இருளோடு தீபம் ஏற்றினாய் 8

Advertisement

ரமா

Active member
Member
அத்தியாயம் 8


"என்னடி என்னைப் பாத்ததும் அத்தனை பயம் வந்துடுச்சே உன்னோட கண்ணுல..." என்று அவளைப் பார்த்து எள்ளலாய் சிரித்தான் அவன்.

அவனைப் பார்த்து நக்கலாய் சிரித்தவள், "எது உன்னை பாத்து நான் பயந்தேனா! உன்னைப் பாத்து எனக்கு என்னடா பயம்?" என்றாள் ஆத்திரமாய்.

"பார்றா ஜான்சிராணிக்கு பயம் இல்லை போல..." என்றான் யோசித்தபடி.

"இதோ பாரு தேவையில்லாம பேசிட்டு இருக்க எனக்கு நேரமில்லை. முதல்ல என்னோட கட்டை அவுத்து விடு. நான் என்னோட வீட்டுக்குப் போகணும். என்னோட ஃபிரண்ட் வேற என்னைத் தேடிட்டு இருப்பா, முதல்ல என்னோட கட்டை அவுத்து விடுடா..." என்றாள் கோபத்துடன்.

"வெயிட் பேபி! உன் கட்டையும் அவுத்து விட மாட்டேன். அதுபோல இங்கிருந்து அவ்வளவு சீக்கிரம் நீ போகவும் முடியாது. நாளைக்கு உன்னோட பேர் ஊர் பூரா நாறிப்போய் வரும். அதுல நீ தூக்குல தொங்கணும்டி... அதைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன்டி... இதுதான் உனக்கு நான் தர்ற தண்டனை..." என்றான் வன்மத்துடன்.

"ப்ளீஸ்! இதோ பாரு அப்படி நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்? நீ பண்ணது தப்பு அதுக்கான தண்டனை தான் நான் வாங்கி கொடுத்தேன்" என்றாள் குமுறலாய்.

"எது என்ன பாவம் பண்ணியா? உன்னால என் வீட்டுல இருந்தே நான் வெளியே வந்தேன்டி... என்னைப் பெத்தவங்க என்னை வெறுத்தாங்க... என் கூடப் பிறந்தவங்க என்னை வெறுத்தாங்க... நான் உயிரே வச்சிருந்தவ என்னை விட்டு ஒரேடியா போயிட்டா... இதெல்லாம் யாரால உன்னால தானே? நீ நிம்மதியா வாழக்கூடாதுடி... உன் வாழ்க்கையில் நிம்மதிங்கற ஒன்னே இருக்கக் கூடாதுடி... இங்கேயே கிடந்து சாகுடி..." என்றவன் அங்கிருந்து அந்த அறையை மீண்டும் அடைத்து விட்டு வெளியே சென்று விட்டான்.

சுத்தமாய் காற்றுக் கூடப் புகாத நிலையில் சற்று நேரத்தில் அவளுக்கு மூச்சுத் திணறி அப்படியே மயங்கிச் சரிந்தாள் பேதையவள்.


***

இங்கே அவளைத் தேடி கல்லூரி வளாகம் முழுவதும் தேடியபடி வந்தவளுக்கு அவள் எங்கே இருக்கிறாள் என்று கண்டுபிடிக்க முடியாமல் போக அங்கேயே மரத்தடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

"சிவா, எங்கேடி இருக்க எனக்குப் பயமா இருக்கு சிவா... சீக்கிரமே வந்துடுடி... உன் அத்தை கேட்டா நான் என்னடி பதில் சொல்லுவேன்?" என்று கலங்கியபடி அந்த இடத்தில் அழுது கொண்டு அமர்ந்திருந்தாள்.

அப்போது தான் கல்லூரி வந்த ருத்ராவும் தன் காரை விட்டு இறங்கி கல்லூரி வளாகம் முழுவதும் தேடினான்.

ஆனால், அவனின் பார்வைக்குப் பேதையவள் கிடைக்காமல் போக அவனோ உள்ளம் சோர்ந்தபடி தன் அறைக்கு வந்தான்.

ஏனோ எதற்கோ தற்சமயம் முழுக்க அவனின் மனதில் முழுதாய் அவளின் நினைவு மட்டும் தான்.

அவன் வந்ததை அறிந்து கல்லூரி முதல்வர் அவனை வந்து பார்க்க அவனோ அவரை பார்த்து,

"அன்னைக்கு கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆனவங்களோட பயோடேட்டா கொண்டு வர்றீங்களா?" என்று கேட்டவன் ஏதோ யோசனையில் அப்படியே அமர்ந்திருந்தான்.

"சரிங்க சார்..." என்று சென்றவர் அடுத்த நொடியில் சில ஃபைலுடன் அங்கே வந்தார்.

அதை வாங்கியவன், "நீங்கப் போய் உங்க வேலையை பாருங்க..." என்றபடி அவரை அனுப்பி வைத்தவன் அந்த ஃபைலை அப்படியே தூக்கிப் போட்டான் மேசையில்.

ஏனோ அவனின் கவனம் அதில் சுத்தமாய் பதியவில்லை. அவனின் நினைவில் முழுதாய் ஆக்கிரமித்திருந்தது அவள் மட்டும் தான்.

அதே நேரம் அவன் தூக்கி எறிந்த ஃபைலில் இருந்து சில பேப்பர்கள் கலைந்து கீழே விழ அப்போது தான் பார்த்தான் அதன்மீது வெயிட் எதுவும் வைக்காததது அவனுக்குப் புரிந்தது.

அந்தக் காகிதங்களை எடுத்து வைத்தவனின் கண்களில் விழிகள் சிரித்தபடி புகைப்படத்தில் இருந்த பெண்ணைக் கண்டவனுக்கு இமைகள் ஆச்சரியத்தில் விரிந்தது.

'இது அவ தானே...' என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அதை எடுத்துப் பார்த்தவன் விழிகள் இரண்டும் தெறித்து விடும் போல் இருந்தது.

'ஆம்! அது அவளே தான். அவள் இங்கே தான் படிக்கிறாளா என்ன...' என்று அந்த ஃபைலை எடுத்தவன் அவளின் விவரங்களைப் பார்த்தவன் கண்களில் அவளின் பெயர் விழுந்தது.

அதைப் பார்த்தவனின் கண்களில் அதிர்ச்சி வந்து போனது.

'சிவயாழினி இவளா? அப்போ இவளுக்குத் தான் இத்தனை வருஷமா எல்லாம் செஞ்சோமா? அப்போ இவளுக்கு எல்லாமே தெரியுமா? இப்போ அவ எங்கே இருப்பா? நோ... நான் இவளைப் பாக்கணும்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் உடனே தன் அலைபேசியை எடுத்துக் கல்லூரி முதல்வருக்கு அழைப்பு விடுத்தான்.

"கொஞ்சம் சீக்கிரமா என்னோட கேபின் வாங்க" என்று கூறி அலைபேசியை அணைத்தவனின் கண்கள் அவளின் புகைப்படத்திலேயே தங்கி இருந்தது.

'அன்னைக்கு என் மேல விழுந்தவ இவதானே? இவதான் சிவயாழினின்னா ஏன் என்னைப் பார்க்க இவ வரலை...' என்றவனின் சிந்தனை எங்கெங்கோ விரிந்தது.

தன் முன்னே பதற்றத்துடன் நின்றிருந்த முதல்வரைப் பார்த்தவன் தன் கையில் இருந்த ஃபைலை அவரை நோக்கிப் போட்டான்.

"இந்தப் பொண்ணு யாரு? இவளுக்குக் காலேஜ் பீஸ் யார் கட்டுறது? எனக்கு இன்னும் அஞ்சு நிமிஷத்துல எல்லாத் தகவல்களும் வரணும்..." என்று அவரை அனுப்பி வைத்தவன் தலையைக் கரத்தில் தாங்கியபடி அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவன் கண்கள் பார்த்தது பொய்யா? இல்லை மெய்யா? அப்போ என்னோட தேடலுக்கு விடை கிடைச்சிடுமா? என்றவனின் சிந்தனை என்னவோ தறி கெட்டுத் தான் ஓடிக் கொண்டிருந்தது.

அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் அங்கே வந்த முதல்வர் அவனைப் பார்த்து,

"சார், இந்தப் பொண்ணு சிவயாழினி. இவ நம்மோட யாழ் ஃபவுண்டேஷன் மூலமா தான் படிக்குறாங்க... இவங்களுக்கு ஸ்பான்சர் சொன்னதே நீங்க தான் சார்..." என்றான் அவனைப் பார்த்தபடியே.

அவர் சொன்ன தகவல் ஓரளவுக்கு அவன் எதிர்பார்த்தது என்றாலும் கூடப் பத்துச் சதவீதம் பொய்யாய் இருக்குமோ என்ற எண்ணத்தில் மண் விழுந்தது.

"ம்ம்... ஓகே நீங்கப் போங்க... இந்தப் பொண்ணு இப்போ எங்கே இருக்கிறா? கொஞ்சம் என்னைப் பார்க்க வரச் சொல்லுங்க.." என்றபடி தன் கண்களை மூடியபடி அப்படியே சேரில் சாய்ந்து கொண்டான்.

கொஞ்ச நேரம் கூட அப்படியே அமர முடியாமல் எழுந்தவன் அவளைத் தேடி அவனே வெளியில் வர, அப்பொழுது ஒரு பெண் முதல்வரிடம் அழுதபடி பேசியதைக் கேட்டவன் வேகமாய் அங்கே சென்றான் பொறுப்பான தாளாளராய்.

"என்ன ஆச்சு? யார் இந்தப் பொண்ணு எதுக்கு அழுதுட்டு இருக்காங்க?" என்றபடி அங்கே வந்தான்.

அவனைக் கண்டதும் அவளோ அழுதபடி இருக்க முதல்வரோ அவனருகில் வந்து அவனுக்கு மட்டும் கேட்கும் படி,

"சார், நீங்க வரச் சொன்னீங்களே சிவயாழினியோட தோழி தான் இந்தப் பொண்ணு. அந்தப் பொண்ணு சிவாவை காணோம்னு அழறாங்க சார்..." என்றார் பதற்றத்துடன்.

"வாட்! காணோமா? என்ன சொல்றீங்க சார்? இத்தனை செக்யூரிட்டி இருக்காங்க... அவங்களால பொறுப்பா பாத்துக்க முடியாதா என்ன? போங்கப் போய் அந்தப் பொண்ணை சீக்கிரம் தேடச் சொல்லுங்க சார்... இப்படி நின்னா சரியா போயிடுமா என்ன? காணாம போனது ஒரு பொண்ணு சார்... அவங்க வீட்டுக்கும் நாம தான் பதில் சொல்லணும். ஆனா நீங்க என்னன்னா இப்படி கேர்லஸ்ஸா இருக்கீங்க?" என்றபடி அவரைத் திட்டியவன் அடுத்த நொடியே அங்கிருந்த அனைத்துப் பாதுகாவலர்களையும் அழைத்து சிவாவை தேடச் சொல்லி உத்தரவிட்டான்.

அவர்களும் அவனின் ஆணையை ஏற்று அந்தக் கல்லூரி முழுவதும் தேடிச் சென்றனர்.

அழுது கொண்டிருந்த நந்தினியைப் பார்த்து,

"சிஸ்டர், ப்ளீஸ் அழாதீங்க... உங்க பிரண்டை கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம். நீங்கக் கொஞ்சம் அமைதியா வெயிட் பண்ணுங்க சிஸ்..." என்றவனின் இதயமும் துடித்தது.

'என்னாச்சு ருத்ரா உனக்கு? ஏன் உன்னோட இதயம் இப்படிப் படபடன்னு துடிக்குது? அந்தப் பொண்ணுக்கு ஆபத்துன்னு தான் எனக்கு இப்படி துடிச்சுதா? நிலாக் குட்டி நீதான் அண்ணனுக்கு ஒரு வழியை காட்டணும்டா..." என்று தன் தங்கையையும் வேண்டிக் கொண்டான்.

அதே நேரத்தில் அந்த இருட்டு அறையில் கைகால் கட்டப்பட்டு மயக்க நிலையில் இருந்த சிவாவுக்கு வேர்வைத்துளியில் உடல் முழுவதும் நனைய அவளால் மூச்சு கூட விட முடியாமல் ஆனது.

"சார், நாமக் கொஞ்சம் சிசிடிவியைக் செக் பண்ணலாம்" என்றார் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி.

இவனும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து அடுத்த நொடியே வேகமாய் தேடுதல் படலம் ஆரம்பம் ஆனது.

நந்தினிக்கோ உடல் நடுங்கப் பழைய நினைவில் மூழ்கிப் போனாள்.

'சிவா மனசுல ரொம்ப அடிச்சிக்குதுடி... நீ எங்கேடி இருக்க? சீக்கிரம் வந்துடு சிவா...' என்றபடி தன் தோழியுடன் மனதில் பேசிக் கொண்டு கடவுளைக் கையெடுத்து வணங்கினாள்.

அவளைத் தேடிச் சென்ற அனைவரும் அவள் எங்கேயும் இல்லை என்ற தகவலுடன் வந்து நிற்க ருத்ராவின் மனம் அலையிலிட்ட படகாய் துடித்தது.

நந்தினிக்கும் அதே தவிப்பும் துடிப்பும் இருக்க அடுத்த நொடி என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.

அதே நேரம் அவன் அங்கே இருப்பதை அறிந்து அங்கே வந்த சந்தோஷ் அனைவரும் பதற்றத்துடன் இருப்பதைப் பார்த்து முதல்வரிடம் என்ன நடந்தது என்று கேட்டான்.

அனைவரும் அவள் இல்லை என்ற பதற்றத்தில் இருக்க, சிசிடிவியை செக் செய்து கொண்டிருந்த ஆப்ரேட்டர்,

"சார், யாரோ அந்த பொண்ணை தூக்கிட்டு நம்மோட கெமிக்கல் ரூமுக்கு போறாங்க சார்..." என்று கத்தினான்.

அதில் அனைவரும் அங்கே சென்று பார்க்க அதைப் பார்த்த ஒருவர்,

"ஆனா சார், இந்த ரூம்ல யாரும் இல்லையே? கடைசியா நாங்க தான் சார் எப்பவும் லாக் பண்ணுவோம். அதுமட்டும் இல்லாம இந்த ரூம்ல கொஞ்சமும் காத்து வராது சார்... அதனால ஒரு முறைக்கு ரெண்டு முறை செக் பண்ணிட்டு தான் சார் லாக் பண்ணுவோம்" என்றார் அந்த செக்யூரிட்டி.

"இல்லை சார், யாரோ அவங்களைத் தூக்கிட்டு போறாங்க... நிச்சயம் அவங்க சுயநினைவுல இல்லை சார்... சீக்கிரம் போலாம் சார்..." என்றபடி அனைவரும் அந்த அறை இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.

ருத்ராவின் உள்ளம் அவளுக்காய் வருந்தித் துடித்தது.

அவளைத் தூக்கிட்டு போற அவன் யாரு? அவளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? இப்படிப் பலவிதமான குழப்பங்களில் அந்த அறையை நோக்கிச் சென்றான் ருத்ரா.

அவளை உயிருடன் மீட்பார்களா? சிவாவின் படிப்புச் செலவை இவன் தான் ஏற்றுக் கொண்டான் என்றால் ஏன் அவளை அவன் அறியவில்லை?

அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம் செல்லம்ஸ்.

தீபம் ஏற்றும்...
✍️
 
Ammadi Nallathan thigil kadhai eluthreenga. Avaluku moochu mututho illayayo yarathu avanuku ean thudikanum ivanuku ean kandaganum iva yaru appidinu mandai kanju engalukuthan moochu mututhu. Konjam velichatha katunga Dear :love: :love: :love: :love:
 
Ammadi Nallathan thigil kadhai eluthreenga. Avaluku moochu mututho illayayo yarathu avanuku ean thudikanum ivanuku ean kandaganum iva yaru appidinu mandai kanju engalukuthan moochu mututhu. Konjam velichatha katunga Dear :love: :love: :love: :love:
thanks sis.. thanks for valuble comment
 

Advertisement

Advertisement

Back
Top