தாவினான்.
“ஐய்யோ மாறா! அவருக்கு காயம் இருக்கு” இருவருக்கும் இடையே கையை நீட்டினாள்.
சாரி..சாரி..சாரி அண்ணா.. கண்கலங்கினான் மாறன்.
“அந்த பக்கம் கட்டிக்கோ” கண்சிமிட்டி வைஷ்ணவி கூற, இளந்திரையன் கையை மாறனுக்கு நீட்டிக் கொண்டே வைஷ்ணவியை பார்த்தான்.
மாறன் தீரனின் தோளில் சாய்ந்து, “அண்ணா எங்க நீ என்னோட கோபத்துல்ல பேசமா இருந்திடுவீயோன்னு பயந்துட்டேன்” கலங்கிய குரலில் பேசினான்.
மாறா, கொஞ்சம் யோசி. நாம் பாதுகாப்பாகவும் சந்தோசமாக வாழ சித்தப்பூ எவ்வளவு கஷ்டப்பட்டார். அவருக்கு இப்ப ஒரு குடும்பம். அதுவும் அவர் ஆசைப்பட்ட பொண்ணின் குடும்பம். எவ்வளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா? உனக்கு ஏன்டா இதெல்லாம் புரியல?
“அண்ணா” மாறன் நகர்ந்து வைஷ்ணவியை பார்த்துக் கொண்டே, “நம்ம அத்தை பொண்ண சின்ன வயசுல இருந்து நினைச்சிட்டு இருக்கீயா?”
“ம்ம்! ஆமா, எனக்கு என்னோட..” என்று நிறுத்தி, “எதுக்கு கேக்குற மாறா?” இளந்திரையன் அவனை பார்க்க, மாறன் பார்வை வைஷ்ணவியிடம் இருந்தது.
எப்பொழுது மாறன் தீரனின் சிறுவயது அத்தை பொண்ணை நினைவுபடுத்தினானோ அப்பவே வைஷ்ணவி மறுபக்கம் திரும்பி விட்டாள். அவளின் கலங்கிய கண்களை மாறன் அவள் திரும்பும் போதே பார்த்து விட்டான். அவனுக்கு ஒருமாதிரி ஆனது.
ஆனால் அண்ணா, “அவங்க உயிரோட இல்லை. இன்னும் எதுக்கு அவங்கள நினைச்சிட்டு இருக்க?”
நினைவுகளுக்கு பவர் அதிகம் மாறா. நடந்தது கடந்த காலமானாலும் அது எனக்கான பொற்காலம். அதை என்னால நினைக்காமல் இருக்க முடியாது.
அண்ணா, நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாமே!
இல்ல மாறா, நான் என்னோட அறைக்கு போகிறேன்..
அண்ணா, சாப்பிடலை..
உணவை உண்டு விட்டு அவன் எழுந்தான்.
சார், இன்ஜெக்சன்? வைஷ்ணவி கேட்க, அவன் அவளை பார்க்க, அவள் முகத்தை காட்டவேயில்லை.
“நானே பார்த்துக்கிறேன்” அவன் கிளம்பி சென்று விட்டான்.
“அண்ணா” மாறனின் குரல் காற்றில் கரைந்தது.
மாறன் அவள் முன் வர, நான் தனியா இருக்கணும். நான் குறித்து வைத்ததை படி. நான் கேட்க வருவேன்..
ம்ம்! அவன் அமைதியாக சென்று விட்டான்.
இருவரும் செல்லவும் கதவை தாழிட்டாள் வைஷ்ணவி.
எனக்கு ஏன் அவர் அந்த பொண்ணை பற்றி பேசும் போது அழுகை வருது. இது தப்பு. நாம இவங்க வீட்டிற்கு எதுக்கு வந்தோம்? அவளிடம் அவளே பேசிக் கொண்டு பாப்பாவை தொட்டிலில் போட்டு அவளும் படுத்தாள். அவள் கண் முன் இளந்திரையன் உருவம் வந்து கொண்டே இருக்க உறங்க முடியாமல் அல்லாடினாள்.
அதே போல மாறனும் எப்படியாவது இவர்களை சேர்த்து வைக்கணும். அந்த பொண்ணோட நினைவுகளை மறக்கடி இவங்க அண்ணாவுக்கு உதவுவாங்க.
நம்ம ஊர்ல என்ன தான் நடக்குது? பொன்னா மாமா இப்படி செய்பவர் இல்லையே! அகிலண்ணாவும்..வேற..கலை ரொம்ப கஷ்டப்படுவானே! என்று அவன் தீரனை கொல்ல முயன்றது கூட தெரியாமல் அவனுக்காகவும் வருத்தப்பட்டான்.
எல்லாவற்றையும் மீறி வந்தது சுப்ரியா பற்றிய எண்ணம். அவளுக்கு ப்ரியா என்று அழைத்தால் பிடிக்கும்ன்னா..என்னை பிடிக்குமா? நான் அழைத்திருக்கிறேன். அவள் ஏதும் கூறவில்லையே!
அவளை எனக்கு..நான் எதுக்கு இப்படி யோசிக்கிறேன்? எனக்கு ப்ரியாவை பிடிக்குமா? அவள் என் மீது கோபமாக வேறு இருக்கிறாள்..
“கலையிடம் நான் கொடுத்த கைக்குட்டை அவளிடம் இருக்குன்னா அவன் ஏதும் வம்பு செய்திருப்பானோ! ச்சே…நமக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணு. அவளிடம் எதுக்கு இவன் வம்பு செய்யப் போறான்?” பலவாறாக மாறன் மனதில் எண்ணங்கள் துளைத்தெடுத்தன. அவனும் உறக்கத்தை தொலைத்தான்.
இளந்திரையனுக்கு அவனின் சிட்டு “அவனுக்காக அழுதது; மருந்திட்டது; மாறனிடம் அன்பாக பேசி புரிய வைக்க முயன்றது; தீரனை உண்ண வைக்க அவள் எடுத்த முயற்சி; இறுதியில் அவன் பேசிய அத்தை பொண்ணு அவ தான்னு தெரியாமல் கண்கலங்கியது” அனைத்தையும் சிந்தித்து மகிழ்ந்தான்.
“சிட்டு, உனக்கு என்னை பிடித்தால் மட்டும் போதும். நான் உனக்கு சரியானவனாக வந்து நிற்க முயல்கிறேன்” மனதில் எண்ணியவாறு மாறன் வாங்கி வந்த இன்ஜெக்சனை போட்டுக் கொண்டு படுத்து விட்டான்.
மறுநாள் காலை இளந்திரையன் வீட்டில் அனைவரும் நேரம் கழித்தே எழுந்தனர்.
“இன்னுமா அக்கா எழவில்லை?” சுப்ரியா பள்ளிச்சீருடையுடன் வைஷ்ணவி அறைக்கு சென்றாள். கதவு தாழிட்டு இருந்தது.
“அக்கா..அக்கா..” கதவை தட்டிக் கொண்டே அழைத்தாள்.
“என்னாச்சும்மா?” இளவேலன் கேட்க, “அக்கா இன்னும் எழாமல் இருக்க மாட்டா. இன்று ரொம்ப நேரம் ஆச்சே. கதவை பூட்டி வேற வச்சிருக்கா?” பதட்டமாக கேட்டாள்.
“புள்ளைக்கு அசதியா இருந்திருக்கும். அதான் தூங்கி இருக்கும். இதுக்கு இப்படி பயப்படலாமா?” என்று கேட்டுக் கொண்டே கதவை தட்டினார் இளவேலன்.
நிகிதா அழும் சத்தம் கேட்டு குளியலறையிலிருந்து ஓடி வந்து பாப்பாவை தூக்கிக் கொண்டு, “வாரேன்” என்று கதவை தட்டியதில் சத்தம் கொடுத்தாள் வைஷ்ணவி.
“சொன்னேன்லம்மா. புள்ள இப்ப வந்திருவா” இளவேலன் சென்று அமர்ந்தார்.
சுந்தரம், தீரன் கிளம்பிட்டானா?
தெரியலய்யா. நான் அவரை பார்க்கலை.
செழியா?
இதோ வந்துட்டேன் சித்தப்பூ..
பருப்பு மில்லில் லோடு ஏத்திட்டு இருக்கானுக. போய் பார்த்துட்டு வா..
ஓ.கே சித்தப்பூ என்று வெளியே செல்லாமல் அக்சரா அறைப்பக்கம் சென்றான். அவரும் சுப்ரியாவும் அவனை பார்க்க, “அக்சா, நான் என்னோட வேலையை முடிச்சிட்டு வந்து உன்னை காலேஜூல்ல டிராப் பண்றேன்”.
மாமா, “ரொம்ப நேரமாக்கிட்டாத! முதல் நாளே நேரம் கழித்து போனால் நன்றாக இராது” கதவை திறக்காமல் உள்ளிலிருந்து சத்தம் கொடுத்தாள்.
“ம்ம்! சீக்கிரம் வந்துருவேன்” என்று தன் கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டே, “போயிட்டு வாரேன் சித்தப்பூ. பை சுபா” சொல்லி சென்றான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“அங்கிள் பாப்பாவை வச்சிருங்க” இளவேலன் கையில் நிகிதாவை கொடுத்தாள் வைஷ்ணவி.
உணவு மேசையில் உணவை சுந்தரம் எடுத்து வைக்க வைஷ்ணவி அவருக்கு உதவ சென்றாள்.
மாறன் புத்தகப்பையை தோளில் போட்டு அறைக்கு வெளியே வந்தான்.
சுப்ரியா ஏதும் பேசாமல் உணவு மேசையில் சென்று அமர்ந்தாள். உணவை எடுத்து வைத்து வைஷ்ணவி அவளுக்கு ஊட்டி விட, மாறன் உண்ணாமல் இருவரையும் பார்த்தான்.
மாறா, சாப்பிடாமல் என்ன வேடிக்கை பாக்குறீங்க? சுந்தரம் கேட்டார். அவரை பார்த்து விட்டு அவன் வைஷ்ணவியை பார்த்தான்.
வைஷ்ணவி அவனுக்கும் ஊட்டி விட, சுப்ரியாவிற்கு கோபம் வந்தாலும் அமைதியாக உண்டு எழுந்து சென்றாள். இருவரும் தயாராகி வெளியே வந்தனர்.
மாறன் அவனது சைக்கிளை பார்த்து விட்டு சுப்ரியாவை பார்த்தான்.
“என்னடி பண்ணி இருக்க?” வைஷ்ணவி கேட்க, எனக்கு பிடிக்க இந்த சைக்கிளில் இடமில்லை. அதான்..
“அதுக்கு இப்படியா தடுப்பு ரெடி பண்ணுவ? இப்ப எப்படி உட்காருவ?”
அவன முதல்ல ஏற சொல்லு..
மாறன் சைக்கிளில் ஏறவும் அவனுக்கு முதுகு காட்டி புத்தகப்பையை அவளுக்கு முன்னே போட்டுக் கொண்டாள்.
என்னவாது செய். கீழ வாரிட்டு போகாமல் இருந்தால் சரி..
நானாவது விழுவதாவது. கிளம்ப சொல்லு. நேரமாகுது..
மாறன் தெருமுற்றம் வரை நன்றாக ஓட்டியவன் திடீரென வேகமெடுத்தான்.
“கடவுளே! இவனுக்கு திடீர்ன்னு என்னாச்சு? ஹே…நிறுத்து நிறுத்து நிறுத்து” கத்தினாள் சுப்ரியா.
“நேரமாகுதுல்ல. அதான் வேகமா போனேன்” மனதில் புன்னகைத்து கூறினான்.
மெதுவாகவே போ..
முடியாது என்று மீண்டும் அதிவேகமாக செல்ல, வேண்டாம்..கத்தினாள்.
அவன் சைக்கிளை நிறுத்த, மூச்சை இழுத்து விட்டு கீழே இறங்கி ஆடையை சரி செய்து அவள் வைத்திருந்த தடுப்பை தூக்கி எறிந்து விட்டு சைக்கிளில் ஏறி அவன் தோளில் வைத்துக் கொள்ள, “இதை முன்னாடியே செய்திருக்கலாம்” என்று மாறன் புன்னகையுடன் கூறி சைக்கிளை வலப்பக்கம் திருப்பினான்.
“ஏய்! பள்ளிக்கு அந்த பக்கம் போகணும். நீ எங்க என்னை அழைச்சிட்டு போற?” சத்தமிட்டுக் கொண்டே வந்தாள். எல்லாரும் வேடிக்கை பார்த்தனர். நேராக மாறன் சத்யா வீட்டின் முன் வந்து சைக்கிளை நிறுத்தினான்.
“டேய், எங்கடா கூட்டிட்டு வந்துருக்க? பள்ளிக்கு நேரமாகுதுடா” சினமுடன் மாறனிடம் பேசினாள். அவன் அவள் பேச்சை கண்டு கொள்ளாமல் வீட்டின் கதவை தட்டினான்.
“யாரு?” என்று ராதிகா கொண்டையிட்டுக் கொண்டே வெளியே வந்தார். மாறனையும் சுப்ரியாவை பார்த்து நின்றவர், “உள்ள வாங்க” அழைத்தார்.
“நாங்க உறவு கொண்டாட வரலை” அவன் சொல்ல, சுப்ரியா வேண்டுமென்றே அவனை தாண்டி வீட்டிற்குள் செல்ல முனைந்தாள். அவள் கையை இறுக பற்றிய மாறன், “எங்க போற? பள்ளிக்கு நேரமாகுதுன்னு சொன்னேல்ல? இரு சொல்ல வேண்டியதை சொல்லீட்டு போயிறலாம்”.
சொல்ல வேண்டியதா? அவள் உதட்டை பிதுக்கினாள்.
நேற்றிரவு தீரன் அண்ணா இங்க வந்தாங்களா?
ஆமா, தீரா வந்தான்..
“இனி என்னோட அண்ணன் உங்க வீட்டுக்கு வரக் கூடாது. உங்க பையனிடம் சொல்லி வையுங்க. இங்க வந்ததால தான் அண்ணாவிற்கு காயம் பட்டிருக்கு. வலியில் அவர் மயங்கும் அளவாகிட்டார். இதுவரை என் அண்ணாவை இதுவரை இப்படி பார்த்ததில்லை. நல்லா நினைவில் வச்சுக்கோங்க. அவர் உங்க வீட்டுக்கு வராம பார்த்துக்கணும்” என்று அழுத்தி மாறன் பேச, சுப்ரியா அவனிடம்
“மாமாவுக்கு என்னாச்சு? மாமாவை காலையில இருந்து நான் பார்க்கலை. வா. நாம வீட்டுக்கு போகலாம்” அவன் கையை பிடித்து இழுத்தாள்.
“இப்ப ஓ.கே வா தான் இருக்கார். அவரறையில் தான் இருப்பார். நீ வா பள்ளிக்கு” அவள் கையை இழுத்தான்.
டேய் லூசு, “அவருக்கு அடிபட்டிருக்கு. பள்ளிக்கு போகணும்ன்னு சொல்ற?” சீற்றமுடன் கேட்டாள்.
“அவரை பார்த்து ஒப்பாரி வைக்கணுமா? அண்ணா இப்ப நல்லா இருப்பாங்க. இது நடப்பது தான். ஆனால் இவங்களுக்காக என்பதை என்னால ஏத்துக்க முடியல” என்று ராதிகாவை பார்த்தார். அவர் கண்கலங்க அவனை பார்த்தார்.
மேம், “நீங்க அலைபேசி வச்சிருக்கீங்கல்ல?” மாறன் கையை எடுத்து விட்டு, சுப்ரியா ராதிகா வீட்டிற்குள் சென்றாள்.
இங்க இருக்கு என்று எடுத்தாள். இளந்திரையனின் எண்ணுக்கு அழைத்தாள். அவன் தூக்கக்கலக்கத்தில் பேசினான்.
மாமா, “குட்டிம்மா பேசுறேன். உங்களுக்கு எப்படி அடிப்பட்டது? ரொம்ப வலிக்குதா?” சுப்ரியா குரலில் திடுக்கிட்டு எழுந்தான் இளந்திரையன்.
குட்டிம்மா, “எங்க இருக்க? யாரோட நம்பர்?” அவன் பதற, “மாமா பயப்படாதீங்க. ராதிகா மேம் அலைபேசியில இருந்து தான் பேசுறேன். உங்களுக்கு என்ன ஆச்சு? எதுவுமே சொல்லல. நான் வீட்டுக்கு வரவா?”
குட்டிம்மா, “பள்ளிக்கு நேரமாகிடுச்சு. நீ போ சிட்டுவும் சுந்தரம் அங்கிளும் இருப்பாங்கல்ல? எனக்கு எதுவும் இல்லை. உனக்கு யார் சொன்னது?”
சரி மாமா, நீங்க இன்று வெளிய போகவே கூடாது. நான் மாலை பள்ளி முடிந்து வரும் போது வீட்ல இருக்கணும்..
சரிம்மா, நீ பள்ளியில தான இருக்க?
“பை மாமா” அவள் வைத்து விட்டாள். இளந்திரையன் சிந்தனையில் ஆழ்ந்தான். அவனை தேடி குரு வந்தான்.
வீட்டினுள் வந்து அலைபேசியை பிடுங்கி மேசை ஒன்றில் வைத்து விட்டு மாறன் சுப்ரியா கையை பிடித்து இழுத்து வந்து, “வா கிளம்பலாம்” அவளுடன் பள்ளிக்கு கிளம்பினான்.
ராதிகா அப்படியே நின்று, நான் தீரனை பார்க்கணும். அவனுக்கு நேற்று அடிப்பட்டிருக்கு. அதுகூட தெரியாமல் இருந்திருக்கோம் வீட்டுக்கதவை பூட்டி விட்டு சென்றார்.
error: Content is protected !!