Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர முன்னோட்டம் மூன்று

Advertisement

Admin

Admin
Member
சபரிமலை பயணம் அதன் பிறகு எந்த பேச்சுக்களும் மனோவிடமோ ராஜராஜனிடமோ இன்றி சென்றது. அய்யன் தரிசனம் மட்டுமே பிரதானமாய் இருக்க, விகாஸ் ஸோ விடாது அவ்வப் போது ராஜராஜனிடம் பேச்சுக் கொடுக்க

அதுவும் மலையேறும் போது மனோ வின் தோள் மேல் இருந்தவன் ஒரு இடத்தினில் மனோ கீழே இறக்கி விட்டு இளைப்பாறவும், என்னை நீங்க தூக்கங்க மாமா என்று அவன் முன் வந்து தூக்கு என்பது போல கையை நீட்ட,

சிறுவனிடம் என்னடா உனக்கு வேற்றுமை என்று மனசாட்சி ஒரு குத்து விட, அவனையும் மீறி தூக்கி கொண்டான் ராஜராஜன்.

பின்பு என்ன மாமன் தோளில் சவாரி தான் அவனிற்கு



மனோ வியந்து தான் பார்த்தான், புது ஆட்கள் யாரிடமும் போகாத விகாஸ், ஒன்றிரண்டு முறை பெரிய பாட்டியால் மாமா என்று காண்பிக்க பட்டவனிடம் எப்படி ஒட்டிக் கொண்டான் என

ரத்த பந்தங்கள் என்பது இதுதானோ என்று தோன்ற

மலையில் இருந்து இறங்கும் போது உறங்கிவிட்ட விகாஸை ராஜராஜன் கொடுக்கவில்லை, அவன் கண் விழிக்கட்டும் கொடுக்கறேன் என்று விட்டான்

இப்படியாக ஊர் வந்து சேர்ந்தனர்..

அவரவர் வீட்டிற்கு பிரியும் போது அவனிடம் வந்த விகாஸ் மாமா நாளைக்கு நாங்க ஊருக்கு போறோம் நீங்க வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட

பதில் பேசாமல் செல்லமாய் அவனின் கன்னம் தட்டி அனுப்பினான்


அவனின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்த ராஜராஜன் உங்க அத்தையை யாரும் பார்த்துக்க தேவையில்லை அவளை அவளே பார்த்துக்குவா, சீக்கிரம் உங்கப்பாவை உங்க அத்தையை கூட்டிட்டு போக சொல்லு என்று சொல்ல

இதற்கு என்ன சொல்வது என்பது போல அப்பாவை பார்த்தான் விகாஸ்,

வா என்பது போல விகாஸை பக்கத்தில் அழைத்தவன் எதோ சொல்லி அனுப்ப

அவனிடம் ஓடி வந்த விகாஸ் அத்தையை கூட்டிட்டு போக ட்ரை பண்றாங்களாம் என்று சொன்ன சின்னவனுக்கு பின்பு அப்பா சொன்னது மறந்து போக

மனோ வே ராஜராஜன் அருகில் வந்து நான் மேக்சிமம் கூட்டிட்டி போக முயற்சி பண்றேன், அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியலை என்ன பன்றான்னும் தெரியலை எங்கப்பா அம்மா வை பார்த்து ரெண்டு வருஷமாகுது நான் தான் வந்துட்டு போறேன், ஒரு வேலை அவ வரலைன்னா நீங்க பேசி இந்த உறவை முடிச்சி விடுங்க , இங்க இருக்குற வரை அவளை பார்த்துகங்க என்று முடித்தவன் திரும்ப நடக்க

கோவிலுக்கு போய்விட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட அன்று தான் மில்லிற்கு வந்தான். அரிசி மில் அவர்களது. அது மட்டுமே மிஞ்சி இருந்தது. அண்ணன்கள் இருவரும் இவன் கோவில் செல்வதால் அந்த நேரம் பிள்ளைகளின் விடுமுறையும் கூட என்பதால் வந்திருந்தனர்.

அவர்களின் வாசம் சென்னையில், இருவருமே சாப்ட்வேர் எஞ்சினியர்கள், அண்ணிகள் இருவரும் கூட அண்ணனை போன்ற வேலையில் தான் இருந்தனர்.

சொல்லப் போனால் இருவரும் வெளிநாட்டில் இருந்தனர், இப்போது ஒரு வருடம் முன்பு தான் இந்தியாவே வந்திருந்தனர். கிட்ட தட்ட இருவருமே பத்து வருடத்திற்கும் மேல் வெளிநாட்டில் இருந்ததினால் நல்ல சம்பாத்தியம்.

இதோ அவர்கள் தான் இந்த மில்லை புதுபித்து இரண்டு வருடம் முன் ராஜராஜனிடம் கொடுத்து இருந்தனர். அவனின் திருமணம் முடிந்த பிறகு அவன் கௌரவமாய் இருக்க வேண்டும் என்பதற்காக
 
:love: :love: :love:

ஒரு பக்கம் அங்கை பாவம்.......
இன்னொரு பக்கம் ராஜராஜனும்......
என்ன தான் நடந்தது........

விகாஸ் குட்டி :love::love::love: செமடா நீ........ நீ இருந்தால் உங்க மாமாவை வழிக்கு கொண்டுவரலாம் போல....... டெய்லி போன் பண்ணுடா குட்டி.......
உங்கத்தையை பார்க்க கூப்பிடுறியா??? மாமா வந்துடுவாரா என்ன???

வேண்டாம்னு சொல்றான் ஆனால் பார்த்துக்கவும் செய்றான்.....
என்ன மாதிரி ஆளு இவன் :unsure::unsure::unsure:
 
Last edited:
கல்யாணம் முடித்து கௌரவமா இருக்கணும்னு மில்லை குடுத்து கடைசியில் கல்யாணமே கௌரவத்தை குலைக்குதே........

இவ்ளோ பெரிய குடும்பத்தில் பெரியப்பா பேச்சு தான் வேதவாக்கா???
தாத்தாவின் ஆசையை பேரன் நிறைவேற்றணும்.......
பையன் நிறைவேற்றவேண்டாமா???
என்னடா பெரிய குடும்பம் :mad:
 
Last edited:
Top