Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 5 1

தாழம்பூ வாசம்  நீ…..

5

“அம்மையும் அப்பனும் தந்தா

இல்லை, ஆதியின் வல்வினை சூழ்ந்ததா…



Advertisement

இம்மையை நானறியாததா…

சிறு பொம்மையின் நிலையினில்…

உண்மையை உணர்ந்திட…”

Advertisement

 

Advertisement

லிங்காவிற்கோ, கட்டுக்கடங்கா கோவம்.. தன் அண்ணன் மேல் அமைச்சர் மேல்.. என எல்லோரின் மேலும். மதியம் உண்டு வந்து அமர்ந்தான்.. இன்னமும் அந்த அமைச்சர் பற்றி ஏதும் தெரியவில்லை. 

உதவியாளர், அவ்வபோது புற்றிலிருந்து பாம்பு தலைகாட்டுவது போல எட்டி பார்ப்பார்… லிங்கம், போல் காத்திருந்த எல்லோருக்கும் ஒரே பதிலையே.. வெவ்வேறு.. விதமாக சொலவார் “தோ.. வந்திடுவார் சார்.. போன் எடுக்கல” என்ற பதில்தான் அது கொஞ்சம் பொறுப்பான பதில்தான்.

ஓய்ந்து போனது காத்திருந்த கூட்டம். பொது மக்கள் தொடங்கி.. பல்வேறு நிறுவனத்தின் காரியதரிசிகள் வரை காத்திருந்தனர் அங்கு. நான்கு நாட்களாக அமைச்சர் கண்ணில் படவில்லேயே, அதான்.. கூட்டம்.

Advertisement

பெரிய இடத்தின் அமைதி, எப்போதும் அச்சமே.. ‘நடக்குமா… எதிர்பார்க்கின்றனரா.. இல்லை வேலையோ..’ என தெரியாத.. மூடுபனி இவர்கள்.

லிங்கத்திற்கு, தம்மடிக்கும் பழக்கமில்லை.. எனவே, எதிரில் இருந்த டீ கடையில் சென்று.. மணிக்கு இரண்டு ‘டீ’ வீதம் உள்ளே இறக்கி அந்த டீ கடைகாரனின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொண்டிருந்தான் அவன்.

இது.. இப்படி… காத்திருந்து பழக்கமில்லை.. ஒருவரை எதிப்பார்த்து நின்றதில்லை.. அவன். பணமிருந்தாலும்.. சூது, வாது வேண்டும் என தெரியவில்லை அண்ணன் தம்பி இருவருக்கும். எனவே, நேரம் எல்லாம் காத்திருப்பில் கழிந்தது.

மாலை, மணி நான்கு.. இன்னமும் ஒரு இன்ச் முன்னேற்றம் இல்லை.. அமைச்சர் விமானம் ஏறிவிட்டார் என செய்தி கூட கிடைக்கவில்லை லிங்கத்திற்கு.

 

[the_ad id=”6605″]

 

 

 

கோவையில், 

எல்லோரும் கையை கட்டிக் கொண்டு அவரவர் இடத்தில் அமர்ந்திருந்தனர். இளா, தனது கேபினில்.. அமர முடியாமல், நடக்கவும்.. அமரவுமாக.. நிதானமில்லாமல் இருந்தான்.

அந்த பினாமிக்கு எல்லாம் செய்தாயிற்று.. இன்னும் ப்ராபர்டிதான் பாக்கி.. அதுவும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். நேரமும் அமைதியாய் நகர… உணவு, தண்ணீர் போன்றவை அந்த மூவருக்கு இறங்கவில்லை.

 

GM.. வந்தார் தயக்கமாக இளங்கோவிடம். அவரின் நடையும்.. அவரின் தயக்கமுமே.. சொல்லியது ‘ஏதோ’ என சொல்லியது. எனவே, புரிந்து போனது இளாக்கு.. என்னவென்று. ஆனாலும், திடமான குரலில் “என்ன சார்” என்றான்.

செந்தில்நாதன் “இல்ல… அ.. அது… பையர் ஆர்டர் கேன்சல் செய்திட்டாங்க… இப்போதான் மெயில் வந்தது. ரொம்ப லேட் டெலிவரின்னு ரீசன் சொல்லிட்டாங்க.. புவர் செர்விஸ்… ன்னு சொல்லிட்டாங்க…” என நிறுத்த கூட இல்லை…

இளா, தன் இரு கைகளாலும் தன் தலையை இறுக்கி பிடித்துக் கொண்டான். அது எங்கேனும் வெடித்து விடும் என எண்ணம் இளங்கோக்கு. கண்கள் GMமை வெறித்தது.. போக போக கண்ணின் வெண்மை நிறம் மாறி.. இளஞ்சிவப்பு நிறம் கொண்டது. சொன்ன வார்த்தை நிஜமாகத்தான் இருக்கும் என மூளைக்கு புரிகிறது. ஆனால், மனம் வேறு எதையோ சாதகமாக எதிர்பார்க்கிறது.

மூன்றிலிருந்து.. நான்கு மாத உழைப்பு… கம்பெனியில் கிட்ட திட்ட இரண்டாயிரம் தொழிலாளர்கள், அதை தவிர ஸ்டாப்ஸ் என எல்லோரின் உழைப்பும்.. இதில் அடக்கம்.

‘தான்.. ஒருவனின் சொத்து போகிறது, கவலையில்லை.. மற்றவரின் உழைப்பை வீணாக்க எனக்கென்ன அதிகாரம் இருக்கிறது..’ மூளையில் பெரிய பாரம் அழுத்த தொடங்கியது இளாக்கு. ஏற்கனவே மனதில் அச்சம்.. இப்போது மூளையை தாக்க… கரிக்காத கண்கள் கூட கரிக்க தொடங்கியது இளாக்கு.

எப்படி தன்னிடம் வேலை செய்பவர் முன்.. ‘தோற்றேன்’ என காண்பிக்க முடியும். இளா, தன் கண்ணீரை உள்ளிழுக்க முயலுகிறான்.. என்ன செய்வது சாதாரண மனிதனே அவனும்.. கண்ணீர், சின்ன சின்ன முத்தாக சிதறியது கன்னத்தில்.

ஒரு திடமான மனிதனின் கலக்கம் யாரையும் பாதிக்கும்.. அதுவும் தன்னலமில்லா கலக்கம் இது. ‘எப்படி.. அந்த தொழிலாளர்கள் முகத்தில் விழிப்பேன்.. சம்பளம்.. போனஸ்.. என காத்திருக்கும் அந்த முகங்களை எப்படி பார்ப்பேன்.. என்ன செய்வேன்..’ என்ற கலக்கம் அப்பட்டமாக முகத்தில் தெரிய.. ‘நான் இந்த பணம் தின்னும் மிருகங்களை பற்றி தெரிந்தும்.. சும்மா இருந்து விட்டேனோ.. முன்பே இந்த பணத்தை விட்டேரிந்திருக்க வேண்டுமோ…’ என்று மூளை சொல்ல.. சுவாசம் தப்பியது, விம்மளாக மாறியது. அடக்கிய கோவத்தில்.. முகம் இயலாமையை காட்டியது.

அழவும் முடியாமல்.. அந்த சங்கடத்தை அடக்கவும் முடியாமல்.. கண்கள் சிவந்து போக.. எதிரி இருக்கும் மனிதரிடம், என் நிலையை காட்ட கூடாது.. நான் முதலாளி.. எதையும் சமாளிக்கும் வல்லமை பெற்றவன் என்ற இயல்பான எண்ணம் எழ, தன்னால் இனி முடியாது.. எனவும் தோன்ற… விருட்டென்.. வெளியேறினான் இளா.

GM “சார்…” என பின்னாலே வருகிறார், அதற்குள்.. கேபினை விட்டு வெளியே சென்றான் இளா.

கார் சாவியில்லை.. GMன் அழைப்பும் காதில் விழாத தூரத்திற்கு சென்றுவிட்டான் இளா. கையில் போனில்லை… நெடு நெடுவென… வாசல் தாண்டி.. வாட்சிமேனின்… வணக்கத்தையும் பொருட்படுத்தாமல்… கண்ணில் கலக்கம் மட்டும் தாங்கி.. வெறித்த பார்வையுடன்… எங்கோ தப்பித்து ஓடுகிறான்.. அந்த, அந்தி சாயும் சாலையில்.. எங்கோ நடக்க தொடங்கினான்..

அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலை.. ‘அத்தனை போரையும் ஏமாற்றி விட்டோமோ’ என்ற குற்ற உணர்வு.. ‘எங்கோ ஏமாந்து விட்டேன்’ என்ற எண்ணம்… எல்லாம் சேர்ந்து அந்த தலையில் குடைய.. அவ்வளவு பெரிய கம்பெனியின் முதலாளி.. தெருவில் ஒன்றுமே இல்லாமல்.. புரியாமல்.. நடந்து கொண்டிருந்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

GMக்கும் எப்படி எடுப்பது என்பதே தெரியவில்லை. அவரும் பல கட்டங்களை கடந்தவர்தான்.. ஆனால், இப்படி இன்றுதான் உணர்கிறார்.

அடுத்த இரண்டு நிமிடம்.. அவரும், ஸ்ம்பித்து போனார்தான். தன்னை நிலைபடுத்திக் கொண்டே.. சுற்றும் முற்றும் பார்த்தார்… டேபிள் மேலே இருந்த, இளாவின் கார் சாவியை இப்போதுதான் பார்த்தார்.. பின் போன்.

அவசரமாக வாட்ச்மேனுக்கு அழைத்து… “இளங்கோ சார் போயிட்டாரா..” என்றார்..

அவரும் “நடந்தே போயிட்டாரு சர்.. ஏன் சார்” என்றார் ஒன்றுமறியாதவராக, கேள்வியாக.

GM அவரை சரம்வாரியாக, திட்டினார் ‘முதலாளி காரில்லாமல் போகிறார் எங்கு போகிறார்ன்னு கேட்க மாட்டியா… என்ன வேலை பார்க்கிற..’ என தனக்கிருந்த டென்ஷனில் திட்ட.. அந்த, காவலாளியும் ஏதோ தவறாக நடந்ததோ என விழிக்க தொடங்கினார்.

அதன் பின்தான் GMக்கு சற்று நிதானம் வர.. “சரி, எந்த பக்கம் போனார்” என ஆசுவாசமாக கேட்டார்.

“தெக்கால.. போனருங்கோ..” என்றார்.

gmக்கு, இருந்த டென்ஷனில் தெக்கு, வடக்கு தெரியவில்லை… என்ன செய்வது.. அந்த பெரியவரின் பேச்சு வழக்கு எப்போதும் அப்படிதான் “சரி.. நான் பார்த்துக்கிறேன்..” என சொல்லி போனை வைத்தார்.

கம்பெனியில் யாரிடம் சொல்ல முடியும் ‘பாஸ்.. காரெடுக்காம.. போனேடுக்கமா நடந்து போயிட்டாருன்னு..’. எனவே, தானே தனது காரெடுத்து வெளியே வந்தார். 

வாட்ச்மேன்.. “அந்த பக்கம்” என இடது கை பக்கம் கை காட்ட.. மெதுவாக வாகனத்தை செலுத்திய படியே தேடினார் செந்தில்நாதன்.

அந்த பத்து நிமிடத்தில் இளா, எங்கு சென்றான் என தெரியவில்லை…

ஆனால், இளா சென்றது.. கோவையின் புகழ் பெற்ற ஒரு பிள்ளையார் கோவிலுக்கு. சென்று அமர்ந்து கொண்டான். எங்கிருக்கிறோம் என கூட தெரியவில்லை.. ஏதோ, அப்போதுதான் திறந்தனர் கோவிலை.. மனதை அழுத்திய உணர்வு.. என்ன செய்வது என்று தெரியாத நிலை.. நீண்ட தூரம்.. வெகு வெகுவென நடந்த வந்த களைப்பு.. எல்லாம் சேர… போய் அமர்ந்து கொண்டான்  தன்னிச்சையாய் அது கோவில் எனக்கூட தெரியாமல் சென்று அமர்ந்தான்.

கலைந்த தலையும்.. சிவந்த கண்களுமாக உள்ளே வந்த மனிதரை பார்த்தனர்.. வேலையாட்கள். ஒன்றும் சொல்லமால் கோவில் பணியாளர்கள் தங்கள் வேலையை பார்த்தனர்.

GM, எல்லா இடத்திலும் தேடிவிட்டார்.. எங்கும் காணவில்லை.. இளங்கோ. ஒரு பத்து நிமிடத்தில்.. இந்த இடத்தை தாண்டியிருக்க முடியாது என தோன்றும் தூரம் வரை சென்றார்தான்.. GM. ஆனால், அந்த கோவிலை கவனிக்கவில்லை, அங்கு இருப்பார் என்ற எண்ணமும் இல்லை அவருக்கு.

இளங்கோவின், போன் ஒலிக்க தொடங்கியது.. லிங்கம், அழைத்தான். செந்திலுக்கு எடுப்பதா.. இல்லையா.. என தெரியவில்லை.. ‘எங்கே அண்ணன்’ என கேட்டால் என்ன பதில் சொல்லுவது என புரியவில்லை.. அப்படியே அழைப்பு நிற்க.

மீண்டும் அழைக்க தொடங்கியது.. போன். GM தேடிக் கொண்டிருந்தார் அதனை எடுக்காமல்.

 

கோவிலில்…

‘தோற்று போகலாம்.. ஆனால், தெரிந்தே வீழ்தல்.. எவ்வளவு வலிக்கும் என இளாவின், கண்ணை பார்த்தால் புரியும். 

‘யாராவது, என்னை பார்க்க போகிறார்கள்.. நான் சாய்ந்து விட்டேன்.. எனக்கு, தெரியவில்லை.. தொழில் செய்ய அருகதை இல்லை.. நான் தோற்றவன்’ என்ற எண்ணமே மனதில் கேட்க…

மூளை.. ‘இந்த உலகத்தில் பணத்தை தவிர வேறு கருவி இல்லை.. வாழ்வதற்கு..’ என கத்தி கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது இளங்கோக்கு. அத்தனையையும்.. மனதில் வைத்து.. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் அமர்ந்திருந்தான் இளா.

அங்கே பூஜை செய்யும் குருக்கள் யாரோ வந்தார் அப்போதுதான். எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்திருந்த இளங்கோவை அடையாளம் தெரிந்தது அவருக்கு.

 

[the_ad id=”6605″]

 

 

அந்த கோவிலுக்கு எத்தனை கைங்கரியம் செய்திருக்கிறான்.. எத்தனை உபயம் செய்திருக்கிறான், அவனை அடையாளம் தெரியாமல் போகுமா குருக்களுக்கு.. அங்கே அமர்ந்திருக்கும் கடவுளுக்குதான் தெரியாமல் போனது.. நல்ல வேலை குருக்கள் கண்டு கொண்டார்.

அருகில் வந்தார் “சார்.. இளங்கோ சார்..” என நான்கு முறை அழைத்த பிறகுதான், உணர்வு வந்தது இளாக்கு.

திரும்பி பார்த்தான்.. அந்த குருக்களும் “என்ன.. சார்… என்ன இந்த நேரத்திற்கு.. நீங்கள் வருவதாக சொல்லவில்லை… ஏதாவது நாள் பார்க்கனுமா” என்றார் பொறுப்பாக.

என்ன என்றே புரிவில்லை இளாக்கு.. அவர் ஏதோ வேற்று மொழி பேசுபவர் போலானார்.. திரு திருவென விழித்தான் இளா.

மீண்டும் குருக்கள் வினவ.. இளாக்கு நன்றாக நினைவு வந்தது.. இப்போது. சுற்றியும் முற்றியும் பார்த்தான். கோவில் என புரிந்தது.. ஏனோ, ஒரு நிம்மதி சொல்லாமல் வந்தது.. “ஒண்ணுமில்ல.. கார் ரிப்பேர்.. அதான் டிரைவர் பார்க்க போயிருக்கார்.. அதான் வெயிட் பண்ணேன்.. சாமிய பார்க்கலாமா” என்றான் கோர்வையாய்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!