Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 6 1

அத்தியாயம்                6

இப்படி மகியின் சிறு முக சுளிப்பை கூட காண முடியாத அவனின் தாய் வைதேகி, தன் கடைசி மகனிடம் புலம்பி தீர்த்து விட்டார், ஒன்றே மதியாய் நிற்பவனிடம் என்ன சொல்லி மாற்றுவது என புரியவில்லை அந்த தாய்க்கு.

மேலும் வீட்டில் இருப்பவர்களுக்கு அவனின் திட்டமும் தெரியவில்லை, அதானல் குழப்பம் மட்டுமே வைதேகிக்கு.



Advertisement

அகில், அண்ணன் சொல் தட்டாதவன், ஆனால் ராஜேஷ் அப்படி அல்லவே, அதனால் அவனிடம்தான், தன் வேதனையை சொல்லிக் கொண்டிருந்தார், வைதேகி.

ராஜேஷ்…. தன் அன்னையின் புலம்பல் தாங்க முடியாதவனாக “சரி பார்க்கலாம் ம்மா….. நீயி தூங்கு..” என ஒரு சத்தம் போட்டு விட்டே அந்த அறையிலிருந்து வெளியே வந்தான்.

மணி இரவு 8:30, குழந்தைகள் உறங்கி இருந்ததால், வீடு அமைதியாக இருந்தது. நித்யாவும் துர்காவும் டைனிங் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

Advertisement

ராஜேஷ் எட்டி பார்க்கவும்…. நித்யா “சாப்பிரீங்களா ராஜேஷ்…” என்றாள். நித்யா ராஜேஷை பெயர் சொல்லி தான் அழைப்பது.

Advertisement

“இல்ல அண்ணி…. நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன், நீங்க படுங்க….” என மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டான்.

அகில் தன் அண்ணனின் செல்போன் அலுவலகம் சென்றுவிட்டான். மகி மாலையே, வெளியே சென்றுவிட்டான், வைதேகியும் உணவு உண்டு மாத்திரை போட்டு படுத்தாகி விட்டது.

என்ன செய்வது என தெரியாமல் இருவர் மட்டும் அமர்ந்திருந்தனர். பொதுவாக மேட்டூரில் அகில் 9 மணிகெல்லாம் வீடு வந்து விடுவான். அதற்கு மேல் என்றால் வைதேகி போன் செய்து புலம்பி தீர்த்திடுவார் அகிலிடம்.

Advertisement

ஆனால் மகி அப்படி அல்ல, அவன் வந்தானா வரவில்லையா என கூட தெரியாது வைதேகிக்கு, அப்போதெல்லாம் அவனின் அப்பா கந்தசாமி இருந்த வரை, இந்த கவலை எல்லாம் இல்லை வைதேகியிடம்.

இப்போதும் மகியை தவிர வேறு நினைவே இல்லை அந்த தாயிடம்.

நித்யா, துர்காவிடம் “நீ சாப்பிட்டு போய் படு துர்கா, நான் பாவா வந்ததும்  சாப்பாடு போடுறேன், மதியம் கூட நீ படுக்கல, உடம்ப கெடுத்துக்காத.” என்றாள்

அசையவில்லை துர்கா, “நீங்க போங்கக்கா…. எனக்கு இப்போ தூக்கம் வராது….” என இருவரும் மாறி, மாறி பேசிக் கொண்டே… 10 மணி வரை அமர்ந்திருந்தனர்.

மகியும், அகிலும் சேர்ந்தே வந்தனர், மகி அகிலிடம் “நாளை காலை 10 மணிக்கு வக்கீல் வந்து விடுவார்…. எல்லாம் சரியா இருக்கணும் பார்த்துக்கோ….” என பேசிய படியே உள்ளே வந்தான்.

இருவரும் தங்கள் அறைக்கு சென்று உடை மாற்றி, உணவு உண்ண அமர்ந்தனர். துர்காவும், நித்யாவும் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

அகில் தான் “எங்க ராஜேஷ், தூங்கிட்டானா, சாப்பிட்டானா…” என்க.

“இல்ல வெளியே போறேன்னு சொல்லிட்டுப் போனார் இன்னும் வரல..” என நித்யா பதில் கூற. மகி இது எதையும் காதில் வாங்காமல், உணவு உண்டு கொண்டிருந்தான்.

இருவரும் உணவு முடித்து, ஹாலில் அமரவும், ராஜேஷ் வரவும் சரியாக இருந்தது.

கூடவே, வினோ…. மகியின் நண்பன், ஆலோசகன், வலது கை இப்படி பல பொறுப்புகளை கொண்டவனும் சேர்ந்தே வந்தான்.

வினோ நல்ல நண்பன், அண்ணன் தம்பி மூவருக்கும். மகியின் செட், என்பதால் மற்ற இருவரும் சற்று மரியாதையுடன் தான் பழகுவார்கள்.

துர்கா “வாங்க வினோ, சாப்பிடுங்க இரண்டு பேரும்” என கூறி உள்ளே செல்ல.

“இல்ல அண்ணி நாங்க சாப்பிட்டோம்…” என ராஜேஷ் சொன்னன்.

துர்காவிற்கு, வினோவை இங்கு பார்த்ததும் வயிற்றில் புளியை கரைத்தது. எப்போதும், சகஜமாக வீடு வருபவன் இல்லை. மகியிடம் எது என்றாலும் போனில் தான் பேச்சு.

ஒரே ஒரு முறை இந்த கார் ஷோ ரூம் ஆரம்பிக்கும் போது, ஏதோ போர்மளிடீஸ் சிக்னேச்சர், துர்காவிடம் வாங்குவதற்காக வந்தான். அவ்வளவே.

மகியின் எல்லாம் அறிந்தவன். மகியில் பாதி அலட்சியம் இவனிடமும் இருக்கும். அப்படிப்பட்டவன் இப்போது எதற்கு ராஜேஷுடன் வரவேண்டும் என யோசனை.

ஆக அண்ணன் தம்பிகள் எல்லாம் சேர்ந்து தன்னை, பிரிக்க போகிறார்கள் என நினைத்து விட்டாள் துர்கா.

தன் கணவனை பார்க்க, அவன் எப்போதும் போல் இவளை பார்க்க கூட இல்லை. அவன் ஏதாவது சொல்வான் என நினைக்க. இல்லை, வாயே திறக்கவில்லை.

திடுமென அகில், துர்காவையும் நித்யாவையும் பார்த்து “நீங்க போய் சாப்பிட்டு வாங்க இரண்டு பேரும், கொஞ்சம் பேசணும்…” என்க.

துர்கா மொத்தமாக சிதறிப் போனாள். ‘என்னை வெளியே அனுப்பும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள் போலவே, இப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டனர்’ என மிரண்டு தான் போனாள்.

உள்ளே சென்றுவிட்டாள். பின்னோடு நித்யாவும் சென்றாள். நித்யாவிற்கே இந்த ஏற்பாடுகளை பார்த்து ஒரு பயம் வந்தது. அப்படி இருக்க துர்காவை கேட்பானேன்.

நித்யா, துர்காவிடம் காரமாகவே பேசினாள் “இங்க பாரு…. என்ன அழுகை, இப்படியே இருந்தால், அவங்க அப்படிதான் பேசுவாங்க. நீ போய் சொல்லு, எதுவாய் இருந்தாலும் மகி பாவா பேசட்டும் என” என்றாள்.

துர்கா “எப்படி க்கா, நான் அப்படி சொல்வேன்…. என்னக்கா  நடக்குது இங்க, என்னை ஏன், எல்லோரும் போன்னு சொல்றாங்க” என நித்யாவின் மடியில் சாய்ந்து ஒரே அழுகை.

துர்கா நிமிரவே இல்லை. அழுது, அழுது ஓய்ந்து போனாள். நித்யா என்ன சாமாதானம் சொன்ன போதும் நிறுத்தவில்லை.

கடைசியாக, “மகிபாவா பொண்டாட்டி இப்படி இருந்தா எப்படி, அது தான் உன்னை பாவா பார்க்கவே மாட்டேன் என்கிறார். நீ உன் புருஷன் கிட்ட தான் பேசுற, புரியுதா, அவர் கிட்ட மட்டும் பேசு, அங்க வந்து, அவர் எது சொன்னாலும் தலை ஆட்ட கூடாது” என ஒரு மிரட்டு, மிரட்டி தான், வெளியேக் கூட்டிச் சென்றாள்.

அப்படியாவது புருஷனும் பெண்டாட்டியும் பேசிக் கொள்ளட்டும் என்று தான்.

உணவுவை இருவரும் உண்ணவில்லை. அதனால் ஒரு பெரிய டம்பளரில் பூஸ்ட் போட்டு எடுத்து வந்து, குடிக்க கையில் கொடுத்து, தானும் குடித்து தான் சென்றனர் இருவரும்.

அங்கு ஹாலில் ஏதேதோ பத்திரமெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். அகில், துர்காவின் தம்பி கீர்த்திவாசனுக்கு போன் செய்து வர சொல்லி இருந்தான்.

கீர்த்திவாசன் வேறு அவசர அவசரமாக வந்தான், துர்காவை காணாததும்  பயந்தே போனான். இப்போது தான் நித்யாவுடன் வரவும் சற்று ஆசுவாசம் ஆனான்.

மகி எதிலும் கலந்துக் கொள்ளவில்லை ‘எல்லாம் தன் சொல்படி தான் நடக்கிறது’ என ஒரு மேற்பார்வையாலனாக மட்டுமே இருந்தான்.

துர்கா அங்கு வரவும், அவளை அனைவரும் ஒரு பார்வை பார்த்தனர். ராஜேஷ் தான்…. “என்ன இப்போ, எதுக்கு எல்லாம் வந்திருக்கீங்க…” என கோவமாக ஆரம்பித்தான்

ஏன்னெனில் ராஜேஷுக்கும் எதுவும் சொல்லப்படவில்லை, ராஜேஷ் அப்போது வெளியே சென்ற போது, தன் அன்னையின் புலம்பல் தாங்காமல் வினோவிடம் கேட்கலாம் என தான் சென்றான், தன் அண்ணனின் கார் அலுவலகத்திற்கு.

பிறகு வினோவே “எல்லாம் சொல்றேன்” என இங்கு கூட்டி வந்து விட்டான்.

நித்யா தான் “இங்க பார், பாவா உனக்கு வேணுமா, வேண்டாமா….. நீயே முடிவு பண்ணிக்கோ…. பேசு, யார் இருக்காங்க பார்க்காத, இது உன்னோட வாழ்க்கை. நீயும் பேசு, அவரையும் பேச வை. அவர் பேசாம நீ விடாத.” என ஒரு ஓரமாக நின்றிருந்த துர்க்காவிடம் பேசிக் கொண்டிருந்தாள், அவளை உருவேற்றிக் கொண்டிருந்தாள். நல்லதற்காக.

இயல்பிலேயே துர்கா சற்று வெகுளி தான், ஆனால் ஏமாந்தவள் அல்லவே அதனால் பிடித்துக் கொண்டால், ‘மகியின் பெண்டாட்டி இப்படி இருக்கலாமா’ என்ற வார்த்தையை.

துர்கா, தன் கணவன் முன் பேசியதே இல்லை எனலாம், எப்போதோ கல்யாணம் ஆனா புதிதில் அவன் கண் பார்த்துப் பேசிய நினைவு. ஆம், அது கூட நினைவு தான்.

அதனால் ஒரு பயம் எப்போதும் உண்டு. அதெல்லாம் விழுங்கி கண்களை துடைத்துக் கொண்டு, அமைதியாகவே நின்றாள்.

ராஜேஷின் பேச்சுக்கு, பதில் பேச்சாக வினோவேத் தொண்டையை சரி செய்துத் தொடங்கினான் “இங்க பாரு துர்க்காம்மா… நான் சொல்றத பொறுமையா கேள், இது மகியின் சார்பா உன்னிடம் பேசுகிறேன்…..” என தெளிவாக கூறி, மகியின் தற்போதைய நிலை குறித்து விளக்கினான்.

அவன் குடும்பத்தையும், சொத்துகளையும் பாதுகாக்கவே இந்த முடிவு என்பதையும் சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!