Skip to content
Post Views: 1,557
நயம் – 7 
இதோ மளமளவென திருமண வேலைகள் களைகட்டி இன்று நிச்சயதார்த்தத்தில் வந்து நின்றது.
நகரின் மைய பகுதியில் அமைந்த AK திருமண மஹாலில் அபிநயா WEDS அரவிந்த் கிருஷ்ணா என பொன்னெழுத்துக்களில் தகதகவென மின்னியது. வரவேற்பறையில் காய்கறி, காளான் என விதவிதமான சூப் வகைகள். குழந்தைகளுக்கு பாப்கார்ன்,சிறியதாக அழகாக வெட்டிய பழங்கள், பஞ்சுமிட்டாய் என களைகட்டியது. ஆர்கெஸ்ட்ரா குரூப் பாடல்களை வழங்க நிறைவாய் அரங்கு முழுவதும் மக்கள் வெள்ளத்தில் சூழ்ந்திருந்த்தது.
Advertisement
மஞ்சள் புடவையில் தேவதையாய் அலங்கரித்து அபியை நலங்கு வைக்க மேடைக்கு அழைத்து வந்தனர். உடைக்கேற்ப அழகான மஞ்சள், வெள்ளை வேலைப்பாடுகள் நிறைந்த நகையும் பூட்டிருந்தனர். வீட்டின் மூத்தோர்கள் தொட்டு அனைவரும் சந்தனம், குங்குமம் பூசி, பூ தூவி அவளை வாழ்த்தினர். பின் காலை நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆகின. அதன் சிறு துளிகள் உங்கள் பார்வைக்காக இங்கு.
அபியோடு பரதம் பயின்ற பெண்கள் முதலில் நாட்டிய நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அதை தொடர்ந்து சிறு பெண்கள் அழகாய் பாடலுக்கேற்ப அபிநயம் பிடிக்க தொடங்கினர். அடுத்து விரும்பியவர்கள் ஆட வரலாம் என மைக்கில் அறிவித்ததை தொடர்ந்து பலரும் தங்கள் கலைவண்ணத்தை அங்கே அரங்கேற்றினர்.
அடுத்து சங்கீதா குழுவினரின் இசை நிகழ்ச்சி தொடங்கியது. சிறு பெண் என்றாலும் அட்சுர சுத்தமாய் பாடினார் அந்த இளங்குயில்.
Advertisement
“மாஞ்சிட்டு மேடை போட்டு
Advertisement
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா
Advertisement
ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அனல் மூச்சு வாங்கினாள்
பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு
உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெப்பம் உண்டாச்சு
மயங்காதே மாலை மாத்த
மாமன் வந்தாச்சு
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்”
என்ற பாடல் பாடப்படும் போது தங்களை அறியாமல் அபி, அரவிந்த் இமைகள் தங்கள் இணையை புன்னகையோடு தேடியது. கல்யாண வேலைகளுக்கு நடுவே அவர்கள் பேசி கொள்ள நேரமே கிடைக்கவில்லை. ஆனாலும் பார்வை பரிமாற்றங்கள் மட்டும் அவ்வப்போது நடந்தது.
அடுத்து ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி. இதில் கேட்டல், நுகர்தல்,பார்த்தல் என மூன்று சுற்றுகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் என்றும் அறிவித்தனர்.
முதலில் கேட்டல் சுற்று.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவே திரை ஒன்று அமைக்கப்பட்டது. அனைத்து வயதினரும் ஜோடிகளாய் கலந்து கொள்ள வேண்டும். முதலில் பெண் ஒருவர் வந்து ஹலோ என்று சொல்ல வேண்டும். அந்த குரலின் சத்தத்தை கேட்டு அவரின் இணை தேடி வர வேண்டும். மனைவியின் குரலை கண்டுபிடித்து நிறைய ஆண்கள் வெற்றி பெற்றனர். அவர்கட்கு பரிசும் வழங்கப்பட்டது.
அடுத்து நுகர்தல் சுற்று
பெண்கள், அங்க அனைவரும் மொத்தமாக முதலில் நிற்க வைக்கப்பட்டனர். பின் ஆண்களின் கண்களை மட்டும் கட்டிவிட்டனர். பெண்கள் வரிசையாக நின்றனர். ஒவ்வொரு ஆணாக அனுப்பப்பட்டனர். தங்கள் மனைவியின் வாசத்தை அறிந்து அவர்கள் முன் சென்று நிற்க வேண்டும். அவ்வளவு தானே , இதில் என்ன கஷ்டம் என அனைவரும் நினைத்தனர். ஆனால் நடந்து போகும் பாதையில் ஒரே மாதிரி வாசத்தை நுகர்ந்த்ததில் சிலர் தடுமாறினர்.
இதில் இரு ஆண்கள் ஒரே பெண்ணின் எதிரில் சென்று நின்றுகொண்டு வாக்குவாதம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
என் பொண்டாட்டி யாருனு எனக்கு தெரியாதா, மற்றவர் நான் தானே இந்த சென்ட் வாங்கி கொடுத்தேன், எனக்கு தெரியாதா என சண்டை. சில நிமிடம் சென்று அங்கே சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. இவர்களோ புரியாமல் நின்றனர். எதிரில் நின்ற பெண்ணுக்கு அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை. ஏனெனில் ஒருவர் அந்த பெண்ணின் சகோதரன், மற்றவர் சித்தப்பா.
இவ்விரு ஆண்களின் மனைவிகள் தான் பல்லை கடித்து கொண்டு நின்றிருந்தனர். நிற்கிறது எருமை, இதிலே பெருமை என அவர்கட்கு கோபம். வீட்டுக்கு வா, இன்னைக்கு இருக்கு கச்சேரி என பொருமி தீர்த்து விட்டனர். இந்த சுற்றிலும் சில ஜோடிகள் வெற்றிபெற்று பரிசு பெற்றனர்.
அடுத்து பார்த்தல் சுற்று.
இந்த சுற்றில் பெண்கள் மட்டும் முதலில் திரைக்கு பின்னால் சென்று நிற்க வேண்டும். பின் ஆண்கள் அவர்களின் கால் விரல்களை மட்டும் பார்த்து கண்டு பிடிக்க வேண்டும்.இந்த சுற்றில் நிறைய பேர் வெற்றி பெற்றனர். மெட்டியின் டிசைன் வைத்தும், கால் விரல் நகப்பூச்சு பார்த்தும் கண்டுபிடித்து விட்டனர். காலை அமுக்கி விடும் போதும், வீழும் போது பார்க்கும் கால்கள் தானே. அதனால் கண்டுபிடித்து விட்டனர் போலும் .யார் அறிவர் அந்த கதையை.
பின் மூன்று சுற்றிலும் வெற்றி பெற்ற ஜோடிகளுக்கு மட்டும் இறுதி சுற்று நடைபெற்றது. இருவரிடமும் தனி தனியாக வினாக்கள் கேட்கப்பட்டன. ஒரே விடை அளித்து வெற்றி பெற்றவர்கள் சிறந்த ஜோடிகள் என அவர்கட்கு பரிசும் வழங்கப்பட்டது.
காலையில் இருந்து போட்டிகள் மதியம் வரை நடைபெற்றது. அடுத்து சிலர் ஓய்வுக்கு சென்றுவிட்டனர். எஞ்சிய சொந்தங்கள் அந்த ஹாலில் அமைந்து அரட்டை கச்சேரி ஆரம்பித்து விட்டனர். இதற்கு நடுவே பலமாய் விருந்து உபசாரம் நடைபெற்றது .
நான்கு மணி வரை ஆட்டம், பேச்சும் என உறவினர்கள் கலகலப்பாய் மகிழ்ந்தனர். பின் அனைவரும் மேலே தங்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று உடை மாற்றி அலங்கரித்து வந்தனர். பிரியா பில்டர்ஸ் ஊழியர்களும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். இருபக்க சொந்தங்கள் மட்டுமின்றி நண்பர்கள், நிறுவன பணியாளர்கள் என , தொழில் முறை பங்குதாரர்கள் என கூட்டம் அலைமோதியது.
லைட் ரோஸ் கலர் லெஹெங்காவில் வைரமும்,பிளாட்டினமும் மேனியெங்கும் ஒளிவீசிட மங்கை நின்றிருந்தாள். அவள் அழகிற்கேற்ப இவனும் அடர் நில நிறத்தில் கோட் சூட் அணிந்திருந்தான். கழுத்தில் இளம் தாமரை மொட்டுக்கள் மாலையாய் மணம் பரப்ப அழகே உருவான ஜோடி பொருத்தத்தை கண்டு அனைவரும் ரசித்தனர். வைர மோதிரத்தினை இருவரும் மாற்றி கொள்ள கோலாகலமாய் நிச்சயதார்த்த நிகழ்ச்சி துவங்கியது.
மேடையேறி சொந்தங்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, கை குலுக்கி, புகைப்படம் எடுக்க தொடங்கினர். அபியின் பள்ளி, கல்லூரி நண்பர்கள் ஆர்ப்பாட்டத்துடன் மேடையேறினர் .
அதில் ஒருத்தி ஏண்டி அபி, ஒரு வார்த்தை கல்யாணம்னு எதாவது சொன்னியா, திடிர்னு குரூப்ல மெசேஜ் அனுப்பி போன் பண்ணுற. தீபிகா மாப்பிள்ளை போட்டோ ஆவது காட்டினாள். நீ கமுக்கமா இருந்து சாதிச்சிட்ட. ஏன் எங்கட்ட சொல்லமாட்டியா என சண்டை போட்டாள்.
நிஜமா தெப்பக்குளம் வந்தப்ப கூட எனக்கு கல்யாணம்னு தெரியாதுடி. இவரு லண்டன்ல இருந்து வந்தா முடிஞ்சா இந்த வருஷம் நிச்சயம் மட்டும் பண்ணலாம்னு தான் அம்மா சொல்லி இருந்தாங்க. அதான் உங்கட்ட நான் முன்கூட்டி எதுவும் சொல்லல. இப்போ திடிர்னு கல்யாணம் வச்சிட்டாங்க. சாரிப்பா என்றாள் .
சரி விடு, ஒரே நாள்ல ரெண்டு பேரும் மேரேஜ் வச்சா நாங்க என்ன பண்ணமுடியும். அதான் இன்னைக்கு இங்கே வந்துட்டோம். நாளைக்கு அவ மேரேஜ் போய்ட்டு அப்படியே அவுட்டிங், சினிமானு ஜாலியா சுத்த போறோம் , உனக்கு புக் பண்ண டிக்கெட் தான் வேஸ்ட் ஆகும், அதுக்கு ஒரு ஆள் இனி தேடணும் என்றாள் மற்றவள் .
ரெண்டு மணிக்கு தானே ஷோ. வேணும்னா நான் மணப்பெண் கோலத்தில் உங்களோட சினிமாக்கு வரேன் . கல்யாண பொண்ணு சினிமாவுக்கு வந்தாள் அப்படினு ஒரு போட்டோ போட்டு ட்ரோல்ல விடுவோம். எவ்ளோ நாள் தான் எக்ஸாம் எழுத, வோட்டை போடன்னு ட்ரோல் பண்றது. நம்ம வித்தியாசமா பண்ணுவோம் என்றாள் அபி.
அம்மா தாயே, ஆளை விடு. ஏற்கனவே உங்க அம்மா அனுப்பமாட்டாங்க. திட்டுவாங்க. இப்போ உன்னை கூட்டிட்டு போனா மாம்ஸ் எங்களை கல்லால் கூட அடிச்சி விரட்டுவாங்க. தேவையா எங்களுக்கு. , அடி வாங்க
எல்லாம் தெம்பில்லாம என்று அவளின் நண்பர்களும் கலாய்த்தனர்.
இவர்கள் பேச்சை எல்லாம் சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தவன் , வேணும்னா அபி கூட நானும் வரேன். பட் ஒன் கண்டிஷன், நீங்க யாரும் வரக்கூடாது, நாங்க மட்டும் தான் போவோம் சரியா என்று சரிக்குசரி அவர்களுடன் அவனும் வாயாடினான்.
அம்மாடி, ஏன் மாம்ஸ் இப்பவே எங்களை கழட்டி விடுறிங்க. நீங்க இவளை ஊர்க்கு கூட்டிட்டு போனா சுத்தமா அனுப்ப மாட்டிங்க போல .
அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீங்க எப்பவேணா எங்க வீட்டுக்கு வரலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.
ஓகே. போக வர டிக்கெட் போட்டு, விசா மட்டும் ரெடி பண்ணி கொடுங்க. எல்லாரும் கண்டிப்பா வரோம் என்றாள் மற்றவள். ஓவென்று கூச்சல் காதை பிளந்தது. பின் அனைவரும் போட்டோ எடுத்து கொண்டு சென்றுவிட்டனர்.
உன் பிரென்ட் எல்லாம் எவ்ளோ வாய் பேசுறாங்க , இப்ப தான் தெரியுது நீ ஏன் வாயாடியா இருக்குறன்னு.
யாரோ நான் பேச மாட்டேன், அமைதியா இருக்கின்றேன்னு சொன்னாங்க, பார்த்திங்களா அதுக்குள்ள நான் வாயாடி ஆகிட்டேன். நான் எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா, போக போக உங்களுக்கு புரியும்.
என் அத்தை பெத்த ரத்தினம், உன்கிட்ட பார்த்து தான் பேசணும் போல.
என்ன பேசினாலும் உங்க அத்தை பேச்சு வருது. நான் மட்டும் அன்னிக்கு ஒரு தடவை அச்சு மாமான்னு சொன்னதுக்கு முகத்தை இறுக்கமா வச்சிட்டு போனீங்க. இவங்க மட்டும் பொழுதுக்கும் அத்தைட்ட பேசலாம், எல்லாரும் அத்தை பொண்ணுட்ட தான் கடலை போடுவாங்க. இங்க அப்படியே உல்ட்டா.
என்னடா பண்றது, எங்க அம்மா பிசினஸ் பார்த்ததால் சின்ன வயசுல அத்தைகிட்ட விட்டுட்டு போய்டுவாங்க. அப்படியே பழகி அவங்கள இன்னும் விட முடியல. டெய்லி பேசி தான் ஆகணும்.
உங்கள அம்மாட்ட பேசாதிங்கன்னு நான் சொல்லவில்லையே, என்கிட்டயும் கொஞ்சம் பேசுங்கனு தான் சொல்றேன். ஒருத்தி மேக்கப் போட்டு இவ்ளோ அழகா வந்து நிற்கின்றாலே எதாவது சொல்லுவோம்னு தோணுச்சா. எனக்கு மட்டும் ஓரவஞ்சனை எதுக்கு.
ஏய், நான் உன்கிட்ட சொன்னா தான் உனக்கு புரியுமா, என் பார்வை புரியாதா?
இவரை பார்த்தே பாத்து நாள் கூட ஆகல, அதுக்குள்ள முகத்தை பார்த்து எப்படி கண்டுபிடிக்க முடியும் பாஸ், இது நியாயமா?
அப்ப என்னை பத்தி உனக்கு எதுவும் தெரியாது, அப்படித்தானே.
எங்க வீட்டுல யார்கிட்ட வேணும்னா கேட்டு பாருங்க, நான் உங்கள பத்தி பேசினது இல்லைனு சொல்வாங்க.
நம்பிட்டேன், நம்பிட்டேன். என்கிட்டயே விடையாடுற, ம்ம்.
நீங்க வேனா உங்க அத்தைகிட்ட கேட்டு பாருங்க, அவங்க சொன்னாத்தானே நம்புவீங்க.
அவங்க யாரும் சொல்லலைனு எனக்கும் தெரியும், ஆனா நீ எனக்கு தெரியாம ஏதோ பண்றன்னு தோணுது , அதை மட்டும் கண்டிபிடிக்கிறேன் , அப்புறம் இருக்கு உனக்கு.
மொத வாங்க பழகலாம் பாஸ், அப்புறம் கண்ணை பார்த்து என்ன மூச்சை வச்சி கூட சொல்றேன். ஓகே யா.
அபி என்ன மேடையில நின்னு குசுசுன்னு பேசிட்டு நிற்கிற, கீழ உட்கார்ந்து எல்லாரும் உங்களை தான் வேடிக்கை பார்க்கிறாங்க. கொஞ்சம் பேசாம இரு, அப்பறம் வாழ்கை புல்லா பேசிட்டே இருக்கலாம் என்றார் பிரியா.
என்னது வாழ்கை புல்லா பேசிட்டே தான் இருப்பாரா? ஒன்னும் பண்ண மாட்டாரா? விளங்கிடும் அபி என மனத்தில் மட்டும் கூறி கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து பந்தி ஆரம்பிக்க தொடங்க கூட்டம் குறைய தொடங்கியது. மீண்டும் அவள் கச்சேரியை ஆரம்பித்து விட்டால் அவனிடம்.
பாஸ், அந்த கடைசி வரிசையில பிளாக் கலர் சர்ட் போட்டு ஒருவர் இருக்காரு பார்த்திங்களா, அவர் எப்படி இருக்கின்றார்?
ம்ம். பையன் நல்ல அழகா, பார்க்க ரிச்சா தெரிகிறார்.
நான் என்ன உங்கட்ட மாப்பிள்ளை பார்க்கவா கேட்டேன். போங்கப்பா , அவங்க அண்ணன் தான் நம்ம ரெண்டு வீட்டு பிசினெஸிலும் டிரான்ஸ்போர்ட் அரேஞ் பண்ணி கொடுப்பாரு. எவ்ளோ அர்ஜென்ட் சொன்னாலும் உடனே வந்துடுவாங்க. என்ன நேர்மையான ரவுடி, அவ்வளவு தான்.
பரவாயில்லையே, இது பத்தி எல்லாம் தெரிஞ்சு இருக்கு. நீ ஸ்மார்ட் தான் ,
ம்ம், தெரியும் தெரியும். இவரு பேரு தான் வருண். என்னை பத்தாவதுல இருந்து போன வாரம் வரை லவ் பண்ணுனவர். ரொம்ப அமைதியான நல்ல பையன்.
ஏதே, உன்னை லவ் பண்ண பையனா, அதை எவ்ளோ அசால்ட்டா என்கிட்டயே சொல்லிக்கிட்டு இருக்க என கோபப்பட்டான்.
மீண்டும் அடுத்த பதிவில் அவளின் கலாட்டா பேச்சில் சந்திப்போம்.
**********************
” உடம்பில்
உறைகின்ற ஓர்
உயிர் போல் உனக்குள்
தானே நான் இருந்தேன்
மண்ணைத்
திறந்தால் நீர் இருக்கும்
என் மனதைத் திறந்தால்
நீ இருப்பாய்
ஒளியைத்
திறந்தால் இசை
இருக்கும் என்
உயிரைத் திறந்தால்
நீ இருப்பாய்
வானம் திறந்தால்
மழை இருக்கும் என்
வயதைத் திறந்தால்
நீ இருப்பாய்
இரவைத் திறந்தால்
பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால்
நீ இருப்பாய்
என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்”
error: Content is protected !!