மஞ்சள் வண்ண சுடிதாரில் பளிச் என்றிருந்த வசுமதி, ஹாண்ட் பேகை மார்போடு அனைத்தபடி மணியைப் பார்த்தாள். மணி 9-40. அவளது அவஸ்தை புரியாமல், மெரூன் வண்ண துப்பட்டா காலை நேரக் காற்றோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருத்தது.
“ரொம்ப நேரம் ஆகுமா?”
“மேடம்.. பத்தே பத்து நிமிஷம்தான். அப்படி உட்காருங்க முடிஞ்சிடும்.”
ஓரமா இருந்த பிளாஸ்டிக் ஸ்டுலைக் காட்டினான் அந்த மெக்கானிக் சிறுவன்.
வர லேட்டாகும் என்பதை ஆபீஸுக்குத் தெரிவித்துவிட்டு, செல்போனைப் பார்த்தபடி ஸ்டூலில் அமர்ந்தாள்.
“என்ன குட்டி சவுக்கியமா?” -என்றபடி அருகில் இருந்த மர ஸ்டூலில் வந்து அமர்ந்தான் மதன்.
அதிர்ச்சியாய்ப் பார்த்த வசுமதியைக கண்டதும் நெளிந்தான்.
“ஏங்க.. இந்தப் பையன் பேரு குட்டிங்க! நீங்க ஏதும் தப்பா நினைச்சுக்காதீங்க.”
“எங்கடா உங்க ஓனரு? ரவுண்ட்ஸுக்குப் போயிட்டாரா?”
“எனக்கென்னண்ணா தெரியும். இப்பத்தான் வண்டி எடுத்துட்டுப் போனாரு. நீங்க வேணா போன் பண்ணிப் பாருங்க.”
திரும்பிப் பாராமல், அந்த ஹோண்டா ஸ்கூட்டரின் பின் வீலைக் கழற்றியபடியே சொன்னான் சிறுவன்.
“குட்டி டீ குடிப்பமாடா?”
“ஐயைய்யே நிம்மதியா பஞ்சர் ஒட்ட வுடுண்ணா.. இந்த அக்காவை அனுப்பிட்டு டீ வாங்கியாரேன்.
பாவம் அவங்களுக்கு அவசரம்போல!”
“யப்பா.. கடமை வீரா.. நீ வேலையப் பாரு. நான் பார்த்துறேன். மாஸ்டர் ரெண்டு டீ!”
அங்கிருந்தபடியே எதிர்சாரியில் இருந்த டீக்கடைக்கு சொன்னான் மதன்.
வசுமதிக்கு சிரிப்பு வந்தது. மதனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
“ஸாரிங்க.. உங்களுக்கு டீ?”
“ஐயோ எனக்கெல்லாம் வேண்டாம். நீங்க குடிங்க.”
“இல்ல, மாஸ்டர் மூணு!”
*******
காலிங் பெல் சத்தம் கேட்டு, மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறே வாசலுக்கு வந்தார் சரவணன்.
“சரவணன் வீடுதானே?”
“ஆமா.. நான்தான் சரவணன். யாரு நீங்க?”
“ஏ சரவணா.. நான் மேலத்தெரு மாரிமுத்துப்பா.. கிருஷ்ணாபுரம். நல்லாருக்கியா? “
ஐயோ அண்ணாச்சி நீங்களா? வாங்க வாங்க. எனக்கு சட்டுன்னு அடயாளம் தெரியல.. உள்ள வாங்க.
அவரை கையோடு அழைத்துச் சென்று ஹாலில் அமர வைத்தார் சரவனன்.
சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்த மலரும் வரவேற்றாள்.
“வாங்க! இவங்க... நம்ம ரவியண்ணனோட அண்ணன்தானே?”
“ஆமா தாயி.. பரவால்ல ஞாபகம் வச்சிருக்கீங்க.”
“ஊர்ல எல்லாரும் நல்லாருக்காங்களா?”
“ஊர்ல என்ன கொறைச்சல்.. நான் பத்து நாளா இங்கதான இருக்கேன்.”
“இங்க சென்னையிலயா? என்ன அண்ணாச்சி சொல்றீங்க?”
“ஆமாய்யா.. பெரியவன் கல்யாணம் முடிச்சி, இங்கதான இருக்கான். மூலக்கடையில.”
மலர் எடுத்து வந்த காபி தம்ளரை வாங்கிக் கொண்டார் மாரிமுத்து.
“நம்ம சுரேசுதான் ஒன் அட்ரசைக் கொடுத்து, நேரமிருந்தா ஒரு எட்டு பாருங்கன்னு சொன்னான். நமக்கும் பொழுது போவனாங்குது. எவ்வளவு நேரம்தான் கழுதை அந்த டிவியையே பார்த்துட்டு இருக்குறது... இதுதான் உன் பிள்ளைகளா?” சுவரில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்துக் கேட்டார்.
“ஆமாண்ணாச்சி, சின்னவன் பன்னெண்டு படிக்கான். பொண்ணு படிச்சிட்டு பெரம்பூர்ல ஒரு கம்பெணியில ஹெச்சாரா இருக்கா. சாயந்திரம் 6 மணிக்கு மேல ஆகும் வீட்டுக்கு வர.”
தாடையைச் சொறிந்தவாறு ஆழ்ந்த யோசனைக்குப் போனார் மாரிமுத்து.
“மீறுன பிள்ளையா தெரியுதே மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சிட்டீங்களா எப்படி? “
”பார்த்துக்கிட்டே இருக்கோம். ஒண்ணும் அமையமாட்டேங்குதே.”
“ஏம்ப்பா. புள்ளை எப்படி எதிர்பார்க்களாம்?”
“அவ எதையும் எதிர்பார்க்கலை அண்ணாச்சி. அம்மாக்காரிதான் மருமவன், அப்படியிருக்கணும் இப்படியிருக்கணும்னு எதிர்பார்க்காப்ல.”
உள்ளே எதையோ கிண்டிக்கொண்டிருந்த மலருக்குக் கோபம் வந்துவிட்டது.
“இவுக கெடக்காக அண்ணாச்சி, படிச்ச புள்ள, கை நிறைய சம்பளம் வாங்குறவளை எடுத்தோம் கவுத்தோமுன்னு ஒரு சைக்கிள் கடைக்காரனுக்கோ, மெக்கானிக் வேலை பார்க்குறவனுக்கோ கட்டிக்கொடுத்துட முடியுமா?”
“அதுக்காக.. இஞ்ஜினீயரு, ஐடி மேனேஜருன்னு பார்த்தா.. அவங்க கேக்குறதை நம்மால போட முடியுமா? அதையும் பார்க்கணும்ல.”
“சரி சரி.. சூடாவாத. காலம் நேரம் கூடி வந்தா எல்லா நல்லபடியா நடக்கும்.”
அப்போதைக்கு விவாதத்தை மாரித்து முடித்து வைக்க, கரண்டியோடு உள்ளே போய்விட்டாள் மலர்.
“நான் வேற ஒண்ணு பேசணும்னு வந்தேன், பேச்சு வேற பக்கம் போயிடுச்சி”
“என்ன சொல்ல வந்தீங்க? “
நம்ம பிச்சை வாத்தியார் மகனை ஆஸ்பத்திரியில சேர்த்துருக்காங்களாம் தெரியுமா? “
யாரு..? “
“என்னப்பா இது, தொரைப்பாண்டி தெரியாதா? கிழக்க ரைஸ் மில்லு வச்சிருக்கானே.. ஒரு வகையில் ஒங்களுக்கும் சொந்தம்தான் வரும்..” “சொந்தம்ன்னு நீங்க சொல்லிக்கிட வேண்டியதுதான். அவுக சொத்துக்காரங்க. நம்ம போயி கிட்டத்துல நெருங்க முடியுமா? அதுசரி என்னவாம் அவனுக்கு?”
“அவனை எப்படியாச்சும் ஒரு டிகிரி படிக்க வச்சி, கௌரவமான வேலையில உட்கார்த்திப்புடணும்னு வாத்தியாரு எவ்வளவோ பிரயாசைப் பட்டாரு. அவன் என்னடான்னா, டிகிரியும் வேணாம் வேலையும் வேணாம், பாட்டையா வீட்டு மில்லைப் பார்த்துக்கிடுதேன்னு ஒத்தைக்கால்ல நின்னுட்டான். நாலு காலிப்பயல்களைச் சேர்த்துக்கிட்டு ஒரே குடி, சினிமான்னு திரிஞ்சான்.”
“ஆடுன ஆட்டத்துக்கு இப்ப படுத்துட்டானோ?”
“ஆமா.. நல்லாச்சொன்னே. போரூர்ல எதோ பெரிய ஆஸ்பத்திரியல் சேர்த்திருக்காங்களாம்.”
“கல்யானம் முடிச்சிட்டானா?”
“எங்க முடிச்சான்.. வயசு முப்பத்தஞ்சி தாண்டப்போவுது. அவன் நெனைக்கும்போது அவரு வெரைச்சிக்கிட்டு இருந்தாரு.
இப்ப, அவரு சொல்லும்போது இவன் வெரைச்சிக்கிட்டு நிக்கான். அதான், முடிஞ்சா ஒரு எட்டு போயி பார்த்துட்டு வாங்கன்னு சுரேஷ் சொன்னான். பிச்சை வாத்தியாரும். வந்துருக்காராம். அதான் போயிட்டு வரலாம்னு நெனச்சேன் .
என் மவன் கடையைப் போட்டுட்டு வரத் தோதுப்படாதுன்னுட்டான். சரவணன் அண்ணனை பார்க்க முடிஞ்சா பார்த்து,
அவரும் கூட வந்தா ரெண்டு பேருமா போயிட்டு வாங்க. கார் புக் பண்ணித் தர்றேன்னான்.”
“நான் வந்து என்ன பண்ண? நீங்க வேற..”
“அட என்னப்பா இப்படிப் பேசுற? நீங்க என்ன கட்டியா உருண்டுட்டீங்க? அவரு ஊர்ல் இருக்காரு, நீங்க இங்க சென்னையில கெடக்கீக. போக்குவரத்து இல்லை அவ்வளவுதான... என்ன இருந்தாலும் வாத்தியாரு உனக்கு மச்சான் முறை வேணுமில்ல. அவருக்காகவாச்சும் பாக்க வேண்டாமா? நீ ஒரு வார்த்தை சொல்லு தாயி.”
“அது சரி, முறை இருக்கோ இல்லியோ ஒரே ஊர்க்காரவுக போயிப் பார்த்தா. அந்தப் பெரியவருக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்ல.” தர்மசங்கடமாய் நெளிந்தார் சரவணன்
“சரிசரி... நேரம் ஆயிருச்சி. சாப்பிட வாங்க ரெண்டு பேரும். சாயந்திரமா வெயில் தாள போயிட்டுவாங்க.” என்றாள் மலர்.
***

Last edited: