Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 2 2

அதற்குள்.. காயம், மருந்துவத் தடயம்.. எல்லாம் பார்த்து இளங்கோ கேள்வி கேட்க.. தாமோதரனும்.. எப்படி விபத்து நடந்தது.. எங்கு.. என பேசிக் கொண்டனர்.. 

இளங்கோ, லிங்கம் வந்தவுடன் “என்னடா.. பார்த்து வர மாட்டியா.. பாரு எப்படி ஆகிடுச்சுன்னு.. இன்னும் வயசு பையன் மாதிரி பொறுப்பில்லாம இருப்பதா.. “ என்றான் கண்டிக்கும் குரலில்..

லிங்கம், தலை குனிந்து.. அமைதியாக அமர்ந்திருந்தான். ‘ப்பா.’ இது போல திட்டிவிட்டால் கூட பரவாயில்லை.. ஏதும் கேள்வியே கேட்க்காமல் இருப்பது சங்கடமாக இருக்கிறது’ என நினைத்துக் கொண்டான் மனதில்.

தாமோதரன் “விடுங்க இளங்கோ.. லேசான அடிதான்..” என ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.. இளங்கோக்கு மனதே ஆறவில்லை.. தன் தம்பியை முறைத்துக் கொண்டிருந்தான்…



Advertisement

இப்போதுதான் வந்தார் சத்தியமூர்த்தி. நைட் பேண்ட் டி-ஷர்ட்டில், தங்க ப்ரேம்மிட்ட கண்ணாடி அணிந்து.. லேசான வழுக்கை தலையுடன்.. கண்ணில் அலட்சிய பாவம் தாங்கி.. அலட்டாமல் நடந்து வந்தார்.. மனிதர்.

அவர் வருவதைத் தற்செயலாக பார்த்த தாமோதரன் எழுந்து நின்றார்.. தன்போல். அடுத்த வினாடி தன்னையே நொந்து கொண்டார்.. அவர் தானே வரவேற்க வேண்டும்.. நான் ஏன் மரியாதை செய்கிறேன் என நினைத்தார்.

 

Advertisement

[the_ad id=”6605″]

Advertisement

 

 

அதற்குள் சத்தியமூர்த்தி “வாங்க.. உட்காருங்க” என பெருந்தன்மையாக சொல்லி.. தான், முதலில் அமர்ந்தார். 

Advertisement

பார்த்த தாமோதரனுக்கு உள்ளுக்குள் அவரை, ரசிக்காமல் இருக்க முடியவில்லை ‘என்னா… கெத்து..’ என நினைத்த படியே, தலையசைத்து அழைப்பை ஏற்று, அமர்ந்தார்.

அப்போது காமாட்சி.. வீட்டு இல்லத்தரசி, கையில்.. ஏதோ குடிக்க எடுத்து வந்தார்.. அவரும், தாமோதரனை வரவேற்று குடிக்க கொடுத்து.. விபத்து, காயம்.. அதனை தொடர்ந்து நடந்தது.. என எல்லாம் கேட்டு.. இப்போது உடல்நலம் எப்படி இருக்கு..’ என விசாரித்து உள்ளே சென்றார்.

இதை எல்லாம் சத்தியமூர்த்தி.. அமைதியாக பார்த்திருந்தார் ஏதும் பேசவில்லை, தன் மகனை கடியவில்லை.. அமைதியாக பார்த்திருந்தார். 

அதனை அப்படியே உள்வாங்கினார் தாமோதரன்.. ‘இந்த திமிருதான்யா… இந்த கெத்து தான்யா… வரல.. எங்களுக்கு. பதவி.. பணம்.. எல்லாம் இருக்கு, ஆனா இந்த கெத்து வேணும்.. கத்துக்கணும்..’ என நினைத்து அமர்ந்திருந்தார்.

இவர்கள்.. புது அரசியல்வாதிகள்.. நல்லவர்கள்தான். எனவே, அலட்டாத இந்த சத்தயமூர்த்தி மீது தனி பக்தி, மரியாதை.. எப்போதும் உண்டு அந்த வட்டார அரசியல் தலைவர்களுக்கு. ஒரு ரசனையுடன் சத்தியமூர்த்தியை பார்த்துக் கொண்டிருந்தார் தாமோதரன்.

சத்தியமூர்த்தியும் பார்மலாக “உடம்பை பார்த்துகோங்க.. ரெஸ்ட் எடுங்க..” என இரண்டொரு வார்த்தை பேசினார்.. தாமோதரனிடம்.

பின் இளங்கோவும், தாமோதரனும் பேசிக் கொண்டிருந்தார்.. பின் காமாட்சி வந்து, உணவு உண்ண அழைத்தார். 

தாமோதரன் “பரவாயில்லைங்க.. சரியானதும் ஒரு தரம் வரேங்க..” என சொல்ல..

காமாட்சி கேட்கவில்லை.. இளங்கோவும், லிங்கமும் “இப்போ அம்மாக்காக ரெண்டு இட்லி சாப்பிட்டு போங்க.. பையன் பெரிய தப்பு செய்துட்டான்னு நினைப்பாங்க… உங்களை கவனிக்கலைன்னு நினைப்பாங்க.. இட்லிதான்.. சாப்பிட்டு போங்க ” என இளங்கோ சொல்ல, தட்ட முடியாமல் வந்தார். உள்ளே, உண்ண..

சத்தியமூர்த்தி, வரமாட்டார்.. என எல்லோருக்கும் தெரியும். நிறைய கௌரவம் பார்ப்பார். அத்தோடு, இந்த புது பணக்காரர்கள்.. அரசியல்வாதி.. ஜால்ரா.. விளம்பர பிரியர்கள்.. இவர்களை எல்லாம் மனிதர்களாக கூட பார்க்க மாட்டார். பழைய காலத்து நல்லவர். 

பரம்பரை பரம்பரையாக வாழும் குடும்பம்.. அந்த ஊரின் முக்கிய புள்ளி.. எனவே, தன் தராதரம் தெரிந்த ஆட்களிடம் மட்டுமே பழக்கம் வைப்பார். மற்றவர்களை எல்லாம் ஒரு மாதிரி.. பார்வையால், தள்ளி வைத்து.. நகர்ந்து விடுவார். அவர் குணம் எல்லோருக்கும் தெரியும்.. எனவே பழைய ஆட்கள் மட்டுமே பேசுவர்.

இவர்களின் இந்த தொழில் வளர்ச்சி.. எல்லாம்.. இந்த எட்டு ஆண்டுகளாகதான்.. அதாவது, இளங்கோ தலையெடுத்த பின்தான்.. ஏற்றுமதி வரை செல்கிறது. 

சத்தியமூர்த்தி, தொழில் பார்த்த வரை.. எல்லாம் உள்நாட்டு வியாபாரம்தான். வருவதை செய்வார்.. கௌரவமாக இருப்பார். யாரிடமும், எதையும் கேட்டு பெறமாட்டார். அப்படி ஒரு மனிதர்.

எனவே மகன் செய்வது போல.. தொழிலுக்கு, என தனியாக ஆர்ப்பாட்டம் செய்யமாட்டார். எனவே, தொழில் குறித்து.. மகனுக்கும், அவருக்கும் சற்று முரண்பாடு உண்டு.

ஆக, இப்போது எல்லோரும் உண்டனர்.. தாமோதரன் விடைபெற்று கிளம்பினார். அதன் பிறகு சத்தியமூர்த்தி உண்டபடியே தன் இரண்டாவது மகனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

இப்போதுதான் எல்லோரின் பார்வையும் லிங்கத்தின், மேல் விழுந்தது. காமாட்சி “என்ன டா.. ரத்தம்..” என கையை பார்த்து கேட்டார்..

அப்போதுதான் எல்லாரும் பார்த்தனர்.. அதற்குள் மேலிருந்துச் சத்தம்… “என்னங்க… ப்ளீஸ்.. சாதனாவ.. தூக்கி போறீங்களா.. அவன் தூங்கவே மாட்டேங்கிறான்… ” என சத்தம் வந்தது.

இளங்கோ, ஏதோ சொல்லுவதற்குள்.. அங்கு வந்த காவ்யாஸ்ரீ.. “அண்ணி… ண்ணி.. நான் தூக்கி போறேன்..” என சொல்லி.. வந்து வாங்கிக் கொண்டாள் சாதனாவை.

 

[the_ad id=”6605″]

 

 

கீழே வந்தனர்.. அவர்கள் வீட்டின்.. இரு இளவரசிகளும். முதலாமவள் காவ்யாஸ்ரீ.. நிச்சயம் முடிந்து.. அடுத்த  இரண்டாம் மாதம், திருமணம். திருமணத்திற்கு காத்திருக்கும் புதுப் பெண்.

அடுத்து, எட்டு மாதமே ஆனா சாதனா… வீட்டின் எல்லோரின் செல்லம் அவள். “ப்பா.. ப்பா… ப்பா..” என தன் கால்களை உதைத்துக் கொண்டு லிங்காவை பார்த்து தாவியது இப்போது.

காமாட்சி “டேய்.. சட்டைய மாத்திட்டு வந்து.. பிள்ளைய தூக்கு.. ஏதாவது இன்பெக்ஷன் ஆகிட போது.. போ..” என்றார்.

சாதனா.. “ப்பா.. ப்பா..” என தாவ… 

அவளை தாத்தா வாங்கிக் கொண்டார் “வா டா… ம்மா.. அவன் வருவான்… எங்கேயோ விழுந்து, எந்திரிச்சு வந்திருக்கான்.. டிரஸ் மாற்றி வருவான்.. நீ வா டா.. நாம டாட்டா போலாம்..” என தூக்கிக் கொண்டு சென்றார்.

காவ்யா “ப்பா… நான்தான் தூக்கி வந்தேன்..” என சிணுங்க.. 

அவர் “ஆமாம்.. நீ சாப்பிட்டு வந்து வாங்கிக்க…” என சொல்லி வெளியே சென்றார்.. தன் பேத்தியுடன்.

லிங்கம் “அம்மு… சித்தப்பா… குளிச்சிட்டு வரேன்..” என சொல்லி, தன் தந்தையிடம் இருந்தவளை.. அழுந்த முத்தமிட்டு.. மேலே சென்றான்.

இதுதான் அவர்கள் வீடு. சத்தியமூர்த்தி, பார்த்து பார்த்து செதுக்கிய வீடு. அளவான பாசம்.. அளவான செல்வம்.. அளவான ஒட்டுதல்.. என பழைய சிற்பமாக இருக்கும்.

அதை இப்போதுதான் புதிப்பித்துக் கொண்டிருக்கிறான் இளங்கோ. ஆனால் உடையவர், அவ்வப்போது எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்.. அவசர படாதே.. அகலக்கால் வைக்காதே என.. அதை காதில் வாங்குவதில்லை இளங்கோ.

இது பொதுவாக எல்லா வீடுகளிலும் நடப்பதுதான். பிள்ளைகள் இன்றைய கால சூழலுக்கு தக்க தங்களின் வீட்டை வடிவமைப்பது. அதுவேதான் இங்கு நடக்கிறது.

லிங்கம், மேலே சென்று.. தன் சட்டையை கழற்றினான்.. மாலையில்,  செல்லும் போது ஆசையாக அணிந்த புது சட்டை.. மைக்ரோ கட்டமிட்ட ஆலென்சோலி.. புது சட்டை. ‘அவளுடன், இன்று எப்படியும் கைக் கோர்த்து விடுவேன்’ என.. எண்ணி.. வயது பையனாக மாறி.. தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்றான்.

சாரி.. காதலிப்பவர்கள் எல்லோருமே.. யெங் தானே.. இதில் வயதுக்கு வேலையே இல்லையே.. அதனால், லிங்காவும் யெங்தான். 

 

[the_ad id=”6605″]

 

 

இருபத்தி ஏழு வயது. அதிக பொறுப்புகளை சுமக்காத வாலிபத்தின் சாயலை முகத்தில் கொண்ட.. கலையான, காளையவன். எதற்கும் அலட்டியதில்லை.. பெரிதாக ஆசை பட தெரியாது. தேவையானது கிடைக்கும்.. ஓர் இயல்பான வாழ்க்கை முறை. 

அப்போது.. ஆறு மாதத்திற்கு முன்.. ஸ்வப்னா மட்டுமே, அவனை மீறி.. அவனுள் வந்தவள். பார்த்ததும் பிடித்தது.. வெற்றிடத்தை நிரப்பும் காற்றாக.. கள்ளமில்லா அவன் மனதில்.. நுழைந்தாள். 

லிங்கத்திற்கு.. இது சரியா, தவறா.. என யோசிக்க வேண்டிய தேவை இருந்ததில்லையே.. ‘அண்ணன்.. செய்வான்.. அவனிடம் சொன்னால் போதும்.. எனக்கு நடத்தி தருவான்..’ என நம்பிக்கை எப்போதும் போல இதிலும் வந்தது.

எனவே, முதலில்… ஸ்வப்னாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என எண்ணி பொறுமையாக இருந்தான். ஆம், முதலில் நேரே சொன்னான்.. முறைத்தாள்.. விலகினாள்.. 

‘நண்பர்களாய் இருப்போம்’ என்றான். அவளும் ‘சரி’ என்றாள்.. 

ஆனால், லிங்கத்திற்கு, அந்த வார்த்தை ஏதோ.. உற்சாகத்தை கொடுத்தது போல… எப்போதும்.. அவளின் அழகை, அறிவை, செயலை.. என எல்லாவற்றையும் புகழ்ந்து.. ரசித்து சொல்லுவான். மீண்டும் முறைத்தாள்.. லிங்கா, பின் வாங்கினான். பேச்சில் மட்டும்.

ஆனால், எப்போதும் தன் செயலால்.. சொல்லால்.. அவளிடம் தன் காதலை சொல்லிக் கொண்டே இருந்தான்.

பாவம் ஸ்வப்னா.. சொல்லி பார்த்து முடியாமல் அமைதியாகிவிட்டாள்.

மேலும், பெண்ணவளுக்கு.. அது ஒரு கிரக்கத்தை தந்தது.. ‘தான்’ என்ன சொன்னாலும் சிரித்து.. என்ன செய்தாலும் ரசித்து.. நண்பன், என கூடவே சுற்றும் லிங்கத்தை பிடிக்கவே செய்யும்.. 

ஆனாலும், ‘ஏன் டி என்னைப் பிடிக்கலை…’ என இப்போது.. சட்டையை கையில் வைத்துக் கொண்டு, அப்படியே.. அமர்ந்து யோசித்தான் லிங்கா

ஆனால், அவனுக்கு அதற்கான விடை.. தெரியும். அவள், அப்பா அம்மாவிற்கு கட்டுப்பட்டவள்.. என தெரியும், அவனிற்கு. ஆனால், காதல் கொண்ட மனம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது.

சென்ற இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரை.. லிங்கத்திற்கு அசைக்க முடியாத நம்பிக்கை.. ‘தன் காதலை அவள் ஏற்றுக் கொள்வாள்’ என. ஆனால், நான் தனித்துவமானவள் என அவனை ஒதுக்கி விட்டாள்.

காதல், அப்படிதானே.. கண்களை மூடிக் கொண்டு.. நம்பும்.. எல்லாவற்றையும். அதான், நம்பிவிட்டான்.. தன் மேல் உள்ள நம்பிக்கையில், அவளை முழுதாக நம்பிவிட்டான்.. லிங்கேஷ்வரன். 

ஆனால், இது ஒருதலை காதல்… இது இரவு நேர பூபாளமாக, இசைக்காமலே.. போய்விட்டது… தோற்றும்விட்டான்.

“இது குழந்தை பாடும் தாலாட்டு…

இது இரவு நேர பூபாளம்…”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!