போன வாரத்திலிருந்து தான் கதையை படிக்க ஆரம்பித்தேன். ஒரு த்ரில்லரை போல ஃபேமிலி ஸ்டோரியை கொடுத்து இருக்கிறீர்கள்.அற்புதமான நடை. பிறரின் கொடுஞ்சொற்கள் தாங்காமல், சுயநலம் மேலோங்கி வரம் கேட்டு பிறகு சுயநலத்தை துறக்க தன்னுயிரை மாய்க்க முன் வந்த அன்பான தம்பதிகள். அதற்கு கிடைத்த வரம் என்று நல்ல அழகான கதை. காரணமின்றி காரியமில்லை. எப்போதும் காரணத்தை தெரிந்து கொள்வது அவசியமுமில்லை, சிலபோது தெரிவதுமில்லை.