Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaa Vaa En Thoora Nila

வா வா என் தூர நிலா 15

தூர நிலா 15 “உங்க ஊர்ல உட்கார கூட ரூல்ஸா கல்கி?” வரப்ரசாத் நன்றாய் சாய்ந்து கைகளைப் பின்னுக்குக் கொடுத்தபடி கல்கியிடம் கேட்க “ஊர்ல தெரியாது வீட்ல அதான் ரூல்ஸ்” என்றாள் சின்ன சிரிப்புடன். “ஆனா கல்கிக்கு ரூல்ஸ் கிடையாது போல, இல்லை கேட்டுப்பியா?” அவனின் அனுமானத்தில் சொல்வதை உடனே கேட்கும் ரகமில்லையே கல்கி. அதனால் அப்படி கேட்க “அப்படி எல்லாம் இல்லை, பிடிக்கலனாலும் சிலதை ஃபாலோ பண்ணித்தான் ஆகனும். அப்பத்தாவையாச்சும் சமாளிக்கலாம், ஆனா தாத்தா அவர் […]


வா வா என் தூர நிலா – 14

தூர நிலா 14 கல்கியின் வகுப்பு முடியும்வரை சூர்யா அங்கேயே காத்திருந்தார். ஒரு மணி நேரம் கழித்து கல்கி வெளியே வர, சூர்யா காரில் அங்கு காத்திருக்க “என்ன மாமா? அதுக்குள்ள வந்துட்டீங்க, செம ஷார்ப் டைமிங்க்ஸ்ல நீங்க” என்று சொல்லியபடி காரில் உட்கார்ந்தாள். “நான் வீட்டுக்கே போகல கல்கி, இங்கதான் வெயிட் பண்ணினேன்” என்றதும் “ஏன் மாமா? ஒன் ஹவர் தேவையில்லாம ஏன் வெயிட் பண்ணீங்க? நானே வரேன் சொன்னேனே?” என்றாள். “விடு பாப்பா, ப்ர்ஸ்ட் […]


வா வா என் தூர நிலா- 13

தூர நிலா 13 கல்கிக்குத் தான் சொல்வதைக் கேட்கும் பொறுமையில்லை, அவளுக்கு சொல்லிப் புரியவைக்கும் அளவுக்குத் தனக்கும் பொறுமையில்லை என்று புரிந்த வரப்ரசாத் அம்மாவிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். கல்கிக்கு மனதெல்லாம் அவ்வளவு மகிழ்ச்சி. புது ஊர்! புது மக்கள்! முதல் நாள் கல்லூரி என்று எல்லா மாணவிகளையும் போல சந்தோஷமாகவே அவளுக்கும் அந்த நாள் போனது. முதல் ஐந்து நாட்கள் ஆடிட்டோரியத்தில் ஓரியண்டேஷன் நடைப்பெறும், ஒவ்வொரு துறை பிரபலங்களும் வந்து […]


வா வா என் தூர நிலா 12

தூர நிலா 12 கல்கியின் கேள்வியில் அதிர்ச்சி என்பதை விடவும் உறவுக்காரப்பெண்ணுக்கு சிரஞ்சீவி பற்றி ஒன்றும் தெரியவில்லையா என்ற ஆச்சரிய உணர்வே பரத்வாஜிற்கு. “என்னாச்சுண்ணா?” என்று கல்கி அவன் ப்ரேக் அடித்தவுடன் கேட்க, நல்லவேளையாக அது ஒரு ப்ரதான சாலை அல்ல. அதனால் வண்டியைக் கிளப்பியவன் “இது மாதிரி யார்கிட்டவும் கேட்றாதீங்கமா, ஸார் ரொம்ப ரொம்ப ஹானஸ்ட், அந்த வார்த்தையைக் கூட ஸார் முன்னாடி யாரும் சொல்லிட முடியாது” என்றான். கல்கி தலையசைக்கவும் “ஆனா ஒரு விஷயத்துல […]


வா வா என் தூர நிலா 11

தூர நிலா 11 கல்கியின் அமைதியில் இன்னும் பேசினான் சிரஞ்சீவி. அவனால் கல்கி பொய் சொன்னதை ஏற்கவே முடியவில்லை, இங்கு போகிறேன் என்று முன்பே சொல்லியிருந்தாலாவது அமைதியாக இருந்திருப்பான். இல்லையா இங்கு வந்திருக்கிறேன் என்று இவன் அழைத்த போதாவது அவள் சொல்லியிருக்கலாம். அவள் சொல்லவில்லை, அதுவே அவளுக்கு எதிராய் திரும்பியது. கல்கி சொன்ன பொய் சிரஞ்சீவியின் பார்வையில் அவளை கீழறங்கச் செய்ய, அவனின் ரௌத்திரம் மெல்ல மெல்ல மேலேறியது. கல்கியோ அவன் வார்த்தைகளில் சுருண்டு மனம் வெதும்பி […]


வா வா என் தூர நிலா 10

தூர நிலா 10 இதுவரையில் சிரஞ்சீவியின் வீட்டில் இருந்து சத்தமெல்லாம் வெளியே கேட்டதில்லை. இன்றோ உள்ளே பேசுவது அப்படியே வெளியே கேட்டது. பல்லைக் கடித்துக் கொண்டு காலிங் பெல்லை அழுத்தினான். “உன்னைப் போய் கேட்டேன் பாருடி என்னை சொல்லனும்” என்று தையல் நாயகி கத்த “அப்புறம் எதுக்கு என்னைக் கேட்டு இவ்வளவு நேரம் டார்ச்சர் செஞ்ச?” கல்கியும் பதிலுக்கு சத்தம் போட்டாள். காலிங் பெல் சத்தம் கேட்டு கல்கி ஹோல் வழியே பார்த்து கதவைத் திறக்க, வரும்போதே […]


வா வா என் தூர நிலா 9

தூர நிலா 9 கல்கியின் பேச்சு சிரஞ்சீவியைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றது. இதுவரை ஒருவர் கூட அவனிடம் இப்படி பேசியதே இல்லை, ஆண் பெண் என்ற பேதமெல்லாம் இல்லை. இது போலான பேச்சுகள் அவன் கேட்டதில்லை, கேட்கும் நிலையும் வந்ததில்லை. சிரஞ்சீவி தந்தை வழி உறவுகளிடம் கூட ஒரு மரியாதையான இடைவெளியுடன் இருப்பான். அவனின் பெரியப்பா மக்கள் எல்லாம் அவனை விட பெரியவர்கள், அந்த பக்கம் அத்தை மாமா மக்கள் என்று  நெருங்கிய சொந்தத்தில் யாருமில்லை. எல்லாம் […]


வா வா என் தூர நிலா 8

தூர நிலா 8 யமுனா கல்கிக்காக வேலையைக் கூட விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட எல்லாருக்குமே அதிர்ச்சி என்றால், சூர்ய நாராயணனுக்கு பேரதிர்ச்சி. மனைவியின் தீவிரம் அப்போதுதான் அவருக்கே உரைத்தது. உதயமூர்த்திக்கு என்ன முடிவு எடுப்பதென்றே தெரியவில்லை. தங்கை செய்த செயலினால் அப்போது ஊரில் பெரிய அவமானம் அவர்களுக்கு. இவருக்குத் திருமணத்திற்குப் பெண்பார்க்க சென்றபோதும் கூட யமுனாவைப் பற்றிய பேச்சுகள் அதிகம், குடும்பத்திற்கே சில காலம் மன உளைச்சல். அதையெல்லாம் தாண்டி யாரிடமும் பகிர முடியாத வேதனையும் வலியும் […]


வா வா என் தூர நிலா 7

தூர நிலா 7 சற்குணப்பாண்டியனுக்குக் காரியம் எல்லாம் முடிந்து, வீட்டினர் மட்டும் இருந்த நேரம்.  கல்கிக்காக மூன்று கல்லூரிகளில் ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டான் ஜெகதீஷ், இன்னும் இரண்டு வாரத்தில் கல்லூரியில் சேர்க்கை நடைப்பெறும், நேரில் செல்ல வேண்டும். இப்போதே பேச ஆரம்பித்தால்தான் வீட்டில் அனுமதி பெற முடியும் என்று கல்கி நினைத்தாள். அதனால் ஜெகதீஷை அழைத்தவள் “மாமா, சீக்கிரமே நம்ம விஷயம் பேசு இன்னிக்கு. அப்பா தனியா இருக்கும்போது இரண்டு பேரும் போய் பேசலாம்” என்றாள் ஆர்வமாக. […]


வா வா என் தூர நிலா – 6

தூர நிலா 6 மகன் இன்னும் தன் கையை விடாது பற்றியிருக்க யமுனா சிரஞ்சீவியிடம் இருந்து கையை உருவிக்கொண்டு “என்ன ப்ரசாத் பாம்பு பார்த்து பயந்துட்டியா?” என்றதும் சிரஞ்சீவி அவரை முறைத்துப் பார்த்தான். “என்னைப் பார்த்தா பாம்புக்குப் பயப்படுற மாதிரி தெரியுதாம்மா?” என்றான் கையைக் கட்டிக்கொண்டு. “அப்புறம்?” சிறு புன்னகையுடன் மகனைக் கேட்டார். யமுனா கொஞ்சம் சந்தோஷமாய் இருந்தார். வந்த நாளிலிருந்து கல்கி ஒருவார்த்தை அத்தை என்று சொன்னதில்லை, அது மட்டுமில்லாமல் அவளிடமிருந்து திட்டு மட்டுமே வாங்கியிருக்க, […]