அத்தியாயம் 1
ஆதவனின் பொன்னுலகை காண கானக்குயில்கள் கூத்தாடும் அதிகாலை நேரத்தில் அந்தப் பிரம்மாண்டத் திருமண மண்டபத்தில் நாகரிக உடை அணிந்த ஆண்களும், பட்டுப் புடவையிலும் உடம்பு முழுக்க நகையிலும் ஆங்காங்கே பெண்கள் ஜொலிக்க மண்டபத்தின் வெளியே அமுதன் weds நிகிதா என்ற எழுத்துக்கள் பொன்னிறத்தில் மின்னியது.
அங்கே இருக்கும் பெயரை ஓர் உருவம் தன் கைகளால் தடவிப் பார்த்தது. கண்களில் கண்ணீருடன் இருந்த உருவத்தின் தோளில் ஒரு கரம் பதிந்தது.
"சிவா, இங்கே என்ன பண்ற? இன்னமுமா மறக்க முடியாம இருக்க? நடந்ததை மறந்துட்டு உன்னோட வேலையைப் பாரு... இதுக்கு மேல நினைச்சிட்டு இருக்குறது சுத்த பைத்தியக்காரத் தனமா இருக்கு. நீ பழசை நினைக்கிறது முட்டாள் தனம் சிவா. முதல்ல இங்கிருந்து போலாம் வா..." என்றபடி சிவா என்ற சிவயாழினியை கைப்பிடித்து அழைத்துச் சென்றாள் நந்தினி.
சிவயாழினியும், நந்தினியும் சிறு வயது முதல் இணைபிரியா தோழிகள். அடித்தாலும் சண்டை போட்டாலும் அடுத்த நொடி எல்லாம் மறந்து பேசும் உயிர்த் தோழிகள்.
சிவயாழினிக்கு தாய் தந்தை இல்லை. தந்தையின் தங்கையின் நிழலில் தன் வாழ்வை வழி நடத்துகிறாள்.
அவள் அத்தை தேவகிக்கு சிவாவை மிகவும் பிடிக்கும். தன் அண்ணன் தனக்காக விட்டுச் சென்ற பொக்கிஷம் தான் சிவயாழினி, அப்படித்தான் அவர் நினைத்தார். அவர் நினைத்தால் மட்டும் போதுமா என்ன அவரின் குடும்பத்திலும் அப்படி நினைக்க வேண்டுமே!
குழந்தையிலேயே தாய் தந்தை இல்லாத சிவாவை தேவகியின் வீட்டில் ராசி இல்லாதவளாகத்தான் பார்த்தனர்.
தேவகியின் மாமியாரான சௌந்திரம் தான் அதற்கு முக்கிய காரணம். முன்பே தேவகியின் பிறந்த வீட்டை மதிக்கமாட்டார் சௌந்திரம்.
தேவகியின் கணவரான வாசுதேவர் தாயின் சம்மதம் இல்லாமல் தன்னுடன் படித்த தேவகியை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.
பிடிக்காத மருமகள் என்றாலும் கூட மகன் விரும்பி திருமணம் செய்து விட்டானே என்ற எண்ணத்தில் மருமகளிடம் பெரிதாய் ஒட்டி உறவாடிப் பேசமாட்டார்.
அதே நேரம் கொடுமையும் படுத்தமாட்டார். அவருக்கு நன்றாகத் தெரியும் தன் மருமகளைக் கொடுமை செய்தால் நிச்சயம் மகனால் வெறுக்கப்படுவோம் என்று அறிந்தவர் தவறியும் அந்த முயற்சியைச் செய்யவில்லை. தேவகி வாசுதேவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் அமுதன், இரண்டாமவன் அகிலன்.
மகனின் விருப்பத்திற்காக தேவகியை ஏற்றுக் கொண்டவரால், தேவகி அந்த வீட்டிற்கு வாழ வந்த ஐந்தாவது வருடத்தில் தமையனும் அவனின் மனைவியும் இறந்துவிட்டதால் அனாதையாகக் குழந்தையாக சிவயாழினியை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அவரை ஏற்றுக் கொண்ட சௌந்திரத்தால் சிவயாழினியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மருமகளை எதிர்த்து நின்றார்.
அவருக்கு நன்றாகத் தெரியும் தன்னை தன் மாமியாருக்குப் பிடிக்காது என்று. ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காகக் கைக்குழந்தையான சிவாவை அதுவும் பெண் குழந்தையை அப்படியே அனாதையாக விடமுடியவில்லை அவரால்.
அதனால் முதல் முறையாகத் தன் மாமியாரை எதிர்த்துப் பேசினார்.
வாசுதேவனும் தன் மனைவியின் பக்கம் நிற்க சௌந்திரத்தால் யாழினியை அங்கிருந்து அவ்வளவு எளிதில் விரட்ட முடியவில்லை.
தன் மருமகளைக் கோபமாய் பார்த்தவர் தன் பேரன்களை சிவாவின் பக்கம் திரும்பக்கூட விடவில்லை. அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாத தேவகி தன் மருமகளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்.
ஆனால், அவர் அறியாமல் சௌந்திரம் அச்சிறுகுழந்தையை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.
அதிலும் மூன்று வயது சிவாவை தன் பேரன்களிடம் காட்டி அவள் ராசி இல்லாதவள் என்றும் கூறியவர் அவளிடம் நெருங்கி விளையாடக் கூட அனுமதிக்கவில்லை.
தன் பேரன்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை சிவாவிற்கு அவர் கொஞ்சமும் கொடுக்கவில்லை.
தன் மகன் மருமகள் அறியாமல் அக்குழந்தையின் மனதைக் கொன்றார் சௌந்திரம்.
பாட்டியின் வாக்கு வேதவாக்கு என்பதைப் போல் அமுதனும் சிவாவின் மேல் வெறுப்பை மட்டுமே வளர்த்துக் கொண்டான்.
விதையாய் விழுந்த வெறுப்பு மரமாய் விருட்சமாய் ஓங்கி வளர்ந்திருந்தது அமுதனுக்கு.
அவளைக் கண்டாலே பத்தடி தள்ளி நிற்பவன் அவளைத் தன் கண் முன்னே எப்போதும் வரவிடமாட்டான். அப்படி அவள் அறியாமல் அவனின் முன்னே வந்தால் அன்று அவளை வார்த்தையாலே வதைத்துக் கொன்று விடுவான்.
அவனின் வெறுப்பை அறிந்தாலும்கூட சிறு வயதில் இருந்த தன் அத்தை மகன் என்ற உரிமையுடன் அவள் அவனை நேசிக்க ஆரம்பித்திருந்தாள். அதை அவள் யாரிடமும் சொல்லவில்லை.
அவளுக்கு நன்றாகத் தெரியும் அவளின் நேசத்தை வெளியே சொன்னால் நிச்சயம் அதற்கு எதிர்வினை எப்படி இருக்கும் என்று. அதனால் தன் நேசத்தைத் தன் மனதுக்குள் போட்டு அழுத்திக் கொண்டாள்.
ஆனால், அகிலன் அப்படி இல்லை. சிறுவயதிலிருந்து பாட்டியின் பேச்சைக் கேட்டாலும்கூட தாய் தந்தையின் நியாயக் குணம் அவனிடமும் இருக்க சிவாவை அவன் எதுவும் பேசவில்லை. அதற்காக ஒட்டி உறவாடினானா என்றால் அதுவும் இல்லை.
அவளை அதிகத் தொந்தரவு செய்யாமல் விலகி நின்று கொண்டான்.
ஆனால், அமுதனும் சௌந்திரமும் அவளை வார்த்தையால் வஞ்சித்தே கொன்றனர். அதை யாருக்கும் தெரியாமல் செய்ததில் தான் அவர்களின் சாகசம் நிறைந்திருந்தது.
சிவாவை அமுதன் அகிலனுடன் பள்ளியில் சேர்க்க, அன்று அமுதன் வந்து வீட்டில் போட்ட சத்தத்தில் அவனுடன் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அழுத சிவாவை சமாதானம் செய்து அரசுப் பள்ளியில் சேர்த்தனர் தேவகியும் வாசுதேவனும்.
அதில் அமுதனின் முகத்தில் வெற்றி சிரிப்பு நிறைந்திருந்தது. அதைக் கண்ட சிவாவின் முகத்தில் கவலை குடி கொண்டது.
'நீயே ஒரு அனாதை நீ எனக்குச் சமமான பள்ளியில் படிக்க வர்றியா? இதோ பாரு, நீயே அப்பா அம்மாகிட்ட சொல்லி வேற பள்ளிக்கூடத்துக்கு போற... இல்லை இங்கே தான் வருவேன்னு சொன்ன நீ ஒரு அனாதைன்னு பள்ளியில் எல்லார்க்கிட்டேயும் சொல்லி உன்னை அவமானப்படுத்திடுவேன் ஜாக்கிரதை...' என்று தன்னை மிரட்டியதை யாரிடமும் சொல்லாமல் அத்தை மாமனைச் சமாதானம் செய்து அரசுப் பள்ளியில் சேர்ந்து கொண்டாள்.
அங்கே அவளுக்கு அறிமுகமானவள் தான் நந்தினி. தன்னுடைய கஷ்டத்தையும் அதிகமான சந்தோஷத்தையும் தன் தோழியிடம் மட்டுமே அதிகம் பகிர்ந்து கொள்வாள் சிவா.
அதுபோலத் தான் முதல் முறையாக அமுதனின் மேல் முளைத்த நேசத்தையும் தன் தோழியிடம் தான் கூறியிருந்தாள் சிவா.
அதைக் கேட்ட நந்தினிக்கு சிவாவின் மேல் அதிகமான கோபம் தான் வந்தது.
"உனக்கு என்ன பைத்தியமா சிவா? அந்த அமுதன் உன்னை ஒரு மனுசியா கூட மதிக்கமாட்டான். இந்த லட்சணத்துல உன்னோட காதலை மட்டும் அவன் எப்படிடீ ஏத்துப்பான்னு நினைக்குற? வேணாம் சிவா, வீணா உன் மனசுல ஆசையை வளர்த்துக்காத சரியா? அந்த அமுதனும் அவனோட பாட்டியும் உன்னை நிச்சயமா வாழ விடமாட்டாங்க சிவா..." என்று தன் தோழியிடம் மன்றாடினாள்.
"நீ அமுதன் மாமாவைத் தப்பா புரிஞ்சிட்டு பேசுற நந்து. மாமாவுக்கு என்னை புடிக்கலைன்னாலும் அத்தையும் பெரிய மாமாவும் சொன்னா நிச்சயம் அமுதன் மாமா ஒத்துப்பாரு. நீயே பாரு எங்களுக்கு நிச்சயம் கல்யாணம் நடக்கும் நந்து..." என்றபடி தன் தோழியைச் சமாதானம் செய்தாள் குழந்தை மனம் கொண்ட குமரியவள்.
தன் தோழியின் வெள்ளந்தியான குணத்தைக் கண்டு நந்தினிக்கு மனம் வலித்தது.
அவளுக்கு அமுதன் பற்றி நன்றாகத் தெரியும். ஏன் ஒரு முறை இவளின் காதலை அவனிடம் சொல்லவிடலாம் என்று பேசச் சென்றவளை ஏழை என்ற காரணத்துக்காகவே அவன் அறைக்குள் கூட அனுமதிக்காதவன், எப்படி அனாதையான சிவாவை ஏற்றுக் கொள்வான் என்று தான் நினைத்தாள்.
சிவாவும், நந்துவும் இப்போது கல்லூரியின் இறுதி வருடத்தில் இருக்கின்றனர்.
இருவரும் பொறியியல் இறுதி ஆண்டு ஆர்க்கிடெக்சர் படிக்கின்றனர்.
இருவருமே உதவித்தொகையில் தான் படிக்கிறார்கள். அவர்களின் பள்ளியிறுதி ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்று ஒரு தனியார் பொறியியல் கல்லூரியே அவர்களை அழைத்து அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்த்துக் கொண்டது.
அதைக் கண்ட அமுதனின் கோபம் அலை கடந்தது. அவன் படிக்கும்போது அந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் அவனுக்குக் கிடைக்காதது அவன் வீட்டில் அடைக்கலமாய் இருப்பவளுக்குக் கிடைத்ததில் அவளின்மேல் வன்மம் வளர்த்துக் கொண்டான்.
அவளின் படிப்பைத் தடை செய்ய எத்தனையோ வழிகளில் முயன்றும் அத்தனையும் அவனுக்குத் தோல்வியில் தான் முடிந்தது.
அதில் அவள்மேல் இன்னுமுமாய் வன்மம் கூடிப் போனது.
ஆனால், அவனின் வன்மம் வெளிப்படத் தோதாய் நேரம் அமையவில்லை.
ஆனால், தன் வீட்டில் அவள் ஒரு வேலைக்காரி என்ற நிலையில் தான் அவளை வைத்தான்.
அவன் என்ன சொன்னாலும் அதை முகம் சுளிக்காமல் அவள் செய்வதைக் கண்டவனுக்கு அவள் அவன்மேல் வைத்திருக்கும் காதலும் புரிந்தது.
அவளை அதற்கு மேலும் தண்டிக்காமல் அவளிடம் இயல்பாய் பேசி பழக ஆரம்பித்தான்.
அதில் சிவா சந்தோஷத்தில் கை கால் புரியாமல் சந்தோஷத்தில் திளைத்தாள்.
அன்றும் அப்படித்தான் அவன் வருவதற்காகக் காத்திருந்தவள் அப்படியே ஹால் சோபாவில் உறங்கிப் போகப் போதை தள்ளாட்டத்துடன் வந்தவன் அவளை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தான்.
அன்று அவனின் தாய், தந்தை, தம்பி என அனைவரும் உறவினர் திருமணத்திற்குச் சென்று விட வயதான சௌந்திரமோ மாத்திரையின் உதவியால் உறங்கிவிட இவனோ ஒரு புராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்ததில் நண்பர்களுடன் மது போதையில் திளைத்தவன் அதே போதையில் வீட்டுக்கு வர அங்கே ஹாலில் படுத்திருந்தவளைப் பார்த்தவனின் கண்களில் என்ன இருந்ததுவோ அவனே அறிவான்.
மெல்ல அவளருகில் வந்தவன் அவளைத் தன் இரு கைகளாலும் அள்ளி எடுத்தவன் அதே போதையுடனே தன் அறைக்கு அவளைத் தூக்கிச் சென்றான்.
தன் படுக்கையில் அவளைப் படுக்க வைத்தவன் மெல்ல அவளருகில் அமர்ந்து அவளின் வதனத்தையே பார்த்தவன் அவளின் தாவணியை மெல்ல அவளின் உடலிலிருந்து அகற்றினான்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை.
அவளின் பெண் உடலின் வனப்பு ஆடவனை அசைத்துப் பார்த்தது.
மெல்ல அவளின் ரவிக்கையிலும் தன் கையை கொண்டு சென்றான். அதே நேரம் ஏதோ உள்ளுணர்வு உந்தக் கண்களைத் திறந்து பார்த்தவள் தன் முன்னே இருந்தவனைக் கண்டு,
"மாமா..." என்று ஆசையாக அழைத்தாள்.
அவளின் அழைப்பு அவன் காதுகளில் கொஞ்சமும் விழவில்லை. அவனின் பார்வை எங்கும் அவளின் கழுத்திற்குக் கீழே தான் இருந்தது.
அப்போது தான் அவனின் பார்வையைக் கவனித்தவள் தன்னைப் பார்த்து சுத்தமாய் அதிர்ந்து போனாள்.
தன் கைகளைத் தன் முன்னே வைத்து மறைத்தவள்,
"மாமா இது தப்பு... இப்படி பண்ணாதீங்க..." என்று அழுதாள்.
ஆனால், அவன் அடுத்துக் கூறிய வார்த்தையில் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
அவளின் அதிர்ச்சியைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாதவன் மதுவின் பிடியில் இன்னும் என்ன கூறினானோ ஓங்கி அவனை அறைந்திருந்தாள் சிவயாழினி.
அப்படி என்ன கூறினானோ? பூமாதேவியாய் இருந்தவள் காளியாய் உருமாறிய காரணம் தான் என்னவோ?
அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம் பட்டூஸ்.
தீபம் ஏற்றும்...