Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Aarpitha’s Niththirai Kalaiththa Maayaval End

அரைக்குள்ளே மழை வருமா

வெளியே வா குதுகலமா

இந்த பூமிப் பந்து

எங்கள் கூடைப் பந்து



Advertisement

அந்த வானம் வந்து

கூரை செய்ததின்று

கரை இருக்கும் நிலவினை சலவை செய்

Advertisement

சிறை இருக்கும் மனங்களை பறவை செய்

Advertisement

எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை

 

முற்றத்தில் அனைவரும் வந்து நிற்க.. அன்போ இனியாவை அணைத்த படி நின்று கொண்டு இருந்தான்.. 

Advertisement

 

இனியா பயத்தில் அவனின் அருகில் இருக்க… இதை பார்த்த மீராவிற்கு கோவம் தான் அதிகமாக வந்தது 

 

“அன்பு இவ என்னையும், நம்ப குழந்தையையும் கொள்ள பாக்குறா.. நல்ல வேலை நான் கொஞ்சம் சுதாரிச்சிட்டேன்” என்றாள் மீரா 

 

சுதாரிச்சது நீ மட்டும் இல்லை… நானும் தான்.. என்றவன் இனியாவை யாழியுடன் நிற்க வைத்து விட்டு மீராவிடன் தொடர்ந்தான் 

 

தன்னை நெருங்கும் அன்பை பார்த்த மீரா… என்ன அன்பு அவளை வீட்ட விட்டு அனுப்புவன்னு பார்த்தா உள்ளே கூட்டிகிட்டு வர… உன்னாலயும் உன் வீட்டு அள்ளுங்களயும் தன் நான் அவளை போலீஸ் கிட்ட பிடிச்சி குடுக்காம இருக்கேன்… இல்லனா இவளை” பல்லை கடித்து கொண்டு மீரா இனியாவை நெருங்க 

 

போலீஸ் கிட்ட தானே.. கண்டிப்பா போகலாம்.. நானே வர சொல்லிட்டு தன் வந்து இருக்கேன்.. என்ற படி மீராவை நெருங்கினான் அன்பு 

 

அவனின் பேச்சில் உள்ள மாற்றத்தை உணர்த்த மீரா.. “என்ன ஆச்சு anbu..எதாவது பிரச்னையா.. ஏன் ஒரு மாதிரி பேசுற” அவனை நெருங்கிய படி பேசினான் அன்பு 

 

“நேத்து நீ சொன்னது எல்லாத்தையும் இப்போ மறுபடியும் சொல்ல முடியுமா? அதான் நேத்து வந்த அப்றம் நீ சொன்ன எல்லாத்தையும் நான் மறுபடியும் கேக்கணும்னு ஆசை படுறேன்” என்றான் அன்பு 

 

மீரா நேற்று கூறிய அனைத்தையும் கூறினாள்.. இனியாவின் கார் மோதியது… பின் கோமாவில் இருந்தது என்று அனைத்தையும் அவள் கூறி கொண்டே போக… 

 

“நான் அதை எல்லாம் கேக்கல..இந்த குழந்தையை பத்தி சொன்னியே.. அதை மறுபடியும் சொல்லுன்னு சொன்னேன்” என்றான் திருத்தமாக 

 

அன்று பார்ட்டியில் நடந்த அனைத்தயும் மறுபடியும்.. வார்த்தை மாறாமல் ஒப்பித்தால் மீரா… குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த கதை தெரிந்தது என்றாலும்…இவை அனைத்தையும் முதன்முறை கேட்கும் இனிய.. உடம்பு கூச.. அருவருத்த படி தான் நின்று கொண்டு இருந்தாள்.. அதை அன்பு கவனிக்கவும் தவற வில்லை..

 

ஓஹோ ஹோ….என்ற படி இரண்டில் பின்னால் சென்ற அன்பு…

 

“ஜெகதீஷ்…உள்ள வாங்க” என்று குரல் கொடுக்க… ஒரு ஆண் ஒருவன் உள்ளே வந்தான்… நல்ல ஆறடி உயரம்.. வெளிறிய வெள்ளை தோல்…பிரவுன் நிறத்தில் கண்கள் என பார்த்த மாத்திரத்தில் அவன் வாட நாட்டு இளைஞ்சன் என்பது நான்கு புரிந்தது அனைவர்க்கும் 

 

வந்தவனை பார்த்த அனைவரும்.. இவன் யார்.. என்று குழப்பத்தில் பார்க்க.. மீராவோ அரண்டு போய் நின்று கொண்டு இருந்தாள் 

 

“இப்போ சொல்லு மீரா..இந்த குழந்தை யாரோடது” என்ற படி அன்பு மீராவை நெருங்க.. 

 

அவளோ இரண்டடி பின்னால் சென்றாள்…”அதான் சொன்னேனே அன்பு… இது… இது…நம்ப குழந்தை தான்” என்றாள் சிறு தடுமாற்றத்தோடு 

 

“ஜுட்”(பொய்) என்று கத்தினான் அந்த வாட நாட்டு இளைஞ்சன்…அவன் கத்தியதில் மேலும் அரண்ட மீரா… அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகி விட 

 

“சொல்லு மீரா…இப்போயும் அதே பொய்யை தன் சொல்ல போறியா”என்றான் அன்பு 

 

“இல்லை அன்பு…அன்னைக்கு நடந்தது எதுவும் தெரிஞ்சி நடந்தது இல்லை… போதைல என்னையே அறியாமல் நடந்தது… கலையில் தன் எனக்கு எல்லாமே தெரியும்… உன் கிட்ட சொன்னா எங்க நீ என்னை வெறுத்துடுவியோனு தன் நான் உன் கிட்ட சொல்லல”

 

“நீ நடந்ததை சொல்லி இருந்தா கூட நான் உன்னை விட்டு இருப்பேன்… ஆனால் நீ..அசிங்கமே இல்லாம…ச்சி…எப்படி உன்னால இப்டி நடந்துக்க முடிஞ்சுது” என்றான் அன்பு அருவருப்பு முகத்தை வைத்து கொண்டு 

 

ஒன்றும் புரியாமல் அங்கு அனைவரும் நின்று இருக்க…

 

“என்னடா சொல்லுற.. யார் இவர்.. என்ன நடந்தது.. மீரா என்ன பொய் சொன்னா? ” என்றான் அன்பு ஒன்றும் புரியாமல் 

 

இவ சொன்ன மாதிரி நாங்க என்னோட பிரின்ட் பர்த்டே பார்ட்டிக்கு போனோம் தான்..ஆனால் நான் குடிக்கவே இல்லை.. இந்த விஷயம் மீராக்கு தெரியாது 

 

எல்லாரும் குடிக்க சொல்லி கம்பெல் பண்ராங்கனு…என்னோட பிரின்ட் தன் குடிச்ச மாதிரி நாடி.. எல்லாரும் குடிச்சி போதை ஆகுற மறைக்கும் நீயும் போதைல இருக்க மாதிரி நடந்துக்கோனு சொன்னான்.. நானும் அப்டி தான் நடந்துக்கிட்டேன்.. 

 

ஆனா இங்க வந்து இவ… நான் கர்ப்பமா இருக்கேன்.. அதுக்கு காரணம் நீ தான்.. அதுவும் அன்னைக்கு நைட் போதைல நடந்ததுனு இவ சொன்னா அப்போ தான் எங்கயோ தப்பு நடக்குதுன்னு எனக்கு புரிஞ்சுது… சரி என் பிரின்ட் பொய் விசாரிக்கலாம்னு தான் நான் இன்னைக்கு காலைல டெல்லி போனேன்… அங்க பொய் விசாரிச்சா அப்போ தான்.. 

 

இவ குழந்தைக்கு காரணம் ஜெகதீஷ்னும்… இந்த விஷயம் இவளுக்கும் தெரியும்னும் தெரிஞ்சுது… 

 

இவரு மீராவை ரொம்பவே கெஞ்சி இருக்காரு…நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…குழந்தையை வளர்க்கலாம்னு… சொன்னதுக்கு 

 

உன் கிட்ட காசு பணம்னு ஒன்னும் இல்லை.. நீ எப்படி எங்களை காப்பாத்துவனு சொல்லி.. இவரை விட்டுட்டு இங்க ஓடி வந்துட்டா” என்று கூறி முடித்தான் அன்பு 

 

அனைவரின் பார்வை தன் மேல் வந்து மீள்வதை உணர்த்த மீரா 

 

ஹா.. ஹா.. ஹா.. என்று சத்தமாக சிரித்தாள் 

 

வெள் டன் அன்பு… துல்லியமா எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்கிட்டு வந்து.. சரியான நேரத்தில சொல்லி.. கரெக்ட்டா பிளான் பண்ணி இருக்க.. வெரி குட்… ஆனாலும் இப்போ இவ்ளோ பண்ணி உனக்கு என்ன கெடச்சிட போகுது… 

 

நடந்த படியே சென்று மேஜையில் இருக்கும் புர்ஸ்ஸில் இருந்து எதையோ எடுத்தவள்.. அன்பின் முன் வந்து 

 

“நீ இப்போவே இந்த தாலியை என்னோட கழுத்துல கட்டுற… இந்த பிடி ” என்றாள் திமிராய் 

 

“என்ன… நான் உன் கழுத்தில் தாலியா” சிரித்தவனை பார்த்த மீரா 

 

இப்போ நீ இந்த தாலியை என் கழுத்துல கடலானா.. இதோ நிக்குறாளே உன்னோட ஆசை காதலி… ஓ…இப்போ உன்னோட மனைவி இல்லை… இவ நாளைக்கு காலைல ஜெயில இருப்பா.. 

 

என்னை கொலை செஞ்ச குற்றத்திற்காக.. நானே அவளை ஜெயிலுக்கு அணுவுவேன்… எப்படி வசதி” என்றாள் கையில் இருக்கும் தாலியை ஆட்டியபடியே 

 

இதில் அன்பு திக்குமுக்காடி தான் போனான்.. இதை எப்படி எதிர் கொள்வது என்று யோசித்து கொண்டு இருந்தவனிடம்..

 

நீ தாலியை காட்டுறியா.. இல்லை போலீஸ்க்கு போன் பண்ணவா… என்ற படி கைபேசியை மீரா எடுக்க.. 

 

இல்லை.. இல்லை.. வேண்டாம்.. நிறுத்து… என்ற அன்பு… இனியாவை காப்பாற்ற வேண்டுமே… என்ற எண்ணத்தில்… வேறு வழி இல்லாமல்.. தாலியை வாங்க போக… அவனை தடுத்தது ஒரு குரல் 

 

அனைவரும் திரும்பி பார்க்க… வாசலில் சந்துருவுடன் நின்று இருந்தான் செழுயன்.. 

 

போலீஸ் தானே கூப்பிடனும்… இதோ நானே கூட்டிகிட்டு வந்துட்டேன்.. என்றார் செழியன் 

 

போலீஸ்ஸை பார்த்த உடன்.. எதோ தன் இங்கு சிக்கி கொண்டது போல் உணர்த்த மீரா 

 

சார்.. வாங்க சார்..என்னை கொலை பண்ணிட்டு… இங்க  வந்து தஞ்சம் ஆகிட்டா சார்.. அவளை பிடிக்க வந்தா… இந்த குடும்பமே என்னை எதிர்க்குது சார்.. நீங்க தான் எனக்கு நியாயம் வாங்கி தரணும் ” என்ற படி அழுது கொண்டே பேசினாள் மீரா 

 

அதை பார்த்து கொண்டு இருந்த அனைவர்க்கும் “அடி பாவி” என்பது போல் வாய் மேல் கை வைத்து கொள்ள 

 

“இவளை உடனே அர்ரெஸ்ட் பண்ணுங்க சார்…நான் கம்பளைண்ட் எழுதி தரேன்” என்றாள் வீரமாக 

 

“அர்ரெஸ்ட் பண்ண தானே வந்து இருக்கேன்.. அதுக்கு முன்னாடி கொஞ்சம் ரிலாக்ஸ் அகரத்துக்காக ஒரு படம் ஒன்னு பாப்போமா.. அதை பார்த்த அப்றம் சொல்லு… யார அர்ரெஸ்ட் பண்ணனும்னு.. உடனே பண்ணிடலாம்” என்றான் சந்துரு கிட்ட தட்ட நக்கலாக 

 

புரியாமல் பார்த்தவளை… “வா வந்து உக்காரு.. நான் உனக்கு படம் காட்டுறேன்” என்ற படி அவளை அமர வைத்தான் 

 

அவன் கைபேசியை எடுத்து.. ஒரு வீடியோ ஒன்றை பிலே செய்ய… அதில்… இனியா காரில் ஒரு தரப்பில் இருந்து வந்து கொண்டு இருப்பது தெகிவாக தெரிய…அவள் அந்த நான்கு வழி சாலையில் வேகமாக வந்து கொண்டு இருக்க 

 

அப்போது எதிர் திசையில் இருந்து… ஒரு ஆண், அவனிடம் அணைத்த படி அமர்ந்து வந்து கொண்டு இருந்த பெண்ணும் தெரிய… உற்று பார்க்க அது மீரா என்பது தெளிவாக தெரிந்தது…  பேசி சிரித்து கொண்டே வந்து கொண்டு இருக்க… எதிரே வந்து கொண்டு இருக்கும் இனியாவின் காரை திடீரென பார்க்கவும்.. உடனடியாக பிரேக் அடிக்கவும்.. இனியாவின் கார் அருகில் வரவும் சரியாக போக… பிரேக் கால்  பின்னால் அமர்ந்து கொண்டு இருந்த மீரா எகிறி கீழே விழ…

 

லோகநாதனிடம் இருந்து தப்பிக்க வண்டியை ஓடிக்கொண்டு வந்து கொண்டு இருந்த இனியா.. அதை தான் தான் செய்தோம் என்று தவறாக நினைத்து கொண்டு… அங்கிருந்து வைஷுவுடன் ஓடி விட்டாள்.. 

 

இவை அனைத்தயும் பார்த்த பிறகு..” சரி இப்போ அர்ரெஸ்ட் பண்ணலாமா ” என்று சந்துரு மீராவை நெருங்க 

 

அவளோ அன்பை பார்க்க.. “நீ அர்ரெஸ்ட் பண்ணுடா.. நான் கம்பளைண்ட் தரேன்” என்றான் 

 

அவள் கைகளுக்கு விலங்கு மாட்ட சந்துரு செல்ல… 

 

“வேண்டாம் அண்ணா.. விட்டுடுங்க.. அவ கர்ப்பமா வேற இருக்கா.. இந்த நிலைல அவளை அர்ரெஸ்ட் பண்ண வேண்டாம்..இவ பண்ண வேலைக்கு அவளோட குழந்தை எதுக்கு தண்டனை அனுபவிக்கனும்… அந்த கொடுமையை நாங்க பண்ண விரும்பல.. விட்டுடுங்க” என்றாள் இனியா 

 

அதை அங்கு இருந்த அனைவரும் ஏற்று கொண்டு…அவளை அங்கிருந்து கிளம்ப சொல்ல… அவளோ அனைவரையும் ஒரு வன்மத்துடனே பார்த்த படி சென்றாள்.. 

 

சந்துருவிடம் திரும்பி.. “ரொம்ப தேங்க்ஸ்டா.. நீ மட்டும் இல்லனா… என்ன பண்ணி இருப்போம்ன்னே தெரியலடா” என்றான் அன்பு 

 

நான் ஒன்னும் பண்ணலடா.. செழியன் தான் இந்த ஆதாரத்தை எடுத்து கிட்டு வந்து.. என்னையும் கூட்டிகிட்டு வந்தாரு… அவருக்கு தான் நன்றி சொல்லணும் 

 

“என்னோட பொண்ணோட வாழ்க்கை இது.. நான் இருக்கும் போது எப்படி அது கேட்டு விட முடியும்…” என்ற செழியனை ஓடி வந்து அணைத்து கொண்டாள் இனியா… 

 

இனியா அவரை கட்டி கொள்வதை பார்த்து… வைஷுவும் கட்டி கொள்ள.. அனைவரின் முகத்திலும் இறுதியாக சிரிப்பு எட்டி பார்த்தது 

 

அப்றம் என்னபா.. அதன் வில்லன்கள் எல்லாம் போய்ச்சுல…அப்றம் என்ன…இனி எங்கள் “வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தானே” என்றான் இலக்கியன் 

 

“மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாகும் 

வாழ்க்கை இன்பம் வரமாககும்”

 

பெரிய ஸ்பீக்கரில் பாடல் ஒளித்து கொண்டு இருக்க.. மறுபுறம் வீடே காலில் சக்கரம் சுத்தி கொண்டு ஓடி கொண்டு இருந்தது 

 

நிச்சயதார்த்தம் செய்து விட அனைவர்க்கும் அழைப்பு… 

 

நடக்கும் அனைத்தையும் பார்த்து…நடுவில் நிச்சயம் எல்லாம் வேண்டாம்.. திருமனாகவே நடத்தி விடலாம் என்று வீட்டினர் முடிவு செய்ய.. அதற்கான ஏற்பாடுகள் தான் நடந்து கொண்டு இருந்தது 

 

விடிந்தால் திருமணம்…மைக் செட்டில் பாடல் ஒளித்து கொண்டு இருக்க… இனியாவிற்கு கலையில் தேவை பாடும் அலங்காரம் அனைத்தையும் யாழினி பார்த்து கொண்டு இருக்க… 

 

அன்பு ஒரு புறம் மண்டபம் அமைக்கும் வேளையில் இறங்கி இருக்க… இலக்கியன் இரவு உணவு பரிமாறுவதற்கு கவனித்து கொண்டு இருந்தான் 

 

அங்கு வீட்டின் தோட்டத்தில் சாப்பிட இடம் அமைத்து இருக்க.. இனியாவின் வடநாட்டு தோழிகள் அமர்ந்து உணவு உன்ன.. இலக்கியன் ஓடி ஓடி கவனித்து கொண்டு இருந்தான் 

 

அதே நேரம் அங்கு வந்தாள் மீனு.. அவளை கவனித்தவன் 

 

“தீபா…அந்த பொரியல் நல்லா இருக்கா டார்லிங்… இன்னும் கொஞ்சம் வேகட்டுமா?”என்று அங்கு இருந்த பெண்கள் ஒருவரோடு இலக்கியன் குழைய 

 

“இன்னொரு பெண்.. இளா டார்லிங்…அந்த சாம்பார் கொண்டுவாயேன்”என்றாள் நேரம் தெரியாமல் 

 

அதில் அதிக படிச்ச கோவத்தை அடைந்த மீனு…”இலக்கியா இங்க வாயேன்.. உன்ன இனியா கூப்டாங்க” என்று அவள் அழைக்க.. மெல்லிய சிரிப்புடன் சென்றான் இலக்கியன் 

 

சிறிது தூரம் சென்று, மரங்கள் இருக்கும் மறைவான இடத்தை அடைந்த உடன்.. இலக்கியனை நோக்கி திரும்பிய மீனு… 

 

“நான் நேரடியாவே கேக்குறேன்…உனக்கு என்னை பிடிச்சி இருக்கா இல்லையா.. நான் பாட்டுக்கு பைத்தியம் மாதிரி உன் பின்னாடி சுத்திகிட்டு இருக்கேன்…நீ வேற யார் கூடையோ கடலை போட்டுக்கிட்டு இருக்க.. அம்மா வேற எதோ தெரிஞ்சவங்களோட பையனை கல்யாணம் பண்ணிக்கிறியானு நேத்து போட்டோ காமிகுராக… உன்னோட பதிலை இப்போவே சொல்லிடு” என்றபடி மீனு கேட்க 

 

அவளின் வார்த்தைகளில் இருக்கும் வலி புரியாமல்…”உன்ன தானே கேட்டாங்க.. நீயே முடுவு பணிக்கோ.. என்கிட்ட எதுக்கு வந்து கேக்குற” தெனாவதாகவே வந்தது பதில் 

 

அதில் கொஞ்சம் உடைந்தவள்…”அப்போ உன் வழிய நீ பாருன்னு சொல்லுறியா?” இம்முறை குரல் கலங்க.. கண்களும் சேர்ந்து கலங்கிய படி கேட்டாள் மீனு 

 

அதை பார்த்து, உணர்ந்த இலக்கியன்.. “ஹை… மீனு.. நான் சும்மா விளையாட்டுக்கு தானே பண்ணிக்கிட்டு இருக்கேன்.. நீ எதுக்கு இவ்வளவு சீரியஸ் ஆகுற.  நானே நம்ப விஷயத்தை அன்பு கிட்ட பேசலாம்னு தான் இருந்தேன்..இந்த கல்யாணம் முடியட்டும் இரு” என்று அவளை சமாதானம் செய்தவன் 

 

இருந்தும் அழுது கொண்டு நின்று கொண்டு இருந்தவளை.. தன்னோடு அணைத்து கொண்டவன்… “நமக்கு கல்யாணம் நடக்கும்… ஆனால் இதுல நெறைய சிக்கல் இருக்கு…அதை ellam சரி பண்ணனும்.. அதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும்…நீ எதுக்கும் கவலை படாமல் போய் வேலைய பாரு” என்றான் இலக்கியன் 

 

அதில் சரி என்பது போல.. மன நிறைவுடன் சென்றவளையோ ஆசையாய் பார்த்து கொண்டு இருந்தான் இலக்கியன் 

 

அடுத்த நாள் காலை…மணி ஏழு மணி 

 

            வீடே படு பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்க…மணவறையில் மாப்பிளையக அமர்ந்து இருந்தான்.. பட்டு சட்டை.. பட்டு வேட்டியில்.. அவன் சுற்றம் சூழ..மனமும் முகமும் மலர்ந்து இருக்க..தன்னவளுக்காக காத்திருந்தான் அன்பு 

 

அவனை அதிகம் காக்க வைக்காமல் இறங்கு வந்தாள் இனியவள்.. அதே மயில் நிற பட்டு புடவையில்…அவளுக்கேற்ற அலங்காரத்துடன் அவன் அருகிள் வந்து அமர்ந்தாள் இனியா.. 

 

சுற்றம் சூழ..மனதில் நிறைவும்…மகிழ்ச்சியும் கூட.. இனியவாளின் கழுத்தில் மூன்றும் முடிச்சிட்டு தாலி கட்டினான் அன்பு… 

 

அங்கு இருந்தவர்களின் மனம் நிறைந்து இருக்க… முறை படி தன் மனைவியானவளை கண் கொட்டாமல் பார்த்தவன்.. அவளின் அழகில் சொக்கி தான் போனான்.. 

 

அவனின் நித்திரை கலைத்த மாயக்காரி.. இனி அவனின் மஹாராணி… 

 

மறுபுறம்…அர்ச்சத்தை போடுகிறேன் என்ற பெயரில்…செம்பில் இருந்த மஞ்சள் நீரை தவுறத்தலாக இலக்கியன் மேல் கொட்டி விட்டாள் மீனு… இதுவும் நம்ப வைஷு வேலை தான் 

 

அவளை துரத்திய படியே ஒரு அறைக்குள் நுழைந்த இலக்கியன்..

 

நாம போய் பாக்குறதுக்குள்ள கதவை மூடி லாக் பன்னிடாகபா… அதனால உள்ள நடக்குறத பாக்க முடியலை 

 

சரி வாங்க.. நாம நம்ப மாயக்காரியை வாழ்த்திட்டு போவோம் 

 

                      ….  சுபம்… 

 

இதோ மக்களே… இத்தனை நாள் உங்களை தொல்லை பண்ணிய தொலை ஒத்தோடு முடியுது..  இதற்கான பாகம் 2 எழுதலாம்னு ஒரு யோசனை இருக்கு… இந்த கதையை பத்தின கருத்தை சொல்லுங்க…பாகம் இரண்டு போட சொல்லுறீங்களா …இல்ல..இது வரைக்கும் செய்த தொல்லை போதும்னு சொல்லுறீங்களா…. கருத்துகளை பகிருங்கள் பிரின்ட்ஸ் 

 

               

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!