Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 1

ஹரே கிர்ஷ்ணா..

தாழம்பூ வாசம்  நீ…..

1

ப்ளீஸ்…. லிங்கா…..



Advertisement

நா… நான் உன் லவ்வர் இல்ல…

ப்ளீஸ்என சுற்றிலும் கண்களை சுழல விட்ட படி கிட்ட தட்டக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.. ஸ்வப்னா.

இன்னும் யாரும் வந்திருக்கவில்லை கொஞ்சம் நிம்மதி வந்தது.. அந்த பெரிய கண்களில்..

Advertisement

ஆனாலும், சத்தமில்லாமல்ஏனோஎனக்கு, இந்த லிங்காவை பிடித்து தொலைக்கிறதுஎன வலியுடன் நினைத்துக் கொண்டாள்.. இன்றும். எல்லோராலும் எல்லாவற்றையும் சொல்லி விட முடியாதுதானே..

Advertisement

ம்.. 

இப்போது.. அவனும், அவளின் சொல்லுக்கு எல்லாம் கட்டுப்பட்டு நிற்கவில்லை.. எப்போதும் போலஅவளின் தோளில் சாய்ந்து கொண்டான்

கோவம் தலைக்கேறியது ஸ்வப்னாக்கு “போடா.. என சொல்லி எழுந்து கொண்டாள்.. 

Advertisement

ஆனால்…. உள்ளுக்குள் அவனிடம் ஒரு மயக்கம்தான் அவளுக்கும்மனமெல்லாம்அவனிடமே நிற்கிறதுஆனாலும், எனக்கு திருமணம்நிச்சயம் ஆகிவிட்டது… 

இன்னும், இவன்.. என்னை பிடித்துக் கொண்டிருந்தால்…’ என ஆற்றாமை எழுந்ததுஅவளுள்..

கண்ணில் நீர் கரகரவென இறங்கசொல்லிட்டேன்உனக்கும் எனக்கும் ஒத்து வராதென்று…. புரிந்து கொண்டால் தானே… 

ஏதோநான், அவனை காதலித்து ஏமாற்றியது போல இருக்குகொஞ்சம் கூட சங்கடமே படாமல் பின்னாடியே வருகிறான்

ச்சு…. போடா….’ என மனதில் அவனை நினைத்து கொண்டே.. தன் பிங்க் நிற சல்வாரை நீவிய படியேஎழுந்து கொண்டாள்.. ஸ்வ்ப்னா

தன் அரியாசனம் பறிபோன தவிப்பில்கோவமாக எழுந்தான் லிங்கா… “இப்போ எதுக்கு இந்த அரேஞ்ச்மெண்ட் எல்லாம்..

நீ இங்கதானே வரபோற…” என்றான் சலிப்பான கிசுகிசுப்பான குரலில்..

கண்களை அவனுக்கு மறைத்த படியே.. “போ  டாசீக்கிரம் கல்யாணம் செய்துக்க…” என்றாள்.. அவளும் சின்ன குரலில்..

 

[the_ad id=”6605″]

 

 

 

அதான் 

அதுக்குதான்.. என் கூட வந்திடுன்னு சொல்றேன் கேட்கமாட்டேங்கிற… 

பெரிய கல்சர்…. ட்ரெடிஷன்

இதெல்லாம் பெரிய விஷயமா சொல்ற

ம்ன்னு சொல்லு, நான் பொண்ணு கேட்கிறேன்.. டா

என்னோட காதலை மட்டும் எப்போதும் நீ மதிக்கறதே இல்ல

ப்ளீஸ்..

ஸ்வப்னா….” என்றான் இறங்கிய குரலில்ஆயிரத்து எட்டாவது முறையாக.. அலங்கார வார்த்தைகள் பாதியும்.. தன் விருப்பம் மீதியுமாக கேட்டான்..

ஸ்வப்னாக்கு இதை கேட்டு கேட்டு…. வெறுத்து விட்டது…. ‘இது இப்படிதான்என முன்பே முடிவு செய்து விட்டவளது மனதுஇவனின் வார்த்தைகளில் சற்றும் பின் வாங்கவில்லை.. எனவே கோவம், வெறுப்பும் சேர்ந்த குரலில்..

முடியாது, லிங்கா…. 

நான் எப்போதும் ஒரே மாதிரி தான், இருக்கேன்….

நீதான், இப்போ எல்லாம் மாத்தி மாத்தி பேசுது….” என்றாள்மூக்கு நுனி சிவக்ககோவமாகஆனால், அவன் மேல் உள்ள ஈர்ப்பை மறைத்த படி

ஆம், அவள்…. ஒரு மார்வாடி பெண்இப்போது இந்த ஆறு மாதமாக லிங்காவை இம்சிக்கும் வட நாட்டு வஞ்சிஅவன் பாஷையில்

இன்று ஊருக்கு செல்கிறாள்…. படிப்பு முடித்து.. போதிய அளவு தொழிற் பயிற்சி பெற்று.. கிளம்புகிறாள்.

ஸ்வப்னாவிற்கு, பெங்களூரில் அவளின் குடும்பம் இருக்கிறது.. எல்லோரின் பெற்றோரும் தொழில் முறையில் பழக்கம் என்பதால்.. ஸ்வப்னா இங்கு சுதந்திரமாகவே தொழில் கற்றாள்.

எல்லாம் லிங்கம், வரும் வரைஅதன் பின் எல்லாம் மாறிற்று.

மாற்றிவிட்டான், எல்லாவற்றையும் மாற்றிவிட்டான்.. அவனை சார்ந்திருக்ககொஞ்ச கொஞ்சமாக பழக்கினான்

அது இயல்பாகவும் நடந்தது.. தனியே வீடு எடுத்து தங்கியிருப்பதால்.. தேவையான நேரத்திற்கு அழைத்து வர.. கம்பெனிக்கு கூட்டி செல்ல என இவனை எதிர்பார்க்கும் பெண் மனது.

அதை அறிந்தது போல, அவனே வந்து நிற்பான்.. அதுதான் லிங்கத்திடம் மிகவும் பிடிக்கும்.. ஸ்வப்னாக்கு. வேணும்ன்னு, கேட்பதற்கு முன்பே செய்யும் குணம், அவளை ஈர்க்கும்

ம்.. அதுவும், தன்னை கண்டால், அவன் கண்ணில் தெரியும் மயக்கம்… 

ப்பா.. 

அதை கர்வமாகவே உணர்வாள்.. அவனின் ஸ்வப்னா..

சகல சம்பத்துடன்.. ஆறடியில்.. மயங்கி நிற்கும் ஆண் மகனை பிடிக்கவில்லை என சொல்ல வேண்டியிருப்பது..  அவளுக்கும், பெரிய சங்கடம்தான்.. 

ஆனால், பெற்றோரின் நம்பிக்கை என்ற ஒன்றுக்கு முன், லிங்கம் சற்று கம்மியாகவே தெரிந்தான் போல

இப்போதும் அதே மயக்கத்தை கண்ணில் தாங்கி நின்றான், ஏதேதோ.. பழைய நினைவுகளுடன்.. லிங்கா..

$%$%$%$%$%$%$%$%$%$

அப்போதுதான் லிங்கமும் படிப்பு முடித்து வந்திருந்தான்..

முதல் முதலாக ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறான்தன் அண்ணனுடன். ஜெல் வைத்து படிய வாரிய அடர் சிகை.. ஒரு டிஷர்ட் அவ்வளவுதான்.. 

சும்மா பழைய நண்பர்களை, தொழில் முறையில்.. எல்லோரையும் சந்திப்பதற்கான வாய்ப்பாக நினைத்து அவனின் அண்ணன் அழைத்து வந்திருந்தான்தம்பியும் தட்ட முடியாமல் வந்திருந்தான்.

பெரிய விருந்து.. கொங்கு மண்டல அரசியல்வாதியின் ஆர்பாட்டமான விருந்து.. சொல்லவே வேண்டாம்.. பிரம்மாண்டமாக இருந்தது விருந்து.. 

அண்ணன் இளங்கோவன்..

அங்குதான் ஸ்வப்னாவை பார்த்தான் லிங்கா.. அவர்களின் குடும்பத்துடன் வந்திருந்தாள்.. சும்மா வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவன், பார்க்கும் போது. ஆனாலும், ஈர்த்தாள்..

இளங்கோ, அப்படியே ஆங்காங்கே நின்று பேசிய படியே வரலிங்கத்திற்கு அவள் மட்டுமே தெரிந்தாள்… 

யாரோ கை பிடித்து அழைத்து சென்றது போல.. அவளின், அருகில் சென்று அம்ர்ந்தான்.

இருவருக்கும், அவ்வளவாக யாரையும் தெரியாததால்.. இருவரும் தங்களை தாங்களே அறிமுகம் செய்து கொண்டனர்.. அதன் பின் நேரம் சென்றதே தெரியவில்லை.. இருவருக்கும்.

அவளின் நளினம்தான் அவனை, முதலில் ஈர்த்தது…. 

அழகான ஜீன் டிஷிர்ட்டில்தான் இருந்தாள்கண்ணாடியென மேனி.. கண்கள் பளபளக்க…. தன்னுடன் பேசியவளை பார்த்துக் கொண்டேயிருந்தான் லிங்கா..

அவனுக்கு அப்போதே புரிந்தது போலஇவளை சாதாரணமாக என்னால் விட முடியாது என.. அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.. 

நயாகரா நீர் வீழ்ச்சி தன்னிடம் மட்டும் பேசியது போல ஒரு பிரமிப்பு அவனிடம்..

 

[the_ad id=”6605″]

 

 

 

அண்ணன் தொழில் முறையில் எல்லோரையும் பார்த்து முடித்து, தம்பியிடம் வந்தால்.. தம்பி, வறுகடலையில் இருந்தார்.. 

பெண் யாரென பார்க்க.. ஸ்வப்னா. இளங்கோக்கு தெரியும்.. அவர்களின் குடும்பத்தை.. எனவே அருகில் செல்ல.. 

ஸ்வப்னாவும், இளங்கோவை பார்த்து.. “ஹை, இளங்கோ சர்..” என்றாள்.

இப்போது, அவளின் அண்ணன் அனுப்குமார் வர.. 

ஹாய்.. ஸ்வப்னாஹை அனுப் ஜிஎன்றான், இளங்கோ பொதுவாக..

அனுப்எப்படி இருக்கீங்க இளங்கோ.. இது..” என்றார், லிங்கத்தை பார்த்து..

இளங்கோஎன் தம்பி, இப்போதான்.. ஜெர்மன்னிலிருந்து.. வந்திருக்கான்..” என முறையான அறிமுகம் நடந்தது இரு குடும்பத்திற்குள்ளும்.. 

ஆனால், லிங்கத்திற்கு மட்டும் புது வழி பிறந்தது போல.. ஆர்வமாகவே பேசினான் அவர்களிடம்.

அப்போதே அவளின் எண் வாங்கிக் கொண்டான்.. சற்றும் தயக்கமில்லாமல் பேச தொடங்கினான்.

இப்படிதான் அவர்களின் நட்பு வளர்ந்தது.. அவளுக்கு நட்பு, இவனை பொறுத்தவரை.. காதல்..

தினமும் அவளை தொடர்ந்தான்.. எங்கு செல்கிறாள்.. என்ன படிக்கிறாள்.. எங்கு இருக்கிறாள்.. எல்லாம் பார்த்துக் கொண்டான்..

பின் மெதுவாக அவளை நெருங்கினான். ஆனால், அவள் விலகியேதான் இருந்தாள்.. ‘முடியாதுஎன. ஆனால், நண்பனாய் நெருக்கமாகதான் வைத்திருந்தாள்.. லிங்கத்தை.

எனவே.. துரத்துகிறான் இந்த ஆறு மாதமாகஸ்வப்னாவை. ஆனால், ஸ்வப்னா ஒத்துக் கொள்ளவில்லை இன்று வரை….

ஆனால், இவன் இன்னமும் அவளை கரைத்துக் கொண்டிருக்கிறான்ரோமியோ போலஎன்னை பார்த்து சொல்லு, என் கண்ணை பார்த்து சொல்லு என

அதுவும், ஸ்வப்னா பழக்கமான இரண்டாம் மாதம், அவளின் கசின் திருமணம் என அழைத்திருந்தாள்.. 

இங்கே பெங்களூரில்தான், சென்று வந்தான்.. லிங்கம்… 

ம்மொத்தமாக தொலைத்து வந்தான் தன்னை.

அது முதல்…. இன்னும் பித்தாகி நிற்கிறான்அவளை ட்ரடிஷனல் உடையில் பார்த்து விட்டு கண்களை திருப்ப முடியாமல் அவதிபட்டான் லிங்கா..

அவனுக்கே.. கூட பல சமயம் தோன்றும்இவ்வளவு! வழிசலாடா நீஎன அப்படி ஸ்வப்னாதாசனாக நிற்கிறான்.. லிங்கம்.

எப்போதும்ட்ரீமி…. ட்ரீமி…. “ என அவளிடம் உளற தொடங்கினான்

அப்படி ஒரு மயக்கம் அவளின் அழகில்…. அதுவும் அவளின்  நிறம் தொடங்கி, நககண் வரை புகழ்வான்.. 

வெண்ணைய்யில் கடைந்தெடுத்த சிற்பம் என்பான்…. 

அந்த மூக்குத்தி… “ஹய்யோ…. ஜொலிக்கிதுஎன்பான்…. அவளின் ஒவ்வொன்றுக்கும்.. ரசிகனானான். உடை அழகு, பேசும் தமிழ் அழகு.. என எல்லாவற்றிற்கும் அவன் அடிமையானான்

லிங்கத்தின், கண்ணில் அவளை கண்டாலே மயக்கம் வரும்தன்போல் உளறுவான்…. “பார்த்துக் கொண்டே இருக்கலாம் டிதாஜ்மகால் மாதிரி..

அப்டியே…. கடிச்சி சாப்பிடற ரசகுல்லா டி நீ…” என அடிக்கடி சொல்லுவான்

ஸ்வப்னாஇதுதான்.. இதுதான்.. உங்கிட்ட.. 

புரியுதா.. 

எனக்கு நீ ஒத்து வர மாட்ட லிங்கா

பாரு.. அப்படியே மடிச்சி கைகுள்ள வைச்சிக்கிற.. இல்ல கடிச்சி சாப்பிடனும்ன்னு நினைக்கிற..” என்பாள் அலட்டாமல் பிள்ளை தமிழில்..

ஆனந்தமாக சிரிப்பான் லிங்கம்..

எப்போதும் போல மூக்கு சிவந்து போகும் அவனின் ட்ரீம்ஸ்க்கு..

உனக்கு ஒரு காரணம், என்னை ரிஜெக்ட் செய்யஎன்பான், அவனும். ஏனோ.. அவளிடம் மட்டும் கோவமே வராது அவனிற்கு.

அவள், ஆசையாக எந்த ஸ்வீட் உண்டாலும் முதலில் லிங்காதான் கிண்டல் செய்வான்ஏன், ரசகுல்லா…. இவ்ளோ கலோரிஸ் சாப்பிட்டும் எப்படிஇவ்வளோ ஸ்லிம்மா இருக்க….” என்பான்கையை உரிமையாய்.. இடையில் படரவிட்ட படி

அவளும்.. ‘பட்டென தட்டி விடுவாள்..’ அதெல்லாம் கண்டுகொள்ளமாட்டான் அந்த ரோமியோ..

அவள் என்ன உடையணிந்தாலும் முதலில் பாராட்டுவதுஇல்லை, இல்லை.. வழிவது இவனாகவே இருப்பான்என்ன ட்ரீமி, கலரு.. 

ஆனா.. உனக்கு மட்டும் எல்லாம் சூட்டாகுது டி…” என்பான்..

நோ ‘டி’ லிங்கா”என இவள் அழுத்தி சொன்னாலும்.. கேட்க்கவேமாட்டான்.. 

இதுதமிழ் கல்சர் டாபழகிக்கோஎன்பான் அதே சிரித்த முகமாக.

ஏனோ, அவளை தனியாக நினைத்ததே இல்லை அவன். பார்த்த நாளிலிருந்து தன்னவளாகவே உணர்வதாலோ என்னவோ.. இந்த உரிமை அவனிடம்..

மீண்டும் கோவமேதான் அவளுக்குஅப்படியும் அவனின் வழிசல்களையும் ரசிக்கவே செய்வாள்.. 

அதனாலோ, என்னவோஅந்த உலகம் அழகாக தெரியும் ஸ்வப்னாக்கு.. இவன் அருகில் இருந்தால்.. சந்தோஷமாக இருப்பாள்.. ஆனால், அவனை விரும்ப முடியாதாம்

$%$%$%$%$%$%$%$%$%$%$

இப்போது ஒவ்வொருவராக வர தொடங்கினர்..

இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தாள்.. ஸ்வப்னா..  

எல்லோரும் சற்று பெரிய இடத்து பிள்ளைகள்இதில் ஸ்வப்னா மட்டும்தான் வெளியூர்ஒருவருக்கு ஒருவர் நன்கு தெரிந்த குடும்பம்….

இங்கே அவள்டிசைனிங் படிக்க வந்திருந்தாள்…. கூடவே, தங்களுக்கு, தெரிந்த கம்பெனியில் வேலையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இது கோவை மாநகரம்அதனை சுற்றியுள்ளதொழில் துறை சார்ந்த இளைய தலைமுறையை சார்ந்த சந்திப்பு.. 

இங்கு எல்லோருக்கும்.. ஏதோ ஒரு வகையில்.. ஸ்வப்னாவின் தந்தையை பழக்கம்.. எனவே எல்லோருக்கும்.. ஸ்வப்னாவை தெரியும்..

இன்று.. ஸ்வப்னாவின், தாய் தந்தை வருவர்.. மகளின் திருமண செய்தி சொல்லுவதற்கு.. ஆனால், அந்த செய்தி.. இன்னும் லிங்கத்திற்கு தெரியாது..

 

பெரிதாக வேலையில்லை அவனுக்கு, எல்லாம் தந்தை, அண்ணன் பார்ப்பதால்.. இவனுக்கு ஊர் சுற்றும் வாய்ப்பு அதிகம்அதனால்தானே ஸ்வப்னாவை சுற்றுகிறான்.

இப்போதுதான் ஜெர்மனில் படிப்பு முடித்து வந்திருக்கிறான்வீட்டிலும் பெரிதாக எதுவும் சொல்லுவதில்லைஅண்ணன் இருக்க கவலையில்லை என, அவனும் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

பார்ட்டி ஸ்டார்டிங் ட்ரிங்க்குடன் தொடங்கியது. ஒவ்வொருவரையாக உபசரிக்க தொடங்கினாள்.. அவனின் ட்ரீமி..

இப்போது, ஸ்வப்னா வேறு டேபுளில் அமர்ந்திருந்த தனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. பார்வை அவளிடமே இருந்தது லிங்கத்திற்கு.

லிங்கத்திடம், வந்து.. நண்பர்கள் பேச்சு கொடுக்கமெல்ல வாய் மட்டும் அசைந்ததே தவிர, பார்வையெல்லாம் அவளிடம்தான்..

இந்த நண்பர்கள்.. தொழில் முறையில் சம்பந்தபட்டவர்கள்.. எல்லோருக்கும் இது தெரியும்.. எனவே அவனின் இந்த ஒட்டல், உரசல்களை யாரும் கண்டு கொள்வதில்லை.

அவர்கள், கண்டுகொள்வதில்லை என்பதை விட.. அதை, லிங்கம் கண்டுகொள்வதில்லைஅதுதான் சரி.

அதுவும் இந்த இடம் அவர்களுக்கு பழக்கமான இடம்எனவே, பெரிய ஹாலில் இந்த பார்ட்டி தொடங்கியது.

லிங்காவை சார்ந்த நண்பர்கள் எல்லோரும் பொறுப்பாக, தங்களது கம்பெனியில் நிர்வாகம் பார்க்க தொடங்கியிருந்தனர்.

ஸ்வப்னாவிற்கும் எல்லோரும் பழக்கம்எனவே, எல்லோரும் ஸ்வப்னாவை, பாராட்டி பேச தொடங்கினர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

லிங்கா, தங்களது மில்லுக்கு பொறுப்பாக செல்வதில்லையே தவிர, எப்போதாவது செல்வதுண்டு.. 

எனவே, அந்த சத்தத்தில் கலைந்தான்.. அப்போதுதான்.. அனுப்குமார் உள்ளே வந்தார்.. தன் மனைவியுடன். கூடவே, அவர்களின் தாய் தந்தை.. என எல்லோரும் வர..

இப்போது லிங்கம் பரபரப்பாக எழுந்து நின்றான்.. 

எல்லோரையும் முறையாக வரவேற்றபடி உள்ளே வந்தனர்..

அனுப்குமார், ஸ்வப்னாவை அழைத்தார்.. அந்த பார்ட்டி ஹாலின் மத்தியில் இருவரும் நின்றபடி அந்த அறிவிப்பை சொன்னார்கள்..

அனுப்எங்களின் அழைப்பை ஏற்று வந்தமைக்கு நன்றி…” என தொடங்கி.. இதுவரை.. ஸ்வப்னாவை, அவர்களின் தோழி போல் பாதுகாத்ததற்கு நன்றி என்றார்..

அவள் பயிற்சி பெற்ற மில்லை புகழ்ந்தார்நல்ல முறையில் வேலை கற்று தந்ததற்காகநன்றிஎன நீண்ட நன்றிகளை சொன்னார்..

அதில் லிங்காவிற்கும் நன்றிகள் நிறைந்திருந்தது..

கடைசியாக தன் தங்கைக்கு திருமணம் நிச்சயத்திருப்பதாக சொன்னார்

எல்லோரும் கைதட்டி வாழ்த்தினர்.. ஆனால்.. லிங்கத்திற்கு மட்டும் காதுகள் சரியாக கேட்கவில்லை போல.. சற்று ஸ்வப்னாவின் அருகில் வந்து நின்றான். அவளின் இட கையை பிடித்துக் கொண்டான்.

ஆனால், அவள் அவனை பார்க்காதது.. எதோ போலானது அவனுக்கு..

சுற்றி இருந்த எல்லோருக்கும்இவன், வாழ்த்துவதாக தெரிந்தாலும்.. இவனை அறிந்தவர்களுக்குத் தெரியுமே.. என்ன நடக்கிறது என

அந்த இடம், சற்று கிண்டலான பார்வைகளால் தன்னை பார்ப்பதாக உணர்ந்தான் லிங்கம்.. அப்போதுதான் தான், அவளுக்கு அன்னியன் என உணர்ந்தான்.

அவளின் கைகளை இறுக்கி பிடித்துஏன்.. பேபிஇது உண்மையா..” என்றான்..

சிரித்தபடியே எல்லோரின் வாழ்த்தையும் ஏற்றவள்.. அவனின் கைகளை விலக்கிக் கொண்டே இருந்தாள்..

ஆனால், விடவில்லை அவன்.. ஒரு பத்து நிமிடம் சென்று.. யாரும் அருகில் இல்லா நேரத்தில் ஸ்வப்னா.. “என்ன லிங்காஎன்ன வேணும்..” என்றாள்..

என்னை ஏமாத்திட்டல்லசீட்டர்எப்படி கடைசி நிமிடம் வரைக்கும் என்னை முட்டாளாகவே வைச்சிருந்திருக்க

ஒரு வார்த்தை சொல்லல

என்ன, உங்க கல்சர் பையன்னா..

உடனே பிடிச்சிடுச்சா

என்னை விட நல்லவனோ…” என்றான்.. தன் தலையை, மற்றொரு கையால் கோதிய படியே.. 

அவள் படிக்க வரும் போதே.. அவளின் பெற்றோர் சொல்லிதான் அனுப்பினர்.. ‘உன் விருப்பத்திற்காக தான், படிக்க அனுப்புகிறோம்..

அதே போல் எங்கள் விருப்பத்திற்குதான் திருமணம் முடிய வேண்டும்என சின்ன கட்டளையுடன்தான் படிக்கவே வந்தாள்..

வந்த இடத்தில்.. கடைசி ஆறுமாதம் இப்படி.. இவன், வந்து நிற்பான் என எதிர்பார்க்கவில்லை.. ஆனாலும், தேற்றிக் கொண்டாள்.. 

ஆனால், அவனை யோசிக்க மறந்தாளோ.. இல்லை தெரியவில்லையோ..  ஏதோ ஒன்று.. இப்போது.. நேரே கை பிடித்து கேட்பவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை அவளால்..

மீண்டும் அவனே… “என்ன,

உங்க செட்.. ஆஃப் பீப்பிள்அதான், சொன்ன உடனே ஒத்துக்கிட்டியா…” என்றான் கோவமாக

உண்மையும் அதுதான்.. அவள் இன்னும் அந்த நபருடன் பேச கூட இல்லை.. ஆனால், பெற்றோர் பார்த்த ஒரே காரணத்திற்காக ஓத்துக் கொண்டாள்..

ஆனால், அவன் சொன்ன உடன் கோவம் வந்தது அவளுக்குஆமாம்.. லிங்கா… 

நீ வேண்டாம்ன்னு எப்போவோ சொல்லிட்டேன்..

இது எங்க அப்பா அம்மா பார்த்து சொன்னாங்கஅதான்..

நீ எப்போதும் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்.” என்றாள் சற்று கரகரப்பான குரலில்..

யாரு கேட்டாஅத.. போடி, ஏமாத்திட்ட…’ என முணுமுணுத்த படியே.. பிடித்திருந்த அவளின் கையை உதறியவன், யாரையும் கவராமல்.. வெளியே சென்றுவிட்டான்..

 

ஏன் என்னை பிரிந்தாய் உயிரே..

காதலை எரித்தாய்… 

என் அழகே..

ஏன் என்னை பிரிந்தாய் உயிரே.. உயிரே..

கண்ணீரில் உரைந்தாய் கனவே..”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!