Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-14

கிருஷ்ணா அலுவலக தொலைபேசியில் அழைத்து, தனது அறைக்கு வர சொல்லியதும் அந்த மேனேஜருக்கு கொஞ்சம் உதறல் தான். “கேள்வி கேட்டால் கூட எதையாவது சொல்லி சமாளிக்கலாம், ஆனா அந்த புண்ணியவான் பார்க்கிற பார்வையிலே, நமக்கு தான் உள்ளே எல்லாம் கடகடனு ஆட ஆரம்பிச்சிடும், நமக்கே இப்படினா பாவம் இந்த புது பொண்ணு, என்ன பண்ணுமோ” என மனதிற்குள் அங்கலாய்த்து கொண்டார். கிருஷ்ணாவிடம் பேசி விட்டு, இல்லை, இல்லை அவன் பேசியதற்கு எல்லாம், “சரிங்க சார், சரிங்க சார்” […]


மருவக் காதல் கொண்டேன்-13

வழக்கமாக சோம்பலுடனே விடியும் திங்கட்கிழமை அன்றும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாகவே விடிந்தது. உமையாள் காலை சீக்கிரமே எழுந்து, பரபரப்பில்லாமல் நிதானமாக தயாராக, வசீகரன் தான் அவளுக்கும் சேர்த்து பரபரப்போடு சுற்றி கொண்டு இருந்தான். இங்கு கிருஷ்ணாவோ, காலை எழுந்தது முதலே, வழக்கத்தை விட கொஞ்சம் துள்ளலுடன் தயாராகி கொண்டு இருந்தான். எப்பொழுதும் இல்லாத திருநாளாக இன்று சற்று சிரத்தை எடுத்து தேர்ந்தெடுத்த, இளம் ரோஜா நிற லினன் சட்டையும், நீல நிற ஜீன்சும் அணிந்து அலுவலகம் செல்ல […]


மருவக் காதல் கொண்டேன்-12

உமையாள் பார்ப்பது கூட அந்த பெண்ணின் கருத்தில் பதியாமல் போக, அப்பெண் பார்த்தது பார்த்தபடியே இருந்தாள். வசீகரன் மற்றும் பாலா இருவரும் அருகருகே நிற்க, அவள் யாரை பார்க்கிறாள் என புரியாமல் முழித்து கொண்டு நின்றாள் உமையாள். துணிகளை பார்ப்பது போல, உமையாள் அப்பெண்ணையும் கவனிக்க, அவ்ளோ இன்னமும் சுற்றம் உரைக்காமல், கண்களை இவர்கள் பின்னே உலவ விட்ட படியே இருந்தாள். ஒரு கட்டத்தில் காதல் எனும் சுழலில் இருந்து வெளிவந்த அப்பெண், அப்போது தான் உமையாளை […]


மருவக் காதல் கொண்டேன்-11

கனவின் தாக்கமும், அது தந்த உணர்வின் தாக்கமும், ஆழி பேரலையாய் கிருஷ்ணாவை சுருட்டி தனக்குள் இழுக்க, தவியாய் தவிக்க ஆரம்பித்தான். நான்……. நான் போய்….. எப்படி…… எப்படி…… அதும் உமையாளை…. என யோசிக்க,யோசிக்க மனதில் அழுத்தம் தான் அதிகரித்தது கிருஷ்ணாவுக்கு. ஒரு கட்டத்தில் இந்த போராட்டித்தில் மனம் துவள ஆரம்பிக்க, தனியல்பாய் அருகில் இருந்த மேசையின் மீது இருந்த தண்ணீர் குவளையை எடுத்து கொஞ்சம் நீரை பருகினான். மனம் கொஞ்சம் கொஞ்சமாக சமன்பட, ஆரம்பகட்ட அதிர்ச்சியில் இருந்து […]


மருவக் காதல் கொண்டேன்-10

நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் நடைபோட, உமையாள் தெரிந்தே தன் வசீயின் மீதான காதலில் கரைய, கிருஷ்ணவோ, உமையாள் அறிமுகப்படுத்தும் புதுவித உணர்வில் இருந்து மீளவும் முடியாமல், ரசிக்கவும் முடியாமல் சிக்கி தவிக்க, வசீகரன் மட்டும் தன் நிலா பெண்ணின் மீதான காதலை உணர காலம் இன்னும் கனிந்து வராமல் இருக்க சுதந்திர பறவையாய். கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்றிருந்த அன்று, அங்கிருந்து ஒரு பை நிறைய புத்தகங்களை அள்ளிகொண்டு வந்திருந்தாள் உமையாள். அவளின் நேரங்கள் எல்லாம் மீன்கள், புதினங்கள், […]


மருவக் காதல் கொண்டேன்-9

மறுநாள் நேற்றைய வழக்கம் போலவே, வசீகரன் சீக்கிரமே எழுந்து தயாராக, பொன்னமாவும் கொஞ்சம் முன்னதாகவே வந்து, அவனுக்காக காலை உணவை தயாரிக்க ஆரம்பித்திருந்தார். உணவு உண்டு, மதியம் என்ன சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு அலுவலகம் சென்றவன் அன்றாட பணிகளில் மூழ்கினான். புதிதாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் இருந்து, அவர்களுக்காக மருந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்தாக்கும் பெரும் முயற்சியில் இறங்கி இருந்தனர் நண்பர்கள். இது அவர்களின் கனவான இந்த தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதால், […]


மருவக் காதல் கொண்டேன்-8

எப்பொழுதும் துயில் எழும் வழக்கத்தை விட விரைவாகவே எழுந்து, குளித்து அலுவலகத்திற்கு கிளம்ப தயாரானான் வசீகரன். அவனின் பாப்புடன் நேரமும் செலவழிக்க வேண்டும், அதேநேரம் அலுவலக வேளையிலும் தேக்கம் ஏற்படக்கூடாது என்ற முனைப்பு அவனுக்கு. விரைவாக தயாராகி வந்தவன், கன்னம் வைக்கும் திருடன் போல கவனமாக, சிறு ஓசை கூட எழுப்பாமல், அவனின் பாப்புவின் அறைக்கு சென்று பார்க்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில்… ஒரு நிமிடம் தாயின் வாஞ்சையோடு அவளை இமைக்காமல் பார்த்திருந்தவன், அடுத்த நொடி தெளிந்து, […]


மருவக் காதல் கொண்டேன் -7

Episode 7 கையில் ஒரு பையுடன் உள்ளே வந்த வசீகரன், அந்த பையை அவனின் பாப்புவிடம் நீட்ட, என்னவாக இருக்கும் என்ற யோசனையுடனே அதை வாங்கி பிரித்து பார்த்த உமையாளுக்கு அப்படி ஒரு புன்னகை. உமையாளின் புன்னகையின் காரணத்தை அறியவேண்டி, அந்த பையை அவளிடம் இருந்து ஏறக்குறைய பிடிங்கி பிரித்து பார்த்த பாலாவின் முகமோ அஷ்டகோணலாக, உமையாள் வாய்விட்டு சிரிக்க, அந்த பையை பிரித்து பார்க்காமலே உள்ளே என்ன இருந்து இருக்கும் என யூகித்த வசீகரனும், உமையாளோடு […]


மருவக் காதல் கொண்டேன்-6

உமையாள், வசீகரன், பாலா மற்றும் கிருஷ்ணா என எல்லோரும் ஆள், ஆளுக்கு ஒரு உணவு பதார்த்தங்களை எடுத்து வந்து உணவு மேசையில் நிரப்பினர். வசீகரனுக்கோ அவள் குறைகிறது என்று சொன்ன “அது”வே மண்டையில் ஓடி கொண்டு இருந்தது. இந்த வீடு புதிதாக வாங்கி இருந்ததால் அவன் “அது” வாங்க மறந்திருந்தான். அவனின் பாப்புக்கு பிடித்த வகையில் பெரிதாக வாங்க வேண்டும் என்றால் உடனடியாக கிடைக்காது. அவனின் பாப்புவிற்கு பிடித்த மாதிரி செய்ய சொல்லி வாங்க வேண்டும். நாளைக்கு […]


மருவக் காதல் கொண்டேன்-5

வசீகரன் தன் நண்பர்களை உணவுக்கு அழைத்திருக்கிறேன் என்று உமையாளிடம் சொல்லவும், பாலா சமையலறையின் உள்ளே வரவும் சரியாக இருந்தது. உள்ளே நுழைந்த பாலாவை பார்த்த உமையாள் மகிழ்ச்சியுடன், அவனை வரவேற்க நினைத்து வாயை திறக்க போக, பாலாவோ தன் நண்பன் வேர்வை சிந்தி சமைப்பதையும், உமையாள் வெட்டியாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதையும் பார்த்து பொங்கி, “ஏன் உமா, ஒரு ஆம்பிளை பிள்ளை இப்படி தனியா சமைக்கிறான், நீ வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க, பெண் பிள்ளையா லட்சணமா அவனுக்கு […]