அடேய் தம்புடு, அம்மு சரியாதான சொல்லுறா. உன்னோட ஆரோக்கியத்தில் தான் தன் நலம்னு நினைக்கிறா. அவளோட கவலை என்ன நொன்னனு கேட்க வேண்டியது, அப்புறம் அவ இது தான் பிரச்சினைனு சொன்ன பிறகு அவ விரல் கொண்டு அவ கண்களை குத்துற மாதிரி ஏன் பேசுற.
இதுதான் ஆம்பளை புத்திங்கிறது. எவ்வளவு இக்கட்டான நிலைமை வந்தாலும் அதை புரிஞ்சிக்க முயற்சியே பண்ணுவது கிடையாது.
உனக்கு உடம்புக்கு ஆகாத ஒன்னு உங்க அம்மா தராங்க அது உன் உடல்நிலைக்கு விஷத்தன்மையானதுனு அவ பயப்படுறா. அதனால வந்த பிரச்சனை தான் இது அதை சரிபண்ணாம. எங்க அம்மா சோத்த பொங்குவா குழம்பு ஊத்துவானு வாக்குவாதம் பண்ணுகிற. நல்லாயில்ல சொல்லிவிட்டேன்.


