Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-31(2)

Advertisement

praveenraj

Well-known member
Member
கோவமாக அவளிடம் கத்தியவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல ஏனோ மொட்டுவுக்கு முகமே தொங்கிப்போனது. அவனிடம் வெளிப்பட்ட கோவத்தைக் காட்டிலும் ஒரு இயலாமையை அவளும் கண்டு கொண்டாள். அவளுக்கு குஷா தன்னை விருப்புகிறானோ என்ற சந்தேகம் தீர்ந்து எப்போது முதல் அவளை அவனுக்குப் பிடிக்க ஆரமித்தது என்றும் ஏன் அவனுக்கு அவளைப் பிடித்தது என்றும் அறிந்து கொள்ள மனம் துடித்தது. அப்படி இருக்கையில் அவனை அதிகம் காயப்படுத்தி விட்டதாகவே அவளுக்கும் பட அங்கிருக்கும் வாக்கிங் ஸ்டிக் கொண்டு தத்தி தத்தி அவனைத் தேடி வெளியே வந்தாள். அவனோ அவளுடைய வார்த்தை ஏற்படுத்திய வலியோடு அவன் வீசி உடைத்த தண்ணீர் பாட்டிலை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
'ஏன்டா குஷா உனக்கு இது தேவையா? கோவம் வந்தா அதை வார்த்தையிலே கூடக் காட்டிடு ஆனா இந்த மாதிரி பொருட்களைத் தூக்கி எறியாத... பாரு எல்லாத்தையும் நீ தான் க்ளீன் பண்ணனும் இந்த வீட்ல' என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு அதைச் சுத்தம் செய்ய அவளோ அவனுடைய முணுமுணுப்பைக் கேட்டு நகைத்து அங்கே வர திரும்பியவன் அவளைக் கண்டு,
"என்ன வேணும்? கூப்பிட்டு இருக்கலாமில்ல? ஹஸ்பண்டா இல்லாட்டியும் ஒரு ஹெல்ப்ரா செய்யுறேன். நான் ஒன்னும் அவ்வளவு கல்நெஞ்சக் காரன் இல்ல?" என்று சொன்னதில் துளியும் ஒட்டுதல் இல்லை.
"ஐ அம் சாரி. நான் உன்னை ஹர்ட் பண்ண அப்படிச் சொல்லல..." என்றாலும் அவளுக்கு உடல் வலிக்க அதை தன்னுடைய முகத்தில் காட்டினாள்.
"இப்போ இதுக்குத் தான் இங்க வந்தயா?"
"வேற எதுக்கு? கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..." என்று முணுமுணுக்க,
"சரி வா உன்னை பெட் வரை கூட்டிட்டுப் போறேன்" என்று நெருங்க,
"அதெல்லாம் ஒன்னும் வேணாம். எங்களுக்குப் போகத் தெரியும்..." என்றவள் வெடுக்கென்று திரும்ப இடது கையில் வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியிருந்ததால் அவளுக்கு வாட்டம் வராமல் கீழே விழப்போக அவளைத் தாங்கியவன்,
"அடிபட்டாலும் உனக்கும் இந்தத் திமிரு குறையவே இல்லை" என்றவனுக்கு,
"அது திமிர் இல்ல ஆட்டிடியூட்" என்று நொடிந்துகொள்ள கழுத்திலும் வலி இருந்ததால் ஸ்ஸ் என்றவளுக்கு,
"குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாத ஆளுடி நீ" என்று அவளை அழைத்துச் சென்றவன் அவளுக்கு வேண்டியதை எல்லாம் கொடுத்து பார்த்துக்கொண்டான்.
மறுநாள் காலை எழுந்ததில் இருந்து அவளுக்கு உடல் வலி குறைந்தது போல் இருந்தாலும் வெந்நீரில் சற்று குளித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க இந்நிலையில் எவ்வாறு குளிப்பது என்ற நிதர்சனம் புரிந்து,'ஐயோ அத்த இப்பனு பார்த்து நீங்களும் இல்லாம போயிட்டீங்களே' என்று புலம்ப,
"ஏன் அம்மாவை எதுக்குத் தேடுற?" என்று உள்ளே வந்தவனுக்கு,
"நான் குளிக்கணும்"
"அப்போ குளிச்சிட்டு வா நான் டிபன் எடுத்து வெக்குறேன். சேர்ந்து சாப்பிடலாம்..." என்று அவன் நகர,
"குஷாஷா... நான் குளிக்கனும். ஒரு மாதிரி அன் ஈஸியா ஹாஸ்பிடல் வாசம் அடிக்குது"
"நான் என்ன நீ குளிக்க கூடாதுனு கட்டியாப் போட்டிருக்கேன்..." என்றவனுக்கு அப்போது தான் அவள் நிலை நினைவுக்கு வர,
"ஆடு மாடெல்லாம் தினமும் குளிக்குதா என்ன? லீவ் விட்டுடு" என்று அவளை அவன் வார,
"போய் அந்த அக்காவை இங்க கூட்டிட்டு வா. என்னை அவங்க குளிக்க வெப்பாங்க" என்றவளுக்கு,
"இதென்ன சூரக்கோட்டைனு நெனச்சியா? சென்னை மாநகரம். இங்க இந்த மாதிரி எல்லாம் அக்கம் பக்கம் இருக்கவங்க ஹெல்ப் பண்ண மாட்டாங்க. அவ்வளவு ஏன் நேத்து அவங்க பையனைக் காப்பாத்த தானே நீ விழுந்த? ஒரு கார்டெசிக்கு உன்னை வந்து பார்த்தாங்களா? சாப்பிட எதாவது வேணுமானு கேட்டாங்களா? அதெல்லாம் வர மாட்டாங்க" என்றதும் அவளுக்கு புஸ் என்று ஆக,
"வேணுனா கைவசம் ஒரு ஐடியா இருக்கு. ஆனா நீ அதுக்கு ஒத்துக்க மாட்ட" என்றதும்,
"என்ன அது சொல்லு?"
"வேணாம் விடு"
"இப்போ சொல்லப்போறயா இல்லையா?"
"அவசியம் உனக்கு குளிக்கனும்னா நான் வேணுனா ஹெல்ப் பண்றேன்"
அவளோ அதிர,
"ஊர்ல மாட்டையே குளிப்பாட்டியிருக்கேன் உன்ன குளிப்பாட்ட மாட்டேனா?" என்றதும் அவனை முறைத்தவளுக்கு,
"அதான் சொன்னேனே உனக்குப் பிடிக்காதுன்னு" என்று அவன் நகர,
"ஆனா ஒரு கண்டிஷன். கண்ணைக் கட்டிக்கணும்"
"உனக்கு பிரச்சனை இல்லைனா எனக்கும் பிரச்சனை இல்ல" என்றதும் அவளை பாத் ரூமிற்கு அழைத்துச் சென்றவன் தண்ணீர் திறக்க,
"ஏ கண்ணைக் கட்டல?" என்றதும் அவன் ஒரு கறுப்பு துணியை எடுத்து தன் கண்களில் வைத்து அளவு பார்த்தவன் அவள் சுதாரிப்பதற்குள் அவள் கண்களில் அதைக் கட்டிவிட,
"ஏய் என் கண்ணை இல்ல உன் கண்ணை"
"ஏய் நான் உன்னைப் பார்க்கக்கூடாது அதே மாதிரி நீயும் என்னைப் பார்க்கக்கூடாது. சோ நான் கண்ணைக் கட்டுனா என்ன இல்ல நீ கட்டுனா என்ன? ரெண்டும் ஒன்னு தான்..." என்றவன் அவளைக் குளிப்பாட்ட சிறிது நேரம் யோசித்தவள்,
"ஏய் நான் கண்ணைக் கட்டுறதும் நீ கண்ணைக் கட்டுறதும் எப்படி ஒண்ணாகும்?" என்று புதிருக்கு விடை கண்டவள் போல் ஆவேசம் கொள்ள,
"இதையே இப்ப தான் கண்டு பிடிக்கிறியா? நல்லா இருக்கு உன் டக்கு. ஏன் டி ரொம்ப அறிவுஜீவினு நெனப்பு. நான் கட்டிக்கிட்டா எப்படி உன்னைக் குளிப்பாட்டுவேன்?" என்றவன் அவளைக் குளிப்பாட்ட அவளோ கூச்சத்தில் நெளிந்தவாறு இருக்க,
"நான் ஒன்னும் வெளியாள் இல்ல. உன் ஹப்பி தான். உன்னை உன் சம்மதம் இல்லாம ஒன்னும் செஞ்சிட மாட்டேன். எங்க என் கை ஏதாவது அத்து மீறுச்சா?"
அவளோ மெளனமாக இருக்க,
"ஏய் இதுக்கெல்லாம் மௌனமா இருக்கக்கூடாது. ஏன்னா மௌனம் சம்மதம் ஆகிடும். சே எஸ் ஆர் நோ"
"நோ" என்றவளுக்கு காத்து தான் வந்தது.
பிறகு அவளோடு சேர்ந்து உண்டவன் அதைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்ததே அவளுக்கு நிம்மதியாக இருக்க,
"செமஸ்டர் எப்போ ஆரமிக்குது?"
"ஐயோ! நான் ரெகார்ட் எல்லாம் எழுதனுமே?" என்றவளுக்கு,
"எழுது" என்று நக்கலாகச் சிரித்தான்.
"என்ன கிண்டலா? என்னால சாப்பிடவே முடியல இதுல எப்படி எழுத?"
"அப்போ அடுத்த வாரம் எழுது"
"ஆனா கம்மிங் வெட்னெஸ்டே ரெக்கார்ட் சப்மிட் பண்ணணுமே? அந்த ப்ரொபெஸர் வேற கடுப்பேத்துவானே. இன்டர்நெல்ஸ்ல கை வெச்சிடுவானே?"
"ஏய் ப்ரொபெஸர இப்படியா மரியாதை குறைவா சொல்லுவ?"
"ஏன் நீ எல்லாம் திட்டுனதே இல்லையா?" என்று கேட்டவளுக்கு பிறகு தான் குஷாவும் ஒரு ப்ரொபெஸர் என்பது நினைவுக்கு வர,
"ஹா ஹா... நானாச்சும் டீசெண்டா பேசுறேன். என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கேவலமா கழுவி ஊத்துவாங்க. உன்னையும் கூட உன் ஸ்டுடென்ட்ஸ் இப்படித்தான் சொல்லுவாங்க இல்ல?" என்று சிரித்தாள்.
"சிரி சிரி... இதுக்கெல்லாம் சேர்த்து ஆப்பு அடிக்க போறாங்க" என்றதும் அவள் சிரிப்பை நிறுத்தி,
"இப்போ ரெக்கார்டுக்கு என்ன செய்ய?"
"அது உன் தப்பு. அப்பப்போ எழுதணும்" என்றவன் எழுந்துச் செல்ல,
"குஷா, ப்ளீஸ் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு"
"இதுல நான் என்ன ஹெல்ப் பண்ண முடியும்?"
"நீயே எழுதிக் கொடுத்திடு"
"விளையாடுறியா? பாதி உன் கையெழுத்து மீதி என் கையெழுத்து இருந்தா வசமா மாடிப்ப"
"மாட்ட மாட்டேனே"
"எப்படி?"
"ஏன்னா நான் தான் இன்னும் எழுதவே ஆரமிக்கலையே?" என்றதும்,
"வாட்? முடியாது. முடியவே முடியாது"
"அப்படினா நான் அரியர் தான் வாங்கணும். அதும் ப்ராக்டிகல்ஸ்ல. ஊர்ல அவனவன் பொண்டாட்டிக்காக என்னென்னமோ செய்யுறான். நீ ஒரு ரெகார்ட் எழுத மாட்டியா?"
அதில் ஒருகணம் திகைத்தவன்,"என்ன சொன்ன? கமான் சே இட்"
"ஊர்ல அவனவன் பொண்டாட்டிக்காக..." என்னும் போது குஷா அர்த்தமாய்ச் சிரிக்க அவளோ அதில் உறைந்து அமைதி ஆனாள்.
"சோ நீ பொண்டாட்டிங்கற நெனப்பெல்லாம் இருக்கு. ரைட்?" என்றதும் அவளோ எதையோ உளறிவிட்ட நியாபகத்தில் அசடு வழிய,
"செய்யுறேன். அந்த ஒரு வார்த்தைக்காகச் செய்யுறேன்" என்றவன் அன்று விடிய விடிய அவளுக்காக ரெகார்ட் எழுதிக் கொடுத்தான்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அடுத்த வாரத்தில் அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைக்க அவளோ மாமல்லபுரம் வரை அவனை அழைக்க அவர்களும் அங்கே சென்று சுற்றிவிட்டு வந்தனர். அதற்குள் ஜானகியும் ரகுவும் சென்னை திரும்பி இருந்தனர். ஜானகிக்கு அடுத்த பத்து நாட்களில் மீண்டும் வேறொரு ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதால் ஓய்வில் வந்திருந்தார். அதே நேரத்தில் மொட்டுவுக்கும் செமஸ்டர் தொடங்க இருந்தது.
இரண்டாம் நாள் காலை முதல் பரீட்சை இருக்க அன்றிரவு குஷாவுக்கு ஒரு அழைப்பு வந்தது. நள்ளிரவில் வந்த அழைப்பை ஏற்றவன் அது அனுவிடமிருந்து என்று அறிந்ததும் மனம் பதைக்க அதை அட்டென்ட் செய்தான்.
"என்ன ஆச்சு அனு? இந்நேரத்துக்கு எதுக்கு போன் பண்ணியிருக்க? ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என்றதும் தேம்பியவள்,
"இங்க உடனே வா குஷா" என்றவள் எதையும் பேசாமல் போக குஷாவுக்கோ மனம் எல்லாம் படபடக்க யாரிடமும் சொல்லாமல் ஹைதராபாத் பயணித்தான்.
அங்கே அனுவின் எண்ணமெல்லாம் கடந்த சில மாதங்களாக நடந்தவைகளை அசைபோட்டது.
அன்று லவாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு அந்த சோபாவிலே உறங்கிவிட சிறிது நேரத்திற்குப் பிறகு யாரோ அவளை வருடுவதைப்போல் உணர்ந்தவள் கண் விழிக்க அவள் எதிரே அமர்ந்திருந்த லவா அவளிடம் மன்னிப்பை வேண்டுமாறு ஒரு பார்வைப் பார்த்தான். இவளோ அவனை துளியும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றாள்.
"அனு, ப்ளீஸ் அனு. நான் ஏதோ ஒர்க் டென்ஷன்ல இருந்தேனா அதான்ஏ..." என்றதும் திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தாள் அதில் என்ன கண்டு கொண்டானோ அவளை அவள் போக்கிலே விட்டான்.
தங்கள் வாழ்வில் திருமணத்திற்குப் பிறகான முதல் சண்டை என்று அவர்கள் நினைக்க அதுவோ அடுத்தடுத்த பல பிரிவுகளுக்கு பிள்ளையார் சுழி போடுவதாகவே அமைந்தது.
அவளுக்கு அந்த வாரம் இரவு ஷிப்ட் வேலை இருக்க வழக்கமாக அவளை டிராப் செய்யும் லவா அவளுக்காக கீழே காத்திருக்க அவளோ வீம்பாக தான் புக் செய்த கேபில் சென்றாள்.
நாம் நேசிப்பவரின் ஒதுக்கத்தையும் அது கொடுக்கும் வலியையும் கண்கூட கண்டு உணர்ந்தவன் அலைபாயும் அவன் மனதை ஒருநிலை படுத்த முயன்றான். மறுநாள் அவள் வீட்டிற்கு வரும் போது அவளுக்காகவே காத்திருந்தவன் மெல்ல தன்னுடைய பிரச்சனையை மனம் விட்டு அவளிடம் உரைத்தான்.
"எனக்கு ஒரே கஷ்டமா இருக்கு அனு. என்னால நிறைய பேர் கஷ்டப்படுறாங்க அனு. எனக்கு ஒரே கில்டி பீலிங்கா இருக்கு. அது போக எங்க லேப் ஒர்க்ஸ் எல்லாம் ரொம்ப ஹெக்டிக்கா போகுது. இப்பயும் பாரு நான் குஷாவுக்கு பாரமா தான் இருக்கேன். ரெண்டு பேரும் சேர்ந்து தான் தீசிஸ் செய்ய ஆரமிச்சோம். இப்போ எனக்கும் சேர்த்து அவன் தான் பிசியா வேலை பாக்குறான். அவங்க ரெண்டு பேரும் ஒன்னாச் சேர்ந்தாங்களானு கூட எனக்குத் தெரியில. ஒரு மாதிரி இருக்கு அனு" என்று தன்னிலை அறிக்கையை அவளிடம் ஒப்பிக்க,
"லவா, எனக்கும் அந்தக் கவலை இருக்கு. நானும் பலமுறை குஷா கிட்ட இதைப் பத்திப் பேசிட்டேன். அவன் நம்ம வாழ்க்கையை மட்டும் பார்க்கச் சொல்றான். எனக்கு நம்பிக்கை இருக்கு. நிச்சயம் மொட்டு அவனைப் புரிஞ்சிப்பா. நீ ஏன் இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகுற?" என்று அவன் முகத்திலே அவன் மனக்குமுறலை அறிந்தவள் அதைப் போக்கும் வல்லமை கொண்ட தன் காதல் என்னும் அருமருந்தை அவனுக்குக் கொடுத்தாள். ஆனாலும் இப்போது இருக்கும் மனநிலையில் லவா தொடர்வது அவனுடைய கேரீர் மட்டுமின்றி தங்களுடைய இல்லறத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் என்று அறிந்தவளாக அதைப் போக்க முழு முயற்சி எடுத்தாள்.
தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் மீண்டும் குழப்பமும் என்னும் கல்லை எறிந்தது விதி. இருவருக்கும் தங்களுடைய ப்ராஜெக்ட் இறுதி கட்டத்தை நெருங்க இரவு பகல் பாராமல் உழைத்தனர். அனுவிற்கு முழுவதும் இரவு ஷிப்ட் வேலை இருக்க அவள் வருவதற்குள் காலையில் லவா லேபுக்கு சென்றிருந்தான். அவன் மாலை வந்தும் வராதுமாய் இருக்க அனு புறப்பட தயாரானாள். இப்படியே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்க கடந்த சில தினங்களாக லவா ஏதேதோ எண்ணத்தில் சுழன்றுகொண்டிருக்க அன்று மாலை வந்தவனிடம்,
"லவா, எப்போ உன் வேலை முடியும் சொல்லு... நாம ஒரு ட்ரிப் போயிட்டு வருவோம். அண்ட் அந்த ட்ரிப் முடிவுல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு" என்று கண்களில் குறும்புடன் ஆசையாக உரைத்தவளிடம்,
"அனு அப்போ நீ கொஞ்ச நாள் ஊருக்குப் போயிட்டு வரையா?" என்று கேட்டவனுக்கு அதிர்ச்சியான ஒரு ரியாக்சனை கொடுத்தவள்,
"ஏன் லவா என்னாச்சு?"
"எனக்கு கொஞ்சம் ப்ரைவேசி வேண்டும். விளக்கம் போதுமா?" என்று சற்று குரல் உயர்த்தியவனுக்கு,
"சோ நான் உனக்கு இடைஞ்சலா இருக்கேன்னு நெனைக்கிறியா லவா?"
"ஆமான்னா என்ன பண்ணப் போற அனு? போயிடுவியா?" என்றவனின் குரலில் இருந்த எதிர்பார்ப்பு ஏனோ அனுவுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தர,
"டிக்கட் போடவா?" என்று அவன் அடுத்த கேள்வியைக் கேட்க,
"ரொம்ப தேங்க்ஸ். எனக்கே போட்டுக்கத் தெரியும்" என்றவள் அவன் இரண்டடி எடுத்து வைக்க,
"எவ்வளவு நாளுன்னு சொல்லவே இல்லையே லவா. இப்போதைக்கா இல்ல நிரந்தரமாவா?" என்று கேட்டவளுக்கு,
"அது உன் விருப்பம்" என்றவன் அன்று போலவே கதவை 'டமார்' என்று அறைய அனுவின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் உருண்டோடியது. இனி எதுவென்றாலும் தன்னிடம் நேரடியாகவே சொல்ல வேண்டும் என்றும் இவ்வாறு கதவைச் சாற்றியோ இல்லை ஏதேனும் பொருட்களின் மீதோ கோவத்தைக் காட்டக்கூடாது என்று அன்றைய சமாதான உடன்படிக்கையின் போதே அவள் திட்டவட்டமாக அவனிடம் தெரிவித்திருந்தாள். அதையும் மீறி இன்று அவன் கதவைச் சாற்றியதிலே அவன் மனதை யூகித்தவளுக்கு என்ன நடந்தது என்று கூட விளங்காமல் அந்த சோபாவில் அமர்ந்தவள் நேரம் போனதே தெரியாமல் யோசனையில் ஆழ்ந்தாள். எவ்வளவு யோசித்தாலும் அவனின் நிராகரிப்புக்கான காரணம் மட்டும் அவளுக்கு விளங்கவே இல்லை. இதில் உறைந்திருக்கும் மறை பொருளை அவளும் உணர்ந்தாள். காரணமே தெரியாமல் தன்னை நிராகரிப்பவனிடம் வழிந்து சென்று காரணம் கேட்பது என்பது ஏனோ தனக்கும் தன் காதலுக்கும் நேரும் அவமானம் என்று எண்ணியவள் காதலை யாசகம் பெறக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.
அதன் பின் எவ்வளவு நேரம் என்று தெரியாமல் பிரமை பிடித்தவள் போல் இருந்தவள் குஷாவுக்கு அழைத்து உடனே இங்கு வருமாறு சொல்ல அவனும் என்னவோ ஏதோ என்று பதறியடித்து வந்து சேர்ந்தான். ஹைதராபாத்துக்கும் சென்னைக்கும் பதினோரு மணி நேரத்திற்கும் மேல் பயணம் ஆகும்.
அவளின் கோலத்தைக் கண்டவன்,"என்ன ஆச்சு அனு?"
அன்றைய பொழுதே விடிந்து காலை எட்டு மணி என்று கடிகாரம் நேரம் காட்டியது.
கண்களில் கண்ணீர் உருண்டோட அதில் துடித்தவன்,"அனு ஏன் டி அழற? என்னாச்சு? அவன் எங்க?" என்று தேட ஏதோ புரிந்தவனாய்,
"உனக்கும் அவனுக்கும் ஏதாவது சண்டையா?' என்று கேட்டதும் நடந்த அனைத்தையும் வரிவிடாமல் ஒப்பித்தாள் அனு.
அதைக் கேட்ட குஷாவிற்கே லவா மீது பயங்கர கடுப்பு எழ,"எங்க இருக்கான் அவன்?" என்று உள்ளே விரைந்தவன் கட்டிலில் உறங்கும் அவனை எழுப்ப எழுந்தவன் எதிரில் குஷாவைக் கண்டு அதிர்ந்து,
"நீ எப்போ வந்த?" என்றவனின் கன்னத்தில் பளார் என்று ஒன்று விட்டான்.
"என்ன டா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? நீ என்ன காரியம் செஞ்சு இருக்க தெரியுமா? நைட் முழுக்க தூங்காம ஒரே இடத்துல பிரமை பிடித்தவ மாதிரி அவ வெளிய உட்கார்ந்து இருக்கா நீ என்னடானா ஹாயா தூங்கிட்டு இருக்க?"
"அவளைத் தூங்க வேண்டாம்னு நானா சொன்னேன்?" என்றதில் இன்னும் கடுப்படைந்தவன்,
"எனக்கு ஒண்ணுமில்லை. நான் நல்லாத் தான் இருக்கேன்" என்றதில் ஒரு படபடப்பு தெரிய அதைக் கண்டவன்,
"லவா, என்ன ஆச்சுடா?" என்றதும் கண்கள் கலங்க,
"கொஞ்ச நாளா அடிக்கடி இங்க வலிக்குது டா" என்று அவன் வலது மார்பைக் காட்டியவன்,
"டாக்டர் கிட்டப் போனா ரிப்போர்ட் பார்த்துட்டு ஆப்ரேசன் செய்யணும்னு சொல்லிட்டார். என்னால அனு வாழ்க்கை ஸ்பாயில் ஆகிடுச்சில்ல? என்னால அவ நிறைய அழுதுட்டா. இனிமேலும் அவளை அழ வெக்க எனக்கு விருப்பம் இல்ல. அதும் போக எனக்கு எதாவது ஆகிடுச்சினா அப்பறோம் அவ லைஃப்" என்று முடிக்கும் முன்னே அவனை மீண்டும் அடித்த குஷா,
"உனக்கு ஒன்னும் ஆகாது. ஆகவும் விடமாட்டேன். அனுவும் நீயும் ஹேப்பியா இருப்பிங்க. உனக்கு எப்போ இருந்து திரும்ப வலிக்குது? ஏன் என்கிட்டச் சொல்லல? எந்த டாக்டரை பார்த்த?"
"ஏற்கனவே என்னால உன் லைஃப் ரொம்ப சிக்கலா இருக்கும் போது உன்னை மேற்கொண்டு டிஸ்டர்ப் பண்ண நான் விரும்பல. எனக்காக நீயும் எவ்வளவு தான் விட்டுக்கொடுப்ப?' என்றதும் வந்த கோவத்தையெல்லாம் ஒன்று திரட்டியவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு,
"நான் சொன்னேனா? நான் கஷ்டப்படுறதை நீ பார்த்தயா? நீயா ஒன்னைக் கற்பனை செஞ்சிட்டு ஏன் டா இப்படி ஹர்ட் ஆகியிருக்க?" என்றதும் அன்று மொட்டு தன்னிடம் சொன்னதை லவா சொல்ல,
தலையில் கை வைத்தவன் மொட்டுவை மனதில் திட்டியவாறு,
"டேய் நாங்க ஹேப்பியா தான் இருக்கோம்..." என்றவனை சந்தேகமாய்ப் பார்த்த லவாவுக்கு,
"நிஜமா சொல்றேன் லவா. வீ ஆர் ஹேப்பி"
"நீங்க ஹஸ்பண்ட் வைப்பா வாழறீங்களா? நான் என்ன கேக்குறேனு புரியும்னு நெனைக்கிறேன்"
குஷா எப்படி விளக்கம் கொடுப்பதென்று புரியாமல் திணற, சோர்ந்து போய் அந்தக் கட்டிலில் லவா அமர்ந்தான்.
"லவா, நான் சொல்றதைக் கேளு" என்று அவன் கையைப் பிடித்த குஷாவின் கரத்தை உதறியவனுக்கு,
"எங்க லைஃபை நாங்க பார்த்துக்குறோம். ப்ளீஸ் எங்க வாழ்க்கையையும் உங்க வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக்காத. அண்ட் அனு கிட்ட வந்து சாரி கேளு. உனக்கு ஒண்ணுமில்லை. நான் நல்லா இருக்கும் வரை நீ நல்லா இருப்ப. ஏன் எனக்கும் பிறகு கூட நீ நல்லா வாழுவ. ப்ளீஸ் டா" என்னும் வேளையில் உள்ளே நுழைந்தாள் அனு.
"என் லவ்வையே அவன் புரிஞ்சிக்கல இல்ல? ஏன் அவனுக்கு ஹார்ட் இஸ்ஸு இருக்குனு தெரிஞ்சு தானே அவனை லவ் பண்ணேன். தெரிஞ்சு தானே போராடி மேரேஜ் பண்ணேன். இப்போ இப்படினதும் நான் விட்டுப் போயிடுவேன்னு நெனச்சானா அவன்? ஓகே நான் போயிடுறேன். ஆனா இப்ப இல்ல. அவனை குணப்படுத்திட்டு அவனை விட்டு நிரந்தரமா நான் பிரிஞ்சிடுறேன். என்கிட்ட இதை ஷேர் பண்ண முடியாத அளவுக்கு நான் அந்நியம் ஆகிட்டேன் இல்ல?" என்றவள் குஷாவைப் பார்க்க,
"அனு, நீ கொஞ்சம் வெளிய இரு. இப்போ எதுக்கு இதெல்லாம் பேசுற? போ" என்று வெளியே துரத்த இங்கே லவாவுக்கு அனு கூறிய வார்த்தைகள் பயத்தை ஏற்படுத்த இதுவரை தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அனுவின் நிலை என்ன ஆகும் என்று வருந்தியவன் இப்போது அனு இல்லாத அவன் வாழ்நாள் எப்படி இருக்கும் என்று எண்ணி அஞ்சினான்.
அன்று மாலை வரை எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவர்களைத் தேற்ற முடியாதவன் தற்போதைய சூழ்நிலையில் இருவரும் தனித்து இருப்பது உகந்தது இல்லை என்று அவர்களை சென்னைக்கு அனுப்பியவன் லவாவுக்கு இருக்கும் முக்கியமான வேலையை தான் இருந்து முடிக்க ஆயத்தமானான். அதே நேரம் நாளை மொட்டுவின் பரீட்சைக்கு அவளுடன் இருக்க வேண்டும் என்று நினைத்த பிளான் சொதப்பியதில் சின்ன ஏமாற்றமும் இருந்தது. மாலை வரை மல்லுக்கட்டியவன் ஒரு வழியாக லவா அனு இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தான்.
என்ன தான் லவாவை இவன் சமாதானப் படுத்தினாலும் அவனுக்குள்ளும் அச்சம் குடிகொண்டது என்னவோ உண்மை. இதை எவ்வாறு வீட்டில் சொல்வது என்றும் ஜானகி எப்படி எடுத்துக்கொள்வார் என்றும் பயந்தான். லவாவின் இதயக் கோளாறுக்கு சிறு வயதிலே ஆபரேஷன் செய்து இருக்க முடியும் தான். ஆனால் அது ஒன்றும் அத்தனை சுலபமானது இல்லை என்றும் அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களால் தான் மருந்துகளிலே சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஏழு வருடமாக அவனுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் போக இதைப் பற்றி வீட்டில் இருக்கும் எல்லோரும் மறந்தே போனார்கள். ஆனால் இப்போது மீண்டும் பூதம் தலை தூக்கும் என்று குஷா நினைக்கவே இல்லை. இத்துடன் அனு லவாவின் வாழ்வில் ஏற்பட்டுள்ள சிக்கலும் குஷாவிற்கு அயர்ச்சி கொடுத்தது.(நேரம் கைகூடும்)
அடுத்த அத்தியாயம் இறுதி. கதை போரா போகுதா? போன பார்ட்டுக்கு பெரிய ரெஸ்பான்சே இல்லை. அதான் அடுத்து போடலாமா வேண்டாமான்னு குழப்பத்துலே இருந்தேன். இந்தக் கதையில பெருசா எதையும் எதிர்பார்க்காதிங்க. கம்பெனி அதுக்கு பொறுப்பில்லைனு முன்னாடியே சொல்லிட்டேன். எனி ஹவ் அடுத்த எபிஸோடோட சுபம் போட்டுடுறேன்.
 
Last edited:

"நீ சொன்னேனா? நான் கஷ்டப்படுறதை நீ பார்த்தயா? நீயா ஒன்னைக் கற்பனை செஞ்சிட்டு ஏன் டா இப்படி ஹர்ட் ஆகியிருக்க?" என்றதும் அன்று மொட்டு தன்னிடம் சொன்னதை லவா சொல்ல,
தலையில் கை வைத்தவன் மொட்டுவை மனதில் திட்டியவாறு,
"டேய் நாங்க ஹேப்பியா தான் இருக்கோம்..." என்றவனை சந்தேகமாய்ப் பார்த்த லவாவுக்கு,
"நிஜமா சொல்றேன் லவா. வீ ஆர் ஹேப்பி"
"நீங்க ஹஸ்பண்ட் வைப்பா வாழறீங்களா? நான் என்ன கேக்குறேனு புரியும்னு நெனைக்கிறேன்"
குஷா எப்படி விளக்கம் கொடுப்பதென்று புரியாமல் திணற, சோர்ந்து போய் அந்தக் கட்டிலில் லவா அமர்ந்தான்.
"லவா, நான் சொல்றதைக் கேளு" என்று அவன் கையைப் பிடித்த குஷாவின் கரத்தை உதறியவன்,

Kathai Nala poguthu . Interesting aa iruku. Epi matum konjam seekiram kudunga pa
 
இல்லை லவா லைஃப்ல வெடி குண்டுதான் வச்சுருக்கீங்கனு நினைச்சேன் ஆனால் ஆட்டம்பாம் வச்சுருக்கீங்க போலயே. அதை செயலிலக்க வச்சுருங்க. லவாக்கு பிரச்சனை வந்ததுக்கு மொட்டுவால வந்த ஸ்ட்ரெஸ்ஸுனு மட்டும் சொல்லிறாதிங்க அப்பறம் மொட்டுவும் கில்டி ஃபீலோட சுத்துவா. என்ன அடுத்த எபில முடிஞ்சுருமா? இது அல்ரெடி எடுத்த முடிவா இல்லை இப்ப எடுத்ததா? அடுத்த எபில எப்படி முடிக்க முடியும் பிரச்சினை மேல பிரச்சினை இழுத்து வச்சுட்டு ஒரே எபில எப்படி முடியும். எழுதுற உங்களுக்குதான் தெரியும். கதை நல்லா போகுது. ??????????????
 
நன்றி சிஸ். கொஞ்சம் ஒர்க் பிசி. இந்த மந்த் முடியறதுக்குள்ள கதை முடிஞ்சிடும்.?
 
இல்லை லவா லைஃப்ல வெடி குண்டுதான் வச்சுருக்கீங்கனு நினைச்சேன் ஆனால் ஆட்டம்பாம் வச்சுருக்கீங்க போலயே. அதை செயலிலக்க வச்சுருங்க. லவாக்கு பிரச்சனை வந்ததுக்கு மொட்டுவால வந்த ஸ்ட்ரெஸ்ஸுனு மட்டும் சொல்லிறாதிங்க அப்பறம் மொட்டுவும் கில்டி ஃபீலோட சுத்துவா. என்ன அடுத்த எபில முடிஞ்சுருமா? இது அல்ரெடி எடுத்த முடிவா இல்லை இப்ப எடுத்ததா? அடுத்த எபில எப்படி முடிக்க முடியும் பிரச்சினை மேல பிரச்சினை இழுத்து வச்சுட்டு ஒரே எபில எப்படி முடியும். எழுதுற உங்களுக்குதான் தெரியும். கதை நல்லா போகுது. ??????????????
சீக்கிரம் செயல் இழந்திடும். இல்ல மொட்டு மட்டும் காரணம் இல்ல ஆனா மொட்டுவும் காரணம். இதனால மொட்டுவுக்கு பிரச்சனை வராது. மொத்தம் 34 பிளான் பண்ணியிருக்கேன் அப்பறோம் நிறைய சீன்ஸ் தூக்கிட்டேன். இனிமேல் அதை சேர்க்க முடியாது. கடந்து வந்தாச்சு. சோ க்ளைமேக்ஸ் ஒன்னு தான் பாக்கி. அநேகமா அதும் ரெண்டு பார்ட் வரலாம். நாட் சூர். பெருசா ரெஸ்பான்ஸ் இல்லாததால நடுவுல நிறைய கட் பண்ணிட்டேன்?? முடிச்சிடுவேன்.
 
Mottu direct aa manasu vittu pesirukkalam Kusha kitta, Kusha intelligent aana Professor nu proove panraan, parraa.... Mottuva... Ippothaan pickup ahuthu, Kushava kindal laam panraa,
Mottu... engalukkum kaalam varum... nee ipa record ezhutha enga help venumla,
enna ji... ella heavy exploshions um orey timela blast ahura maathiri panniteenga,
ennathu ithu... enakku attack vanthrum pola, naa Lava health a vachu ippadi pannuveengannu expect pannala,
Y rush up panreenga? Bore aa.... appadinaa enna? Nice moving
 
Ada boss na type pannathu vera ??? ph pblm...pazhi vaangiduchi. Yarathu bore nu solluvangala. Nenga evlo theliva oru pacha mannu life la naattiyam aadittu irukinga. Rmba arumai boss...illa ungala lavaa serthu vaika solli ketaana. Summa sivanenu iruntha paiyanuku kalyanam panni vachi...illatha aasaiya valarthu vittutu .... Nalla enjoy um panna vachitu posukunu india chaina war maathiri pirichi vachitinga. Ithuku heart la pblm vanthu hospital ke poi irukalam lavaa. Apdi enna nalla manasu ungaluku.

Kadavule paathukapa nalla..... Couples ahh pirichi viduraru. Oru azhagana family ya kalachi viduraru. Ivaruku paathu ethathum pannunga...wife rubathula ??????.

Mottu unoda action ah rmba miss panra. Ipdi kuzha pinnadi poitiye. Boss intha kalyaana kalaatta paththi kadaisi varaikum yarukum theriyatha... Sollama mudichi paarunga ???????.
 
Top