Yes, நீத்தார் கடனை யார் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம் கயாவில் -புரியுது.ஒத்துக்கறேன்.ஆமாம், இது கலியுகம், இந்த ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்திலே தண்டனை!
யாரும் யாருக்கு வேண்டுமானாலும் நீத்தார் கடன் செய்யலாம் என்பது கயாவின் சிறப்பு!
தெரிஞ்சவங்க செல்லப் பிராணிகளுக்கு கூட செய்யலாம்!
வித்யா அவள் வீட்டு ஆட்களுக்கு செய்யும் போது( ராகவ், நந்தினி அரசு வள்ளி மயில் போன்றோர்) ராஜேந்திரன் ஈ ஸ் வரிக்கும் சேர்த்து செய்தாள். இவர்கள் இருவருக்கும் செய்ததை ஹை லைட் பண்ணியது அவளின் பெருந்தன்மையை காட்ட!
ஆனா அது ஒருவருக்கு(for human beings) செய்ய 'கடமைப்பட்டவங்க' செய்ய முடியாத அல்லது அவங்களோட தொடர்பு அந்த நபருக்கு இல்லாத பட்சத்தில் தான் பொருந்தும். இங்க ஈஸ்வரியோட மகன் இருக்கான் அவனுக்கு அம்மா பற்றிய updates-ம் இருக்கு. அது வித்யாவுக்கும் தெரியும்.So வித்யா ஈஸ்வரிக்கு செய்யறது தேவையற்றது.
அதை விட முக்கியமான விஷயம் என்னன்னா இந்த குணங்கள் இருக்கே அதாவது:
தன்மை-பெருந்தன்மை-மன்னிப்பு இதுக்கெல்லாம் ஒரு அர்த்தம்-ஒரு உன்னதமான தகுதி இருக்கு. அதுவே மாசு படும்படியான பெருந்தன்மை சரியா? அது தான் கேள்வி.
Ok. அது சரின்னே வெச்சுப்போம். அப்ப தன்னோட புருஷனை நேரடியாக கொலை பண்ண முயற்சி செஞ்சு இறுதியில் மறைமுகமா அவங்க எடுத்த முயற்சிகளால் வெற்றியும் கண்ட ஈஸ்வரி கிட்ட இவ்வளவு பெருந்தன்மையோட இருக்க முடியும்னா, ஒரு ஆதங்கத்துல மாப்பிள்ளையை பத்தி பொலம்பின அம்மாகிட்டயும் அதை காட்டியிருக்கணுமே
இப்படி நான் சொல்லறதால அவ, தன்னோட அம்மாவும் அக்காவும் பேசினதைக் கேட்டு கொடுத்த reaction தப்புன்னு சொல்லலை. அந்தளவு தன்மானம் இருக்க தான் வேண்டும்.
அதனால வித்யாவோட குண விஷேஷம் இருவருக்குமே (அம்மா and step மாமியார்) ஒரே மாதிரி இருக்கணும்-இருந்திருக்கணும். நான் சொல்ல விழைவது அதுதான்.