
எழுத்தாளருக்கு: லவ் & லவ் ஒன்லி போட்டி கதையில் காதலை மையமாகக் கொண்டு எழுதத் தொடங்கிய கதையின் மையக் கருவாக நாயகன் நாயகியின் பரிசுத்தமான காதலுக்கு ஊடாக குடும்பத்தினருக்குள் நடக்கும் சிக்கல்களையும்
ஐரிஸ் மயூரி: நம் கதையின் நாயகி சிறு வயதிலேயே பெற்றவளை இழந்து தந்தை யார் என்றே தெரியாமல் அன்னையின் தந்தை ஒஸ்கர் தாத்தாவிடம் வளர்ந்தவள்
அறியாத வயதிலேயே நாயகனிடம் (தேவசேனாபதி) மனதை பறிக்கொடுத்தவள்
தேவசேனாபதி: நம் கதையின் நாயகன் பாட்டி கோசலை, பெற்றோர் கந்தசாமி _ பவுனும்மாள், சித்தப்பா செந்தில் _ கனகா அவர்களின் மகள்கள் கார்திகா மற்றும் வேல்விழி, அத்தை தெய்வானை _ ராஜேந்திரன் அவர்களின் மகள்கள் பூஜா மற்றும் பூர்விகா என்று குடும்பத்தின் ஒற்றை தலை மகனாகப் பிறந்தவன்
காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற தனது லட்சியத்தை குடும்பத்திற்காக துறந்து
எத்தனை விசேஷ குணங்கள் உண்டோ அத்தனைக்கும் உரித்தானவன்
நாயகிக்கு (மயூரி) சற்றும் குறையாமல் தனக்குள்ளே பல ரகசியங்களை வைத்திருப்பவன் அவனின் வாழ்க்கைக்குள் அவனே அறியாத பல ரகசியங்களை கொண்டுள்ளவன்
சிறு வயதிலேயே நாயகியின் மனதை பறித்து தன் மனதை அவளிடம் பறிகொடுத்தவன்
கதைக்களம் நிறைய ரகசியங்களையும், திருப்பங்களையும் கொண்டவை என்னென்ன என்று பார்கலாமா....!!!!
1. நாயகன் நாயகியின் திருமணத்திற்கு யாரிடம் இருந்து எதிர்ப்பு வராது என்று நினைத்தோமோ அவர்களிடம் இருந்து.,.. தன் ராசா (பேரன்) மீது உயிரையே வைத்திருக்கும் கோசலை பாட்டி மற்றும் பேத்தியை வளர்ந்து ஆளாக்கிய ஒஸ்கர் தாத்தா...
நடந்தது என்ன ???!!!
2. மயூரியின் தந்தை அவளின் தாய்க்கு விருப்பம் இல்லாமல் அவளை பலவந்தபடுத்தியவன்
3. கூட்டுக் குடும்பமாக இருந்த தேவாவின் சித்தப்பா குடும்பம் மனைவி மகளாள் நடந்த குடும்ப அரசியல் முன்னிட்டு தனிக் குடித்தனம் போகின்றனர்... நடந்தது என்ன.....?!!!
4. அத்தை மகள் பூஜா தேவா மீது விருப்பம் கொள்ள அதனை தேவா மறுத்து விட அவளின் தந்தை ராஜேந்திரன் மற்றும் பெரியப்பா ராஜப்பன் மூலம் முடிந்த வரன் டாக்டர் நிர்மல்
5. தேவசேனாபதி கிரைம் பிரான்ச் ஆபிசர் என்பதும் அதனை ஏன் தன் குடும்பத்திடம் மறைத்தான்... நடந்தது என்ன....???!!!!
6. தேவசேனாபதியின் பெற்றோர் என நினைதிருந்தவர்கள் அவனை பெற்றவர்கள் அல்ல அவனை வளர்த்தவர்கள் என்பதும் தேவா அவர்களிடம் எப்படி வந்தான்
7. தேவாவின் பெற்றோர் காவல்துறை அதிகாரியான வீரராகவன் _ ராஜலட்சுமி காதல் திருமணம் புரிந்தவர்கள்
இத்தனை திருப்பங்களுக்கு இடையே நாயகன் தன்
மனம் கவர்ந்தவளை
இதயத்தில் நிறைந்தவளை
நேசத்தினால் தன் நெஞ்சில் நிறைந்தவளை
தன் காதலியான மயூரியை யாருக்காவும் எத்தகைய கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் எவருக்கும் விட்டுக்கொடுக்காமல் திருமண பந்தத்தில் கரம் பிடிக்கிறான் நாயகன் தேவசேனாபதி
நடந்த அத்தனை சம்பவங்களின் ரகசிய முடிச்சுகளை நாயகனைக் கொண்டு கதாசிரியர் அவிழ்க்கும் விதம் மிக அருமை
பச்சை கண் அழகியின் மீது தேவசேனாபதி கொண்ட காதல்... ஆளுமை நிறைந்த காதல்
ரசனை மிகுந்த காதல்
தன்னை ரட்சிக்க வந்த தேவா மீது மயூரி கொண்ட காதல்....
அழுத்தமான காதல்
அழகான காதல்
தன் தேவைகள் அத்தனைக்கும் அவன் ஒருவனே வேண்டும் என்ற அடமான காதல்
இருவரின் பரிசுத்தமான காதலுக்கு கிடைத்த வரமாக கடவுள் தந்த பரிசாக மூன்று குழந்தைகளின் வரவு அவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு சான்றாக
கெட்ட எண்ணம் கொண்டவர்கள் சுயநலத்தின் பிம்பமாக உள்ளவர்கள் நல்லவர்களை விட்டு தள்ளியே நிற்க வேண்டும் என்பதனை எடுத்துக் கூறிய கதை
நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையை நிரூபித்த கதை
நல் உள்ளம் கொண்ட உண்மையான உறவுகள் ஒன்றுக் கூடினால் உற்சாகம் பொங்கும்
கடினமான கதைக்களத்தை எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுப்புடன் கொண்டு சென்று சுவாரஸ்யமாக முடித்த கதாசிரியர் @oviya silaye அவர்களுக்கு வாசகர்களின் பாராட்டுகளும்
அருமையான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Last edited: